பிடித்த உறவுகள்
1.என் உயிரினும் மேலான இணை
2.நான் ஈன்ற செல்வங்கள்
3என் பெற்றோரும்,உடன் பிறந்தோரும்
பிடித்த உணர்வுகள்.
1.பொறுமை
2.சகிப்புத்தன்மை
3.அமைதி
பிடிக்காத உணர்வுகள்.
1.கோபம்
2.தனிமை
3.சோம்பல்
முணுமுணுக்கும் பாடல்கள்
பிடித்த திரைப்படங்கள்
மன்னிக்க வேண்டும்.படமே பார்ப்பதில்லை.
அன்புத் தேவைகள்
1.எதிர்பார்ப்பில்லாத நட்பு
2குற்றம் குறை காணாத உறவுகள்
3.என் சொல்லுக்கு கீழ்படியும் என் பிள்ளைகள்
வலிமையை அழிப்பவை
1.உறவின் பிளவு
2.சோம்பல்
3 நம்பிக்கை இன்மை
பிடித்த பொன்மொழி
1.உன் செல்வமும்,உன் வாரிசுகளும் சோதனைக்கே
2.பொறுமையைக்கொண்டும் தொழுகையைக்கொண்டும் இறைவனிடன் உதவிதேடுங்கள்.
3.வசதி வாய்ப்பில் உனக்கும் கீழுள்ளவர்களை நோக்குங்கள்.
பயமுறுத்தும் பயங்கள்
1.மரணம்
2மறுமை
3செல்வம்
அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்
1.என் பிள்ளைகள் உயர் நிலைக்கு வரவேண்டும்
2.நிரந்தர வாழ்வான மறுமைக்கு நிறைய தேட வேண்டும்.
3.சுலபமான மரணம் எய்தவேண்டும்
கற்க விரும்புவது
1.நான் ஜீனியஸ் என்று பிரமிக்கும் உறவுகளிடம் இருக்கும் நல்ல செயல் பாடுகள்.
2.என் கணவரிடம் நிறைந்திருக்கும் அளப்பறிய பொறுமை
3.போர் வீலர் ஓட்ட
வெற்றி பெற வேண்டியவை
1.சோம்பலின்மை
2.விடா முயற்சி
3.வயது வித்தியாசம் பாராத உழைப்பு
சோர்வு நீக்க தேவையானவை
1.என் பிள்ளைகள் செய்யும் காமெடி
2.மழலையின் குறும்பு
3.ஜில் என்ற பழச்சாறு
எப்போதும் தயாராக இருக்க வேண்டியது.
1.வங்கியில் பேலன்ஸ்
2.குளிர்சாதனப்பெட்டியில்சுலப்மாக சமைக்க பதார்த்தங்கள்
3.வருபவர்களை விழியகல செய்யும் அளவுக்கு சுத்தமான வரவேற்பறை
முன்னேற்றத்திற்கு தேவை
1..விடா முயற்சி.
2அனுபவம்
3.பொறுமை
எப்போதும் அவசியமானது
1.உறவுகளின் இணக்கம்
2.நீடித்த ஆரோக்கியம்
3.நிலைத்து நிற்கும் நற்பெயர்
தெரிந்து தெரியாது குழப்புவது
1.தீயோருக்கும் உயர் நிலை
2.வறியோருக்கும் தற்பெருமை
3.நல்லோர்களுக்கு இழிநிலை
எரிச்சல் படுத்துபவர்கள்
1.மதிய நேரத்தில் வரும் விளம்பர செல்பேசி அழைப்புகள்.
2.அரட்டை அடிக்கும் அலுவலக ஊழியர்கள்.
3.ஜவ்வாக இழுத்து நின்று நிதானித்து தமிழ் பேசும்
கால் செண்டர் ஊழியர்கள்.
