March 9, 2011

வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்



பெப்ருவரி 20 ஆம்தேதி கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் இவள் புதியவள் மகளிர் மாத இதழுக்காக பதிவர்கள் சந்தித்து கருத்தரங்கம் நடைபெற்றது.சகோதரி தேனம்மை லட்சுமணன் ஏற்பாடு செய்ய இவள் புதியவள் ஆசிரியர் மை.பாரதிராஜா,கவிமணி,மற்றும் ஆ.முத்துக்குமார் ஆகியோருடன் பதிவர்கள் நான் உட்பட









அனைவரும் சந்தித்து அளவளாவியது அன்றைய மாலைப்பொழுதை மிகவும் இனிமையாக்கியது.ஒவ்வொரு பதிவரும் தங்கள் திறமைகளை வலைப்பூவில் வெளிப்படுத்தியது போன்று பேச்சிலும் வெளிப்படுத்தி என்னை வியக்க வைத்தனர்.ஒவ்வொரு பதிவரும் தன் எண்ணங்களை அழகு பட,மற்றவர்களின் புரிதல்களுடன் விளக்கமாகவும்,ஆர்வமாகவும்,அறிவுப்பூர்வமாகவும் மாலையில் இருந்து இரவு வரை கலந்துரையாடியது பங்கு கொண்ட அனைவருக்குமே உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

இவள் புதியவள் மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.இன்றைய பெண்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், அதை எதிர்கொள்ளும் விதங்கள் பற்றி தங்களின் கருத்துக்களை மிகவும் தெளிவோடும்,திறமையோடும் பெண் பதிவர்கள் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் சபாஷ் போட வைத்தது.


“என்னுடைய பார்வையில் ஆணைவிட பெண் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை.பிறர் நம்மைப்பற்றி என்ன நினைகின்றார்கள் என்பதில் அக்கறைகொள்ளாமல்,தன் சுய பிம்பத்தை மதிப்பிட தெரிந்து கொள்ள வேண்டும்.பெண்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன் படுத்திக்கொள்ளக் கூடாது.முக்கியமாக சுயக்கட்டுப்பாடு பெண்களுக்கு மிக அவசியம்.எந்த பிரச்சினைகளுக்கும் தானே முடிவெடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் குடும்பத்திற்கும்,நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் இன்றி சந்தோஷமாக வாழலாம்.பிரிவினை இன்றி பெண்கள் கலாச்சாரத்துடன் வாழ்வதில்த்தான் பெண்களின் வெற்றி அடங்கி உள்ளது”என்ற என் கருத்துக்கு ராமசந்திரன் உஷா ”இந்த கலாச்சாரம் ஆண்களுக்கும் உண்டு.ஆனால் அதனை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை”என்றார்.

கல்லூரி காலங்களில் இருந்தே எழுத்துக்களில் அதீத ஆர்வமுள்ள சகோதரி தேனம்மை வலையுலகிலும்,பத்திரிகை உலகிலும் தான் பவனி வருவதற்கு அவரது தமிழ் பேராசியை எம். ஏ சுசீலா அவர்கள் காரணகர்த்தா என்பதினை நினைவு கூர்ந்து அழகிய,அர்த்தமுள்ள கருத்துக்களை மடை திறந்த வெள்ளமென கொட்டித்தீர்த்ததை நான் விழி அகல கேட்டு ரசித்தேன்.


“கருத்து சுதந்திரம்ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்.ஆனால் அதனை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.ஆனால் எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி பெண்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றோம்”என்று பேசினார் தோழி மதுமிதா.உற்சாகமான,அழுத்தமான பேச்சுக்கு சொந்தக்காரர்.தான் சொல்ல வந்ததை தெளிவாகவும்,உறுதிபடவும் பேசி பிறரை புருவம் ஏறவைத்தவர்.

“பெண்களுக்கே உரித்தான வேலைகளை அவர்கள் தான் செய்து தீர வேண்டும்” என்ற கருத்தினை உறுதியாக உரைத்தார் அமுதவல்லி.

”பிளாக்கில் எழுதுவதன் மூலம் அதிகமானோரின் அறிமுகம் கிடைத்துள்ளது” என்ற உண்மையைக் கூறினார் வசுமதி வாசன்.

“ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர்களின் தகுதியை நிர்ணயம் செய்து விடக்கூடாது” என்று தனது அனுபவத்தில் கண்ட உண்மையை தெளிவாக விளக்கினார் அமிதவர்ஷிணி அம்மா.தனது மகளின் பெயரில் இவர் வலையுலகில் வலம் வருவதால் உண்மைபெயரை மட்டிலுமே அறிந்திருந்த சில வருடங்களுக்கு முன்னரே அறிமுகமான அவரை நேரில் கண்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

“ஜர்னலிஸ்டான வாணி ஜெயா இலங்கைத்தமிழில் இனிக்க இனிக்க பேசினார்.தனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நிறைய எதிர்ப்புகளும் வரும் .அதனை தைரியமாக ஏற்று வெளியிடுவேன்.நமக்கு வரும் விமர்சனங்கள் நம்மை வளர்க்க உதவுகின்றன”என்று முடித்தார்

இது போன்ற கருத்துரைகளும்,கருத்தரங்களும் கண்டிப்பாக நல்லதொரு விழிப்புணர்வை தருகின்றது என்று அன்று மாலை நடந்த அந்த இனிய சந்திப்பின் மூலம் அனுபவித்து அறிந்து கொண்டேன்.இதற்கு ஏற்பாடு செய்த தோழி தேனம்மைக்கும்,வாய்ப்பளித்த இவள் புதியவள் மாத இதழ் ஆசிரியர் குழுவினருக்கும்,அளவளாவ அழகிய இடம் தந்து உதவிய கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர்களுக்கும் என் நன்றிகள்.

