இவள் புதியவளில் எனது அதிர்ஷ்டக்காரி என்ற சிறுகதை ஆகஸ்ட் இதழில் வந்துள்ளது.படித்து விட்டு தங்கள் கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டக்காரி
கையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.
ஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.
உடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.
”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..?”
“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”
“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.?”
“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”
“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா?”
“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”
“அப்ப அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”
அலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.
முகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.
“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”
“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”
“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”
”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”
“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”
“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.
ஆயிற்று
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.
பெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.
அலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.
“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா?”
“எதுக்கு அத்தே திருஷ்டி..”
“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”
“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”
“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.
ஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”
“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”
“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே?”
“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்கறார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா? அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே
நாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”
அலமேலு வாயடைத்து நின்றாள்.
இவள் புதியவள் இதழுக்கு இனிய நன்றிகள்
Tweet |
53 comments:
சூப்பர்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
கதையின் அதே சாராம்சத்தில் உண்மை சம்பவம் ஒன்று எனக்கு அருகிலேயே உண்டு!
சலாம் அக்கா
கலக்கிட்டீங்க.... உங்க கை கொடுங்க.... குலுக்கிகிறேன்!!!!
எல்லா விடயத்திலும் வேறு கோணம் உண்டுதானே
நல்லா எழுதியிருக்கீங்க
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
வாழ்த்துக்கள்!
Naan ennoda girlfriend kooda outing pogum podhu intha same feeling enakkum vanthurukku;>
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
gud luk
வழக்கம்போல வாழ்த்துகள் பத்திரிகைப் படைப்பிற்கு.
அழகுங்கிற ஒற்றைச் சொல், என்ன பாடு படுத்துது பாருங்க. அவளுக்குக் கிடைச்சிருக்கும் நல்ல வாழ்வைக் கூட ரசிக்க விடாமல் துரத்தும் உலகம். மத்தவங்க சொல்றதையெல்லாம் பாத்துகிட்டிருந்தா, வேலைக்காவாதுன்னு ஜானகிக்குச் சொல்லுங்க.
ஆமா, ஜானகி ரெண்டு இடத்துல மகியாகிட்டாளே, வீட்டுல கூப்பிடற செல்லப் பேரா அது? ;-)))))))
சூப்பர்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க...
//கலாநேசன் said...
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி கலாநேசன்.
//Chitra said...
சூப்பர்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க.
// வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா.
//இராஜராஜேஸ்வரி said...
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
//
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
//ஷர்புதீன் said...
கதையின் அதே சாராம்சத்தில் உண்மை சம்பவம் ஒன்று எனக்கு அருகிலேயே உண்டு!//
உண்மை சம்பவங்கள் தானே மெருகூட்டி கற்பனையில் புனையப்படுகின்றது ஷர்புதீன்.மிக்க நன்றி கருத்துக்கு,
//ஆமினா said...
சலாம் அக்கா
கலக்கிட்டீங்க.... உங்க கை கொடுங்க.... குலுக்கிகிறேன்!!!!..//
வ அலைக்கும் சலாம் ஆமினா.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஹப்பப்பா..ஆமினா தந்த ஷேக் ஹாண்டில் கையெல்லாம் ஜில்லிட்டு போய் விட்டது.:-)
கருத்துக்கு மிக்க நன்றி.
// நட்புடன் ஜமால் said...
எல்லா விடயத்திலும் வேறு கோணம் உண்டுதானே
நல்லா எழுதியிருக்கீங்க// சரியாக சொன்னீர்கள் சகோ ஜமால்.கருத்துக்கு மிக்க நன்றி.
//அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
வாழ்த்துக்கள்!// வ அலைக்கு சலாம் ஆயிஷா,வாழ்த்துக்களுக்கு நன்றி.
//கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
Naan ennoda girlfriend kooda outing pogum podhu intha same feeling enakkum vanthurukku;>
//
முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ.
