சிறிய வயதில் கடற்கரைக்கு செல்லும் பொழுது கரையில் குடு குடு வென்று வரிசைகட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு நிற ஆமைக்குட்டிகளைக்களைக்கண்டால் மனம் குதூகலமாகி விடும்.
உள்ளங்கைக்குள் அடங்கி விடும் சிறிய ஆமைக்குட்டிகளை கையால் தொட்டு பிடித்து விளையாட பயமாக இருக்கும்.இருப்பினும் ஒரு நாள் கூட வந்த சகாவிடம் பிடிக்க சொல்லி ஒரு பையில் போட்டு வீட்டிற்கு எடுத்து வந்து விட்டேன்.
எல்லோரும் கோழி வளர்க்கின்றார்கள்,குருவி வளர்கின்றார்கள்,முயல் வளர்கின்றார்கள்.நாம் வித்தியாசமாக ஆமை வளர்த்தால் என்ன என்ற ஒரு ஆர்வத்தில் குட்டித் தம்பிக்கு வாங்கிய இன்ஸ்டண்ட் மில்க் பவுடர் காலி டப்பாவை ஆமைக்கு வீடாக்கி அதனுள் பத்திரப்படுத்தி விட்டேன்.
இதனைக்கண்ட எங்கள் வீட்டிற்கு வரும் பாட்டி முறை வரும் ஒருவர்”ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள்.நீ ஆமையை வீட்டிற்கு கொண்டு வந்து இருக்காயே”அம்மாவின் காதில் விழுமாறு சப்தமாக கூறுவதைப்பார்த்து பாட்டியை எரித்து விடுவதைப்போல் ஒரு பார்வை பார்த்து விட்டு ஆமை வீட்டை பாட்டியின் கண்களில் படாமல் ஒரு ஓரமாக வைத்து விட்டேன்.
என்ன உணவு கொடுப்பது என்று தெரியவில்லை.அரிசி,கம்பு போன்றவற்றை போட்டாலும் ஆமை சாப்பிடுவதாக தெரியவில்லை.
மறுநாள் ஆமையை தகர டப்பாவுடன் காணவில்லை.வீட்டிற்கு வந்த தோட்டக்கார அம்மாவிடம் கொடுத்து கடற்கரையில் விட்டு விடும்படி அம்மா கொடுத்தனுப்பி விட்டார்கள்.அத்தோடு ஆமை வளர்க்கும் ஆசைக்கு சமாதி கட்டியாகி விட்டது.
நான் சிறிய வயதில் வளர்க்க ஆசைப்பட்ட ஆமையைப்பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.
ஆமை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய முட்டை இட்டு குஞ்சு பொரிக்கவல்ல ஊர்வன இனத்தைச்சார்ந்த ஒரு சாது விலங்காகும்.தனிமையை விரும்பும் உயிரினமாகும்.
உலகில் 300 வகையான ஆமை இனங்கள் உள்ளன.பெண் ஆமைகளுக்கு சிறிய அளவில் வாலும் ஆண் ஆமைக்கு பெரிய வால்களும் கொண்டிருக்கும்.
விதைகள், இலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள், மற்றும் சில பழங்கள் ,புற்பூண்டுகள் இலைதழைகள்,சிலவகைபூக்கள்,சிறியவகை பூச்சிவகைகளை உணவாக உட்கொள்கிறது.
கடலில் வாழும் பெண் ஆமைகள், கருத்தரித்ததும், கடற்கரையை நோக்கி கூட்டமாக பயணிக்கத் துவங்கும். கரையை அடைந்ததும் மண்ணில் பள்ளம் பறித்து முட்டைகளை இட்டுவிட்டு மணலால் மூடி வைத்துவிட்டு சென்றுவிடும். 90 முதல் 120 நாட்கள் வரைஇயற்கை வெப்பத்தால் முட்டைகளில் இருந்து குஞ்சுபொரிந்து வெளிப்படும்.
