March 15, 2011

பெண் எழுத்து





தோழி மதுமிதா என்னை தொடர் பதிவெழுத அழைத்திருக்கின்றார்.என் வேண்டுக்கோளை ஏற்று இனி பதிவுலகில் அடிக்கடி தன் பகிர்வுகள் வரும் என்று கூறி என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருக்கும் கவிதாயினி மதுமிதாவுக்கு மிக்க நன்றி.

மதுமிதா சொல்லி இருப்பதுப்போல் உயிர்,ஆறறிவு என்னும் அளவீடில் பார்த்தால் ஆணும்,பெண்ணும் சமம்தான் .இதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.ஆனால் எழுத்தென்னும் வடிவில் தன் உணர்வுகளை பலர் அறிய ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொழுது ஒரு கோட்டுக்குள்,வரைமுறைக்கு உட்பட்டுத் தான் பெண் எழுத்து புலப்படுகின்றது.புலப்படவேண்டும்.அதுதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.அதுதான் நாகரீகமும் கூட.பெண் எழுத்துக்களுக்கான மரியாதை.

இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் தவிர இணைய தளங்களில் பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது என்பது பெருமைப்படத்தக்க செய்தி.சமையல்,வீட்டுக்குறிப்புகள்,மருத்துவக்குறிப்புகள்,குழந்தை வளர்ப்பு என்பதோடு நின்று விடாமல் பற்பல துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு அணிவகுத்து நிற்க வேண்டும்.

பெண்களின் எழுத்துக்களில் புரட்சியைவிட புத்துணர்ச்சி அதிகம் இருக்கவேண்டும் என்பது அநேகரின் ஒரு மித்த கருத்து.அந்த புத்துணர்ச்சியானது கலாச்சாரம்,நன்முறை,நற்செயல்,நல்லொழுக்கம்,மற்றவர் போற்றத்தக்கதான அறவுரைகள்,ஆற்றலான புலமை,பண்பாடு,நல்லுறவு,நட்புவளர்த்தல்,நல்லறிவு வளர்த்தல்,இனிய நடைமுறை போன்ற பல்கலவை கொண்டதாக இருத்தலே பெண்ணின் எழுத்துக்கு பெருமைத்தரக்கூடியது.

என்னைப்பொருத்தவரை ஆண் எழுதுவதற்கும்,பெண் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.ஆணின் எழுத்து சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் வேலி அமைக்கவில்லை.ஆனால் பெண்ணின் எழுத்து,கருத்து சுதந்திரத்துக்கு கண்டிப்பாக வேலி அவசியம்.தாங்களே வேலி அமைத்துக்கொண்டால்த்தான் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும்.

இந்த தொடரை கண்டிப்பாக எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில்

அக்கா மனோ சுவாமிநாதன்

தோழி ஆசியா உமர்

தங்கை மலிக்கா

தங்கை அப்சரா



ஐவரையும் அழைக்கின்றேன்.

47 comments:

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

சகோ ஜெய்லானி,நீங்கள் என்ன சொல்ல வர்ரீங்க என்றுதான் புரியவில்லை.தலைப்பை மீண்டும் ஒரு முறை நன்கு பாருங்கள்.பெண்களின் உரிமையப்பற்றி நான் எழுதவில்லை.பெண்ணின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதினைப்பற்றித்தான் எழுதி இருக்கின்றேன்.இது என்னுடைய கருத்து.

Asiya Omar said...

ஸாதிகா அருமை.
எழுத்தில் கூட பெண் எழுத்து ஆண் எழுத்து என்று இருக்கிறதா என்ன?
என்ற கேள்வி தான் இப்ப என் மண்டையை பிளக்கிறது.
யோசிக்க வைத்த மதுமிதாவிற்கும் தொடர் பதிவிற்கு அழைத்த உங்களுக்கும் மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பெண்களுக்கு சுய கெளரவம், சுயமரியாதை
இருக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள்
தங்களுக்கென்று ஒரு சில விதிமுறைகளை
அமைத்துக் கொண்டு வாழ்வது என்பது நமக்கு
நல்லதுதான். தங்கள் கருத்தை நானும்
வரவேற்கிறேன். மிக நல்ல பகிர்வு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பெண்களின் எழுத்தில் எப்போதுமே ஒரு கூர்மை உண்டு என்பது என் கருத்து... நீங்க என்ன சொல்றிங்க?


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,வழக்கம்போல் உங்கள் எழுத்துக்களால் முத்திரை பதிக்கும் படி கருத்துக்களை தெரிவித்திருக்கின்றீர்கள்.
என்னையும் இந்த தொடர்பதிவு அழைத்திருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும்,பெருமையையும் தந்தது. அதற்க்கு முதலில் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னால் முடிந்த அளவிற்க்கு எழுத முயற்ச்சிக்கிறேன்.
மீண்டும் நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Unknown said...

miga arumayana post.pengalin ezhuthukkalil mariyadhai irukkum,mattravarai izhivu paduthadha ennangal irukkum.

athira said...

