பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்னை வந்த புதிதில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வர ஆட்டோ பிடித்து பயணித்தோம்.வீட்டு வாசலில் வந்திறங்கியதும் ஆட்டோக்காரர் தெருவை பார்த்துவிட்டு இப்பதிவுக்கு கொடுத்த தலைப்பை சொல்லி “எப்படி பாய்ம்மா”என்று ஆச்சரியப்பட்டார்.நான் அப்பொழுதே “தயிரும் எங்களுக்கு புளிக்க வில்லை.பிரியாணியின் மணமும் அவர்களுக்கு வெறுக்கவில்லை “என்று கூறினேன்.
மாற்றுமதத்தவர்கள்,குறிப்பாக பிராமணசமூகத்தினர் வாழும் பகுதி இது.”இந்த ஏரியாவுக்குள் எப்படி நீங்கள்??”என்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.ஏனெனில் இஸ்லாமிய குடும்பம் என்று எங்கள் காலனியில் ஓரிரு குடும்பங்களைத்தவிர வேறு யாரும் இல்லை.அதிலும் எங்கள் தெருவில் இதுவரை இஸ்லாமியக்குடும்பம் ஒன்றுகூட இல்லை.
வந்த புதிதிதில் பலரும் பலவாறு கிலியூட்டினார்கள்.ஆனால் அதெல்லாம் பொய்த்துப்போய் இன்று வரை அனைவருமே மிகவும் ஒற்றுமையுடன்,சகோதரத்துவத்துடன் இருப்பதை நினைத்தால் பிரமிப்பாகவும்,சந்தோஷமாகவும் உள்ளது.
“தீபாவளி ,பொங்கல் என்றால் அவர்கள் தரும் பலகாரம்,பொங்கல் வடை இத்யாதிகளை பறிமாறிக்கொள்வதும்,பெருநாளின் போது நாங்கள் சமைத்துக்கொடுக்கும் பிரியாணியின் பறிமாற்றமும் மகிழ்வுக்குறியன.சிலர் செவ்வாய்,வெள்ளியன்று அசைவம் சாப்பிட மாட்டார்கள்.ஒரு சவுராஸ்ட்ர தோழி திங்கள் அன்று அசைவம் சாப்பிடமாட்டார்.பொதுவில் ஞாயிறு அன்று அசைவம் சாப்பிடும் அனைவரும் சாப்பிடுவார்கள் என்று இவர்களுக்காகவே பெருநாள் எந்த நாளில் வந்தாலும் சிரமம் பாராது ஞாயிறு அன்று பிரியாணி சமைத்து தருவதும்,அசைவமே சாப்பிடாத நட்புக்களுக்கு ஸ்பெஷலாக வெஜிடபிள் பிரியாணி செய்து தருவதும் உண்மையில் மகிழ்சிக்குறியது.
இவ்வளவு ஏன்?நோன்பு காலத்தில் இன்றைய சஹருக்கு ஓய்வெடுங்கள்.நாங்கள் சாப்பாடு தருகிறோம் என்று ஹாட் பாக்ஸில் சூடாக பரோட்டாவும் சிக்கனும் தயாரித்து எடுத்துக்கொண்டு சஹர் நேரம்(அதிகாலை மூன்று மணி)காலிங் பெல் அடிக்கும் நட்புக்களும் உண்டு.அதிலும் “நீங்கள் வாங்கும் அதே சிக்கன் கடையில் வாங்கிய ஹலால் சிக்கன்”என்று கூறி தருவார்கள்.
வீட்டில் தயாரிக்கும் நோன்புக்கஞ்சியை டேஸ்ட் பண்ணியவர்கள் அதேபோல் அவர்களும் செய்து வடை பஜ்ஜி வகையறாக்களுடன் இஃப்தார் நேரத்தில் எடுத்து வந்து தந்த நிகழ்வும் உண்டு.
ரமலான் ஆரம்பிக்க போகிறது என்று அறிந்ததுமே,ரூஃப் ஆப்ஷா சர்பத்பாட்டிகள்,பழங்கள் என்று வாங்கி வந்து வாழ்த்து சொல்லி மகிழ்விப்பவர்களும் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட என் மாமியாரின் மரணச்சடங்குகளையும்,எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இறுதி ஊர்வலத்தினையும் பார்த்து விட்டு என்ன ஒரு அமைதியான முறையில் நடந்தேறியது என்று வருடங்கள் பல சென்றாலும் இன்றும் சொல்லிக்காட்டி சிலாகிப்பார்கள்.