2 முதல் 200 முட்டைகளைக்கூட ஒரே சமயத்தில் கூட இடக்கூடிய வல்லமை படைத்தது ஆமையினம்.30 கிராம் முதல் 50 கிராம் வரை எடையுள்ள முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன.
உயிரினங்களில் ஆமைகளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. அதன் இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக அமைகிறது.சில ஆமைகள் 150 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. இதன் காரணமாக, சீனக் கலாசாரங்களில் இவை நீண்ட ஆயுளின் சின்னமாக விளங்குகின்றன.லெதர்பேக் (leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 550 கிலோ எடை வரை வளரும் தன்மைக்கொண்டது.
ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர்.அதனால்தான் குறைந்த வேக நடையை ஆமை நடை என்று கேலி செய்கின்றனர்.
மனிதர்களுக்கெல்லாம் இனப்பெருக்கம் முடிந்து ஓய்ந்து போகும் வயதில் தான் ஆமைக்கு இனப்பெருக்கமே ஆரம்பிகின்றது.ஆம்,45 வயதில்தான் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக மாறுகிறது. அதாவது, சராசரியாக 45 வயதில்தான் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பக்குவத்திற்கு வருகின்றன. அதற்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன.
தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நாகை மாவட்டம் கோடியக்கரை, பழையாறு, நாகை, விழுந்தமாவடி, தரங்கம்பாடி, பகுதிகளில், முட்டையிடுவதற்குத் தகுந்த தட்ப வெப்ப சூழல் மற்றும் அடர்ந்த மரங்கள் இருப்பதால், இப்பகுதிகளில் முட்டையிட, ஆமைகள் அதிகளவில் வருகின்றன.
உலகம் முழுதும் மே 23 ஆம் தேதி ஆமைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை உயிரினமான ஆமை இனங்கள் அழியும் நிலையில் செல்வதால் ஆமை இனத்தை காக்க வேண்டியது சமுதாயத்தின் அரசாங்கத்தின் கடமையாகும்.
டிஸ்கி:
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள்.இது எனக்கு நெடு நாள் புரியவில்லை.பாவம் அப்பாவி பிராணி வீட்டினுள் நுழைந்தால் என்ன கேடு என்று நினைப்பேன்.பிறகுதான் அறிந்து கொண்டேன்.ஆமை என்று அப்பாவி உயிரினமான ஆமையைக்குறிப்பிடவில்லை என்று.
ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?
ஆமை முயல் கதையை சிறியவயதில் படித்திருப்போம்.வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுவார்கள் என்ற கருத்துக்காக கூறுப்பட்ட கதையது.
கவிஞர் கண்ணதாசன் உள்ளத்தை ஆமையுடன் ஒப்பீடு செய்கிறார்.அதனையும் கொஞ்சம் கேட்டு ரசியுங்கள்.
அப்புறம் ஒன்று வழக்கம் போல் வரும் டவுட்டு.பருப்பு போட்டு செய்யும் வடையை ஆமை வடை என்கிறார்கள்.நான் சிறிய வயதில் ஆமைக்கு வடைபோட்டு பார்த்தேன் சாப்பிடவே இல்லை.வடையின் ஷேப்பும் ஆமை போல் இல்லை. கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ஏன் ஆமை வடை என்று பெயர் வந்தது என்று புரிய வில்லை?புரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
Tweet |
43 comments:
ஆமையை பற்றி மேலும் அறிந்துக்கொண்டேன்...மிக்க நன்றி உங்களுக்கு.எனக்கும் இந்த ஆமைவடையைப் பற்றி சந்தேகம் இருக்கு...
ஆமை ...அருமையான் பகிர்வு
ஆமை புகுந்த வீடு ...அருமையான விளக்கம்
ஆமை வடை ...இதைப்பற்றி எங்கோ படித்தேன் நினைவந்தால் மீண்டும் பின்னூட்டமிடுகிறேன் .
