திருப்தியாக சாப்பிடவும்,பட்ஜட் எகிறாமல் இருக்கும் படியான நான்வெஜ் பாஸ்ட் புட் செல்ல வேண்டுமா?கண்ணை மூடிக்கொண்டு நந்தனம் மேற்கு சி ஐ டி நகரில் உள்ள ருகா ஜி எஃப் சி ரெஸ்டாரெண்டுக்கு செல்லலாம்.
சுவை,தரம்,சுத்தம் அனைத்துக்குமே பாஸ் மார்க் போடலாம்.பிராஸ்டட் சிக்கன் மற்ற ரெஸ்டாரெண்டுகளில் பிரை செய்து வைத்து இருப்பதை கொடுப்பார்கள்.ஆனால் இங்கோ ஆர்டர் வாங்கிய பின்னரே பிரை பண்ணவே ஆரம்பிக்கின்றனர்.பிளேட் டேபிளுக்கு வந்ததும் சூடு ஆறுவதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.இதுவே இந்த ரெஸ்டாரெண்டுக்கு பிளஸ் பாயிண்ட்.
சிக்கன் வகைகள்,ரைஸ் வகைகள்,சாலட் வகைகள்,ரோல்ஸ்,பர்கர்,பிரன்ஞ் பிரை,சாண்ட்விச்வகைகள்,பிரஷ் ஜூஸ்,புரூட் சாலட்,ஐஸ் க்ரீம்,மில்க் ஷேக் வகைகள் என்று இருந்தது போக இப்பொழுது சாட் ஐட்டங்களும் அறிமுகப்படுத்தி விட்டார்கள்.
நிறைய காம்போ அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.நம் வசதி,டேஸ்டுக்கு ஏற்ப சாப்பிடலாம்.சாலட் வகைகள் க்ரீமியாக யம்மியாக உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் 3 மணி வரை ஹாப்பி அவர்ஸ் என்று 20 சதவிகிதம் விலை குறைப்பு செய்து இருக்கின்றனர்.
சிக்கன் வகைகளில் நக்கட்ஸ்,ஸ்மைலீஸ்,பாப்கார்ன் என்று குழந்தைகளை ஈர்க்கும் மெனுவும் உண்டு.
ஸ்னாக்பாக் என்ற காம்போவில் இரண்டு பீஸ் பிராஸ்டட் சிக்கன்,பிரஷ் ஆக சூடாக சிறிய பன்,சாஸ்,கோக் அல்லது லெமன் மிண்ட் 135 ரூபாயில் கிடைக்கின்றது.இதுவே ஹாப்பி அவர்ஸில் சென்றால் வெறும் 110 ரூபாய்க்கு அருமையான லஞ்ச் முடிந்து விடும்.
மயோனைஸில் டொமட்டோ கெச்சப் கலந்து செய்த ஒரு வித சாஸை ஜி எஃப் சி ஸ்பெஷல் சாஸ் என்று தருகின்றனர்.வித்தியாசமான டேஸ்ட்.
குறை என்னவென்றால் காம்போவாக ஆர்டர் பண்ணினால் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஐட்டங்களில் ஓரிரண்டை தர மறந்து விடுகின்றனர்.பிரன்ஞ் பிரை வரவில்லை,ஸ்பெஷல் சாஸ் வரவில்லை என்று கேட்டு கேட்டு வாங்க வேண்டிஉள்ளது.சர்வீஸை இன்னும் சரியாக செய்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் பார்வைக்காக இதோ மெனு.
இது ஒரு காம்போ.சிக்கன் பீஸ்,பர்கர்,பிரன்ஞ் பிரஸ்,கோக் என்று தருகின்றனர்.
க்ரீமியாக யம்மியாக இருக்கும் ஹவாலியன் சாலட்.நாங்கள் ரெகுலர் கஸ்டமர் என்பதால் அரை பிளேட் பிரீ.பணம் கொடுத்து வாங்கினால் முழு பிளேட் தான் தருவார்கள்.
நான் பதிவில் குறிப்பிட்ட காம்போ.ஸ்னாக் பாக்
ஜில்லென்ற லெமன் மிண்ட்
கலர் கலராக மின்னும் சுவையான பலூடா.
அட்ரஸ்:18/19 கிழக்குசாலை,ஆல்ஃபா பள்ளி அருகில்,மேற்கு சி ஐ டி நகர்,நந்தனம்,சென்னை - 35
Tweet |
22 comments:
படிக்க படிக்க அந்த ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டமாதிரி இருக்கு.
ஆஹா! அசத்திட்டீங்க,இது மாதிரி ஸ்நாக்ஸ் பாக்ஸ்,கோம்போ மீல் இங்கே சென்னையில் என்று பார்த்தால் சீப் & பெஸ்ட் ஆக அங்கே தெரிகிறதே..எப்பாவாது போய் குழந்தைகளுக்காக போய் சாப்பிட்டு வரலாம்..சென்னை வந்தால் போக,பார்க்க லிஸ்ட் கூடிக் கிட்டே போகுது,நாம இப்படி எதாவது ரெஸ்ட்டாரண்டில் மீட் செய்யலாம் போல..
சலாம் ஸாதிகா லாத்தா.
தகவலுக்கு நன்றி. நாங்க வந்தா அங்கே அழைச்சிட்டு போவீங்கதானே? ;) சரி அதுக்கு முன்னாடி ஒரு டவுட்! RUGA GFC ஹலால் ரெஸ்டாரண்ட்டா? நான்வெஜ் என்றால் இதை கவனித்துதான் போயிருப்பீர்கள். அவங்க தளத்தில் அப்படி மென்ஷன் பண்ணவில்லை என்பதால் கன்ஃபார்ம் பண்ணிக்க உங்களிடமே கேட்கிறேன்.
யம்மாடி... இத்தனை வகைகள்...
ருகா ஜி - நல்ல ருசி ஜி...
Kadaisiya irukum falooda sama super ra iruku.. neega solluvathai parthaal nalla thaan irukum.. intha murai try panna vendiya list nindukondey poohuthu..
வாங்க ஷேக்.ரொம்ப நாள் கழித்து வந்து கருத்து தெரிவித்து இருக்கீங்க.நன்றி.
.சென்னை வந்தால் போக,பார்க்க லிஸ்ட் கூடிக் கிட்டே போகுது//இந்த வரிகள் சிரிப்பை வரவழைத்து விட்டது தோழி.நன்றி.
. அலைக்கும் சலாம் அஸ்மாநாங்க வந்தா அங்கே அழைச்சிட்டு போவீங்கதானே? ;) //என்ன அஸ்மா இப்படி கேட்டுட்டீங்க.எப்ப வர்ரீங்க?
// RUGA GFC ஹலால் ரெஸ்டாரண்ட்டா? நான்வெஜ் என்றால் இதை கவனித்துதான் போயிருப்பீர்கள். அவங்க தளத்தில் அப்படி மென்ஷன் பண்ணவில்லை என்பதால் கன்ஃபார்ம் பண்ணிக்க உங்களிடமே கேட்கிறேன்//http://www.facebook.com/pages/RUGA-GFC/284281328329673இந்த ருகா மெனு காரடை பாருங்க.
நான் வெஜ் சாப்பிட வெளியில் செல்வதென்றால் பச்சை போர்ட் இல்லாத கடைகளுக்கு செல்வதில்லை.கருத்துக்கு நன்றி அஸ்மா.
ருகா ஜி - நல்ல ருசி ஜி.//பின்னூட்டமே கவித்துவமாக உள்ளதே.நன்றி திண்டுக்கல் தனபாலன்
வாங்க பாயிஜா.கருத்துக்கு நன்றி.
தினகரன் வசந்தத்தில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துகள் ஸாதிகா!
மேலும் மேலும் பல்கிபெருக வாழ்த்துகள்!
தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள் தொகுப்பில் உங்கள் வலைதளமும் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஸாதிகா.
ஆஹா..எல்லாமே நல்லா இருக்கு ஸாதிகா.. சென்னையில் விலை கம்மி போல் தெரிகிறது..:)
இதோட பட்ஜெட்டை என் பர்ஸ் தாங்கும்ங்கறது நல்லாத் தெரியுது சிஸ்டர்! நிச்சயம் போய் சாப்பிட்டு்ப் பாத்துடறேன். தினகரன் வசந்தத்துல நீங்களும் அறிமுகம் ஆகியிருக்கறதை அமைதிச்சாரல் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் நிறைய நிறைய மகிழ்வுகள் பெற இதயம் நிறைய நல்வாழ்த்துக்கள்மா!
நல்ல ரெஸ்டோரண்ட்.. அழகிய உணவுப் படங்கள்... வாழ்க ருகா...
தினகரன் வசந்தத்தில் அறிமுகம் ஆனதில் வாழ்த்துக்கள் அக்கா!! அந்த கடைசி படம் பலூடா சூப்பர்ர்ர்!!
ஃபலூடா பார்க்கவே அட்டகாசமா இருக்கு!
இதுக்காகவே ஒரு விஸிட் அடிக்கணும்.
சண்டிகரில் ஒரு கடையில் மெனுவில் ஃபலூடான்னு இருக்கேன்னு ஆர்டர் செய்தேன். சாஸரில் கொண்டுவந்து கொடுத்தாங்க...... தோ தோன்னு கூப்பிடாதது நிம்மதி :-)))
கலர் கலராக மின்னும் சுவையான பலூடா.
எனக்கு இது தான் வேண்டும்.
பார்க்க வாயூறுகிறது.
பதிவு பிடித்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தினகரன் வசந்த அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
அந்த ப்ளுடா உடனே செய்து பார்க்கனும்
இங்கு திஙக்ள் முதல் வியாழன் மதியம் 3 மணிக்குள் ஆஃபர் ரேட்.
ஃபலூடா ஜில்லுன்னு பார்க்கவே அழகா இருக்கு..
இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்ணுக்கு வாழ்த்துகள்.. :-)
ம்ம்ம்.... ரெகுலர் கஸ்டமருக்கு இப்படியெல்லாம் மரியாதையா....
படத்தில் உள்ள எல்லாமே நாக்கு ஊற வைக்குதே....;)
Post a Comment