June 10, 2012

சர்வதேச நாட்கள்



ஜனவரி

10 உலக சிரிப்பு தினம்
12 தேசிய இளஞர் நாள்
15 இராணுவ தினம்
16 விக்கிபீடியா நாள்
19 மதங்கள் தினம்
20 சமூக நிதி தினம்
22 சாரணியர் தினம் .
26 சுங்கவரிதினம்
27 ஹோலோ காஸ்ட் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் தினம்
28 நோயாளர் தினம்
29 அரசியலமைப்பு நாள்
30 தொழுநோய் ஒழிப்பு தினம்&தியாகிகள் தினம்

பிப்ரவரி

02 புனித வாழ்வுக்கான தினம்&சதுப்புநிலதினம்
08 பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்
11 காதலர் தினம்
12 டார்வின் நாள்
21 தாய் மொழிகள் தினம்
24 கலால் வரி தினம்
28 அறிவியல் தினம்

மார்ச்

06 புத்தகங்கள் தினம்
08 பெண்கள் தினம்&எழுத்தறிவுதினம்
11 பொது நலவாய அமைப்பு தினம்
13 சிறுநீரக விழிப்புணர்வுதினம்
15 நுகர்வோர்தினம்
20 ஊனமுற்றோர்தினம்&சிட்டுக்குருவிகள் தினம்
21 காடுகள்தினம்&சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்&கவிதைகள் தினம்
22 தண்ணீர்தினம்
23 தட்பவெப்பநிலை தினம்
24 காசநோய் தினம்
28 கால் நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

01 முட்டாள்கள் தினம்
02 சிறுவர் நூல் நாள்
04 நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வுதினம்
05 சமுத்திரதினம்
07 சுகாதார தினம்
08 உரோமர் கலாச்சாரதினம்
12 வான் பயண தினம்&வீதியோர சிறுவர்களுக்கான தினம்
14 அமைதி தினம்
15 அரவாணிகள் தினம்&நூலகர்கள் தினம்
17 இரத்த உறையாமை தினம்.
18 மரபு தினம்
19 புகைப்பட தினம்
22 பூமி தினம்
23 புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
25 இறைச்சல் விழிப்புணர்வு தினம்
26 அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
30 குழந்தை தொழிலாளர்கள் தினம்

மே

01 உலக தொழிலாளர் தினம்
03 பத்திரிகை சுதந்திர தினம்&சக்தி தினம்
04 தீயணைக்கும் படையினர் நாள்
02 ஆவது ஞாயிறு அன்னையர் தினம்
08 செஞ்சிலுவை தினம்&விலங்குகள் பாதுகாப்பு தினம்
12 சர்வதேச செவிலியர் தினம்
15 குடும்பங்கள் தினம்
17 தொலைத்தொடர்பு தினம்
16 தொலைக்காட்சி தினம்
18 அருங்காட்சியக தினம்
19 கல்லீரல் நோய் தினம்&பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
21 உலக பண்பாட்டு தினம் &வன்முறை ஒழிப்பு தினம்
22 உயிரின பல்வகைமை தினம்
23 ஆமைகள் தினம்
24 காமன் வெல்த் தினம்
29 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதிக்காப்போர் தினம்&தம்பதியர் தினம்
31 புகையிலை எதிர்ப்புதினம்

ஜூன்

01 சர்வதேச சிறுவர் தினம்
05 சுற்றுபுறதினம்
08 சமுத்திர தினம்
03 வது ஞாயிறு தந்தைகள் தினம்
12 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம்
14 இரத்ததான தினம்&வலைப்பதிவர் நாள்
15 மேஜிக் வித்தை தினம்
20 அகதிகள் தினம்
21 உலக இசை நாள்
23 இறைவணக்க தினம்
26 போதை ஒழிப்பு தினம்&26 சித்திரவதைக்கு ஆளான்னோருக்கான ஆதரவு நாள்
27 நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
28 ஏழைகள் தினம்

ஜூலை

01 கேளிக்கை தினம்& மருத்துவர்கள் தினம்
01வது சனிக்கிழமை கூட்டுறவுதினம்
11 மக்கள் தொகை தினம்
15 கல்வி நாள்
3 வது ஞாயிற்று கிழமை தேசிய ஐஸ் கிரீம் தினம்
20 சதுரங்க தினம்

