March 13, 2012

தக்‌ஷின் சித்ரா - 2

தக்ஷின் சித்ராவில் பழங்கால வித விதமான

இல்லங்களைப்பார்த்தோம்.இப்பொழுது அந்த இல்லங்களுக்குள்

நுழைந்து

அங்கிருக்கும் பொருட்களைப்பார்ப்போமா.?


ஐயராத்து மாமியும் அவரது பொண்ணும் தாயகட்டம் விளையாடுகின்றார்கள்.

பழங்காலத்து தூணுக்கு பின்னால் பானை முறம்,கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளும் பனைஓலையிலான பட்டை(வாளிக்கு முன்னர் உபயோகத்தில் இருந்தது.)தண்ணீர் சேகரித்து வைக்கும் குடுவை,ஓலையிலான பெட்டிகள் இத்யாதி..


மியூஸிக் உபகரணங்கள்
அந்தக்காலத்தில் மச்சி வீட்டிற்கு(மாடி)செல்லும் மரத்தில் ஆன ஏணி.


ஐயராத்து அம்பிக்கு சிரத்தையாக சொல்லிக்கொடுக்கும் குரு.பணிவாய் கற்றுக்கொள்ளும் சிஷ்யன்
தேக்கு மரத்தில் ஆன் பெட்டகம்.
பழங்கால அலமாரி
விலையுயர்ந்த பொருட்கள் வைத்துக்கொள்ளும் குட்டியூண்டு அலமாரி.
துளசிமாடத்திற்கு கீழே கோலம் போடும் மடிசார்மாமி.
பித்தளை செம்பினால் ஆன பாத்திரங்கள்.
கலை உணர்வு மிக்க கைவினைப்பொருட்கள்.
விஷேஷங்களுக்கு மூன்று கல் அடுப்பில் வைத்து விறகு எரித்து சமைக்கும் பித்தளை அண்டா.
குழந்தைகளை தூங்கவைக்க வித வித மரதொட்டில்கள் துணித்தூளி.
பனை ஓலையினால் முடையப்பட்ட வித விதமான ஓலை உபகரணங்கள்.



குயவர் வீட்டில் குவிந்து கிடக்கும் மினியேச்சர் பாத்திரங்கள்.

நெசவாளர் வீட்டில் கைராட்டிணம்.
முற்றத்தில் துளசி மாடம்.மினு மினுக்கும் உச்சி வெயில் ஜொலி ஜொலிக்க.
தறியில் நெசவாளர் பட்டு நெய்கின்றார்.பத்தாயிரம் விலை மதிப்பிலான பட்டை நெய்ய ஆறு நாட்களுக்கும் மேல் வேலை செய்ய வேண்டுமாம்.ஏழை நெசவாளிகளின் தொழில் நசிந்து வருவது வேதனைக்குறிய விஷயம்.

நெசவாளர் வீட்டுக்குள்ளேயே ஒற்றை மாட்டு பொட்டு வண்டி.


நெசவாளரும் அவரது சகதர்மினியும்.பின்னனியில் பாருங்கள்.மரத்திலான ஸ்டாண்டில் குடைக்கம்பு (வாக்கிங் ஸ்டிக்),டர்பன்.குடை,துணிவேலைபாட்டினால் ஆன பெரிய விசிறி.
கேரளா வீட்டு ஹால்.
கேரளா ஸ்டைல் மரத்தில் ஆன குள்ளப் படிக்கட்டு.
ஊறுகாய் ஜாடிகள்
சமையலுக்கு பயன் படும் வாசனைப்பொருட்கள்.



49 comments:

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

rompa arumaiya irukku

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

naan than first aaaaa

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு ஸாதிகா. 3ஆம் படத்திலிருப்பது போலான மரப்படி அமைப்பு நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டின் முற்றத்தில் உண்டு. அது போல் அந்த மரத்தொட்டிலும், பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வந்தது.

ஸாதிகா said...

வாங்க ஜலி.எப்பவும் கடைசி பெஞ்ச் ஜலி இப்ப பர்ஸ்ட் பெஞ்சா? குட்.கருத்துக்கு மிக்க நன்றி ஜலி.

ஸாதிகா said...

இந்தப்பதிவு ராமலக்ஷ்மியின் பழைய நினைவுகளை கிளறி வீட்டதில் மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி!

பால கணேஷ் said...

பார்த்துக் கொண்டு வரும்போதே நினைச்சன்... இந்த மாதிரி மரப்படி ஏறி வீட்டுக்குப் போற மாதிரியான வீட்ல நான் வாடகைக்கு குடி இருந்திருக்கோமேன்னு... இதே அனுபவம் ராமலக்ஷ்மி மேடத்துக்கும் இருந்ததைப் பார்த்ததுல சந்தோஷம், மத்த எல்லாப் படங்களும் அருமை. மிகமிக ரசிச்சேன்.

கோமதி அரசு said...

அன்பு ஸாதிகா, இன்று தான் ஊரிலிருந்து வந்தேன். கட்டுரைச்சரத்தில் என் பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு மிக மகிழ்ச்சி. நன்றி ஸாதிகா.

எவ்வளவு பதிவுகள் படித்து அவைகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்!

உற்சாகமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஸாதிகா.

மற்ற பதிவுகளையும் படிக்க ஆவல்.
வலைச்சர பொறுப்பை நன்கு செய்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

தக்‌ஷின சித்ரா பகிர்வுக்கு நன்றி.

தக்‌ஷின சித்ராவை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது உங்கள் பகிர்வு.

Menaga Sathia said...

படங்கள் எல்லாம் அருமைக்கா..அந்த பழைய பரப்படிக்கட்டை பார்த்ததும் எனக்கும் பழைய ஞாபகம் வந்துடுச்ச,ஆனா அந்த படிகட்டுல ஏறின பிற்கு கீழே இறங்கும் போது பயப்படுவேன்,ஒரே கத்து தான்.அதனாலேயே அதில் ஏறமாட்டேன்.

Asiya Omar said...

மிக நல்ல பகிர்வு ஸாதிகா. புகைப்படத்தில் பகிர்ந்த பல பொருட்கள் இன்னமும் எங்கள் ஊரில் புழக்கத்தில் உள்ளன.வருங்கால மற்றும் இந்தக் கால ஜெனரேஷனுக்கு எல்லாம் பார்க்கும் பொழுது புதுமையாய் இருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துப்படங்களும் தங்கள் விளக்கங்களும் மிகவும் அருமை.

இதில் காட்டியுள்ள 90% பொருட்களை நானும் என் தாயாரும் கையாண்டு இருக்கிறோம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

Radha rani said...

ஸாதிகா..பாரம்பரியத்தை பறை சாற்றும் சின்னங்களாக அருமையான படங்கள்.இப்பொழுதும் பழமையின் சின்னங்களாக இவற்றில் சில எங்கள் ஊரில் இருக்கின்றன..

குறையொன்றுமில்லை. said...

ஓல்ட் இஸ் கோல்ட் என்பது வெரும் வாய் வார்த்தைக்ககாக சொன்னதில்லே.என்பது படங்களைப்பார்த்தாலே புரியுது நம்மில் பெரும்பாலானவர்கள் இந்தப்பொருட்களை உபயோகப்படுத்தியும் இருக்கோம்

Mahi said...

நல்ல பகிர்வு..அந்த மரப்படிக்கட்டுகள் எங்க பக்கத்துவீட்டில் இருந்தது மிகவும் லேசாக நினைவிருக்குது. இப்போ எல்லாமே மாறிப்போச்சே...இதையெல்லாம் இப்படி நினைவுப்பொருட்களாக பாதுகாத்து வைத்துப் பார்த்துக்கவேண்டியதுதான்.

kowsy said...

அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய அருமையான எமது பாரம்பரியப்பொருட்கள் இவற்றை எமது பார்வைக்கு வைத்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகா

Vijiskitchencreations said...

Nice with pictures and details too. Some of the things I also seen in kerala( my paati) s house. Very nice.

vanathy said...

super o super. Very nice. Thanks for sharing.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு ஸாதிகா.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அடடா சூப்பர், ஒரு மியூசியம் பார்த்ததுபோல இருக்கு.

படத்திலிருக்கும் அதே தொட்டில்.. எந்த வித்தியாசமுமே இல்லை, அதைத்தான் அண்ணன் பிறந்தபோது சொல்லிச் செய்வித்தெடுத்ததாம்.. பின்பு எனக்கும் அதையே பாவித்தார்கள்... 90 வரை ஊரில் இருந்தது... பின்பு உடைந்து போயிட்டுது.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்ரி கணேஷண்ணா.

//இந்த மாதிரி மரப்படி ஏறி வீட்டுக்குப் போற மாதிரியான வீட்ல நான் வாடகைக்கு குடி இருந்திருக்கோமேன்னு//

ஊரில் எங்கள் பாட்டி வீடும் இப்படித்தான் மரபடிக்கட்டுகளுடன்.இன்னும் இடிக்கப்படாமல் பூட்டியே வைத்திருக்கின்றனர்.ஒரு நாள் அங்கு சென்று புகைப்படஙகள் எடுத்து பகிர வேண்டும்.

ஸாதிகா said...

வலைச்சரம் பதித்து கருத்து சொன்னமைக்கு நன்றி கோமதி அரசு.கண்டிப்பாக போய் பாருங்கள்.தக்சின் சித்ரா.நாமெல்லாம் அவசியம் போய் பார்த்து வியந்து சிலாகிக்கும் காட்சியகம் அது.நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

வலைச்சரம் பதித்து கருத்து சொன்னமைக்கு நன்றி கோமதி அரசு.கண்டிப்பாக போய் பாருங்கள்.தக்சின் சித்ரா.நாமெல்லாம் அவசியம் போய் பார்த்து வியந்து சிலாகிக்கும் காட்சியகம் அது.நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

சில மரப்படிகள்தான் ஏறுவதற்கு பயமாக இருக்கும்.சில பயம் இல்லாமல் உபயோகிக்கலாம் மேனகா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.என்னைப்பொறுத்தவரை புழக்கத்தில் இருந்து அரிதாகிப்போனவைகள் தான் அவை.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.நான் கூட சிலவற்றினை பயன்படுத்திப்பார்த்திருக்கிறேன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி லக்‌ஷ்மிம்மா.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராதா ராணி.

ஸாதிகா said...

இதையெல்லாம் இப்படி நினைவுப்பொருட்களாக பாதுகாத்து வைத்துப் பார்த்துக்கவேண்டியதுதான்.//கண்டிப்பாக மகி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சந்திரகெளரி,

ஸாதிகா said...

ம்ம்..விஜி எங்க பாட்டி வீட்டிலும்தான்.கருத்துக்கு மிக்க நன்றி .

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வானதி.

ஸாதிகா said...

மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

ஸாதிகா said...

இப்பொழுது எத்தனை விதமாக லைட்வெய்ட்டாக தொட்டில்கள் வருகின்றன.சமீபத்தில் ஒரு பெரிய பேபி ஷாப்புக்கு போனேன்.அங்கிருந்த அழகான தொட்டிலின் விலையைப்பார்த்து அசந்து போய் விட்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி அதிரா.

ராஜி said...

படங்களும் அவற்றை பகிர்ந்த விதமும் அருமை. பகிர்வுக்கு நன்றி தோழி

அந்நியன் 2 said...

அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த சகோ சாதிக்கா அவர்களுக்கு ஸலாம் உரித்தாகுக.

நான் சில மாதங்களாக வலை பூவில் வலம் வருவது அரிதாகிவிட்டது ஆகையால் உங்களின் அறிமுகம் என் கண்களுக்கு புலப் படவில்லை மன்னிக்கவும்.

என்னை அறிமுக படுத்தியமைக்கு நன்றிக்கா

Anonymous said...

இத்தனை பொருட்களிலும் எங்கம்மா வைத்திருந்த ஊறுகாய் ஜாடி மட்டும். அடையாளம் காண முடிந்தது. இப்படி 3-4 இருந்தது. ஊறுகாயும் அருமையாகப் போடுவார். நல்ல படங்கள். பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

விச்சு said...

நல்ல தொகுப்பு. முதல் பதிவும் அதன் தொடர்ச்சியான இரண்டாவது பதிவும் படங்கள் கதை சொல்கின்றன.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராஜி.

ஸாதிகா said...

அலைக்கும் சலாம் ஐயூப்.உங்கள் வலையுக அதிரடி பயணத்தில் ஏனிந்த தடங்கள்.தொய்வில்லாது பயணம் தொடர வாழ்த்துக்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு அக்கா. இன்று தான் பார்த்தேன் வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தி இருக்கீஙக ரொம்ப நன்றி அக்கா ,தொடர்ந்து குறிப்பு தருவதற்கு உத்வேகமாக உள்ளது, கூடிய விரைவில் போட முயற்சி செய்கிறேன்.

Avainayagan said...

அழகான அருமையான தொகுப்பு-- பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

கண்கலுக்கு நிறைவான அருமையான தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..

Yaathoramani.blogspot.com said...

ஏதோ கனவு உலகுக்குள் சென்று வந்த களிப்பு
படங்களும் விளக்கமும் மிக மிக அருமை
தாங்கள் பதிவுக்கு எடுத்துக் கொண்டுள்ள
அதீத சிரமத்திற்கு சிரம் தாழ்ந்த நன்றி

ஸாதிகா said...

சாருஸ்ரீராஜ் மிக்க நன்றி!//தொடர்ந்து குறிப்பு தருவதற்கு உத்வேகமாக உள்ளது, கூடிய விரைவில் போட முயற்சி செய்கிறேன்// மிகவு மகிழ்வைத்தந்த வரிகள்.அவசியம் விரைவில் பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

மிக்க நன்றி வியபதி.

ஸாதிகா said...

மிக்க நன்றி இராஜஇராஜேஷ்வரி.

ஸாதிகா said...

தாமதமாக வந்தாலும் ஞாபகமாக வந்து தொடர்ந்து கருத்திடும் ரமணிசாருக்கு நன்றிகள்.

அன்புடன் மலிக்கா said...

வாங்க ஜலி.எப்பவும் கடைசி பெஞ்ச் ஜலி இப்ப பர்ஸ்ட் பெஞ்சா?//

ஹி ஹி இப்பவும் அப்படித்தான் அக்கா..

படங்கள் வெகு ஜோர்..அருமையாக இருக்குக்கா ..

சாந்தி மாரியப்பன் said...

ஒரு அருங்காட்சியகத்தையே கண்முன்னாடி கொண்டாந்து நிறுத்திட்டீங்க.

மச்சுக்குப்போகும் அந்த மரப்படி அமைப்பு இன்னிக்கும் எங்க ஆச்சி வீட்ல இருக்கு. வீட்டுக்குப் பின்னாடி இருந்த கெணத்துல பட்டையை உபயோகிச்சு நானும் சின்னக்கைகளால் நீர் இறைச்சிருக்கேன். கால் வாசி பட்டையில் வரும், மீதியை கெணத்துக்கே திருப்பிக் கொடுத்துருவேன் :-)