February 22, 2011

வார்த்தை ஜாலம்




”அவளா..?ராட்சஷியாச்சே”
“அவள் வாய் இருக்கே.அது பனாமா கால்வாய்”
“யப்போய்..இவ வாய்லேர்ந்து தப்பி வர முடியுமா”

ஒரு சிலர் ஒரு சிலரைப்பற்றி இப்படி விமர்சிப்பதை கேட்டு இருப்போம்.பார்த்தும் இருப்போம்.உண்மையில் அந்த வாய்க்குறியவர்கள் அத்தனை பயங்கரவாதியா என்றால் அதுதான் இல்லை.இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ஜாலம் என்றால் என்னவென்றே தெரியாது.வார்த்தைகளில் வல்லினம் மெல்லினமாக பேசுவது எப்படி என்ற சூட்சுமம் புரியாது.

பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவி சுட்ட பஜ்ஜியை சாப்பிட்டடாற்போல் சிலரது வார்த்தைகளில் காரம் தெரிக்கும்.இன்னும் சிலர் பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் வார்த்தை மென்மையாக,இனிக்க இனிக்க இருக்கும்.கேட்கும்செவிப்பறைகளில் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதைப்போல் இருக்கும்.

நல்ல வாழ்க்கைக்கும்,அழகிய பண்பிற்கும்,கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புக்கும்,நெருக்கமான,தொய்வில்லாத நட்புக்களுக்கு,நாம் உத்தியோகம் செல்லும் இடங்களுக்கும் இப்படி எல்லாவித அம்சங்களுக்கும் இந்த ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்கள் அவசியம்தேவை.

வார்த்தைகளில் எப்பொழுதும் அதீத கறாரும் கண்டிப்பும் ,அதிகார தோரணையும்,இடைவிடா ஆளுமை குணமும்,தான் தான் உசத்தி என்ற மனோபாவமும்,அகம்பாவமும்,ஆணவமும் நமது மதிப்பீட்டை பிறர் முன் குறைத்துவிடும்.இப்பதிவின் முதல் மூன்று வரிகளால் விமர்சிக்கப்படுவோம்.

நமது வாழ்க்கைத்துணையாகட்டும்,மற்றநட்புக்கள், உறவுகளாகட்டும்,வீதியில்செல்லும் காய்காரி முதல் வீட்டில் வேலை பார்க்கும் முனியம்மா வரை இந்த மிளகாயில் காரம் தடவும் வேலை பலிக்காது.

“டேய் இருபத்திநாலு மணிநேரமும் கம்பியூட்டரில் இருந்து தொலைக்கறதே உனக்கு பொழைப்பா போச்சு.கொஞ்ச,ம் கூட பொறுப்பு கிடையாது.இப்படியே போனால் மாடுதான் மேய்க்கனும்.மரியாதையா போய் படிடா”பெற்ற பிள்ளையிடம் காட்டுக்கத்தலாக கத்தினால் அந்தப்பிள்ளை சந்தோஷமாக போய் படிப்பானா?மாட்டான்.உங்களுக்கு பயந்து படித்தாலும் மனபூர்வமாக படித்து ,மண்டையினுள்ளே ஏற்றிக்கொள்ளுவானா?மாட்டான்.
இதுவே ஜீராவில் குலோப்ஜாமூனை ஊற வைத்தாற்போல் பேசுங்கள்.

“ராஜா...இன்னும் எக்‌ஸாமுக்கு பத்தேநாள் தான் இருக்குப்பா!போய் படிடா செல்லம்.”இந்த ஒரு வார்த்தை போதுமே.சடாரென்று சட் டவுன் செய்து விட்டு படிக்கும் மேசையை நோக்கி செல்வதற்கு.

“ஏங்க..உங்களுக்கு என்று சுய புத்தியே இல்லையா?சம்பளக்கவரை கையிலே வாங்கியதும் கடன் கேட்டானாம்,இவரும் தூக்கி தானம் வார்த்துட்டு வந்துட்டாராம்.ஒவ்வொருத்தனின் சாமர்த்தியத்தை பாருங்க.அவனவன் எப்படி உஷாரா இருக்கான்னு.தெளிவா இருக்கான்னு.அதான் அப்படியே இளிச்சவாயன்னு நெற்றியில் ஒட்டி இருக்கே.இதுக்கெல்லாமா யுனிவர்சிடியில் போய் படிக்க முடியும்?”
இப்படி பேச்சு சென்றால் அங்கே எப்படி அமைதி இருக்கும்?பிரச்சினைகளுக்கு சுழி போட்டது போல் ஆகி விடாதா?இவள் என்ன சொல்லுவது?நான் என்ன கேட்பது?என்ற கோப அகங்காரத்துக்கு வித்திட்டு விடாதா?
இதுவே கொஞ்சம் டயலாக் மாற்றி,குரல் உச்சஸ்தாயியில் இருந்து அடிகுரலுக்கு போய் அரவணைப்பு பேச்சால் நீங்கள் அணுகினால் உங்களவர் இனி கடன் கொடுப்பாரா?சம்பளக்கவர் கைக்கு வந்ததுமே உங்கள் அன்பு முகம் அல்லவா கண் முன் தெரியும்.

லேட்டாக வரும் வேலைக்காரியிடம்”இதே உனக்கு பிழைப்பா போச்சு.சம்பளம் மட்டும் வக்கணையா வாங்குறே.இஷ்டம் இருந்தால் டயத்துக்கு வா.இல்லேன்னா ஓடியே போய்டு” இப்படி ஆணவத்தை வெளிப்படுத்துவதைவிட “அட தாயம்மா,ஏன் லேட்டு ?நீ வந்துட்டு போய் விட்டால் சீக்கிரமா மார்க்கெட் போகலாம்ன்னு இருந்தேனே.சரி பரவா இல்லை.நாளைக்காவது டயத்துக்கு வா”இப்படி இருந்தால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.


சதா சோபாவில் சாய்ந்தபடி டிவி பார்த்துக்கொண்டும்,ஈஸி சேரில் சாய்ந்தபடி பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் மாமனாரிடம்”நீங்க ’சும்மா’தானே இருக்கீங்க.சின்னவனுக்கு ஹோம் வர்க் சொல்லிக்கொடுங்களேன்”என்று சொன்னால் அந்த் ’சும்மா’ சும்மா இருக்குமா என்ன?இதனையே வார்த்தையில் சற்று தேன் ,பால் தடவி ”மாமா,நீங்க ஹோம் வர்க் சொல்லிக்கொடுத்தால் சின்னவன் கப்புன்னு பிடித்துக்கறான்.அதென்னமோ தெரியலே தாத்தா சொல்லிக்கொடுத்தாருன்னா இவன் சமர்த்தா படிச்சுக்கறான்.கொஞ்சம் படித்துக்கொடுக்கறீங்களா மாமா.நான் அயர்ன் பண்ணிட்டு இருக்கேன்”இப்படி சொல்லிப்பாருங்கள் ரிஸல்ட் எப்படி இருக்கின்றது என்று.

“அத்தே,நான் என் ஸ்நேகிதி சுபா வீட்டிற்கு போறேன்.சமைத்து வைத்து விடுங்கள்”என்று உத்தரவு போட்டால் அத்தையின் முகத்தில் கடுகை தாளித்து விடலாம்.இதுவே”அத்தை,நான் சுபா வீட்டிற்கு போறேன்.ஹாஸ்பிடலுக்கு கூப்பிடுறா.சாம்பாருக்கு பருப்பை வேக வைத்து இருக்கேன்.தாளித்துக்கொட்டி ஒரு பொரியல் பண்ணிடுங்கள்.நீங்கள் வச்ச முருங்கைக்காய் சாம்பார்ன்னா நம்ம சுஜிகுட்டி கூட நாலு கவளம் சாப்பிடுவாள்.பண்ணிடுறிங்களா அத்தை.இல்லை பண்ணி வச்சிட்டே போகட்டுமா?கூட பதினைந்து நிமிஷம் தான் லேட் ஆகும்”இப்படி ரசகுலா வார்த்தைகளில் சொல்லிப்பாருங்கள்.

“நீ போய் வாம்மா.கூடவே புதினா தொகையலும் அரைத்து,பச்சடி பண்ணி,நாலு அப்பளத்தை பொரித்து வச்சிடுறேன்.”என்று நீங்கள் வரும்பொழுது ஒரு விருந்தே காத்திருக்கும்.

ஊருக்கு போகும்பொழுது”சிலிண்டர் வர்ர நாள் வந்தால் வாங்கி வச்சிடுங்க.பால் பாக்கெட் வந்தால் பிரிட்ஜ்ஜில் வாங்கி வச்சிடுங்க.கொரியர் வந்தால் கையெழுத்து போட்டு வாங்கி வச்சிடுங்க”இப்படி வரிசையாக கட்டளை போட்டு விட்டு எதிர் வீட்டுக்கார அம்மணியின் முகத்தைப்பாருங்கள்.எள்ளும்,கொள்ளும் வெடிக்கும்.’இவள் என்ன உத்தரவுக்கு மேல் உத்தரவா போடுறாள்.நான் என்ன இவளோட சேவகியா?”என்று முகம் சொல்லாமல் சொல்லும்.

“மாலா,தங்கைக்கு குழந்தை பிறந்து இருக்கு. ஊருக்கு போய் பார்த்து விட்டு வரப்போகிறோம்.தொந்தரவுக்கு மன்னிக்கனும்.பாலை வாங்கி பிரிட்ஜ்ஜில் வச்சிடுறீங்களா?ஒண்ணும் பிரச்சினை இல்லையே..”இப்படி வார்த்தைகளை ஜவ்வு மிட்டாயாக இழுத்து சொல்லிப்பாருங்கள் அவர்களே ”யோசிக்காமல் போய்ட்டு வா.கொரியர்,கேஸ் எது வந்தாலும் வாங்கி வைக்கிறேன்.”என்று அவரே வலிய சொல்லி உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுவார்.

இவ்வாறாக வாய் வார்த்தைகள்ஆயிரத்தெட்டு மந்திர ஜாலம் புரியும்.சும்மா வார்த்தைகள் தானே என்று மிளகாய்பஜ்ஜியாக வார்த்தைகளை கொட்டி அவஸ்த்தைபடாமல் எப்பொழுதும் ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூனாக இருங்கள்.நம்மை பற்றிய உயர்வான எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படுவதற்கு இனிய சொற்கள் அதி முக்கியம்.ஆகையினால் எந்த மிஸ்ஸும்,மிஸஸும்,மற்றும் மிஸ்டர்களும் இதனை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் வாழ்க்கைப்பயணம் சுவாரஸ்யமிக்கதாகவும்,இனிமையான உறவுகள் சூழப்பெற்றதாகவும் அமைந்து சூழலை எப்பொழுது இனிமையாக ,வாழ்க்கைபயணத்தில் கசப்புகள் மறைந்து இனிப்பு நிறைந்ததாக அமையும்.




76 comments:

பொன் மாலை பொழுது said...

Really a good post. Thanks

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க நீங்க சொல்லியிருப்பது உன்மைதாங்க. எப்பவும் இன்மையான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதுதான் சிறந்தது.

Chitra said...

இவ்வாறாக வாய் வார்த்தைகள்ஆயிரத்தெட்டு மந்திர ஜாலம் புரியும்.சும்மா வார்த்தைகள் தானே என்று மிளகாய்பஜ்ஜியாக வார்த்தைகளை கொட்டி அவஸ்த்தைபடாமல் எப்பொழுதும் ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூனாக இருங்கள்.


....sweet advice. :-)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

அருமையான இடுகை,சொல்லிய அனைத்து செய்தியுமே முத்துக்கள்.நல்ல அனுபவசாலிகளால் இந்த மாதிரியெல்லாம் எழுத முடியும்.சூப்பர் தோழி.

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

நம்ம பக்கம் ரொம்ப நாளா ஆளைக்கானோம்?

ஸாதிகா said...

சுக்கு மாணிக்கம் சார் முதல் வருகைக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா,கருத்துக்கு நன்றியம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சித்ரா.

ஸாதிகா said...

சகோ ரத்னவேல் முதல் வருகைக்கும்கருத்திட்டமைக்கும் நன்றி.

ஸாதிகா said...

சகோ ரத்னவேல் முதல் வருகைக்கும்கருத்திட்டமைக்கும் நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி தோழி.

ஸாதிகா said...

வேடந்தாங்கல் கருன் தங்கள் கருத்துக்கு நன்றி.இதோ உங்கள் பக்கம் போய் அருமையான பதிவைப்பார்த்து கருத்தும் இட்டு விட்டேன்.நன்றி.

அரபுத்தமிழன் said...

சத்தானக் கருத்துக்கு முத்தானப் பாராட்டுக்கள்.
நுனி நாக்கில் சர்க்கரை என்பார்களே அதானே. அதுவும் வேண்டும்தான்.
ஆனால் அடிக்கரும்பும் (இதயம்) இனிக்க வேண்டும். இல்லையென்றால்
அது வஞ்சப் புகழ்ச்சியாக மாறும் அபாயம் இருக்கிறது.

ஸாதிகா said...

ஆஹா..அரபுத்தமிழன் நீங்களும் பின்னூட்டம் வாயிலாக அழகிய கருத்துக்களைத்தந்து இருக்கின்றீர்கள்.நன்றி.

இமா க்றிஸ் said...

இனிப்பு ;)

ஸாதிகா said...

மிக்க நன்றி இமா.

ஹுஸைனம்மா said...

நல்ல அட்வைஸ்தான்.

//எப்பொழுதும் ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூனாக இருங்கள்//

ஸ்வீட் மட்டுமே சாப்பிட்டுகிட்டு இருந்தா திகட்டிடும்க்கா. ஒரு சேஞ்சுக்கு, மொளகா பஜ்ஜியும் சாப்பிட்டாத்தேன் அடுத்தாப்ல ஸ்வீட்டும் இனிக்கும்!! ;-)))))))

இப்படிக்கு
ஆல்வேஸ் மாத்தி யோசிக்கிறவங்க சங்கம்

ஹுஸைனம்மா said...

தொடர...

ஸாதிகா said...

//ஸ்வீட் மட்டுமே சாப்பிட்டுகிட்டு இருந்தா திகட்டிடும்க்கா. ஒரு சேஞ்சுக்கு, மொளகா பஜ்ஜியும் சாப்பிட்டாத்தேன் அடுத்தாப்ல ஸ்வீட்டும் இனிக்கும்!! ;-)))))))
// ஹுசைனம்மா,அது சர்க்கரை பாகு வச்சி,நெய்யும் பாலும் சேர்த்து சேர்த்து செய்த ஸ்வீட்டுக்குத்தான் பொருந்தும்.என்னுடைய அனுபவத்தில் என் மகனின் படிப்பு விஷயம் முதல்,வீட்டு வேலை செய்யும் பெண் வரை மெல்லினமே ஜெயித்து இருக்கின்றது.நம் பொறுமை மீறி மிளகாய் பஜ்ஜியானால் காரியம் கெட்டு விடுகின்றதே.இதோ உதாரணத்திற்கு கமெண்ட் வந்துள்ளதா என்று பார்க்க சற்று முன் கம்பியூ பக்கம் வந்த பொழுது சின்னவர் பேஸ் புக்கை திறந்து விவசாயம் பண்ணிக்கொண்டிருந்தார்.”ராஜா,விவசாயம் பண்ணியது போதும்டா செல்லம்.போய் படிமா”என்ற ஒரே வரியில் ஸ்டடி ரூமுக்கு சென்று புத்தகத்தை தூக்கி விட்டார்.

Thenammai Lakshmanan said...

அட்டகாசம் ஸாதிகா ..கலக்குறீங்க போங்க.. :))

ஸாதிகா said...

கவிதாயினி வாயில் இருந்து பார்ர்ட்டுக்களுக்கு கொடுத்து வைத்து இருக்கணும்.நன்றி தேனம்மை.

Jaleela Kamal said...

ஸாதிகா அட்டகாமா தேனும், குலோப் ஜாமுனும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச் இப்பதான் 60 % மாறி இருக்கேன், இத படிச்சதில் இன்னும் கொஞ்ச்ம ஐடியா கிடைத்து இருக்கு பிள்ளைகள் விஷியம் எல்லா இடத்திலும் இப்படி தான் இருக்கு, ஐஸ் வைத்து பார்க்கலாம்

சீமான்கனி said...

அக்கா!! மொத்ததுல வாயியுள்ள பிள்ளை பொழச்சுக்கும்னு சொல்றீங்க....ஐடியா எல்லாம் சூப்பர் கா...

இராஜராஜேஸ்வரி said...

மந்திரச்சாவியாகும் வார்த்தைகள் பற்றிய அற்புதமான பதிவு.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

enrenrum16 said...

ஹ்.ம்...பின்பற்ற கொஞ்சம் கஷ்டமான அறிவுரைகள்தான் ;)... கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கணும்... அழகா சொல்லியிருக்கீங்க....

ஜெய்லானி said...

பதிவு சூப்பரோ சூப்பர் ..அருமை ,அட்டகாசம் ...!! :-)

இப்படி சொன்னா நான் ஜால்ரா அடிக்கிறதா சொல்ல மாட்டீங்கதானே ..!! :-))))))))))))

செ.சரவணக்குமார் said...

சூப்பர் பதிவு அக்கா.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா சொல்லி இருக்கீங்க மக்கா....

athira said...

ஆ..ஸாதிகா அக்கா, குலாப் ஜாமூன் போலவே ஒரு பதிவு போட்டு பல அறிவுக்கண்களைத் திறந்திட்டீங்க.

இதேபோல... கோபக்காரருக்குமாகவும் ஒரு பதிவு போடுங்க, கோபம் வந்தால் எப்பூடிக் கன்ன்ன்ன்ன்ன்ன்ன்றோல் பண்ணலாம் என.... இப்போதைக்கு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

Menaga Sathia said...

சூப்பரா எழுதிருக்கீங்க,பாராட்டுக்கள் அக்கா!!

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

ஸலாம் சகோ..
நல்லா இருக்கீங்களா?
பதிவு பயனுள்ளதே..ஆனால் தேன் தடவிய வார்த்தைகளை நாம் எப்போதும் பயன்படுத்தினால்,சிலர் நாம பெரிய இ.வாயின்னு நெனச்சு,நம்ம தலைய தடவ பாக்குறாங்களே...

அதுனால எல்லாத்துக்கும் இடம் பொருள் ஏவல்,வவ்வால்ன்னு இருக்கில்ல...

அதுக்கு தோதா பேசிக்கிறதுதா சாமர்த்தியம்ன்னு நினைக்கிறேன்..என்ன சொல்றீங்க..

அன்புடன்
ரஜின்

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா... நலமா..?
மிகவும் அருமையான பதிவு....பலருக்கும் உபயோகமான வரிகளை கொடுத்துள்ளீர்கள்.எதையும் அன்பான பொறுமையான வார்த்தைகளால் அமைதியை பெறலாம் என்று அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.ஒவ்வொன்றும் சரியே....
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அக்கா...
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

அந்நியன் 2 said...

எல்லோரும் என்ன பேசிக்கிறியே...கொஞ்சம் இருங்கள் பதிவைப் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

vanathy said...

நல்ல பதிவு, அக்கா.
யாருக்கோ கோபத்தை கன்ட்றோல் செய்ய ஐடியா வேணுமாமே. வீட்டுக்கு முன்னால் இருக்கிற குளத்தில் மூழ்கி எழும்புங்கோ அதீஸ்... கோபம் இருக்கிற இடம் தெரியாம பூடும்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான பதிவு...

மதுரை சரவணன் said...

அட்வைஸ் சூப்பர்... உங்க வாய்ஜாலம் அருமை. வாழ்த்துக்கள்

athira said...

vanathy said...
நல்ல பதிவு, அக்கா.
யாருக்கோ கோபத்தை கன்ட்றோல் செய்ய ஐடியா வேணுமாமே. வீட்டுக்கு முன்னால் இருக்கிற குளத்தில் மூழ்கி எழும்புங்கோ அதீஸ்... கோபம் இருக்கிற இடம் தெரியாம பூடும்.//// karrrrrrrrrrrrrrrrrrr பாருங்க ஸாதிகா அக்கா, அடுத்தவர்களுக்கு கோபம் வருதே, அதை அடக்குறதுக்கு ஏதும் நல்லது பண்ணலாமே என்ற நல்லெண்ணத்தில கேட்டால்:), ஏதோ சந்து சொன்னதுபோல எனக்குத்தான் பிரச்சனை என முடிவெடுத்து ஆத்தில தள்ளப்பார்க்கினம்... நாங்க இப்ப ரொம்ப விபரமானவங்களாக்கும் டயரோடதான்(இது வேற Tire) திரியிறம் தெரியுமோ.... தாளமாட்டமில்ல:))))...

Unknown said...

இனிமையான வார்த்தைகள் நல்ல பலனைத்தரும் என்பது சரி. ஆனால் 'இது நைஸாப்பேசி காரியம் சாதித்துக் கொள்ளும் ஆள்' என விரைவில் புரிந்து விடும். அப்புறம் வேலை நடக்காது.

எனவே நம் எண்ணங்களில் மாற்றம் விளைவிப்பதன் மூலம் இனிமையான பேச்சையும் அதற்கேற்ற நடத்தையையும் நம் இயல்பில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதுவே நீண்ட பலனைத் தரும். மற்றவர்கள் மனதில் நம்மை நட்பாய் நிலைத்திருக்க வைக்கும்.

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. கல்க்கிட்டிங்க.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜலி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி தம்பி சீமான்கனி.

ஸாதிகா said...

கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

பானு,இதில் கஷ்டமே இல்லை.இஷ்டப்பட்டு இனிக்க பேசினால் கஷ்டம் போய் விடும்.கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்க வாழ்க்கை கல்வி பாடம் நடத்தி விட்டீர்கள். இதன் படி நடந்தால் ஒவ்வொரு நாளும் இனிமையாக இருக்கும் சந்தேகமில்லை.

நன்றி ஸாதிகா அருமையான பதிவை கொடுத்ததற்கு.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக மிக நன்றி ஜெய்லானி.

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கும் அன்பு நன்றி சரவணக்குமார்.

ஸாதிகா said...

//அருமையா சொல்லி இருக்கீங்க மக்கா.// மிக்க நன்றி நாஞ்சில் மனோ

ஸாதிகா said...

அதிரா ஐடியா கொடுத்து விட்டீர்கள் இல்லை.விரைவில் போட்டு விடுவோம்.நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ரஜின்.நான் நல்லா இருக்கிறேன்.அல்ஹம்துலில்லாஹ்.மாற்றுக்கருத்தினையும் பணிவன்புடன் வரவேற்பேன்.என் கருத்து அது தங்கள் கருத்து இது, என் அனுபவத்தில் நான் சொன்ன கருத்தை பின்பற்றினால்த்தான் காரியம் ஆகின்றது.பொறுமை இழந்து கோபப்பட்டு நான் கண்டது வலிகளும் வேதனைகளும்தான்.//அதுக்கு தோதா பேசிக்கிறதுதா சாமர்த்தியம்ன்னு நினைக்கிறேன்..என்ன சொல்றீங்க..
// இதிலும் ஆழமான கருத்துண்டு சகோ.மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் அப்சரா.நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வாங்க அந்நியன்.பதிவை படிச்சுட்டு கருத்தை பகிருங்கள்.மிக்க நன்றி .

ஸாதிகா said...

வானதி//வீட்டுக்கு முன்னால் இருக்கிற குளத்தில் மூழ்கி எழும்புங்கோ அதீஸ்... கோபம் இருக்கிற இடம் தெரியாம பூடும்.
// வானதி நிங்கள் தமாஷா சொன்னது எங்கள் மத ரீதியாகவும்,விஞ்ஞான ரீதியாகவும் உண்மைகோபம் வந்தால் குளிர்ந்த நீரை பயன் படுத்தினால் கோபம் குறைந்து விடும் இதனையே நபிகள் நாயகம்(ஸல்) கோபம் ஏற்படின் ஒளு செய்து விடுங்கள் என்று கூறி இருக்கின்றார்கள்.ஒளு என்பது நீரால் உடலின் சில பாகங்களை சுத்தம் செய்து கொள்வது.நன்றி வான்ஸ்.

ஸாதிகா said...

தோழி பிரஷா கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மதுரை சரவணன் கருத்துரைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அதீஸ்//நாங்க இப்ப ரொம்ப விபரமானவங்களாக்கும் டயரோடதான்(இது வேற Tire) திரியிறம் தெரியுமோ.... தாளமாட்டமில்ல:))))...
//ட்டயரை பற்றி எனக்கு தனியாக மெயில் போட்டு விடுங்கோ.

ஸாதிகா said...

சகோ சுல்தான் அவர்களே தாங்களும் அருமையான கருத்தினை பின்னூட்டம் வாயிலாக தந்து இருக்கின்றீர்கள்..தங்கள் கருத்தினையும் வரவேற்கிறேன்.நன்றி.மிக நீண்ட நாட்களாக பதிவுகளைக்காணோம்??

ஸாதிகா said...

மிக்க நன்றி விஜி.

Mahi said...

நல்ல பதிவு ஸாதிகா அக்கா! அதிலும், /பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் / ஆஆஹா,இதைப்படிக்கும்போதே சாப்பிட்டமாதிரி இருக்கே! :P :P

ஸாதிகா said...

கோமதிஅரசு வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மகி வருகைக்கு மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமையான கருத்துகள்.

காட்டமான வார்த்தைகள் நமது இயலாமையின் வெளிப்பாடு மற்றும் சுயநலம்.

சில நேரங்களில் கோபப்பட்டால்தான் காரியம் நடக்குமெனில் கோபப்படுவது மாதிரி நடிக்கலாம். ஆனால் நிதானத்தை இழந்து விடக்கூடாது.

எனக்கு கோபம் வந்தால் புறக்கணிப்பே முதல் ஆயுதம். வார்த்தைகள் அல்ல.

மேலும் இதை இனிப்பு காரம் என்று சொல்லிப்பிரிப்பதை விட. இனிமையான வார்த்தைகளில் இனிப்பு காரம் என எல்லா சுவையும் சமயத்து தகுந்து வெளிப்படும் ஆனால் யாரையும் காயப்படுத்தாது. அதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

பகிர்வுக்கு நன்றி சகோ.

மனோ சாமிநாதன் said...

"பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவி சுட்ட பஜ்ஜியை சாப்பிட்டடாற்போல் சிலரது வார்த்தைகளில் காரம் தெரிக்கும்.இன்னும் சிலர் பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் வார்த்தை மென்மையாக,இனிக்க இனிக்க இருக்கும்.கேட்கும்செவிப்பறைகளில் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதைப்போல் இருக்கும்."

அருமையான வரிகள் ஸாதிகா! பாராட்டுக்கள்!!
செயல்படும் விதத்தை விடவும் முதலில் இதமான பண்பான வார்த்தைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். அதை நகைச்சுவை மிளிர அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்!!

Kanchana Radhakrishnan said...

அருமையான பதிவு .

GEETHA ACHAL said...

கரக்டாக கொல்லி இருக்கின்றிங்க அக்கா...

நானும் அப்படி தான் இருப்பதினை பிடிக்குதோ பிடிக்கலையோ அப்படியே சொல்லிவிடுவேன்...இப்ப தான் கற்று கொண்டேன்..எல்லாம் அனுபவம் பேசுது...

அதனால் இப்பொழுது எல்லாம் வார்த்தை ஜாலத்தினை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கு...

இலா said...

ஷாதிகா ஆன்டி! எல்லாரும் இதை இப்போ கத்துக்கிட்டாங்க. என்ன சிலருக்கு நோ சொல்லி பழகாம இருப்பதால் எல்லாரும் எல்லா வேலையும் தலையில வாங்கிடுவாங்க. இல்லைன்னா என்னதான் தேன் தடவினாலும் உள்ள இருக்க நஞ்சு கொஞ்சம் வெளியே வந்திடுது. சிலரை எல்லாம் வைக்கற இடத்தில தான் வைக்கணும் நாம நல்லா இனிக்க பேசினா வேலை நடக்கறதில்லையே. ஒரு கர்ர் போட்டாதான் நடக்குது. ஒரு மாறுதலுக்கு என் கருத்து சொல்ல நினைச்சேன் :)

Anonymous said...

என்னை போல் சின்னவங்களுக்கு உதவும் உங்கள் அறிவுரை.. நன்றி.

ஸாதிகா said...

//
எனக்கு கோபம் வந்தால் புறக்கணிப்பே முதல் ஆயுதம். வார்த்தைகள் அல்ல.
// அனைவருமே கடைபிடிக்க வேண்டியது அகபர்/கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//செயல்படும் விதத்தை விடவும் முதலில் இதமான பண்பான வார்த்தைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். // அழகிய கருத்தினை சொன்ன மனோ அக்காவுக்கு மிக்க நன்றி.

Anisha Yunus said...

வரிக்கு வரி, உபயோகமான சிந்தனைத்துளிகள் அக்கா. நன்றி, பகிர்ந்ததர்கு. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

ஸாதிகா said...

கீதா உங்கள் கருத்துக்கு மிகநன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி இலா உங்கள் கருத்துக்கு.

ஸாதிகா said...

மகா விஜை கருத்துக்கு மிக்க நன்றி,.

ஸாதிகா said...

//வரிக்கு வரி, உபயோகமான சிந்தனைத்துளிகள்// வரிகளில் மிக்க மகிழ்ச்சி அன்னு.நன்றி.