47 comments:

ஹுஸைனம்மா said...

அக்கா, சொன்னமாதிரியே ரெண்டாவது ரவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்க போல!! தொடர்ந்து மூணாவது பத்திரிகைச் செய்தி. தேனக்கா, ராமலெக்‌ஷ்மிக்கா போல இனி பத்திரிகைகளில் உங்கள் பங்கு வருவதைப் பற்றி மட்டுமே எழுத பதிவுகள் வருமோ? மனமார்ந்த வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...அனைவரும் சந்தித்திங்களா...

படங்களையும் இனைத்து இருக்கலாம் அல்லவா...

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,
அருமையான சந்திப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் தாங்களுக்கு நன்றி.
மிகவும் முக்கியமான விஷயத்தை பற்றி அவரவர் கருத்து படிக்க சிறப்பாக இருந்தது.முக்கியமாக உங்கள் கருத்தான \\\பிரிவினை இன்றி பெண்கள் கலாச்சாரத்துடன் வாழ்வதில்த்தான் பெண்களின் வெற்றி அடங்கி உள்ளது/// இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.என்னுடைய கருத்தும் இதுவே...
ஆனாலும் ஸாதிகா அக்காவின் எழுத்திற்க்கும்,எண்ணங்களுக்கும்,அனுபவங்களுக்கும் இவள் ஈடாக முடியுமா...?சான்ஸே இல்லை.
நிஜமாக உங்களின் எழுத்துக்களுக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

அன்புடன்,
அப்சரா.

athira said...

இனிமையான ஒன்றுகூடல், வாழ்த்துக்கள்.

Unknown said...

miga arumayana post.arpudhamana karuthukkal.

சீமான்கனி said...

எண்ணங்களின் ஏடாய் பதிவு நன்றி ....100-th மகளிர் தின வாழ்த்துகள்....கா

Asiya Omar said...

இந்த வாரம் தொடர்ந்து அமர்க்களமாக வலம் வறீங்க தோழி.அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.நல்ல கலந்துரையாடல்,மிக அருமை.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்!

ஜெய்லானி said...

//“பெண்களுக்கே உரித்தான வேலைகளை அவர்கள் தான் செய்து தீர வேண்டும்” என்ற கருத்தினை உறுதியாக உரைத்தார் அமுதவல்லி.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Chitra said...

இது போன்ற கருத்துரைகளும்,கருத்தரங்களும் கண்டிப்பாக நல்லதொரு விழிப்புணர்வை தருகின்றது என்று அன்று மாலை நடந்த அந்த இனிய சந்திப்பின் மூலம் அனுபவித்து அறிந்து கொண்டேன்.இதற்கு ஏற்பாடு செய்த தோழி தேனம்மைக்கும்,வாய்ப்பளித்த இவள் புதியவள் மாத இதழ் ஆசிரியர் குழுவினருக்கும்,அளவளாவ அழகிய இடம் தந்து உதவிய கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர்களுக்கும் என் நன்றிகள்.



..... Wow! Super!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

நேரில் வாழ்த்துகிறேனே

Mahi said...

வாழ்த்துக்கள் ஸாதிகாக்கா! கெட் டு கெதர் சூப்பரா இருந்திருக்கிறது!

குறையொன்றுமில்லை. said...

பரவால்லியே வலைப்பூ பெண்மணிகளும்
சந்தித்துக்கொள்கிரீர்களா. மிகவும் நல்ல
விஷயம்தான்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எழுத்து நடை அருமை.தாங்கள் சென்னையில் தான் இருககீர்கள். வீட்டுக்கு வாங்கோ.சென்னை லேடிஸ் பதிவர்கள் அனைவரும்
ஒருநாள் சிந்திப்போம். {இன்ஷா அல்லாஹ்}

ஸாதிகா said...

//சொன்னமாதிரியே ரெண்டாவது ரவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்க போல!! // என் ரங்கமணி சொன்னதையே ரிப்பீட் செய்கின்றீர்கள் ஹுசைனம்மா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி கீதாஆச்சல்.

ஸாதிகா said...

அப்சரா,நீங்கள் நினைப்பது போல் எல்லாம் இல்லை.நானும் சாதரணமானவள்.இன்னும் உங்கள் போன்றோரைப்பார்த்து கற்றுத்தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.ஊக்க வரிகளுக்கும்,பொறுமையான பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

//இனிமையான ஒன்றுகூடல்,// உண்மை அதிரா.நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்களுக்கு மிக்க நன்ரி சவிதா ரமேஷ்

ஸாதிகா said...

