February 6, 2011

ஈ சி ஆரில் ஒரு இனிய உலா

கரடு முரடான சென்னை சாலைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமான வாகனங்கள் வேகத்துடன் வழுக்கிக்கொண்டு பயணிக்கும் கிழக்கு கடற்கரைச்சாலையில் வீக்கெண்டுகளில் உறவுகளுடனும்,நட்புக்களுடனும் சேர்ந்து வேகமான டிரைவிங்கில் பயணிக்கும் பொழுது உள்ள உற்சாகம் எண்ணிலடங்காது.

அதிலும் வரிசையாக இருக்கும் பொழுதுபோக்கிடங்கள்,தீம்பார்க்குகள் எண்ணிலடங்காது.அனைத்தையும் காணவேண்டுமென்றாலும் வருடம் முழுதும் வரும் வீக்கெண்டுகள் தேவைப்படும்.சென்னை வாசிகளை ரெஃப்ரெஷ் செய்துகொள்ளக்கூடிய இடம் ஈ சி ஆர் என்பது உண்மை.
முட்டுக்காடு படகுத்துறையில் படகில் ஏறுவதற்கு வசதியாக மரத்தில் ஆன பாலம்.

ஏரிக்கு மத்தியில் செல்லும் பாலம்.
படகுச்சவாரியை அமர்ந்த படி ரசிப்பத்தற்கு வசதியாக நிழற்குடையுடன் கூடிய பெஞ்சுகள்.

முட்டுக்காடு படகு சவாரிக்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகா முற்றிலும் புதுமை வடிவத்துடன் படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஓய்வு இடத்தில் அமர்ந்த வண்ணம் உணவு அருந்திக்கொண்டே படகு சவாரி காட்சியை கண்டுகளிக்கலாம்.சற்று ஓய்வு எடுக்கலாம்.அலுவலகம், பயணிகள் ஓய்வகம், உணவகம் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. மூங்கில் படகு குழாமிற்கு வருகை தரும் படகு சவாரியாளர்கள் மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் பயணிக்கும் அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நபர்கள் அமர்ந்து செல்லகூடிய படகு முதல் பத்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய படகுகள் வரை உள்ளது.நமது வசதியைப்போல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.ஐந்து பேர் பயணிக்கும் மோட்டார் படகு 350 ரூபாயும்,10 பேர்கள் பயணிக்கக்கூடிய படகுக்கு 620 கட்டணம் வசூலிகின்றனர்.ஏரியை 20 நிமிடங்கள் வரை சுற்றிக்காட்டுகின்றனர்.ஐந்தே அடி ஆழமுள்ள அந்த அழகிய ஏரியில் 20 நிமிடங்கள் மோட்டார் படகில் சுற்றி வந்தால் படகை விட்டு இறங்கவே மனம் இராது.சுள்ளென்ற வெயிலுடன்,ஜில்லென்ற காற்றும்,உடலில் தெரிக்கும் நீர்த்திவலைகளும் மனதை பரவசப்படுத்தும்.

அங்கே இருக்கும் சுத்தமான உணவகத்தில் அருமையான உணவுவகைகள்.விலையைப்பார்த்து ஆச்சரியத்தில் கண்கள் விரியும்.இனி ஈ சி ஆர் போனால் போட்டிங் செல்லாதவர்கள் கூட வயிற்றை நிரப்பிக்கொள்ள உணவகத்திற்கு தாராளமாக செல்லலாம்.

சவுக்குக்காடு.தூரமாக இருந்து பார்க்கும் பொழுது அழகாக தெரிவது உள்ளே செல்ல செல்ல முகம் சுளிக்க வைக்கின்றது.நெருக்கமான சவுக்கை மரங்கள் அடர்ந்து நிற்க அழகிய நிழலைத்தருகின்றது.பார்க்கவே அழகாக உள்ளது.

