October 22, 2009

இப்படியும் சில மனிதர்கள்

நோக்கியா ஈ ஸிரீஸ் மொபைல்.வாங்கி சில வாரங்களே ஆனது.திடுமென வீட்டிலேயே வைத்து தொலைந்து போனால் எப்படி இருக்கும்?வீடு முழுக்க அமளி துமளிப்பட்டது.அந்த நம்பருக்கு போன் செய்தால் ரிங் போய்க்கொண்டே உள்ளது.பதில் இல்லை.ரிங் போகிறதே வீட்டில் எங்காவது இருக்கும் என்று மொபைல் நிறுவனத்திற்கு நம்பரை செயல் இழக்க செய்யாமல் இருந்தேன்.

தொடர்ந்து தொலைந்த நம்பருக்கு முயற்சி செய்வதும்,தேடுதல் வேட்டையும் தொடர்ந்தது. நாண்கு நாள் ஓடி விட்டது.இதற்கு மேல் கிடைக்காது என்று தீர்மானம் செய்து ஐம்பது ரூபாய் மொபைல் நிறுவனத்தில் கொடுத்து புது சிம் கார்ட் வாங்கினேன்.மொபைலை தொலைக்கும் பொழுது எவ்வளவு அமௌண்ட் இருந்ததோ அதே அமவுண்ட் சற்றும் குறையாமல் இருந்தது.

இது நடந்து ஒருவாரம் இருக்கும்.லேண்ட் லைன் அழைத்து எடுத்தேன்.
"நான் பாலு பேசறேன்"
"எந்த பாலு?"
"பழைய பேப்பர் விற்கும் பாலு"
"நீ யார் என்று எனக்கு தெரியாது.எதற்கு போன் பண்றே?
"மேடம்,சமீபமா உங்கள் மொபைல் ஏதும் தொலைந்ததா?"
"அட ஆமாப்பா.என்ன விஷயம்"
"அந்த மொபைல் இப்ப என் கிட்டேதான் இருக்கு?"
அடடா,தம்பி நீ எங்கே இருக்கே.இடத்தை சொல்லு.வந்து கலெக்ட் பண்ணிக்கறேன்"
"முதலில் உங்க மொபைல் நம்பரை சொல்லுங்க"
சொன்னது
"கரெக்ட் தான்.எவ்வள்வு பேலன்ஸ் இருந்தது ஞாபகம் இருக்கா?"
அதையும் சொன்னதும்
"சரியாகத்தான் சொல்லுகிறீர்கள் .அட்ரஸ் தாருங்கள்.நானே கொண்டுவந்து தர்ரேன்"
நான் அட்ரஸ்,வீடு இருக்கும் லொகேஷன் சொன்னதும்
"அட..நம்ம பாய் வீட்டம்மாவா?இதோ வந்துடுறேன்மா"
போனை வைத்தவன் அடுத்த சில மணி நேரங்களில் மொபைலும் கையுமாக வந்து விட்டான்.
என்க்கு காணாமல் போன மொபைல் கிடைத்து விட்டதே என்று ஒரே சந்தோஷம்.
பேப்பரை கலெக்ட் செய்து அவன் இடத்திற்கு கொண்டு சென்று தரம் வாரியாக பிரிக்கும் பொழுது இந்த மொபைல் கிடைத்ததாம்.
நான் என் லேண்ட் லைனில் இருந்து அடிக்கடி போன் பண்ணியதும் அந்த நம்பருக்கு டயல் செய்து என்னை கண்டு பிடித்து இருக்கிறான்.
நான் மகா சந்தோஷத்தில் ஒருதொகையை கொடுத்தும் அவன் வாங்கவே இல்லை.
"இவ்வளவு நாள் கழித்து மொபைல் என் கைக்கு கிடைத்ததே.முதலிலேயே கிடைத்து இருந்தால் அப்பவே கொண்டு வந்து இருப்பேனே.உங்கள் டென்ஷனும் குறைந்து இருக்குமே"
என்று சொல்லி விட்டு சென்றவனை வியப்புடன் பார்த்தேன்.