ஆஆஆஆ... மையில இவ்ளோ விஷயமிருக்கா ஸாதிகா அக்கா... ...இன்றுதான் பல தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்ன்ன்ன்.... உங்கள் சந்தேகத்தை... ஆமையின் குரு:) வந்து நிட்சயம் தீர்த்து வைப்பா என நம்புகிறேன்.
ஆமையின் நீண்ட ஆயுள், இதயம் துடிக்கும் வேகம் ஆகியவை 'பொற் ஆமை'யாக இருக்கிறது! மெது வடையைச் சாப்பிடும் வேகத்தில் ஆமை வடையைச் சாப்பிட முடியாது. பருப்பைக் கடித்து மெதுவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பதால்தான் அது ஆமை வடையோ! ஆமை புகுந்த வீடு விளக்கம் அருமை.
‘உல்லாசம்’ படத்தில் ஹீரோ விக்ரம் செல்லப் பிராணியாக ஆமை வளர்ப்பதாகக் காட்டியிருப்பார்கள். ஆமை என்னதான் சாப்பிடும் என்ற சந்தேகம் வெகுநாட்களாய் எனக்கு. இப்போது தீர்ந்தது. ஆனால் இந்த ‘ஆமைவடை’ பெயர்க்காரணம் ஸாதிகாவைப் போல எனக்கும் புரியாத விடயம்தான். யாராவது தெளிவு தருகிறார்களா என்று பார்க்கிறேன்.
அதீஸ்ஸ்... ;))))))))))
//ஆமை வடை// !! இதுகூட தெரியலைன்னா என்ன ப்ளாகர் நீங்க!! ;))) ஒரு போஸ்ட்டை திறக்கறோம்... படிக்கறோம்... கமண்ட் போடலாம்னு வந்தா... நாமதான் முதலாவது கமண்ட்னு தெரிஞ்சதும்... மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். மனசு 'ஆ!! my வடை'ன்னு குதிக்கும். உடனே சொல்ல வந்ததை மறந்துட்டு 'வடை'ன்னு கமண்ட் போட்டுட்டு போய்ருவோம். அதான் ஆமைவடை. ;)))))))
ம்... மெதுவடைன்னு ஒண்ணு இருக்குல்ல! அப்புடி இல்லாம இது கல்லு போல இருக்கிறதால... அல்லது ஓடுன்னு ஒண்ணு இருக்குல்ல அதனால ஆமைவடைன்னு ஆகி இருக்கலாம்.
ஆமையோட ஓடு போல தோற்றத்துல இருக்கறதால ஆமை வடைன்னு பேர் வந்திருக்குமோன்னு ஒரு டவுட்டு! சரியாத் தெரியலைக்கா. ஆமை இனங்களில் 300 இருக்கா? இதுபோல பல புது விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி! ஆமைகள்ல கூட ஆண் ஆமைகள்தான் நீளமா வாலை வெச்சுட்டு இருக்கா? பெண்கள் எல்லா இனத்துலயும் பாவம்தான் போல!
டாஷ்போர்டில் ஆமை தெரியவும் ஓடிவந்தேன் ஸாதிகா. ;)) படித்து அறிந்ததைப் பகிர்ந்து இருக்கிறீங்க. அனைத்துத் தகவல்களுமே... இனத்துக்கு இனம் வேறுபடும்.
//தனிமை விரும்பி// செல்லப் பிராணி என்று ஆனதன்பின் சில எம் அருகாமையையே அதிகம் விரும்பும். நான் வைத்திருந்த 'குட்டி' எப்போ பாடசாலையால் வீடு திரும்புவேன் என்று 'கேட்' சத்தத்திற்குக் காத்திருந்து ஓடிவரும். இங்கு மகன் வளர்ப்பவர்கள் கூட எங்களைக் கண்டால் உற்சாகமாகிவிடுகிறார்கள்.
