June 14, 2012

வலைப்பதிவர்கள் தினவாழ்த்துக்கள்

வாழ்த்துகள்!!

சர்வதேச வலைப்பதிவர் நாளான இன்று சக வலைப்பதிவு நட்புக்களுக்கும் இனிய
வாழ்த்துக்கள்.

1.1997ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 17 ஆம்தேதி ஜான் பெர்கர் - John
Barger என்பவர் Webblog என்ற பெயரினை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்தார்.

2.1999 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் முதல் பீட்டர் மெர்ஹால்ஸ் - Peter
Merholz என்பவர் Webblog ன் சுருக்கமான blog என்ற பெயரை பயன்படுத்த
தொடங்கினார்.அதுவே இன்றளவும் நிலைத்து விட்டது.

3.1996 ஆம் ஆண்டு எக்சான்யா (Xanya) என்ற நிறுவனம் வலைப்பூ வசதியை
நிறுவத்தொடங்கியது.பிற்பாடு வலைப்பூவின் அசூர வளர்ச்சியைக்கண்டு கூகுள்
நிறுவனம் இதனை விலைக்கு வாங்கி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வலைப்பூ
ஆரம்பிக்கும் வண்ணம் சேவையை ஆரபித்தது.

4.2003 ஜனவரி திங்கள் 26 ஆம்தேதி குடியரசு தினத்தன்று தமிழிலான வலைப்பூவை
நவன் என்ற வலைப்பதிவர் ஆரம்பித்தார்.இருப்பினும் கார்த்திகேயன் ராமசாமி
என்பவர் முதல் வலைப்பூதாரர் என்று விக்கிப்பீடியாவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

5.தமிழ் வலைப்பூக்கள் பற்றிய தகவல்கள்,உருவாக்கும் விதம்,அதன் பயன்
பாடுகள் போன்றவை பத்திரிகைகள் வாயிலாக வெளியிடப்பட்டு அதன் பயன்
பாடும்,வலைப்பூவின் சக்தியும் மக்களிடையே தெரிய வந்தது.

6.தமிழ் வலைப்பூ தொடங்கிய வருடமான 2003 முதல் 2005 வரை வெறும் 1000
வலைப்பூக்கள் மட்டுமே தொடங்கப்பட்டு உலா வந்தன.அடுத்த மூன்றாண்டுகளில்
அதன் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்து விட்டன.பின் வந்த ஆண்டுகளில்
பற்பல மடங்குகள் அதிகரிக்கத்தொடங்கி விட்டன.

7.தமிழ் வலைப்பூ வளர்ச்சியால் இணைய எழுத்தாளர்கள் பெருகி தமிழ்
இலக்கியங்கள் அனைத்து வகை மக்களுக்கும் சென்று அடையக்கூடிய ஒன்றாகி
விட்டது.தமிழ் மொழியின் வளர்ச்சி உயர்ந்திடவும் வலைப்பூக்கள் உதவுகின்றன
என்றால் மிகை ஆகாது.

8.ஜஸ்டின் ஹால் (Justin Hall) உலகில் முதன் முதலில்வலைப்பூ எழுத
ஆரம்பித்தவர் என்ற சிறப்பைப்பெறுகின்றார்.

9.உலகிலேயே அதிகம் வயதுடைய வலைப்பதிவர் ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்த ஆலிவ்
ரைலி ஆவார்.இவரைப்பற்றிய எனது கட்டுரையை காண இங்கு சொடுக்குங்கள்.

10.ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் சர்வதேச வலைப்பதிவர்கள் நாளென்று
குறிப்பிடும் தமிழ் விக்கி பீடியா அதே சர்வதேச பதிவர்கள் நாளை
ஜூன் மாதம் 14 ஆம் தேதி என்று குறிப்பிடுவது குழப்பத்தை தருகின்றது.

11.வலைபூக்கள் தமிழின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கின்றன என்றால்
மிகை ஆகாது.முன்னொரு காலத்தில் பத்திரிகைகள் மட்டுமே இருந்தன.இப்பொழுதோ
பதிவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதனை அந்நொடியே எழுதி இணையத்தில்
வெளிட்டு உடனுக்குடன் கருத்துரையும் பெற்று விடுகிறோம்.நினைத்ததை
எழுதுவது,அதனை எடிட் செய்யாமல் உடனுக்குடன் வெளியிடுவது,போன்ற பற்பல
வசதிகளைப்பயன் படுத்தி இன்றைய கால கட்டத்தில் பதிவர்கள் சிலரின்
கருத்துக்களும்,பதிவுகளும் படிப்போரை மிகவும் வேதனைக்கு
உட்படுத்துகின்றன.

12.ஒருவர் நம்பிக்கையை மற்றவர் கிண்டலடித்தல்,மதப்பூர்வமான
சண்டைகள்,குடும்ப உறுப்பினர்களைக்கூட கீழ்த்தரமாக வர்ணிக்கும் அவலம்,நான்
பெரியவனா நீ பெரியவனா என்ற ஈகோ,குழு குழுக்களாக செயல் படுதல் இப்படி
பற்பல விரும்பத்தகாதவைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அவலம் மறைய வேண்டும்.

12.வரும் காலங்களிம் முகம் சுளிக்க வைக்கும் இத்தகைய செயல்கள் அறவே
மறைந்து பதிவர்களுக்கிடையே நல்லுறவும்,ஒருவரை மற்றவர்
மதித்தலும்,சகிப்புத்தன்மையும் வளர்ந்து ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும் என்பதே என் அவா.


49 comments:

nidurali said...

வாழ்த்துகளோடு சரித்திரமும் அறியவைத்து நல்ல அறிவுரைகளும் தந்தமைக்கு பாராட்டுகள் .வளர்க உம் சேவை .தொடர்க உங்கள் தொண்டுள்ளம்

Ramani said...

வரும் காலங்களிம் முகம் சுளிக்க வைக்கும் இத்தகைய செயல்கள் அறவே
மறைந்து பதிவர்களுக்கிடையே நல்லுறவும்,ஒருவரை மற்றவர்
மதித்தலும்,சகிப்புத்தன்மையும் வளர்ந்து ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும்//

எங்கள் அவாவும் அதுவே
இன்றுபதிவர் தினம் என்பதை நினைவூட்டி
அது தொடர்பான அனைத்து தகவல்களையும்
மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அரிய தகவல்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நானும் பகிர்ந்து கொள்கிறேன்.. எனது வாழ்த்துகள்.

பா.கணேஷ் said...

இன்று வலைப்பதிவர் தினம் என்பதை நானும் குறித்து வைத்திருந்தேன். ஆனால் என்ன எழுதுவது என்று குழம்பியே எதுவும் எழுதவில்லை. இங்கே வலைப்பதிவின் வரலாறையே அழகாகத் தந்த அசர வைத்து விட்டாய் சகோதரி. அருமை. ஊடகங்களில் மகத்தானது என்ற சிறப்பை பதிவுலகம் பெற நாம் அனைவரும் கை கோர்ப்போம். மகிழ்வுடன் கூடிய என் இனிய வலைப்பதிவர் தின நல்வாழ்த்துக்கள்.

angelin said...

பற்பல விரும்பத்தகாதவைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அவலம் மறைய வேண்டும்.//

சரியாக சொன்னீர்கள் .

புதிய பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் .
பகிர்வுக்கு நன்றி சாதிகா.

இராஜராஜேஸ்வரி said...

ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும் அரிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும் அரிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

நிரஞ்சனா said...

வலைப்பூக்களில் நல்ல விஷயங்களை மட்டுமே வெளியிடுவது என்ற சுயக்கட்டுப்பாடு நம் அனைவரின் கையில்தானே உள்ளது. நாமனைவரும் நினைத்தால் நல்ல விஷயங்களே வரும்க்கா. இந்த வலைப்பதிவர் தின நாளில் அதற்கு உறுதி கொள்வோம். ஊடகங்களில் சிறந்தது வலைப்பூ என பெயர் பெற வேண்டுமென்பதே என் விருப்பமும். உங்களுக்கும் அனைவருக்கும என் வலைப்பதிவர் தின நல்வாழ்த்துக்கள்.

விச்சு said...

நிறைய நான் அறியாத தகவலுடன் பதிவு அருமையாக உள்ளது. பதிவுலகம் சிறப்பாகவே அமையும். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

வரலாற்று சுவடுகள் said...

உலகின் அனைத்து மூலைகளிலும் வாழும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.!

நன்றி சகோ வலைப்பதிவு வரலாறு பற்றி அறிய தந்தமைக்கு.!

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

ஸ்ரீராம். said...

வலைப்பதிவர் தினத்தை ஒட்டி அது தோன்றிய வரலாறையே அழகாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.நான் நினைத்திருந்த ஒரு விஷயமும் தவறு என்றும் தெரிய வந்தது! நன்றி.

ஸாதிகா said...

முதலாவதாக வந்து கருத்திட்ட சகோதரர் அலி அவர்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்

ஸாதிகா said...

உடன் வந்து கருத்திட்டது மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் லைக் செய்து கருத்திட்டு ஷேர் பண்ணிய தம்பி ஸ்டார்ஜனுக்கு நன்றி

ஸாதிகா said...

இன்று வலைப்பதிவர் தினம் என்பதை நானும் குறித்து வைத்திருந்தேன். ஆனால் என்ன எழுதுவது என்று குழம்பியே எதுவும் எழுதவில்லை. இங்கே வலைப்பதிவின் வரலாறையே அழகாகத் தந்த அசர வைத்து விட்டாய் சகோதரி. அருமை. ஊடகங்களில் மகத்தானது என்ற சிறப்பை பதிவுலகம் பெற நாம் அனைவரும் கை கோர்ப்போம். மகிழ்வுடன் கூடிய என் இனிய வலைப்பதிவர் தின நல்வாழ்த்துக்கள்.
//எழுதவா விடயங்கள் இல்லை.உங்கள் பாணியில் ஒன்றினை எழுதி இருக்கலாம் கணேஷண்ணா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்

ஸாதிகா said...

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

ஸாதிகா said...

வலைப்பூக்களில் நல்ல விஷயங்களை மட்டுமே வெளியிடுவது என்ற சுயக்கட்டுப்பாடு நம் அனைவரின் கையில்தானே உள்ளது. நாமனைவரும் நினைத்தால் நல்ல விஷயங்களே வரும்க்கா. இந்த வலைப்பதிவர் தின நாளில் அதற்கு உறுதி கொள்வோம். //கண்டிப்பா நிரூ.கருத்துக்கு நன்றி நிரூ

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விச்சு

ஸாதிகா said...

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வரலாற்றுச்சுவடுகள்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.


நான் நினைத்திருந்த ஒரு விஷயமும் தவறு என்றும் தெரிய வந்தது! //அது என்ன்வென்று நான் அறிந்து கொள்ளலாமா நன்றி.

யுவராணி தமிழரசன் said...

மன்னிக்கவும் இன்று வலைப்பதிவர் தினம் என்று இன்றே அறிகிறேன்! இதுவே என்னுடைய முதல் வருடம்! இது எத்தகைய வாய்ப்பு நல்ல நட்பு வட்டம்! நல்ல எண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களின் கருத்துரைகளையும் அறிவதோடு தமிழும் வளர்கிறது என்பதை நினைக்க சந்தோஷமாக இருக்கிறது! வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு நம் தமிழோடு ஒன்றிப்போக எத்தனை வாய்ப்பு!

Avargal Unmaigal said...

///ஒருவர் நம்பிக்கையை மற்றவர் கிண்டலடித்தல்,மதப்பூர்வமான
சண்டைகள்,குடும்ப உறுப்பினர்களைக்கூட கீழ்த்தரமாக வர்ணிக்கும் அவலம்,நான்
பெரியவனா நீ பெரியவனா என்ற ஈகோ,குழு குழுக்களாக செயல் படுதல் இப்படி
பற்பல விரும்பத்தகாதவைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அவலம் மறைய வேண்டும்.

12.வரும் காலங்களிம் முகம் சுளிக்க வைக்கும் இத்தகைய செயல்கள் அறவே
மறைந்து பதிவர்களுக்கிடையே நல்லுறவும்,ஒருவரை மற்றவர்
மதித்தலும்,சகிப்புத்தன்மையும் வளர்ந்து ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும் என்பதே என் அவா.////

மிகஸ் சரியாக எழுதி இருக்கிறிர்கள். எத்தனை பேர் இதனை புரிந்து நடப்பார்கள் என்று வருகாலங்களில் பார்ப்போம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பதிவர்களுக்கிடையே நல்லுறவும்,ஒருவரை மற்றவர்
மதித்தலும்,சகிப்புத்தன்மையும் வளர்ந்து ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும்//

தங்களின் ஆவல் நியாயமானதே!


"வலைப்பதிவர்கள் தினவாழ்த்துக்கள்"

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.பகிர்ந்த கருத்துகள் மிக அருமை.வலைப்பதிவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் !.

Mahi said...

பல புதிய தகவல்கள் நிறைந்த தொகுப்பு! அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

செய்தாலி said...

ம்ம்ம்
நல்ல புதிய தகவல்கள்
வலை எழுதும் எல்லா உறவுகளுக்கும் நல் வாழ்த்துக்கள்
சகோவுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

palani vel said...

////.வலைபூக்கள் தமிழின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கின்றன என்றால்
மிகை ஆகாது.முன்னொரு காலத்தில் பத்திரிகைகள் மட்டுமே இருந்தன.இப்பொழுதோ
பதிவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதனை அந்நொடியே எழுதி இணையத்தில்
வெளிட்டு உடனுக்குடன் கருத்துரையும் பெற்று விடுகிறோம்.////

உண்மைதானே...

அனைத்துப் பதிவர்களுக்கும் பதிவர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிறைய பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி..!

சீனு said...

உங்கள் தளத்திற்கு இது தான் என் முதல் வருகை, சகோதரி யுவராணி உங்களைப் பற்றி கூறியிருந்த பதிவு மூலம் இங்கு வந்தேன் படித்தேன் ரசித்தேன் வரலாறும் அறிந்தேன், உங்களுக்கும் பதிவர் தின வாழ்த்துக்கள்.

படித்துப் பாருங்கள்

வாழ்க்கைக் கொடுத்தவன்

புலவர் சா இராமாநுசம் said...

வலைப்பதிவு பற்றிய வரலாறு
இதுவரை நான் அறியாத செய்தி!
இன்று அறியச் செய்தீர் நன்றி!

சா இராமாநுசம்

Seeni said...

வலைபதிவாளர்களுக்கு ஒரு தினமா!?

இப்பொழுதுதான் எனக்கு உங்கள் பதிவின் மூலம்-
அறிந்து கொண்டேன்!

முழு வரலாறு படித்தது போல்-
இருந்தது!

வாழ்த்துக்கள்!

சிநேகிதி said...

பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் .வலை பதிவர் தின வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிக்கா அக்கா

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி சாதிகா.

ஸாதிகா said...

மன்னிக்கவும் இன்று வலைப்பதிவர் தினம் என்று இன்றே அறிகிறேன்! இதுவே என்னுடைய முதல் வருடம்! இது எத்தகைய வாய்ப்பு நல்ல நட்பு வட்டம்! நல்ல எண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களின் கருத்துரைகளையும் அறிவதோடு தமிழும் வளர்கிறது என்பதை நினைக்க சந்தோஷமாக இருக்கிறது! வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு நம் தமிழோடு ஒன்றிப்போக எத்தனை வாய்ப்பு!///

நீக்ள் கூறி இருக்கும் கருத்து மிகச்சரி.முதலாக வந்து கருத்திட்டதில்லாமல் உங்கள் இடுகையிலும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ச்கோ யுவராணி தமிழரசன்

ஸாதிகா said...

//மிகஸ் சரியாக எழுதி இருக்கிறிர்கள். எத்தனை பேர் இதனை புரிந்து நடப்பார்கள் என்று வருகாலங்களில் பார்ப்போம்
//பொருத்திருந்து பார்க்கலாம்.கருத்துக்கு நன்றி அவர்கள் உண்மைகள்

ஸாதிகா said...

மிக்க நன்றி வி ஜி கே சார்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தோழி ஆசியா

ஸாதிகா said...

வாழ்த்துக்கும் பார்ராட்டுக்கும் மிக்க நன்றி சகோ செய்தாலி

ஸாதிகா said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ பழனி வேல்

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீனு.உங்கள் பக்கம் அவசியம் வருகிறேன்

ஸாதிகா said...

என்னிடுகை மூலம் வலைப்பதிவர் நாளை அறிந்த புலவரய்யாவுக்கு நன்றிகள்

ஸாதிகா said...

முழு வரலாறு படித்தது போல்-
இருந்தது!//முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ சீனி

ஸாதிகா said...

வாங்க பாயிஜா.கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனாராதாகிருஷ்ணன்

மோகன் குமார் said...

மிக மகிழ்ச்சி. தகவல் களஞ்சியம் என உங்களுக்கு பெயர் சூட்டிடலாம். பின்னுறீங்க

ananthu said...

உபயோகமான பதிவுக்கு நன்றி ... உங்களின் வலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

புகழன் said...

http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_7925.html

வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி.

நீண்ட நாட்களாக பதிவுலகிற்கே வராமல் இருந்து விட்டேன்.

தற்செயலாக எனது email ஐ செக் செய்யும் போது உங்கள் கமென்ட் ஒன்றை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.

எழுத வேண்டும் என்பது ஆசை தான்... ஆனால் புதிய வேலையில் சேர்ந்த இந்த இரு வருடங்களாக எதையும் எழுத இயலவில்லை.

இடையில் திருமணமும் ஆகி விட்டது.

இறைவன் நாடினால் மீண்டும் தொடர்ந்து எழுதுவேன். நன்றி.

kovaikkavi said...

புதிய தகவல்கள் சகோதரி.. மிக்க நன்றி. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.