January 3, 2011

பொங்கலோ பொங்கல்!

இலவசம் போட்டே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற உண்மையை நன்றாக புரிந்து கொண்ட ராஜதந்திரி ,இலவச வள்ளல் நமது மாண்பு மிகு முதல்வரின் புது பொங்கல் இலவச பொருட்கள் விநியோகம் ஆரம்பமாகி விட்டது.இலவசமாக கொடுத்தால் என்றால் நம்மவர்கள் பினாயலைக்கூட குடிக்கத்தயாராக இருப்பார்களே!நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

இலவசபொங்கல் பொருட்கள் வாங்கிட்டோம்ல.வெளிநாட்டு வாழ் பதிவுலக உடன் பிறப்புகள் செவிகளில் புகை வரவேண்டி இந்த படத்தினை சேர்த்து பதிவிடுகின்றேன்.

பொங்கல் வைக்கத்தேவையான பச்சரிசி,சிறுபருப்பு,வெல்லம்,முந்திரி,திராட்சை,ஏலம் வகையாறாக்கள் அடங்கிய பொங்கல் பையை வழங்கிய முதல்வர் ஆற்றிய உரையில்
”இந்த அரசு இலவசங்கள் கொடுப்பதை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். தமிழகத்தில் ஏழைகள் உள்ளவரை, நடமாடும் வரை, திமுக ஆட்சியில் இருக்கும் வரை இலவச திட்டங்கள் தொடரும்.” என்று கூறி இருக்கின்றார்.இதே ரீதியில் சென்றால் 3010 ஆண்டில் ஏழைகள் இன்னும் அதிகமாகத்தான் போவார்கள்,உழைப்பு என்பது பின்தங்கிக்கொண்டேதான் போகும்.அப்துல் கலாம் கூறியபடி இந்தியா வல்லரசாகும் வாய்ப்பு கூட வராது.அப்படீனு நான் சொல்லவில்லேங்க.உரையைக்கேட்ட சில உடன் பிறப்புகள் கூறி என் காதில் விழுந்தவை.


சரி,இலவசபொருட்கள்தான் வாங்க முடியாதவர்களுக்கு ,இலவசபொருட்களில் வைத்த இனிப்புப்பொங்கலை பறிமாறுகின்றேன்.வயிறார சாப்பிட்டு விட்டு அவசியம் ஓட்டு போட்டு விடுங்கள்.அட...வர்ர எலக்‌ஷனில் இல்லை.கீழே இருக்கும் தமிழிஷ் ஓட்டுப்பட்டையில்.

தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.அடுத்த வருஷம் இலவசபொருட்கள் கொடுக்கும் பொழுது கூடவே முப்பது வகை பொங்கல் செய்வது எப்படி என்று கலர்,கலர் படங்களுடன் ஒரு இலவச இணைப்பையும் சேர்த்துக்கொடுத்தால் பொங்கல் செய்யத்தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

”ஓசியில் பொருட்கள் வாங்கி,பொங்கல் செஞ்சி தின்னு புட்டு அக்காவுக்கு கொழுப்பைப்பாரேன்” என்று ஹுசைனம்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ப்பது கேட்கிறதுதான்.

”தோழி,இலவச பொங்கல் பொருட்கள் மட்டும்தான் வாங்கினீர்களா?இலவச சேலை எல்லாம் வாங்கலியா”என்று ஆசியா கேட்பது புரிகின்றது.”தோழி ஏதோ பொங்கல் பொருட்கள் வாங்கியாச்சு.இலவச சேலை வாங்கற அளவுக்கு நமக்கு தெறமை கிடையாது”




47 comments:

Anonymous said...

வேடிக்கையாய் உன்மையை சொல்லி இருக்கீங்க.நாம இன்னும் இலவசம் னு பின்னாடி ஓட தான் செய்கிறோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///வெளிநாட்டு வாழ் பதிவுலக உடன் பிறப்புகள் செவிகளில் புகை வரவேண்டி///

ஏற்கனவே வந்துக்கிட்டு தான் இருக்கு... ஹா ஹா ஹா..

ஊருக்கு போய் பார்க்கிறேன்..

ஜெய்லானி said...

முக்கியமான ஒன்னை விட்டுட்டீங்களே..!! யக்கா... அது கரும்பு குடுக்கலையா...ஹி..ஹி..

Starjan (ஸ்டார்ஜன்) said...

இலவசமா கிடைக்குதுன்னா சும்மாவா... காசா பணமா.. இதுதான் மக்களோட நியதி. வாங்கலைன்னாதான் வருத்தப்படுவாங்க..

ஸாதிகா said...

உண்மைதான் மஹா விஜய்.தமிழர் இலவசம் நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.கருத்துக்கும்,முதல் வருகைக்கும் நன்றி!

ஸாதிகா said...

ஷேக் தம்பி,/ஊருக்கு போய் பார்க்கிறேன்..// வாங்க..வாங்க..மச்சி வாங்கி பத்திரமா வச்சி இருப்பாங்க.நீங்க வந்ததும் சர்க்கரை பொங்கலா வச்சி கொடுப்பாங்க .கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

// யக்கா... அது கரும்பு குடுக்கலையா..// எனுங்கோ தம்பி ஜெய்லானி தாத்தா கரும்பாகத்தான் பேசறாரே?வேறெதுக்கு கரும்பு?கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

//வாங்கலைன்னாதான் வருத்தப்படுவாங்க.// ஹிஹி..கண்டு பிடிசிட்டீங்க ஸ்டார்ஜன் மக்கள் மனசை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///ஹிஹி..கண்டு பிடிசிட்டீங்க ஸ்டார்ஜன் மக்கள் மனசை.///

பின்னே.. எப்படி நாளைய ராஜாவாகிறது?.. :))

ஸாதிகா said...

//எப்படி நாளைய ராஜாவாகிறது?.// யம்மா...

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஸாதிகா!

”ஓசியில் பொருட்கள் வாங்கி,
பொங்கல் செஞ்சி தின்னு புட்டு
செய்முறையும் போட்டு இருக்கலாம்.

ஸாதிகா said...

ஆயிஷா,அதானே.அதையும் செய்து இருக்கலாம்!கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

அக்கா,

எப்படிக்கா இப்படி? என் மனசை இந்தளவு புரிஞ்சு வச்சிருக்கீங்க? கண்ணு கலங்கி, உதடு துடிக்க.. நிக்கிறேன். ஆ.. ஆ.. ஆ... (நாயகன் கமல் ஸ்டைல்)

ஒரு சந்தேகம்: இந்தப் பொங்கல் அந்த ரேஷன் பொருட்களில் செய்ததுதானா? என்னா பெரிய பெரிய முந்திரியும், கிஸ்மிஸும்.. என்.ஆர்.ஐ. நானே, எண்ணி எண்ணிதான் முந்திரியைப் பயன்படுத்துறேன். ஹூம்.. இதுக்காகவாவது சீக்கிரம் இந்தியாவுக்கு வந்து செட்டிலாகணும். பொதுஜனங்களே, அதுவரை நம்ம தாத்தாவை ஆட்சியிலே வச்சிருங்க ப்ளீஸ்!!

சிநேகிதன் அக்பர் said...

இது இலவச பொருட்கள்ல செய்த பொங்கல் மாதிரி தெரியலை. (முந்திரி பருப்பு அதுல அஞ்சுதான் இருக்கு. இதில் நிறைய இருக்கு. எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா ?

ஸாதிகா said...

சந்தேகத்தைக்கிளியர் பண்ணுவது கடமை.கண்டிப்பா இது அந்த பொருட்களில் செய்தது இல்லை ஹுசைனம்மா.அடிக்க வராதிங்க..கூகுள் உபயம்.வேறொன்னுமில்லை.வீட்டில் பொங்கல் செய்ததும் சட்டி காலி.அதான் படம் எடுக்க முடியலே ஹி..ஹி..

Unknown said...

வாக்குப் போட்டாச்சு சகோதரி

ஸாதிகா said...

//இதில் நிறைய இருக்கு. எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா// அக்பர்,ஆ..சரியான கண்டு பிடிப்பு.எப்படிங்க இப்படில்லாம்..!முந்திரி முட்டை போட்டு குஞ்சி பொரித்தது என்றெல்லாம் கப்சா விட மாட்டேன்.இது கூகுள் உபயம்.கருத்துக்கு நன்றி சகோ.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் V.K மகாதேவன்.

தூயவனின் அடிமை said...

மொத்தத்தில் ஓசி பொங்கல் ஆகி விட்டது. அப்போ ஒவ்வொரு பண்டிகைக்கும் எல்லாம் ஓசியில் கிடைக்குமா? இத நான் கேட்கல பின்னால சில பேர் கேட்டாங்க அவ்வளவு தான்.

vanathy said...

அக்கா, இதென்ன ஜுஜுபி பொங்கல் நான் போடுறேன் பாருங்க பொங்கல் என் ப்ளாக்கில் ( திட்டாதீங்க சும்மா டமாஷ் ). இந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை மக்களுக்கு வேலைக்கு போகணும் என்ற எண்ணமே வர விடமாட்டார்கள் போல இருக்கே.
அடுத்த தடவை புடவையும் வாங்கிட்டு வந்துடுங்க சரியா????
வோட்டு போட்டாச்சு.

ஆமினா said...

எக்கோவ்...........

நெய் குடுக்கலையா????????

ஆமினா said...

//. பொதுஜனங்களே, அதுவரை நம்ம தாத்தாவை ஆட்சியிலே வச்சிருங்க ப்ளீஸ்!!//

கவலபடாதீங்க..... உங்களுக்கு கொள்ளூ பேரன் பொறந்து அதுக்கு கொள்ளூ பேத்தி பொறக்குற வரைக்கும் தாத்தா மற்றும் வாரிசு ஆட்சி தான்,,, அந்தளவுக்கு இலவசத்தை வச்சு பேஸ்மென்ட் ஸ்ட்ராங்கா கட்டிட்டார் ;)

Asiya Omar said...

ஸாதிகா காலங்கார்த்தாலே இப்படி கிளப்பிவிடலாமா,சும்மா சொல்லக்கூடாது பொங்கல் அருமை.உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்,எங்க ஊரில் சிலர் வாங்கிய இலவச சேலையை நாங்க அப்ப ரூ 30 கொடுத்து வாங்கி பிள்ளைகளுக்கு தொட்டில் கட்ட பயன்படுத்தியது நினைவு வருது..என் பிள்ளைங்க அந்த சேலை தந்த சுகத்தில் 3 வயசு வரை தொட்டில் தான்.அவ்வளவு ஸ்ட்ராங்.

ஸாதிகா said...

//அப்போ ஒவ்வொரு பண்டிகைக்கும் எல்லாம் ஓசியில் கிடைக்குமா//தீபாவளிக்கு பட்சண மாவு,எண்ணெய்,ரம்ஜான்,பக்ரீதுக்கு மட்டன்,பாஸ்மதி அரிசி,கிருஸ்துமஸ்க்கு மைதா,வெண்ணெய்,முட்டை கொடுத்தால் வேண்டாம்ன்னா சொல்லப்போறோம்.கருத்துக்கு நன்றி இளம் தூயவன் சார்.

ஸாதிகா said...

//அக்கா, இதென்ன ஜுஜுபி பொங்கல் நான் போடுறேன் பாருங்க பொங்கல் என் ப்ளாக்கில்// சீக்கிரம் பொங்கல் போடுங்க வானதி நாங்களும் வந்து சாப்பிடுறோம்.கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

//நெய் குடுக்கலையா???????// அதானே.கருத்துக்கு நன்றி ஆமினா.

ஸாதிகா said...

/என் பிள்ளைங்க அந்த சேலை தந்த சுகத்தில் 3 வயசு வரை தொட்டில் தான்.அவ்வளவு ஸ்ட்ராங்// பார்த்தீங்களா ஆசியா,குறைந்தது 100 ரூபாய் பெறுமானமுள்ள சேலையை வாங்கி இலவசமாக விநியோகித்து அதனை 30 ரூபாய்க்கு விற்கின்றார்கள்.அதே போல் இப்பொழுது இலவச டிவியை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்ககூட ஆளில்லையாம்.

அரபுத்தமிழன் said...

மக்களின் மனங்களைப் புரிந்து
ஜனவரியில் ஜனங்களின் வரியில்
எல்லோர் வீட்டிலும்
பொங்கலைப் பொங்க வைத்த
'பொங்கல் தாத்தா' வாழ்க.

(கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி இனி தமிழர்கள்
பொக்கைவாய் தாத்தா என்று மாறும் வரை
பொங்கல் தாத்தாவென்றே அழைப்பார்கள்)

RAZIN ABDUL RAHMAN said...

/இலவசமாக கொடுத்தால் என்றால் நம்மவர்கள் பினாயலைக்கூட குடிக்கத்தயாராக இருப்பார்களே/

ஒரு பக்கம் இது உண்மையா இருந்தாலும்,இன்னொரு புறம் இந்த நிலை வருத்தமளிக்கிறது சகோ..

ஆனால் இது போன்ற பண்டிகை கால இலவசங்கள்,ஏழைகளை சென்றடைவது,அதன் பொருட்டு அவர்களின் அன்றைய திருநாள் திருநாளாகவே கழிவதும் மகிழ்ச்சிதான்.

/வெளிநாட்டு வாழ் பதிவுலக உடன் பிறப்புகள் செவிகளில் புகை வரவேண்டி/

அல்ரெடி வந்தாச்சு...சட்டிய காலி பண்ணீட்டு,
//வயிறார சாப்பிட்டு விட்டு//
எப்புடி,மனோரமா ஸ்டைல்ல...படத்த பாத்துகிட்டே சாப்புடவா....

ம்ம்...இப்போதா பொக கொஞ்சம் ஜாஸ்தியாகுது,....

அன்புடன்
ரஜின்

enrenrum16 said...

//”இந்த அரசு இலவசங்கள் கொடுப்பதை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். தமிழகத்தில் ஏழைகள் உள்ளவரை, நடமாடும் வரை, திமுக ஆட்சியில் இருக்கும் வரை இலவச திட்டங்கள் தொடரும்.” என்று கூறி இருக்கின்றார்// ஏதோ அவங்க பையில (மட்டும்) போடாம இல்லாதவங்களுக்காவது கொடுக்கிறாங்களேன்னு ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதான்.

//முப்பது வகை பொங்கல் செய்வது எப்படி என்று கலர்,கலர் படங்களுடன் ஒரு இலவச இணைப்பையும் சேர்த்துக்கொடுத்தால்// ஐடியாவைப் பார்த்தால் கூடிய சீக்கிரத்தில் எலக்ஷன்ல ஓட்டு போட சொல்வீங்க போலயிருக்கே!

Unknown said...

அது சரி பொங்கல் நல்லா இருந்துச்சா இல்லையான்னு சொல்லவே இல்லை :-) அப்துல் கலாம்னு போடுங்க

அந்நியன் 2 said...

பொங்கலின் பதிவும் இலவச திட்டத்தின் கேலியும் கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது சகோ...

இலவசத் திட்டத்தை நாம் கேலியாக பேசினாலும் அந்த திட்டம் வரவேற்க்கக் கூடிய ஒன்று தொலைக் காட்ச்சியை தவிர.
வறுமையில் வாடி வரட்டுக் கர்வத்தால் உலக வங்கியில் கடனை வாங்கி இந்தியாவை அடகு வைத்து பணத்தை திரட்டினால் கூட கடனைக் கழிக்க முடியாத சூழ்நிலையில் இந்தியா இருக்கின்றது.
இப்படிப் பட்ட சூழ்நிலையிலேயும் இலவசத் திட்டங்கள் ஏழை மக்களுக்கு கிடைக்கின்றது என்றால் பாராட்டக் கூடியதே அது கருணாநிதியானாலும் சரி ஜெயலலிதாவனாலும் சரி.

ஒரு "வேளை" உணவையே பழக்கிக் கொண்ட ஏழை மக்கள் இன்று மூன்று வேளை உண்ணுவதற்கு உணவு கிடைக்கின்றதால் அதற்கு கருணாநிதியும் ஒரு காரணம் அவர் குடும்ப அரசியலில் பின்னப் பட்டிருப்பதால் பிரச்சனை அவருக்கே.

இலவச மின்சாரத் திட்டத்தில் ஏழைகள் முப்பது சதவிகிதம் பயனடைந்தால்... பண்ணை வீட்டு பணக்காரர்கள் தம் சொகுசிர்க்காக கட்டப்பட்ட தென்னை தோப்பிற்கு இலவச மின்சாரம் பெற்று பயனடைபவர்கள் ஐம்பது சதவிகிதத்தினர், இதனால் அரசுக்குத்தான் நஷ்ட்டம் ஏழைகளுக்கென்று கொண்ட வரப்பட்ட இலவச திட்டத்தில் எல்லா வசதியையும் கிடைக்கப் பெற்ற பணக்காரர்களும் இதில் மஞ்சக்குழிப்பது வேதனைக் குரியதே.

இலவச திட்டத்தில் பணக்காரர்களின் கைதான் ஓங்கி இருக்கு அப்பாவி ஏழைகளோ ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு இருக்கின்றார்கள் இதை நாம்தான் புரிந்து கொள்ளனும் இலவசமாக ஆஸ்பத்திரியும்தான் இருக்கு எந்தப் பணக்காரனாவது அங்கு போகின்றானா ? கிடையவே கிடையாது.

பொங்கலின் சிறப்பு பதிவும் பொங்கலும் அருமையாக இருக்கு அக்காள்... வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அரபுத்தமிழன் கவிதையும் நல்லா இருக்கு.நீங்கள் சூட்டிய நாமகரணமும் நல்லா இருக்கு.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//அல்ரெடி வந்தாச்சு...சட்டிய காலி பண்ணீட்டு,
//வயிறார சாப்பிட்டு விட்டு//
எப்புடி,மனோரமா ஸ்டைல்ல...படத்த பாத்துகிட்டே சாப்புடவா....

ம்ம்...இப்போதா பொக கொஞ்சம் ஜாஸ்தியாகுது,....// ரொம்ப சாரி பிரதர் ரஜின்.:-) கருத்துக்கும் தொடர் வருகைக்கும் நன்றி.

ஸாதிகா said...

//ஏதோ அவங்க பையில (மட்டும்) போடாம இல்லாதவங்களுக்காவது கொடுக்கிறாங்களேன்னு ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதான்.
// ஹ்ம்ம்ம்... என்னத்தை சொல்லுறது?நன்றி பானு.

ஸாதிகா said...

//ஒரு "வேளை" உணவையே பழக்கிக் கொண்ட ஏழை மக்கள் இன்று மூன்று வேளை உண்ணுவதற்கு உணவு கிடைக்கின்றதால் அதற்கு கருணாநிதியும் ஒரு காரணம்// இதில் எனக்கு உடன் பாடில்லை சகோ அந்நியன்.எல்லா எழைகளுக்கும் சென்றடைவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் சொல்லுவாள் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி கிலோ 5 ரூபாய்க்கு விற்றும்,30 ரூபாய்க்கு பாமாயில் வாங்கி நாற்பது ரூபாய்க்கு விற்றும்,இதே கதையாய் பருப்பு இதர பொருட்களை விற்று அவள் கணவர் டாஸ்மாக் கடைக்கு செலவு செய்கின்றாராம்.”ஏன் அரிசியை சாதம் ” வடித்து சாபிட வேண்டியதுதானே என்று கேட்டால் அந்த அரிசியை வாயில் வைக்க முடியாதுங்கறாள்.ஆப்ப,இடியாப்பகடைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது,

சமீபத்தில் ஒரு இடுகையில் படித்த ஞாபகம்.மீனை கொடுத்து சாப்பிடு என்று சொல்வதை விட மீன் பிடிக்க ஒரு குளத்தைக்காட்டியும்,அங்கிருக்கும் மீன்களைபிடிக்க கற்றுக்கொடுத்தலும் மிக நல்லதல்லவா என்று.இது நூறு சதவிகிதம் உண்மை.இலவசங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகின்றது என்பது திண்ணம்.

ஸாதிகா said...

இதனையும் பாருங்களேன்

டிலீப் said...

//இலவசமாக கொடுத்தால் என்றால் நம்மவர்கள் பினாயலைக்கூட குடிக்கத்தயாராக இருப்பார்களே!நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?//

100% உம்மை

//வயிறார சாப்பிட்டு விட்டு அவசியம் ஓட்டு போட்டு விடுங்கள்.அட...வர்ர எலக்‌ஷனில் இல்லை.கீழே இருக்கும் தமிழிஷ் ஓட்டுப்பட்டையில்.//

சாப்பாடு குடுத்துதான் ஓட்டு வாங்கிறிங்கு. சூப்பர்
நானும் பின்பற்றுகிறேன்.

காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு

Thenammai Lakshmanan said...

ஹா ஹா ஹா என்ன ஒரே அதிரடி ரணகளமா இருக்கு..:))

ஸாதிகா said...

இதனையும் பார்த்து விடுங்களேன்.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா இந்த இலவசங்களுக்கு தமிழ் நாட்ல நல்ல வர வேற்பும் இருக்கே.
இல்லாதவங்கமட்டுமில்லை மிடில் க்ளாஸ் ஆட்களும்கூட முந்திக்கராங்க.

Mahi said...

பொங்கலைக் காட்டியதுக்கு நன்றி ஸாதிகாக்கா! :)

/சரி,இலவசபொருட்கள்தான் வாங்க முடியாதவர்களுக்கு ,இலவசபொருட்களில் வைத்த இனிப்புப்பொங்கலை பறிமாறுகின்றேன்.வயிறார சாப்பிட்டு விட்டு அவசியம் ஓட்டு போட்டு விடுங்கள்./அடேங்கப்பா..கூகுள் பொங்கலைப் பரிமாறிட்டு...கர்ர்ர்ர்ர்ர்ர்!
நல்ல அரசியல்வாதியா வருவீங்க,அடுத்த எலக்ஷன்லே நின்னுடுங்களேஏஏஏஏஏன்!!!!!!!

Chitra said...

சரி,இலவசபொருட்கள்தான் வாங்க முடியாதவர்களுக்கு ,இலவசபொருட்களில் வைத்த இனிப்புப்பொங்கலை பறிமாறுகின்றேன்.வயிறார சாப்பிட்டு விட்டு அவசியம் ஓட்டு போட்டு விடுங்கள்.அட...வர்ர எலக்‌ஷனில் இல்லை.கீழே இருக்கும் தமிழிஷ் ஓட்டுப்பட்டையில்.


...... இலவச பொங்கல் படம் காட்டியதற்கே நான் வோட்டு போட்டு விட்டேனே..... ஹா,ஹா,ஹா,ஹா,...

Ahamed irshad said...

வெளிநாட்டு வாழ் பதிவுலக உடன் பிறப்புகள் செவிகளில் புகை வரவேண்டி//

Nallathu...



//புது டெம்ப்ளேட் அருமை என்றாலும் உங்கள் பிளாக்கை ஓப்பன் செய்ததுமே வரும் அழகான பொன்னிக்குருவி(indian pitta)படத்தை இனி காண முடியாது எனும் பொழுது சின்ன ஏமாற்றமாக உள்ளது.//

Now you visit again..

சிவகுமாரன் said...

அய்யா சரியாத் தான் சொன்னார். ஏழைகள் இருக்கும் வரைதானே அவங்க பொழப்பு ஓடும். ஏழ்மையை அவ்வளவு சீக்கிரம் ஒழிச்சுருவோமா என்ன ?

இலா said...

ஷாதிகா ஆன்டி! சூப்பர்!! மக்களாக திருந்தினால் தான் உண்டு! அதுவரை அவர்களின் அறியாமையை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் "பொங்க" வைப்பதை விடமாட்டார்கள்!!!

ராமலக்ஷ்மி said...

வாக்கு உங்களுக்கே:)!