தொடர் என தலைப்பைப் பார்த்ததும் நெஞ்சினுள் பக்குபக்கென இருந்தது... முடிவு பார்த்ததும்தான் நெஞ்சிலே “ரீ” வந்ததுபோல இருந்துது...:))

GEETHA ACHAL said...

//எழுத்தில் கூட பெண் எழுத்து ஆண் எழுத்து என்று இருக்கிறதா என்ன?
என்ற கேள்வி தான் இப்ப என் மண்டையை பிளக்கிறது.//கரக்டாக சொன்னீங்க ஆசியா அக்கா...

அருமை...

Unknown said...

சரியாச் சொன்னீங்க...இது இருவருக்கும் பொருந்தும் தானே...அதே நேரத்தில் படைப்புச் சுதந்திரம் என்பதும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே...

இலா said...

I agree with you aunty! See Women are dipicted by certain characteristics. I feel it should show in thier writing. That nurturing nature even when you discipline to children, can come out in writing. That is what a woman's writing. Not because I can put the pen to the paper.

Vijiskitchencreations said...

நானும் புவனேஸ்வரி சொல்லும் அதே கருத்துதான்.
நல்ல பதிவு.

சக்தி கல்வி மையம் said...

எதிர்பார்க்கிறேன்..

மனோ சாமிநாதன் said...

அன்பு ஸாதிகா!

கருத்துக்கள் அருமை.

"என்னைப்பொருத்தவரை ஆண் எழுதுவதற்கும்,பெண் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.ஆணின் எழுத்து சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் வேலி அமைக்கவில்லை.ஆனால் பெண்ணின் எழுத்து,கருத்து சுதந்திரத்துக்கு கண்டிப்பாக வேலி அவசியம்.தாங்களே வேலி அமைத்துக்கொண்டால்த்தான் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும்."

இது என் கருத்தும்கூட!


என்னை இந்தத் தொடர்பதிவிற்கு அழைத்திருப்பதற்கு மிகவும் நன்றி!! இப்போது தமிழ்நாட்டில் இருப்பதால் ஒழுங்காக‌ எதையும் பதிவு செய்யவோ, நண்பர்களின் வலைப்பூக்களுக்குச் சென்று பின்னூட்டம் இடவோ மிகவும் சிரமமக உள்ள‌து. விரைவில் ஊருக்குத் திரும்பியதும் இந்தத் தொடர்பதிவில் எழுதுகிறேன்.

R.Gopi said...

ஆஹா...

மிக மிக அருமை ஸாதிகா அவர்களே..

உங்களை எழுத அழைத்த தோழி மதுமிதாவிற்கும் வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறேன்...

//எழுத்தென்னும் வடிவில் தன் உணர்வுகளை பலர் அறிய ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொழுது ஒரு கோட்டுக்குள்,வரைமுறைக்கு உட்பட்டுத் தான் பெண் எழுத்து புலப்படுகின்றது.//

வாவ்... மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... உண்மை தான்...

// ஊடகங்கள் தவிர இணைய தளங்களில் பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது//

நான் என் தோழமைகளை பிரித்து பார்ப்பது இல்லை, எனினும்...இக்கால பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பது கண்டு மகிழ்கிறேன்..

//கலாச்சாரம், நன்முறை, நற்செயல், நல்லொழுக்கம், மற்றவர் போற்றத்தக்கதான அறவுரைகள், ஆற்றலான புலமை, பண்பாடு, நல்லுறவு, நட்புவளர்த்தல்,நல்லறிவு வளர்த்தல்,இனிய நடைமுறை போன்ற பல்கலவை கொண்டதாக இருத்தலே பெண்ணின் எழுத்துக்கு பெருமை தரக்கூடியது.//

சூப்பர்... பதிவின் முடிவில் மிக முத்தாய்ப்பாக சொல்லி இருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள் ஸாதிகா....

With Love Maroof said...
This comment has been removed by the author.
Ahamed irshad said...

அருமையான‌ விள‌க்க‌ங்க‌ள்.. ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் எளிதாக‌ தெளிவு பெற‌லாம் :)

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா..,தங்கள் அழைப்பை ஏற்று என் கருத்துக்களை வெளியிட்டுள்ளேன்.தங்களுக்கு நேரம்கிடைக்கும் போது என் இல்லம் வந்து பார்வையிட்டு தங்கள் கருத்தை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி அக்கா.

அன்புடன்,
அப்சரா.

இராஜராஜேஸ்வரி said...