ஆகஸ்ட்

01 தாய்ப்பால் தினம்&சாரணர் தினம்
02 ந‌ட்பு ‌தின‌ம்
06 ஹிரோஷிமா தினம்
09 நாகசாகி தினம்&ஆதிவாசிகள் தினம்
12 இளஞர் தினம்
13 இடதுகை பழக்கமுடையோர் தினம்
14 கலாசார ஒற்றுமை நாள்
18 உள்நாட்டு மக்களின் சர்வதேசதினம்
30 காணாமற்போனோர் நாள்

செப்டம்பர்

05 இந்திய ஆசிரியர் தினம்
08 எழுத்தறிவு தினம்
18 அறிவாளர்கள் தினம்
15 மக்களாட்சி நாள்
16 ஓஷோன் தினம்
21 பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 ஊமை&காது கோளாதோர் தினம்
27 சுற்றுலா தினம்

அக்டோபர்

01 முதியோர் தினம்&இரத்ததான தினம்
02 சைவ உணவாளர் தினம்&அகிம்சை தினம்
03 குடியிருப்பு (உறைவிடம்) தினம்&வனவிலங்குகள் தினம்
04 விலங்குகள் நல தினம்
05 இயற்கை சூழல் தினம்
08 இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
10மரணதண்டனை எதிர்ப்பு தினம்
09 அஞ்சலக தினம்
12 உலக பார்வை தினம்
14 தர நிர்ணய நாள்
15 விழிப்புலனற்றோர் தினம்
16 உணவுதினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
18 இடப்பெயர்வாளர் தினம்
24 ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 சிந்தனைகள் தினம்
31 சிக்கன நாள்

நவம்பர்


11நினைவுறுத்தும் நாள்
14 நீரிழிவு நோய் தினம்
16 உலக சகிப்பு நாள்
17 அனைத்துலக மாணவர் நாள்
03 ஆவது வியாழக்கிழமை உலக தத்துவ நாள்
19 தேசிய ஒருமைப்பாட்டு தினம்
24 படிவளர்ச்சி நாள்
25 பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
26 சட்ட தினம்
29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்

டிசம்பர்

01 எயிட்ஸ் தினம்
02 அடிமைத்தனம் ஒழிப்பு தினம்&ஒளிபரப்பு தினம்
03 ஊனமுற்றோர் தினம்
05 பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
06 மத நல்லிணக்க தினம்
07 கொடிதினம்
08 தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம்
09 விமானபோக்குவரத்து தினம்&ஊழல் எதிர்ப்பு நாள்
10 மனித உரிமைகள் தினம்
11 சர்வதேச மலை நாள்
17 பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
18 சிறுபான்மையினர் உரிமை தினம்
21 சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
23 விவசாயிகள் தினம்










41 comments:

பால கணேஷ் said...

தினம் தினம் கடந்து செல்லும் தினங்களில் இத்தனை தினங்கள் இருக்கின்றனவா? சிலவற்றைத் தவிர மற்றவை எனக்குத் தெரியாதது. குறித்து வைத்துக் கொண்டேன்மா. இனி அந்தந்த தினங்களை கொண்டாடிடலாம். மிக்க நன்றி!

இமா க்றிஸ் said...

Superb Shadiqah. Good info.

நிரஞ்சனா said...

அடாடா... தினங்கள்ல இத்தனை இருக்குதாக்கா? இப்ப தெரிஞ்சுக்கிட்டதுல ரொம்பக் குஷி எனக்கு! இனிமே அந்தந்த தினங்கள் வரும்போது அது சம்பந்தமாப் பதிவு போட்டு அசத்திடலாம்ல! Thakskka!

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு ஸாதிகா. பயன்படுத்திக் கொள்கிறோம். நன்றி!

Yaathoramani.blogspot.com said...

அருமையாக தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
நகல் எடுத்து வைத்துக் கொண்டேன்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 2

ஸாதிகா said...

குறித்து வைத்துக்கொண்டது குறித்து மகிழ்ச்சி கணேஷண்ணா.

ஸாதிகா said...

மிக்க நன்றி இமா.இந்த முறி சீக்கிரமே வந்துட்டீங்க.:)

ஸாதிகா said...

ஞாயிற்றுக்கிழமையிலேயே சீக்கிரமே விடிந்து விட்டதா நிரஞ்சனாவுக்கு!இனி தினங்கள் சம்பந்தமா பதிவு இட்டு ஜன்னலுக்கு வெளியில் அசத்துங்கள்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

ஸாதிகா said...

