புனித கஃபா
புனித மக்கா நகரில் அமையப்பட்ட இறை இல்லம்.முழுப்பெயர் கஃபதுல்லா ஆகும்.இறைவனின் ஆணைப்படி ஆதி தந்தை ஆதம் அவர்கள் கட்டிடம் எழுப்பினாரகள்.5000ஆண்டுகளுக்கு முன்னர் இப்றாஹீம் அலை அவர்கள் கஃபாவை கட்டினார்கள்.
நபிமார்கள் அனைவரும் இங்கு வந்து அல்லாஹ்வை தொழுது இருக்கின்றார்கள்.ஹஜ் செய்து இருக்கின்றார்கள்.
கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் சுமார் 50 அடி,நீளம் 40 அடி,அகலம் 25 அடியும் நான்கு மூலைகளும் கொண்ட சதுரவடிவானது. 99 வாயில்களைக்கொண்டது.இப்பொழுது சவுதி அரசாங்கத்தால்மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டு பல லட்சம் மக்கள் தொழும் பிருமாண்டமான மஸ்ஜித் ஆக திகழ்கின்றது.
ஹரம் ஷரீஃபில் உள்ள பிருமாண்டமான நான்காவது தளத்தில்(மொட்டை மாடி)சுற்றுப்புற சுவரின் அருகே சேரில் உட்கார்ந்து கஃபதுல்லாவை கண்குளிர பார்த்துக்கொண்டே இருக்கலாம் நேரம் போவதே தெரியாமல்.அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் நடுநிசி 12 மணிக்கு எடுத்த புகைப்படம் இது.
பெண்களுக்கான வாயில்
.
87,88 பெண்களுக்கான பிரத்யேகமான வாயில்.இதனுள்ளே சென்றால் பளீர் என்ற விளக்கொளியும் அதீத ஏஸி சில்லிப்பும் என்னை மிகவுமே ஈர்த்து விட்டதால் அநேகமாக இங்கே சென்றே தொழுவேன்.அங்கு சீலிங்கில் போட்டு இருக்கும் பிருமாண்டமான சாண்ட்லியர் நூற்றுக்கணக்கில் இருக்கும்.அதில் ஒன்றுதான் இது.
கிங் அப்துல் அஜீஸ் கேட்
கேட் நம்பர் ஒன்று .இதற்கு கிங் அப்துல் அஜீஸ் பெயரை வைத்துள்ளார்கள்.இந்த கேட்டுக்கு நேராக உள்ள வீதியில் உள்ள ஹோட்டலில்தான் எங்கள் ஜாகை.யாரை சந்திக்க வேண்டுமோ இந்த கேட்டை அடையாளமாக வைத்து சுலபமாக சந்தித்துக்கொள்வோம்.இதற்கு எதிரே கிளாக்டவர் என்றும் பிருமாண்டமான ஹோட்டல்.அதன் உச்சியில் மிகப்பெரிய கடிகாரம்.மக்காவின் எந்த வீதியில் சென்றாலும் இந்த கிளாக்டவர் நம் கண்களுக்கு புலப்படும்.
மிக நெருக்கத்தில் கஃபதுல்லாஹ்
இது ஒரு அரிய காட்சி.எப்பொழுதும் எறும்பு மொய்த்தாற்போல் ஹரத்தை சுற்றி மனிதத்தலைகள் மொய்த்திருக்கும்.இப்பொழுது யாருமே இல்லாத ஒரு படம் வியப்பை தருகின்றதா?கஃபாவை சுத்தம் செய்யும் பொழுது மிக நெருக்கத்தில் முதல் ஆளாக நின்று கொண்டு கஃபாவை கண்குளிர பார்த்தேன்.மிக நெருக்கத்தில் எடுத்த படம் ஆதலால் கஃபாவை முழுவதுமாக படம் எடுக்க இயல்வில்லை."ஹாஜி தரீக் தரீக்" என்ற கூக்குரலை பொருட்படுத்தாது ஆற அமர போட்டோக்கள் கிளிக் செய்தேன்.என்னை வைத்து எடுக்க பக்கத்தில் ஆள் இல்லாமல் நானே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த உறவினர்கள் இவ்வளவு நெருக்கத்தில் எப்படிப்போய் படம் எடுத்தாய் என்று ஆச்சரியப்பட்டனர்.
