February 24, 2011

பெற்ற மனம் பித்து






செல்லம் கொடுத்து குட்டி சுவராக்கிட்டே
சாடிய கணவரிடம் சமாதானம்

இருந்தாலும் உன் பிள்ளைக்கு இத்தனை
கொழுப்பு ஆகாது
குமுறிய நாத்தனாரிடம் கொந்தளிப்பு

இதென்ன பிள்ளையா பிசாசா கத்திய
பக்கத்துவீட்டுப்பாட்டியிடம் தர்க்கம்

பெருக்கித்துடைத்து அப்பாலே போனால்
உடனே பண்றான் குப்பை
அலுத்துக்கொள்ளும் முனியம்மாவிடன் எரிச்சல்

இன்னும் கொஞ்சம் கவனம் எடுக்கணும்
எச்சரிக்கும் வகுப்பாசிரியையிடம் பசப்பல்

பிடித்த உருளை ரோஸ்டும்,வெஜிடபிள் பிரியாணியும்
செய்து கொடுத்து தலை கோதி
பறிமாறும் பொழுது
போம்மா என்று வெறுத்து சொன்னால்
அலுக்காது ஒருபோதும் தாய் மனம்

மாமியாருக்கு தெரியாமல் முந்தானை திறந்து
காசு எடுத்துக்கொடுத்து
பாய் கடையில் பரோட்டா சால்னா
வாங்கிச்சாப்பிடு கண்ணா
வாஞ்சையுடன் வெளிப்படும் தாய்ப்பாசம்

பண்டிகைக்கு கொடுத்த போனஸில்
புத்தாடை மறந்து,கொண்டாட்டம் மறந்து
கூடவே கடனும் வாங்கி
தனயன் கேட்டதற்கு டூவீலர் வாங்கிகொடுத்து்
முகவாயில் கை வைத்து வியந்து
மகிழ்ந்து நின்றாள் அன்னை

கண்ணா பில்லியனில் வைத்து
கோவிலில் இறக்கி விடு
கும்பிட்டு வர்ரேன் என்றவளைப்பார்த்து
ஈவினிங் ஷோவுக்கு லேட்டாகி போச்சு என்று
ஓடியவன் கண்டு
சிரித்து மகிழ்ந்தாள்

இன்று
அம்மா,உன்னாலே எனக்கும் அவளுக்கும்
எப்பொழுதும் சண்டை
அதனால் நீ இனி முதியோர் இல்லத்தில்
சேர்ந்துக்கம்மா
நேர் பார்வை பாராமல் கூறும் மகனிடம்
”உன் சந்தோஷமே எனக்கு போதும் ராசா”
நேர்ப்பார்வையுடன் தன் உடமைகளைத்தூக்குகின்றாள்
பெற்ற தாயவள்
.

41 comments:

அரபுத்தமிழன் said...

தாயுக்குள் இத்தனை பாசத்தை வைத்த எழுபதுக்கும் மேற்பட்ட‌
தாயுமானவனை நேற்றுதான் நினைத்து இரண்டு சொட்டுக் கண்ணீர்
வடித்தேன். அந்த நெகிழ்வை மீண்டும் புதுப்பித்துத்தந்த சகோ சாதிகா வாழ்க.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை அம்மா.
படித்தால் நெஞ்சு நெகிழ்கிறது.
வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

கடைசி வரி எதார்த்த வலி

என் தாயிக்கு மட்டும் அல்ல
உலகில் எந்ததாயிக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.

athira said...

இன்று
அம்மா,உன்னாலே எனக்கும் அவளுக்கும்
எப்பொழுதும் சண்டை
அதனால் நீ இனி முதியோர் இல்லத்தில்
சேர்ந்துக்கம்மா
நேர் பார்வை பாராமல் கூறும் மகனிடம்
// தாய் எப்பவும் தாய்தான் பிள்ளை எப்பவும் பிள்ளைதான், என்னதான் சொன்னாலும் எப்பவுமே பிள்ளைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்து விட்டுக்கொடுத்துப் போவது தாய் தான் என்பதை மிக அருமையாக கவிதைமூலம் உணர்த்திட்டீங்க ஸாதிகா அக்கா சூப்பர் கவிதை.

பேபியாக இருக்கும்போது படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருது...

“பெற்றமனம் பித்து என்பர் - சிலர்
பிள்ளைமனம் கல்லு என்பர்
பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகுமுன்னர்
கல்லுகள் தானே”

Pranavam Ravikumar said...

Very very nice lines... Touching too.!

ஜெய்லானி said...

கடைசியில் .... :-(

Thenammai Lakshmanan said...

ரொம்ப நெகிழ வைத்து விட்டது ஸாதிகா.. பிள்ளைகள் திருந்த வேண்டும். பெற்றவள் பெற்றவள்தான்..

Unknown said...

நல்லாத்தான் போய்கொண்டிருந்தது கடைசி பத்தியில் மட்டும் இதயம் கனத்தன கண்கள் பனித்தன.

ஹுஸைனம்மா said...

அவசியப்படும்போது பிள்ளையைக் கண்டிச்சும், கஷ்டம் தெரிஞ்சும் வளர்க்கணும்கிற பாடம் கிடைச்சுது ஸாதிகாக்கா.

GEETHA ACHAL said...

என்ன அருமையான வரிகள்...தாய்மையினை அழகாக எழுதி இருக்கின்றிங்க...

கடைசி வரிகள் நிறைய இடங்கள் நடக்கும் உண்மை...வாழ்த்துகள்...

Ram said...

வருத்தமான ஒன்று.. சிறப்பு..

Anonymous said...

ஆழமான அழகான உணர்வை வெளிப்படுத்தியது உங்கள் கவிதை.!

Unknown said...

அருமை...

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா..,அழகான வரிகளால் மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்...
மிகவும் அருமையாக இருந்தது அக்கா...
உங்கள் எழுத்துக்கு நான் அடிமையாகி விட்டது என்னாவோ உண்மைதான்....
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

அந்நியன் 2 said...

அழகு.....எழுதிய விதம் அழகு.
அழகு வரியை கோர்த்த விதம் அழகு.
அழகு...தத்துவம் அனைத்தும் அழகு.
அழகு....தாயின் பாசம் அழகு.
அழகு....தாயின் பராமரிப்பு அழகு.
அழகு....தாயின் செல்லமே அழகு.
இன்றோ தாயிக்கு முதியோர் இல்லமே அழகு.

என்றுக் கூறும் கயவன் என் கையில் மட்டும் கிடைத்தால்...
அழகு அவனை குழி தோண்டி புதைப்பதுதான்.

நன்றாக இருக்கின்றது உங்கள் வீர வசனம்...சாரி....சாரி.. கவிதைன்னு லேபிளில் எழுதி இருக்கியள்ளே மறந்தே போச்சுக்கா.

தூயவனின் அடிமை said...

//இன்று
அம்மா,உன்னாலே எனக்கும் அவளுக்கும்
எப்பொழுதும் சண்டை
அதனால் நீ இனி முதியோர் இல்லத்தில்
சேர்ந்துக்கம்மா
நேர் பார்வை பாராமல் கூறும் மகனிடம்
”உன் சந்தோஷமே எனக்கு போதும் ராசா”
நேர்ப்பார்வையுடன் தன் உடமைகளைத்தூக்குகின்றாள்
பெற்ற தாயவள்//

இந்த வரிகள் மனதை ரொம்பவும் வேதனை படுத்தி விட்டது. இன்றைய உலகத்தில் இவை சர்வ சாதாரண விசயமாக கருதப்படுகிறது.

Chitra said...

உங்கள் படைப்புகளில், இதுவரை நான் வாசித்ததில் மிகச் சிறந்த ஒன்றாக, இந்த கவிதையை நான் கருதுகிறேன். முதலில், புன்னகை தவழ வாசிக்க ஆரம்பித்து , மனதில் சோகம் நிரம்ப, முடித்து விட்டீர்கள்.

Asiya Omar said...

அழகான வரிகள்,ரசித்தேன்,பிள்ளைகளின் மகிழ்ச்சியே நமது.அருமை,தோழி.தாயின் தியாகத்திற்கு இணையேது ?

Anisha Yunus said...

அல்லாஹூ..அக்பர்

ஸாதிகாக்கா... படித்ததும் நெஞ்சு குமுறுகிறது. கவிதையாய் எழுதினாலும் தினம் தினம் நடக்கும் கதையே இது. என்ன சொல்ல, இறைவன் மட்டுமே இந்த மாதிரி கைவிடப்பட்ட தாய் தந்தைக்கு ஆதரவு...!!

vanathy said...