வெள்ளிக்கிழமை உச்சிவேளையில்,தினம் மஃரிப் இஷாவுக்கு(மாலை இரவுத்தொழுகைக்கு) இடைபட்ட நேரம் நான் குர் ஆன் ஓதிக்கொண்டிருப்பேன் என்று அதன் நிமித்தமாக என்ன அவசர வேலை என்றாலும் போன் செய்வதையோ,வீட்டிற்கு வருவதையோ தவிர்த்து விடுவார்கள்.
அவசரவேலை நிமித்தமாக என் பையன்களை மட்டும் இங்கு விட்டு விட்டு ஊருக்கு செல்லும் சூழ்நிலை.திடுமென்று பெரியவனுக்கு சின்னம்மை.அம்மை என்றால் தொற்று நோய் என்று காததூரம் ஓடும் சமூகத்தில் கைபக்குவமாக மருந்து அரைத்து புண்களில் தடவி,இளநீர் ஜூஸ் என்று வாங்கிக்கொடுத்து ,பக்குவமாக சமைத்துக்கொடுத்து “வேலையை முடித்து விட்டு வாருங்கள்.நான் இருக்கின்றேன்”என்று தைரியம் சொல்லி என் அலுவல்களை முடித்து விட்டே திரும்பவரசெய்த அந்த மனிதநேயத்தினை என்னால் இன்றுவரை மறக்க இயலாது.
இவர்களது வீடுகளில் நடக்கும் சிறிய விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது பூ,பழம்,சட்டைத்துணியுடன் மஞ்சள்,குங்குமம் தருவார்கள்.எங்களுக்கென்றே தனியாக இது இல்லாத தாம்பூலப்பை இருக்கும்.
எங்கள் வீட்டுக்கருகே கிருத்துவதேவாலயம் ஒன்று உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றல் ஆகும் பாதிரி மார்களின் ஒவ்வொரு குடும்பமும் இதுவரை எங்களுடன் மிக நட்புடனே பழகுவார்கள். தினமும் அதிகாலை ஜபத்தில்(மார்னிங் பிரேயர்) பாடல்களும்,இசை உபகரணங்களும் ஒலிக்கும்.சுப்ஹ் தொழுகை(அதிகாலை தொழுகை)யின் பொழுது எங்கள் வீட்டில் விளக்குகள் எரிந்ததுமே சப்தம் குறைந்துவிடும்.அரைமணிநேரம் இது தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நாங்கள் வாங்கிய வீடும் ஒரு ஆச்சாரமான பிராமின் குடும்பத்தில் இருந்துதான்.ஒரு முஸ்லிமுக்கு போய் வீட்டை விற்கின்றீர்களே என்று அவர்கள் குடும்பத்தினர் காட்டிய எதிர்ப்பையும் மீறி அந்த வயதான மனிதர் எங்களுக்கே விற்றதுமில்லாமல்,அவர்களது குடும்பமும் இதே வீட்டில் ஒரு போர்ஷனில் வசிப்பதற்கு அனுமதி கொடுத்ததை எண்ணி அவர் மட்டுமல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த அவர்களது குடும்பத்தினரும் நெகிழ்ந்த தருணங்களை எண்ணும் பொழுது எங்களுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
நாங்கள் வசிக்கும் வீட்டினை இடித்து கட்ட நினைக்கும் பொழுது அசைவம் சாப்பிடும் எங்களுக்கு இலகுவில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று பயந்த பொழுது “உங்களைப்போன்ற ஆட்களுக்கு வாடகைக்கு விட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் “என்று கூறி எங்களுக்கு வீடு வாடகைக்கு தந்தவரும் ஒரு சைவ உணவு உண்ணும் குடும்பத்தினரே.இந்த நேரத்தில் வீடு வாடகைக்கு என்று வரும் விளம்பரத்தில் ”ஒன்லி பிராமின்”என்று வரும் விளம்பரங்கள் நினைவில் வந்து செல்லும்.
நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் பிறந்த தினம் அன்று அரசாங்க விடுமுறைதினம்.அன்று காலையில் எழுந்து வெளியில் வந்தபொழுது மஞ்சள் நிற ரோஜாப்பூக்கள் குழுங்கும் ஒரு பூந்தொட்டி.எதிர்வீட்டுத்தோழியின் அன்பளிப்பு அது என்று ஆராய்ந்த பின்னர் தான் அறிய முடிந்தது.நபிகளாருக்கு பிடித்த மஞ்சள் வர்ணம் என்று குறிப்பு வேறு.திரு நபியின் திருப்புகழ் மேலும் பரவட்டும்.அல்லாஹ்வின் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாகட்டுமாக என்று அந்த நட்பின் வாழ்த்து கிடைக்கும் பொழுது நெகிழ்ந்து போனேன்.
டிபிக்கல் முஸ்லிம் கிராமத்தில் பிறந்து வளர்ந்து அக்கம் பக்கம் முழுதும் மாமி,மாமா,சாச்சி,பெரியம்மா,பாட்டி,தாத்தா,சின்ன பாட்டி பெரியதாத்தா என்று சுற்றி சுற்றி உறவினர்களுடன் வாழ்ந்து விட்டு இங்கு முற்றிலும் புதியவர்கள் சூழ வாழும் பொழுது அவர்கள் காட்டிய அன்பும் ,மரியாதையும் உறவினர்களை பிரிந்து வாழும் சுவட்டினை நிறையவே போக்குகிறது என்பது உண்மை.
இப்படி பட்ட சுற்றமும் நட்பும் கிடைப்பது பேறின்றி வேறென்ன?
Tweet |
49 comments:
ஹை நான் தான் முதலா??
வடை எனக்கு தான்/
http://samaiyalattakaasam.blogspot.com/2012/10/i-love-you-mama-qiyam.html
உங்கள் செலல் குழந்தைகளுக்ககாக இங்கும் வந்து பாருஙக்ள்
பாசிடிவான அருமையான கட்டுரை. நெகிழ்ச்சியா இருக்கு
தயிரும் பிரியாணி படிக்கவே பதிவு மிக நெகிழ்சியாக இருக்கு,
இதை படிக்கும் போது எங்க சின்ன வயது ஞாபகங்கள் வருது
வெளியூரில் இருக்கும் போது ஒரே காம்பண்டு உள்ளே.முஸ்லிம், நாடார்,பிராமின், கிருஸ்வர் என எல்லாம் ஒன்றாக இருந்தோம்.
பிராமின் வீட்டில் உள்ள குழந்தைக்கு அம்மை போட்டு இருந்த போது எங்க அம்மா கூட இருந்து கவனித்து கொண்டதை கண்டு அவர்கள் மிகவும் நெகிழ்ந்து விட்டனர்.
அதே போல் தீபாவளி பொங்கலுக்கு அவர்கள் வீட்டில் இருந்து பலகாரம் வருவது, பெருநாளுக்கு நாங்க கொடுப்பதும்., அசைவம் சாப்பிடாதவர்களுக்கு வெஜ் பிரியாணி சமைத்துகொடுப்பது.
எல்லாமே இந்த பதிவ பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் அழகாக அசை போட்டு விட்டது
தலைப்பு வித்தியாசமாக இருப்பதோடு, கட்டுரையை ஒரு வரியில் விளக்கிவிடுகிறது.
//வாடகைக்கு தந்தவரும் ஒரு அசைவ உணவு உண்ணும் குடும்பத்தினரே//
இது “சைவ” உணவு.... என்று வந்திருக்க வேண்டுமோ?
மத நல்லிணக்கம் என்பதற்கு மிக சரியான உதாரணம் இந்த சம்பவங்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.
மிக அருமையான பகிர்வு,நாம் நல்ல விதமாக பழகுவதிலும், உணர்வுகளை மதிப்பதிலும் தான் அக்கம் பக்கம் நட்பு வட்டம் அருமையாக அமையும் என்பதற்கு இந்த கட்டுரையே சான்று.நாம் நம் வழியில் அமைதியாக இருந்தால் அவர்களும் அம்மாதிரியே..:)...