இப்படியும் சில மனிதர்கள்

21 comments:

Mrs.Menagasathia said...

இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் ஸாதிகாக்கா.அதனால் தான் இன்னும் மனிதநேயம் உயிர் வாழ்கிறது.

நானும்,மகளும் நலமாக இருக்கிறோம் அக்கா.நீங்கள்,பேரன்,குட்டி மருமகள்,பிள்ளைகள் அனைவரும் நலமா?

Jaleela said...

சும்மா வா சொல்வாங்க கழ்டபட்ட காசு எங்கு போனாலும் திரும்ப நமக்கு கிடைக்கும் என்று.

எப்படியோ மொபைல் திரும்ப கிடைத்து விட்டது,

அந்த பேப்பர் காரனும், நல்ல உள்ளம் படைத்தவர்.

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தங்கை மேனகா.நீங்கள் விசாரித்த அனைவரும் நலம்.பேரன் பிளே ஸ்கூல் போகிறார்.குட்டி மருமகள் கத்தாரில் இருக்கிறாள்.

ஸாதிகா said...

உண்மைதான் தங்கை ஜலி,உணமையாக,கஷ்டப்பட்டு உழைத்த காசு வீணாகாது.அல்ஹம்துலில்லாஹ்

MAT said...
This comment has been removed by a blog administrator.
கருவாச்சி said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா

நல்ல வேலை கிடைச்சிடுச்சு


அல்லாஹ் போதுமானவன்

நாஸியா said...

சகோதரி ஜலீலா சொன்ன மாதிரி கஷ்டப்பட்டு உழைச்ச பணம் எப்படி இருந்தாலும் கிடைச்சிடும்...

inna lillaahi wa inna ilaihi raajioon சொல்லிட்டு தேட வேண்டியது தான்!

Hussainamma said...

உலகம் கலவையான மனிதர்கள் நிறைந்தது!! சென்றவாரம் அபுதாபியில் என் தம்பியின் மொபைல் (விலை கூடிய‌துதான்) ரோட்டில் கிடந்த்தாகச் சொல்லி ஒரு பாகிஸ்தானிய அன்பர் அழைத்துத் தந்தார்.

சோனகன் said...

எப்படியும் வாழலாம் என விளம்பும் இந்த காலகட்டத்தில் இப்படித்தான் வாழ வேண்டுமென தன் கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் பாலு போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே!உங்கள் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

ஸாதிகா said...

வருகைக்கும் பதிவிற்கும் மிக நன்றி நாஸியா.உண்மைதான் தொலைந்ததே என்று புலம்பாமல் நீங்கிய சொல்லியபடி தேடினால் கண்டிப்பாக கிடைக்கும்.அல்ஹம்துலில்லாஹ்.

ஸாதிகா said...

உண்மைதான் ஹுசைனம்மா.தங்கை மேனகா சொன்னது போல் இப்படியும் சில மனிதர்கள் இருப்பதால்தான் மனித நேயம் இன்னும் உயிர் வாழ்கின்றது.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோதரர்.சோனகரே பின்னூட்டத்திற்கு நன்றி.ஆம் பாலு போன்றவர்கள் பாராட்டுக்குறியவர்கள் தான்.இப்படிப்பட்ட மனிதர்கள் உலகில் மிகக்குறைவு.

THAMEEM ANSARI said...

Assalamu Alaikkum

www.thameem1984.spaces.live.com

THAMEEM ANSARI said...

Assalamu Alaikkum

www.thameem1984.spaces.live.com

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே!

DAILY NEWS said...

PLZ VISIT :

www.tamilnadudailynews.blogspot.com

இலா said...

Some People ! Some times touch us in our hearts

ஸாதிகா said...

ila,
thank you for viewing my blog and for your comments.
your comment is 100% correct.

புகழன் said...

\\இப்படியும் சில மனிதர்கள் \\

இந்தக் காலத்தில் இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

ஸாதிகா said...

நன்றி புகழன்.