பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
(Leaning Tower of Pisa)
இத்தாலி நாட்டில் பைசா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரம்.இத்தாலியின் பைசா நகரப் பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், 1173 ஆண்டு கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
சுதந்திரதேவி சிலை
(The Statue of Liberty)
அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய உலக வரலாற்றின் ஒப்பற்ற அன்பளிப்பு சின்னமாக திகழும் எழில் கொஞ்சும் நியூயார்க் நகரின் லிபர்டி தீவில் அமையப்பெற்ற சுதந்திர தேவி சிலை.
கொலோசியம்
(Colosseum)
இத்தாலி நாட்டில் ரோம் நகரில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கம் இது. கி.பி. 80 - ல் கட்டப்பட்டது. கி.பி. 847 - ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வட்ட வடிவம் உடைய கொலோசியத்தின் பாதிப் பகுதி இடிந்து விழுந்தது. தற்போது பாதி அழிந்த நிலையில் வரலாற்றுச் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழ்கிறது. இது பயங்கரமான குற்றவாளிகளுடனும் விலங்குகளுடனும் சண்டையிடுவதற்காக பண்டைய ரோமப் பேரரசன் வெஸ்பாசியனால் கட்டப்பட்டது. அரங்கின் உட்புறத்தின் நடுவே போட்டிகள் நடக்கும் போது அதனைச் சுற்றி அதை பார்க்கும் மக்களுக்காக வட்டமாக படிகள் அமைத்திருக்கும்
சிச்சென் இட்சா
(Pre-Hispanic City of Chichen-Itza)
மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்ற இடத்தில் கட்டப்பட்ட கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களமாகும். இது மாயன் நாகரீகக் காலத்தை சேர்ந்து.
ஏசு கிருஸ்துவின் சிலை
(Christ the Redeemer)
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோவில் 1931 கட்டப்பட்டதாகும். அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசு கிருஸ்துவின் பிருமாண்டமான உருவச்சிலை.
சீனப் பெருஞ் சுவர்
(Great Wall of China)
ஆறாம் நூற்றாண்டில் சீனப் பேரரசைக் காப்பதற்காக கட்டப்பட்ட அரண். எல்லைப்பாதுகாப்பாகவும்,தலைச்சிறந்த சுற்றுலத்தளமாகவும் ,உலக அதிசயங்களின் ஒன்றாகவும் விளங்கும் சீனப்பெருஞ்சுவர் 7,200 கிலோ மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் உயரமும், 4.5 மீட்டர் அகலமும் உடையதாகும்.
செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த சுவரின் மீது ஏறி மற்ற உலக அதிசயங்களை கண்டு களிக்குமாறு கண்காட்சியில் நிர்மாணித்து இருக்கின்றனர்.
தாஜ்மஹால்
(Taj Mahal)
அனைவரும் அறிந்த நினைவுச் சின்னமான தாஜ்மகால் 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்குள் முகலாய மன்னன் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இது இந்தியா ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.
தாஜ் மஹால் கட்டும் பொழுது புனித குர் ஆனிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்த மன்னர் ஷாஜஹான்
இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் அமானாத்கான் மூலமாக திருகுர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்டது
ஆக்ராவில் இருக்கும் நிஜ தாஜ்மஹாலுக்கருகே யமுனை ஆறு சலசலத்து ஓடிக்கொண்டு இருக்கும்.இங்கு சென்னையில் உள்ள செயற்கை தாஜ்மஹால் அருகே கூவம் ஆறு ஓடிக்கொண்டுள்ளது.என்னே பொருத்தம்!
சிறியவர்களுக்கு நுழைவு கட்டணம் 100,பெரியவர்களுக்கு 150 கேமராவுக்கு 50 என்று வசூல் செய்தாலும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி.அதிசயங்கள் பற்றி ஒலி பெருக்கியில் விலா வாரியாக விவரித்துக்கொண்டிருப்பதுடன் ஆங்காங்கே போர்டுகளிலும் விளக்கங்கள் எழுதப்பட்டு இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.
கண்காட்சிக்கு செல்லும் பொழுது குழந்தைகளுக்கான ஸ்னாக்ஸும் தண்ணீர் பாட்டிலும் கூடவே எடுத்து செல்லுவது நலம்.
ஒவ்வொரு பொருளும் மூன்று நான்கு மடங்கு விலை,சுத்தமில்லாத உணவுவகைகள்,புட் கோர்ட் அமைந்திருக்கும் பக்கம் ஈக்களின் ராஜ்ஜியத்தையும்,எச்சில் பாத்திரங்களுடன் அலங்கோலமாகி கிடக்கும் டேபிள்களைப்பார்க்கும் பொழுது கண்களை இறுக்க மூடிக்கொள்ளத்தோன்றுகிறது.இதனையும் மீறி நிறைய மக்கள்ஸ் உட்கார்ந்து கட்டு கட்டுவதைப்பார்க்கும் பொழுது பரிதாபமாக உள்ளது.