நகல் எடுத்து வைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி.

Unknown said...

குறிப்பெடுத்துக்கொள்கிறேன் இன்றைய தினம்....

Radha rani said...

எல்லோருக்கும் பயன்படும் உபயோகமான பதிவு..வருடம் முழுவதும் இத்தணை சர்வதேசதினம் வருது.என்றாவது ஒருநாள் லஞ்ச ஒழிப்பு தினம் இந்த லிஸ்ட்ல சேரும்னு நம்புறேன்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அடேயப்பா இத்தனை தினங்களா?

முத்தரசு said...

அட இம்புட்டு நாள் இருக்கா நன்றி சகோ தகவலுக்கும் பகிர்வுக்கும்

முக்கியமா வரும் 14 ஜூன்
அட நம்ம நாளுங்கோ (வலை பதிவர் நாள்)

MARI The Great said...

இதை வச்சே சர்வதேச நாட்கள் உருவான வரலாறுன்னு ரெண்டு மூணு பதிவு போடலாம்போல இருக்கே:)

பகிர்வுக்கு நன்றி சகோ ..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஸாதிகா,
இன்று,
பல 'தினங்கள்' பற்றி அறிந்த தினம் ---எனக்கு..!
பயனுள்ள தொகுப்பு.
நன்றி சகோ.

ஹுஸைனம்மா said...

எதுக்கெல்லாமோ நாள் இருக்கு, பதிவர் தினம் இல்லையா? :-))))

ஸாதிகா said...

//குறிப்பெடுத்துக்கொள்கிறேன் இன்றைய தினம்....// ஹா ஹா..மிக்க நன்றி ரேவா.

ஸாதிகா said...

ஒருநாள் லஞ்ச ஒழிப்பு தினம் இந்த லிஸ்ட்ல சேரும்னு நம்புறேன்..//கண்டிப்பாக...அதே போல் ஊழல் ஒழிப்பு தினம் போல் பற்பல சர்வதேச தினங்கள் உபயோகமானதாக உருவாக்கப்படவேண்டும்.கருத்துக்கு மிக்க நன்றி ராதாராணி

Athisaya said...

இவ்வளவு இருக்கா???இனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் 1 தீர்ந்தது.ஆனாலும் வீட்டாக்கள் ரொம் கலாச்சுட்டாங்க...

ஸாதிகா said...

அடேயப்பா இத்தனை தினங்களா?//இன்னும் என் கண்களுக்கு புலப்படமல் இன்னும் எத்தனை இருக்கோ வித்யாசுப்ரமணியம் மேடம்.கருத்துரைத்த உங்களுக்கு நன்றி!

ஸாதிகா said...

முக்கியமா வரும் 14 ஜூன்
அட நம்ம நாளுங்கோ (வலை பதிவர் நாள்)//ஆமாமாம்.இதைப்பார்த்ததும் அநாளில் பதிவெழுத என்னைப்போல் நிறைய பதிவர்கள் தயாராகிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்:)கருத்துக்கு நன்றி மனசாட்சி

ஸாதிகா said...

இதை வச்சே சர்வதேச நாட்கள் உருவான வரலாறுன்னு ரெண்டு மூணு பதிவு போடலாம்போல இருக்கே:)//போட்டுடுங்கோ சகோ வரலாற்று சுவடுகள்.காண ஆவலுடன் இருக்கிறோம்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஸலாம் சகோ.ஸாதிகா,
இன்று,
பல 'தினங்கள்' பற்றி அறிந்த தினம் ---எனக்கு..!
பயனுள்ள தொகுப்பு. //வ அலைக்கும்சலாம் சகோ முஹம்மது ஆஷிக்.நீண்ட நாட்களுக்குப்பின் வருகைதந்து கருத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி!

ஸாதிகா said...

எதுக்கெல்லாமோ நாள் இருக்கு, பதிவர் தினம் இல்லையா? :-))))// என்ன தங்கச்சி ஹுசைனம்மா இப்புடி கேட்டுவிட்டீர்கள்.ஜூன் 14 பார்க்கலியா?கொட்டை எழுத்துக்களில் போட்டு இருக்கேனே.அடுத்த முறை வரும் பொழுது சென்னைக்கு வாங்க.தெரிந்த ஒரு கண் மருத்துவர் இருக்கார்.பெரிய சோடாபுட்டியாக மாட்டி விட சிபாரிசு செய்கிறேன்.அவ்வ்வ்வ்...எனது போன பதிவில் நீங்கள் போட்ட இந்த பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்கிறேன்.////மே 23 ஆம் தேதி ஆமைகள் பாதுகாப்பு தினமாக//
விட்டா, மனுசனையும், அவன் தின்னும் ஆடு-மாடு-கோழி தவிர எல்லாத்துக்கும் ஒரு தினம் வந்துடும்போல!! :-))))))// இந்த வரிகள்தான் இந்த சர்வதேசநாள் பதிவு போட தூண்டு கோல்.நன்றி தங்கச்சி.

