லைஃப் டைம் ஹேப்பி டூர்
டூரை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.ஒன்று செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்.மற்றொன்று பேக்கேஜ் டூர்.
செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்:
1.நீங்களாகவே திட்டமிட்டு டூர் செல்வதென்றால் பக்காவாக திட்டமிட்டு ஒவ்வொரு சிறு திட்டங்களையும் டைரி ஒன்றில் குறிப்பெழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
2.செலவுக்கான தொகையை அனைத்தும் பணமாக வைத்திராமல்,குடும்ப உறுப்பினரகள் அனைவரது டெபிட்,கிரடிட் கார்டுகளை அவ்வப்பொழுது உபயோகித்துக்கொள்ளுங்கள்.
3.குழந்தைகளை அழைத்துச்செல்வதாக இருந்தால் தங்கி இருக்கும் ஹோட்டல் முகவரி.போன் நம்பர்,கைபேசி நம்பர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
4.மலிவாக கிடைக்கின்றதே என்று கண்ட உணவகங்களில் சாப்பிட்டு வயிற்றை அப்செட் செய்து கொள்ளாதீர்கள்.
5.குறிப்பிட்ட இடத்துக்கு தங்கி இருக்கும் இடத்தில் இருந்து செல்வதென்றால் அந்த இடத்தைப்பற்றி முன்னரே அறிந்து கொள்வதோடு தங்கி இருக்கும் இடத்திற்கும் ,செல்லக்கூடிய ஸ்பாட்டுக்குமான தூரம்,ஆட்டோ டாக்ஸி கட்டணம் ஆகியவற்றை கேட்டு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
6.செல்லும் இடத்தில் தரமான உணவு எங்கு கிடைக்கும் என்று தங்கி இருக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டாலும் உதவுவார்கள்.
7.செலவுகளை சிக்கனம் செய்ய ஒரு வேளைக்கு டிப் டீ,ஒட்ஸ்,கப் ஓ நூடுல்ஸ்,பிரட் பட்டர் ஜாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய அமவுண்ட் மிச்சமாகும்.தயாரிப்பதும் சுலபம்.
8.உறவினர் வீடுகளில் தங்குவதென்றால் அவர்களுக்கு துளியும் சிரமம் தராமல் கவனத்துடன் செயல்படுங்கள்.அவர்கள் வீட்டில் இருந்து சோப்,பேஸ்ட்,ஷாம்பூ,சீப்பு,எண்ணெய்,டவல் என்று எதிர்பர்க்காமல் அனைத்தையும் நீங்களே எடுத்து சென்றுவிடுங்கள்.
9.ஊரில் இருந்து எடுத்து வந்தேன் என்று ஒரு கிலோ ஸ்வீட் பாக்கெட்டும்,அரைகிலோ மிக்சர் பாக்கெட்டையும் கொடுத்து கடமை முடிந்தது என்றிராமல் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பால் பாக்கெட்டுகள்,பிரட் பாக்கெட்டுகள்,பட்டர்,நெய்,காய்கறிகள்,அசைவ உணவுவகைகள் சாப்பிடுபவர்கள் என்றால் சிக்கன்.மட்டன்.முட்டைகள் போன்றவற்றை வாங்கி வந்து கொடுத்தால் தயக்கத்துடன்,லஜ்ஜையுடன் அவர்கள் பெற்றுக்கொண்டாலும்,கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.
10.இறுதியாக உறவினரிடம் அதிக எதிர்பார்பின்றி,கிடைக்கும் உபசரணைகளில் முழு திருப்தியுற்று, குறைகளை களைத்தெரிந்து விட்டு இன்பமுடன் பிரியாவிடை பெறுங்கள்.அந்த அனுபவம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கும்.
பேக்கேஜ் டூர்:
1.குழுக்களோடு சேர்ந்து செல்லும் டூரில் சகிப்புத்தன்மையும்,பொறுமை உணர்வும்,விட்டுக்கொடுக்கும் தன்மையும் அதிகமிருந்தால் அந்த டூர் இன்பகரமாக அமையும்.
2.ஓய்வென்பது சொற்ப கால அவகாசத்தில்த்தான் குழு சுற்றுலாவில் கிடைப்பதால் ரெஃப்ரஷ் செய்து கொள்ள ஜுஸ்,க்ளுகோஸ் போன்றவற்றை கையோடு எடுத்து செல்லுங்கள்.வலி நிவாரண மருந்துகள்,தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.
3.மற்ற பயணிகளுடன் உங்களை கம்பேர் பண்ணாமல் இருந்தாலே டூர் சுகமாக அமையும்.