அதிக கட்டணத்தால் ரைடுகள் அனைத்தும் காலியாக ஓடிக்கொண்டுள்ளது.
கண்காட்சிக்கு போய் பார்க்கலாம்.கண்ணால் பார்த்து ரசித்து விட்டு புகைப்படக்கருவி எடுத்து சென்று இருந்தால் காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு மட்டும் வரலாம்.
Tweet |
45 comments:
உலக அதிசயங்களின் படங்களுடன் விளக்கமும் அருமையான பகிர்வு.அசத்திட்டீங்க ஸாதிகா. நாங்களும் சென்னை வந்து பார்த்த திருப்தி.
மிக அருமையாய் எழுதி உள்ளீர்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு இடம் பற்றியும் நிறைய படித்து
பின் எழுதி உள்ளது தெரிகிறது. நன்று
படங்கள் தீவு திடலில் எடுத்ததா? பல படங்கள் அந்தந்த இட படம் போல் உள்ளது
இவற்றில் தாஜ் மட்டுமே நேரில் நாங்கள் பார்த்துள்ளோம்
இந்த அதிசயங்களை காண தீவு திடல் போக எண்ணம். பார்க்கலாம்
நீங்கள் சென்னையிலா உள்ளீர்கள்? இதுவரை தெரியாது !
ஆஹா, மிக அருமையான பதிவு.
அந்த நுழைவுக்கட்டணம் ரூபாய் 150 + கேமரா கட்டணம் ரூபாய் 50 ஆக மொத்தம் ரூபாய் 200 செலவும் இல்லாமல் இதர போக்குவரத்துத் தீனிச் செலவுகளும் இல்லாமல் எங்களை
இத்தாலி பைசா நகரம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரம்
இத்தாலியின் ரோம் நகரம்
மெக்சிகோ யுகட்டான்
பிரேசில் ரியோ டி ஜனேரோ
சீனா
இந்தியத் தாஜ்மஹால்
என அனைத்தையும் காட்டி அசத்தி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
நன்றிகள்.
அன்புடன் vgk
முதல் வருகைக்கு நன்றி ஆசியா.சென்னை வந்து பார்த்த திருப்தி என்ற வரிகளில் மக்ழ்ச்சி தோழி
வாங்க மோகன்குமார் சார்.நீங்கள் சுற்றால ரசிகர் என்பது உங்கள் பற்பல இடுகைகள் மூலம் அறிந்து கொண்டேன்.கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.புகைப்படங்கள் அனைத்தும் என்னால் ,தீவுத்திடலில் எடுக்கப்பட்டவைகள்தான்.
ஆம் நான் சென்னையில்தான் உள்ளேன்.நீங்களும் அவசியம் போய் பார்த்து விட்டு வழக்கம் போல் படங்களுடன் உங்கள் பாணியில் வலைப்பூவில் பகிருங்களேன்.நன்றி மோகன்குமார்
உடன் வருகைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.லிஸ்ட் போட்டு நன்றி தெரிவித்து இருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி.
//அந்த நுழைவுக்கட்டணம் ரூபாய் 150 + கேமரா கட்டணம் ரூபாய் 50 ஆக மொத்தம் ரூபாய் 200 செலவும் இல்லாமல் இதர போக்குவரத்துத் தீனிச் செலவுகளும் இல்லாமல் எங்களை
// வரிகள் சிரிப்பைத்தந்தன.நன்றி சார்.
அதிக கட்டணத்தால் ரைடுகள் அனைத்தும் காலியாக ஓடிக்கொண்டுள்ளது.
கண்காட்சிக்கு போய் பார்க்கலாம்.கண்ணால் பார்த்து ரசித்து விட்டு புகைப்படக்கருவி எடுத்து சென்று இருந்தால் காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு மட்டும் வரலாம்//
.படங்களுடன் விளக்கங்களும் அருமை
நன்றி
எச்சரிக்கைக்கு கூடுதல் நன்றி
தகவல்களுடன் படங்களும் பகிர்வும் அருமை ஸாதிகா.
இவற்றில் தாஜ்மஹாலை மட்டுமே நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. எஞ்சியவற்றை புகைப்படங்களில் மட்டுமே.! எகிப்து பிரமிடுகளை ஒருமுறையாவது நேரில் காணும் ஆவல் நெஞ்சில், கிட்டுமோ அந்த பாக்கியம்.?
தாஜ்மஹாலை வரிசையில் முதலில் போட்டிருக்கலாமே சகோ.., நம்ம இந்தியாவோடதுல பின்னால போடலாமா .? :) :) :)
ஆஹா 7 அதிசயங்களையும் ஒரே இடத்தில் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கோணும்.... ரிக்கெட் காசு போனாலும் பறவாயில்லை.... நேரில் பார்த்த திருப்தி ஏற்படுதெல்லோ...
அதிலும் அந்தத் தாஜ் மஹாலைப் பார்க்க வித்தியாசமே தெரியவில்லை.... இவ ஏதோ நேரில் பார்த்தவவாக்கும் வித்தியாசம் தெரிவதுக்கு எனக் கேடிடப்பூடா:))..
//ஆக்ராவில் இருக்கும் நிஜ தாஜ்மஹாலுக்கருகே யமுனை ஆறு சலசலத்து ஓடிக்கொண்டு இருக்கும்.இங்கு சென்னையில் உள்ள செயற்கை தாஜ்மஹால் அருகே கூவம் ஆறு ஓடிக்கொண்டுள்ளது.என்னே பொருத்தம்!
///
அவ்வ்வ்வ்வ்வ் நோ கொமெண்ட்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்... ஏனெண்டால் இது சூடுகண்ட பூனை:)) அஞ்சுவுக்கு மட்டுமே இது புரியும்:))))
தாஜ்மகாலும் கூவம் ஆறும் வித்தியாசமானதுதான். நீங்கள் தலைப்பினையும் இப்படியே வைத்திருக்கலாம்.
கிட்டதட்ட ஏழு அதிசயங்களையும் சுற்றி பார்த்த வியப்பு இந்த பதிவு படிக்கையில்..
ஏழு அதிசயங்களையும் சுற்றி பார்த்த வியப்பு இந்த பதிவை படிக்கையில்...
கண்டதும் சரி விண்டதும் சரி
அருமை!
புலவர் சா இராமாநுசம்
//கண்காட்சிக்கு போய் பார்க்கலாம்.கண்ணால் பார்த்து ரசித்து விட்டு புகைப்படக்கருவி எடுத்து சென்று இருந்தால் காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு மட்டும் வரலாம்.//
ரொம்பச்சரியாச் சொன்னீங்க !!!!!
சுத்தத்துக்கும் நம்ம ஊருக்கும் இடையில் தொலைவு அதிகம்:(
'கண்' காட்சி மட்டும் போதும்:-)))))
படங்களும் பதிவும் அருமையா இருக்கு!
ஏழு அதிசயங்களையும் உங்கள் பகிர்வில் பார்த்து மகிழ்ந்தோம்.
உலகின் ஏழு அதிசயங்களை ஒரே இடத்துல சுத்திப் பாத்ததும் இல்லாம (அழகாவே) புகைப்படங்களும் எடுத்திட்டு வந்திருக்கீங்க. மிக ரசிக்க வைத்த பதிவு.
இதன் விளம்பரத்தை டீவியில் பார்த்தவுடனே தீவுத்திடல் செல்லும் ஐடியா இருந்தது. நீங்கள் ப்ளஸ்களோடு மைனஸையும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். டிப்ஸுக்கும் நன்றிக்கா...முடிந்தால் போகணும்,இன்ஷா அல்லாஹ்.
சிறந்த இடுகை!
நிஜ தாஜ்மகாலுக்கருகே யமுனை நதி. இந்த தாஜ்மகாலுக்கருகே கூவம் நதி. உங்களின் வார்த்தைகள்ல படிக்கையில நானும் சுத்திப் பார்த்த உணர்வு கிடைச்சிடுச்சு. அருமைக்கா.
ஒரு பெரிய கூட்டமா போனோம் அங்க கட்டணத்தை பார்த்ததும் திரும்பிட்டோம் இப்போ உங்க பதிவின் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி .
தென்றல் பக்கமும் வரலாமே ....
http://veesuthendral.blogspot.com/2012/06/blog-post_13.html
சூப்பரா இருக்கு எல்லா அதிசயங்களும்.
good post.. i like it.
நேரில் போய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது ஸாதிகா. அசல்... உலக அதிசயம். இது கண்காட்சி... அழகாக இருக்கின்றன ஒவ்வொன்றும். எப்படி நிர்மாணித்திருக்கிறார்கள்! எதனால்!! யார்!! உயரம் என்ன! ஒவ்வொன்றையும் செய்துமுடிக்க எத்தனை காலம் எடுத்தது!! விபரம் அறிந்துகொள்ள ஆவல். முடிந்தால் கொடுங்கள்.
அழகான சுற்றுலாப் பதிவு ஸாதிகாக்கா! ஊரில் பொருட்காட்சி போன நினைவுகளை கிளறிவிட்டுடுச்சு உங்க பதிவு. அங்கங்கே உங்க விமர்சனத்துடன் தெளிவான படங்கள்!
அடிக்கடி இப்படி சுத்திப் பார்க்கப் போயிட்டே இருங்க,சரியா? :) [அப்பத்தானே நானும் சென்னைய சுத்திப் பார்க்கமுடியும்? ஹிஹி.. ;)]
கருத்துரை அளித்த ரமணி சாருக்கு மிக்க நன்றி!
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
தாஜ்மஹாலை வரிசையில் முதலில் போட்டிருக்கலாமே சகோ.., நம்ம இந்தியாவோடதுல பின்னால போடலாமா .? :) :) :)/////
ஹி ஹி..ஒரு தன்னடக்கம்தான்...:)நன்றி வரலாற்றுச்சுவடுகள்.
//அவ்வ்வ்வ்வ்வ் நோ கொமெண்ட்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்... ஏனெண்டால் இது சூடுகண்ட பூனை:)) அஞ்சுவுக்கு மட்டுமே இது புரியும்:))))// அதீஸ் விளக்கமா சொன்னால் கிட்னி காய்ந்து போவதில் இருந்து அக்கா தப்பிப்பாள்.
கருத்துக்கு மிக்க நன்றி விச்சு.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உதயா.
//கண்டதும் சரி விண்டதும் சரி
அருமை!
//அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி புலவரய்யா.
கருத்துக்கு மிக்க நன்றி சகோ துளசி கோபால்
கருத்துக்கு மிக்க நன்றி மாதேவி.
பதிவையும் படங்களையும் பார்த்து ரசித்து பாராட்டிய கணேஷண்ணாவுக்கு ந்ன்றி!
இதன் விளம்பரத்தை டீவியில் பார்த்தவுடனே தீவுத்திடல் செல்லும் ஐடியா இருந்தது. நீங்கள் ப்ளஸ்களோடு மைனஸையும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். டிப்ஸுக்கும் நன்றிக்கா...முடிந்தால் போகணும்,இன்ஷா அல்லாஹ்.//பானு சென்னையிலா இருக்கின்றீர்கள்.குடும்பத்துடன் போய் பாருங்கள்!
நன்றி பானு.
வருகைக்கு மிக்க நன்றி ச்கோ சுவனப்பிரியன்
நிஜ தாஜ்மகாலுக்கருகே யமுனை நதி. இந்த தாஜ்மகாலுக்கருகே கூவம் நதி. உங்களின் வார்த்தைகள்ல படிக்கையில நானும் சுத்திப் பார்த்த உணர்வு கிடைச்சிடுச்சு. அருமைக்கா.
//உங்கள் பாராட்ட்டை படிக்கும் பொழுது மகிழ்ச்சி உணர்வு கிடைச்சுடுச்சி நிரூநன்றி!
மிக்க நன்றி சசிகலா கருத்திட்ட்மைக்கு.தென்றலுக்கு வந்து தென்றலின் நறுமணத்தினை சுவாசித்து கருத்தும் இட்டு விட்டேன்:)
மிக்க நன்றி வான்ஸ்
மிக்க நன்றி ஷேக்
//நேரில் போய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது ஸாதிகா. அசல்... உலக அதிசயம். இது கண்காட்சி... அழகாக இருக்கின்றன ஒவ்வொன்றும். எப்படி நிர்மாணித்திருக்கிறார்கள்! எதனால்!! யார்!! உயரம் என்ன! ஒவ்வொன்றையும் செய்துமுடிக்க எத்தனை காலம் எடுத்தது!! விபரம் அறிந்துகொள்ள ஆவல். முடிந்தால் கொடுங்கள்.
//இமா நீங்கள் தொடுத்த வினாக்கள் எல்லாம் அசல் அதிசயங்கள் பற்றியா?அசல் அல்லாத அதிசயங்கள் பற்றியா?அசல் என்றால் சொல்லி விடுவேன்.அது அல்ல என்றால் கஷ்டம்.சொல்லுங்க இமா.ம்ம்ம்...
அடிக்கடி இப்படி சுத்திப் பார்க்கப் போயிட்டே இருங்க,சரியா? :) [அப்பத்தானே நானும் சென்னைய சுத்திப் பார்க்கமுடியும்? ஹிஹி.. ;)]
// ஹா ஹா..மகி உங்கள் வரிகளில் சிரித்து விட்டேன்.நன்றி மகி.அடிக்கடி ஊர் சுற்றி பகிர்ந்து கொள்கிறேன் சரியா?:)
அருமையாய் எழுதி உள்ளீர்கள்பாராட்டுகள்.
அசல் அதிசயங்கள் பற்றி... தெரியும்; நகலானாலும் அந்தத் திறமை அதிசயம்தானே, அதைப் பற்றித்தான் கேட்டேன்.
Post a Comment