மனதை தொடும் வரிகள். அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள்.

சாந்தி மாரியப்பன் said...

நெகிழவெச்சுட்டீங்க ஸாதிகா..

ஆயிரம்தான் பாசமா இருந்தாலும், கொஞ்சூண்டு கண்டிப்பையும் காட்டணும்கறதை உணர்த்துது உங்க கவிதை.. குதிரை ஓடினப்புறம் லாயத்தை பூட்டுறதால என்ன பிரயோசனம்?? இல்லீங்களா...

நட்புடன் ஜமால் said...

very nice ...

ஸாதிகா said...

அரபுத்தமிழன்

ரத்னவேல்

ராஜவம்சம்

அதிரா

ரவிக்குமார்

ஜெய்லானி

தேனம்மை

கே ஆர் விஜயன்

ஹுசைனம்மா

கீதாஆச்சல்

தம்பி கூர்மதியான்

மஹாவிஜய்

இரவு வானம்

அப்சரா

அந்நியன்

இளம் தூயவன்

சித்ரா

ஆசியா

அன்னு

வானதி

அமைதிச்சாரல்

ஜமால்

உங்கள் கருத்துக்களுக்கு என் அன்பு நன்றிகள்!

கோமதி அரசு said...

நெகிழ்வான கவிதை.
பெத்தமனம் பித்துதான்.

இப்படித்தான் தன் பிள்ளை செய்யும் தப்புகளை தந்தை,மற்றும் சுற்றத்திற்கு மறைத்த தாய் பிறகு கஷடப்பட்டதை பார்த்து இருக்கிறேன்.

அன்பும் கண்டிப்பும் இருந்தால் தான் குழந்தை நல்லபடியாக வளர்வான்.
கஷ்ட நஷ்டங்களை பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும்.

ராஜவம்சம் சொன்ன மாதிரி உலகில் எந்த தாய்க்கும் இந்த நிலைமை வேண்டாம் ஸாதிகா.

சீமான்கனி said...

தாய் மனதைச் சொல்லிவிட்டு
என் மனதை அள்ளிக்கொண்டு போகுது உங்கள் கவிதை...

கவிதை...
நெஞ்சைத் தொட்டு கொஞ்சமாய் நெருடிவிட்டு போகுது...

வாழ்த்துகள் அக்கா...

குறையொன்றுமில்லை. said...

மனதை மிகவும் நெகிழச்செய்து விட்டிர்கள்.

ஸாதிகா said...

கோமதி அரசு

சீமான்கனி

லக்‌ஷ்மிம்மா

உங்கள் அனைவருக்கும் அன்பு நன்றிகள்

Jaleela Kamal said...

மிகவும் உருக்கமாகவும், மனவேதனையாகவும் இருக்கு ஸாதிகா அக்கா
என்றுமே பிள்ளைகளுக்க்காக விட்டு கொடுக்கும் அம்மாக்களின் குணம் அப்படி

இராஜராஜேஸ்வரி said...

நெகிழ்வான பதிவு.கண்கள் குளமாகின்றன.

வலையுகம் said...

அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சாதிக்காக்கா,

ஆரம்பத்துல நல்லாவே இருந்த கவிதைய கடைசியல முடிக்கும் போது,என்ன சொல்ரதுன்னே தெரியல..

பிள்ளைகளை கண்டுக்காம விடுரது மட்டும் தாயோட பாசம் இல்லையே.அவனை,தேவையானபோது கண்டித்தும்,தண்டித்தும் வளர்ப்பதில் தானே தொலைநோக்குள்ள பாசம் இருக்கிறது....

அதை தாய்மார்களுக்கு இக்கவிதை உணர்த்துவதாக புரிகிறேன்...

/@ஹுஸைனம்மா
அவசியப்படும்போது பிள்ளையைக் கண்டிச்சும், கஷ்டம் தெரிஞ்சும் வளர்க்கணும்கிற பாடம் கிடைச்சுது ஸாதிகாக்கா./
வழிமொழிகிறேன்..

வாழ்த்துக்கள்ஸ்
அன்புடன்
ரஜின்

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா!

செல்லமான ஒரே பிள்ளையா இருந்தாலும் சில நேரங்களில் வெளிப்படைக்காவது கண்டிப்பு காட்டணும். இல்லாட்டி என்ன‌தான் பாசத்தைக் கொட்டி கொட்டி வளர்த்தாலும், கடைசியில் அவங்களுக்கே அந்த தாய் பாரமாகிடுவாள். அர்த்தங்கள் பொதிந்த அருமையான கவிதை ஸாதிகா அக்கா, வாழ்த்துக்கள்!

Julaiha Nazir said...

/பிள்ளைகளை கண்டுக்காம விடுரது மட்டும் தாயோட பாசம் இல்லையே.அவனை,தேவையானபோது கண்டித்தும்,தண்டித்தும் வளர்ப்பதில் தானே தொலைநோக்குள்ள பாசம் இருக்கிறது..../வழிமொழிகிறேன்..அப்படி ரொம்ப செல்லம் கொடுத்து வளர்ந்த நிறைய பிள்ளைகள் என் அம்மா அப்போவே கொஞ்சம் கண்டிச்சு வளர்திருந்தால் நான் இன்னும் நல்லா இருந்து இருப்பேன் என்று சொல்ல கேட்டிருக்கிறேன் ....!!!

ஸாதிகா said...

ஜலீலா

இராஜராஜேஸ்வரி

சகோ ஹைதர் அலி

சகோ ரஜின் வ அலைக்கும் வஸ்ஸலாம்

அஸ்மா வ அலைக்கும் வஸ்ஸலாம்


ஜுலைஹா

உங்கள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள்.

Mahi said...

கவிதை நல்லா இருக்கு ஸாதிகாக்கா! மனதைத்தொடும் உண்மை!

Kanchana Radhakrishnan said...

அருமை...நெகிழ்வான கவிதை.

மாதேவி said...

நெஞ்சைத்தொடும் கவிதை.

enrenrum16 said...

நல்ல கவிதை.. யதார்த்தமா இருக்குது அக்கா... தன் குழந்தை நல்லவனா வளரும்னு நினைக்கும் எந்த தாயும் கொஞ்சம் கண்டிப்பையும் சேர்த்து வளர்த்தா அந்த குழந்தைக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது...கவிதையின் முடிவை வாசிக்கும்போது மனது கனத்து விட்டது :(

mohamedali jinnah said...

குழந்தைக்கு(முகத்தில் பல இடங்களில்)முத்தம் கொடுத்துப் பாருங்கள்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.
http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_20.html#.TifM9w3ZycU.facebook

mohamedali jinnah said...

Sahih Bukhari Volume 1, Book 11, Number 677:
Narrated Anas bin Malik:
The Prophet said, "When I start the prayer I intend to prolong it, but on hearing the cries of a child, I cut short the prayer because I know that the cries of the child will incite its mother's passions."
Sahih Bukhari Volume 8, Book 73, Number 26:
Narrated Abu Huraira:
Allah's Apostle kissed Al-Hasan bin Ali while Al-Aqra' bin Habis At-Tamim was sitting beside him. Al-Aqra said, "I have ten children and I have never kissed anyone of them," Allah's Apostle cast a look at him and said, "Whoever is not merciful to others will not be treated mercifully."
Bukhari Volume 8, Book 73, Number 27:
1. “We have enjoined on man kindness to his parents; in pain did his mother bear him, and in pain did she give him birth”
Quran:-(46:15).

2. “Thy Lord hath decreed that ye worship none but Him, and that ye be kind to parents. Whether one or both of them attain old age in thy life, say not to them a word of contempt, nor repel them, but address them in terms of honor. And out of kindness, lower to them the wing of humility, and say:
‘My Lord! bestow on them Thy Mercy even as they cherished me in childhood’ “(17:23-24).
It is narrated by Asma bint Abu Bakr that during the treaty of Hudaibiyah, her mother, who was then pagan, came to see her from Makkah. Asma informed the Messenger of Allah (sallahu alayhe was salaam)of her arrival and also that she needed help.
He sallahu alayhe was salaam said:
Be good to your mother .

(Bukhari, Muslim).
http://seasonsali.blogspot.com/2011/07/loving-and-kissing-in-islam.html

Anonymous said...

சிறந்த கவிதை வாழ்த்துக்கள்