எனக்குப் பிடித்ததை இடுகையிட்ட ஸாதிகாவுக்கு ஒரு பெரிய தாங்ஸ். ;)
முதலாவதாக வந்து கருத்திட்ட மேனகாவுக்கு நன்றிகள்!
ஆமை வடை ...இதைப்பற்றி எங்கோ படித்தேன் நினைவந்தால் மீண்டும் பின்னூட்டமிடுகிறேன் .//சிக்கிரமாக ஞாபகத்துக்கு வந்து சீக்கிரமாக சொல்ல வேண்டும் ஏஞ்சலின்:)
//. உங்கள் சந்தேகத்தை... ஆமையின் குரு:) வந்து நிட்சயம் தீர்த்து வைப்பா என நம்புகிறேன்.//ஆமையின் குரு யாரென புரியாமல் கொஞ்ச நேரம் தவித்தேன்.குரு சீக்கிரமே வண்டு விட்டார்.
.இன்றுதான் பல தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்ன்ன்ன்.// மிக்க மகிழ்ச்சி அதிரா.பூனைக்காக ஒரு பிளாக் வைத்திருப்பவர் நீங்க.இனி ஆமைக்காக யாரவாது பிளாக் எழுதுவாங்களா பூஸ்?:)
ஆமையின் நீண்ட ஆயுள், இதயம் துடிக்கும் வேகம் ஆகியவை 'பொற் ஆமை'யாக இருக்கிறது!//ஸ்ரீராம் சார் ஆமை போல் 150 வருஷம் வாழ்வதா..?ஐயோ இந்த கேமுக்கு நான் வரல...கருத்துக்கு மிக்க நன்றி!
ஆமை என்னதான் சாப்பிடும் என்ற சந்தேகம் வெகுநாட்களாய் எனக்கு. இப்போது தீர்ந்தது. //இந்த பதிவின் மூலம் உங்களின் சிறு சந்தேகத்திற்கு நிவாரணம் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி கணேஷண்ணா.
ம்... மெதுவடைன்னு ஒண்ணு இருக்குல்ல! அப்புடி இல்லாம இது கல்லு போல இருக்கிறதால... அல்லது ஓடுன்னு ஒண்ணு இருக்குல்ல அதனால ஆமைவடைன்னு ஆகி இருக்கலாம்.///வந்துட்டாரய்யா..ஆமையின் குரு என் சந்தேகத்தை தீர்க்க.ரொம்ப தேங்க்ஸ் இமா.
இமா.அதென்ன ஆமையின் மீது அப்படி ஒரு கிறக்கம்?நான் சின்ன வயதில் வளர்க்க ஆசைப்பட்டது.இப்ப அதை நீங்கள் செய்கின்றீர்கள்.வித்தியாசமான இமாதான் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள்.
ஆமையோட ஓடு போல தோற்றத்துல இருக்கறதால ஆமை வடைன்னு பேர் வந்திருக்குமோன்னு ஒரு டவுட்டு! // தங்கச்சி நிரூவின் டவுட்டு என் டவுட்டை கிளியர் பண்ணிடுச்சி.
ஆண் ஆமைகள்தான் நீளமா வாலை வெச்சுட்டு இருக்கா? பெண்கள் எல்லா இனத்துலயும் பாவம்தான் போல!//
நிரூ ஆண் ஆமைக்கு வால் தானே நீளம் என்று சொன்னேன்.கொம்பு என்று சொல்ல வில்லையே.:)
கொம்போ வாலோ சிறியதாகிப்போனால் பாவமா?
கருத்துக்கு நன்றி நிரூ.
எனக்குப் பிடித்ததை இடுகையிட்ட ஸாதிகாவுக்கு ஒரு பெரிய தாங்ஸ். ;)//இமாவுக்கு ஆமை பிடிக்கும் என்று இப்பதான் தெரிந்து கொண்டேன்.ஆமை முட்டை உடலுக்கு நல்லதாம்.செவி வழி கேள்வி.
அ கோ மு சாப்பிடும் நம்ம் பூஸார் அ ஆ மு சாப்பிட்டு பார்க்க சொல்லவேண்டும்.:)
ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உருப்படாது.சரிதானே?//
;நல்ல விளக்கம் பாராட்டுக்கள்!
புலவர் சா இராமாநுசம்
கருத்துக்கும் பராட்டுக்கும் மிக்க நன்றி புலவரய்யா
/அப்பாவி உயிரினமான ஆமையைக்குறிப்பிடவில்லை என்று./
நானும் பலநாள் கழித்தே இது குறித்த சரியான அர்த்தத்தை அறிய வந்தேன்.
தகவல்களுடன் பகிர்வு அருமை.
பருப்பு வடைக்கு ஆமை வடை என்றுதான் எங்கள் பக்கத்திலும் சொல்லுவோம். யாரேனும் விடை தர நானும் காத்திருக்கிறேன்.
ஆமையைப் பற்றி
நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் சகோ
ஆமைக் கதை பழசு என்றாலும் சகோவின் வரியில் புதுமை இருக்கு
...மை இதை ரெம்ப அழகா சத்தியராஜ் மாதிரி சொன்னீர்கள் சகோ
கண்ணதாசன் பாட்டு வாழ்கையின் உண்மையான தத்துவம்
பாராட்டப்படவேண்டிய பதிவு பாராட்டுக்கள் சகோ
ஆமை போன்ற பொறுமையான அருமையான தகவல்கள்.
பொறாமைப்பட வைக்கிறது.
பாராட்டுக்கள்.
// கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ஏன் ஆமை வடை என்று பெயர் வந்தது //
இதுகூட தெரியாதா? யாருடைய வடையையாவது நீங்கள் திடீரென்று அவர்கள் ப்ளேட்டில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துப் பாருங்களேன். அப்ப அவங்க இம்மீடியட்டா, 'ஆ..(இது) மை' வடை ..ன்னு சொல்வாங்க. ஹி..ஹி.. அப்படி தான் அந்த பெயர் வந்தது ஸாதிகாக்கா. அவ்வ்வ்வ் .. :))))))))
கருத்துரைத்த ராமலக்ஷ்மிக்கு நன்றி
ஆமையைப் பற்றி
நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் சகோ
ஆமைக் கதை பழசு என்றாலும் சகோவின் வரியில் புதுமை இருக்கு///
மிக்க மகிழ்ச்சி செய்தாலி.நன்றி
பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்
இதுகூட தெரியாதா? யாருடைய வடையையாவது நீங்கள் திடீரென்று அவர்கள் ப்ளேட்டில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துப் பாருங்களேன். அப்ப அவங்க இம்மீடியட்டா, 'ஆ..(இது) மை' வடை ..ன்னு சொல்வாங்க. ஹி..ஹி.. அப்படி தான் அந்த பெயர் வந்தது //
யப்பா..யப்பப்பா...சவுதியில் எந்த ஹோட்டலில் ரும் போட்டு யோசிகறீங்க அப்துல்காதர்???
இமா said...
அதீஸ்ஸ்... ;))))))))))
//ஆமை வடை// !! இதுகூட தெரியலைன்னா என்ன ப்ளாகர் நீங்க!! ;))) ஒரு போஸ்ட்டை திறக்கறோம்... படிக்கறோம்... கமண்ட் போடலாம்னு வந்தா... நாமதான் முதலாவது கமண்ட்னு தெரிஞ்சதும்... மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். மனசு 'ஆ!! my வடை'ன்னு குதிக்கும். உடனே சொல்ல வந்ததை மறந்துட்டு 'வடை'ன்னு கமண்ட் போட்டுட்டு போய்ருவோம். அதான் ஆமைவடை. ;)))))))////
அவ்வ்வ்வ் ப்ஃபன்ராஸ்ரிக், பஃபூலஸ்,.... .. என் கிட்னியைக் காணல்லியே என யோசித்தேன்.. அது எங்கயும் போகல்ல நியூலதான் இருக்கு....:)))))..
றீச்சர் வாழக.!!!.. மாணவர் வாழ்க!!!!
பாட்ஷாட பஞ்சவர்ணக்கிளி சே..சே பூ தெரியுதே.. ஒரு ஹாய் சொல்லிடலாம்..
ஹாய்!!!!!
//சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துப் பாருங்களேன். அப்ப அவங்க இம்மீடியட்டா, 'ஆ..(இது) மை' வடை ..ன்னு சொல்வாங்க. //
அக்கா, இதுக்கு ரூம் போட்டெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.. அவரு அப்படி எடுத்திருப்பாரு, வடைகாரர் அப்படிச் சத்தம் போட்டிருப்பார்.. இதான் விஷயம்!! :-)))))
//45 வயதில்தான் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் //
//இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக//
//நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர்//
அப்போ, சுறுசுறுப்பை விட்டுட்டா, நீண்ட ஆயுள் கிடைக்கும் - கரெக்டா?
ஆமா, அரசியல்வாதிகளின் நீண்ட ஆயுளின் ரகசியமும் அதுதானோ??
//மே 23 ஆம் தேதி ஆமைகள் பாதுகாப்பு தினமாக//
விட்டா, மனுசனையும், அவன் தின்னும் ஆடு-மாடு-கோழி தவிர எல்லாத்துக்கும் ஒரு தினம் வந்துடும்போல!! :-))))))
ஆமையைப் பற்றிய பகிர்வு மிக மிக சுவாரசியம்,கடைசியில் இப்படி ஒரு கேள்வியை கேட்டு அவ்வ்வ்....அதற்கு பதிலும் படித்து அம்மாடி! எப்படியெல்லாம் யோசித்து கேள்வி கேட்கிறாங்க,பதில் சொல்றாங்க..
//ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,
முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?//
மிகச் சரி.சூப்பர்.
//அதென்ன ஆமையின் மீது அப்படி ஒரு கிறக்கம்?// எனக்கு நினைவு தெரியாத காலத்திலிருந்தே வந்த பந்தம் அது. ;)
அறுசுவையில் அதிரா ஆரம்பித்த செல்லப்பிராணிகள் இழையில் நிறையப் பேசி இருக்கிறேன் இதுபற்றி. முடிந்தால் பிறகு தொடர்பு எடுத்துக் கொடுக்கிறேன். என் வலைப்பூவிலும் 'செல்லமே' என்ற தலைப்பின் கீழ் சில இடுகைகள் இருக்கின்றன.
ஸாதிகாவுக்காக இந்த இரண்டு ஆல்பங்களும்...
https://picasaweb.google.com/106111488443617015705/OurPetTurtleTortoises
https://picasaweb.google.com/106111488443617015705/AhMy
//வடையின் ஷேப்பும் ஆமை போல் இல்லை//
அடுத்த தடவை ஆமைவடை செஞ்சு டேபிள் மேல் வெச்சுக்கிட்டு அரைமணி நேரத்துக்காவது கண்ணை இமைக்காம நல்லா உத்த்த்த்த்துப்பாருங்க.. அதான், அதேதான்,... ஆமை கால்களை உள்ளே இழுத்துக்கிட்டப்புறம் இருக்கற மொத்தையான ஷேப்புல வடை இருக்குல்ல.. அதான் அதுக்கு ஆமைவடைன்னு பேரு வந்துச்சு. :-))
ஆமையில் இவ்வளவு இருக்கா? ஆமையை பார்ப்பதோடு சரி. அதை ரசிப்பது அல்லது அதை வளர்க்க வேண்டும் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை.
ஹையோ! எங்கட இமாவுக்கு ஏற்ற ஆள் நீங்க தான்.
