January 15, 2011

பொங்கல் நினைவலைகள்

இளம் பிராயத்தில் பொங்கல் அன்று என் தந்தையார் குடும்பத்திலுள்ள சிறார் பாட்டாளங்கள் புடை சூழ தொலைவில் இருக்கும் கிராமத்திற்கு அழைத்து செல்வார்கள்.ஜீப்பில் அமர்ந்தபடி பாட்டும் கூத்துமாக அமர்களபட்டு குதூகலமாக பயணம் அமையும்.

பசேலென்ற அறுவடைக்கு தயாராக தலையை சாய்த்துக்கொண்டு வரவேற்கும் நெற்பயிர்கள்,ஆங்காங்கே ஒற்றைக்காலில் எங்கள் வருகைக்காக தவம் இருப்பது போல் நிற்கும் கொக்கு கூட்டம்,குறுக்கிலும் நெடுகிலும் ஓடும் கோழிகளும் சேவல்களும் பந்து போல் இருக்கும் எண்ணற்ற கோழிக்குஞ்சுகளும்,வயலின் மறு பக்கம் பாகல்,நுனியில் கல்கட்டிய புடலை,அவரை இன்னும் பிற வஸ்துக்கள் கொடிகளில் காய்த்து குழுங்கும். செடிகளில் பச்சை மிளகாய்,கத்தரி,தக்காளி வகைகள் பளீரென சிரிக்கும்.
ஓரமாக நிற்கும் சிறிய ஓட்டு வீட்டில் அடுக்கி வைத்த நெல் மூட்டைகளின் முடை நாற்றத்துடன் கம்பீரமாக நிற்கும் நெற்குதிர்.அதன் பிரமாண்டத்தை தொட்டு தொட்டு பார்த்து மகிழ்வோம்எங்கள் வரவுக்காக காத்திருந்த கிராமத்து ஆட்கள் விறகடுப்பில் புதுப்பானை வைத்து வெல்லப்பாகு மண மணக்க பொங்கல் செய்து பொங்கி வரும் வேளையில் “பொங்கலோ பொங்கல்”என்று கோரஸாக கூறுவார்கள்.

சூடான பொங்கலை பனைஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் வைத்து அனைவருக்கும் பறிமாறுவார்கள்.கூடவே ஊரில் இருந்து கொண்டு சென்ற பட்சணக்களுடன் பொங்கலை புசித்து விட்டு வாய்க்கால் வரப்புகளில் சிலு சிலுவென்று அடிக்கும் காற்று,சுரீர் என்று சுடும் வெயிலில் ஆசை தீர விளையாடி விட்டு ,பை நிறைய காய்கள் பறித்து நிரப்பிக்கொண்டு ஊர் திரும்புவோம்.


காலையில் கொண்டாட விருக்கும் பொங்கலுக்காக எதிர்வீட்டில் போட்ட கோலம்.

சென்னையில் பொங்கல்

எந்த பண்டிகைக்கும் இல்லாத அளவு பாலங்கள்,அரசு கட்டிடங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் போன்றவற்றில் வண்ண விளக்குகள் அலங்காரம் கண்ணை பறிக்கும்.அண்ணா மேம்பாலம் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை இரு புறமும் செய்த வண்ண விளக்கு அலங்காரம் மவுண்ட் ரோடையே ஜக ஜோதியாக்கிக்கொண்டிருகின்றது.

சக்கரைப்பொங்கல் என்றே ஒரு ரெஸ்டாரெண்ட் உள்ளது.

பொங்கல் அன்று சரவணபவன் கிளைகளில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ஒரு கப் நெய்பொங்கல் வழங்குகின்றனர்.

தி நகர் போத்தீஸில் பொங்கல் அன்று வழக்கத்தை விட ஸ்பெஷல் ஆக டிஸ்போசபிள் கப்புகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் வழங்குவார்கள்.

இதே கடையில் ஒவ்வொரு பொங்கலுக்கும் பொங்கல் பண்டிகையை நினைவூட்டும் விதமாக முகப்பிலும்,கடைக்குள்ளும் அலங்காரம் செய்து இருப்பதை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.இப்பொழுதெல்லாம் மற்ற நிறுவனங்களும் இதனை பின் பற்றி அலங்கரித்து வருகின்றனர்.

கிராண்ட் ஸ்வீட்டில் தினமும் தொன்னைகளில் வழங்கும் லெமன் சாதம்,வெண்பொங்கல்,தேங்காய் சாதம்,கேசரி போன்றவை தருவது பிரசித்தம்.பொங்கல் அன்று கமகம வென்ற பொங்கலை பறிமாற கூட்டம் கும்மி அடிக்கும்.
நாளை பொங்கல் கொண்டாடவிருக்கும் வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

38 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

ஆமினா said...

நல்ல நினைவலைகள் அக்கா....

vanathy said...

இலவசமாக பொங்கலா?? சூப்பரா இருக்குமே.
பொங்கல் வாழ்த்துக்கள், அக்கா.

Vijisveg Kitchen said...

நல்ல பசுமையான நினைவலைகள் சூப்பர்.

சென்னயிலா,எப்போலேருந்து இதெல்லாம். பரவாயில்லையே சூப்பர்.

asiya omar said...

நினைவலைகள் அருமை,இன்னமும் எங்க வீட்டில் நெற்குதிர் இருக்கு தோழி.சென்னை பற்றிய தகவல் எதிர் வீட்டு கோலமும் சூப்பர்.

ஜெய்லானி said...

//பொங்கல் அன்று சரவணபவன் கிளைகளில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ஒரு கப் நெய்பொங்கல் வழங்குகின்றனர்.

தி நகர் போத்தீஸில் பொங்கல் அன்று வழக்கத்தை விட ஸ்பெஷல் ஆக டிஸ்போசபிள் கப்புகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் வழங்குவார்கள்.//

ஆஹா...பாய்ஸ் படத்துல செந்தில் சொல்லும் டயலாக் நினைவுக்கு வருதே ஹா..ஹா.. :-)

பழைய நினைவுகள் அருமை :-)

Jaleela Kamal said...

மிக அருமையான நினைவலைகள்

Jaleela Kamal said...

போத்தீஸில் நானும் சுட சுட பொங்கல் சாப்பிட்டு இருக்கேன்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்க பால்ய கால நினைவுகளை பற்றி அழகாக சொல்லியிருக்கீங்க ஸாதிகாக்கா.. படிக்கும்போது நானும் அந்த சூழ்நிலையில் இருந்ததை உணர்கிறேன்.. ரொம்ப சந்தோசமா இருக்கு..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகான நினைவலைகள்.

இனியவன் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

mahavijay said...

அழகான நினைவுகள்...
உங்கள் ஊருக்கு சென்றது போல் இருக்கிறது..

சென்னையில் இப்படி எல்லாம் நடக்குதா??

இளம் தூயவன் said...

உங்கள் நினைவுகள் அருமை, நெற்குதிர் எங்கள் ஊர் பக்கம் பத்தாயம் என்பார்கள் அவை மரத்தினால் செய்வார்கள்.

jokkiri said...

ஸாதிகா மேடம்...

என்ன சொல்றதுன்னே தெரியல.. அவ்ளோ அருமையா பழைய நினைவுகளை பகிர்ந்து / பதிந்து உள்ளீர்கள்...

அந்த இனிய நாட்களை நினைவில் நிறுத்தி அசைபோட்டது என்னையும் பழைய நாட்களுக்கு இட்டு சென்றது...

இங்கேயும் (என் மற்றொரு வலைப்பக்கம்) வருகை தரலாமே...