கஃபாவின் வாசல்
கஃபாவின் வாசல் சுத்தமான தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். தரை மட்டத்தில் இருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.அழகிய வேலைப்பாடும்,குர் ஆன் ஆயத்துகளும் பொறிக்கபட்ட இரட்டை கதவுகள்.இதற்கு படிகள் மூலமாக ஏறவேண்டும்.கூட்டம் காரணமாக எப்பொழுது மூடப்பட்டே இருக்கும் கதவுகள் வருடந்தோரும் நடைபெறும் சவூதியின் சர்வதேச குர்ஆன் மனனப்போட்டியில் கலந்து கொள்ளும் காரிக்கள், ஹாபிள்கள், விஷேட விருந்தினர்கள், சர்வதேசமட்டத்தில் பேசப்படும் அறிஞர்கள் போன்றோர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளின் மாத்திரம் அது திறக்கப்படும்.அப்படித்திறக்கப்படும் பொழுது வெள்ளியால் ஆன ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு உபயோகிப்பார்கள்.
மகாமு இப்ராஹீம்
. (இதையும் எண்ணிப் பாருங்கள்; ‘கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்’ (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன்2:125)
இப்ராஹீம்(அலை) அவர்கள் கஃபாவை எந்தக் கல் மீது நின்று கட்டினார்களோ அதனையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். எந்த ஒரு ஹாஜியோ அல்லது உம்ராச் செய்பவரோ அல்லது தவாஃப் செய்பவரோ அவர்களின் தவாஃபை முடித்த பின் மகாமு இப்ராஹீமுக்குப் பின் (தவாஃபுக்காக) இரண்டு ரக்அத் தொழவேண்டும்.
நபி இப்றாஹீம் (அலை)அவர்களின் கால்தடமும் இங்கு பதிவாகி உள்ளது.
கஃபாவை சுத்தம் செய்தல்.
"சுத்தம் ஈமானில் பாதியாகும்"என்ற நபி மொழிகொப்ப ஹரம் ஷரீபில் 24 மணி நேரமும் எங்காவது ஒரு மூலையில் குழுவாக நின்று சுத்தம் செய்துகொண்டே உள்ளனர்.எப்படிப்பட்ட பெரும் கூட்டத்தையும் ஒரு ரிப்பன் கயிற்றினால் ஓரம் கட்டிவிட்டு கூட்டமாக மின்னல் வேகத்தில் ஊழியர்கள் சுத்தம் செய்வது ஆச்சரியமாக இருக்கும்.ஆங்காங்கு ஹரம்ஷரீபை சுத்தம் செய்வது அனைவர் பார்வையில் பட்டாலும் கஃப்துல்லாவை சுத்தம் செய்யும் பொழுது காணும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.கஃப்துல்லாவின் நிர்வாகிகள் முன்னிலையில் கஃபாவின் சுவர்களை கழுகி சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஊழியர்களைப்பாருங்கள்.
வெள்ளிக்கிழமை
புனித ஹரம் இருக்கும் இடத்துக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சாலை இது.வெள்ளிக்கிழமை அன்று அதிக கூட்டம் காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள சாலைகளில் அமர்ந்தும் தொழுகை புரியும் மக்கள் வெள்ளத்தைப்பாருங்கள்.இதே போல் ஹரத்தை சுற்றி இருக்கும் சாலைகள் அனைத்திலும் இதே சாலையோர தொழுகை நடைபெறுவது வாடிக்கை.ஜும்மா நேரத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு வேலை தொழுகைக்கு முன்னரும் ஹரத்தினை சுற்றி உள்ள சாலைகளை வாகனங்கள் செல்லமுடியாதவாறு அடைத்து விடுவார்கள்.
புறாக்கள்
மக்காவில் எங்கு பார்த்தாலும் புறாக்கூட்டம் லட்சக்கணக்கான புறாக்கள்.இருப்பினும் ஹரத்தின் மொட்டை மாடி கைப்பிடிகள்,சுற்றுவட்டாரம்,ஏன் தங்கி இருந்த ஹோட்டல் ரூமின் பால்கனிசுவர்கள் ஜன்னலோரங்கள் எதிலுமே புறா எச்சங்களை நான் பார்த்ததில்லை.இங்கு சென்னையில் நான் வசிக்கும் பகுதியிலும் புறா நடமாட்டமுண்டு.சொற்பபுறாக்கள் நடமாட்டத்துக்கே பால் கனியில் ஜன்னலோரத்திலும் புறா எச்சங்கள் அசிங்கப்படுத்தவதை ஒப்பீடு செய்து ஆச்சரியப்பட்டதுண்டு.ஒரு திடலில் புறாக்களுக்கு தீனி போட்டு மகிழ்கின்றனர் மக்கள் கூட்டம்.வீதியெங்கும் நெல் மணிகளும் கோதுமை மணிகளும் கொட்டிக்கிடக்க புறாக்கள் கொத்தித்தின்னும் அழகினைப்பாருங்கள்.
மினா
சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.இங்கு படுக்கை இரண்டடி அகலம் ஆறடி நீளம் கொண்டது ஒவ்வொரு ஹாஜிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும் இடமாகும்.ஒரு கூடாரத்தினுள் சுமார் 60 முதல் 100 பேர் வரை தங்கக்கூடியதாக இருக்கும். இதனுள்ளே 5நாட்கள் தங்கி இருந்து உண்டு உறங்கி தொழுது பிரராத்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.
சவுதி அரசாங்கத்தால் 30 லட்சம் ஹாஜிகளுக்கு மேல் தங்கக்கூடிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் வீதிகளில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து ஹஜ் கிரியைகளை செய்யும் ஹாஜிகளைப்பாருங்கள்.அந்த கூடாரமே இன்றி வானமே கூரையாக நினைத்து ஐந்து நாட்களும் தெருவோரத்தில் குழந்தைகளுடன் தங்கி இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகளும் உண்டு.
சவுதி அரசாங்கத்தால் 30 லட்சம் ஹாஜிகளுக்கு மேல் தங்கக்கூடிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் வீதிகளில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து ஹஜ் கிரியைகளை செய்யும் ஹாஜிகளைப்பாருங்கள்.அந்த கூடாரமே இன்றி வானமே கூரையாக நினைத்து ஐந்து நாட்களும் தெருவோரத்தில் குழந்தைகளுடன் தங்கி இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகளும் உண்டு.
ஆயிரக்கணக்கில் இருக்கும் மினா கூடாரங்கள்
சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.லட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு திரும்பியவுடன் சுத்தம் செய்யப்பட்ட மினா டெண்டுகள்.கூட்டம் கூட்டமாக மனிதத்தலைகள் குவிந்த இடம் பிறகு ஆள் அரவமின்றி வெறிச்சோடு உள்ளது
நடச்சத்திர டெண்ட்
இது நட்சத்திர டெண்ட்.வி ஐ பிக்களுக்குறியது.சீரியல் பல்புகளும்,அலங்காரத்தோரணங்களு ம்,சிகப்பு கார்பெட்டும் இருக்கைகளும் இன்னும் பற்பல வசதிகள் அமையபெற்ற டெண்ட் வாசலில் காவலாளி துணையுடன்.
அரபா
ஹஜ்ஜின் முக்கிய கிரியைகள் நிறைவேறும் இடம்.ஹஜ்ஜின் முக்கிய தினமான அரபா தினத்தன்று ஹஜ்ஜாளிகள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இறைவனிடன் தொழுது பிரார்த்தனை புரிவார்கள்.தூரத்தே காணும் மலை உச்சியில்தான் ஆதம்(அலை)ஹவ்வா (அலை) இருவரும் முதன் முதலில் பூமியில் சந்தித்துக்கொண்ட இடமாகும்.இதற்கு "ஜபலே ரஹ்மத்" என்று பெயர்.இந்த மலையின் அடிவாரத்துக்கு கீழுள்ள பெரும் திடலில் தான் தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஹாஜிகள் தங்க வைக்கப்படுவார்கள்.இறைவன் முன் இரு கையேந்திகண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் ஆறாக ஒட ஹாஜிகள் பிரார்த்தனை புரிவது மிகவும் நெகிழ்வுக்குறிய விஷயம்.பிரார்த்தனை அங்கீகரிக்க கூடிய இடமாகும்
முஸ்தலிஃபா
முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.நடு ரோட்டின் மேல் அமர்ந்து இரவு முழுதும் பிரார்த்தனையில் ஈடு படவேண்டும்
அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.
முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.
கற்கள்
முஸ்தலிபாவில் பொறுக்கபட்ட கற்கள்.
Tweet |
57 comments:
நல்ல படங்கள். பரவால்லையே, மறக்காமல் எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்திருக்கீங்க.
பதிவில், மினா குறித்த பகுதியில் நிறைய வாக்கியங்கள் ரிப்பீட் ஆகியிருக்கு, சரிபாருங்க.
ஓய்ந்து படுத்திருக்கும் ஹஜ்ஜாளிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது ஹஜ் கடமை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது. படங்களும் விளக்கங்களும் அருமை!எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாமல் (சுத்தம் செய்யும்போது கூட)பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்த உங்களது இறைபக்தியை எண்ணி மெய்சிலிர்த்தேன்.
அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்புடன்...
படங்களும் பகிர்வும் அருமை ஸாதிகா.
தெளிவான விளக்கத்துடன்
அருமையான புகைப்படங்களுடன்
அற்புதமான பதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஸாதிகா, காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை விளக்கயியலாது..தொடர்ந்து எழுதுங்கள். அல்லாஹ் அதற்கான நற்கூலியை தங்களுக்கு தந்தருள்வானாக! உம்ரா சென்ற பொழுது எல்லா இடங்களும் பார்த்திருந்தாலும் இந்தப் பகிர்வு அருமை.பாராட்டுக்கள் தோழி.
நல்ல விளக்கமான படங்களுக்கு நன்றி. எங்களுக்கெல்லாம் பார்க்க முடியாத குறை ஓரளவு தீர்ந்துச்சு.
தங்கக்கதவுகளுக்குள்ளே போனால் என்ன இருக்குமுன்னு சொல்லுங்க?
நீங்க சொல்லும் அளவைப் பார்த்தால் ப்ரமாண்டமா இருக்கே!
படங்கள் தெளிவாக பிரும்மாண்டமாக இருக்கு விவரங்கள் அதிவிட தெளிவா மறக்காம எல்லாமே சொல்லி இருக்கே. நல்ல ஞாபக சக்தி உனக்கு. அந்த பொடிக்கற்களை என்ன செய்வாங்க?திடீர் திடீர்னு இப்படி ஏதானும்ம் சந்தேகம் கேட்டுகிட்டேன் இருப்பேன் சரியா புரிஞ்சுக்கனும்னு ஒரு ஆர்வத்லதான் தப்பா நினக்காதே
தெளிவான விளக்கம்+அழகான புகைப்படம் அக்கா...வாழ்த்துக்கள்!!
கணினியில் தமிழ் ஃபாண்ட் இல்லாததால் சற்று குழப்பம்.இப்பொழுது சரி செய்து விட்டேன்.கருத்துக்கு நன்றி ஹுசைனம்மா.
உற்சாகமூட்டும் வரிகளுக்கு மிக்க நன்றி சகோ ஷமீமா அன்வர்.தொடர்ந்து கருத்திடுங்கள்.
தொடர் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி
அற்புதமான பதிவென்று வாழ்த்திய ரமணிசாருக்கு நன்றி.
எனக்குள்ளும் ஏற்பட்டு இருக்கும் உணர்வுகளை விளக்க இயலாது ஆசியா.மீண்டும் எப்பொழுது இந்த வாய்ப்பு வரும் என்று இப்பொழுதிருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.என் மகன்களிடம் உங்கள் சம்பாத்தியத்தின் முதல் செலவே ஹஜ்ஜுக்காக இருக்கட்டும் என்று கூறி இருக்கின்றேன்.அல்லாஹ் கபூல் ஆக்கித்தருவானாக ஆமீன்.
துளசிம்மா.ஒவ்வொரு முறையும் வந்து உற்சாகமாக பின்னூட்டி என்னை மகிழ்விக்கின்றீர்கள்.மிக்க நன்றிம்மா.கஃபாவின் உட்புறம் விலை உயர்ந்த மார்பிள்கற்களால் அலங்கரிக்கப்ப்ட்டு இருக்கும்.நடுவில் பலமிக்க மூன்று தூண்கள் இருக்கும்.பண்டையகால அலங்காரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.சாமானியர்கள் இதனுள் போய் பார்க்க இயலாது. http://www.youtube.com/watch?v=17XG-kxUskY இந்த யூடியூபை பாருங்கள்.உங்கள் ஆர்வம் எனக்கு உற்சாகத்தை தருகின்றது துளசிம்மா.
அந்த பொடிக்கற்களை என்ன செய்வாங்க?//அடேங்கப்பா..லக்ஷ்மிம்மாவின் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.முஸ்தலிஃபாவில் அந்த அரை இருட்டு சாலையில் மணலை கிளறி கிளறி எழுபது கற்களை சும்மாவா பொறுக்குவார்கள்:)அந்தக்கல்லை என்ன செய்வார்கள் என்று அடுத்த பதிவில் சூப்பர் படங்களுடன் சொல்றேன்மா.அது வரை பொறுத்திருங்க.ஜாலியா சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துண்டு இருங்கோ.ரொம்ப நன்றி லக்ஷ்மிம்மா.
கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.
அருமையான அனுபவப் பகிர்வு நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்.
Masha allah kabathulla pakkam koothamey illamal arukil poi irukeega... Intha vaaipugal haj time il kidaothathu aasiriyam thaan... Pakiru alagu akka..
allahu akbar!
allahu akbar!
maasha allah!
பதிவில் உங்கள் பக்தியும், தெளிவும் காண முடிகின்றது ஷாதிகா.. அடுத்த பதிவை காண காத்திருக்கிறேன்.
செய்திகளும் செம்மையான படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
படங்களும் பகிர்வும் அருமையாக இருக்கின்றது.
பலவிடயங்கள் அறிந்து கொண்டோம்.
அவ்வ்வ் என்ன ஸாதிகா அக்கா படம் படமாப் போட்டு அசத்துறீங்க... படங்கள் பார்க்க ஆசையாக இருக்கு. அங்கு எப்படி சாப்பிட்டீங்க? கடையிலோ அல்லது சமைக்கும் வசதியோ?
ஆண்களும் பெண்களும் வேறு வேறு இடத்தில் இருந்துதான் தொழ வேண்டும் என்றார்கள் அப்படித்தானோ?
நல்லா விளக்கமா சொல்லிட்டீங்கக்கா... ஆளரவமில்லாத மைதானத்தைப் பார்ப்பது ஆச்சரியமாத்தானிருக்கு.....
ஹஜ் முடிந்து எத்தனையாவது நாள் உங்களால் கஃபாவினருகில் இப்படி ஈஸியாகச் செல்ல முடிந்தது?
/எதிலுமே புறா எச்சங்களை நான் பார்த்ததில்லை/..ம்ம்.... அதிசயந்தான்..:))
சகோதரி ஸாதிகா...
அருமையான புனிதப் பயணப்பதிவு..
படங்கள் மிக மிக அழகாக துல்லியமாக இருக்கிறது.
பல விஷயங்களை அறியத்தருகிறீர்கள். இன்னும் அறிய ஆவலைத்தூண்டுகிறது உங்கள் எழுத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடருங்கள்....
படங்களும் பகிர்வும் அருமை. எங்களையும் பார்க்க வைத்ததுக்கு நன்றிங்க. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அற்புதமான பல்வேறு விஷயங்கள் அழகான படங்களுடன் அறிய முடிந்தது. தொடருங்கள். நன்றி.
பல புதிய விஷயங்களை அறியத்தந்ததற்கும் அழகிய புகைப்படங்களுக்கும் இனிய நன்றி ஸாதிகா!!
கருத்துக்கு மிக்க நன்றி ஆகாஷ்.