மனங்கவர்ந்த பாடகர்கள்
1.எல் ஆர் ஈஸ்வரி
2 பி பி. சீனிவாஸ்
3.கெ ஜே யேசுதாஸ்
இனிமையானவை
1.என் ரங்க்ஸின் ஆலோசனைகள்.
2.என் மூத்தவரின் ஆளுமை
3.என் சின்னவரின் வெள்ளந்தியான காமெடி
சாதித்தவர்களின் பிரச்சனைகள்
1.பொறாமை
2.தடைக்கல்
3.நிலையாக வைத்துக்கொள்வதற்கு சந்திக்கும் இன்னல்கள்.
பிடித்த உணவு
1.ஃபிரஞ்ச் லோஃப் rich chocolate cake
2.என் சின்னம்மா செய்யும் நெய் கமகமக்கும் இடியாப்பபிரியாணி
2.காஸ்மோ பாலிடன் கிளப் உணவகத்தில் கிடைக்கும் அமெரிக்கன்சாப்ஸி.
நிறைவேறாத ஆசைகள்
1அண்ணா மேம்பாலத்தில் பகல் பொழுதில் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்தே செல்லுதல்.
2.மெரீனா பீச்சில் மிக மிக தாழ்வாக பறந்து ரோந்து சுற்றும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பறந்த படி மெரீனா பீச்சை பார்த்தல்.
3.கப்பல் பயணம்
பதிவிட அழைக்கும் மூவர்
1.சகோதரர் கிளியனூர் இஸ்மத்
2.சகோதரர்.ஜெய்லானி
3.சகோதரர் ஸ்டார்ஜன்
Tweet |
78 comments:
மூன்றும் முத்துக்கள்..
வேடந்தாங்கல் கருன் உடன் கருத்துக்கு நன்றி.
aaaaaaaaaaaaaaaaங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ன் ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ 200 மைல் வேகத்தில வந்தேனே... அப்பவும் வட போச்சேஏஏஏ... இருங்க வாறன்.
//3.போர் வீலர் ஓட்ட
//
இது பெரிய விஷயமில்லை, உடனேயே ஆரம்பிக்கலாம். சைக்கிள் ஓடத் தெரிந்தவராயின் இது ரொம்ப ஈசி.
//2.மெரீனா பீச்சில் மிக மிக தாழ்வாக பறந்து ரோந்து சுற்றும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பறந்த படி மெரீனா பீச்சை பார்த்தல்.//
வித் ப்ளஷர்.... என் கையை இறுக்கிப் பிடிங்க ஸாதிகா அக்கா:).
A க்ளாஸ் பதில்கள் ஸாதிகா. பாராட்டுக்கள்.
உங்கள் ரசனைகளையும் விருப்பங்களை அறிய உதவின சுவாரஸ்யமான மும்மூன்றுகள்.
Assalamu Alaikkum
பிடித்த பொன்மொழி - nice :)
உளப்பூர்வமாக எழுதியிருக்கின்றீர்கள் என்பதால் உள்ளத்தை தொடுகின்றது உங்கள் பதில்.
//எப்போதும் அவசியமானது
1.உறவுகளின் இணக்கம்
2.நீடித்த ஆரோக்கியம்
3.நிலைத்து நிற்கும் நற்பெயர்
//சூப்பர்ர் அக்கா..எல்லா பதில்களும் பிடிச்சிருக்கு
அனைத்துமே அருமை....சூப்பராக எழுதி இருக்கின்றிங்க..
பிடித்த மூன்று பாடல்களினை இதனையும் கேளுங்க என்று பாடல், என்ன பாடலாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்...அப்பறம் தான் நீங்க கொடுத்து இருப்பது லிங்க் என்று பார்த்தேன்...
ரொம்ப சூப்பர்ப்...
பராவயில்லை...உங்களுக்காவது மூன்று ஆசைகள் தான் இருக்கு...எனக்கு எவ்வளவு இருக்கு என்றே தெரியவில்லை...மூன்று ஆசைகளுமே எனக்கும் ஆசையாக தான் இருக்கு...
அனைத்து மூன்று முத்துக்களும் அருமை
குறிப்பாக புரியாத மூன்று மிகச் சரி
யோசித்துப் பார்க்கையில் எனக்கும்
அது ஏன் எனத்தான் குழம்பினேன்
நிறைவேறாத ஆசை நிறைவேறக் கூடியதாகவே தெரிகிறது
நிறைவேற வாழ்த்துக்கள்
தெளிவான பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அக்கா
மும்மூன்றும் அருமை!!!
எல்லாமே சூப்பரோ சூப்பர், அக்கா.
அருமையான தெரிவுகள்..
//3.போர் வீலர் ஓட்ட..
களத்தில் இறங்கி முயற்சித்தால் விமானமே ஓட்டலாம்..so தேவை முயற்சி...
//இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த அபுதாபி தங்கச்சி ஹுசைனம்மாவுக்கு நன்றி.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). நானும்தான் அழைத்தேன்...:(((( என்னையெல்லாம் சொல்ல மாட்டினம், அதிராவுக்கு கோபம் வராது அத்தோடு “நோ வெ.. நோ.. ரோ” என்ற தைரியம்தானே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
அருமையாக எழுதி இருக்கின்றிர்கள்.
வாழ்த்துக்கள் சகோ
ஹ்ம்ம்ம்ம்...எப்போதான் வடை கிட்டப்போகுதோ அதீஸுக்கு.
//என் கையை இறுக்கிப் பிடிங்க ஸாதிகா அக்கா:).
// எதுக்கு?அக்கா பயபடுவேன்னு நினைத்து விட்டீர்களா?நான் பூஸுக்கு அக்காவாக்கும்.
அட..இமா,பதிவிலும் ஏ கிளாஸ் பி கிளாஸ் உள்ளதா?அட..ஆமாமா..நீங்கள் தான் டீச்சர் ஆச்சே.அதான் கிரேடு போட்டுட்டீங்க.நன்றி இமா.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
வ அலைக்கும் சலாம் தம்பி ஜமால்.கருத்துக்கு நன்றி.
தனிமை பிடிப்பதில்லையோ ஸாதிகா அக்கா?...
எனக்கு தனிமையும் சில நேரங்களில் ரொம்ப பிடிக்கும்... சொல்லப்போனால் தனிமையில்தான்... கற்பனை வளம் அதிகமாகி.. கதை, கவிதை, புளொக்குக்குத் தலைப்பு எல்லாமே எனக்குத் தோன்றும்.
ஆனா பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன் தனிமை பிடிக்காதென உண்மைதான்.
//முணுமுணுக்கும் பாடல்கள்
1.இறைவனிடம் கையேந்துங்கள்
2.உன் கண்ணில் நீர் வடிந்தால்
3.மனைவி அமைவதெல்லாம்
// சூஊஊஊஊஊஊப்பர்... இவை மூன்றும் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ரிப்பீட்ல கேட்டிருக்கிறேன்.
//உள்ளத்தை தொடுகின்றது உங்கள் பதில்.// என்ற வரிகளில் உளப்பூர்வமான மகிழ்ச்சி சகோ நூருல் அமீன்.
பதில்கள் அனைத்தும் பிடித்துப்போனதற்கு ரொம்ப மகிழ்ச்சி மேனகா.
பாடல்களை கேட்டீர்களா கீதாஆச்சல்.விரைவில் உங்களது மும்மூன்று ஆசைகளையும் பதிவிடுங்கள்.
karrrrrrrrrrrrrrr ஸாதிகா அக்கா, எப்பவுமே அதிராவைத் தப்பாப் புரிஞ்சு கொள்வதே எல்லோருக்கும் தொழிலாப்போச்சு:).
நான் கையைப் பிடிக்கச் சொன்னது ஏணெண்டால்...