ஆனால் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தை உணவுக்கழிகளைக்கொட்டி அசிங்கம் செய்து இருக்கின்றனர்.ஏராளமான உணவுக்கழிவுகள் ,அதனை சுற்றி வரும் பிராணிகள்,யூஸ் அண்ட் த்ரோ தட்டுக்கள் டம்ளர்கள் என்று குப்பை அதிகளவு பார்ப்பவர்களை எரிச்சலூட்டுகின்றது.போதாதற்கு காட்டினுள் மாணவர்கள் கைகளில் சிப்ஸ் பாக்கெட்டுகளும்,மறைவாக பாட்டில்களும் வைத்துக்கொண்டு உள்ளே செல்வது பரிதாபமாக உள்ளது.வனத்துறையினர் கவனம் எடுத்தால் இந்த அழகிய இடம் அழகாக பராமரிக்கப்பட்டு அழகானதோர் பிக்னிக் ஸ்பாட்டாக மாறிவிடும்.
அழகான கடற்கரைக்கிராமம் கோவளம்.புகழ்பெற்ற தர்காவும் ஒரு சர்ச்சும் உள்ளது.அழகிய கடற்கரையில் மீன் வியாபாரிகள் மீன் கழிவுகளைக்கொட்டி அசிங்கம் செய்வதுதான் சகிக்க முடியவில்லை.அலையில் துள்ளி விளையாடும் ஏராளமான மீன்களைப்பார்க்கும் பொழுது இந்த பகுதியில் மீன் உற்பத்தி அமோகம் என்ற உண்மை புரிகின்றது.இருப்பினும் சென்னையில் மார்கெட்டில் கிடைக்கும் விலைக்கு நிகராக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.






சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் புரதான சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.ஊரும் கடற்கரையும் அசுத்தமாக இருந்தாலும் சிற்பக்கோவில் மிக அழகான முறையில் படு சுத்தமாக பராமரித்து வருகின்றனர்.நுண்ணிய வேலைப்பாடுகளுடம் கூடிய சிற்பங்களைப்பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது.மேலும் தகவல்கள் அறிய இங்கேசொடுக்குங்கள்.

சிதைந்து சிதிலமாகிப்போன பூங்காவைப்பார்க்கும் பொழுது இங்கு வரும் வெளிநாட்டினர் நம் நாட்டினைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று வருந்தத்தோன்றுகின்றது.

கலைப்பொருட்களும்,கைவினைப்பொருட்களும் போட்டிப்போட்டுக்கொண்டு விற்பனை செய்கின்றனர்.மணி,முத்து,சங்கு,சிப்பிகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள்,வீட்டலங்காரப்பொருட்கள்,கைவினைப்பொருட்கள் விறபனைக்கு மலைபோல் குவிந்துள்ளது.நாம் 60 ரூபாய்க்கு வாங்கும் ஒரு மணிமாலையை வெளிநாட்டினருக்கு 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.




69 comments:

Geetha6 said...

அருமையாக வர்ணித்து உள்ளீர்கள் .

Asiya Omar said...

அருமையாக உள்ளது,நீங்கள் சுட்டி காட்டிய இடங்களும்,இன்னும் சில இடங்களும் 2006 ரில் சென்னை வந்த போது நாங்க தங்கிருந்த ஹோட்டலிலேயே டூர் அர்ரேஞ் செய்த பொழுது கூட்டி சென்றார்கள்.நிஜமாகவே நல்லாயிருந்தது.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

Anonymous said...

நிறை குறைகளை அழகாக சொல்லி இருக்கீங்க..

Anonymous said...

.நாம் 60 ரூபாய்க்கு வாங்கும் ஒரு மணிமாலையை வெளிநாட்டினருக்கு 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

அவர்களுக்கு நிஜம் தெரிந்தால் எவ்வளவு அசிங்கமா இருக்கும்.!

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல விரிவுரையாளர் நீங்க,
என்ன அருமையா விளக்கிருக்கீங்க சூப்பர்....

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..

சென்னையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள் பற்றி விரிவாகவே சொல்லி இருகிறீர்கள்..

நல்லா இருக்கு,,

அன்புடன்
ரஜின்

Kanchana Radhakrishnan said...

அருமையாக சொல்லி இருக்கீங்க..

ஹுஸைனம்மா said...

நல்ல விரிவாச் சொல்லிருக்கீங்க அக்கா.

//விலையைப்பார்த்து ஆச்சரியத்தில் கண்கள் விரியும்//

நிஜமாவே ஆச்சர்யம்தானா? அதிர்ச்சி இல்லயே?

சுற்றுலாத் தளங்களையாவது நம்மவர்கள் சுத்தமாகக் வைத்திருக்க்கூடாதா என்று வருத்தமாகத்தான் இருக்கு. எப்பத்தான் திருந்துவாங்களோ?

இந்த டூர் போனதுனாலத்தான் ஆள் காணாமப் போய்ட்டீங்களா? :-))))

Ram said...

நான் சென்னை வந்து 10வருசம் ஆகுது.. இதுவரைக்கும் மெரினா, மாமல்லபுரம், கிண்டி சிறுவர் பூங்கா விடுத்து எதற்கும் சென்றதில்லை.. ஒரு தீம் பார்க் கூட எட்டி பார்த்ததில்லை.. பாப்போம்.. இனியாவது சென்னையில் இருக்கும் ஏராளமான இடங்கள் என் கால்தடத்தை தாங்கும் பாக்கியம் பெறுகிறதா என்று..(நமக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது)

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க. போட் ல் போகும்போது பார்த்துதான் போகணும்.

Menaga Sathia said...

நல்லா விரிவா எழுதிருக்கீங்க...நாங்க சென்னக்கு வரும்போது அந்த பக்கம்தான் வருவோம்,ரம்மியமா இருக்கும்...

Unknown said...

கே. ஆர்.விஜயன் said...

ஸாதிகா said...

நல்லா சிரிச்சாச்சு.பேரை மாத்திட்டிங்க???//



Blogger என். உலகநாதன் said...

நண்பரே,

நான் முதலில் இனியவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைப்பூ முகவரி:

www.iniyavan.com

நிறைய பெயர் அதே பெயரில் எழுதுவதால் நான் என் ஒரிஜினல் பெயருக்கு மாறிவிட்டேன்.

இன்னும் சிலரும் இதே பெயரில் எழுதுவதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்.//


இதுதான் காரணம் ஸாதிகா.நன்றி.

February 6, 2011 7:26 AM

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்

அந்நியன் 2 said...

ஏதோ பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது வாத்தியார்மார்கள் டூர் கூட்டிட்டுப் போன பிரமையைக் கண்டேன்,புகைப் படமும் அதனின் வர்ணிப்புகளும் பளிச்,பளிச்.

ஆனால் உணவுக் கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையைப் பார்க்கும் போது ஓங்கி ஒரு அடி கொடுக்கலாமான்னு நினைக்க தோன்றுகிறது.

நல்லதொரு தொகுப்பு நன்றிக்கா !

சீமான்கனி said...

அழகான கட்டுரை அக்கா...மீண்டும் ஈ.சி.ஆர் டூர் அடிச்சு வந்தமாதிரி இருக்கு....

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,மிகவும் அழகாக ஈசியாரை பற்றியும் அதனை சுற்றியிருக்கும் சுற்றுலா தளங்களை பற்றியும் வர்ணித்து விவரித்து இருக்கின்றீர்கள்... என்னை போன்று அங்கே செல்லாதவர்களுக்கு மிகவும் அறிய வேண்டிய தகவல்கள்....
ஹூம்... சும்மா இருந்த எனக்கு பார்க்கணும்னு என்கிற ஆவலை தூண்டிட்டீங்க.... இனி \\என்னங்கன்னு///.... கூப்பிட்டுட்டு போக வேண்டியதுதான்...
பார்க்கலாம் (இன்ஷா அல்லாஹ்...)
நன்றி அக்கா..

அன்புடன்,
அப்சரா.

தூயவனின் அடிமை said...

பலமுறை சென்று வந்துள்ளேன், படங்கள் அருமை.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பயணக்கட்டுரை. பலருக்கு உபயோகமாக இருக்கும்.

Unknown said...

namma oorai.orey post la azhaga kaatiteenga.romba nandri...happy to follow u

Chitra said...

சிதைந்து சிதிலமாகிப்போன பூங்காவைப்பார்க்கும் பொழுது இங்கு வரும் வெளிநாட்டினர் நம் நாட்டினைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று வருந்தத்தோன்றுகின்றது.

... :-(

ஜெய்லானி said...

என்ன ஒரு ஆச்சிரியம் ..!!மாமல்லபுரத்தை நான் சின்ன வயசுல பார்த்தது இன்னும் அதே மாதிரியே இருக்கே....

ஊருக்கும் போகும் போதும் வரும் போதும் ஈ சி ஆரில்தான் போவது :-)

ஸாதிகா said...

கீதா6 வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஆசியா,கடந்த சனிக்கிழமை போய் வந்தேன்.உடனே அப்லோட் செய்து விட்டேன்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஈசி ஆரோ,ஓ எம்மாரோ குடும்பத்தினருடன் சென்று வந்தால் மாதம் முழுதும் உற்சாகமாக இருக்கும்.

ஸாதிகா said...

//அவர்களுக்கு நிஜம் தெரிந்தால் எவ்வளவு அசிங்கமா இருக்கும்.!// உண்மைதான் மஹா.எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர்.சிலைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல நுழைவு கட்டணம் பத்து ரூபாய்.ஆனால் வெளிநாட்டினருக்கு அதிகம் வசூலிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி நாஞ்சில் மனோ சார்.ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதினேன்.

ஸாதிகா said...

அலைக்கும் சலாம் சகோ ரஜின்.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

காஞ்சனா ராதாகிருஷ்ணன் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஹப்பா...ஹுசைனம்மா கிட்டே இருந்து பாராட்டு கிடைத்து விட்டது.ஏங்க..நாலு நாட்களாகவா ஈ சி ஆரை சுற்றிக்கொண்டு இருந்தேன்னு நினைக்கறீங்க???கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாங்க தம்பி கூர்மதியான்(என்னதொரு அழகான பெயர்.தற்புகழ்ச்சி பிடிக்காது என்று சொல்லி விட்டு எப்படி இப்படி ஒரு ஷார்ப் ஆன நாமகரணத்தை சூட்டிக்கொண்டீர்கள்?)வாங்க..வந்ஹு சென்னையில் உங்கள் கால் பதியுங்கள்.கண்டு கழியுங்கள்.தொடர்ந்து பின்னூட்டுங்கள்.நன்றி.

ஸாதிகா said...

//போட் ல் போகும்போது பார்த்துதான் போகணும்.// உண்மைதான் கே ஆர் விஜயன் சார்.நிறைய தடவை போட்டிங் போய் இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் ஏறும் பொழுது பயமாகவே இருக்கும்.அதிலும் இப்பொழுது எங்கள் ஊருக்கருகே நடந்த பெரிய படகு விபத்தை நினைத்தால் பயணிக்கவே பயமாக உள்ளது.கருத்துக்கும்,பெயர் மாற்றியதற்கான விளக்கத்திற்கும் நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மதுரை சரவணன் சார்.

enrenrum16 said...

சுற்றி வந்த இடங்களை அழகாக எங்களுக்கும் காண்பித்ததற்கு நன்றி.... இப்போதைக்கு மாமல்லபுரம் மட்டும் போயிருக்கோம்..முட்டுக்காடு, சவுக்குக்காடு இன்ஷா அல்லாஹ் முடிந்தால் போகணும்... படகு சவாரிக்கு சேஃப்டி வெஸ்ட்-லாம் தர்றாங்க போலயே...அப்ப கொஞ்சம் தைரியமா போகலாம்.;)

நாஸியா said...

சின்ன புள்ளையா இருக்கும்போது போனது.. உங்க இடுகைய பார்த்ததும் திரும்பவும் போகனும் போல இருக்கு.. ஈசிஆரில் பாண்டிச்சேரிக்கு போற வழியில வாப்மாவோட ஊர் இருக்கு.. எனக்கு எப்பவுமே ஈசிஆர் ரொம்ப பிடிக்கும்

ஸாதிகா said...

//உணவுக் கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையைப் பார்க்கும் போது ஓங்கி ஒரு அடி கொடுக்கலாமான்னு நினைக்க தோன்றுகிறது.// உன்னதமான இந்திய பிரஜை நீஙக்ள் அந்நியன்:-)கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாங்க சீமான்கனி.இப்ப எல்லாம் ஆளை பார்க்கிறதே குதிரைக்கொம்பா இருக்கே?கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

”என்னங்க”என்று கூப்பிட்டு,”அட..வாங்கங்க” என்று பிடிவாதாமாக அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதுதானே!:-)நன்றி பானு கருத்திட்டமைக்கு.

ஸாதிகா said...

நாஸியா...எப்படி இருக்கீங்க.?மிண்டும் வெற்றிகரமாக பதிவுலகம் இழுத்து விட்டதா?கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோ இளம்தூயவன் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோ அக்பர் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சவிதா ரமேஷ் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.என் வலைப்பூவை ஃபாலோ செய்து சந்தோஷப்பட்டது போல் நானும் உங்கள் வலைப்பூவை ஃபாலோ செய்து சந்தோஷப்படுகின்றேன்.

ஸாதிகா said...

பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி சித்ரா.

ஸாதிகா said...

சின்ன வயசுலே பார்த்த மாதிரியேவா இருக்கு.அது புரதான சின்னங்கள்.பெயிண்ட் அடிக்க முடியாதே ஜெய்லானி.கருத்துக்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சிதைந்து சிதிலமாகிப்போன பூங்காவைப்பார்க்கும் பொழுது இங்கு வரும் வெளிநாட்டினர் நம் நாட்டினைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று வருந்தத்தோன்றுகின்றது.எனக்கும் அப்படித்தான் வருத்தமாக இருந்தது.

Ahamed irshad said...

நேரில் பார்த்த‌வை போல் ப‌திவிட்டது அழ‌கு...வாழ்த்துக்க‌ள்..

vanathy said...

//ஏராளமான உணவுக்கழிவுகள் ,அதனை சுற்றி வரும் பிராணிகள்,யூஸ் அண்ட் த்ரோ தட்டுக்கள் டம்ளர்கள் என்று குப்பை அதிகளவு பார்ப்பவர்களை எரிச்சலூட்டுகின்றது.//

நம்ம ஆளுங்களுக்கு சுத்தமா ஒரு இடம் இருந்தா பொறுக்காதே. எதையாவது வீசினாத் தான் திருப்தி வரும் போல.
நல்ல பதிவு & படங்கள்.

குறையொன்றுமில்லை. said...

உங்க கூடவே ஈசிஆர் பயணம் செய்ததுபோல இருந்தது.

GEETHA ACHAL said...

அழகாக சொல்லி இருக்கின்றிங்க...

அருமையான படங்கள்...சூப்பரான பகிர்வு....

எம் அப்துல் காதர் said...

இந்த அழகான பயணக்கட்டுரை அருமையா இருக்கு. முட்டுக் காட்டுக்கும், மகாபலிபுரத்துக்கும் நாங்கள் நிறையத் தடவை போய் வந்திருக்கிறோம். ஆனாலும் பதிவில் படிக்கும் போது சுகமாய் இன்னொரு முறை போய் வந்த திருப்தி.

அரபுத்தமிழன் said...

ஈசிஆரை எங்களுக்கு ஈசியா சுத்திக் காட்டிட்டீங்க !!

athira said...

வர்ணனையும் படங்களும், நேரில் சென்றதுபோன்ற உணர்வினைத் தருகிறது ஸாதிகா அக்கா எனக்கு. அனைத்தும் அழகு. தாமதமாகிட்டேன் வர. பின்பு வருகிறேன்.

Jaleela Kamal said...

ஆஹா சூப்பரா சுத்தி பார்த்தாச்சு,
இனி வந்தா போட்டிங் போகனும்.
முத்துமாலை என்க்கு ரொம்ப பிடிக்க்கும்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு ஸாதிகா..

Mahi said...

அழகான புகைப்படங்கள்! நல்ல பதிவு ஸாதிகா அக்கா!

மாமல்லபுரம் போகணும்னு பலநாளா ஆசை,அதுவும் பௌர்ணமி இரவில் போகணும்! :)

ஸாதிகா said...

இராஜைராஜேஸ்வரி,வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

அஹ்மது இர்ஷாத் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//நம்ம ஆளுங்களுக்கு சுத்தமா ஒரு இடம் இருந்தா பொறுக்காதே. எதையாவது வீசினாத் தான் திருப்தி வரும் போல// உண்மைதான் வானதி.சைதாபேட்டையில் புதிதாக ரயில்வே சுரங்கப்பாதை கட்டினார்கள்.பணிகள் முடிந்து ஒரு வருடம் ஆகி இருக்கும்.ஆனால் நான் சமீபத்தில்த்தான் முதன் முறையாக அங்கு சென்றேன்.பார்த்து விட்டு அதிர்ச்சியாகி விட்டது.அத்தனை தூரம் நம் மக்கள் அந்த புதிய சுரங்க பாதையை அசிங்கப்படுத்தி அலங்கோலப்படுத்தி இருந்தார்கள்.இப்படி எல்லாம் தொடர்ந்தால் நம் நாடு எப்பொழுது வல்லரசாகும்??கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா கருத்துக்கு நன்றிம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்.

ஸாதிகா said...

//ஆனாலும் பதிவில் படிக்கும் போது சுகமாய் இன்னொரு முறை போய் வந்த திருப்தி.
// வரிகளில் மகிழ்ச்சி அப்துல்காதர்.மிக்க நன்றி.

ஸாதிகா said...

நன்றி அரபுத்தமிழன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி அதிரா.ரொம்ப பிஸியா?

ஸாதிகா said...

ஜலி,கருத்துக்கு மிக்க நன்றிப்பா!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தேனம்மை.

ஸாதிகா said...

//மாமல்லபுரம் போகணும்னு பலநாளா ஆசை,அதுவும் பௌர்ணமி இரவில் போகணும்! :)
// அவசியம் போய்ப்பாருங்கள் மகி.பவுர்ணமி நேரத்தில் அப்படி என்ன விஷேஷம்??கருத்துக்கு மிக்க நன்றி மகி.

Pranavam Ravikumar said...

Lovely Pics..! Well presented too. It was like a trip..!

Mrs.Mano Saminathan said...

தகவல்களும் புகைப்படங்களும் அருமை ஸாதிகா!

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் பகிர்வு அருமை ஸாதிகா. குறிப்பாக கடைசி மூன்று படங்களும் மிகப் பிடித்தன.

மாதேவி said...

முட்டுக்காடு பார்த்ததில்லை.

மாமல்லபுரம் மிகவும் பிடித்த இடம்.இருதடவை வந்திருக்கிறேன். மிகவும்அழகிய கலைச் சிற்பங்கள்.