ஆமாம் பாயிஜா.நாங்கள் மக்காவை விட்டு கிளம்பும் நாளன்று எடுத்த படம் அது.கருத்துக்கு மிக்க நன்றி
அழகிய கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ சீனி
ஆர்வமூட்டும் வரிகளடங்கிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராதாராணி
கருத்துக்கு மிக்க நன்றி புலவரய்யா/
கருத்துக்கு மிக்க நன்றி மாதேவி
அங்கு எப்படி சாப்பிட்டீங்க? கடையிலோ அல்லது சமைக்கும் வசதியோ?//தனியார் ஹஜ் சர்வீஸ் மூலம் சென்றதால் சாப்பாடு,தங்குமிடம்,ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்லுதல்,ஊரை சுற்றிப்பார்த்தால் போன்றவை அவர்களே ஏற்பாடு செய்து தந்து விடுவார்கள் அதிரா.
ஆமாம் ஆண்களும் பெண்களும் வேறு வேறு இடத்தில் இருந்துதான் தொழுவார்கள்.கஃபாவை வலம் வரும் பொழுது மட்டும் அனைவரும் ஒன்றாக சுற்ற வேண்டும்.ஆர்வத்திற்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி அதீஸ்
வாங்க பானு.ஹஜ் முடிந்து சுமார் 10வது நாள் இருக்கும்.அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் கூட என்னால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை தொட முயற்சிக்கக்கூட முடியவில்லை.எப்பொழுது அதனை சுற்றி மனிதர்கள்.அக்கல்லை தொடமல் போனது இன்னும் வருத்தமாகவே உள்ளது.கூட்டம் காரணமாக ஹரத்தின் மொட்டை மாடியில் கூட வலம் வந்ததுமுண்டு.கருத்துக்கு மிக்க நன்றி பானு.
வாங்க இளமதி.முதல் வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
கருத்துக்கு மிக்க நன்றி ஆதிவெங்கட்.விரைவில் அடுத்த பதிவு போடுகிறேன்.
கருத்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்
கருத்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்
கருத்துக்கு மிக்க நன்றி மனோ அக்கா.
எனக்கு எல்லா தகவல்களும் புதுமையாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது ஸாதிகா!
படங்களுடன் கூட தகவல்கள் மிக நன்றாக இருக்கின்றன.
புகைப்படங்களுடன் விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த வருடம் ஹுசைனம்மா சென்று வந்து எழுதினார்கள். இப்போது நீங்கள். சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன்.
எப்படி இவ்வளவு போட்டோக்களும் எடுத்து வந்தீங்க,
மிக அருமையாக இருக்கு,
4 வருடம் முன் நேரில் பார்த்தது, இப்ப பார்க்கும் போது மீண்டும் சீக்கிரமே போகனும் என்று தோணுது ஸாதிகா அக்கா
சகோதரி........காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை விளக்கயியலாது..தொடர்ந்து எழுதுங்கள். அல்லாஹ் அதற்கான நற்கூலியை தங்களுக்கு தந்தருள்வானாக! உம்ரா சென்ற பொழுது எல்லா இடங்களும் பார்த்திருந்தாலும் இந்தப் பகிர்வு அருமை.பாராட்டுக்கள் சகோதரி.........
ஸாதிகா, கஃபாவினருகில் போய் படம் எடுத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
நல்ல விரிவான உங்கள் புனித யாத்திரையை விவரிக்கும் போது நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது.
இறைஅருள் எங்களுக்கும் கிடைக்கிறது.
நீங்கள் எடுத்த் படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
//எனக்கு எல்லா தகவல்களும் புதுமையாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது ஸாதிகா!// எனக்கும் அங்கு என்றுவிட்டு அங்கு கண்ட ஒவ்வொரு நிகழ்வும் வியப்பூட்டுவதாகவும் பரவசப்படுத்துவதுமாக இன்றுவரை மறக்க முடியாதத்தாக மீண்டும் அங்கு எப்பொழுது போவோனம் என்ற உணர்வும் கலந்து இருக்கிறேன் ரஞ்சனிம்மா.கருத்துக்கு மிக்க நன்றிம்மா.
//சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன்// வரிகளில் மகிழ்ச்சி .தொடர் வருகைக்கும் மிக்க நன்றி சகோ ஸ்ரீராம்.