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரி அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,நலமாக இருக்கின்றீர்களா...?என்னை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.ஆனால் உங்களை எனக்கு தெரியும்.அருசுவையின் மூலம் உங்கள் புகழும்,திறனும் அறிந்தேன்.... இந்த ஒரு வார காலமாய் தான் உங்கள் பக்கத்தை பார்வையிடிகின்றேன்.மிகவும் நன்றாக உள்ளது அக்கா... இந்த பொங்கல் பற்றிய நினைவலைகள் நன்றாக எழுதியுள்ளீர்கள் அக்கா... இவ்வளவு பெரிய நெற்குதிரை நான் பார்த்ததே இல்லை.... படங்கள் எல்லாம் அருமை.
இன்னும் உங்களுடைய ஒவ்வொரு அசத்தலான பக்கத்தையும் பார்வையிட்டி அவ்வபோது இது போன்ற கருத்தின் மூலம் சந்திக்கிறேன் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அருமையான நினைவலைகள்

ஸாதிகா said...

உலவு.காம் நன்றி.

ஸாதிகா said...

நினைவலைகளை ரசித்தமைக்கு நன்றி ஆமினா.

ஸாதிகா said...

//இலவசமாக பொங்கலா?? சூப்பரா இருக்குமே. //ஹா..ஹா..அடுப்பு எரித்து அரிசி களைந்து,வேகவைத்து வெல்லம் சேர்த்து கிண்டி அப்புறம் திராட்சை முந்திரி தாளித்து வேர்க்க விறுவிறுக்க பொங்கல் கிண்டி சாப்பிடுவதை விட இலவச பொங்கல்ன்னா சூப்பராகத்தானே இருக்கும் .நன்றி வானதி.

ஸாதிகா said...

//சென்னயிலா// இப்ப இல்லை எப்ப வச்சே இது நடைமுறையில் உள்ளது.அடுத்த பொங்கலுக்கு சென்னைக்கு வந்துடுங்க விஜி.

ஸாதிகா said...

யம்மாடி..இன்னும் நெல் குதிர் இருக்கா?பரவா இல்லையே.நான் பார்க்கணுமே ஆசியா

ஸாதிகா said...

//ஆஹா...பாய்ஸ் படத்துல செந்தில் சொல்லும் டயலாக் நினைவுக்கு வருதே ஹா..ஹா.. :-)
// ஐயோ,நான் அந்த படம் பார்க்கலியே ஜெய்லானி.வரவுக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜலி.நானும்தான் பலதடவை போத்தீஸில் ஓசி பொங்கல் சாப்பிட்டு இருக்கிறேன்

ஸாதிகா said...

//படிக்கும்போது நானும் அந்த சூழ்நிலையில் இருந்ததை உணர்கிறேன்.. ரொம்ப சந்தோசமா இருக்கு..// ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஸ்டார்ஜன் .நன்றி.

ஸாதிகா said...

நன்றி சகோ புவனேஸ்வரி.

ஸாதிகா said...

வரவுக்கு நன்றி இனியவன் சார்.

ஸாதிகா said...

//அழகான நினைவுகள்...
உங்கள் ஊருக்கு சென்றது போல் இருக்கிறது..
// மிக்க மகிழ்ச்சி மகாவிஜய்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கு இளம்தூயவன்.நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி கோபி.//வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம்// உடனே படித்து இன்னும் சிரித்து முடியலே.கருத்திட்டமைக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோ ஆசிக் படித்து கருத்தும் போட்டு விட்டென்.நன்றி.

ஸாதிகா said...

சகோ ஆசிக் படித்து கருத்தும் போட்டு விட்டென்.நன்றி.

ஸாதிகா said...

அப்சரா,உங்கள் நீண்ட பின்னூட்டம் மகிழ்வைத்தருகின்றது.ஹொடர்ந்து வாருங்கள் நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி.

S.Menaga said...

பசுமையான நினைவலைகள் அக்கா...

வேறு வீடு மாறி செட்டிலாகி வருவதற்க்குள் நீண்டநாள் ஆகிவிட்டது. நெட் இல்லாம உலகமே இருண்ட மாதிரி ஆகிடுச்சு அக்கா..இதை வேற அவர்கிட்ட சொன்னதும் அதுக்கு வேற தனிய டோஸ் வாங்கினேன்..

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அக்கா.

அழகிய நினைவலைகள் அருமைய தொகுதுவழங்கியுள்ளீர்கள்..

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மேனகா!

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் மலிக்கா.கருத்துக்கு நன்றி!