July 21, 2013

மாடித்தோட்டம்.

மொட்டை மாடியில் எத்தனையோ வித தோட்டங்களைப்பார்த்து இருக்கிறோம்.ராயபுரம் பாயிஜா சிராஜின் வீட்டு தோட்டமோ முற்றிலும் வித்தியாசமானது.

மூவாயிரம் சதுர அடி மொட்டை மாடியில் முன்னூறுக்கும் மேற்பட்ட மண்ஜாடிகளில் விதவிதமான செடிகள்,மற்றும் ஐநூறுக்கும் மேலான அலங்கார பொருட்களினால் அலங்கரித்து வித்தியாசம் காட்டி அசத்துகின்றார் பாயிஜா சிராஜ்.

இவர் வெளி நாடுகளுக்கோ,வெளியூர்களுக்கோ சென்றால் தனக்கென்று வாங்கும் பொருட்கள் ஏதுவுமே இருக்காது,தன் தோட்டத்திற்கான பொருட்களை வாங்கி தோட்டத்தை இன்னும் விரிவு,அழகுபடுத்தவே விரும்புவார்.

எண்ணிக்கைக்கு அடங்காத வித விதமான அலங்காரபொருட்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த இடத்தில் வைத்து இருக்கிறோம் என்பது இவருக்கு அத்துப்படி.யாராவது மாற்றி வைத்து விட்டால் உடனே கண்டு பிடித்து விடுவார்.தினமும் காலையிலும் மாலையிலும் தோட்டத்தைப்பராமாரிக்க நேரத்தை செலவிடுவாராம்.

கலைரசனையில் அசாத்திய ஆவல் கொண்டு இருக்கும் பாயிஜாவுக்கு சவால் மழை.அதைவிட பெரும்சவால் புயல்.மழை,புயல் காரணமாக எத்தனையோ பொருட்கள் சேதமாகி இருக்கின்றனவாம்.

மழை பொழிந்து ஓய்ந்ததும் இவருக்கு வேலை அதிகமாகவே இருக்கும்.நாள் முழுக்க தோட்டத்தில் அமர்ந்து சீர் படுத்துவாராம்.உடைந்து போன பொருட்களை அப்புறப்படுத்தி,சாய்ந்து போன,மழைத்தண்ணீரில் இழுத்துக்கொண்டு போன பொருட்களை ஒழுங்கு படுத்துவதுதான் இவருக்கு முதல் வேலை.மழை பெய்ய ஆரம்பித்ததும் எனக்கு அடிவயிறு கலங்கி விடும்.இந்த முறை அதிக சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுவிடுவேன் என்கிறார்.பொழிவிழந்த ஜாடிகளுக்கு சாயம் பூசுவது,பழசாகிப்போன பொருட்களை அப்புறப்படுதுவது என்று தோட்டவேலை கனக்கச்சிதமாக செய்கின்றார்.

தோட்டத்தில் உதிரும் ஒரு இலையைக்கூட வீணடிப்பதில்லை.அத்தனையும் சேகரித்து உரமாக்கி விடுவேன் என்கிறார்.

பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டத்தின் காட்சிகளைப்பாருங்கள்.பளிங்கு கற்களுக்குள் லைட்டிங் அமைத்து ஒரு மூலையில் வைத்து அலங்கரித்து இருப்பது கண்களை பறிக்கிறது.
தோட்டத்தின் ஒருகோணம்
சுவரையும் விட்டு வைக்கவில்லை.மண்,களிமண்,பிளாஸ்டிக் சைனா கிளே போன்ற வற்றில் தயாரித்த அலங்காரபொருட்கள் மனதை கொள்ளை கொள்கிறது.
சுற்றிலும் ஜாடிகளில் பூச்செடிகளும்,விதவிதமான க்ரோட்டன்ஸ்களும் இருக்க நடுவே இருக்கும் இடங்கள் முழுக்க இப்படி அலங்கார பொருட்களும்,சிறிய பூச்சாடிகளுமாக பிரமிக்க வைக்கிறது.
 வேறொன்றுமில்லை.தூரத்தில் இருந்து பார்த்தால் பறவைகள் வந்து இந்த சட்டியில் முட்டை இட்டு  நிரப்பி விட்டு சென்று விட்டனவோ என்று நினைக்கத்தோன்றும் ஒரு தோற்றம்.
 தோட்டத்தின் இன்னொரு தோற்றம்
 வெள்ளை மற்றும் ரோஸ் வண்ணத்தில் போகன் வில்லா.
 சேரும் குப்பைகளை சேகரிக்க முயல் குட்டி.மக்கும் குப்பைகளை சேமிக்க மண்ணால் ஆன அலங்காரக்கூஜா.இது ஆங்காங்கே உள்ளது.
 தவளை இருக்கு.ஆனால் தவளை சப்தத்தைத்தான் காணோம்.
இது ஒரு வித்தியாசமான அலங்காரம்.
 இன்னொரு மூலையின் அலங்காரத்தோற்றம்.
இந்த வித்தியாசமான பூஜாடி இவர் வெளிநாட்டுக்கு சென்ற போது வாங்கி வந்தவை.
 மண்ணால் ஆனால் மோடா.கடல் காற்றை சுகமாக அனுபவித்து உட்கார்ந்து தோட்டத்தை ரசிக்க ஆங்காங்கே இப்படி மண்ணால் ஆன மோடா அமைக்கப்பட்டுள்ளது.
 மண்ணால் ஆன குட்டி மீன் தொட்டி.

