இனிய சூழல் கண்டு நெகிழ்ந்து விட்டது நெஞ்சம்
உன்னத உறவுகள் கண்டு உவகையானது உள்ளம்
தொப்புள்கொடி உறவுகளால் தொலைந்து போனது துயரம்
சந்தித்த வெற்றிகளால் தேனினிப்பானது இதயம் .
வண்ண பூக்கள் கண்டு மனம் வாசமாகியது
வருடும் வளி கண்டு மகிழ்வு வானளவானது
சிமிட்டும் நட்சத்திரம் கண்டு மண்டும் வலி போனது
இனி எதிர்காலங்கள் வழி ஒளிகொண்டது.
இனிமை வாழ்வு தந்த இறைவனை நினைக்கையில்
எப்பொழுதும் முன் நெற்றி தரை தாழ நினைத்தது
முப்பொழுதும் எப்பொழுதும் என்னிறைவன் தன் நினைவில்
முக்தியான வாழ்வுத்தன்னை வாகாக பெற்றிடலாம்.
மகளாகி மனைவியாகி தாயாகி பாட்டியாகி
தனித்துவத்துடன் வாழ்ந்தாலும்
இன்னும் மனதினில் சிறுமியின் உற்சாகம்
இந்த நொடியிலினிலும் சாதிக்கும் உத்வேகம்.
அன்று பிறந்த மேனி அகத்தில்தான் பழமென்றாலும்
இன்று பிறந்த மனம் புறத்திலும் புதிதுதான்
சுற்றி வரும் உற்சாகத்தில் வயதொன்றும் பெரிதில்லை
பெருகி வரும் புண்ணியத்தில் வயதுகளைத் தொலைக்கவில்லை.
வான் கண்டு,மதிகண்டு,புவி கண்டு,மலை கண்டு
நீர் நிலை கண்டு,பனித்துளிகண்டு,வெண் மேகம் கண்டு
குளிரும் தென்றல் கண்டும்,வருடும் வெயில் கண்டு
பெய்யும் நன்மழைகண்டு,நல்கும் நல்விளைகண்டு
பறக்கும் கிளி கண்டு,கூவும் குயில் கண்டு
அகவை விரிக்கும் மயில் கண்டு,சாயும் அந்தி கண்டு
மனமெங்கும் சந்தனமாய் மணக்கின்றதே
உள்ளத்தில் உற்சாகம் பூக்கின்றதே
அகவை தொலைகின்றதே
அல்லும் பகலும் இனிக்கின்றதே
உள்ளங்கை வண்ண வண்ண
பிணி போக்கும் மாத்திரைகளின்
‘வடிவங்களை நோக்கும் பொழுதில்
அகவை தெரின்றதே
அத்தனையும் மொத்தமாக
அள்ளிச்செல்கின்றதே.
Tweet |
39 comments:
//மகளாகி மனைவியாகி தாயாகி பாட்டியாகி
தனித்துவத்துடன் வாழ்ந்தாலும்
இன்னும் மனதினில் சிறுமியின் உற்சாகம்//
அதுக்கு என்னை மாதிரி சின்னப் பொண்ணுங்க சகவாசம்தான் காரணம்னு சொல்லாம விட்டுட்டீங்க பாருங்க!! ;-))))
//உள்ளங்கை வண்ண வண்ண பிணி போக்கும் மாத்திரைகளின்‘வடிவங்களை //
ஒரு கேள்வி; யோசிக்காம, எதையும் ரெஃபர் பண்ணாம, உடனே பதில் சொல்லணும் சரியா?
நீங்க சாப்பிடற மாத்திரைகளின் கலர்களும், வடிவங்களும் உடனே சொல்லுங்க பாப்போம். ;-))))))))
தங்கையே.படைப்புகள் எல்லாம் அனுபவமாகி விடுமா என்ன?முதல் கருத்துக்கு நன்றி.
ரொம்ப நல்லா இருந்துச்சு சாதிகா அக்கா....
//.படைப்புகள் எல்லாம் அனுபவமாகி விடுமா என்ன?//
சரி தான் :)
கவிதை சூப்பர் ....
கடைசியா என்னவோ பாட்டின்னு வருதே..??? ஹி...ஹி.. :-))
சூப்பரோ சூப்பர் கவிதை.
கருத்துக்கு மிக்க நன்றி ஆமினா.
வாங்க ஜெய்லானி வாங்க.வழக்கம் போல் சந்தேகத்துடன் வந்து இருக்கீங்க.ஸ்கூலில் படிக்கும் பொழுது தமிழ் பாடத்தில் பொருள் தருக என்று வரும் வினாக்களுக்கு அளிக்கும் விடை போல் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்கின்றேன்.
வலி =வேதனை
வழி = பாதை,தடம்
வளி = காற்று
இப்ப புரிஞ்சதோல்லியோ?//கடைசியா என்னவோ பாட்டின்னு வருதே..??? ஹி...ஹி.. :-))
// ஆமா..பாட்டின்னுதான் வருது.அதுக்கு இப்போ என்ன?
கருத்துக்கு மிக்க நன்றி.
ஒரே வரியில் சூப்பர் கருத்து சொன்ன வானதிக்கு நன்றி.
நானும் தங்கள் ரசிப்பு மனத்தோடு
சந்தோஷத்தோடு சந்தோஷமாய்
கவிதையில் பயணித்துக்கொண்டே வந்தேன்
இறுதியில் மாத்திரைகளின் வடிவங்களில் அகவை தெரிவது
என்ற வரிகள் வந்தபோது மனம் ஒரு கணம் அதிர்ந்து போனது
இனிமையான அழகான இயற்கை எத்தனை
இரக்க மற்றதாயும் கொடுமையானதாகவும் இருக்கிறது என
எண்ணம் வர கலங்கிப் போனேன்
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்
கவிதை சூப்பர் ....அக்கா
நன்றி.
ரொம்ப ரொம்ப அருமை ஸாதிகா அக்கா...அழகாக எழுதி இருக்கின்றிங்க..
மகளாகி முதல் பாட்டி ஆனால், மனதில் இன்னமும் சிறுமியின் உற்சாகம் இருப்பாதாக சொல்லி இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது..
வாழ்த்துகள்....
வயதாகின்றதே என்று வருத்தப்படாதீர்கள் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை
என்ற பொன்மொழி நினைவுக்கு வந்தது
நன்றாகவுள்ளது.
இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html
நன்றி.
கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.பின்னூட்டங்களின் வரிகளை படிக்கையில் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கின்றது.மிக்க நன்றி.
மிக்க நன்றி அந்நியன்.
கருத்துக்கு மிக்க நன்றி கீதாஆச்சல்.
கருத்துக்கும்,வலைச்சர அறிமுகத்திற்கும் மிக்க நன்றி சகோ இரா.குணசீலன்.
கவிதை அருமை சகோ...
பகிர்வுக்கு நன்றி சகோ...
அருமையான கவிதை
அருமையான வரிகள்
"உள்ளங்கை வண்ண வண்ண
பிணி போக்கும் மாத்திரைகளின்
‘வடிவங்களை நோக்கும் பொழுதில்
அகவை தெரின்றதே
அத்தனையும் மொத்தமாக
அள்ளிச்செல்கின்றதே."
யதார்த்தத்தை பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லும் அழகான வரிகள் ஸாதிகா!
அல்ஹம்துலில்லாஹ்!
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً
The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً
I have given Link to your site in
http://seasonsali.com/ in
LINK 5(Tamil)as எல்லாப்புகழும் இறைவனுக்கே.Please visit
ராம்நாடு....டூ.....அழகன்குளம். போலாம் ரைட்..
கருத்துக்கு மிக்க நன்றி சகோ M.R
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராஜபாட்டை
//யதார்த்தத்தை பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லும் அழகான வரிகள்// வரிகளில் மிக்க மகிழ்ச்சி மனோ அக்கா.கருத்துக்கு மிக்க நன்றி.
சகோ முஹம்மத் அலி ஜின்னாஹ்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு.உங்கள் வலைப்பூவில் எனது வலிப்பூவின் லின்கை இணைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.உங்கள் வலைப்பூவுக்கு வந்து என்னால் பின்னூட்டம் கொடுக்க இயலவில்லை.தயவு செய்து சரி செய்தால் பின்னூட்டுவேன்,
// அந்நியன் 2 said...
ராம்நாடு....டூ.....அழகன்குளம். போலாம் ரைட்.// அந்நியன் தலைப்பே அபாரம்.போய்ட்டேன்.ரைட்..
அருமையான கவிதை.
இயற்க்கை என்னும் இளைய கன்னி.. ஏங்குகிறாள் பதிவை படிக்க எண்ணி... சகோதரி மனங்கவரும் தலைப்பு
இத்தனை சந்தோசமான பாடல் வரிகள் சினிமா பாடல் வரிகளில் கூட கேட்டதில்லை அனைத்துமே மகிழ்ச்சியான பாஸிட்டிவாக உள்ள வரிகள்.. வாவ் இப்படி ஒரு சந்தோசம் வாழ்க்கையில் இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் இறைவா சகோதரியை இந்த பாடல் வரிகளைபோல் சந்தோசமாக வைத்திரு... சிறுமியின் உற்சாகத்துடன் வாழ்த்துக்கள் சகோ..
எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
அருமையான பாடல் தொகுப்பாக
வைத்திருக்கிறீர்கள்
இப்போது நெஞ்சம் மறப்பதில்லை பாடலைக் கேட்டேன்
தினமும் ஒரு பாடலாவது முன்பு கேட்பேன்
இப்போது அந்த கேசெட் எல்லாம் பயனற்றுப்போய்விட்டதால்
என்ன செய்வது என சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன்
தக்க சமயத்தில் தங்கள் மூலம் கிடைக்க மிக்க மகிழ்ச்சி
தினமும் கேட்டு ரசித்துக்கொள்ள தங்கள்
பதிவுடன் இணைப்பை ஏற்படுத்துக்கொண்டுள்ளேன்
நன்றி,வாழ்த்துக்கள்
ஆஆஆஆஆஆ ஸாதிகா அக்காவின் அடுத்த கவிதை வெளிவந்துவிட்டது... ஏன் கவிதை எனப்போட்டிருக்கிறீங்க? உங்கள் கவிதை(என்) எனப் போட்டிருக்கலாமெல்லோ?
//மகளாகி மனைவியாகி தாயாகி பாட்டியாகி
தனித்துவத்துடன் வாழ்ந்தாலும்
இன்னும் மனதினில் சிறுமியின் உற்சாகம்
இந்த நொடியிலினிலும் சாதிக்கும் உத்வேகம்.//
அழகாகச் சொல்லிட்டீங்க... உடம்பிலும் வயதிலும் எதுவும் இல்லை, எல்லாம் மனதில்தான் தங்கியிருக்கு.
ஜெய்க்கு இப்போ சந்தேகமே வருவதில்லையே என “சந்தேகமாக”:) இருந்துது எனக்கு... வந்துட்டுதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி சகோ...
அருமை.. கவித கவித.. எதிர்பார்க்கலை.. எனவே ரொம்ப அருமை ஸாதிகா..:)
இனிமை வாழ்வு தந்த இறைவனை நினைக்கையில்
எப்பொழுதும் முன் நெற்றி தரை தாழ நினைத்தது
முப்பொழுதும் எப்பொழுதும் என்னிறைவன் தன் நினைவில்
முக்தியான வாழ்வுத்தன்னை வாகாக பெற்றிடலாம்//
உண்மை, உண்மை.
கவிதை அருமை.
இனிமை வாழ்வு தந்த இறைவனை நினைக்கையில்
எப்பொழுதும் முன் நெற்றி தரை தாழ நினைத்தது
முப்பொழுதும் எப்பொழுதும் என்னிறைவன் தன் நினைவில்
முக்தியான வாழ்வுத்தன்னை வாகாக பெற்றிடலாம்.//
உண்மை உண்மை.
கவிதை அருமை.
வார்த்தை பிரயோகங்கள் அழகாய அமைந்திருக்கின்றன... வாழ்த்துக்கள்
Post a Comment