January 19, 2011

”மை”யல் நூறுவிதம்

உண்மை பேசு

நன்மை செய்

உயிர்மை தேவை

தீமை அகற்று

பொய்மை மற

தூய்மை பேணு

வாய்மை வேண்டும்

வல்லமை வேண்டு

பொறுமை அவசியம்

சிறுமை கொள்ளேல்

பெருமை தவிர்

கண்மை அழகு

வெண்மை தூய்மை

தாய்மை தவம்

உரிமை விடேல்

கடமை தவிரேல்

இல்லாமை வெளிக்காட்டேல்

முடியாமை என்றில்லை

செய்யாமை நன்றன்று

உடமை பேணேல்

திறமை வெளிக்கொணர்

ஆளுமை அவசியம்

வெறுமை போக்கு

திறமை வளர்

தனிமை கொடுமை

மடமை அகற்று

பதுமை அழகு

மறுமை நம்பிக்கை

அருமை எனக்கூறு

கொடுமை செய்யாதே

பசுமை அவசியம்

அண்மை தேவல்

புதுமை நாகரீகம்

இனிமை சந்தோஷம்

சுமை கடன் பெற்றால்

இமை கண்களால்

அமை நற்பண்புகளை

விருப்பமின்மை ஜெயமின்மை

ஆமை போல் இராதே

மை என்பது நிறம்

ஊமை ஊனமில்லை

எருமை ஒரு பொருமை

கருமை சிகைக்கழகு

வெண்மை மனதிற்கழகு

கடுமை காட்டேல்

வலிமை கொள்

பிரம்மை வேண்டாம்

கோதுமை ஒரு தானியம்

தீண்டாமை ஒரு தொற்று நோய்

கேளாமை அழகன்று

வேளாண்மை அவசியமிங்கு

உரிமை விட்டுகொடேல்

தலைமைக்குப்போராடு

சமை சுவையாக

பன்மைக்கு பொருள் பல

ஒருமைக்கு பொருள் ஒன்று

எளிமையாக வாழ்

பலமை உடலுக்கு அவசியம்

வெண்மை என்பது தும்பை

தாய்மை என்பது பாசம்

அம்மை என்பது நோய்

அடிமை என்பதை அகற்று

செம்மை ஆக வாழ்

பொம்மை சிறார்க்கு விருப்பம்

ஆற்றாமை என்பது ஆதங்கம்

அருகாமை என்பது நெருக்கம்

பாராமை என்பது விரோதம்

கூறாமை என்பது மவுனம்

தெரியாமை என்பது மதியீனம்

அறியாமை என்பது பலகீனம்

முடியாமை என்பது முயற்சி இன்மை

ஒவ்வாமை என்பது அலர்ஜி

அஞ்சாமை என்பது தன்னம்பிக்கை

இறையாண்மை என்பது தெய்வீகம்

பெண்மை என்பது பெருமிதம்

டிஸ்கி:
மேலே காணும் படத்திற்கும்,பதிவுக்கும் சம்பந்தமில்லை.
விடுபட்ட ”மை”க்களை விரும்பியவர்கள் பின்னூட்டலாம்.

உற்சாகமாக நான் மறந்ததை,அறியாததை எடுத்து கொடுத்த சகோதரர்களுக்கு நன்றி.

ஆண்மை பலம்

மென்மை சுகம்

நாட்டாமை தீர்வு(அட..நம்ம ஐயூப்)

முதுமை இயற்கை

கல்லாமை நன்றன்று

குளத்தாமை ஆமையில் இன்னொரு வகை

வறுமை துன்பம்

போற்றாமை ????

புலமை அறிவு

வளமை செழிப்பு

கொல்லாமை காந்தீயம்


பாராமை விரோதம்

பழமை கழி

இம்மை உலகம்

திண்மை உறுதி

மென்மை கொள்


மேலும் சொற்கள் அளித்து உற்சாகம் ஊட்டிய




அனைவருக்கும் என் அன்பு நன்றி






63 comments:

Unknown said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

அரபுத்தமிழன் said...

//அருமை எனக்கூறு//

அருமையோ அருமை :)

அரபுத்தமிழன் said...

அன்மை உண்டு ஆண்மை இல்லை :)

பெண்மை உண்டு மென்மை இல்லை :)

பேராண்மையும் மேலாண்மையும் ஆண்மை பாற் பட்டதோ :)

....இன்னும் வரலாம்

இப்படி என்னை உசுப்பி விட்டதற்கு நன்றியோ நன்றி :)

Unknown said...

my வாழ்த்துக்கள், சூப்பர்

சக்தி கல்வி மையம் said...

என்ன சொல்லரதுன்னே தெரியல..
இந்த பதிவிற்கும், உங்கள் உழைப்பிற்கும் ஒர் சல்யூட்...

அரபுத்தமிழன் said...

நன்மை உண்டு நாட்டாமை இல்லை :)

இல்லாமை உண்டு கல்லாமை இல்லை :)

பதுமை உண்டு முதுமை இல்லை :)

பொறுமை உண்டு எறுமை இல்லை :)

இன்னும் வரலாம் ....

அரபுத்தமிழன் said...

கல்லாமை இல்லை கொல்லாமை இல்லை
குளத்தாமை உண்டு சாரி எருமையும் உண்டு

அரபுத்தமிழன் said...

ஆஹா வறுமை இல்லாத அருமைப் பதிவு :)

அரபுத்தமிழன் said...

போற்றாமை, புலமை, வளமை இன்னும் எத்தனை வருமோ.

சரி போனாப் போவுது மத்தவங்களுக்கும் விட்டுக் கொடுப்போம் :))

Unknown said...

அருமை உங்கள் பதிவு.

ஏதும் விடுபட்டதாகத் தெரியவில்லை..
நல்லா யோசித்திருக்கீங்க...

தூயவனின் அடிமை said...

சகோதரி என்னாச்சி, ஒரே கலக்கலா இருக்கு, நன்று.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ ஸாதிக்கா..
//அருமை எனக்கூறு//
கண்டிப்பாக இது அருமைதான் சகோ..

வேளான்மை அவசியமிங்கு - வேளாண்மை..திருத்திக் கொள்ளுங்கள்.

இறையான்மை என்பது தெய்வீகம் - இறையாண்மை...

பாரமை என்பது விரோதம் - பாராமை--என வரும்னென நினைக்கிறேன்,,பாரமை என்றால் உலகை அமை என பொருள் கொள்ளலாம்..

ஒருமைக்கு பொருள் சில-ஒருமைக்கு பொருள் ஒற்றை தானே.சில என்பதும் பன்மைதானே சகோ...


பொறாமை - தவிர்
பழமை - கழி
இம்மை - உலகு
திண்மை - உறுதி
மேன்மை - கொள்

அன்புடன்
ரஜின்

Chitra said...

Simply superb!

Menaga Sathia said...

ஆஹா அருமை,பாராட்டுக்கள் அக்கா!!

enrenrum16 said...

அடேங்கப்பா... இவ்வளவு இருக்கான்னு ஆச்சரியப்பட்டேன்... அரபுத்தமிழன் சொல்றத பார்த்தா தலையே சுத்துது...

//சரி போனாப் போவுது மத்தவங்களுக்கும் விட்டுக் கொடுப்போம் :))//

ஆமா... நானும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுக்கிறேன்... (அதுக்காக யோசிக்கிற அளவுக்கு மூளையில்லைன்னு ஒத்துக்க முடியுமா?ஹி..ஹி..)

ஸாதிகா said...

மர்யம் மிக்க நன்றி!

ஸாதிகா said...

ஆஹா..சகோ அரபுத்தமிழன் நீங்கள் இப்படி உற்சாகமாக பின்னூட்டியது எனக்கு அண்டா பூஸ்ட் சாப்பிட்டது போல் இருக்கு.இன்னும் இருந்தால் திற்மையைக்காட்டுங்கள்.மிக்க நன்றி.

ஸாதிகா said...

இரவு வானம் மிக்க நன்றி கருத்திட்டமைக்கு

ஸாதிகா said...

கருண் குமார் மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.வாழ்த்துக்கு மிக்க மகிழ்சி.

ஸாதிகா said...

பாரத் பாரதி..இன்னும் நிறிய இருக்கு.ஆனாக்கா இப்பவே மூளை ரொம்ப காய்ந்து போய் விட்டது.அதான் தெரிந்தவர்கள் பின்னூட்டலாம் என்று விட்டேன்.மிக்க நன்றி.

ஸாதிகா said...

//சகோதரி என்னாச்சி, ஒரே கலக்கலா இருக்கு, நன்று.
// சகோ இளம்தூயவன்...பதிவெழுத ஆரம்பித்து மாதம் 17 கடந்து விட்டது.இன்னும் சதத்தை தொட வில்லை.அதான் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு(ஹப்பாடா...ரகசியத்தை போட்டு உடைத்து விட்டேன்.)

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் சகோ ரஜின்.உங்கள் உற்சாக பின்னூட்டலுக்கு மிக்க நன்றி சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து திருத்த வேண்டியவற்றை திருத்தி விட்டேன்.

ஸாதிகா said...

நன்றி சித்ரா

ஸாதிகா said...

மேனகா.ரசித்தீர்களா?மிக்க நன்றி.

ஸாதிகா said...

பானு எனக்கும்தாம்பா..இன்னும் இருக்கறதை நினைச்சால் தலையை சுத்துது.கருத்துக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

மை”யல் நூறுவிதம்

அருமையோ அருமை.


//RAZIN ABDUL RAHMAN said..//

சகோ,இங்கேயும் வந்து விட்டீர்களா?

யாரு கண்ணுக்கும் தெரியாதது,
உங்க கண்ணுக்கும் மட்டும் எப்படி
தெரியுது சகோ.

Anonymous said...

நல்ல யோசனை
அருமையா எழுதி இருக்கீங்க

ஆமினா said...

கண்ணு பட போகுது

ப்லாக்குக்கு மை வைங்க ;)

GEETHA ACHAL said...

arumaiyo arumai...superb...Thanks for sharing...

No words to tell....Simply superb...

அஸ்மா said...

'மை'களின் தொகுப்பு அருமை ஸாதிகா அக்கா! வினைச்சொல்லை சேர்த்து சொல்வதாக இருந்தால், பெரும்பாலான‌ வினைச்சொல்லில் 'மை' சேர்ந்து, அது ரொம்பவே போய்க்கிட்டே இருக்கும். உதாரணம்: உண்ணாமை, கேளாமை, கல்லாமை, ஈயாமை...etc.

தனிப்பட்ட வார்த்தை மட்டும் 'மை'கொண்டதாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும். (வினைச்சொல் சேராத‌) இதையும் சேர்த்துக்கோங்க ஸாதிகா அக்கா.

வழமை
இயலாமை
வன்மை
இளமை
கறுமை
கிழமை
தன்மை
ஒற்றுமை
வேற்றுமை
குடியுரிமை
ஏழ்மை
கூர்மை
மகிமை
உவமை
துணிமை

இதற்குமேல் லிஸ்ட்டில் இல்லாத மற்றவற்றை யோசிக்க நேரமில்லை. இப்போதைக்கு இது போதும் :)

vanathy said...

super, akka!

அந்நியன் 2 said...

வெள்ளாமை - விளைச்சல்
முடியாமை - தோல்வி
அஞ்சாமை - வெற்றி
ஊமை - பேச்சி திறன் அற்றவர்
புதுமை - வித்தியாசம்
அடிமை - இறைவனுக்கு
ஒவ்வாமை - திருக்குறள்


இப்போத்தான் வந்தேன் கொஞ்சம் இருங்கள் டூட்டிக்கு போயிட்டு வந்துட்டு மூளையை சர்ச் பண்ணி பார்க்கிறேன் அக்காள்,வேலைக்கு போயிட்டு வந்துவிட்டு ஒரு மணிநேரம் மதியம் தூங்குறது வழக்கம் இப்போ அந்த தூக்கத்தை கெடுத்துப் புட்டியே...இருந்தாலும் வாழ்த்துக்கள் இப்படி நல்ல விசயங்களை தெரிந்து கொள்வது நல்லதுதானே !!!

Mahi said...

கயமை-கடமை-முயலாமை-அண்மை-சேய்மை-வறுமை-இளமை-

ஸாதிகாக்கா,தொட்டனைத்தூறும் மணற்கேணி போல,தேடத்தேட தமிழில் வார்த்தைகள் கிடைத்துக்கொண்டே இருக்கு! :)

Asiya Omar said...

எத்தனை மைகள்
அத்தனையும்
தேடித் தந்தமைக்கு
நாடிய நன்மைகள்
அருமை.

பின்னால் வந்து பின்னூட்டமிட்டமையால்
நிறைய மை
நிறைவாய் பார்த்தேன்.

அந்நியன் 2 said...

சுமை - கழுதை
முதுமை - ஓய்வு
பசுமை - புரட்ச்சி (குளிர்ச்சி)
கருமை - இருட்டு
பொறுமை - ஆண்கள்
இயலாமை - பெண்கள் ( ஹ ஹா..ஹ .)
சிறுபான்மை - எண்ணம் குறைவு
பெருபான்மை - எண்ணம் கூடுதல்
குளுமை - பனித்துளி
பழமை - கடந்தது
புழமை - அறிவாளி அல்லது புலவர்
நிலைமை - சரியில்லை
கடுமை - சட்டம் / தீர்ப்பு /அதிகாரம்
கல்லாமை - திருக்குறள்
பொல்லாமை - புறம்பேசுதல்
வறுமை - அந்நியன் 2
தலைமை - பொறுப்பு
இயலாமை - தோல்வி
தனிமை - மன நலம்
தேனம்மை - பதிவர்

இப்போதைக்கு இது போதும்க்கா ..தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கு இது அரபு நாட்டு கச்சா எண்ணையா ?

மனோ சாமிநாதன் said...

அத்தனையும் அருமை ஸாதிகா!
உங்கள் பொறுமைக்கு ஒரு சல்யூட்!!

சோனகன் said...

அத்தனையும் அருமை, அவ்வையின் ஆத்திச் சூடி தோற்றது போங்கள்.....

ஸாதிகா said...

ஆயிஷா,கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.//சகோ,இங்கேயும் வந்து விட்டீர்களா?

யாரு கண்ணுக்கும் தெரியாதது,
உங்க கண்ணுக்கும் மட்டும் எப்படி
தெரியுது சகோ/இப்படியும் இருந்தால்தான் தவறுகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஸாதிகா said...

மஹா விஜை,கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//கண்ணு பட போகுது

ப்லாக்குக்கு மை வைங்க ;)
// ஆமினா,ஹா ஹாஹாஹா...என் பிள்ளைகளுக்கே இதுவரை மை வைத்ததில்லை.நிங்க மையை பற்றி எழுதியதும் மை வைக்க சொல்றீங்க!கருத்துக்கு மிக்க நன்றிப்பா!

ஸாதிகா said...

கீதா ஆச்சல் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

அஸ்மா,பொறுமையாக பின்னூட்டியதற்கும் இன்னும் சொற்களை தந்ததற்கும் மிக்க நன்றி.பதிவின் நீளம் கருதி இதனை எடிட் செய்து பதிவில் சேர்க்கவில்லை.மிக்க நன்றி.

ஸாதிகா said...

வானதி கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

அந்நியன் சார்,நீங்களும் நிறைய மூளையை சர்ச் செய்து சொற்களை அர்த்ததுடன் தந்து இருக்கின்றீர்கள்.அதிலும் ஆஃபீஸில் இருந்து பி சி முன்னால் உட்கார்ந்தே யோசித்து மேலும் கொடுத்து இருக்கின்றீர்கள்.மிக்க சந்தோஷம்,நன்றி.பதிவின் நீளம் கருதி எனது பதிவில் இவைகளை சேர்க்க வில்லை.

ஸாதிகா said...

//தொட்டனைத்தூறும் மணற்கேணி போல,தேடத்தேட தமிழில் வார்த்தைகள் கிடைத்துக்கொண்டே இருக்கு! :)
// உண்மைதான் மகி மையல் ஆயிரம் விதம் என்று போட்டு இருக்கணும் போலும்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஆசியா கருத்துக்கு மிக்க நன்றிப்பா.

ஸாதிகா said...

//பொறுமை - ஆண்கள்
இயலாமை - பெண்கள் ( ஹ ஹா..ஹ .)// அந்நியன் சார்,மறதியாக மாற்றி எழுதிவிட்டீர்கள் இல்லையா அந்நியன் சார்?ஹா..ஹா..ஹா..

ஸாதிகா said...

மனோ அக்கா உங்கள் உற்சாக ஊக்கத்திற்கு மிக்க நன்றிக்கா.

ஸாதிகா said...

சோனகன்,நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்து பதிவு படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.ஸாதிகா,
உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

அட..! மையில் இத்தனை மைகளா..?

அதற்கு ஒரு தனி பதிவே போடும்படி...!

கிரேட்..! முற்றிலும் வித்தியாசமான சிந்தமை... ஸாரி.. சிந்தனை.

athira said...

நான் பிந்திட்டேன் ஸாதிகா அக்கா. ”மை” அருமை. நானும் நினைத்துப் பார்க்கிறேன் “புதுமை” யாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை, எல்லாம் எழுதியாச்சு.

போளூர் தயாநிதி said...

சகோதரி அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்.

Thenammai Lakshmanan said...

நீங்க நூறு மை கொடுத்தால் சகோ வட்டம் இன்னும் நூறு மை கொடுக்குறாங்க போல இருக்கே ஸாதிகா..:))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை... பதிவிட தேவை பொறுமை...இப்பதிவிட்டதால் உங்களுக்கு பெருமை...

Jaleela Kamal said...

emma oru மை kku eththanai arththangkaL
arumai

ஸாதிகா said...

சகோ ஆஷிக் உங்கள் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

ஸாதிகா said...

லக்‌ஷ்மியம்மா படித்து ரசித்ததுக்கு மிக்க நன்ரியம்மா!

ஸாதிகா said...

அதிரா கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.என்னதிது ஊசிப்பின்னூட்டாமாகவே போடுறீங்க.ஹ்ம்ம்ம்ம்..இது பூஸார் பின்னூட்டம் போல் இல்லை.அதனாலே கடப்பாரை பின்னூட்டமாக போடுங்கள்.

ஸாதிகா said...

போளூர் தயாநிதி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

ஸாதிகா said...

வாங்க தேனம்மை.என் கவிதாயினி நட்பே.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

தோழி பிரஷா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

ஜலி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.