உண்மையில் படிப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி.. இந்தப் பதிவிற்கு நல்லதொரு தலைப்பை வைத்தீர்கள்.பிரியாணி தயிரின் சுவை தலைப்பிலும்.
அருமையாக இருக்கு.. தலைப்பு நல்லாயிருக்கு.. பழைய நினைவுகளை எட்டிபார்க்க வைக்கிறது.. மாயவரம் வீட்டு காலனியினை ஞாபக படுத்துகிறது.. நிறைய சொல்லனும் என்று நினைத்தேன்.. என் மகள் டைப் பண்ணவிடலை..
அன்பு ஸாதிகா, மனங்கள் ஒன்றுப்பட்ட பின் மதம் என்ன செய்யும்.
அன்பு எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தானே முதலில் எது ஒன்றுக்கும் முதலில் ஓடி வருபவர்கள். அப்புறம் தானே உறவினர்கள் வருவார்கள்.
நாம் எல்லோருடனும் பழகும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது.
அருமையான பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அல்ஹம்துலில்லாஹ். உங்களுக்கு சென்னை கொடுத்தது அருமையான சொந்தங்களும், நட்புகளும். எனக்கும் இதை போன்று பிராமின் நண்பர் இருக்கிறார், இன்ஷா அல்லாஹ் அதை பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன். எல்லா பிரிவுகளில் உள்ள மக்களும் கெட்டவர்கள் இல்லை என்பதை உங்கள் பதிவு ஆணித்தரமாக விளக்குகிறது. இது அனைவருக்கும் பொருந்தும், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்பவர்களுக்கும் ..
அருமை சகோ
நல்ல பகிர்வு
வாசிக்கவே மகிழ்ச்சியாக இருக்கு சகோ
ஆஹா...அருமையான இடுகை! வேற்றுமையில் ஒற்றுமை என்பது இதுதான். இதேபோல் முழு தமிழகமும் முழு இந்தியாவும் முழு உலகமும் இருந்து விட்டால் பிரச்னை ஏது?
maasha allah!
nalla pakirvu!
intraikku mukkiyanaathum kooda....
நீங்கள் வாழ்ந்த வாழ்கையை, நான் மட்டும் அல்ல எனது குடும்பம் 60 வருடங்கள் மேலாக அனுபவக்கின்றனர். பொங்கல் தீபாவளி என்றால் இந்து சகோதர்கள் விட்டில் பலகாரத்தை விட அதிகமாக எங்கள் வீட்டில் தான் இருக்கும். அந்த நாள் பலகாரங்களை எங்கள் சொந்தபந்தங்களுக்கு பங்கிட்டு என் தாயர் கொடுப்பர்கள்...
ஆஹா !!! அருமையாக எழுதியிருக்கீங்க ஸாதிகா.
அன்பு ஒன்றே பிரதானம் வேறொன்றுமில்லை ..
இந்த மாதிரி அழகிய அனுபவங்கள் எங்களுக்கும் நிறைய இருக்கு
இங்கும் தொடர்கிறது ..
Assalamualikum Warahmathullahi Wabarkathahu dear sister maasallah very good article.sharing all the thing for this world alhamdulillah its fine. but in between explain
the ones of God ALLAH and The prophet Mohamed sallalahu alahi wasallam and the Holy quran, give the quran it will take them to Jannath Inshallah.
அழகியதோர் கட்டுரை.
புண்பட்ட
மனதிற்கு
மருந்தாக
இருக்கிறது
இந்த கட்டுரை
அல்ஹம்துலில்லாஹ்
புண்பட்ட
மனதிற்கு
மருந்தாக
இருக்கிறது
இந்த கட்டுரை
அல்ஹம்துலில்லாஹ்
புண்பட்ட
மனதிற்கு
மருந்தாக
இருக்கிறது
இந்த கட்டுரை
அல்ஹம்துலில்லாஹ்
தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் குழம்பிட்டேன்.....படித்த பிறகு தான் தெரிந்தது..படிக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது அக்கா..அனுபவங்கள் தொடரட்டும்!!
இது போன்ற பக்கத்துவிட்டுகாரங்க நண்பர்கள் அமைந்துவிட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்....ரொம்ப கொடுத்து வச்சவங்க நீங்க...
நல்ல பகிர்வு... தலைப்பைப் போலே...
மிக அருமையான பதிவு சகோதரி ! என்னுடைய சிறுவயதுக்கு என்னை அழைத்து சென்றுவிட்டீர்கள் .. நான் வளர்ந்த பகுதியில் பல முஸ்லிம்கள் வாழ்ந்தனர், அதனால் பெருநாள், பக்ரித் போன்ற நாட்களில் எல்லாம் கொண்டாட்டமாகவே இருப்போம் .. தீபாவளி, பொங்கல், என்பவற்றை இஸ்லாமிய தோழர்களோடு சேர்ந்தே கொண்டாடுவோம், பட்டாசு வெடிப்போம், பலகாரம் பரிமாறுவோம், அதே போல ரமழான் வந்துவிட்டாலே விமர்சையாக இருக்கும், நோன்பு துறந்த பின் எம் தோழர்கள் கஞ்சிக் கொண்டு வருவார்கள், மாலை வேளைகளில் நோன்பு துறந்த பின் நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றுவோம், ஒருவித மகிழ்ச்சியான நாட்கள் அது..
அப்பகுதியில் பல்வேறு பின்னணியில் இருக்கும் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அதனால் ரமழான் உணவுகள் ஒவ்வொன்றும் ஒரு சுவை வகையாக இருக்கும். திருநெல்வேலி முஸ்லிம் ஆட்கள் தொதல், இட்லி, சிக்கன் கறி எல்லாம் தருவார்கள். உருது பேசும் முஸ்லிம்கள் சப்பாத்தி, ராய்தா, சிக்கன் கறியும், மலையாள முஸ்லிம்கள் ஒருவகையான உணவும், தமிழ் முஸ்லிம்கள் ஒரு வகையான உணவும்..
நோன்புக் காலத்தில் எனது அப்பா அவர்களுக்கு கொடுக்கவே பழங்கள் நிறைய வாங்கிக் கொண்டு வருவார், அவற்றை பரிமாறிக் கொள்வோம் ..
பிரியாணி போடும் போதெல்லாம் நானும் சென்று உதவி செய்வது, கடைக்கு போவது எல்லாம் செய்துக் கொடுப்பேன் ..
நல்லிணக்கதோடு வாழும் போது பரஸ்பர பரிமாறல்களும் பன்முகத்தன்மையுமே ஒரு சமூகத்தின் அழகு என்பது எனது எண்ணம் ...
அந்த நாட்களை மறக்க முடியாது.
எங்க வீட்டு கதையை அப்படியே நீங்கள் சொன்னது மாதிரி இருக்கிறது மெளத் ஆன என் தாயாரை உங்களிடம் பார்க்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள் கூறிய பலவற்றை என்னால் இங்கே கம்பேர் செய்து பார்க்க முடிகின்றது. அழகான பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹ்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அருமையான பகிர்வு
ஸாதிக்கா அக்கா...
அருமையா சொல்லி இருக்கீங்க... நெகிழ்ச்சியான பதிவு...
ஸலாம் சகோ.சாதிகா,
6/12/92... க்கு அப்புறம் நம் நாட்டிலும் 9/11/2001... க்கு அப்புறம் உலகிலும் இதுபோன்ற மகிழ்ச்சிகள் மறைந்து வரும் சோகம் அடர்ந்த சூழலில், படிக்க படிக்க பதிவு முழுதும் பேரானந்தம்தான்..! எங்க வூரு பக்கம், "பிரியாணி சட்டிக்குள், தயிர் பானை" சந்தோஷமா இருக்குதுங்கோ..! யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இதுதான் என் இந்தியா....!
தலைப்பு...... வித்தியாசமான சிந்தனை!
மத நல்லிணக்கத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு.
எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் நலம்.