ஸாதிகா said...

இவ்வளவு இருக்கா???இனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் 1 தீர்ந்தது.ஆனாலும் வீட்டாக்கள் ரொம் கலாச்சுட்டாங்க.//மிக்க நன்றி அதிசயா முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

Asiya Omar said...

ஆஹா! இத்தனை தினங்களா?பதிவர்கள் இந்த தினங்களை வைத்தே வருடம் முழுவதும் பதிவு எழுதி விடலாம். இத்தனை தினங்களையும் கொண்டாட அரசாங்க விடுமுறை இருந்தால் சூப்பராக இருக்குமே தோழி.

ஸாதிகா said...

இத்தனை தினங்களையும் கொண்டாட அரசாங்க விடுமுறை இருந்தால் சூப்பராக இருக்குமே தோழி.//இமேஜின் பண்ணிப்பார்க்கிறேன்.ரொம்ப டெரரா இருக்கு.அது சரி ஏன் இந்த கொலவெறி தோழி ஆசியா?????:)

Asiya Omar said...

ஸாதிகா,உங்க பதிலை பார்த்து இன்னும் சிரிச்சு முடியலை,சும்மா...வித்தியாசமான கருத்து கொடுக்கலாமேன்னு தான்.எஸ்கேப்.......

செய்தாலி said...

இத்தனை தினங்களா
நல்ல பயனுள்ள தகவல்
குறிப்பேட்டில் எழுதிக் கொண்டேன் சகோ
மிக்க நன்றி

விச்சு said...

நல்ல தகவல்கள். போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு உதவும்.

Kanchana Radhakrishnan said...

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

அனைத்தும் அருமை... ஆனா ஸாதிகா அக்கா.. சர்வதேச நாளில் ஒருநாள் குறையுதே எப்பூடி மிஸ் பண்ணினனீங்க?

அதுதான் என் பிறந்தநாள்?:))))) பூஸ் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)))).

Avargal Unmaigal said...

எல்லா தினங்களையும் வரிசையாக தொகுத்து தந்த உங்கள் முயற்சி அருமை. இந்த தினங்களை படித்து வரும் போதுதான் இன்று என் கல்யாண நாள் என்று ஞாபகம் வந்தது.

enrenrum16 said...

வருடத்தின் 365 நாட்களுக்கும் ஒரு பெயர் வைக்க உலகில் காரணங்களுக்கு பஞ்சமில்லை. அதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே ஒவ்வொரு தினமும் முழு பலன் பெறும். உதா: மே 31. சர்வதேச தினங்களை எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி அக்கா. (அடடா....என் பிறந்த நாளை நானே கொண்டாடவில்லை. ஆனால் உலகமே கொண்டாடுகிறதே :)))..மே 31 அல்ல...ஹி..ஹி...)

ஸ்ரீராம். said...

நீரிழிவு தினம் ஒருநாள், நீரிழிவு நோய் ஒழிப்புதினம் ஒருநாள்! வலைப்பதிவர்தினம் இல்லையா என்று கேட்க நினைத்தால் அதுவும் இருக்கிறது...ஏனென்ற காரணமும் நினைவுக்கு வருகிறது.. சில தினங்களைப் படித்தால் இதுக்குக் கூடவா என்றும் தோன்றுகிறது! இந்த தினங்களைக் குறித்துப் பதிவு போட்டாலே மாசம் இருபத்தஞ்சுப் பதிவு பழுதில்லாமப் பார்த்துடலாம்...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தினம் தினம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான தினப் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

புதிய வரவுகள்:
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
www.tvpmuslim.blogspot.com

ஜெய்லானி said...

இத்த்னை நாள் வந்து என்ன புண்ணியம் பயபுள்ளைங்க ஒரு லீவு விடமாட்டேங்கிறாங்க அவ்வ்வ் :-)))

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing