அறுசுவை பாபு
மின்னல் வரிகள் கணேஷண்ணா ”தெரியுமா இவரை” என்ற தலைப்பில் உலகளாவிய புகழ் பெற்றவர்களை தன் தளத்தில் அறிமுகப்படுத்த ஆரம்பித்ததன் விளைவே என்னை இப்பதிவு எழுத தூண்டுகோலாக இருந்தது..
லியனார்டோ டாவின்சி ,ஹோசிமின் ,நெப்போலியன் ,ஸோய்சிரோ ஹோண்டா ,முசோலினி போன்றோரைபற்றி மட்டும்தானா எழுத வேண்டும்,நாம் அறிந்தோரைப்பற்றி எழுதினால் என்ன என்ற எண்ணம் உதயம் ஆனது.அவ்வப்பொழுது என் ஞாபகத்தில் வருபவர்களை என் கோணத்தில் எழுத விருப்பம்.அநேகமாக நீங்கள் அனைவரும் அறிந்த மனிதர்,மனுசிகளாகவும் இருக்கலாம்.ஏன் நம்மில் வளைய வரும் பதிவுலக நட்புக்களும் நிறைய இவ்வறிமுகத்தில் தொடர்வார்கள்.இப்பதிவுக்கு கிடைக்கப்போகும் வரவேற்பை பொறுத்து ”அறிவீர்களா இவரை”என் வலைப்பூவில் தொடரும்.
முதலில் நான் அறிமுகப்படுத்தபோவது பிரபல இணையதள நிர்வாகி திரு D.V.பாபு அவர்கள்.இன்று நம்மில் வளைய வரும் பல வலைப்பூதாரர்களை உருவாக்கியவர்.வலைப்பூ என்றால் என்ன என்பதையும் பலருக்கு காட்டித்தந்த பலருக்கு தமிழை எப்படி தட்டச்சு செய்வது என்பதை கற்றுதந்த இணையதளத்திற்கு சொந்தக்காரர்.அதுவரை கணினியை ஆன் செய்யக்கூட தெரியாத தமிழர்கள் பலரை கணினியின் வசமாக்கியவர்.
வெளிநாட்டு வாழ் கணினி அறிந்த தமிழர்களுக்கு சமையல் என்றால் என்ன என்று அறியாதவர்களுக்கு ,புதிதாக திருமணமாகி தனிக்குடித்தனம் சென்ற தம்பதிகளுக்கு,குடும்பத்துடன் இல்லாமல் தனியே வெளிநாட்டில் வாழ்ந்து சுய சமையலில் ஈடுபடும் பேச்சிலர்கள்,ஏன் சமையலில் சக்கை போடு போடும் கைதேர்ந்த இல்லத்தரசிகளும் கூட புது வித சமையல் செய்ய வேண்டு மென்றால் அறுசுவையை தளத்தினைத்தான் நாடுவார்கள்.
இப்படி பலருக்கும் ரசம் வைப்பது எப்படி என்பதை அறிய வேண்டுமென்றால் அவரது கணினித்திரையில் அறுசுவை விண்டோ திறந்து இருக்கும்,சாதராண ரசம் முதல் பன்னாட்டு உணவுகள் செய்யும் செய்முறை குறித்தும் அறிய வேண்டுமென்றால் இருக்கவே இருக்கின்றது அறுசுவைதளம் என்று கூறும் அளவிற்கு அத்தளத்தில் ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகள் மட்டுமல்ல பல்வேறு உபயோகமான குறிப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.
இது தவிர இல்லத்தரசிகளுக்கு ஏதாவது சந்தேகமோ,உடல் நலம் குறித்தோ கேட்கவேண்டுமென்றால் மன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பினாலே போதும்.பதில் தந்து உதவ பலர் இருப்பார்கள்.இங்ஙனம் பல வாறு சேவைகள் அறுசுவையில் கிடைப்பது அறுசுவை உறுப்பினர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
தப்பும் தவறுமாக தமிழில் தட்டச்சு செய்பவர்களை ஊக்குவித்து தனது தளஉறுப்பினர்களுக்கு ஊக்கம் கொடுத்து,கை தேர்ந்த பதிவர்களாக வார்த்தெடுத்ததுமல்லாமல்,அவ்வப்பொழுது தள உறுப்பினர்களை கலந்துரயாடச்செய்து நல்ல நட்புக்களை பலருக்கு பெற்றுத்தந்தவர் என்றால் மிகை ஆகாது.
இணையதளத்துக்காவே லட்சகணக்கில் தன் சுய சம்பாத்தியத்தை செலவழித்தவரும் கூட.பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவரை பெற்றோரும்,உடன் பிறந்தோரும், நட்புக்களும் இணையத்திற்காக இத்தனை பாடுபடுவதை குறித்து விமர்சனம் செய்த பொழுது அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு,பல சோதனைகளைக்கடந்தும் இன்று இணையத்தில் வெற்றி நடை போடுகின்றவர்.
நானும் ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் சமையல் குறிப்புகள் கொடுத்தேன்.மன்றங்களில் பங்கெடுத்தேன்.பின்னாளில் எனக்கென ஒரு வலைப்பூ ஆரம்பித்துவிட்ட பிறகு தொடர்ந்து என்னால் அங்கு எழுத முடியவில்லை.அங்கு எழுத வேண்டும் என்ற என் எண்ணத்தை செயல்படுத்துவதில் காலதாமதமாகிகொண்டே இருப்பதில் எனக்கு மிகுந்த மனக்குறையுடன் கூடியவருத்தம் உண்டு.
ஒரு பிரபலமான மூத்த பெண் பதிவரின் உறவினரும் கூட.(அவரது அனுமதி இல்லாமல் அவரை இங்கு யாரென்று சொல்ல முடியவில்லை)இருவரும் உறவினர்கள் என்று ஒருவருக்கொருவர் தெரியாத நிலையில் தொடர்ந்து அறுசுவையில் எழுதிய பொழுது நேர்ந்த ஒரு சந்திப்பின் மூலம் தெரிந்தது என்பதனை இருவருமே கூறி சிலாகிப்பாரகள்.
எனக்கு ஹாட் அண்ட் ஷோர் சிக்கன் சூப் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் பாபுதான்.ஏனெனில் அறுசுவையில் உறுப்பினர் பக்கம் சுய விபரத்தில் ஹாட் அண்ட் ஷோர் சிக்கன் சூப்பிற்காக உயிரில் கொஞ்சம் இழக்கவும் தயார் என்று தன்னைப்பற்றி நகைச்சுவையாக அறிமுகப்படுத்திய வரிகளை வாசிக்கும் நேரமெல்லாம் சிரிப்பை வரவழைத்து விடும்.
பிளாக் என்று அறிந்திராத காலகட்டத்தில் சுமாராக 90 களில் வெகு சிலரே விரல் விட்டு எண்ணக்கூடிய காலகட்டத்தில் தமிழில் பிளாக் எழுதிய பெருமையும் இவருக்குண்டு.
அறுசுவையில் வெளியான பல சமையல் குறிப்புகளையும் பல்வேறு தலைப்புகளில் நூல்களாக்கி இருப்பது மகளிர் மத்தியில் மட்டுமல்லாது சமையல் தெரியாத ஆண்களுக்கும் உதவிகரமாக உள்ளது.
ஆங்கிலதளம் இன்ன பிறவென்று வலைதளத்தில் இன்னும் உயர உயர பறக்க வேண்டும் என்பதே இவரது இலட்சியம்.இவரது ஆர்வமும், முயற்சியும்,உழைப்பும் வெகு விரைவில் இவர் தன் இலக்கை அடைய வைக்கும்.
Tweet |
54 comments:
அட... என் தளம் தங்கைக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்குன்றதுல ரொம்ப மகிழ்ச்சி. உலகப் புகழ் பெற்ற மகத்தான மனிதர்களையும், நம் நாட்டின் தலைவர்களையும் விரிவாச் சொல்லணும்னு நான் ஆசைப்பட்டேன். நீங்க ஒரு படி மேலே போய் வாழும் வரலாறுகளைச் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க.
முதல் அறிமுகமே சூப்பர்! பாபு போன்றவர்கள் உழைப்புக்கும் உயர்வுக்கும் உதாரணம். அவரைத் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி! (அவரின் உறவான அந்தப் பெண் பதிவர் யார்னு மண்டைக்குள்ள பூச்சி பறக்க ஆரம்பிச்சுட்டதம்மா!) அருமையான பகிர்வு. தொடருங்க... நல்லாவே வந்திருக்கு!
