January 11, 2012

வானமே எல்லை


வானம் ஏறி...!!! (1).jpg


டீச்சர் போட்ட ஸ்டார் மார்க்கை
நோபல் பரிசாய் ஏற்றெண்ணி
மனமகிழ அன்னையிடம்
காட்டி மகிழும் தனயனவன்
கூட இரண்டு மார்க்கெடுத்தால்
ஒரு சதம் எட்டி இருப்பாயே
தாயவள் தாரக மந்திரமிது

கொண்டவன் ஆசையாய் வாங்கி வந்த
காஞ்சிப்பட்டை விரித்திட்டு
விழி அகல பார்வை யிட்டு
மேலும் அகலமாய் சரிகை என்றால்
ஏற்றமாய் இன்னும் இருக்குமென
பதி பத்தினி சொன்ன வார்த்தையிது

மலடி என்று பட்டமிட்டு
மனதை வாட்டி வதைத்ததினால்
இறைவா எனக்கொரு கருவைத்தான்
உண்டாக்கித்தருவாயென தினம்தினமும்
அழுது இறையிடம் இறைஞ்சியதால்
அன்னைக்கு மகளொன்று பிறந்து விட்டாள்
மகனை பெற்றால் நன்றன்றோ
எத்தனை நன்றாய் இருந்திருக்கும்
சுற்றி இருப்போர் கருத்திட்டர்

நமக்கென வீடொன்று வேண்டுமென
நங்கையவள்தான் தலைவனிடம்
நச்சரித்து தினம் தினம் கேட்டு வைக்க
கடனை உடனை வாங்கியவன்
அழகாய் அடுக்குமாடியில் ஒன்றினையே
அமர்த்தி மனையாளை குடிபெயர்த்தான்
புத்தம் புதிய வீட்டிளவள்
பவிசாய் பதவிசாய் இருந்து கொண்டு
பவ்யமாக கேட்டு வைத்தாள்
தரையோடு வீடென்றால்
இன்னும் கெளரவம் கிடைத்திடுமே

அறுபது வயது போதுமென்று
அதற்கு மேல் வாழ்ந்தால் நன்றன்று
என்பது அவனது கருத்தன்றோ
அகவை அறுபது நெருங்கியதும்
இன்னும் இருபது வருடம் வரை
வாழ்ந்தால் இனிக்கும் வாழ்க்கை என்று
ஏக்கம் மனதினில் வந்தன்றோ

27 comments:

Mahi said...

me the first? :) ;)

Mahi said...

/அகவை அறுபது நெருங்கியதும்
இன்னும் இருபது வருடம் வரை
வாழ்ந்தால் இனிக்கும் வாழ்க்கை என்று
ஏக்கம் மனதினில் வந்தன்றோ
/
aaa...ஸாதிகாக்கா??!!!!!!! அறுபதை நெருங்கிட்டீங்களோ??!!!!!
மீ பெய்ன்ட்டட்!!!!!!! ;)))))) paint இல்லே, faint!!!!

Mahi said...

ஜோக் அந்தப்பக்கம்..இக்கரைக்கு எப்பவுமே அக்கரை பச்சைதான். ஜூப்பர் கவிதை..வார்த்தைகளை அழகாக் கோர்த்திருக்கீங்க!:)

ஸாதிகா said...

மகி..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....//அறுபதை நெருங்கிட்டீங்களோ??!!!!!// இதனை படித்து விட்டு நான் தான் fainted!!!!

Mahi said...

/இதனை படித்து விட்டு நான் தான் faint!!!!/ஹிஹி..கோவிச்சுக்காதீங்க,உடம்பு கெட்டுப்போயிரும்ல??

நான் சும்மா டமாசுக்கு...பூஸ் ஸ்டைல்ல சொல்லிப்பாத்தேன்.அம்புட்டுதேன்!

நீங்க பூஸுக்கு அக்கா,அவுங்களுக்கே சுவீட்16 தான் ஆகுதாம்..அப்ப உங்க வயசு சுவ்வ்வ்வீட்16.0001தான்னு எனக்கு தெரியாதா? என்ன நாஞ்சொல்றது?!;))))

ஸாதிகா said...

ஐயையோ..புல்லரிக்கின்றதே....இது ரொம்ப ஓவர் மகி...

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆஆஆஆஆஆஆ மீ த 1ஸ்ட் என ஓடிவந்தேன்.. மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நேரமில்லை பின்பு வந்துதான் படித்து பின்னூட்டம்.

Yaathoramani.blogspot.com said...

மிகமிக அருமை
நிகழ்வுகளை இயல்பாக அடுக்கிச் செல்லும் விதம்
மிக மிக அருமை
தொடர்ந்து வரும்போதே கடைசி அடி
பலமாக இருக்கும் எனத் தெரியும்
ஆயினும் இதனை பலமாக இத்தனை
அழகாக அருமையான இருக்கும் என நினைக்கவில்லை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
இன்னும் எத்தனை முத்துக்களை எங்களிடம் காட்டாமல்
இப்படி ஒளித்து வைத்துள்ளீர்கள்?

குறையொன்றுமில்லை. said...

ஆஹா கவிதை நல்லா இருக்கே. நீங்களும் சீனியர் சிட்டிசனோ.

ஸாதிகா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நேரமில்லை பின்பு வந்துதான் படித்து பின்னூட்டம்//நோ ப்ராப்ளம் அதீஸ்..பொறுமையா வநது நிறைவா(ய) பின்னூட்டுங்கள் ஹி ஹி ஹி

ஸாதிகா said...

இன்னும் எத்தனை முத்துக்களை எங்களிடம் காட்டாமல்
இப்படி ஒளித்து வைத்துள்ளீர்கள்?///

உற்சாக மூட்டும் பின்னூட்டம் ரமணி சார்.தாங்கள் சென்ற பதிவில் போட்ட பின்னூட்டத்தின் விளைவாகவே ஏற்கனவே ஒரு இணைய இதழுக்காக எழுதி சேவ் செய்து வைத்திருந்த கவிதையை பப்லிஷ் செய்தேன்.மிக்க நன்றி சார்.

Jaleela Kamal said...

, ஸாதிகா அக்கா ஊரிலிருந்து வந்தாச்சா நிறைய விஷியஙக்ள் இருக்குமே பிளாக் எழுத நிறைய திருமண விஷேஷஙக்ள் எல்லாம் நல்ல் படியாகநடந்த்தா??
கவிதை ஜூப்பர் .., நான் தான் பஸ்டுன்னு நினைத்தேன் எனக்கு முன் முந்தி விட்டார்களே.....

ஸாதிகா said...

லக்‌ஷ்மியம்மா..என்னங்கம்மா நீங்களும்..இந்த மகி கொளுத்திப்போட்டு விட்டு போய் விட்டாரே இப்படி:(

படைப்புகள் எல்லாம் அனுபவங்கள் ஆகிவிடாதேம்மா...உங்களுக்கும் தெரிந்ததுதானே...மூன்று நாட்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்தேன்.எந்த வித கன்செஷனும் இன்றி முழு டிக்கட் தான் எடுத்து பயணித்தேன்.என்னை நம்புங்கோ லக்‌ஷ்மிம்மா....:(

ஹுஸைனம்மா said...

அக்காவே ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் வந்திருக்காங்க, வந்தவுடனே அவங்களை விழ வச்சுடீங்களே மஹி!!

குடும்பத்தலைவிகிட்ட “எச்சூஸ்மி, நீங்க எந்த காலேஜ்”னு கேட்ட மாதிரி, இவங்ககிட்ட நீங்க அறுவதை நெருங்கிட்டீங்களான்னு கேட்டா, மயங்கிவிழாம என்ன பண்ணுவாங்க?? மீ எஸ்கேஏஏஏஏஏப்!!
:-)))))))))))))))))))

பால கணேஷ் said...

வந்தாச்சா தங்கச்சி... இந்த மனசு இருக்கே... எப்பவுமே வந்ததை வெச்சு திருப்திப்படறது இல்ல... அருமையான கவிதை. ரமணி சார் சொன்னது போல நல்முத்துதான். உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் அட்வான்ஸ் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆசைக்கு அளவே இல்லை என்பதை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் vgk

ஏன் வெகு நாட்களாக நீங்கள் என் வலைப்பக்கமே வருவதில்லை?

http://gopu1949.blogspot.com/2011/12/2011.html

Starjan (ஸ்டார்ஜன்) said...

இக்கரைக்கு அக்கரை பச்சை. நல்லாருக்கு கவிதை. நல்ல கருத்துகள் ஸாதிக்காக்கா.

Asiya Omar said...

திரும்பி வந்து அசத்தலாய்..அருமையான கவிதை.பொருத்தமான நல்ல தலைப்பு.

குறையொன்றுமில்லை. said...

ஓக்கே, ஓக்கே நம்பிட்டேன் சந்தோஷம்தானே?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஸாதிகா அக்கா கலக்கிட்டீங்க... சூப்பர் கவிதை. நிறையப்பேர் இப்படி இருக்கிறார்கள். எதிலும் அவர்களால் திருப்தி காணவே முடியாது.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

சூப்பராகச் சொல்லியிருக்கிறீங்க.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

கிடைத்ததைப் பெரிதாக நினைத்து வாழப் பழகோணும், அதுக்காகத்தான், நான் முன்பு என் பக்கத்தில் சொன்னேனே..

எமக்கு மேலே உள்ளவரைப் பார்த்து பெருமூச்சு விடக்கூடாது, எமக்கு கீழே இருப்போரைப் பார்த்து நிம்மதி அடையவேண்டும்.

காலுக்கு அழகான செருப்பில்லையே என ஏங்காமல், கால்களே இல்லாமல் இருப்போரைப் பார்க்க வேண்டும்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அழகாகச் சொல்லிட்டீங்க, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

கீழே சொந்தக் கவிதை எனப்போடலாமே ஸாதிகா அக்கா லேபல்.

ராஜி said...

சீனியர் சிட்டிசன்களை பற்றி தாங்கள் வடித்த கவி அருமை

இராஜராஜேஸ்வரி said...

எதிலும் நிறைவடையாமல் இன்னும் இன்னும் என ஏங்கி நிற்பதே மனிதமனம்
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

ஜெய்லானி said...

//athira said...

அழகாகச் சொல்லிட்டீங்க, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

கீழே சொந்தக் கவிதை எனப்போடலாமே ஸாதிகா அக்கா லேபல்.//

இதுக்கு மஹி சொன்னதே தேவலாம் போலிருக்கு ஹா..ஹா... :-)))

ஜெய்லானி said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இக்கரைக்கு அக்கரை பச்சை. நல்லாருக்கு கவிதை. நல்ல கருத்துகள் ஸாதிக்காக்கா//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-))

mohamedali jinnah said...

சகோதரி ஸாதிகா அவர்களின் கனிவான வாழ்த்துகள் மகிழ்வைத் தந்து உற்சாகத்தினை உண்டாக்குகின்றது