இவ்வளவு இருந்தும் சிப்பியும்,முத்தும் இல்லாமலா?

38 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகோ அழகு... சிரமத்தை தூக்கி எறிந்து, பாயிஜா சிராஜ் அவர்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் ...

கிளியனூர் இஸ்மத் said...

சூப்பராக இருக்கு... எங்க புது வீட்டு மாடில இதுமாதிரி செய்யனும்னு ஆசை பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

உடன் வருகைக்கு நன்றி திண்டுக்கல்தனபால சார்

ஸாதிகா said...

வாங்க சகோ இஸ்மத்.பிளாக் உலகில் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே:)உங்கள் புதுவீட்டை நானும் பார்த்து இருக்கிறேன்.முகநூலில்தான்.விரைவில் நீங்களும் தோட்டம் அமைத்து அதனை படம் எடுத்து பகிர்வாக போடுங்கள்.வாழ்த்துகக்ள்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!! என்ன ரசனை!!!! இனிய பாராட்டுகள்!

பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

அமைதிச்சாரல் said...

தோட்டம் நல்லாருக்கு. இன்னும் காலியிடங்கள் இருக்கறதைப்பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் பூ, காய்கறிச்செடிகள் வைக்கலாமேன்னு எனக்கு கை துருதுருங்குது :-)))

இளமதி said...

என்ன அழகு எத்தனை அழகுன்னு பாடத்தோணுகிறது ஸாதிகா!

உங்கள் தோழியின் ரசனையே அற்புதம்.
எத்தனை சிறப்பாக இயற்கையைப் பேணி அமைத்து ரசிக்கின்றார்.
அவருக்கும் இவற்றைப் பகிர்த்துகொண்ட உங்களும் என் அன்பு வாழ்த்துக்கள்! மிக்க நன்றியும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரஸனையுடன் கூடிய தோட்டப்பராமரிப்பு பற்றிய மிகவும் அழகான பதிவு.

காட்டியுள்ள படங்களும் அருமையாக உள்ளன.

ரஸனை மிகுந்த தங்கள் தோழிக்கும், பதிவிட்டுத் அனைவருக்கும் அறியச் செய்து தெரியப்படுத்திய தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

முன்னாடி ஒருத்தங்க வீட்டுல செயறகைச் செடிகள்னு ஃபோட்டோஸ் போட்டிருந்தீங்க. இப்ப நெஜச் செடிகளா? சந்தோஷம்.

பகல்ல பட்ம புடிச்சிருந்தா இன்னும் தெளிவா இருந்திருக்குமில்லியா? (சரி, இஃப்தாருக்கு ராத்திரிலதானே போகமுடியும்?) :-)))

ஸாதிகா said...

வாங்க துளசிம்மா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

காலியிடங்கள் இருக்கறதைப்பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் பூ, காய்கறிச்செடிகள் வைக்கலாமேன்னு எனக்கு கை துருதுருங்குது :-)))//அங்கேயும் நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி வைத்தால் நடப்பதற்கே இடம் இராதே சாரல்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி இளமதி.தோட்டத்தை நெரில் பார்த்த பொழுது என்னக்கும் இப்படித்தான் தோன்றியது

ஸாதிகா said...

மிக்க நன்றி இளமதி.தோட்டத்தை நேரில் பார்த்த பொழுது எனக்கும் இப்படித்தான் தோன்றியது.

ஸாதிகா said...

கருத்துரைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...


பகல்ல பட்ம புடிச்சிருந்தா இன்னும் தெளிவா இருந்திருக்குமில்லியா? (சரி, இஃப்தாருக்கு ராத்திரிலதானே போகமுடியும்?) :-)))//

எப்படிஎல்லாம் யோசிக்கறீங்கப்பா ?இது மூன்று மாதங்களுக்கு முன் எடுத்தது.இன்னொரு முறை சென்று பகல் நேரத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றுதான் இத்தனை தாமதம்.இதுவரை பகல் பொழுதில் செல்லமுடியவில்லை.அதுதான் இதனையே பப்லிஷ் செய்துவிட்டேன்.

நன்றி ஹுசைனம்மா,

Cherub Crafts said...

வாவ் !! அருமையா அழகா இருக்கு மாடிதோட்டம்..பாயிஜாஅவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிடுங்க ..
அழகா படமெடுத்து பகிர்ந்த உங்களுக்கும் நன்றி .
Angelin .

Ramani S said...

நீங்கள் சொல்லி விட்டதனால்
மொட்டை மாடியென அறிந்தோம்
இல்லையெனில் பூங்கா என நினைத்திருப்போம்
சிறப்பாகச் செய்திருக்கிற பாயிஜா அவர்களுக்கும்
அதனை அருமையாக பதிவு செய்துள்ள தங்களுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 4

மாதேவி said...

அழகு. தோழிக்கு வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

mika arumai

rajalakshmi paramasivam said...

தோட்டம் போட்ட திருமதி பாயிஜா சிராஜிற்கு ரசனை அதிகம் . போட்டோ எடுத்து பதிவாக்கிய உங்கள் ரசனை இன்னும் அதிகம். ஒரு நல்ல மாடித் தோட்டத்தை சுற்றிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி சாதிகா.

கவியாழி கண்ணதாசன் said...

மனதுக்கு நிம்மதிதரும் மாடிதோட்டதில் மாலைநேரக் காற்று நிம்மதியை நிச்சயம் தரும்.நாமும் முயற்சிக்கலாமே.தகவலுக்கு நன்றி

Asiya Omar said...

தோழி,முதலில் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.ராயபுரம் ஃபாயிஜா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.மழை வெயில் என்று பாராமல் இத்தனை அழகாக பராமரித்து இருப்பது மிக்க ஆச்சரியம். எல்லாவற்றுக்கும் ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் தோழி.நானும் நினைக்கிறேன், ஆசைப்படுகிறேன் நடக்க மாட்டேன்கிறது பா.ஊரில் செட்டில் ஆகும் பொழுது பார்ப்போம்.
தோட்டம் வைப்பதற்காகவே எங்க வீட்டு மாடியில் முன்னாடி,பின்னாடி, ஒர் ஒப்பன் டெரஸ் வைத்தது போதாது என்று மொட்டை மாடியிலும் வைக்க வேண்டும் என்று கனவு கண்டதால் தான் ஒன்றும் முடியாமல் போய்விட்டது.ஹி ஹி..

Vijiskitchencreations said...

My daughter Divya likes this small clay decorations. I like garden. Very much. Really very nice.

Ambal adiyal said...

வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.html

விச்சு said...

நல்ல ரசனை.. அதனை அழகாகப் புகைப்படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...

மஞ்சுபாஷிணி said...

இந்த அவசர உலகத்தில் ஆள் ஆளுக்கு தன் வேலைகளை கவனிக்கவும், வேலைக்கு ஓடவும், குடும்பத்தை கவனிக்கவும்... மாலை ஆனால் வேலைல இருந்து வந்ததும் சமையலும் பிள்ளைகள் படிப்பும் டிவி என்று அமிழ்ந்துவிடும் மக்களில் இருந்து வேறுபடுகிறார் இயற்கையின் மீது நேசம் கொண்ட திரு பாயிஜா சிராஜ் அவர்கள்...


ஒவ்வொரு படமும் பார்க்கும்போது அதில் அவரின் உழைப்பும் ரசனையும் மிக அழகாக தெரிகிறதுப்பா....


எந்த ஒரு செயலும் செய்யும்போது அதீத ரசனையும் ஈடுபாடும் கொண்டு செய்யும்போது அதன் பலன் அற்புதமாக தெரியும்... இந்த படங்களை பார்க்கும்போதும் அப்படியே...

மழை புயல் தாக்கும்போது ஏற்படும் சேதமும் அப்படி ஒரு மழை வந்து விடாமல் இருக்க வந்தாலும் சாரலாக வந்து தோட்டத்தை காத்திட இவர் செய்யும் பிரார்த்தனை பிரமிக்க வைக்கிறது.....

அழகிய படங்கள் ஸாதிகா.... அற்புதமான விஷயம் திரு பாயிஜா சிராஜ் அவர்களின் இந்த ரசனையான மொட்டை மாடியில் அழகிய தோட்டம்... காண கிடைத்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

மஞ்சுபாஷிணி said...

ரமதான் கரீம் ஸாதிகா....சௌக்கியமாப்பா?

kovaikkavi said...

சகோதரி தங்களைத் தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்.
எழுதுங்கள்.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/2013/08/04/28-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/

கோமதி அரசு said...

பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டம் மிக அழகு.
வீட்டு தோட்டம் மனதை மகிழ்ச்சியாக வைத்து இருக்கும்.
ஸாதிகா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

இரவின் புன்னகை said...

அழகாக உள்ளது... அவரது முயற்ச்சிக்கு பாராட்டுகள்... தங்கள் பகிர்விர்க்கும் நன்றி... பாராட்டுகள்.

ராஜி said...

மாடில தோட்டம் அழகு!!

இமா said...

நல்ல ரசனை அவர்களுக்கு. அழகாக இருக்கிறது தோட்டம்.

Manjubashini Sampathkumar said...

அன்பின் ஸாதிகா,

உங்களை முதல் பதிவின் சந்தோஷம் தொடர் பதிவு எழுத அன்புடன் அழைக்கிறேன்பா....

http://manjusampath.blogspot.com/2013/08/blog-post_22.html

Mahi said...

அழகான தோட்டம் ஸாதிகாக்கா! நீங்க பகலில் படமெடுத்துப் போட்டிருந்தா படங்கள் தெளிவா இருந்திருக்கலாம், ஆனா இரவின் வெளிச்சங்களின் அழகு வெளிப்பட்டிருக்காது! :)

online said...
This comment has been removed by the author.
online said...
This comment has been removed by the author.