இவர் தன் இலக்கை அடைய எனது வாழ்த்துக்கள்
பாபுவை கிட்டதட்ட 6 வருடங்களாக தெரியும்.நான் பார்த்து வியந்த மனிதர்களுள் தம்பி பாபுவும் ஒருவர்.நாங்கள் எல்லாம் இப்படி தனியாக ப்ளாக் வைத்து சமையல் குறிப்பு கொடுப்பதற்கு அனுபவத்தை தந்தது அறுசுவை என்ற பற்கலைக் கூடமே என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை.இன்னும் எத்தனையோ பகிர ஆசை,தம்பி பாபுவுக்கு புகழ் பாடுவது கூட பிடிக்காது.
தன்னடக்கமானவர்.தனிச்சையாக செயல் படக் கூடியவர்.அவர் எண்ணம் போல் வாழ்வில் வெற்றி வாகை சூட என் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்.நான் உள்ளவரை அறுசுவை பற்றிய நினைவுகள் என்னை விட்டுப் பிரியாது.இதே போல் எத்தனையோ இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தது அறுசுவை எனபதை சொல்லவும் வேண்டுமோ!
அருமையான அறிமுகம்
தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்
அறிய ஆவலாக உள்ளோம்
வாழ்த்துக்களுடன்...
ஆங்கிலதளம் இன்ன பிறவென்று வலைதளத்தில் இன்னும் உயர உயர பறக்க வேண்டும் என்பதே இவரது இலட்சியம்.இவரது ஆர்வமும், முயற்சியும்,உழைப்பும் வெகு விரைவில் இவர் தன் இலக்கை அடைய வைக்கும்.//
திரு பாபு அவர்களின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
ஸாதிகா, உங்கள் புதிய அறிமுக பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடருகிறோம்.
ஆங்கிலதளம் இன்ன பிறவென்று வலைதளத்தில் இன்னும் உயர உயர பறக்க வேண்டும் என்பதே இவரது இலட்சியம்.இவரது ஆர்வமும், முயற்சியும்,உழைப்பும் வெகு விரைவில் இவர் தன் இலக்கை அடைய வைக்கும்.//
திரு பாபு அவர்களின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
ஸாதிகா, உங்கள் புதிய அறிமுக பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடருகிறோம்.
படிக்க சந்தோஷமா இருக்கு ஸாதிகா. பாபுவுக்கு என் வாழ்த்துக்கள்.
படம்... அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பியே! ;)
இப்பதான் பாபு அண்ணாவை பார்க்கிறேன்.
அவரின் ஒரு போஸ்ட்டில் உங்கள் வீட்டில் கலந்துக்கொண்ட விருந்து பற்றி சொல்லியிருந்தார். அப்பறம் ஒரு கெட் டூ கெதர் பற்றியும் சொல்லியிருந்தார். அப்போதுதான் உங்களை எனக்கு தெரியும்...
நான் தினமும் அங்கே போய்ட்டுதான் இருக்கேன். ஆனா கமென்ட் போடதான் வெட்க்கமா இருக்கு ஹி..ஹி..ஹி.. எல்லாரும் புது புது ஆளா வந்துட்டாங்க. சீனியர பார்த்து ஜூனியர்லாம் யார்ன்னு கேட்டா இமேஜ் என்னாவுறது அவ்வ்வ்வ்வ் ;-)
அண்ணாவின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்...
ஸாதிகா அக்கா
வாவ் பாபு தம்பிய பற்றி எழுதி இருக்கீங்க சூப்பரான அறிமுகம்
ஏறாளமான சமையல் குறிப்புகள் தெரிந்திருந்தும் எந்த பத்திரிக்கையிலுமே எழ்த முடிவில்லையே
நெட்டில் சிலரின் சமையல் குறிப்பைபார்க்கும் போது நமக்கு தெரிந்ததை பகிர முடியவில்லையே என்று கவலை பட்ட நேரம் தான் எனக்கு அறிமுகம் ஆனது அறுசுவை
எப்படின்னு தெரியாமல் தட்டி தடுமாறி தான் உள்ளே நுழைந்தேன்.
தமிழ் டைப்பிங் கற்று கொண்டதே அங்கு அவர் போட்டு இருக்கும் எழுத்துதவி மூலம் தான் கற்று கொண்டேன்.
பாபு தம்பி மிகவும் பண்பானவர், நான் தப்பு தப்பாக எழுதிய குறிப்புகளை ( நான் அறுசுவையில் பங்கு பெறவேண்டும் என்ற ஆவலை தெரிந்து கொண்டு )
அவரே சரி செய்து அறுசுவையில் கூட்டாஞ்சோறில் சேர்த்து சந்தோஷ வெள்ள்ளத்தில் ஆழ்த்தி விட்டார்
2004 அப்படி தான்னு நினைக்கிறேன் , லில் இருந்து அறுசுவையை தெரியும்.
தினம் அங்கு கருத்து தெரிவிகக்கல்னா
தளிக்கா ,மர்லி, ஜேமாமி, வானதி , கலா, ராஹிலா இவர்களுடன் அரட்டை அடிக்கலன்னாஅ எனக்கு தூக்கமே வராது.
உண்மையை சொல்லபோனால் தமிழ் தட்டச்சு எப்படி செய்யனும்னு அறுசுவையை பார்த்துதான் கத்துக்கிட்டேன்..மிக நல்ல பகிர்வு.பாபு அண்ணா அவரின் இலக்கை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
ஆமினா சொல்வது போல் , முன்பு தினம் , இப்ப, நானும் நேரம் கிடைக்கும் போது அறுசுவைக்கு போவதுண்டு கமெண்ட் போட லாகினும் பண்ணிடுவேன்
//சீனியர பார்த்து ஜூனியர்லாம் யார்ன்னு கேட்டா..//
அதே அதே....
இனிய பாராட்டுகள் ஸாதிகா.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதரில்தான் எத்தனையெத்தனை வகை!!!
சில வருசங்களுக்கு முன் நானும் 'எவ்ரி டே மனிதர்கள்' என்று எழுதஆரம்பித்து அது தமிழோவியத்தில் வந்து கொண்டிருந்தது.
6 மாசம் ஓடுச்சு ஷோன்னு சொல்லலாம்.
அப்புறம் நீங்க சொன்னது மாதிரிதான் நம்ம பதிவுகளை எழுதவே நேரமில்லாமப்போகுது. இதுலே வேற மின்னிதழ்க்கு அனுப்பணுமுன்னா சரியான நேரத்தில்/தேதியில் அனுப்பணும். இப்படி கெடுபிடின்னா எழுதவே வராது...:-))))
நம்ம பதிவு என்பதால் நிதானமா யோசிச்சு எழுத முடியும்.
நோக்கம் நிறைவேற வாழ்த்துகின்றேன்.
இணையத்தின் மீதான நம்மில் பலரின் ஆர்வத்தை உருவாக்கி வளர்த்த பெருமை அருசுவை, தமிழ்குடும்பத்திற்கும் கண்டிப்பாக உண்டு...நான் முதன் முதலில் தமிழில் டைப் செய்ததும் இங்குதான். அது வரை மெயிலுக்காக மட்டுமே இணையத்தினை உபயோகித்து வந்தேன். அருசுவையின் விவாதங்களிலும் தமிழ்குடும்பத்தில் என்னுடைய படைப்புகளும் இடம்பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சி என்றும் மறக்க இயலாத பசுமையான நிகழ்வுகள். இன்று அருசுவை உறுப்பினர்கள் பலர் ப்ளாக் வைத்திருப்பதும் திரு.பாபு அவர்கள் அளித்த ஊக்கம்தான் காரணம். வாழ்வில் அவர் சந்தித்த பல இன்ப/துன்பங்களைப் பற்றி அருசுவையில் படித்திருக்கிறேன். உங்கள் பதிவின் மூலமும் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்.
அறிந்தேன். புரிந்தேன். வியந்தேன்.
நன்றிகளும், வாழ்த்துகளும் :)
சிறப்பான அறிமுகம்... திரு.பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இது போல் தொடர வாழ்த்துக்கள்...
ஸாதிகா... அருமையான பதிவு. நல்ல ஒரு முயற்சி.முதலில் இந்த எண்ணம் தோன்றி இங்கு இப்படி இவர்களைப் போன்றோரை கௌரவிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
நூறுவீத உண்மை. எனது முதலாவது வலை உலகில் கருத்துப் பகிர்வுத்தளம் அறுசுவை வலைப்பூதான். அங்கு சகோ.ஹைஷின் மறைபொருள் ரகசியப்பதிவிற்கு கருத்துப்பகிர்வு தெரிவிக்க ஆரம்பித்தேன். கணனியில் தமிழ் தட்டச்சும் அங்கிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
அவ்வகையில் இன்று உங்களின் இவ் அரிய பதிவினால் திரு. பாபு அவர்களுக்கு நானும் என் நன்றியினைக் கூறிக்கொள்கின்றேன்.
இந்த வாய்ப்பினை ஏற்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றி ஸாதிகா.
நல்ல முயற்சி!. தொடருங்கள்...
அருமையான மனிதரை அறிமுகம் செஞ்சுருக்கீங்க.. இனிய வாழ்த்துகள்.
உண்மைதான் சாதிகா அக்கா. வலைப்பூவில் கலக்கும் பலருக்கும் இணையத்தில் தாய்வீடுன்னா அது அறுசுவைதான். தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொடுத்து நட்பு வட்டம் அமைத்துக் கொடுத்து ஒவ்வொருவரின் சிறு சிறு முயற்சிகளுக்கும் உற்சாகம் கொடுத்து வளர்த்தது அறுசுவையும் பாபு அண்ணாவும்தான்.
உலகில் உள்ள அனைத்து (பல) பெண்களின் தனிமைக்கு ஒரு அன்பான தோழி + அம்மா + துணை என்றும் சொல்லலாம். அறுசுவையையும் அதை உருவாக்கிய பாபுவையும்..
நல்ல அரட்டை அடிக்கலாம், பல சந்தேகங்களை கேட்கலாம்,கண்டிப்பாக அங்கு லைனில் இருப்பவர்கள் உதவுவார்கள்,
இது வரை யாராவது என் மொத்த சமையல் குறிப்பு பார்த்து சமைக்க கேட்டால் , நான் என் சமையல் அட்டகாசத்தை யாருக்கும் இதுவரை உடனே சொன்னதில்லை.
அறுசுவை மற்றும் தமிழ் குடும்பத்தை தான் சொல்வேன்,
பல வகை குறிப்புகள் கிடைக்கும் அங்கு பெற்று கொள்ளுங்கள் என்று சொல்வேன்.
அருமையான அறிமுகம்
தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்
சிறப்பான அறிமுகம். அவரது இலட்சியங்கள் மெய்ப்பட வாழ்த்துகள்.
நல்ல சிந்தனை நல்லவற்றையும் சொல்லித்தந்த அனைவரையும் பாராட்டும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
நல்லதொரு அறிமுகம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
போஸ்ட் போட்டதும்மே பின்னூட்டி உற்சாகம் அளித்த கணேஷண்ணாவுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.
நான் சுல்லாததை நீங்கள் பின்னூட்டத்தில் சேர்த்து இருக்கீங்க ஆசியா.கருத்துக்கு நன்றி.
மிக்க நன்றி ரமணி சார்
உற்சாகம் கொடுத்து வரும் கோமதிம்மாவுக்கு நன்றி.
இமா எனக்கு தெரியும்.இந்த பதிவு இமாவை இங்கே இழுத்து வந்துவிடும் என்று.தொடர்ந்து வரணும்.நன்றி இமா.
மிக்க நன்றி ஆமினா.உங்கள் அனைவரைன் வாழ்த்துகக்ளையும் பின்னூட்டம் வாயிலாக பாபு பார்க்கலாம்.
ஜலி,ஆசியாவைப்போலவே நான் சொல்ல மறந்த பல தகவல்களை பல பின்னூட்டம் வழியே சொல்லி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.
மிக்க நன்றி மேனகா.நாமெல்லாம் அறுசுவை மூலம் பழகியவர்களாச்சே.
மிக்க மகிழ்ச்சி துள்சிம்மா.தமிழ் ஓவியம் லின்க் தாருங்களேன்.நானும் படித்துப்பார்கிறேன்.கருத்துக்கு நன்றி.
இன்று அருசுவை உறுப்பினர்கள் பலர் ப்ளாக் வைத்திருப்பதும் திரு.பாபு அவர்கள் அளித்த ஊக்கம்தான் காரணம்//உண்மைதான் பானு.கருத்துக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி கருத்துக்கும் முதல் வருகைக்கும் நாகைசிவா.
மிக்க நன்றி தொடர் வருகைக்கு திண்டுக்கல் தனபாலன்.
மிக்க நன்றி இளமதி.அறுசுவை பாபு அவர்களைப்பற்றி எழுதியதும் அநேகருக்கு மலரும் நினைவுகள் பூக்க ஆரம்பித்து விட்டன இல்லையா?
மிக்க நன்றி அமைதிச்சாரல்.
வாங்க கவிசிவா.உங்கள் முகவரியைத்தான் தேடிக்கொண்டு இருகிறேன்.எங்கே போய்விட்டீர்கள்.வருகைக்கு நன்றி.
உலகில் உள்ள அனைத்து (பல) பெண்களின் தனிமைக்கு ஒரு அன்பான தோழி + அம்மா + துணை என்றும் சொல்லலா//சரியாகச்சொன்னீர்கள் ஜலி .
மிக்க நன்றி விஜி பார்த்திபன்.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
கவியாழி கண்ணதாசன் மிக்க நன்றி.
மிக்க நன்றி வி ஜி கே சார்
அருமையான அறிமுகம்
தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்
அறிய ஆவலாக உள்ளோம்
வாழ்த்துக்களுடன்...
Vetha.Elangathilakam
உங்கள் புதிய அறிமுக பதிவுக்கு வாழ்த்துகள்.
வித்யாசமான இன்ட்ரஸ்டிங் தொடர்!
"அறிவீர்களா இவரை?" - கொஞ்சமே கொஞ்சம் அறிவோம். :) ஐ மீன், ஒரே ஒரு முறை தொலைபேசி இருக்கிறேன் பாபு அண்ணாவுடன். மிகவும் எளிமையான மனிதர். அறுசுவையின் ஆணிவேர். நமக்குள் ஒளிந்திருந்த எழுத்தாளர்களை, பதிவர்களை நமக்கே அறிமுகப் படுத்தியவர்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா அக்கா!
எல்லோரும் நல்லதாக நாலு வரி சொல்லி வாழ்த்திட்டுப் போறாங்க. இமா மட்டும் 'சந்தோஷம்' என்று சுருக்கமாகச் சொன்னால் எப்படி! என் பங்குக்கு... இந்த போஸ்ட் ஸாதிகா. தொடர்பதிவு மாதிரி, கொஞ்சம் நீ..ளமாக இருக்கும். கீழ் பாதி மட்டும் படித்தால் போதும்.
http://imaasworld.blogspot.co.nz/2010/09/blog-post_25.html
//நமக்குள் ஒளிந்திருந்த எழுத்தாளர்களை, பதிவர்களை நமக்கே அறிமுகப் படுத்தியவர். // உண்மைதான் மகி. அதோடு 'புகைப்படப்பிடிப்பாளர்களை' என்று ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
எனக்கு ஸாதிகா மற்றும் இங்கு பலரையும் தெரியுமென்றால் அது அறுசுவை வழியாகத்தான். இப்போதைக்கு... மேலே ஆசியா, ஜலீ, மேனகா மற்ற அறுசுவை உறவுகள் சொல்ல கருத்துகள் அனைத்தையும் வழிமொழிந்துவிட்டு கிளம்புகிறேன். மீதியெல்லாம் ஒழிந்திருந்து படிப்பேன்ன்ன் ஸாதிகா. ;)
பாராட்டுகள். தொடருங்கள்.
சகோதரி ஸாதிகா சாதனை செய்வதில் ஒரு பதுமை விருப்பம் கொண்டவர் .வளரட்டும் அவர்கள் தொண்டு பல வழிகளிலும் .
திண்டுக்கல் தனபாலன் அவர்களை அனைவரும் அறிவார்கள்,
இருந்தாலும் அவர்கள் உங்கள் வழி சாதனைப் பட்டியலில் அவர் இருக்க அனைவரும் விரும்புவார்கள்
நான் கொடுத்த கருத்துரை ப்ளூ டைமென்ட் சகோதரி ஸாதிகா தளத்தில் காணவில்ல
Please visit
http://nidurseasons.blogspot.in/2012/03/blog-post_892.html
சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை
http://anbudanseasons.blogspot.in/2013/04/blog-post_6522.html
உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.
My golden days + beautiful arusuvai friendship
Very kindly respectful persons, Mr. Babu. I ever never forget Arusuvai & Arusuvai Babu. All the best!
மிக அருமை. ஸாதிகா.நான் இவரது பதிவுக்குச் சென்றதில்லை. இவ்வளவு நல்ல மனிதரை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி உங்கள் அறிமுக நிகழ்ச்சி பலருக்குச் செய்யும் சேவையாக அமையும் வெற்றி பெற வேண்டும். திரு .பாபு அவர்களும் மேலும் வளர என் வாழ்த்துகள் உங்களுக்கும் தான். நன்றி அம்மா.
Post a Comment