மொடமொடப்பாக கஞ்சி போட்டு அழகாக பின் பண்ணி நேர்த்தியாக கட்டப்பட்ட நெகமம் காட்டன் சேலை.அடிக்கடி பியுட்டி பார்லர் போவதை பறைசாற்றும் வில்லாக வளைந்து நெளிந்த தீட்டப்பட்ட புருவங்கள் .சற்று சுமாரான களை என்றாலும் அவ்வப்பொழுது பேசியலும் பிளீசிங்கும் செய்த காரணத்தினால் செயற்கை களையை உண்டாக்கிய முகத்தோற்றம்.கண்களில் காஜல்,நகங்களில் க்யூடெக்ஸ்,தோளில் ஹாண்ட்பேக் ,கையில் மொபைல் சகிதம் பார்த்தபொழுது எதோ ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றாள் என்று நினைத்து விடாதீர்கள்.வீட்டு வேலைக்கு செல்பவள்தான் அப்படி ஒரு தோற்றம்.
சேரிப்பகுதியில் பத்துக்கு பத்து அளவிலான சிறிய கடைகளில் பியூட்டி பார்லர் போர்ட் தொங்கும் பொழுதும்,ஆங்காங்கே சிறிய அளவில் பெண்களுக்கான ஜிம்மைக்காணும் பொழுதும் எனக்கேற்பட்ட ஆச்சரியம் கலந்த வினாவுக்கு அந்த பெண்ணைக்கண்ட பொழுது விடை கிடைத்தது.
கணவர் கூலி வேலைக்கு சென்று தினமும் 400 - 500 சம்பாதித்தாலும் ஏகபோகமாக வாழ்வதற்கு கணவன் சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற காரணத்தினால் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு வெட்டியாக வீட்டில் இருந்து சீரியல் பார்த்துக்கொண்டிருப்பதை விட இப்படி வேலைக்கு வந்து ஒரே மணி நேரத்தில் 1000 - 1500 ரூபாய் சம்பாதிப்பதில் இப்பொழுது அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.வேலை பார்க்கும் வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருப்பது அவரவர்கள் திறமையைப்பொறுத்தது.
இழுத்துக்கட்டிய கண்டாங்கிச்சேலை,தூக்கிய கட்டிய கொண்டை,மஞ்சள் தேய்த்த முகம்,அப்பாவியான முகபாவம்,”இன்னா..வக்கீலம்மா..எதுக்கு கஷ்டப்படுறே.போட்டு வை.நான் வந்து செய்றேன்.உடம்புக்கு படுத்தினால் தேமேன்னு வேலையைப்பார்க்காமல் கொஞ்சம் ரெஸ்ட் எட்துக்கோ.நான் நைட்க்கு வீட்டாண்டே வந்து மிச்ச மீதி வேலை அல்லாத்தையும் பார்த்துக்கறேன்”எஜமானிகள் உடம்புக்கு முடியாவிட்டால் பரிவாக தயவாக ஆறுதல் சொல்லும் முனியம்மாக்களும்,தாயம்மாக்களும் இருந்தாலும் இப்பொழுது இந்த ஹைடெக் சிங்காரிகள் பெருகி இல்லத்தரசிகளை மிரட்டிக்கொண்டிருக்கின்ரனர்.
பிரபல நகைக்கடையில் சேல்ஸ் கேர்ளாக மாதம் 8000 சம்பாதிக்கும் பெண் காலையில் 6 - 7 ஒரு வீட்டிலும் 7- 8 இன்னொரு வீட்டிலும் வீட்டு வேலைகள் பார்த்து மாதம் 2500 வரை சுலபமாக சம்பாதித்து விடுகின்றாள்.எட்டாயிரம் என்பது காலை பத்து மணியில் இருந்து இரவு 9 மணி வரை உழைத்தால்தான் கிடைக்கும்.ஆனால் இரண்டே மணி நேரத்தில் 2500 சம்பாதித்து விடுவது சுலபமாக உள்ளது.
இவ்வாறாக ஹைடெக் ஹவுஸ்மெயிட்கள் அதிகரிக்க அதிகரிக்க வேலையாட்களுக்கான டிமாண்டும் அதிகரித்து விடுகின்றது.இரண்டு படுக்கை அறை கொண்ட 800 சதுர அடி கொண்ட கணவன் மனைவி,இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு வீட்டை பெருக்கி துடைத்து,பாத்திரங்கள் தேய்த்து,துணிகள் அலச சுமார் 1000- 1200 ருபாய் வாங்குகின்றனர்.அறைகள் கூட ஒன்றும்,ஆட்கள் இன்னும் ஓரிருவர் அதிகமாக இருந்தாலோ இன்னும் ரேட் எகிறி விடும்.
புதியதாக வேலையாள் நியமிக்கும் பொழுது வீட்டம்மாக்களுக்கு பொறுமை அதிகமாகவே தேவை இருக்கின்றது.
“வீட்டை பார்க்கணும்”
சரி என்று அனுமதித்தால் உதட்டை உச்சுக்கொட்டி ”வீடு கொஞ்சம் பெரிசூஊஊ தான் ” என்பதோடு நின்று விடாது.
”வீட்டில் எத்தனை ஆட்கள் இருக்கின்றார்கள்? ,அடிக்கடி விருந்தினர்கள் வருவார்களா?அடிஷனல் வேலைகள் எல்லாம் சொல்லக்கூடாது.பக்கத்தில் உள்ள கடைக்கு கூட செல்ல மாட்டேன்,பாத்திரம் அதிகம் போடக்கூடாது,பெருக்கும் பொழுது ஆங்காங்கே இருக்கும் பொருட்களை நீங்கள் தான் எடுத்து வைக்க வேண்டும்,வாரத்திற்கு ஒரு நாள் வரமாட்டேன்.அவ்வப்பொழுது உடம்புக்கு முடியாவிட்டால எடுக்கும் லீவுக்கு சம்பளத்தை பிடிக்க கூடாது..இப்படி அவர்கள் போடும் கண்டிஷனுக்கு வீட்டம்மாக்கள் சற்றே மிரண்டு போனாலும் வேலைக்கு ஆள் வைத்தே ஆகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதால் எப்படிபட்டவர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் உடனடியாக வழங்கப்பட்டு விடுகின்றது.
பழைய வீடுகள்,டைல்ஸ் தரைப்போடப்படாத வீடுகள் பக்கம் இவர்கள் எட்டியும் பார்ப்பதில்லை.அப்படி எட்டிப்பார்த்தாலும் அதற்கு ரேட்டே தனி.கூட்டுக்குடும்பம் என்றால் சொல்லவே வேண்டாம்.”அந்த சேட்டம்மா வீடா?கச கச என்று ஆட்கள் ரொம்ப இருப்பாங்க.நமக்கு சரிப்பட்டு வராது.”இப்படி கமெண்டுகள் வரும்.
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டு வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்களா?அப்பொழுது பிடிக்கின்றது வீட்டம்மாக்களுக்கு ஏழரை.முதல் இரண்டு நாள் சொன்ன நேரத்திற்கு வந்தவள் அடுத்த நாள் ஒரு மணி நேரம் லேட்.வர மாட்டாள் போலும் என்று பாதி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைவாள்.மறுநாள் நேற்று லேட்டாகத்தானே வந்தாள் என்று பாத்திரத்தை போட்டு வைத்திருந்தால் வேலைக்கு வரவே இல்லை.கொடுத்து இருக்கும் செல்போனுக்கு அழைத்தால் ஒன்று ஸ்விட்ச் ஆஃப் அல்லது பிசி என்று கீறல் விழுந்த ரெகார்டாய் வெறுப்பேற்றும்.
பதினோரு மணிக்கு வந்தாலும் சூடாக பில்டர் காபி கலந்து கொடுத்தாக வேண்டும்.கலந்து வைத்த காபியை சூடு பண்ணி கொடுக்கக்கூடாது.இது எழுதப்படாத சட்டம்.இதில் சிலர் நான் அதிகமாக காபி டீ சாப்பிடுவதில்லை .பாலாக தந்து விடுங்கள் என்று கூறி வயிற்றில் கடுங்காப்பியை வார்ப்பார்கள்.
வார்த்த தோசையை வாயிலும் வைக்க மாட்டார்கள்.ரங்ஸ்களே பல தடவை அட்ஜஸ்ட் செய்து ஹாட்பாக்ஸ் திறந்து வார்த்துப்போட்ட தோசையை வாய் திறக்காமல் சாப்பிட்டாலும் இவர்களுக்கோ அவர்கள் கண் முன்னே தவாவைப்போட்டு சுடச்சுட வார்த்து கொடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் தலைவிதி.
தீபாவளி வந்தால் ஒருமாத சம்பளம் போனஸ்.பொங்கலுக்கும் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்.மற்றும் சிறு சிறு பண்டிகைகளுக்கு அவ்வப்பொழுது நூறு இருநூறுமாக கொடுக்காவிட்டால் முகம் ஒரு முழத்துக்கு தூக்கிப்போகும்.வீட்டில் விருந்தினர்கள் வந்துவிட்டால் அவர்களது துணிகளை கண்டிப்பாக தோய்க்க மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கண்டிஷன் போட்டு விட்டாலும் அவர்கள் போனதும் ஒரு தொகையை கேட்டு வாங்கிகொள்வதில் முனைப்பு காட்டுவார்கள்.ஏனென்றால் பாத்திரங்கள் சற்று அதிகமாகி விட்டனவாம்.
இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் டாலர் கேள்வி.
Tweet |
70 comments:
//இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் கேள்வி.
//
அப்பதானே எங்க வீட்டுல வேலைக்காரி இருக்கானு பெருமை பேச முடியும்
தவுசண்ட் மில்லியன் பகிர்வு. அருமை..
இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் டாலர் கேள்வி.//
வேலைக்கு போகிறவர்கள் , உடம்பு முடியாதவர்கள் என்னசெய்வார்கள்?
சகித்துதானே ஆக வேண்டும்.
நல்ல பதிவு. இன்றைய நிலைமை இதுதான்.
எனக்குப் புரியாத ஏரியா இது. வேலைக்கு ஆள் வைக்கும் பழக்கம் எங்கள் குடும்பத்தில் இல்லை. அதனால் நீங்க கேட்டிருக்கும் கேள்விதான் எனக்குள்ளும் எழுகிறது சிஸ்டர்!
இன்றைய நிலைமை இதுதான்...வாழ்த்துக்கள்...
பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவும் இந்த வேலையாட்களிடம் விட்டுச் செல்லும் பெற்றோர்களும் எனக்கு தெரிந்து என்னுடைய நண்பன் ஃபேமிலியும் செய்கிறது..இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ரெண்டு பேரும் வேலைக்கு போறோம் இன்னபிற என்றே அடுக்கிக்கொண்டே போகிறார்கள்..என்ன சொல்வதென்றே தெரியவில்லை..உண்மையை சொன்னால் இந்த மாதிரியான வேலையாட்களுக்கு ஏக டிமாண்ட்டாம்..நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..பதிவில் தெளிவும்படுத்தி விட்டீர்கள்..
சென்னை என்றில்லை தோழி,எல்லா ஊரிலும் இந்த பாடு தான்,ஆனால் உங்கள் பகிர்வு யோசிக்க வைத்தது,வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்தால் இந்த நிலையில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.அவரவர் சூழ்நிலைக்கு தகுந்தபடி இப்ப காலத்தை ஓட்டுகிறோம்.
எதோ ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றாள் என்று நினைத்து விடாதீர்கள்.வீட்டு வேலைக்கு செல்பவள்தான் அப்படி ஒரு தோற்றம்.///
அவ்வ்வ்வ்வ்வ்.. செய்யும் தொழிலே தெய்வம்:))
///புதியதாக வேலையாள் நியமிக்கும் பொழுது வீட்டம்மாக்களுக்கு பொறுமை அதிகமாகவே தேவை இருக்கின்றது.
“வீட்டை பார்க்கணும்”
சரி என்று அனுமதித்தால் உதட்டை உச்சுக்கொட்டி ”வீடு கொஞ்சம் பெரிசூஊஊ தான் ” என்பதோடு நின்று விடாது.
”வீட்டில் எத்தனை ஆட்கள் இருக்கின்றார்கள்? ,அடிக்கடி விருந்தினர்கள் வருவார்களா?அடிஷனல் வேலைகள் எல்லாம் சொல்லக்கூடாது.பக்கத்தில் உள்ள கடைக்கு கூட செல்ல மாட்டேன்,பாத்திரம் அதிகம் போடக்கூடாது,பெருக்கும் பொழுது ஆங்காங்கே இருக்கும் பொருட்களை நீங்கள் தான் எடுத்து வைக்க வேண்டும்,வாரத்திற்கு ஒரு நாள் வரமாட்டேன்.அவ்வப்பொழுது உடம்புக்கு முடியாவிட்டால எடுக்கும் லீவுக்கு சம்பளத்தை பிடிக்க கூடாது..///
எனக்கு மயக்கம் வராத குறை:)). அதுசரி ஏன் வேலைக்கு ஆள் வைக்காமல் வீட்டைப் பராமரிக்கவே முடியாதோ ஒரு வேலைக்குப் போகாமல் இருக்கும் பெண்ணால்?
வெளிநாட்டில் வசதிகள் அதிகம்தான், இருப்பினும் வேலைக்கும்போய், சமையலையும் பார்த்து, வீட்டையும் கவனித்து, வெளி ஷொப்பிங்கும் செய்கிறோம்தானே.... அப்போ ஏன் நம் நாட்டில் மட்டும் முடியவில்லை? இதை நாம் எப்போதும் மனதில் நினைப்பேன்.
//கூட்டுக்குடும்பம் என்றால் சொல்லவே வேண்டாம்.//
கூட்டுக் குடும்பம் எனில் வீட்டிலிருப்போரே ரைம் ரேபிள் போட்டு செய்திடலாமே... தப்பாக நினைக்கக்கூடாது எனக்கு இது புரிவதில்லை, வேலைக்கு ஆள் வைப்பது என்பது பாஷனாகிவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.
//பதினோரு மணிக்கு வந்தாலும் சூடாக பில்டர் காபி கலந்து கொடுத்தாக வேண்டும்.கலந்து வைத்த காபியை சூடு பண்ணி கொடுக்கக்கூடாது.இது எழுதப்படாத சட்டம்.இதில் சிலர் நான் அதிகமாக காபி டீ சாப்பிடுவதில்லை .பாலாக தந்து விடுங்கள் என்று கூறி வயிற்றில் கடுங்காப்பியை வார்ப்பார்கள்.//
அடக் கடவுளே.... இது உண்மையோ ஸாதிகா அக்கா....
//வார்த்த தோசையை வாயிலும் வைக்க மாட்டார்கள்.ரங்ஸ்களே பல தடவை அட்ஜஸ்ட் செய்து ஹாட்பாக்ஸ் திறந்து வார்த்துப்போட்ட தோசையை வாய் திறக்காமல் சாப்பிட்டாலும் இவர்களுக்கோ அவர்கள் கண் முன்னே தவாவைப்போட்டு சுடச்சுட வார்த்து கொடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் தலைவிதி.//
ஹையோ ஹையோ.. இதைவிட வேலைக்கு ஆள் பிடிக்காமலே இருக்கலாமே....
//இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் டாலர் கேள்வி.//
பார்த்தீங்களோ.. முடிவில் நீங்களும் அதையேதான் சொல்றீங்கள்.
வோஷிங் மெஷின் வசதி இல்லாதுவிட்டால்... டோபியைப் பிடிக்கலாம். தோட்ட வேலைக்கு ஆள் பிடிக்கலாம், ஆனா வீட்டு வேலையை நாமே செய்யலாமே....
வெளி நாட்டில் தோட்ட வேலையையும் நாம்தானே பார்க்கிறோம்....
நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில், இலங்கையில் இப்படி இல்லை... மிகவும் அரிதே... வேலைக்கு ஆள் வைக்காதுவிட்டால் பவரில்லை என நினைக்கிறார்களோ.
உண்மையிலேயே, உடம்பு முடியாமல், அல்லது வயதானோர் என்றால் பறவாயில்லை மற்றும்படி என்ன அநியாயம் இது...
இங்கு நாங்கள் வீடு வாங்கி வந்த புதிதில், பார்த்தேன், பக்கத்து வீடுகளில் எல்லாம் ஆண்கள் மட்டுமே(எல்லோரும் வெள்ளையர்கள்) புல்லு மெஷினால் வெட்டினார்கள். பெண்கள் கதிரையைப் போட்டுவிட்டு இருந்து வைன் குடிப்பார்கள்.
எங்கள் வீட்டில் கணவரோடு நானும் சேர்ந்து புல்லு வெட்டினேன்.
2 நாளால் பார்த்தேன் முன் வீட்டு ... அவ கொஞ்சம் வயதானவ.. அவ கணவரோடு தானும் புல்லு வெட்டினா, அப்போ நான் வெளியே வந்தேன், என்னோடு கதைத்தா, எனக்குச் சொன்னா, நேற்று நீங்கள் எல்லோரும் குடும்பமாக நின்று புல்லு வெட்டியதை, என் கணவர் பார்த்துவிட்டு என்னிடம் வந்து பேசினார், அங்கே பார் அவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்கிறார்கள், நீ ஹெல்ப் பண்ணுவதில்லை என, அதுதான் இன்று நானும் வந்திட்டேன் எனச் சொல்லி சிரித்தா.
4ம் நாள் பார்த்தேன்... அடுத்த பக்கத்து வீட்டு அலனின் மனைவிக்கு ரோஷம் வந்துவிட்டது:) ஷோட்சையும் போட்டுக் கொண்டு கடகடவென புல்லு வெட்டினார்... எனக்கு சிரிப்பாக இருந்துது...
அப்படித்தான்.... கொஞ்சப்பேர்... வீட்டு வேலைக்கு ஆள் வேண்டாம் நாமே செய்வோம் எனக் களம் இறங்கினால்.... எல்லோரும் இறங்கிடுவார்கள்... இது ஆளாளைப் பார்த்து நாகரீகம்தான் எல்லாம்.... வேலைக்கு ஆள் வைக்காதுவிட்டால் நம்மைக் குறையாக கணித்திடுவார்களோ என்ற பயமாகக் கூட இருக்கலாம்:))).
உஸ்ஸ்ஸ் ஒரு ஸ்ரோபெரி ஸ்மூத்தி பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
////இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் டாலர் கேள்வி.
////
ஹா.ஹா.ஹா.ஹா.....நல்ல கேள்வி மேடம் உங்கள் பதிவு அருமை
அப்பதானே எங்க வீட்டுல வேலைக்காரி இருக்கானு பெருமை பேச முடியும்///
பட்டென்ற இப்படி பட்ட பதில் உங்களில் இருந்து எதிர்பார்க்கவில்லை ராஜபாட்டை ராஜா..ஹா..ஹா..கருத்துக்கு மிக்க நன்றி.
சென்னைக்கு வந்து ஒரு மாசம் தான் வேலைக்கு ஆள் வைத்தேன்... அம்ம்மா அவங்க பேசுறதுக்கு பதில் கூட எனக்கு பேச தெரியாது... பொதுமட சாமினு உடனே நிறுத்திவிட்டேன்... ஹைதராபத்தில் எனக்கு கிடைத்த வேலை ஆள் போல் நான் எங்கும் பார்க்கவில்லை அருமையான அம்மா.. சென்னையில் எதிர்பார்க்கவே முடியாதுங்க
என்ன செய்ய கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் போது வேலைக்காரி அவசியம் தேவைப்படுகிறது அவர்களுக்கு, ஒரு விதத்தில் பாவமாக இருந்தாலும் ராஜபாட்டை சொல்வது போல பெருமை பேசவும் தேவைப்படுகிறது என்பதும் உண்மைதான்....!!!!
மிக்க நன்றி ரத்னவேல் சார்
வேலைக்கு போகிறவர்கள் , உடம்பு முடியாதவர்கள் என்னசெய்வார்கள்?
சகித்துதானே ஆக வேண்டும்.//வேலைக்குபோகாதவ்ர்களுல்,உடல் நிலை திடகாத்திரமாக உள்ளவர்களும்தான் வேலைக்கு ஆட்கள் வைக்கத்துடிக்கின்றனர்.கருத்துக்கு மிக்க நன்றி கோமதிஅரசு.
தவுசண்ட் மில்லியன் பகிர்வு. அருமை..///கருத்துக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
கருத்துக்கு மிக்க நன்றி கும்மாச்சி.
வயதானவர்கள், கைக்குழந்தை இருப்பவர்களுக்குத் தேவையிருக்கும்.
வேலைக்கு ஆள் வைக்கும் பழக்கம் எங்கள் குடும்பத்தில் இல்லை. //சூப்பர்ண்ணா.சரிதா மன்னிக்கு பெரிய பூங்கொத்து.கண்டிப்பாக உங்கள் குடும்பத்தினருக்கு அவஸ்தை இல்லை.கருத்துக்கு மிக்க நன்றி.
Blogger ரெவெரி said...
இன்றைய நிலைமை இதுதான்//உண்மைதான் கருத்துக்கு மிக்க நன்றி ரெவரி.
பின்னூட்டத்தில் கண்ட அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி இர்ஷாத்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்தால் இந்த நிலையில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.////நீங்கள் கூறுவதும் சரிதான் ஆசியா.கருத்துக்கு மிக்க நன்றி.
எனக்கு மயக்கம் வராத குறை:)). அதுசரி ஏன் வேலைக்கு ஆள் வைக்காமல் வீட்டைப் பராமரிக்கவே முடியாதோ ஒரு வேலைக்குப் போகாமல் இருக்கும் பெண்ணால்?///
அதானே?கருத்துக்கு நன்றி அதீஸ்.
Blogger athira said...
வெளிநாட்டில் வசதிகள் அதிகம்தான், இருப்பினும் வேலைக்கும்போய், சமையலையும் பார்த்து, வீட்டையும் கவனித்து, வெளி ஷொப்பிங்கும் செய்கிறோம்தானே.... அப்போ ஏன் நம் நாட்டில் மட்டும் முடியவில்லை? இதை நாம் எப்போதும் மனதில் நினைப்பேன்///இதைத்தான் நானும் யோசிப்பேன் அதீஸ்.இதனையும் பதிவிலேயே சுட்டிக்காட்டி இருக்கவேண்டும்.
உஸ்ஸ்ஸ் ஒரு ஸ்ரோபெரி ஸ்மூத்தி பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).////
ம்ம்..மட்டன் பிரியாணியும் அ கோ மு ஒரு டஜனும் தருகின்றேன்.விக்கல் எடுக்காமல் சாப்பிடுங்கோ அதீஸ்.
கே எஸ் எஸ் ராஜ் உங்கள் கருத்துக்கி நன்றி.
இப்ப தெரியுதா சி செ பற்றி.ஹா ஹ ஹா..கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.
கருத்துக்கு மிக்க நன்றி சகோ மனோ.
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com
ஸாதிகா அக்கா,எங்க வீட்டிலும் வேலைக்கு ஆள் வைத்து பழக்கமே இல்லை. சமீபத்தில் ஒருவரை சேர்த்துவிட்டு என் மாமியார் புலம்பித்தள்ளாத குறை!
அந்த வேலைக்காரம்மாவிடம் நீங்க சொன்னமாதிரி சிங்காரமெல்லாம் இல்லாவிட்டாலும்..என்னன்னு சொல்லத்தெரில, வேலைக்காரர்களிடம் வேலை வாங்கவும் டெக்னிக் தெரியவேண்டும்!
எனக்கு A to Z எல்லா வேலையையும் நானே செய்தாத்தான் ஒரு திருப்திவரும்! ;)
நல்ல பதிவு.
ஸாதிகா தங்கச்சி... கதைகள்ல மட்டும்தான் சரிதாவக் கிண்டல் பண்ணுவேனே தவிர, வீட்டு வேலைகள்ல என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றதுண்டு. அதனாலதான் எங்களுக்கு ஆள் தேவைப்படல. நோட் திஸ் பாயிண்ட் ஆல்ஸோ!
வேலைக்காரர்கள் - ஒருசிலருக்கு அநாவசியம் என்றால், பலருக்கு அத்தியாவசியமே!! எத்தனை பேர் வீட்டில், எல்லாருமாக வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் - முக்கியமாக ஆண்கள்?
வெளிநாட்டில் வேலைக்காரர்கள் இல்லாமல் பெரும்பாலும் சமாளித்து விடலாம். ஏனெனில், வீடே எளிதாகச் சுத்தம் செய்ய ஏதுவான அமைப்பாக இருக்கும். மேலும், அங்கு தனிக்குடித்தனம்தான். இந்தியா வந்தால் வேலை பார்க்காத கணவன்மார்கூட, அங்கே வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். குழந்தைகளும்கூட!! இந்தியாபோல தூசி, தும்பு, ஒட்டடை அடையாது. பாத்திரங்கள் கழுவுவதும் எளிது; பலரிடம் டிஷ் வாஷர் இருக்கும். உடுத்தும் துணிகள்கூட இந்தியாவில் அழுக்கு அதிகமாகும், ஆனால் அங்கு அப்படியில்லை. கடினமாகத் துவைக்கத் தேவையில்லை. மேலும், அங்கே வெளிவேலைகள் குறைவு. பலவற்றை ஆன்லனில் முடித்துக் கொள்ளலாம். இங்கோ, பெண்கள்தான் பெரும்பாலும் தினப்படி பால், காய்கறி வாங்குவது முதல் பேங்க் வேலைகள் வரை பார்க்க வேண்டும்.
முக்கியமாக, அங்கு தினப்படி ஷாப்பிங் என்பது கிடையாது, வீக்கெண்ட் அல்லது மாதாந்திர ஷாப்பிங்தான்.
மிக முக்கியமாக, இங்கு பெண்கள் தலையில்தான் எல்லா வேலைகளும் - ரசம் வைப்பது முதல் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது வரை என்பதால், நேரமின்மையும் முக்கியக் காரணம்.
இதையெல்லாம் மீறி, வேலைக்கு ஆள் வைக்காமல் சமாளிக்கத் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், என்னைப் போல ஒரு ரசம் வைப்பதற்கே ஒருமணிநேரம் எடுக்கும் ஆள் - ஒரு கர்சீப் துவைப்பதற்கே ரெண்டு பக்கெட் தண்ணீர் காலி செய்யும் ஆள் (அம்புட்டுச் சுத்தம் பார்ப்பது!!) என்றால், வேலைக்கு ஆள் வைக்காமல் முடியாது; அதுதான் சீப்!! :-))))
எனினும், வேலைக்காரர்களை வேலை வாங்கவும் தெரிந்திருக்கவேண்டும். அப்படித் தெரியாதவர்கள் வேலைக்கு ஆள் வைக்காதிருப்பது நலமே.
அப்பட்டமான உண்மை. நன்றி சகோ!
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
எங்களைப் போல் சென்னையைவிட்டு வெளியில்
இருப்பவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான
தகவல்கள் தரும் பதிவுதான்
நீங்கள் சொல்கிறார்போல ஏன் சென்னைவாசிகள்
அவர்களை அவர்களே கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்
எங்களைப் போல் சென்னையைவிட்டு வெளியில்
இருப்பவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான
தகவல்கள் தரும் பதிவுதான்
நீங்கள் சொல்கிறார்போல ஏன் சென்னைவாசிகள்
அவர்களை அவர்களே கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்
கருத்துக்கு மிக்க நன்றி மாதேவி.
எனக்கு A to Z எல்லா வேலையையும் நானே செய்தாத்தான் ஒரு திருப்திவரும்! ;)//மகி வெரி குட்:)
கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா.
.
ஸாதிகா தங்கச்சி... கதைகள்ல மட்டும்தான் சரிதாவக் கிண்டல் பண்ணுவேனே தவிர, வீட்டு வேலைகள்ல என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றதுண்டு.//கணேஷ்ண்ணா..அப்ப நீங்களும் பிடியுங்கோ பெரிய பூங்கொத்து:)
பொறுமையாக மினி பதிவாகவே பின்னூட்டி விட்டீர்கள் ஹுசைனம்மா.மிக முக்கியமாக, இங்கு பெண்கள் தலையில்தான் எல்லா வேலைகளும் - ரசம் வைப்பது முதல் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது வரை என்பதால், //ஹுசைனம்மா சகோதரர் கணேஷின் இரண்டாவதாக போட்டு இருக்கும் பின்னூட்டத்தினையும் பாருங்கள்.
திண்டுக்கல் தனபாலன் கருத்துக்கு நன்றி.
சென்னைவாசிகள்
அவர்களை அவர்களே கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்//அதுதான் தவுஸண்ட் மில்லிஒயன் டால்ர் வினா என்று சொன்னேனே ரமணி சார்:)
நல்ல பதிவு.... www.rishvan.com
வேலைக்கு ஆள் வைப்பதில் இவ்வளவு விஷயமா?
ஸாதிகா அக்ா் செம செம சூப்பரோ சூப்பர் பதிவு .
நானும் இந்த வேலையாட்கள் பதிவு போடனும் என்று நாள் கடந்து க்ண்டே போகுது,.
இங்கு துபாயிலும் இப்படி ுக்கு
அட ஐடி கம்பேனி நாலும் பரவாயில்லை
இங்குநான் தினம் ஆபிஸ் போகும் போது எதிில் ஒரு ஹிரொயின் வருவஙக்
ரிஸ்வான்,முதல் வருகை என்று கருதுகின்றேன்.வருகைக்கும் கருத்துக்கு நன்றி.
கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு.
நானும் இந்த வேலையாட்கள் பதிவு போடனும் என்று நாள் கடந்து க்ண்டே போகுது,./////ம்ம்..சீக்கிரம் போடுடுங்க ஜலி.கருத்துக்கு நன்றி.
இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு
>>>
வீண் ஆடம்பரம், வெற்று கவுரவம்தன் காரணம் வேரென்ன சகோதரி
அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.
இப்படி சிலர்வீட்டில் பெருமைக்காவும் வைக்கிறாங்கக்கா. சிலர் காசுபண்ணும்பாட்டில் தனக்கே வினை வைத்தும் கொள்கிறார்கள். அப்புறம் அடித்துக்கொண்டு என்ன லாபம்.
நன்றாக அலசப்பட்டுள்ளது.
//இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு//
இந்த பதிவில் மிகைபடுத்தி பல விஷயங்கள் இருக்கின்றது ,
இந்த ராக்கெட் விலைவாசி காலத்தில் யாரும் பெருமைக்காவோ , வீண் கர்வதுக்காவோ
செய்வதில்லை. தேவை இருக்கிறபடியால்தான் ஹவுஸ் maid வைத்துக்கொள்கிறார்கள் .
என் வீட்டிலும் ஒரு வேலைக்காரி உண்டு ,மாத சம்பளம் 800 ருபாய் ,காலை ,மாலை வீட்டை
பெருக்கணும், துணி துவைக்கணும் மற்றும் பாத்திரங்களை கழுவனும் அவ்வளவே
ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தான் வேலை இருக்கும் ...
இவர்களுக்கு தென் சென்னை சைதாபேட்டையில் (corporation ஆபீஸ் பக்கத்தில்) ஒரு சங்கம் உண்டு ,
அங்கே போய் ஆட்களை தேர்வு செய்தால் சம்பளம் அதிகம் ஆகவே நமக்கு தெரிந்தவர்கள் முலமாக
கிடைக்கும் நல்ல நபர்களை வேலைக்கு வைத்துக்கொண்டால் , ஏழரை நாட்டு டென்ஷன் வராது .
ஆக மொத்தம் நமக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது ஏதாவது ஹவுஸ் MAID மூலமாகவோ
அறிமுகமாகும் நபரை தீர விசாரித்து நமக்கு பிடித்து போனால், வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்
அக்கா கீழக்கரைக்கு வாருங்கள்..
இந்த பதிவைப்பாருங்கள்..
http://niroodai.blogspot.com/2011/12/blog-post_22.html
அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிவு நல்ல இருந்தது....முயற்சி தொடரட்டும்...........நான் உங்க ப்லோகுக்கு வந்தேன்ல நீங்களும் எங்க ப்லோகுக்கு வாங்க ...........
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கச்சி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நலமும் வளமும் ஏற்றங்களும் தர மனம் நிறைய வாழ்த்துகிறேன்.
பொறுமையாக படித்து கருத்திடுவேன்பா..
மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் நடக்கும் செயல்களை மிக நேர்த்தியாக சொன்னதற்கு ஒரு பாராட்டு.......முயற்சி தொடரட்டும்,உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
யானைக்கொரு காலம்,பூனைக்கொரு காலம்..இது இவுங்க காலம்..மத்தவங்களுக்கு கலிகாலம் தான்..இந்த செய்தி எனக்கு புதுசு சகோதரி!
என்ன ஆச்சு
தங்கள் பதிவுகள் இல்லாதது
பதிவுலகில் ஒரு வெறுமையை
உணர முடிகிறது
தங்கள் பதிவினை எதிர்பார்த்து,,,
Post a Comment