இரு உதாரணங்கள்
காலணி
மஞ்சல்
ஸாதிகா நேத்து நா போட்ட கமெண்ட் எங்க காக்கா தூக்கிபோச்சா
ஸாதிகா அக்கா தலைப்பும் அருமை அதைவிட அதற்கு தோதுவான படமும் சூப்பர்
பதிவின் நோக்கத்தை ஒரு வரியில் விளக்கிடும் தலைப்புடன், பதிவு மிக மிக அருமை!,
ஸாதிகா ரொம்ப நல்ல பதிவு.ஒருவரை நாம சந்திக்கும் போது அவங்களையும் நம்ம போல ஒரு மனிதராகத்தான் பார்க்கிரோம். என்ன ஜாதிக்காரஙக்ன்னு பாக்கரதில்லே நம்ம தமிழ் நாட்டு பக்கம் வேனும்னாலும் அப்படி இருக்கலாம். வடக்கெல்லாம் யாரு எந்த ஜாதின்னுல்லாம் கண்டுக்கரதே இல்லே.ஒருவர் எதானும் தப்பு செய்ஞ்சா ஒட்டுமொத்த ஜாதிக்காரங்களையும் எப்படி குறை சொல்ல முடியும் எல்லா பிரிவிலும் எல்லாவித மனிதர்களும் கலந்து தான் இருக்காங்க. நமக்கு சேர்ந்து பழக வாய்ப்பு கிடச்சது நாம புரிஞ்சுண்டோம் பலருக்கும் அந்த நல்ல வாய்ப்பு கிடைக்கலே. நாம்ம பார்வையில் நன்கு ஒத்துமையுடன் இருப்பவர்களையே அதிகம் பார்க்கமுடிகிரது.அதே அனுபவம் பலருக்கும் கிடைச்சா ஜாதியாவது ஒன்னாவது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான்
பல சாதனைக்குள் வாடகை வீடு பிடித்து நல்ல பெயர் காலமெல்லாம் வாங்கியதும் ஒரு சாதனைதான். ஒருவர் செய்த தவறு மற்றவரையும் பாதிக்கலாம். ஒருவர் வாங்கிய நற் பெயர் மற்றவருக்கும் அணுகூலம் கிடைக்க வழி வகுக்கும்
வித்தியாசமான இடுகை .
மனித நேயம் பொங்கம் இடுகை .நல்வாழ்த்து.
நல்வரவு என்வலைக்கு வர.
வேதா. இலங்காதிலகம்.
மிகவும் அருமையான மனித நேயக் கட்டுரை தான்.
எனக்கும் நிறைய முஸ்லீம் நண்பர்கள் என் அலுவலகத்தில் உண்டு. அதில் ஷாகுல் ஹமீத், ப்யாரே ஜான், குத்புதீன், ரஹ்மான் என்பவர்கள் என்னிடம் மிகவும் அன்புடன் மரியாதையுடனும் பழகியவர்கள்.
1955 முதல் 1980 வரை நாங்கள் வாழ்ந்த வீடும், சுமார் 50க்கும் மேற்பட்ட பிராமண வகுப்பினர் கூட்டாக வாழ்ந்த ஸ்டோருமே, அண்ணன் தம்பியாக இரண்டு சாயபுகளுக்கே சொந்தமானது.
இருப்பினும் அதன் பெயர் “பெரிய நாராயண ஐயர் ஸ்டோர்” எனவே திருச்சியில், கடைசிவரை அழைக்கப்பட்டு வந்தது. அந்தக் குடியிருப்பைப்பற்றி என்னுடைய “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற கதையின் முதல் பகுதியில், மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.
அந்த ஸ்டோரில் வாடகை வசூல் செய்ய மட்டும் எப்போதாவது ஒரு நாள் அந்த சாயபு சகோத்ரர்களில் ஒருவர் அதுவும் ஒரே ஒரு வீட்டில் மட்டும் சற்று நேரம் வந்து அமர்வார்.
கடைசிவரை அந்தக்குடியிருப்பில் ஐயர்மார்களைத் தவிர வேறு யாரையும் அவர் குடியமர்த்தவில்லை.
அதையும் பாராட்டவே வேண்டும். அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ வழிகளில் தொல்லைகள் தந்திருக்கலாம்.
இதுபோல பல நிகழ்வுகள் உண்டு.
நான் ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை முகமதிய தர்க்காவுக்கு தொடர்ச்சியாக 7 நாட்கள் அழைத்துச்சென்று, தினமும் ஒரு மணி நேரம் ஒரு முஸ்லீம் சகோதரர் வேதம் [குரான்] வாசித்து, மந்திரித்து வந்ததும் உண்டு.
இதுபோல எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. இவற்றைப்பற்றியெல்லாம் ஓர் தனிப்பதிவே இட நினைத்திருந்தேன்.
