October 31, 2009

இல்லத்தரசனின் ஓசைகள்



***
என்னங்க..இன்னிக்கு வீட்டைக்கிளீன் பண்ற வேலை இருக்கு.ஹெல்ப் பண்ண முடியுமா?

அட
*****
என்னங்க..இந்த மாதம் கரண்ட் பில் எட்டுநூற்று சொச்சம்தான் வந்திருக்குங்க.

அடடா
**********
இன்னிக்கு மட்டன் பிரியாணியும்,சிக்கன்பிரையும்,தாளிச்சாவும் தான் லன்ச் .கூடவே ரஸமலாயும் பண்ணி இருக்கேன்.வாங்க சாப்பிடலாம்.

அடடடடடா
************
என்னங்க உங்கள் தங்கச்சி வீட்டுக்கு போகலாமா?போகும் பொழுது ரெண்டு கிலோ கிருஷ்ணா ஸ்வீட் வாங்கிட்டு போலாங்க!

அட்றா சக்க
*****************
இந்த மாதம் நான் ரெண்டாயிரம் ரூபாய் வீட்டு செலவில் இருந்து மிச்சம் பிடிச்சுட்டேன்.சந்தோஷம் தானே?

அவ்வ்வ்வ்வ்வ்..
**********************
நேத்திக்கு பக்கத்து வீட்டு பொண்ணு கூட ஜாய் ஆலுகாஸ் போனேன்.வைர நகைக்கு 10பெர்ஸண்ட் ஆஃபர் போட்டு இருக்கான்.போலாமாங்க..?

19 comments:

Jaleela Kamal said...

ஸாதிக்கா அக்கா இல்லத்தரிசிளின் ஓசைகள் அருமை.

ம்ம் கலக்குங்க கலக்குங்க‌

தமிழ்நாடு தினசரி செய்திகள் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இது எனது தளம் நீங்கள் செய்திகளை எனது தளத்தில்
வெளியிடலாம்
www.tamilnadudailynews.blogspot.com


mail : dailynews222@gmail.com

ஸாதிகா said...

ஜலீலா,
பின்னூட்டத்திற்கு நன்றி.நீங்கள் கலக்காததையா நான் கலக்கி விட்டேன்??
தமிழ்நாடு தினசரி செய்திகள்,
வ அலைக்கும் வஸ்ஸலாம்.
அழைப்புக்கு நன்றி.உங்கள் தளத்தினையும் பார்வை இட்டேன்.நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.அவ்வப்பொழுது என் பங்களிப்பு இருக்கும்.

Menaga Sathia said...

ஹா ஹா சூப்பராயிருக்கு ஸாதிகாக்கா!!

பாவா ஷரீப் said...

//நேத்திக்கு பக்கத்து வீட்டு பொண்ணு கூட ஜாய் ஆலுகாஸ் போனேன்.வைர நகைக்கு 10பெர்ஸண்ட் ஆஃபர் போட்டு இருக்கான்.போலாமாங்க..?//

இதை கேட்ட உடனே அரசன் எஸ்கேப் ஆகி இருப்பாரே/

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு நன்றி மேனகா.

ஸாதிகா said...

பின்னூட்த்திற்கு மிகவும் நன்றி சகோதரரே.அரசன் எஸ்கேப் ஆகி விட்டால் அரசி சும்மா இருந்துவிடுவாளா என்ன?

Yousufa said...

இவ்வளவும் செய்து அரசனுக்கு மனமகிழ்வைத் தரும் அரசிக்கு வெறும் வைர மாலைதானா?

அக்கா, என்ன அப்படியே அசந்து நின்னிட்டீங்க?

ஸாதிகா said...

ஹுசைனம்மா,
இந்த பதிவைப்பார்த்து சிரித்தார்களோ என்னவோ உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்து நான் சிரித்துவிட்டேன்.அசந்து நான் நிற்கவில்லை.மயக்கமே வந்து விட்டது.
:-):-):-)

சோனகன் said...

இல்லத்தரசனின் ஓசைகள் சுருதி ஏறி கடைசியில் கதறலாக அமந்து விட்ட்து போல் உள்ளதே?

ஸாதிகா said...

ஹா..ஹா..ஹா

இலா said...

i like your post.. now i know the trick.. alas there is no indian jewellery store in my area :((

ஸாதிகா said...

இந்தியா வரும்பொழுது திரு.வீராவை ஒரு வழி பண்ணி விடுங்கள் இலா.
:-)

புகழன் said...

அப்ப அதெல்லாம் இதுக்குத்தானா?????


அவ்வ்வ்வ்வ்வ்..
**********************

ஸாதிகா said...

என்னங்க புகழன் இப்படி சொல்லிப்போட்டீங்க?பெண்கள் பேசுவது எல்லாம் நகையை குறி வைத்துத்தான் என்று தீர்மானமே பண்ணிவிடாதீர்கள்.

தாஜ் said...

சலாம்
ஒவ்வொரு பெண்களின் மனதும் இப்படித்தான்

அதனால்தான் பெண்களை அதிகமதிகம் நரகில் பெருமானார் கண்டார்கள்

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் தாஜ்.வருகைக்கு நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரஸமலான்னா என்ன?..

ஸாதிகா said...

என்ன ஸ்டார்ஜன் சார் இப்படிக்கேட்டுவிட்டீர்கள்.நக்கல் இல்லையே?ரசகுலாவில் செய்யப்படுமதி சுவையான இனிப்பு இது.அவசியம் மச்சியிடம் அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த ஸ்வீட்டையும் சேய்யச்சொல்லுங்கள்.சென்னை ஸ்ரீமித்தாயில் சுவையான் ரசமலாய் கிடைக்கிறது.குறிப்பு இதோ இந்த லின்க்கைப்பாருங்கள்.http://www.tamilkudumbam.com/-mainmenu-196/--mainmenu-199/2955.html?task=view

http://kathampamtamil.blogspot.com/2009/11/blog-post_18.html