கம்பீரக்குரலால் செயியுறுபவர்களை கட்டிப்போட வைக்கும் வசியக்குரலுக்கு சொந்தக்காரர் டி எம் எஸ்.
அந்தக்காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி படங்கள் என்றால் டி எம் எஸ் இல்லாத பாட்டுக்களே இல்லை எனலாம்.
அந்தளவுக்கு அநேக படங்களுக்கு இவர்கள் இருவருக்காகவும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி படங்கள் இமாலய வெற்றிபெற உதவி இருக்கின்றார்.
பக்திபாடல்கள், குறிப்பாக முருக பக்திபாடல்கள் பாடி நடித்து இயக்கி இப்படி பன்முகம் காட்டி திரையுலகில் வலம் வந்த ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர்.
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்ற தத்துவப்பாடலாகட்டும்,எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற சோகப்பாடலாகட்டும்,
குறத்தி வாடி என் குப்பி என்ற ஹைபிட்சில் ஒலித்த பாடலாகட்டும்,ஞாயிறு என்பது பெண்ணாக என்ற மெலடிபாடலாகட்டும்,
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ என்ற டப்பாங்குத்து பாடலாகட்டும்,
பாவடை தாவணியில் பார்த்த உருவமா என்ற அமைதிப்பாடலாகட்டும்,மலர்களை போல் தங்கை என்ற பாசத்தைக்குழைத்து குரலெடுத்து பாடிய பாடலாகட்டும்,
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற காதல் பாடலாகட்டும் குரலை ரப்பர் போன்று வளைத்து,நெளித்து,கேட்போரை நெகிழ வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.
பல்லாயிரக்கணக்கான அவர் பாடிய பாடல்களில் இருந்து ஒரு சத பாடலகளை மட்டும் தேர்ந்தெடுத்து உங்கள் முன் படைக்கின்றேன்.கேட்டு மகிழுங்கள்.
20.ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
Tweet |
22 comments:
அனைத்து பாடல்களும் இனிமையான கணீர் பாடல்கள். நேரம் கிடைக்கும் போது பாடல்களை கேட்கிறேன்.
காலத்தால் அழியாத பாடல்கள்...!!!
நல்ல தொகுப்பு ஸாதிகா. கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளான இன்று அவரது வரிகளுக்கு உயிர் கொடுத்த டி.எம்.எஸ்ஸின் பாடல்களை வழங்கியிருப்பது இருவருக்குமான மரியாதையாக அமைந்து விட்டுள்ளது.
ஸாதிகா அக்கா...ஆஆஆஆஆஆஆ கேட்குதோஓஓஓஓஒ முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஏன் தெரியுமோ? கரெக்ட்டா நான் இல்லாத நேரம் பார்த்துத் தலைப்பைப் போட்டு வட.. கிடைக்காமல் பண்ணினதுக்கு...:))):((.
ராமலக்ஷ்மி said...
நல்ல தொகுப்பு ஸாதிகா. கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளான இன்று///
அடக் கடவுளே.... 6ம் நம்பர் எங்கட கண்ணதாசன் எனத் தெரியும், ஆனா இன்றோ பிறந்தநாள் அவருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. நல்ல நாளில் நல்ல தலைப்பு போட்டிருக்கிறீங்க.. நான் இன்னும் முழுதையும் பார்க்கவில்லை..
சூப்பர் ஸாதிகா அக்கா சூப்பர்.
எனக்கும் ரிஎம் எஸ் குரல் நன்கு பிடிக்கும்... கிட்டத்தட்ட அவரது அனைத்து பாடல்களும் பலதடவைகள் கேட்டிருக்கிறேன்...
100 போட்டிருக்கிறீங்களே ஒரேயடியாக... அவ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு எதைக் கேட்பதென்றே தெரியவில்லை...
சூப்பர்ர்,காலத்தால் அழியாத பாடல் தொகுப்பு.எனக்கும் இவரின் கணீர் குரல் ரொம்ப பிடிக்கும்.
எல்லாபாடல்களுமே திரும்பத்திரும்ப
கேட்க்கத்தூண்டும் பாடல்கள்தான்.
பகிர்வுக்கு நன்றி
அருமையான எவர் கிரீன் பாடல்கள்
காலத்தால் அழியாத பொருள் நிறைந்த அருமையான பாடல்கள் அனைத்தும்.பலமுறை கேட்டாலும் அலுக்காதவை.பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்........
அருமையான தொகுப்பு ஸாதிகா. ஒரேயடியா இப்பிடிப் போட்டால்... எதைக் கேட்கிறது, எதை விடுறது!
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
நல்ல தொகுப்பு ஸாதிகாக்கா! டி.எம்.எஸ்-ஸின் குரல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
ungal pathivuku nandri
ஸாதிகா அக்கா... கோபித்திடாதீங்க.. எனக்கொரு டவுட்டூஊஊஊஉ..
//MANO நாஞ்சில் மனோ said...
காலத்தால் அழியாத பாடல்கள்...!!//
ரேஷர் அழிக்கும், தண்ணி அழிக்கும், காலம் எப்பூடி அழிக்கும்?:))) காலத்துக்கு கலர்... உருவம் இருக்கோ?::)))..
சொல்லுங்க ஸாதிகா அக்கா... டவுட்டை வச்சிருக்கப்புடாதாம், கேட்டுத் தெளிஞ்சிடோணுமாம்... அம்மம்மா சொல்லியிருக்கிறா:)))))). இப்போதைக்கு மீ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))))).
ஆஹா....
நல்ல இசையை பற்றிய ஒரு பதிவை படித்து நெடுநாட்களாகிறதே என்றெண்ணி இருந்த வேளையில் உங்களின் இந்த டி.எம்.எஸ். பற்றிய பதிவு...
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய முதல் பாடலான “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்று முருகர் மேல் பாடிய பாடலாகட்டும், திரையிசையில் கோலோச்சி, எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு பாடிய பாடல்கள் ஆகட்டும், அனைத்து விதமான பாடல்களிலும் தனக்கென ஒரு பாணியை வைத்து, தமிழை அழகாக உச்சரித்ததில் பாடகர் டி.எம்.எஸ். பாராட்டப்பட வேண்டியவர்...
டி.எம்.எஸ் அவர்கள் பாடிய அருணகிரிநாதர் பாடலான “அத்தித்திரு முத்தித்திருநகை” பாடலை இன்று கேட்டாலும் புல்லரிக்குமே...
மிக மிக ரசிக்க வைத்த பதிவு... வாழ்த்துகள் ஸாதிகா... (விடுமுறையில் இருந்ததால், வந்ததும், உங்களின் இந்த பதிவை படித்து ஒரு கமெண்ட்...)
நல்ல பதிவு அக்கா அருமையான பாடல்கள் அருமையான தொகுப்பு
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய், அமீரகம்
avar iyengar illai..sowrashtra inathai sarnthavar..anaivarum perumai pada vendum
நல்ல பகிர்வு ஸாதிகாக்கா. பாடல்கள் தேர்வு அருமை.
100 பாடல்களும், அதுக்கான லிங்குகள் கூடவுமா? ஆச்சர்யம்.
நல்ல பாடகர். ஆனால், இன்றைய காலத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், சின்ன பிள்ளை போல, ஸ்பாட் லைட் தன்மீதே இப்பவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல இருக்கும் அவரது செய்கைகள்.
(ஐயங்காரா அவர்? சௌராஷ்ட்ர இனத்தைச் சேர்ந்தவர் என்று படித்த ஞாபகம்)
சூப்பர் கலெக்ஷன் ஸாதிகா.:))
நிறைய உழைத்திருக்கிறீர்கள் ., எனது மிக மிக பிடித்த பாடல் என்று இதில் " நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" - அமைதியான நதியினிலே ஓடம்"
//(ஐயங்காரா அவர்? சௌராஷ்ட்ர இனத்தைச் சேர்ந்தவர் என்று படித்த ஞாபகம்)..
ஆம் அவர் நீங்கள் சொல்லும் இனத்தை சேர்ந்தவர்தான்!
Post a Comment