//ரியாஸ் அஹமது said...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரியாஸ்
//karurkirukkan said...
gud luk// மிக்க நன்றிங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
//அழகுங்கிற ஒற்றைச் சொல், என்ன பாடு படுத்துது பாருங்க. அவளுக்குக் கிடைச்சிருக்கும் நல்ல வாழ்வைக் கூட ரசிக்க விடாமல் துரத்தும் உலகம். //
உண்மைதான் ஹுசைனம்மா.அநேகரது வாழ்வில் நடந்திருப்பதை ஊடகம் வழியாகவும் நேரிலும் அறிந்துகொண்டுதானிருக்கிறோம்.
//ஜானகி ரெண்டு இடத்துல மகியாகிட்டாளே, வீட்டுல கூப்பிடற செல்லப் பேரா அது? ;-)))))))// இப்ப பாருங்க...:-)
//சே.குமார் said...
சூப்பர்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க...// வாழ்த்துக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சே.குமார்.
சூப்பர் கதை! வாழ்த்துக்கள், அக்கா.
கதை ரொம்ப நல்லா யதார்த்தமா இருக்குக்கா...மேலும் படைப்புகள் எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
ஸாதிகா அக்கா... தலைப்பைப் பார்த்ததும் ஸாதிகா அக்காவுக்கு ஏதோ லொட்டரி விழுந்திட்டுதாக்கும் என ஓடிவந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).
எங்கட மகிட பேர் அடிபடுதேஏஏஏஏஏ.... ஆஆஆ.. மெதுவா பத்த வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:))).
சூப்பராக இருக்கு கதை, எதிர்பாராத திருப்பமான முடிவு. தாழ்வுமனப்பான்மை நிறையப் பேரிடம் இருப்பதனாலே, குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் உருவாகுது..
புத்தகத்தில் கதை வெளியானமைக்கு வாழ்த்துகள் ஸாதிகா அக்கா. தொடருங்கோ.
பாருங்கோவன்... அவ அமெரிக்காவால திரும்பி வரும்போது ஊரே கையில:) விரல வச்சுப் பார்க்கிறமாதிரி மகி மாறியிருப்பா தோற்றத்தில.... பிறகு... அதே ஊரார் சொல்வார்கள்..”இதெல்லோ ஜோடிப்பொருத்தம்” எண்டு.
அப்ப நான் போட்டுவரட்டே ஸாதிகா அக்கா...
இட்லி அவிக்கோணும், சட்னி செய்தாச்சூஊஊஊஊஊஊ.
கதை அருமை
பத்திரிக்கையில் கதை வந்ததுக்கு வாழ்த்துக்கள் கதை நல்லா இருக்கு. பத்திரிக்கையில் கூட இவ்வளவு கமெண்ட் பார்த்திருக்க முடியாது. பதிவில் எவ்வளவு உற்சாக மான கமெண்ட்களைப்பார்க்கமுடியரது.
அதிர்ஷ்டம் என்பது அவரவர் கோணத்தில் எப்படி மாறுபடுகிறது எனக் காட்டியிருப்பது அருமை. வாழ்த்துக்கள் ஸாதிகா. ஜானகி இது போன்ற பேச்சுக்களை துச்சமாக ஒதுக்கித் தள்ளி நிமிர்ந்து வருவாளாக!
//ஆமினா அக்காள் அழுதது
சலாம் அக்கா
கலக்கிட்டீங்க.... உங்க கை கொடுங்க.... குலுக்கிகிறேன்!!!!//
கையை கொடுக்காதிர்கள் அக்காள் சுலுக்கிக்கப் போகிறது.
கதை சுவாரஷ்யமாகத்தான் போகிறது...
ஆனால் முடிவை கொஞ்சம் நீளப்படுத்தி...கொஞ்சம் இழுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் படிக்கலாம்னுதான்...
வாழ்த்துக்கள்!
ரமதான் கரீம்.
உண்மை தான் நேரடியாக அதிர்ஷ்டசாலி என்று சொன்னால் அதிர்ஷ்டசாலி ஆகலாம்... அவரை கட்டிக்கிட்டதால தான் நீ அதிர்ஷ்டசாலி என்பது அவளை பொறுத்தவரை துரதிஷ்டசாலி என்பதை அழகான நடையில் அசத்தியுள்ளீர்கள்... இவள் புதியவளில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்
மிக்க நன்றி வானதி’
//S.Menaga said...
கதை ரொம்ப நல்லா யதார்த்தமா இருக்குக்கா.// ,மிக்க நன்றி மேனகா.