காதைக் கொண்டுவாங்கோ:))
நானுமெல்லோ பைலட் சீட்ல:) இருக்கப்போறன், அதுதான் இருவருமாக ஆசையை நிறைவேத்தலானென்று சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
ரமணி சார்,உங்கள் அளவுக்கெல்லாம் திறமையான பதில்கள் என்னிடம் இருந்து வர முடியாது.கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
வ அலைக்கும்சலாம் ஆமினா.கருத்துக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி வான்ஸ்.
ஏ ஜே நீங்களும் தெற்குபக்கம்தான் போலும்.முகவையில் இருந்து மிக குறைவான எண்ணிக்கையில் பதிவர்கள் இருக்கின்றார்கள்.இப்பொழுது ஒவ்வொருவரின் அறிமுகமும் சந்தோஷமாக உள்ளது.வலைப்பூவில் நிறைய எழுதுங்கள்.கருத்துக்கு நன்றி.
அதீஸ்...நீங்க தான் ஆரையும் கூப்பிட மாட்டினம் என்று சொல்லி விட்டிர்களே?அப்புறம் எப்ப அழைத்தீர்கள்.உங்கள் இடுகையை கோப்பி பேஸ்ட் பண்ணட்டா?
கருத்துக்கு மிக்க நன்றி ஐயூப்.
அதீஸ்..உங்கள் பிளாக்கில் அந்தப்பாடலை போடதுதான் போட்டீர்கள்.
அதனை முணு முணுக்காத நேரமே இல்லை.
தனிமை என்பது கொடுமை என்று நினைப்பவள் நான்.என்னை சுற்றி எப்பவும் யாராவது இருக்கவேண்டும்.
//
காதைக் கொண்டுவாங்கோ:))
நானுமெல்லோ பைலட் சீட்ல:) இருக்கப்போறன்// ஓ..அப்படி சொல்ல வர்ரீங்களோ..ஒக்கே.ஸாரி.
ஆமாம் சகோ நானும் சாட்சாத் முகவையேதான் . உங்களை எல்லாம் கண்டுபிடிததற்கு சகோ ஆமினா அவர்களின் ராமநாட் பதிவுதான் காரணம்.so தாங்க்ஸ் to ஆமினா.நான் வலைபூக்களுக்கு புதியவன்.so கொஞ்சம் அவகாசம் வேண்டும் ப்ளாக் எழுத...&thanks for ever...
//நானும்தான் அழைத்தேன்...:(((( என்னையெல்லாம் சொல்ல மாட்டினம்.// ம்.. நானும் உங்கள் அழைப்பிற்குப் பதில் என்றுதான் வந்தேன் அதிரா. ;) இங்கு 'கேள்விக்கொத்து' வேறாக இருக்கிறது. அதனால் தான் உங்கள் பெயர் இல்லை.
ஸாதிகா... முதல் ஆளாக அதிரா இடுகை பார்த்தது நீங்கள் தானே! அதிலும் ;) படிக்க முதல் 'கீழே' போய்ப் படித்ததாகவும் சொன்னீர்கள். மறைக்கப்பட்டிருக்கும் பகுதியை 'high light' செய்து படிக்கவில்லையா!! ;) இரண்டாவது பெயர் உங்களது. நீங்கள் என் இடுகை படிக்கையில் தோன்றவில்லையா? ;)) போய்ப் பாருங்கள் இப்போது.
இதோ நானே உங்களுக்கு அதைப் பிரதி செய்து 'ஹை லைட்' செய்து அனுப்புகிறேன் ஸாதிகா. ;)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
...அப்பப்பா சொல்லமுடியாத கடிதங்கள்:))).. என்னை மிரட்டீஈஈஈஈஈஈஈஈனம்:))).... அதால நான் இம்முறை அழைக்கப்போவது....
