நமது சொந்த கற்பனையில் பொங்கும் உணர்வுகளை உலகமே படித்து பாராட்டினால் எப்படி இருக்கும்?நம்மை சுற்றி ரசிகபட்டாளமே இருக்கின்றது என்றால் எப்படி இருக்கும்?தட்டச்சு செய்து முடித்த மறுவினாடியே பிரசுரமாகி,உலகில் எந்த மூலையில் இருப்பவர்களையும் சென்றடையும் என்றால் எப்படி இருக்கும்?அப்படி ஒரு பரவசத்தைதருவதுதான் பிளாக்,அதாவது வலைப்பூ.இணையத்தில் கோடிக்கணக்கான அறைகளைக்கட்டி,இது உனக்கே உனக்குத்தான்.எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கோ.எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்,இஷ்டம் போல் கிறுக்கிக்கொள் என்று இணையம் ந்ம் கைகளில் அள்ளிதந்து இருக்கின்றது இந்த பிளாக் என்ற அட்சயபாத்திரத்தை.இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல ,சிறுவர்கள்,நடுத்தர வயதினர்,தாத்தா,பாட்டி மார்கள் அனைவர் மத்தியிலும் பிரபலம்.
இந்த வலைப்பூவில் ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த ஆலிவ் ரைலி என்பவர்தான் உலகத்திலேயே அதிக வயதான பிளாக்கர்.இரண்டு உலகபோர்களையும்,அதன் விளைவுகளையும் நேரில் பார்த்த முதியவர்.
சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன் தான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தார்.சட்டென உலகமெங்கும் இவரின் வலைப்பூவை மேய்வதற்கு எக்கசக்க ரசிகபட்டாளம் குவிந்தனர்.காரணம் அவரது நூற்றாண்டு கால அனுபவங்களதான்..அந்தக்கால வாழ்க்கை முறைகளையும்,இந்தக்கால வாழ்க்கை முறைகளையும் ஒப்பிட்டு ஆலிவ் பாட்டி சுவைபட எழுதி இருப்பது படிப்பவரை கட்டிப்போட்டது.
"எங்கள் காலத்தில் துணிதுவைப்பதென்றால் காலையில் சீக்கிரமே எழுந்து விறகு பொறுக்க வேண்டும்.துணிகளை துவைப்பதற்காக வென்னீர் போடுவதற்காக செம்பினால் உள்ள அடுப்பு இருக்கும்.சின்ன விஷயங்களுக்குக்கு கூட நிறைய உழைப்பு தேவைப்பட்ட காலம்.அந்த கடின உழைப்பும் ஜாலியாகவே இருக்கும்.ஆனால் இப்போதோ ஒரு பட்டனை அழுத்தினால் மெஷினே துணிகளை துவைத்து,உலர்த்தியும் கொடுத்து விடுகின்றது.இன்னும் கொஞ்ச காலத்தில் ஆடைகளை நமக்கு மாட்டி விட மெஷின் வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை."இப்படி ருசி பட,காமடியாக இருக்கும் ஆலிவ் பாட்டியின் எழுத்து நடை.
இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்ட ஆலிவ்,சமையல் வேலை,பாரில் சப்ளையர் வேலைபார்த்து தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்திருக்கின்றார்..அந்த கவலை படிந்த நாட்களைக்கூட சுவைபட தனகே உரிய நகைசுவை உணர்வோடு பிளாக்கில் பதிந்து இருக்கின்றார்.அதுவே பாட்டியின் வெற்றிக்கு பிளஸ் பாயிண்ட்.
சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட ஆலிவ் ஒரு நாள் இயற்கை அடைந்து விட்டார்.ஆலிவின் வாசகர்களுக்கு அவரின் மறைவு பேரிழப்பாக எண்ணி வருந்துகின்றனர்.
ஆலிவை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் த்ங்கி இருந்த ஒருவர் இப்படி சொல்லுகின்றார்.
"மரணப்பொழுதுவரை 'ஆலிவ் ரைலி' இந்த மருத்துவமனையை கலகலப்பாக வைத்து இருந்தார்."
.
Tweet |
6 comments:
நல்லதொரு பகிர்வு, நீங்கள் சொல்லி தான் ஆலிவ்ரைலி பற்றி தெரிந்து கொண்டேன்.
பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஜலீலா.பாட்டிக்கு 108 வயது என்ற விபரத்தையும் எழுத மறந்து விட்டேன்.
நல்ல பகிர்வுக்கு நன்றியக்கா!!இப்போழுதுதான் இவரைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்..
தங்கை மேனகா,பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.அடிக்கடி பின்னூட்டம் கொடுப்பது மகிழ்வாக உள்ளது.
அணுபவப் பகிர்வு என்பது அரிதான விஷயமாகிவிட்ட இந்த தலைமுறையில் ஆலிவ் ரைலியின் ப்ளாக்கர் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.அவசியமான பதிவை தந்தமைக்கு பாராட்டுக்கள்..
சோனகரே,
பின்னூட்டத்திற்கு நன்றி
Post a Comment