4.வாகனங்களில் செல்லும் பொழுது வசதியான இருக்கை,ஜன்னலோர இருக்கை,என்று அடம் பிடிக்காதீர்கள்.அதே போல் தங்கி இருக்கும் அறை ரோட்டை பார்த்தாற்போல் வேண்டும்,ரூம் சர்வீஸ் சரி இல்லை,சாப்பாடு சூடு இல்லை என்று சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போங்கள்.
5.சுற்றிப்பார்க்கும் பொழுது கூட வந்த பயணிகளை விட்டும் தனித்து சென்று விடாதீர்கள்.சக பயணிகளுடன் நட்பை வளர்த்துக்கொண்டு அவர்களுடனான கைபேசி நம்பரை வாங்கி சேமித்துக்கொள்ளுங்கள்.அவசரத்திற்கு உதவலாம்.
6.இப்பொழுது டிஜிட்டல் கேமரா இல்லாத வீடுகளே இல்லை எனலாம்..இயன்றவரை ,புகைபடங்களும்,வீடியோவும் எடுக்க கூச்சப்படாதீர்கள்.டூர் முடிந்து போனாலும் காலாகாலத்திற்கும் வைத்து பார்த்து மகிழலாம்.படங்களை வெறும் பென்டிரைவிலும்,பி சியிலும்,சிடிக்களிலும் சேமித்து வைப்பதை விட பிரிண்டுகள் போட்டு ஆல்பமாக வைத்துக்கொள்ளலாம்.
7.சுற்றுலா நிர்வாகத்தினரே சாப்பாடு தருவதானாலும்,நொறுக்குத்தீனிகளை கையுடன் எடுத்துச்செல்வதின் மூலம் குழந்தைகளின் பிடுங்கள்களில் இருந்து தப்பிக்கலாம்.கையுடன் எப்பொழுது தண்ணீர் பாட்டில்கள் இருக்கட்டும்.
8.பெரிய பாலித்தீன் பேக்குகள் எடுத்துச்சென்று அழுக்குத்துணிகளை அதில் போட்டு வைத்து டூரை முடித்துக்கொண்டு திரும்பும் பொழுது அந்த பைகளுடன் சூட்கேஸ்களில் திணித்துக்கொண்டு ஊர் திரும்பலாம்.
9.கோபத்தில் சப்தமிட்டு பேசுவது,மனைவியிடமோ அல்லது கணவரிடமோ குழந்தைகளிடமோ கோபம் வந்தால் அதை நாண்கு பேர்களுக்கு முன்பு வெளிப்படுதுவது,குடும்ப விஷயங்களை,குறைநிறைகளை சக பயணிகளின் முன்பு அலசுவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.ஏனெனில் உங்களின் பால் சகபயணிகள் வைத்திருக்கும் மதிப்பும் அன்பும் தடாலென்று சரிந்து போகலாம்.
10.குழந்தைகளை அழவைத்து பார்த்துக்கொண்டிராதீர்கள்.சட் என்று அழுகையை அடக்கி சமாதானப்படுத்துங்கள்.அது சக பயணிகளுக்கு இம்சையாக இருக்கும்.
என்ன டூர் கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்களா?ஹாப்பி ஜர்ணி!
Tweet |
44 comments:
அருமையான அத்தனையும் முத்தான டிப்ஸ்,தோழி,வழக்கம் போல் வாழ்க்கை அனுபவம் கற்றுத்தருகிற பாடத்தை பகிர்ந்த விதம் சூப்பர்,பாராட்டுக்கள்.
டூர் செல்லும் முன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய,திருப்பி பார்க்க வேண்டிய இடுகை.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வட போச்சே... ஆசியாக்கு கர்ர்ர்ர்ர்ர்:))
ரூர் பற்றி மிக விபரமான தகவல்கள் சொல்லிட்டீங்க... நம் நாட்டில் இருப்பவர்களுக்கு அதிகம் யூஸ் ஃபுல்லாக இருக்கும்.
1வது ரூரில் 9ம் நம்பர் படித்ததும் சிரித்திட்டேன்...
ரொம்ப நொந்துபோய் எழுதினமாதிரித் தெரியுது.... ஆ... முறைக்கப்பிடாது.. நான் ஒரு அப்பாஆஆஆஆஆஆவி:))).
//என்ன டூர் கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்களா?ஹாப்பி ஜர்ணி!
//
யெஸ்ஸ்ஸ்ஸ்.. ரெடியாகிட்டோம். எனக்கு எங்கள் குடும்பம் மட்டும் போவதுதான் அதிகமாகப் பிடிக்கும். அதுதான் ஜாலியாக கதைத்துப் பேசி ஆடிப்பாடிப் போகலாம்.... பலபேருடன் என்றால், யோசித்துக் கதைக்க வேண்டும்... நம் விருப்பத்து எதையும் செய்ய முடியாது... இப்படிப் பல தொல்லை... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
மிக்க நன்றி தோழி ஆசியா.உடன் கருத்திட்டமைக்கு.
அதீஸ்..உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்து சிரித்து விட்டேன்.அதிலும் கடைசி வரி...சிரித்து முடியலே.அப்பாவியா?ஆவியா?ஆவி என்றால் நான் மீ த எஸ்கேப்.
நல்ல பயனுள்ள பதிவு ஸாதிகாக்கா.
(ஆனாலும் பாக்கெட்டை காலி செய்ய அருமையான வழிகளில் இதுவும் ஒருவகை தானே!!(சும்மா :-)))
ovvoru murayum tour povadhuna ,sandhoshathoda kooda tensionum jaashti.unga tips romba useful.thanks.
நல்ல ஐடியா'வா இருக்கே நன்றிங்க....
எல்லா குறிப்புகளும் நல்லா இருக்குது.... செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்: Tips are special bonus. Thank you.
அருமையான பகிர்வு அக்கா
போகும் இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருப்பது, சாப்பாடு முடிந்ததும் போய் படுத்து விடுவது இதையும் கொஞ்சம் சேருங்க, அக்கா.
அருமையான பதிவு அம்மா.
பயணத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக தொகுத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
ஸலாம்
அருமையான ,பயனுள்ள பதிவு.தொடருங்கள்...
ஸாதிகா அக்கா..டிப்ஸ் அனைத்துமே சூப்பர்ப்..
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...தொடரட்டும் உங்கள் பணி..
சுப்பர்ப் டிப்ஸ் ஸாதிகா. பாராட்டுக்கள்.
அருமையான டிப்ஸ்.
மிகவும் பயனுள்ள,டைமிங்கான பதிவு அக்கா...உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,ஏற்றுக்கொள்ளவும்..
விடுமுறை நேரத்தில் அவசியமான குறிப்புகளைத் தந்துள்ளீர்கள். மிக நன்று ஸாதிகா.
பாக்கெட்டை காலி ஆனாலும் சந்தோஷமும் ,திருப்தியும் நிறைந்து வழியுமே அப்துல்காதர்.கருத்துக்கு நன்றி!
எனது டிப்ஸ் உபயோகமாக உள்ளது என்று கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி நன்றி சவீதா ரமேஷ்
//நல்ல ஐடியா'வா இருக்கே நன்றிங்க// ரொம்ப நன்றிங்க மனோ சார்.
கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா.
நன்றி பாயிஜா.
போகும் இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருப்பது, சாப்பாடு முடிந்ததும் போய் படுத்து விடுவது இதையும் கொஞ்சம் சேருங்க, அக்கா///அட இது கூட நல்ல டிப்ஸ் ஆக உள்ளதே.மிக்க நன்றி வானதி.
ரத்னவேல் ஐயா,தங்கள் கருத்துக்கும்,ஊக்கவரிகளுக்கும் நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி ஜுமாரஸ்
மிக்க நன்றி கீதா ஆச்சல்
நன்ரி இமா கருத்திட்டமைக்கு
மிக்க நன்றி மேனகா.என்னை மறவாமல் விருது தந்து மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்
மிக்க நன்றி ராமலக்ஷ்மி கருத்திட்டமைக்கு
அட...
இப்போ டூர்க்கு கூட டிப்ஸ் தர ஆரம்பிச்சுட்டீங்களா?
பலே.. ஆனாலும், நீங்கள் சொன்னவை அனைத்தும் நல்ல டிப்ஸ்... டூர் போக நினைக்கும் அனைவருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது...
உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..
எல்லாமே அவசியமான அருமையான டிப்ஸ்கள்தான் அக்கா. ‘அனுபவசாலி’ன்னு தெரியுது!! :-))))
அஸ்ஸலாமு அழைக்கும்
கோடை விடுமுறைக்கு அனைவருக்கும் பயன்னுள்ள பதிவு.
பயனுள்ள டிப்ஸ்சுக்கு நன்றி நன்றி
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நல்ல தொகுப்பு ஸாதிகாக்கா! பத்திரிக்கைகளில் உங்கள் எழுத்தை அடிக்கடி காண்பதில் மகிழ்ச்சி! இந்த முன்னேற்றம் இன்னும் தொடர வாழ்த்துக்கள்! :)
பயனுள்ள அருமையான டிப்ஸ்
கருத்துக்கு மிக்க நன்றி கோபி.
//‘அனுபவசாலி’ன்னு தெரியுது!! :-))))
// ஏன் ஹுசைனம்மா..இதில் உங்களுக்கு அனுபவம் இல்லையா?:-) கருத்துக்கு மிக்க நன்றி.
வ அலைக்கும்சலாம் ஆயிஷா.கருத்துக்கு மிக்க நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.
கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி மகி.
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி செளம்யா.
வணக்கம்
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3_25.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment