நான் சென்னைக்கு வந்த புதிதில் அந்த பழைய பங்களாவை அடிக்கடி கடந்து செல்லும் வாய்ப்பு இருக்கும்.தற்செயலாக ஒரு முறை திரும்பி பார்த்த பொழுது ஒருவர் வெராண்டாவில் ஈசி சேரில் சாய்ந்தவாறு இருந்தவரைக்கண்டதும் என் நடை பிரேக் போட்டு விட்டது.”எங்கோ இவரைப்பார்த்து இருக்கிறோமே”என்ற யோசித்ததும் பளிச் என்று ஞாபகம் வந்து விட்டது.ஆம்.பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் தான் அவர் என்பது.
அவரது பாட்டிற்கு நான் ரசிகை.அவரது காலத்தால் அழியாத பாடல்களை வானொலியிலும்,தொலைக்காட்சியிலும்,யூ டியூபிலும் நிறையவே கேட்டு ரசித்து இருக்கின்றேன்.சினிமா பார்ப்பதில் துளியும் ஆர்வமில்லாவிட்டாலும் பாடல்களை,அதிலும் பழைய பாடல்களைக்கேட்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.என் ஆர்வம் அறிந்த சில நட்புக்கள் சிடிக்களில் பழைய பாடல்களை பதிவிட்டு தந்து என்னை மகிழ்ச்சி படுத்துவார்கள்.அதிலும் பி பி எஸ் பாடல்கள் என்றால் ,நான் பிறப்பதற்கு முன் வெளிவந்த திரைப்படப்பாடல்கள் கூட என்னை ஈர்த்துவிடும்.
பி.பி எஸ்ஸை நேரில் பார்த்ததும் மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது.அன்றிலிருந்து அந்த வீட்டினை கடக்கும் பொழுதெல்லாம் ஏறிடத்தவறுவதில்லை.
முதுமையான வயதிலும் சுறுசுறுப்பாக தனியாக ஆட்டோவில்,காரில் செல்லுவதையும்,அதே தலைப்பாகை மிடுக்கு குறையாமல் வயொதீகத்தில் ஒரு கம்பீரமுமாக ,எப்பொழுதும் இசையைப்பற்றிய சிந்தனையுடன் வளைய வருபவரைக்கண்டால் அனைவருக்கும் வியப்பு ஏற்படும்தான்.
சமீபத்தில் தற்செயலாக எங்கள் இல்லம் வந்த அவரது மனைவியும்,தம்பி மனைவியும் கண்டதில் எனக்கு ஏக மகிழ்ச்சி.பிளாக் எழுத ஆரம்பித்த புதிது.உடனே பிளாக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் “மாமி,மாமாவின் பாடலுக்கு நான் ரசிகை”என்றவளைப்பார்த்து மிகவும் பூரித்துப்போனார்.
“நேரில் பார்க்கணும்”என்ற என் எண்ணத்தை வெளியிட்ட பொழுது”அவசியம் வாங்கோ.எப்ப வர்ரேள்..?”என்று ஆவலுடன் வினவினார்.ஆனால் இன்று வரை என் எண்ணம் நிறைவேறாமலே இருக்கின்றது.அவரைப்பற்றி என் இடுகையில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காலங்களில் அவள் வசந்தம்,ரோஜா மலரே ராஜகுமாரி,நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்று பலபல அழகிய தேன் சொட்டும் பாடல்களைப்பாடி பிரபலமான பி பி எஸ் முழுப்பெயர் Prativadi Bhayankara Sreenivas.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இப்பொழுது 80 வயது.இன்னும் இசையில் முழு ஈடுபாடுடன்,இசைக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டவர்.
1952ம் வருடம் முதன்முதலாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். மிஸ்டர் சம்பத் என்ற ஹிந்தி படத்தில் தன் முதல் பாடலை பாட துவங்கினார்.பாவமன்னிப்பு படத்தில் பாடிய காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல்தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தன்னுடைய இனிய குரல் வளத்தால் கேட்போரை கட்டிபோட்டு விடும் அவரது பாடல்களில் சிலவற்றை நீங்களும் ரசித்து மகிழுங்களேன்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15.
16.
17.
18.
19.
20.
ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து
21.
அழகிய மிதிலை நகரினிலே
22.
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
23.
கண்ணிரெண்டும் மின்ன மின்ன காலிரெண்டும் பின்ன பின்ன
24.
தாமரைக்கன்னங்கள் தேன்மலர்க்கிண்ணங்கள்
25.
வளர்ந்த கலை மறந்து விட்டாய் கேளடா கண்ணா
26.
நாளால் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
27.
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி
28.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
29.
ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான்
30.
சின்ன சின்னப்பூவே சிரித்தாடும் பூவே
31.
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
32.
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
33.
எந்த ஊர் என்பவளே
21.
அழகிய மிதிலை நகரினிலே
22.
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
23.
கண்ணிரெண்டும் மின்ன மின்ன காலிரெண்டும் பின்ன பின்ன
24.
தாமரைக்கன்னங்கள் தேன்மலர்க்கிண்ணங்கள்
25.
வளர்ந்த கலை மறந்து விட்டாய் கேளடா கண்ணா
26.
நாளால் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
27.
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி
28.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
29.
ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான்
30.
சின்ன சின்னப்பூவே சிரித்தாடும் பூவே
31.
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
32.
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
33.
எந்த ஊர் என்பவளே
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
Tweet |
36 comments:
"பி.பி.ஸ்ரீனிவாஸ்" பாடல்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான் விரும்பி கேட்பேன். நீங்கள், அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு மற்றும் குடும்பத்தினரோடு உரையாடியது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அவரை பற்றிய உங்களது பகிர்வு ரொம்ப நல்லாருக்கு ஸாதிகா அக்கா.
பி.பி.ஸ்ரீனிவாஸ் ,எ .எம் .ராஜா .சிக்கி போன்றோரின் பாடல்களின் இசையை விட சிறப்பானது அவர்களின் குரல் அதிலும் பல ஆண்டுகள் சென்றும் இப்போதும் அந்த குரல் இளைய தலைமுறையை கவருவது இவர்களின் குரல் காலத்தை வென்ற குரல் என சொல்வேன்
என்னிடம் பி.பி.ஸ்ரீனிவாஸ் எ எம் ராஜா என ஒரு சிறப்பான தொகுப்பு உள்ளது
சிறப்பான பதிவு
ஆஹா நானும் அவரது பாட்டுக்கு ரசிகன் தான் ஸாதிகாக்கா. அருமையா சொல்லிடீங்க!!
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.இப்ப விஜய் டிவியில் சுசீலாமா நிகழ்ச்சியில் அவர் hats off செய்வதற்கு உண்மையிலேயே தன் தலைப்பாகையை மேடையில் கழற்றியதை மிகவும் ரசித்தேன்.காலத்தால் அழியாத அருமையான மனிதர்.பகிர்வும் பாடல்களும் அருமை தோழி.
அனைத்துமே காலத்தால் அழியாத பாடல்கள்
நன்றி ஸாதிகா
பாடல்கள் தொகுப்பு அருமை
அடுத்த தலைமுறையும் ரசிக்கும்
ஆஹா அவரு உங்க ஊட்டுக்கு பக்கத்துலதா இருக்காரா?
அவரது குரல் மிகவும் கம்பீரமானது.பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாமே...
அதுமட்டுமில்லாம அசால்ட்டா அவரது கலெக்ஷன்ச ரிலீஸ் பண்ணி,அவரது ரசிகைங்ரத ப்ரூ பண்ணீட்டீங்கக்கா...
நல்ல பகிர்வு..
ஹ்ம்ம்..இனிமே சும்மா இருக்கும் போது அவர் வீட்டுக்கு போய் அவர பாடவச்சு கேட்டுக்கலாம்..ஜாலிதான்...
அன்புடன்
ரஜின்
காலத்தால் அழியா பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.
ahaa! I have heard all the songs repeatedly just like you might have done.. I can play the songs for non stop 5 hrs .. Thanks to my anna who gave the mp3 collection :))
பி பி ஸ்ரீனிவாஸ் பாடல் கள் என்க்கும் ரொம்ப பிடிக்கும்.
ரோஜா மலரில் ராஜ குமாரி
இன்னும் அதை முனு ,முனுக்கிரேன்
ரொம்ப பிடிக்கும்.
காலங்களில் அவள் வசந்தம் ம்ம்ம்
மிக அருமையான பகிர்வு ஸாதிகா அக்கா
அவருடைய பாடலை ரசிக்காமல் யார் தான் இருக்க முடியும். நல்ல பகிர்வு ஸாதிகாக்கா.
எனக்கும் மிகவும் பிடித்த பாடகர். சீக்கிரம் போய் மீட் பண்ணிடுங்க.
மிக நல்ல பகிர்வு. நன்றி அக்கா.
சென்னையில் ஒரு விழாவில் திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன். அவரது சட்டைப்பை முழுவதும் விதவிதமான பேனாக்களை வைத்திருந்தார். விசித்திரமாக இருந்தது. பின்னர் எனது நண்பரும் பி.பியின் தீவிர ரசிகருமான செல்வகுமார், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பற்றிய பல சுவையான தகவல்களைச் சொன்னார். இந்தப் பதிவு பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியது.
நானும் பி.பி.ஸ்ரீனிவாஸின் ரசிகன் தான்.
Melodious songs.... Super!
உண்மையாகவோ ஸாதிகா அக்கா, இவரைப் பார்த்துவிட்டீங்களோ? இனியும் தாமதிக்காது நேரில் சென்று கதைத்துவிடுங்கள். நாளை நம் கையில் இல்லையல்லவா.
நீங்கள் போட்டிருக்கும் 33 பாடல்களும் எனக்கும் மிகவும் பிடிக்கும், ஏதாவது ஒன்றைமட்டும் மிகவும் பிடிக்கும் எனக் குறிப்பிடலாமே எனத் தேடினேன்.. ம்ஹூம்... அனைத்துமே மிகவும் பிடித்தவையே.... 3,5,9,10, 15, 20, 21, 32, 33... எதை விடுவேன் எதைச் சொல்வேன்...மனதைக் கவர்ந்தவை.
அருமையான தொகுப்பு.
பீ.பி.எஸ். பாடல்கள் பலவற்றில் தத்துவக்
கருத்துக்கள் நிறைந்திருக்கும்.
நண்பர். செ.சரவணக்குமார் சொன்னதுபோல்
சட்டைப் பையில் இருந்து பேனாக்கள்
எடுத்து கவிதைகள் - அதுவும் பல மொழிகளில்
- எழுதுவார். அந்த வார்த்தைகளில்
இடையிடையே வெவேறு நிற எழுத்துக்களை
பயன்படுத்துவார். அவ்வாறான நிற எழுத்துக்களை
மட்டும் படித்தால், அது வேரொரு கவிதையாகவோ
அல்லது ஒரு வசனமாகவோ இருக்கும்.
திறமைதான்.
பாடல் தெரிவுகள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.
அவுங்க வீட்டுகிட்டயா இருக்கீக????
ம் குடுத்து வச்சவுக தான் ;))
பாடல் தேர்வு அருமைக்கா
அருமையான பாடலகள் தொகுப்பு...சீக்கிரம் அவரை சந்தித்து ஒரு பதிவு எழுதுங்க...
எனக்கும் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.வீட்டுப்பக்கத்திலேயே இருக்காரா ஸாதிகாக்கா? விரைவில் சந்திக்க வாழ்த்துக்கள்!
பழைய பாடல் என்றும்
இனிமையானவை.
பகிர்வுக்கு நன்றி.
அருமையான பகிர்வும் தொகுப்பும். இவரை சென்னை ந்யூஉட்லண்ட்ஸ் விடுதி வளாகத்தில் அடிக்கடி பார்த்ததுண்டு. பேசியதில்லை. சந்தித்து அந்த அனுபத்தையும் பகிர்ந்திடுங்கள் விரைவில்.
நினைத்தாலே கண்ணியமான மதிப்பு வரும்படியான பாடகர். பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். அதிலும், அந்த ‘நினைத்ததெல்லாம் நட்ந்துவிட்டால்..’!!
நிறைய பாடல்களை சிரமம் பாராமல் தொகுத்து தரும் அளவுக்கு ஆர்வமா உங்களுக்கு என வியக்கிறேன்!!
அவரது கலர் பேனாக்கள், கவிதை, நடுவில் வார்த்தைக்கவிதை என நண்பர்கள் இங்கு அவரைக் குறித்துக் கூறும்போது மேலும் வியப்பு வருகிறது அக்கா.
I too like his songs.
regards
Ismail Kani
நானும் அவரது பாட்டுக்கு ரசிகன் தான் ஸாதிகாக்கா...
விரைவில் பி.பி.ஸ்ரீனிவாஸ் சந்திக்க வாழ்த்துக்கள்!
கருத்திட்ட அன்புள்ளங்கள்
சகோ ஸ்டார்ஜன்
சகோ ஹாய் அரும்பாவூர்
சகோஎம் அப்துல்காதர்
சகோஆசியா உமர்
சகோ இரவு வானம்
சகோ விஜய்
சகோ ரஜின்
சகோ புவனேஸ்வரி ராமனாதன்
சகோ இலா
சகோ ஜலீலா
சகோ அக்பர்
சகோ வானதி
சகோ செ.சரவணக்குமார்
சகோ சித்ரா
சகோ அதிரா
சகோ நிஜாமுதீன்
சகோ மால்குடி
சகோ ஆமினா
சகோ கீதா ஆச்சல்
சகோ மஹி
சகோ ஆயிஷா
சகோ ராமலக்ஷ்மி
சகோ ஹுசைனம்மா
சகோ புதுப்பாலம்
சகோ புதுவை சிவா
உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!!
பி.பி.சீனிவாஸ் பற்றிய விபரங்களும் பாடல்கள் தொகுப்பும் அருமை ஸாதிகா!
அவரின் குரல் மென்மையாக, அமைதியாக இருக்கும்.
இன்னும் நிறைய, விடுபட்ட பாடல்கள், புகழ்பெற்ற பாடல்கள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு சில:
உடலுக்கு உயிர் காவல் படம்: மணப்பந்தல்
பார்த்து பார்த்து படம்: மணப்பந்தல்
மாலையும் இரவும் சந்திக்க்கும் படம்: பாசம்
சின்ன சின்ன கண்ணனுக்கு படம்: வாழ்க்கைப்படகு
நேற்றுவரை நீ யாரோ படம்: வாழ்க்கைப்படகு
இரவு முடிந்து விடும் படம்: அன்புக்கரங்கள்
தென்னங்கீற்று ஊஞ்சலிலே படம்: பாதை தெரியுது பார்
தாமதமாக வந்ததிற்கு வருத்தப்படறேன் பாடல்கள் அனைத்தும் மனதை மகிழ்விக்கின்றன நீங்களும் இவ்வளவு பாடல்களுக்கும் லிங்க் கொடுத்தது ஆச்சர்யமாக இருக்கின்றது வாழ்த்துக்கள் சகோ..........
மனோ அக்கா,உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தையும் இணைத்து விட்டேன்.ஞாபகமூட்டியதற்கு மிக்க நன்றி.
மனோ அக்கா,உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தையும் இணைத்து விட்டேன்.ஞாபகமூட்டியதற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி சகோ ஐயூப்(அந்நியன்)
நீங்கள் விரைவில் PBS அவர்களை நேரில் சந்திக்க.. வாழ்த்துக்கள்.. உங்கள் உணர்வு புரிகிறது.. நமக்கு மிகப் பிடித்த பாடகர்... நம் முன்னால் நின்றால்.. நமக்கு எதுவும் செய்ய தோன்றாது தான்...
எனக்கும் அவர் பாடல்களில்.....
மௌனமே பார்வையால்...., ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்....,பார்த்தேன் சிரித்தேன்...,
நிலவே என்னிடம் நெருங்காதே......, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..., மயக்கமா கலக்கமா.....,
பொன் ஒன்று கண்டேன்...., வளர்ந்த கலை மறந்து...., அத்திக்காய் காய் காய்...., நிலவுக்கு என் மேல்...,
பொன் என்பேன் சிறு பூ...., நெஞ்சம் மறப்பதில்லை....,கண்களின் வார்த்தைகள்....,நேற்று வரை நீ யாரோ நான் யாரோ...,
எந்தன் பருவத்தின்...(ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள்...)
அருமையான.. இனிய பகிர்வு.. ரொம்ப நன்றிங்க.. :-))))
நானும் அவர் ரசிகை என் பாட்டி, என் அம்மா, என் அப்பா எங்க வீட்டில் எல்லோருமே அவர் ரசிகைங்க.அதில் இங்கு குறிப்ப்பிட்டுக்கும் எல்லா பாட்டுமே ஜெம்.நல்ல பகிர்வு.
பி.பி.ஸ்ரீனிவாஸ் - இனிமை / மென்மை கலந்த குரலுக்கு சொந்தக்காரர்...
சட்டைப்பையில் குறைந்தபட்சம் 50 பேனாவாவது வைத்து இருப்பார்...
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
நாளால் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
நிலவே என்னிடம் நெருங்காதே
அழகிய மிதிலை நகரிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
இவையெல்லாம் இன்று முழுக்க கேட்டுக்கொண்டு இருக்கலாம்... அவ்வளவு இனிமை...
பி.பி.எஸ். பற்றிய நினைவுகளை அழகாக பதிந்துள்ளீர்கள்...
வாழ்த்துக்கள் ஸாதிகா...
(இதே போல் மற்றொரு இனிமை / மென்மை குரலுக்கு சொந்தக்காரர் தான் ஏ.எம்.ராஜா...)
Post a Comment