மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய ஆர்டிகிள்.அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்பது மாநபி மொழி.மாதவராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா,பெண்கள் நாட்டின்கண்கள் என்று பெரியோர் கூறினார்கள்.அத்தனை புகழ்களுக்கும் உரித்தான பெண்களுக்கே உரித்தான பெண்கள் தினம் அன்று பெண்ணாகிய நான் பெருமித்ததுடன் இவ்விடுகையை பதிவிடுகின்றேன்.
முதிர்ச்சியான அறிவுத்திறன்,பக்குவமான கவனிப்புத்திறன்,ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பத்திறன்,பொறுமையாக முடிவெடுக்கும் திறன்,கம்பீரமான நிர்வாகத்திறன் கொண்டோர்தான் பெண்கள்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை,வேலையாட்களை இன்னும் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்துசெயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.
1.பினான்சியல் மேனேஜ்மெண்ட்:
கணவரின் சம்பளத்துக்கேற்ற வாறு வாழ்க்கைத்தரத்தை சிக்கனமாக அமைத்துக்கொண்டு,கூடவே ஏலச்சீட்டுகள்,நகை சீட்டு,பாத்திரச்சீட்டு என்று சேமித்து கணவர் பணகஷ்டத்தில் இருக்கும் பொழுது பொருளாதாரரீதியாக உதவுவதில் கில்லாடிகள்.
2.சிச்சுவேஷன் மேனேஜ்மெண்ட்:
குடும்பத்தினருக்கு நோய் வாய்ப்படும் பொழுது அதிர்ந்து நிற்கும் ரங்க்ஸ்களுக்கு ஊக்கவார்த்தைகளை அளித்து விட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி செய்வதிலாகட்டும்,தர்மசங்கடமான சூழ்நிலையில் வீட்டில் விருந்தினர்கள் ஆஜர் ஆகிவிட்டால் சங்கடங்களை காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் ஆகட்டும் இப்படி எப்பேர்பட சூழ்நிலையையும் சமர்த்தாய் சமாளிப்பதில் வல்லவர்கள்.
3.மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்:
மாமியாருக்கு பிரஷருக்கேற்ற உப்பு குறைந்த உணவாகட்டும்,மாமனாருக்கு சர்க்கரை கம்மி செய்த உணவாகட்டும்,கணவருக்கு பிடித்த பொரியல் வகைகள் ஆகட்டும்,பிள்ளைகளுக்கு பிடித்த பாஸ்ட் புட் வகைகள்,பெரியவனுக்கு முகத்தில் பரு வந்தால் எண்ணெய் குறைவான சமையலும்,கணக்கில் மதிப்பெண்கள் கம்மியாக வாங்கும் மகளுக்கு தினம் வல்லாரையில் டிஷ் செய்து கொடுப்பதில் ஆகட்டும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் தேவையையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமைத்து பறிமாறி அக்கரை காட்டுவதில் புலிகள்.
4.பியூட்டி மேனேஜ்மெண்ட்:
அத்தனை வேளைகளுக்கு இடையே கடலைமாவை கரைத்துக்கொண்டு முகத்தில் அப்பிக்கொள்வதில் இருந்து,மூல்தானி மட்டியை பூசிக்கொள்வது,பொரியலுக்கு கேரட் நறுக்கும் பொழுது சிறிய துண்டும்,சாலட்டுக்கு வெள்ளரிக்காய் நறுக்கும் பொழுது ஒரு துண்டும் எடுத்து அரைத்து பூசிக்கொள்வது என்று பாய்ந்து பாய்ந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சிறுத்தைகள்.
5.எஜுகேஷன்மேனேஜ்மெண்ட்:
எல் கே ஜி படிக்கும் சின்னமகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதிலாகட்டும்,பெரிய மகனுக்கு ரெகார்ட் நோட்டில்படம் வரைந்து கொடுப்பதில் ஆகட்டும்,கணவர் எழுதப்போகும் பேங்க் எக்ஷாம் சரியாக பண்ண வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதிலாகட்டும்,அத்தனை வேலைகளுக்கிடையிலும் தனது இரண்டு அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்யும் நிமித்தம் நின்று கொண்டும்,நடந்து கொண்டும்,சமைத்துக்கொண்டும் பாடங்களை உரு போட்டுக்கொண்டு இருப்பதில் மேதாவிகள்.
6.ஹியூமன் ரிசொஸ் மேனேஜ்மெண்ட்:
பிறந்த வீட்டினர் வந்தால் அவர்களை கவரும் விதமாகவும்,புகுந்த வீட்டினர் வந்தால் அவர்களையும் கவரும் விதமாகவும்,லீவு போடும் வேலைக்காரியை தட்டிக்கொடுத்து லீவுபோடாமல் வருவதற்கு உள்ள பேச்சுத் திறமையும்,பிஸினஸுக்கு பணம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் கொழுந்தனார் முதல்,தீபாவளிக்கு வைர மோதிரம் கேட்கும் நாத்தனார்வரை சமாளித்து யாவரின் மனமும் கோணாமல் சமாளித்து வருவதில் மேதாவிகள்.
7.டெக்னிகல் மேனேஜ்மெண்ட்:
வீட்டில் குக்கர் பர்னர் பிலண்டர் போன்ற சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் ஆனால் முடிந்தவரை தன்கையாலே ரிப்பேர் பார்த்தல் ”ரிப்பேர்ன்னு போனால் கடங்காரன் நூறு நூறா பிடிங்கிடுறானே”என்று புலம்பியப்படி தானே ஸ்க்ரூ டிரைவரும் கையுமாக ஒரு வழியாக பொருட்களை உயிர்பித்து தேற்றி காசு மிச்சம்பிடிப்பதில் வீராங்கனைகள்.
8.டைம் மேனேஜ்மெண்ட்:
காலங்கார்த்தாலே அரக்கபறக்க எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு,டிகிரிகாப்பியை டபராக்களில் நிரப்பி ஒவ்வொருவராக கொடுத்து,டிபன் செய்து டிபன் பாக்ஸில் கட்டி,காய் நறுக்கி பகல் சமையலையும் முடித்து,அனைவருக்கும் சாப்பாடு போட்டு,பாத்திரம் ஒழித்து தானும் வேலைக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். குளித்து விட்டு அள்ளி முடிந்த கூந்தலை திருத்தி,டிரஸ் செய்து இத்தனை வேலைகளுக்கும் இடையே “விஜி,நேற்று ஆஃபீஸில் இருந்து சிகப்புக்கலர் பென்டிரைவை கொண்டு வந்தேனே பார்த்தியா”என்று கூவும் கணவருக்கும் தேடி கொடுத்து,”என்னோட மேத்ஸ் நோட்ஸைக்காணோம்”என்று அலறும் பெண்ணின் அலறலை நிறுத்தி சரியான நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி விட்டு தானும் கிளம்புவதில் சூரர்கள்.
9.கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்:
பெரிய தொகையை ஏலச்சீட்டு போட்டு முடியும் தருவாயில் சீட்டுகம்பெனியே எஸ்கேப் ஆகிவிட தலையில் கைவைத்து இடிந்து போய் நிற்கும் கணவரை தேற்றுவதில் ஆகட்டும்.திடுமென வந்த நெஞ்சுவலியால் மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து பைபாஸ் செய்ய மருத்துவர் பரிந்துரை செய்யும் பொழுது கணவர் கைகளை பிசைந்து கொண்டு இருக்கும் பொழுது யோசிக்காமல் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்து ஆபத்பாந்தவனாக நிற்பதில் சிங்கங்கள்.
10.பிளாகிங் மேனேஜ் மெண்ட்:
அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.
தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.
தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.
Tweet |
35 comments:
வாழ்த்துக்கள்...பெண்மையை போற்றுவோம்...
சூப்பர். பொறுமையா சொல்லி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்!!!
அருமை ஸாதிகா.வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
இதை விட பெண்களின் மேன்மையை எப்படி விளக்க முடியும்.என்னமா எழுதறீங்க..
தங்களுக்கும், வலைத்தோழிகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்..
//குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை, வேலையாட்களை இன்னும் தன்னை சுற்றி இருக்கும் அனைத்து செயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.//
பெண்களின் அத்துணை மேன்மைகளையும் எவ்ளோ அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகக்ள், ஸாதிகக அக்கா
எல்லாம் ஒரு சேர மொத்தத்தில் எல்லா பெண்களை பற்றி நல்ல படைப்பு படைத்து இருக்கீங்க.
கடைசி பத்தாவது பாயிண்ட் எனக்காக போட்ட் மாதிரி இருக்கு, இல்லை எனனி மனதில் கொண்டு எழுதினீங்கலா?,
அருமையா, பொறுமையா எழுதியிருக்கிங்க... வாழ்த்துக்கள்.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
அருமையா சொல்லி இருக்கிங்க. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...பெண்மையை போற்றுவோம்..அருமை .
வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. இதுவும் பெண்ணின் இயல்புதானோ? :-)))))
வாழ்த்துகள்!!
அருமையான கருத்துகள் ஸாதிகா அக்கா.., பெண்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள். அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள்.
சகோ,
Child Care,Beauty Mgt,Education Mgt,
Hospitality இவைகளில் மட்டும்தான் பெண்கள் சோபிக்க முடியும். மற்றவைகளில் அது 'MAN''AGE'MENTதான்
ஒரு சில பெண்கள் விதி விலக்காய் இருக்கலாம். அவர்களும் இரும்பு மனிதராய்ப் போகும் ஆபத்து இருக்கிறது.
அருமைங்க... பத்திரிகையில் வெளியானதற்கு, வாழ்த்துக்கள்!
அருமை .வாழ்த்துக்கள்.
நன்று ஸாதிகா. மகளிர் தின வாழ்த்துக்கள்! லேடீஸ் ஸ்பெஷலுக்கும் வாழ்த்துக்கள்.
சலாம் ஸாதிகா அக்கா..,சூப்பராக எழுதி கலக்கியிருக்கீங்க அக்கா...
படிக்க ஸ்வாரஸ்யமாகவும்,எதார்த்தமாகவும்,அடடே...இப்படி கூட இருக்கலாமேன்னு சிலர் நினைக்க்கூடிய அளவிற்க்கு இருக்கின்றது உங்கள் பொன்னான எழுத்துக்கள்.
இன்னும் நீங்க நிறைய சாதிக்கணும்னு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஸாதிகா அக்கா...
வாழ்த்துக்கள்****
வாழ்த்துக்கள்***
வாழ்த்துக்கள் *****
அன்புடன்,
அப்சரா.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... எல்லாமே நடைமுறையில் உள்ளவை... வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... தாயின்றி குழந்தைகளுக்கும் மனைவியின்றி கணவனுக்கும் மருமகளின்றி புகுந்த வீட்டினருக்கும் திண்டாட்டம்தான் சொல்லியிருக்கீங்க..எழுதிய விதம் அருமை.... புதியதாக ப்ளாக்கையும் சேர்த்து அவர்கள் தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதைச் சொல்லியிருப்பது முத்தாய்ப்பு... வாழ்த்துக்கள் அக்கா.
மனமார்ந்த வாழ்த்துகள் ஸாதிகா. பெண்கலுக்கு எத்த்னை கோடி மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் வைத்தாய் இறைவா:) நன்றி நன்றி நன்றி தொலைபேசி மறுபடி என்னை எழுத வைத்தமைக்கு. இதோ இதைப் பார்த்து பச்சைக்கொடி காட்டி ஆரம்பித்து வையுங்கள் ஸாதிகா:)
http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post_08.html
ஆஹா சூப்பரா எழுதிருக்கீங்க..பாராட்டுக்கள் அக்கா!! மகளிர் தின வாழ்த்துக்கள்!!
எல்லோரும் வாழ்த்திய பிறகு நானென்ன புதுசா வாழ்த்தப் போறேன். அதனால் நானும் வாழ்த்துகிறேன் ஸாதிகாக்கா!!
Jaleela kamaal
//கடைசி பத்தாவது பாயிண்ட் எனக்காக போட்ட் மாதிரி இருக்கு, இல்லை எனனி மனதில் கொண்டு எழுதினீங்கலா?, //
இப்படி தெரிந்திருந்தா இன்னும் பத்து வரி சேர்த்து எழுதச் சொல்லி இருக்கலாமே ஹா..ஹா..(இது வலையுலக எல்லா சகோதரிகளுக்கும் இது பொருந்தும் தானே!!)
சூப்பர் ஆழமா ஆராயிந்து அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா...உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ...அக்கா
வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..
நான் சொல்ல நினைத்ததை எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.
உங்களுக்கு என் வாழ்த்துகள்.
கை தட்டுகிறேன் கேட்கிறாதா???
super what a reality in your words,
best of luck ,
ஸலாம் சாதிக்காக்கா..
எல்லாவிதமான மேனேஜ்மெண்டையும் கேக்க ரொம்பவே சந்தோஷமா இருக்குக்கா..அதை செய்யும் பெண்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்..அவர்கள் என்றும் போற்றுதலுக்குறியவர்கள்..
ஆனால் எல்லாப்பெண்களும் அப்படி இருப்பதில்லை என்பதே வருத்தமான செய்தி,,,
எனிவே...இதை படிக்கும் பெண்கள் தங்களை மாற்றிக்கொண்டால் நன்மைதான்...
மகளிர் தின வாழ்த்துக்கள்
அன்புடன்
ரஜின்
ஆஹா...இத்தனையும் எழுதினீங்க, இது நடுவில குழந்தைகளுக்கு அவங்க ஸ்கூல் மிஸ்ஸுங்களை விட அதிகமா, அழகா பாட்ங்களை சொல்லித்தர்ற ‘அவார்டு வின்னர் டீச்சர்’ முகங்களை விட்டுட்டீங்களே?? சூப்பரா எழுதியிருக்கீங்க ஸாதிகாக்கா, வாழ்த்துக்க்கள் :)
அருமையா சொல்லி இருக்கிங்க. வாழ்த்துகள்.
ஆஹா....இது தான் ஸாதிகா அக்கா ஸ்டைல்...கலக்கலான் பதிவு...
கண்டிப்பாக ஹிட் தான் போங்க..
ஒவ்வொன்றும் முத்தான மனேஜ்மெண்ட்...
நலாலாயிருக்கு.. வாழ்த்துக்கள்!
எத்தனை முகமுன்னு போட்டுட்டு பத்து முகம் குடுத்திருக்கீங்க... இன்னொரு முகத்தையும் விட்டுட்டீங்களே யக்கா..!! கோவம் வந்தா பிச்சி பெடலெடுக்கிறதை.. அவ்வ்வ்வ்வ் :-))
கருத்திட்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகக்ள்,
பெண்களைபற்றி மிக அருமையாக எழுதியிருக்கீங்கக்கா. வாழ்த்துக்கள்..
அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.
முற்றிலும் உண்மை .அந்த உயர்ந்த சேவையை சகோதரி செய்வது மகிழ்வான செயல் .பாராட்ட வேண்டியதை பாராட்டித்தானே ஆக வேண்டும் . அதிலும் ஓர் நன்மை உண்டு
Please visit
எத்தனை முகம் பெண்களுக்கு
http://seasonsnidur.wordpress.com/2012/07/24/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
Post a Comment