இன்னும் அதிகமாக எடுத்து இருக்கலாமே என்று இப்பொழுது விசனப்படுகின்றேன் ஜலி.கருத்துக்கு நன்றி
//காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை விளக்கயியலாது.//வரிகள் மகிழ்வைத்தந்தன.அல்லாஹ் விரைவில் உங்களுக்கு ஹஜ் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.கருத்துக்கு மிக்க நன்றி.
கோமதிம்மா மூன்று பகிர்வுகளையும் முழு மூச்சுடன் படித்து விட்டு உடனே பின்னூட்டமும் இட்டது குறித்து மிக்க மகிழ்சிம்மா.தொடர்ந்து வாருஙகள்.
ஸாதிகா மிக மன நெகிழ்வாக இருந்தது. நான் புண்ணியம் செய்தவளாக உணர்ந்தேன். நாளை அல்லது நேரமிருக்கும் போது மற்றைய பதிவுகளும் வாசிப்பேன். மிக்க நன்றி. தமிழ்மணத்தில்கண்டு வந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
ஸாதிகாக்கா,
அஸ் ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ். இந்தப் பதிவை முதல் தடவை பார்த்ததிலிருந்து இனம் புரியாத ஒரு மின்சாரம் போலவே மனதிலும் உடலிலும் ஜில்லென ஓடுகிறது ஒரு இன்ப அதிர்ச்சி. அப்பொழுது முதல் இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் இட எண்ணுகிறேன்...முடியாமலே போகிறது.. ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்குக்கா.... படங்களை பார்க்கும்போதே அனுபவித்தது போலொரு சந்தோஷமும், எப்பொழுது இதை அனுபவிப்போம் என்னும் பேராசையும் அலைக்கழிக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு மிக மிக அருமையானதை, நன்மையானதை நாடினான். மாஷா அல்லாஹ்.... மிக மிக சந்தோஷம் அக்கா... அடுத்த பாகத்தையும் படிக்க ஆவல்.... எங்களுக்கும் அங்கே போகும் து’ஆ சீக்கிரமே கபூலாக து’ஆ செய்ங்கக்கா...
வஸ் ஸலாம்க்கா...
:)
அலைக்கும்சலாம் அனிஷா.//முதல் தடவை பார்த்ததிலிருந்து இனம் புரியாத ஒரு மின்சாரம் போலவே மனதிலும் உடலிலும் ஜில்லென ஓடுகிறது ஒரு இன்ப அதிர்ச்சி. // உங்கள் வரிகளைப்படித்ததும் எனக்கும் மகிழ்ச்சி.ஹஜ்ஜுக்கு போகிறோம் என்று பதிவு போட்டதும் கடமையை நிரைவேற்றப்போகும் பொழுது விளம்ப்ரம் எதற்கு என்பது ஒரு சாரரின் கருத்து.ஆனால் இதை எல்ல்லாம் பார்க்கும் பொழுது ,எனக்கு வரும் பின்னூட்டுங்களை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அனிஷா.
//அல்லாஹ் உங்களுக்கு மிக மிக அருமையானதை, நன்மையானதை நாடினான். // வல்ல நாயன் உங்களுக்கும் வெகு விரைவில் நன்மையானதை நாடுவானாக ஆமீன்.வரவுக்கு நன்றி அனிஷா.
Very nice explanation sister.may Allah forgive our all sins.
மிக்க நன்றி சகோ அர அல.
//ஹஜ்ஜுக்கு போகிறோம் என்று பதிவு போட்டதும் கடமையை நிரைவேற்றப்போகும் பொழுது விளம்ப்ரம் எதற்கு என்பது ஒரு சாரரின் கருத்து.ஆனால் இதை எல்ல்லாம் பார்க்கும் பொழுது ,எனக்கு வரும் பின்னூட்டுங்களை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அனிஷா.
//masahaallah migavum nalla pagirvu latha engalukellam antha pakkiyam eppoluthu kidaikumooo allah arivan aanal poyi vantha ningal ellam sollum poluthee appadi oru santhosam manathirkul thodarthu innum niraya eluthungal ungal anubavangal engalukku oru padamaga irukattumee nangalum niraya therinchupoom jazakallah khir..
Post a Comment