ஆமை வளர்க்கணும்னு ஆசைப்பட்டீங்களா?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
பல விஷயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி! ஆமையின் குரு:) சொன்னா ஆமா,ஆமான்னு கேட்டுக்க வேண்டியதுதான்! ;) உண்மையில் அறுசுவையில் "செல்லப் பிராணிகள் " பார்த்துத்தான் ஆமை வீட்டில் வளர்ப்பாங்க என்றே தெரிந்துகிட்டேன். அங்கே ஆரம்பித்த நட்பூவட்டம் இன்று ஸ்லோ & ஸ்டெடியா வளர்ந்துட்டு இருக்குது. :))))
ஸ்லோ அன்ட் ஸ்டெடி வின்ஸ் த ரேஸ்- கதைய சொல்லிருக்கலாமே ஸாதிகாக்கா?! :))))))
பிரித்தானியாவில் இருக்கும் பூஸின் கிட்னி அப்பப்ப பிளைட் பிடித்து நியூஸிக்கு போய்டுமா பூஸ் ஹா ஹா..வருகைக்கு நன்றி பூஸ்.
அக்கா, இதுக்கு ரூம் போட்டெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.. அவரு அப்படி எடுத்திருப்பாரு, வடைகாரர் அப்படிச் சத்தம் போட்டிருப்பார்.. இதான் விஷயம்!! :-)))))//அட..இப்படியும் விஷயம் இருக்கா?அப்துல்காதர் எங்கே வடையை எடுத்துருப்பா?சவுதியில் ரோட்டோரத்தில் உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டிருக்கும் அரபிபாட்டியின் வடைகடையிலா ஹுசைனம்மா?
//அப்போ, சுறுசுறுப்பை விட்டுட்டா, நீண்ட ஆயுள் கிடைக்கும் - கரெக்டா? // டிரைப்பண்ணிப்பார்க்கறீங்களா ஹுசைனம்மா.நம்ம இளைய தலைமுறையினருக்கு பயன் படும் ஹி ஹி..
இமா உங்களின் இரண்டு ஆல்பங்களும் பார்த்தேன்.ஆமையின் மீதுள்ள உங்கள் பற்று பிரமிக்க வைக்கின்றது.இப்ப நியூஸி வீட்டில் ஆமை உண்டோ?
ஆமைவடை செஞ்சு டேபிள் மேல் வெச்சுக்கிட்டு அரைமணி நேரத்துக்காவது கண்ணை இமைக்காம நல்லா உத்த்த்த்த்துப்பாருங்க.. அதான், அதேதான்,...//ஹி ஹி அமைதிச்சாரல்,ஆமையை மட்டுமல்ல யானையை நினைத்துக்கொண்டு நீங்கள் சொன்ன பிரகாரம் வடை உற்றுப்பார்த்தால் யானை மாதிரிக்கூட தெரியும்..ஹி..ஹி..
ஹையோ! எங்கட இமாவுக்கு ஏற்ற ஆள் நீங்க தான்.//இந்தப்பதிவு போட்ட பிற்பாடுதான் இமாவும் ஆமையும் பற்றி தெரியும் வான்ஸ்.வரவுக்கு நன்றி.
ஸ்லோ அன்ட் ஸ்டெடி வின்ஸ் த ரேஸ்- கதைய சொல்லிருக்கலாமே ஸாதிகாக்கா?! :))))))//அது எல்லோருக்கும் தெரிந்த கதைதானே மகி:)
சகோதரி! எங்கெ தங்களைக் காணோமே என் பக்கம்? ஆமை பற்றிப் பல அறிந்தேன் நன்றி. நல்ல ஒரு இடுகை. தங்களின் ஆசையையும் அறிய முடிந்தது. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஆமை வேகத்தில் வந்ததற்கு மன்னியுங்க சாதிகா :)))))))
அந்த வடை ஓடு போல மேற்பக்கம் தடிமனாக இருப்பதால் ஆமை வடை என்று பெயராம் ஸாதிகா .
Post a Comment