//தலைப்பைப் பார்த்ததும் ஸாதிகா அக்காவுக்கு ஏதோ லொட்டரி விழுந்திட்டுதாக்கும் என ஓடிவந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).// ஹே..ஹே...எப்பூடீ எல்லாம் கிட்னியை யூஸ் பண்ணுறீங்க பூஸ்.
//தாழ்வுமனப்பான்மை நிறையப் பேரிடம் இருப்பதனாலே, குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் உருவாகுது..
// இதுதான் அநேக குடும்புங்களில் நடந்து வரும் பிரச்சினை.
//அமெரிக்காவால திரும்பி வரும்போது ஊரே கையில:) விரல வச்சுப் பார்க்கிறமாதிரி மகி மாறியிருப்பா தோற்றத்தில.... பிறகு... அதே ஊரார் சொல்வார்கள்..”இதெல்லோ ஜோடிப்பொருத்தம்” எண்டு. // அஹா..எந்த அளவுக்கு கதையை ஆழ்ந்து படிச்சு இருக்கீங்கங்கறது புரியுது அதீஸ்.உங்கட பின்னூட்டத்தை படிக்கும் பொழுது சந்தோஷமா உள்ளது.சீக்கிரம் இன்னொரு கதை எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது .ரொம்ப தேங்க்ஸ் அதீஸ்.
// DRபாலா said...
கதை அருமை// முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ பாலா.
வாங்க லக்ஷ்மியம்மா.உண்மைதான் பத்திரிகையில் கூட இவ்வளவு கமண்ட் வராது.வந்தாலும் நமக்கு தெரியப்போவதுமில்லை.இதுதான் பிளாக்குக்கே உரித்தான பிளஸ் பாயிண்ட்.உடனுக்குடன் விமர்சனம் கிடைத்து விடுவதால் நாம் தவறுகளில் திருத்திக்கொள்ளவும்,இன்னும் உற்சாகத்துடன் எழுதவும் இந்த பிலாக் வழிவகை செய்கின்றது என்றால் மிகை இல்லை.கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி லக்ஷ்மிம்மா
கருத்திட்டமைக்கு மிக நன்றி சகோ ராமலக்ஷ்மி.
//முடிவை கொஞ்சம் நீளப்படுத்தி...கொஞ்சம் இழுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் படிக்கலாம்னுதான்..//
செய்து இருக்கலாம்தான்.ஆனால் எப்பவுமே கதை மற்றும் பதிவுகளை நீளப்படுத்தினால் படிப்பவர்கள் கொட்டாவி விட்டு விடுவார்களோ என்ற பயமும் ஒரு காரணம்.அதனால் என் படைப்புகள் எப்பவும் சற்று சுருங்க இருக்கும் படி அநேகமாக பார்த்துக்கொள்வேன்.கருத்துக்கு மிக்க நன்றி அந்நியன்
உற்சாகம் ஊட்டும் பின்னூட்டவரிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மாய உலகம்
நல்ல கதை ஸாதிகாக்கா! நுட்பமான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கீங்க கதையில்!
//ஜானகி ரெண்டு இடத்துல மகியாகிட்டாளே, வீட்டுல கூப்பிடற செல்லப் பேரா அது? ;-)))))))// இப்ப பாருங்க...:-)
********* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நானும் இதைப் பார்த்தேன்,சரி ஸாதிகாக்கு நம்மளை ரெம்ப பிடிச்சிருக்குபோலன்னு நினைச்சேனே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ;)
வாழ்த்துக்கள் ஸாதிகாக்கா!
வாழ்த்துக்கள்!
கதை நல்லா இருக்கிறது.
congrats shadiqah.
மிக அருமையான கதை கரு.
வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள்.
கருத்துக்கு மிக்க நன்றி மகி.
கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதிஅரசு.
நன்றி ஆசியா.
நன்றி ஜலீலா
கதையில் வெளிப்படும் நுண்மன உணர்வுகள் பிரமாதம். மனப்பொருத்தத்தோடு உடற்பொருத்தமும் வேண்டும் என்று இதனால்தான் சொல்கிறார்கள் போலும். புத்தகத்தில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.
Post a Comment