சுய கட்டுப்பாடு அவசியம். பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

பெண்ணின் எழுத்து,கருத்து சுதந்திரத்துக்கு கண்டிப்பாக வேலி அவசியம்.தாங்களே வேலி அமைத்துக்கொண்டால்த்தான் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும்.

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க..

Menaga Sathia said...

//என்னைப்பொருத்தவரை ஆண் எழுதுவதற்கும்,பெண் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.ஆணின் எழுத்து சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் வேலி அமைக்கவில்லை.ஆனால் பெண்ணின் எழுத்து,கருத்து சுதந்திரத்துக்கு கண்டிப்பாக வேலி அவசியம்.தாங்களே வேலி அமைத்துக்கொண்டால்த்தான் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும்.
//உண்மையான வரிகள்...மிக நல்ல பகிர்வு அக்கா...

ஸாதிகா said...

//இப்ப என் மண்டையை பிளக்கிறது.// யோசியுங்கள் ஆசியா.எவ்வளவோ எழுதுவதற்கு இருக்கின்றது.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோ புவனேஸ்வரி ராநாதன் உங்களின் அழகிய கருத்தினையும் வரவேற்கிறேன்.கருத்தினைக்காணும் பொழுது மகிழ்வாக உள்ளது.மிக்க நன்றி.

ஸாதிகா said...

//பெண்களின் எழுத்தில் எப்போதுமே ஒரு கூர்மை உண்டு என்பது என் கருத்து... நீங்க என்ன சொல்றிங்க?
// அல்ல,தம்பிகூர்மதியான்.இருபாலினர் எழுத்துக்களிலுமே கூர்மையும் மென்மையும் கலந்தே இருக்கின்றது.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஒவ்வொரு பின்னூட்டத்தினையும் பொருமையாக போடு தங்களுக்கு முதற்கண் நன்றிகள் அப்சரா.அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சரியாக சொன்னீர்கள் சவீதா ரமேஷ்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அதீஸ்..உங்களை எல்லாம் தொடர் பதிவுக்கு அழைத்தால் எஸ்கேப் ஆகி விடுவீர்கள் என்பது தெரிந்துதான் அழைக்க வில்லை.(ஏற்கனவே ஒரு முறை என்னை ஏமாற்றி விட்டீர்கள்)இப்ப சொல்லுங்கள் ரெடி என்று.மற்றொரு தொடர் பதிவை போட்டு விடலாம்.

jayakumar said...

plz visit my blog also..n leave your comments there

சிநேகிதன் அக்பர் said...

ஸாதிகா அக்கா ரொம்ப அருமையா எழுதியிருக்கிறீர்கள்.

//ஆனால் எழுத்தென்னும் வடிவில் தன் உணர்வுகளை பலர் அறிய ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொழுது ஒரு கோட்டுக்குள்,வரைமுறைக்கு உட்பட்டுத் தான் பெண் எழுத்து புலப்படுகின்றது.புலப்படவேண்டும்.அதுதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.அதுதான் நாகரீகமும் கூட.பெண் எழுத்துக்களுக்கான மரியாதை.//


//ஆணின் எழுத்து சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் வேலி அமைக்கவில்லை.ஆனால் பெண்ணின் எழுத்து,கருத்து சுதந்திரத்துக்கு கண்டிப்பாக வேலி அவசியம்.தாங்களே வேலி அமைத்துக்கொண்டால்த்தான் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும்.//

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். சொல்ல வேண்டிய கருத்துக்களை கண்ணியமாக யார் வேண்டுமானாலும் எழுதலாம். பிறர் மனம் புண்படாதவாறு.

மற்றபடி ரசனை என்பது தனி மனிதரை பொறுத்த விசயம். இதில் ஆண் பெண் பேதமில்லை.

மதுமிதா said...

உங்க கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீங்க ஸாதிகா. இதைத் தவிர இன்னும் சில தோழிகளைச் சிந்திக்க வைத்தமைக்கு நன்றியோ நன்றி. தொடர்க உங்கள் பணி. தொடர்பதிவைத் தொடங்கி எழுதியமைக்கு மனமார்ந்த நன்றி:)
ஆமாம் பெண் எழுத்து பத்தி ஆண்நண்பர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளலாம் தானே:)

அன்புடன் மலிக்கா said...

பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதிவிட்டேன் அக்கா
படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

vanathy said...

ஆண்கள் எழுதுவதற்கும், பெண்கள் எழுதுவதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கு என்பது உண்மை. நல்ல பதிவு, அக்கா.

Thenammai Lakshmanan said...

மிக அருமையா சொன்னீங்க ஸாதிகா.. மது என்னையும் கூப்பிட்டு இருக்காங்க.. படிக்கிறேன்..பின் எழுது்றேன்..:)

TamilTechToday said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

கோமதி அரசு said...

கலாச்சாரம்,நன்முறை,நற்செயல்,நல்லொழுக்கம்,மற்றவர் போற்றத்தக்கதான அறவுரைகள்,ஆற்றலான புலமை,பண்பாடு,நல்லுறவு,நட்புவளர்த்தல்,நல்லறிவு வளர்த்தல்,இனிய நடைமுறை போன்ற பல்கலவை கொண்டதாக இருத்தலே பெண்ணின் எழுத்துக்கு பெருமைத்தரக்கூடியது.//

அருமையாக சொல்லிவிட்டீர்கள் ஸாதிகா.

Pranavam Ravikumar said...

அருமை!

Anonymous said...

இப்பதான் உங்க பதிவுகளை படிக்கிறேன் ரொம்ப நல்லாருக்கு

G.M Balasubramaniam said...

உங்கள் தோழி அன்புடன் மலிக்கா வேண்டி கொண்டபடி பெண் எழுத்து பற்றி ஒரு பதிவு இட்டிருக்கிறேன். படித்துப் பாருங்களேன்.

சி.பி.செந்தில்குமார் said...

இவள் புதியவள் பார்த்தென்.. வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

கீதா ஆச்சல் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு நன்றி கலாநேசன்.

ஸாதிகா said...

நன்றி இலா

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி விஜி.

கருன் கருத்திட்டமைக்கு நன்றி.

கருத்துக்கு நன்றி மனோ அக்கா!அவசியம் சார்ஜா சென்றதும் தொடர்பதிவை எழுதுங்கள்.உஙக்ள் உணர்வுகளையும் அறிய காத்திருக்கின்றேன்,.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

கோபி கருத்துக்கு மிக்க நன்றி.

இர்ஷாத் கருத்துக்கு நன்றி.


அப்சரா.உங்கள் பதிவையும் உடனே பார்த்து பின்னூட்டமும் இட்டுவிட்டென்.உடன் செயல் படுத்தியமைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வர்ரி கருத்துக்கு நன்றி.


மஹா விஜய் கருத்துக்கு நன்றி.

மேனகா கருத்துக்கு நன்றி.

//மற்றபடி ரசனை என்பது தனி மனிதரை பொறுத்த விசயம். இதில் ஆண் பெண் பேதமில்லை.

// உண்மை வரிகள் அக்பர்.நன்றி.

ஸாதிகா said...

மதுமிதா கருத்துக்கு நன்றி.

மிக்க சந்தோஷம் மலிக்கா.நன்றி.

வானதி கருத்துக்கு நன்றி.

தேனம்மை கருத்துக்கு நன்றி.விரைவில் எழுதுங்கள்.உங்கள் கருத்தினையும் அறிய ஆவல்.

கோமதிஅரசு கருத்துக்கு நன்றி.

ரவிக்குமார் கருத்துக்கு மிக்க நன்றி.

R.Gopi said...

உங்கள் ஈ-மெயில் ஐடி இல்லாததால் இந்த கமெண்ட் இங்கே :

***********

”சித்தம்” என்னும் குறும்படத்தை வழங்கிய நம் “ப்ளாசம் கிரியேட்டர்ஸ்” உங்களை மீண்டும் மகிழ்விக்க ”விதை” என்ற புதிய குறும்படம் வாயிலாக வருகிறது...

ஒரு சமுதாய பார்வையுடன், பார்வையாளர்களின் மனதில் விதைக்க... ஒரு வீரிய ”விதை”யுடன் வெளிவருகிறது இந்த “விதை” என்னும் குறும்படம்...

எந்த ஒரு சாமான்ய மனிதனும், தன்னையும், தன் குடும்பத்தையும்.... பொறுப்புடன் பார்த்து ... தனது...!!!! என கொள்கிறான். அதுவே தன் ஊருக்கோ, அல்லது தான் சார்ந்திருக்கும் நாடு என்றோ வரும்போது, அதில் இருந்து அன்னியமாகி, தன் பொறுப்புக்களை விட்டு விலகி விடுகிறான்.

ஒரு தனி மனிதன், தன் ஊரையும் நாட்டையும், தன் குடும்பத்தை போல் பார்க்கும்..... மாற்றம் நிகழுமா... !!! எனும் கேள்விக்கு விடை சொல்கிறான், இந்த ”விதை” குறும்படத்தின் கதாநாயகன்.

வாழ்வின் ரகசியம் அறிய, சமூக அன்பின் அடிநாதத்தை, அறிந்து கொள்ள நகர்கிறது, இக்குறும்படம்.
இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும் எனும் நம்பிக்கையுடன், பணிவுடன் சமர்பிக்கிறோம்.

“விதை” குறும்படத்தை இங்கே கண்டுகளியுங்கள் :

http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U

உங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் என்றும் வேண்டும்

ஆர்.கோபி
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com