கொண்டவனையும் பெற்றவனையும்
வயிற்றுப்பசிக்காக
நடு சமுத்திரத்திற்குதான் அனுப்பி
வகைதொகையாய் மீன்பிடித்து
கரைக்கு கொண்டு சேர்த்து
கூவி விற்று பிழைப்பு நடத்தி
நம்மை வக்கணையாய் ருசி பார்க்க
வைத்த மீனவமக்களுக்கு
ஏனிந்த கதி?
நடு கடலுக்குபோன மச்சான்
வரும் நேரம் வரவில்லை என்றால்
நீரிலிருந்து எடுத்துப்போட்ட
மீன் போல துடிக்கும் துடிப்பு கண்டு
கடற்கரையும் கலங்கிடுமே
கடல் நாடி பிழைப்பு நடத்தி
கால் வயிறு கஞ்சி குடித்து
கதி இல்லாமால வாழ்ந்து வரும்
மீனவர்களை காப்பற்றுமைய்யா!
நம்முடைய வலுவாலும் பொருளாலும்
கரத்தாலும்,காரியத்தாலும்
அவர்களுக்குஉதவிட முடியாவிடினும்
நம் உணர்வுகளை உணர்த்துவோமே இங்கு
Tweet |
25 comments:
. நான் ஏற்கனவே செய்துவிட்டுள்ளேன்.
அன்னிக்கே கையெழுத்து போட்டுட்டேன்க்கா..
கவிதையில் உணர்வுகளை வெளிப்படுத்தி கையழுத்திட்டது மனதை தொட்டது தோழி.
உணர்ச்சிகளை கொட்டியுள்ளீர்கள் சூப்பரா இருக்கு.......
ஸாதிகா அக்கா... வந்திட்டேன்... கைஎழுத்தை எப்படி இடுவதென இன்னும் பார்க்கவில்லை, பார்த்து இடுவேன்.வருத்தமான விடயமே.
கவிதை நன்றாக இருக்கு.
“இலங்கையில் இயற்றிய ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வருது...
“வெள்ளிநிலா விளக்கேற்றும் நேஏஏஏரம்ம்ம்ம்ம்
கடல்ல்ல்ல்ல் வீஈஈஈஈசுகின்ற காற்றில் உப்பின் ஈஈஈஈஈஈரம்....
தள்ளிவலை ஏஏஏஏஏற்றி வள்ளம் போகும்ம்ம்ம்ம்ம்ம் மீன் அள்ளிவர நீஈஈஈஈண்ட நேஏஏஏஏஏஏஏரமாகும்ம்ம்ம்ம்...
மிகுதி தெரியவில்லை கவலைதோய்ந்த பாடல்தான்...
பின் குறிப்பு: அடக்கொடுக்கமாகக் கேட்கிறேன் “இன்று வடை எனக்குத்தானே?”..
பகிர்வுக்கு நன்றி அக்கா.
ஒருமித்து குரல் கொடுப்போம்.
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
” மிக்க நன்றி “
நாம் அனாதைகள் அல்ல..!!
இதோ இருக்கிறோம் எல்லோரும்..!!!
i did.
நானும் கையெழுத்துப்போட்டுட்டேன்..
அக்காள் நீங்க விவரமா சொல்லவேண்டியதுதானே ...நான் பேனாவைதேடிக்கிட்டு இருக்கேன்......நாம் போடும் கை எழுத்தில்தான் மீனவர்களின் தலை எழுத்து மாறும் என்றால் எங்கே வேணாலும் கை எழுத்து போடறேன் அக்காள்.அதுக்காக பிளான்க் செக்கெல்லாம் கொண்டு வந்திட்ராதியே,அருமையான முயற்சி வாழ்த்துக்கள் !
ஜலீலா அக்காவும் கை எழுத்து வேட்டை நடத்துறாங்க.
அவங்களுக்கும் பதிவு போடலாம்னு பார்த்தால்..சாரி ..சாரி ..அவுங்களுக்கும் பின்னூட்டம் போடலாம்னு பார்த்தால் கன்வெர்ட்டர் மக்குறு பண்ணுது அதான் காப்பி பேஸ்ட் பண்ணி சாட்டா ..எழுதி விட்டேன்.
அன்று .. திட்டுவார் இல்லா ஏமரா மன்னன் ....
இன்று .. டிவிட்டர் இல்லா ஏமாறா மன்னன் ....
வதந்திகள் பரவாமல் இது போன்று நல்ல புரட்சிகளுக்கு வழி வகுத்தால் இணையம் நல்லதுதான். :)
அங்கும் போட்டு விட்டு , டிவீட்டரிலும் போட்டுக்கொண்டு இருக்கிறேன் ..இதனால் நல்லது நடந்தால் சரி...
இதோ நானும் போய்கிறேன்க்கா.
உணர்வுகளை தாங்கிய கவிதைக்கா
கையெழுத்து போட்டாச்சு ஸாதிகா
உங்கள் கவிதை மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தியது அருமை..
அஸ்ஸலாமு அழைக்கும்
கவிதையில் உணர்வுகளை
வெளிப்படுத்தியதற்கு நன்றி.
கண்டிப்பாக ஒருமித்த குரல் இன்னும் அதிகமாக வேண்டும்.. கையெழுத்திட்டாச்சு..
அஸ்ஸலாமு அலைக்கும்,அக்கா,
கவிதை நல்லாவே இருக்கு,உணர்வுப்பூர்வமா,...
அன்னைக்கே கையொப்பம் போட்டுட்டேன்..
அன்புடன்
ரஜின்
உணர்வுள்ள கவிதை அக்கா..ஏற்கனவே கையெழுத்து போட்டாச்சு....
உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.
ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் ஸாதிகா..
நானும் ஏற்கனவே கையெழுத்து போட்டுட்டேன் ஸாதிஅக அக்கா, உங்கள் உணர்வுகளை
கவிதையுடன் அவர்களின் நிலையை அழகாக எழுதி இருக்கீங்க .
ரொம்பவே நெகிழ்வான கவிதை படைத்து உள்ளீர்கள் ஸாதிகா அவர்களே...
மீனவர்கள் இன்னல் விரைவில் தீர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
************
எங்கள் முதல் முயற்சியில் உருவான “சித்தம்” குறும்படம் பார்த்து கருத்து சொல்லுங்களேன்...
'சித்தம்' - குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html
கருத்திட்ட அனைத்து நட்புக்களுக்கும் மிக்க நன்றி!
Post a Comment