இ..... இல்லை இல்ல... நான் ஒண்ணுமே சொல்லல்ல்லலலலலலல:), ஸா .அ ..கடவுளே... சும்மா உச்சரிக்கிறேன்..., வா... ஆஆஆஆஆஆ வாயில வந்திட்டுதூஊஊஊ..., ம..... ஹையோ நான் என்ன பண்ணுவேன்...., ஜல்.அ.. என்னை விட்டிடுங்கோ நான் ஓடிடுன்ன்ன் ஜெ..... ஆஆஆ... சும்மா ஒரு ஆசையில சொல்லிப்பார்த்தேன் மீண்டும் தண்ணிக்குள்ள போயிட வாணாம்....
வெரி வெரி சொறி... நான் ஆரையுமே அழைக்கவில்லையே இம்முறை:), அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:) ஆறு வயசிலிருந்தே:))))) அவ்வ்வ்வ்வ்வ்.
~~~~~~~~~~~~~~
இ = இமா, ஸா = ஸாதிகா.
ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ ஏஜே.விரைவில் பிளாக் உலகில் களை கட்டுவீர்களாக.
அன்பின் இமா,நான் ஹை லைட் செய்து படிக்கவே இல்லை இமா.உங்கள் பின்னூட்டத்திலும் படித்து விட்டு,பிறகு நீங்கள் பிரதி எடுத்து அனுப்பியதையும் பர்த்து விட்டுத்தான் இப்பொழுது இதனை எழுதிக்கொண்டுள்ளேன்.மிக்க நன்றி இமா.
இப்ப போய் என் பதிவில் முதல் பாராவில் போய் பாருங்கள்.ஒகே?
மைக் டெஸ்டிங்..மைக் டெஸ்டிங்.பூஸ் எங்கிருந்தாலும் வரவும்.வருவது மட்டுமின்றி பதிவை மறுபடி முதல் பாராவில் இருந்து படிக்க வேண்டும் என்று பூஸுக்கு அன்பான கட்டளை இடப்படுகின்றது.பூஸ்..கமான்..
கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி கலாநேசன்,
//கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு பயத்தோடு பம்மி பம்மி அழைத்திருக்கும் ஸ்காட்லாண்ட் தங்கச்சி // கிக் கிக். டைட்டில் நல்லா இருக்கு ஸாதிகா. ;)
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி... முயற்சிக்கிறேன்.
உங்களின் மும்மூன்று பதில்களும் அருமை...
அக்கா, கேள்விகளையே சுவாரசியமான தலைப்புகளா மாற்றிட்டீங்க போல!!
நல்ல பதில்கள்.
//அண்ணா மேம்பாலத்தில் பகல் பொழுதில் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்தே செல்லுதல்//
அதுவும் மே மாசம் நடக்கணும் நீங்க. அதைப் பாத்து நான் ரசிக்கணும், காருல கூட வந்துகிட்டே!! தப்பா நினக்கக்கூடாது, உங்க பாதுகாப்புக்குத்தான் கூட கார்ல வர்றேன். ;-))))))))
எல்லாமே சூப்பர்.. அதுவும் ரங்க்சின் பொறுமை அழகு போங்கோ>::))
//Blogger ஸாதிகா said...
மைக் டெஸ்டிங்..மைக் டெஸ்டிங்.பூஸ் எங்கிருந்தாலும் வரவும்.வருவது மட்டுமின்றி பதிவை மறுபடி முதல் பாராவில் இருந்து படிக்க வேண்டும் என்று பூஸுக்கு அன்பான கட்டளை இடப்படுகின்றது.பூஸ்..கமான்.//
இல்ல இல்ல... நான் கட்டிலடியை விட்டு வெளியே வரமாட்டேன்:), நீங்க ஹைலைட் பண்ணிப்பார்த்திட்டு...... வாலைப் பிடிக்கத்தானே கூப்பிடுறீங்க:)), என்னிடம் இருக்கும் அழகான பகுதியே அந்த “வால்”தான் (நியூவில சொன்னார்கள்:)). அதனால வரமாட்டேன் எனக்குப் பயமாக் கிடக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))
//இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த அபுதாபி தங்கச்சி ஹுசைனம்மாவுக்கும்,கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு பயத்தோடு பம்மி பம்மி அழைத்திருக்கும் ஸ்காட்லாண்ட் தங்கச்சி அதிராவுக்கும் நன்றி.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவோ கொக்கோ... கிடைக்காவிட்டால் அடிபட்டுக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்:))))... ஸாதிகா அக்காதானே.