//எண்ணங்களின் ஏடாய் பதிவு நன்றி // வரிகளில் அப்படமான கவிஞர் என்று ஊர்ஜிதபடுத்தி விட்டீர்கள் சீமான்கனி.நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா.ஒவ்வொன்றையும் உங்களிடம் சொல்லாமல் செய்ததில்லையே!

ஸாதிகா said...

//Blogger ஜெய்லானி said...

//“பெண்களுக்கே உரித்தான வேலைகளை அவர்கள் தான் செய்து தீர வேண்டும்” என்ற கருத்தினை உறுதியாக உரைத்தார் அமுதவல்லி.//
// எத்தனையோ இருக்கு.இதனை மட்டும் குறிப்பாக சொன்னதன் காரணத்தை அறிந்துகொள்ளலாமா ஜெய்லானி.

ஸாதிகா said...

மிக்க நன்றி சிதரா

ஸாதிகா said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கருன்

ஸாதிகா said...

நன்றி ஜலி.

ஸாதிகா said...

மிக்க நன்றி மகி.

Thenammai Lakshmanan said...

ஸாதிகா தெளிவான பகிர்வு.. மிக அருமை மற்றும் நன்றி.. :))

ஸாதிகா said...

//பரவால்லியே வலைப்பூ பெண்மணிகளும்
சந்தித்துக்கொள்கிரீர்களா. //
பத்திரிகை நிமித்தமாக நடாத்திய சந்திப்பு லக்‌ஷ்மியம்மா இது.ஜாலியான கெட் டு கெதர் அமீரகத்தில் சென்ற ஆண்டு நடந்தது.ஆர்கனைஸ் பண்ணியவர் ஹுசைனம்மா.கருத்துக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

அருமையான சந்திப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு சந்தோஷம் அக்கா..

அக்கா இந்த இவள் புதியவள் மற்றும் சூரியகதிர் மாத இதழ் இரண்டும் ஒன்றுதானே..அதாவது ஒரே நிர்வாகம்தானே.
எனது கட்டுரைக்கூட ”அவரைக்காய் வைத்தியம்” சூரியக்கதிர் இதழில் வந்திருக்கிறது. [கெளதம் அவர்கள் மூலம்] இவள் புதியவளுக்கு கவிதையும். கட்டுரையும் அனுப்பியுள்ளேன்..

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.உங்களுக்கு தெரிந்த பெண் பதிவர்களை அழைத்து வாருங்கள் என்று கூறி இருந்தாலும்,உங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியாமல் அழைக்க இயலாமல் போய் விட்டது.இன்ஷா அல்லாஹ் மறு சந்திப்பில் அவசியம் பார்ப்போம்.நன்றி ஆயிஷா.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

நன்றி தேனம்மை.உங்களுக்காகவே பதிவிட்ட அடுத்த நாளே மற்றொரு பதிவாக இதனையும் வெளியிட்டு விட்டேன்

ஈழவாணி said...

நன்றி ஸாதிக்கா.

http://eelavani.blogspot.com/p/blog-page_25.html

vanathy said...

சூப்பர் சந்திப்பு, அக்கா. எனக்கும் பதிவு உலகின் மூலம் பல இனிய தோழமைகள் கிடைத்திருப்பது உண்மை.

ராமலக்ஷ்மி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! பகிர்வுக்கு நன்றி ஸாதிகா!

மதுமிதா said...

சாதிக்கப் பிறந்த ஸாதிகா..... நல்ல நடை. அந்த மாலையைக் கண் முன்கொண்டுவந்துட்டீங்க:) நன்றி.

ஸாதிகா said...

ஆம் மலிக்கா,இவள் புதியவள்,சூரியக்கதிர் இரண்டுமே ஒரே நிறுவனத்தில் இருந்து வெளிவருபவைதான்.அவரைக்காய் வைத்தியத்தை பிளாக்கிலும் பதிவிட்டு இருக்கலாமே.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

விக்கி உலகம் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஈழவாணி வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வானதி கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ராமலக்‌ஷ்மி,கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

மதுமிதா,உங்கள் வாழ்த்துக்களௌடன் கூடிய பாராட்டு இன்னும் உற்சாகத்தையும் ,மகிழ்ச்சியையும் கூடவே பயத்தையும் தந்தது.:)பழம்பெரும் கவிதாயினி மூலம் கிடைக்கப்பெற்ற வாழ்த்து.மிக்க மகிழ்ச்சி தோழி.

சி.பி.செந்தில்குமார் said...

>>“கருத்து சுதந்திரம்ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்.ஆனால் அதனை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.

ஹி ஹி ஹி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் அக்கா.

Unknown said...

உங்களின் அறிவின் திறமைக்கு க்டைத்த இன்னும் ஒரு வெற்றி...வாழ்த்துக்கள் அக்கா...

போட்டோக்களின் பதிவுகளை தேனா வின் பதிவில் பார்த்தேன்...