[தங்கள் மெயில் இன்று கிடைத்து இங்கு இப்போது நான் வந்துள்ளேன்.]
நான் நினைத்தது போலவே தாங்களும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மதங்களில் இல்லை... மனங்களில் தான் மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்திய உதாரணப் படைப்பு ஸாதிகா. தொடரட்டும் இந்தப் பேறு உங்களுக்கு. என் நல்வாழ்த்துக்கள்.
நெகிழ்ச்சியான பகிர்வு.
அன்பின் ஸாதிகா,
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது பாருங்கோப்பா..
பதிவுகளை மட்டுமே பார்த்து என்னிடம் அன்புக்கொண்ட மிக அற்புதமான பெண் ஸாதிகா. பதிவுகளில் சிரிக்கவும் வைக்கமுடியும் என்று சீனிமுட்டாய் ஸ்ரீனிவாசனின் கதையில் சொல்லி இருக்காங்க பாருங்களேன்.
இனிப்புப்பிரியர் ஸ்ரீனிவாசன்
சிங்காரச்சென்னையில் சிங்காரிகள்
பிரிவு
அன்புடன்
மஞ்சுபாஷிணி
எல்லா மதமும் மனிதனை ஒத்துமையா இருக்கத்தான் வலியுறுத்துது. எனக்கும் இதுப்போல் ஒரு அனுபவம்...., அது ரம்ஜான் பண்டிகை நேரம்..., அப்போது எங்கள் குடியிருப்பில் 8வயது பிராமின் பையனுக்கு ஆப்பரேஷன். அதனால் அவர்கள் சுத்த ஆசாரத்துடன் நோன்பு இருந்தாங்க. அந்த ஆச்சாரம் கெடக்குடாதுன்னு நாங்கலாம் அசைவம் சமைக்காம் இருந்தோம். எங்களுடன் குடியிருந்த முஸ்லீம் குடும்பமும், ரம்ஜான் பண்டிகையை அசைவமில்லாமதான் கொண்டாடினாங்க. ஒரு வாரம் கழிச்சு அந்த தெருவுக்கே பிரியானி சமைத்து விருந்திட்டது தனிக்கதை.
'ஸலாம் சகோ.சாதிகா,
6/12/92... க்கு அப்புறம் நம் நாட்டிலும் 9/11/2001... க்கு அப்புறம் உலகிலும் இதுபோன்ற மகிழ்ச்சிகள் மறைந்து வரும் சோகம் அடர்ந்த சூழலில், படிக்க படிக்க பதிவு முழுதும் பேரானந்தம்தான்..! எங்க வூரு பக்கம், "பிரியாணி சட்டிக்குள், தயிர் பானை" சந்தோஷமா இருக்குதுங்கோ..! யாதும் ஊரே யாவரும் கேளிர்.'
சகோ.முஹம்மது ஆஷிக்கின் இந்த கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.
நன்றி.
அருமையான பகிர்வு,
மீண்டும்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
இது என் முதல் வருகை, அம்மா ரஞ்சனி அவர்களின் அறிமுகத்தில் இன்று உங்கள் தளத்தில்... அற்புதமான மனிதநேய மனம் கொண்ட மனிதர்கள் நம் கண் முன் ஏராளம். படித்து மகிழ்ந்தேன்... இந்த பதிவை... நல்ல அழகிய சுழல் கொண்ட மனிதர்கள் கிடைப்பது அரிது... உங்களுக்கு அப்படி பட்ட சுழலை கொடுத்த இறைவனுக்கு நன்றி... தொடர்வோம்
அன்புள்ள திருமதி சாதிகா,
உங்களின் இந்தப் பதிவினை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html
வருகை தருக, ப்ளீஸ்
அன்பின் ஸாதிகா - இதெல்லாம் சகஜமாக நடக்கிறதென்பது நம்பத் தகுந்த வகையில் இயல்பாக நடக்கிறது. மடஹ் நல்லிணக்கம் - நட்புகள் - மதம் தாண்டி நட்புகள் மலர்கின்றன - காலம் மாறுகிறது - நல்வாழ்த்துகள் சாதிகா - நட்புடன் சீனா
எல்லா மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்ற்ன !
Post a Comment