கலகம் பிறந்ததால், தெளிவு கிடைச்சிருக்கு.
நான் ஸாதிகா அக்காவின் முதல் பதில் பார்த்ததும், “இமா டிஷ்யூ பிளீஸ்”:(((, என்று மட்டும் எழுத நினைத்து விட்டு விட்டேன், ஆனா நான் கேட்காமலேயே இமா டிஷ்யூஊஊஊஊ தந்திட்டா எனக்கு, நானும் வடிவாத் துடைச்சிட்டன்:)))) மியாவ் மியாவ் இமா.
இமா said...
//கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு பயத்தோடு பம்மி பம்மி அழைத்திருக்கும் ஸ்காட்லாண்ட் தங்கச்சி // கிக் கிக். டைட்டில் நல்லா இருக்கு ஸாதிகா. ;)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))). நான் இப்போ தேம்ஸ் கரையில் யோகா செய்கிறேன்...
வன்.. ரூ.... த்றீஈஈ..
பிலீஸ்ஸ்:)) டோண்ட் டச் மீ.... சே சே என்னப்பா இது, டோண்ட் டிசுரேப்பூஊஊஊ மீஈஈஈஈஈஈ:))).
உங்கள் பதில்கள் சூப்பர் .....வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எல்லாமே அருமை.
அழகான பதில்கள் ஸாதிகாக்கா! அதென்ன நான் பிறக்குமுன் வந்த பாடல்கள்தான் பிடிக்குமா உங்களுக்கு?!!;)
2வது பாட்டு பாத்தா அழுகை வந்துரும் போலருக்கு!சூப்பர் பாட்டு!சூப்பர் பதில்கள்!
//டைட்டில் நல்லா இருக்கு ஸாதிகா. ;)
// நல்லா இருக்கு.ஒகே பூஸுக்கு சரியாகத்தானே இருக்கு இமா?
////கிளியனூர் இஸ்மத் said...
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி... முயற்சிக்கிறேன்.
உங்களின் மும்மூன்று பதில்களும் அருமை...
////
கருத்துக்கு மிக்க நன்றி சகோ.
//அதுவும் மே மாசம் நடக்கணும் நீங்க. அதைப் பாத்து நான் ரசிக்கணும், காருல கூட வந்துகிட்டே!! தப்பா நினக்கக்கூடாது, உங்க பாதுகாப்புக்குத்தான் கூட கார்ல வர்றேன். ;-))))))))// என்ன கொலவெறி ஹுசைனம்மா...நடப்பது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமல்ல.பாண்டிபாஜாரில் இருந்து வல்ளுவர் கோட்டத்துக்கே நடந்து விடுவேன்.ஆனால் மே வெயிலில் நடக்க சொல்லி,அதிலும் நீங்க காரிலேயே ஊர்வலம் வர்ரேன்னுறீங்களே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ரொம்ப தேங்ஸ் தேனு.கருத்துக்கு.
//அதிராவோ கொக்கோ... கிடைக்காவிட்டால் அடிபட்டுக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்:))))... ஸாதிகா அக்காதானே./// அடடாடா..டச்சிங் ...டச்சிங்..நான் உங்கட அக்காவாச்சே...வாலை எல்லாம் பிடிக்க மாட்டேன்.டோண்ட் வர்ரி
அதென்னப்பா..தேம்ஸ் நதிக்கரையில் எப்ப பார்த்தாலும் யோகா செய்துகொண்டு.உடம்புக்கு ரொம்ப நல்லதா?எனக்கு தேம்ஸ் நதிக்கரையில் வைத்து டியூஸன் எடுக்கறீங்களா?லேப்டாப் சகிதமாக வந்துடுறேன்.
வாங்க செய்யத்.முதல் வருகைக்கு நன்றி.பிளாக் உலக பிரவேசத்துக்கு இனிய வரவேற்புகள்,
ஆயிசா,வ அலைக்கும் சலாம்.நெடு நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க.கருத்துக்கு நன்றி.
//அதென்ன நான் பிறக்குமுன் வந்த பாடல்கள்தான் பிடிக்குமா உங்களுக்கு?!!;)//
மகி அநேகமாக நான் பிறக்கும் முன் வெளிவந்த படப்பாடல்கள்தான் எனக்கே ரொம்ப பிடிக்கும்.இப்ப வரும் பாடல்கள் குரலோசைக்கு முன்னர் மியூஸிக் தான் முண்ணனியில் உள்ளது.கருத்துக்கள் புரிவதற்கு தனி யுனிவர்ஸிடிக்கு போகணும்.
//2வது பாட்டு பாத்தா அழுகை வந்துரும் போலருக்கு!சூப்பர் பாட்டு!சூப்பர் பதில்கள்!
// அப்ப இருந்தே இந்த பாடல் என்றால் வெகு இஷ்டம்.மனைவி மீது கணவர் வைத்து இருக்கும் ப்ரியங்களை தெளிந்ஹ நீரோடையாய் காட்டும் பாடல் வரிகள் அமையபெற்ற இனிய பாடலல்லவா இது.இப்ப பூஸ் பதிவால் வந்த தாக்கம்.
முமூன்று அனைத்தும் அருமை ...
.விடா முயற்சி.2அனுபவம்3.பொறுமை
பிடித்த மூன்றுகள்.. நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
//2.மெரீனா பீச்சில் மிக மிக தாழ்வாக பறந்து ரோந்து சுற்றும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பறந்த படி மெரீனா பீச்சை பார்த்தல்.//
hihi
ellaamee super
ஆஹா.. மூனு மூனா எல்லாமே அழகா சொல்லி இருக்கீங்க :-))
தொடரில் நானுமா அவ்வ்வ்வ்வ்..விரைவில் பதிவிடுகிறேன் ((இப்படி சொல்லிதான் எல்லாருக்கும் அல்வா குடுக்கிறது ஹி..ஹி..))
இன்றே போடுகிறேன் :-))
தொடரின் தொடர் தொடங்கியாச்சி :-)
http://kjailani.blogspot.com/2011/07/blog-post_8450.html
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாய உலகம்.
//வ
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
// இதோ வர்ரேன்.
நன்றி ஜலி.
நன்றி ஜெய்லானி.அழைப்பை ஏற்று உடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
அருமையான பதில்கள் ஸாதிகா.
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோமதி அரசு. திருமதி பக்கங்களை அவ்வப்பொழுது புரட்டிப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.ஆனால் புதுப்பதிவுகள் ஒன்றையும் நீண்ட நாட்களாக காணவில்லையே?
super! :-)
அடேங்கப்பா..புயல் வேகம்தான்.இத்தனை சுறு சுறுப்புக்கு பாராட்டுக்கள் சித்ரா.
joopar kostins joopar answers....;))
மிக்க நன்றி அப்பாவிதங்கமணி
எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
http://rasekan.blogspot.com/2011/08/blog-post_1720.html
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
திருமதி பக்கத்தை வந்து பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.
ஊருக்கு போய்விட்டதால் பதிவு போடவில்லை, கூடிய விரைவில் பதிவு போடுகிறேன்.
உங்கள் அன்புக்கு நன்றி.
Post a Comment