April 14, 2010

கதைகேளு..கதைகேளு..



பதினெட்டு,பதினாறில் என் செல்வங்கள் அவர்களை நான் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் வளர்ந்திருந்தாலும்,இறைஅச்சமும்,படிப்பும்,கணினியும்,வாழ்க்கைமுறையும் , அவர்களுக்கு நான் அறியாதவைகளை எல்லாம் கற்றுத்தந்திருந்தாலும்,பெற்ற எனக்கே யோசனைகளும்,கருத்துக்களும் கூறி என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் எனதருமைசெல்லங்கள் இன்றுவரை என்கதைகள் கேட்டு மகிழ்வார்கள்.நற்கதைகளும்,நீதிக்கதைகளும் கூறி அவர்களை புடம் போடுவதென்பது என்னின் மகிழ்ச்சி.சகோதரர் ஸ்டார்ஜன் தொடர் பதிவின் அழைப்பிற்கிணங்க என் பிள்ளைகள் கேட்டு மகிழ்ந்த கதை இங்கே..

செம்பவழநாட்டில் செம்பவழ‌ன் என்றொரு மன்னன் நல்லாட்சி புரிந்து வந்தான்.தன் மக்களுக்கு நல்லது செய்யும் தயாளகுணம் கொண்ட மன்னனாகினும் கண்டிப்பும்,கறாரும் மிகுதியானவன்.இது தலைமைக்கு அழகுதானே?

அதே நாட்டில் அஹ்மத் என்றொரு ஏழை வாழ்ந்து வந்தான்.அவன் வாழ்க்கையே பசியும்,பட்டினியினாலும் பின்னிபிணையப்பட்டவை.தன் தரித்திரம் தாங்க முடியாமல் மன்னனிடம் சென்று தன் ஏழ்மைபற்றி முறையிட்டு வறுமை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டான்.

மன்னன் அவனது வேண்டுகோளை ஏற்று விலை மதிப்புள்ள ஒரு வைர‌க்கல்லை வழங்கினான்.அஹ்மத் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு தன் பையில் பத்திரப்படுத்திக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்கும் பொழுது ஒரு குளம் கண்டு தன் தாகம் தீர்க்க குளக்கரையில் அமர்ந்து கைகளால் நீரை அள்ளி பருக ஆரம்பித்தான்.

தன் தாகம் தீர்ந்த பின்தான் தெரிந்தது.சட்டைப்பையில் பத்திரமாக வைத்திருந்த வைரக்கல் குளத்தோடு போய் விட்டதென்று.அழுதும,புலம்பி இருட்டும் வரை குளக்கரையில் தேடி ஓய்ந்து கவலையுடன் வீடு திரும்பினான்.

மறுநாள் மீண்டும் அரசனிடம் சென்று முறையிட்டான்.அரசரோ அவனது அலட்சியத்தை கடிந்து விட்டு இன்னொரு வைரக்கல்லை கொடுத்து "இதுதான் கடைசி"என்று எச்சரித்து அனுப்பினார்.

இப்பொழுது வைரக்கல்லை துணியால் சுற்றி பத்திரமாக தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மகிழ்வுடன் வீடு திரும்பிய பொழுது மீண்டும் அதே குளம்,அதே தண்ணீர் தாகம்.இந்த முறை முன்னெச்சரிக்கையாக துணியில் சுற்றப்பட்ட வைரத்தை பத்திரமாக குளத்தடியில் வைத்து விட்டு நீர் அருந்திவிட்டு வந்து பார்த்தால்..ஒரு காகம் துணியுடன் சேர்த்து வைரகற்களை கவ்விய படி பறந்து மறைந்து விட்டது.

அதிர்ச்சியில் சிலையாகிப்போன அஹ்மத் அழுதபடி வீடு திரும்பினான்.அரசரை மீண்டும் சந்தித்து பேச பயந்தவன் பசியும் பட்டினியுமாக வாழ்ந்த பொழுது அரசனிடம் இருந்து மறு அழைப்பு.

பயந்தபடி சென்றவனிடம் அரசன் கேட்க,நடந்தவைகள் அனைத்தையும் அழுதபடி கூறினான்."இதற்கு மேல் நான் உதவி செய்ய முடியாது.எல்லாம்வல்ல இறைவனிடம் கேள்.அவன் உனக்கு உதவி செய்வான்"என்று கூறி அனுப்பி வைத்தான்.

வீட்டிற்கு வந்தததும் இறைவனிடம் அழுது,புலம்பி தனக்கேற்பட்ட இன்னல்களை கூறி உதவி கேடவனாக இருந்தான்.


அஹ்மதின் மனைவி பல நாள் பட்டினியுடன் வாடியவள் அன்று தன் வீட்டு கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கீரைகள் பறித்து கட்டுகளாக கட்டி விற்ற பணத்தை அஹ்மதிடம் கொடுத்து"இன்றாவது பிள்ளைகளுக்கு மீன் குழம்பு வைத்துக்கொடுப்போம்.மீன் வாங்கி வாருங்கள்"என்றாள்.

அஹ்மதும் பணத்தை வாங்கிச்சென்று மீன்கள் வாங்கி வந்தான்.

மீன் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ காகம் வந்து மீனை கவ்விக்கொண்டு போய் விட்டது.

அஹ்மத் காகம் சென்ற திக்கில் போனபொழுது அது முருங்கை மரத்தில் கட்டி இருந்த கூட்டினுள் போய் உட்கார்ந்ததை பார்த்த பொழுது அவசரமாக முருங்கை மரம் ஏறி மீனை எடுத்து விடலாம்.இன்றொருநாளாவது பிள்ளைகள் வயிறார மீன் சாப்பாடு சாப்பிடட்டும் என்ற நோக்கில் மரம் ஏறி காகத்தை விரட்டி மீனை கையால் எடுத்த பொழுது கூட்டினுள் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம் கண்டு அதனையும் மீனுடன் சேர்த்து எடுத்து வந்தான்.

அந்த பொட்டலம் அவன் வைரம் வைத்து சுற்றபட்ட பொட்டலம்.வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றி கூறி வைரத்தை பத்திரப்படுத்தினான்.

கணவனால் மீட்கப்பட்ட மீன் திரும்ப கிடைத்ததும் அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தவள் மீன் வயிற்றினுள் இருந்து ஒரு வைரகல்லைப்பார்த்து கணவரிடம் கூற அது அரசனால தனக்கு வழங்கப்பட்ட வைரம்தான் என்பதனை அறிந்து இறைவனின் கருணையை,அளப்பறிய ஆற்றலை,கேட்டதும் உதவிய தயாளத்தை எண்ணி வியந்து தரையில் நெற்றி பதித்து இறைவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தான்.

நீதி:

இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை

ஈ எம் ஹனீஃபா அவர்களின் கணீர் குரலில் இந்த வைரவரிப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் உடல் புல்லரிக்கும்.மனம் சிலிர்த்துப்போகும்,கண்களில் கண்ணீர் ததும்பும்,இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் இன்னுமும் அதிகரிக்கும் போலுள்ள பிரம்மையை ஏற்படுத்தும்.நீங்களும் ரசியுங்கள்.

76 comments:

இலா said...

Super ! I like this Story :) Keep it going aunty !

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ் ரொம்ப அருமையான கதை.. ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்தது.. ரசித்து படித்தேன்.

///இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை///

உண்மையான வரிகள்..

அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நம்பியவர்களை இறைவன் கைவிடமாட்டான்.
நல்ல கருத்து.

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மின்மினி RS said...

நல்ல அருமையான கதை.. அல்லாஹ் நம் அனைவருக்கும் துன்பங்களில் இருந்து பாதுகாப்பானாக.. ஆமீன்

உங்கள் மின்மினி.

செ.சரவணக்குமார் said...

நல்ல எழுத்து நடையில அருமையா சொல்லியிருக்கீங்க அக்கா.

Chitra said...

நம்பிக்கையூட்டும் கதை. அருமை.

ஹைஷ்126 said...

சூப்பர் கதை, பலவருடங்களாக தினமும் நான் கேட்கும் பாடல்.

வாழ்க வளமுடன்

ஜெய்லானி said...

///இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை///


உண்மையான வைர வரிகள்.

Menaga Sathia said...

சூப்பர் கதை அக்கா!!

//இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை// நூற்றுக்கு நூறு உண்மை..

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...நல்ல கருத்துள்ள கதை..சூப்பர்ப்..

ஹுஸைனம்மா said...

பத்திரிகைகளி கதையெழுதுற உங்களுக்கு இங்க கதையெழுதுறதென்ன கஷ்டமா? நல்லா எழுதிருக்கீங்க.

athira said...

கதை அருமை..... எங்களையும் நேசறியில் கூட்டிச்சென்று, குட்டிப்பாவாடையோடும், றிங் பொட்டிலோடும் இருக்க வச்சிட்டீங்கள்:).

///இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை// எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

சீமான்கனி said...

சூப்பர் கதை அக்கா!!
நல்ல மனதோடு குறைய கேட்டாலும் நிரம்ப கொடுப்பவன் இறைவன்...
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மங்குனி அமைச்சர் said...

(மங்கு இதுக்கு என்னா கமண்ட்ஸ் போடலாம் ................
ஏதாவது எடக்கு மடக்கா போட்டா கூட்டமா சேந்து கும்மியடிசுடுவாங்க , ஏன்னா இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் , அப்புறம் ...............................ஏற்கனவே ஜெய்லானி வேற சீரியஸா பதில் சொல்லிருக்கான் ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...................
அப்பா சேப்டியா தபிசுகுவோம் )

//Chitra said...

நம்பிக்கையூட்டும் கதை. அருமை.///

ரிபீட்டு

Jaleela Kamal said...

//ஸாதிகா அசத்தலான கதை, சூப்பராக எழுதும் முறை அது உங்களுக்கே உரியது//

///இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை///
ரொம்ப சூப்பர், இந்த பாடலை நான் ரொம்ப விரும்பி கேட்பேன்

ஸாதிகா said...

இலா நீண்ட நாள் கழித்து வந்தமைக்கு மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

தம்பி ஸ்டார்ஜன்,கருத்துக்கு மிக்க நன்றி.மனதுக்கு பூஸ்ட் கொடுக்கும் பாடல்வரிகள்.நான் அடிக்கடிக்கேட்கும் பாடல்.

ஸாதிகா said...

உண்மைதான் சகோதரர் நிஜாமுதீன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அம்முமது உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

///அல்லாஹ் நம் அனைவருக்கும் துன்பங்களில் இருந்து பாதுகாப்பானாக.. ஆமீன்///அல்ஹம்துலில்லாஹ் மின்மினி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

தம்பி சரவணக்குமார் கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

உண்மைதான் சித்ரா மேடம்.இறைநம்பிக்கையூட்டும் கதை.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

ஹைஷ் சார்.நீண்ட நாட்கள் கழித்து வந்து இருக்கின்றீர்கள் மகிழ்ச்சி.//சூப்பர் கதை, பலவருடங்களாக தினமும் நான் கேட்கும் பாடல்.//

ஏற்கனவே உங்களது ஒருபதிவிலும் படித்து இருக்கிறேன்.நானும்தான்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ஜெய்லானி

ஸாதிகா said...

மேனகா கருத்துக்கு மிக்க நன்றிஅனைவரும் ஒருமித்த கருத்தாக பாடலை பிடிக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளதைப்பார்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது.

ஸாதிகா said...

கீதாஆச்சல்,நீண்ட இடைவேளைக்குப்பின் வருகை புரிந்தமைக்கு மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஹை அதிரா.பீடிங்பாட்டில் ,குட்டைப்பாவாடையுடன் அதீஸை கற்பனை செய்யும் பொழுது சூப்பராக இருக்கு.மகனுக்கு வெட்டிய கேக் மிச்சம் மீதி இருக்கா?

ஸாதிகா said...

ஹுசைனம்மா,குட்டு வைக்காமல் தட்டிக்கொடுத்துவிட்டீர்கள்.நன்றிஆச்

ஸாதிகா said...

//நல்ல மனதோடு குறைய கேட்டாலும் நிரம்ப கொடுப்பவன் இறைவன்..//

உண்மை வரிகள்.சீமான்கனி உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மங்குனி அமைச்சர்.நல்ல பிள்ளையாக பின்னூட்டி இருக்கீங்க.இது உங்கள் சரித்திரத்தில் சகாப்தம்.உங்கள் லூட்டி தாங்காமல் அப்புறம் எல்லோரும் இப்படி சென்ஸிடிவ் பதிவு போட்டு விடப்போறாங்க..இது ஆபத்தாச்சே!!கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

ஜலி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.இந்த பாடல் உங்களுக்கும் பிடித்து இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

athira said...

ஸாதிகா அக்கா இதைக்கவனிக்கல்லே நீங்க..//மங்கு இதுக்கு என்னா கமண்ட்ஸ் போடலாம் ................
ஏதாவது எடக்கு மடக்கா போட்டா கூட்டமா சேந்து கும்மியடிசுடுவாங்க , ஏன்னா இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் , /// இந்தப் பயம் எப்பவும் இருக்கோணூஊஊஊஊஉம்.... இப்ப பாருங்க ஜெய்..லானி எவ்வளவு நல்லபிளையாகிட்டார் வைரம் பற்றி எல்லாம் கதைக்கிறார்.... ஏன் என யோசிக்கிறீங்களோ?? எல்லாம் அதிராவின் பதிவின் எபெக்ட் தேஏஏஏஏஏஎன் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ

ஜெய்லானி said...

@@@athira --//இப்ப பாருங்க ஜெய்..லானி எவ்வளவு நல்லபிளையாகிட்டார் வைரம் பற்றி எல்லாம் கதைக்கிறார்.... ஏன் என யோசிக்கிறீங்களோ?? எல்லாம் அதிராவின் பதிவின் எபெக்ட் தேஏஏஏஏஏஎன் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ//


இப்படி ஓட விட்டு அடிச்சா என்ன பன்றது. ஹி...ஹி..

Mahi said...

அருமையான பாடல்..அழகான நீதிக்கதை.அசத்தறீங்க ஸாதிகாக்கா!

சிநேகிதன் அக்பர் said...

கதை அருமையா இருக்கு. பாடலும் அருமை. எனக்கு பிடித்த பாடலும் கூட.

Vijiskitchencreations said...

Nice story. I like the song too,
It is very very meaningful.
Happy Tamil New Year

vanathy said...

ஸாதிகா அக்கா, கதை நல்லா இருக்கு. என் பிள்ளைகளை தினமும் கதை சொல்லியே படுக்க வைப்பேன். நாளை இந்தக் கதை தான் சொல்லப் போகிறேன். இன்னும் கதைகள் தொடர்ந்து எழுதுங்கோ.

மங்குனி அமைச்சர் said...

//// athira said...

ஸாதிகா அக்கா இதைக்கவனிக்கல்லே நீங்க..//மங்கு இதுக்கு என்னா கமண்ட்ஸ் போடலாம் ................
ஏதாவது எடக்கு மடக்கா போட்டா கூட்டமா சேந்து கும்மியடிசுடுவாங்க , ஏன்னா இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் , /// இந்தப் பயம் எப்பவும் இருக்கோணூஊஊஊஊஉம்.../////


நீங்க தான் அந்த ரவுடியா , பாவம் நானு பிளீஸ் ஒன்னும் பண்ணிடாதிங்க , ரொம்ப பயமா இருக்கு , இனிமேல் நல்ல புள்ளையா நடந்துக்கிறேன் , நீங்க பாக்கவே டெர்ரரா இருக்கிக , இந்த ஒருவாட்டி மன்னிச்சு விட்ருங்க , பிளீஸ் , பிளீஸ் , பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

athira said...

ஹா.....ஹா...ஹா.... ஸாதிகா அக்கா பெரிய டவலாத் தாங்கோ.... எல்லாம் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான்....

///இந்த ஒருவாட்டி மன்னிச்சு விட்ருங்க , பிளீஸ் , பிளீஸ் , பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....///எம்பிக்கே இந்த நிலைமை வந்திட்டுதே....

ஜெய்..லானி!!! இனி உங்கட கனவு நனவாகிடும்... அதாவது... விலைவாசியை நாங்களாகவே குறைச்சிடலாம்....

பி.கு: ஸாதிகா அக்கா நான் இன்றே அமெரிக்கா பயணம், ஐஸ்லாண்ட் புகையில(நியூஸ் பார்த்திருப்பீங்கள்) அகப்பட்டாலும் பறவாயில்லை, ஸ்பெஷல் பிளேனில போகிறேன் எனச் சொல்லிடுங்கோ. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Jaleela Kamal said...

அதிரா மங்குனி ரொம்ப பிலீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச் போட்டுட்டர் அகையால் எனக்காக விட்டுடுங்கோ.
அட நல்ல புள்ளைன்னாலும் இவ்வ்ளோஓஓஓஒ வாஆஆஆ

மனோ சாமிநாதன் said...

கதை மிக நன்றாக இருக்கிறது, ஸாதிகா!
மேலும் இது போன்ற நல்ல கருத்துக்களைத் தொடருங்கள்!!

Asiya Omar said...

kathai nalla irukku shadiqah.

ஜெய்லானி said...

நாகூர் ஹனிஃபாவின் பாடலையும் கடைசியில் (யூ டியூப் ) இனைத்ததுக்கு நன்றி..!!!

எல் கே said...

:) arumai . nalla iruku ungal eluthu.. todaratum ungal pani :)

எல் கே said...

//உங்களுக்கு சுயமரியாதையை
கொடுங்கள்!
மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//
ithu romba nalla irku

Ahamed irshad said...

அருமையான கதை..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன.

அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி ஒரு கோரிக்கையுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது, சகோதரர் அதிரைகாரன் எழுதியது சென்ற பாருங்கள் http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html தங்கள் கருத்தை பதியுங்கள், மற்ற தமிழ் இணைய ஆர்வளர்களுக்கும் உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

கணினித்துறையில் தமிழுக்காக பல சேவை செய்த ஒரு தமிழருக்கு சிறிய அங்கீகார கிடைப்பதற்கான ஒரு முயற்சி (campaign)

மாதேவி said...

இறைநம்பிக்கை ஊட்டும் நல்ல கதை.

இந்தப்பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல்.

நிறையத்தடவை கேட்டிருக்கிறேன்.

Anonymous said...

\\பத்திரிகைகளி கதையெழுதுற உங்களுக்கு இங்க கதையெழுதுறதென்ன கஷ்டமா? நல்லா எழுதிருக்கீங்க.\\

அட, அதான் மேட்டரா? மாஷா அல்லாஹ் நல்ல கதை .. நமக்கு பிரச்சினை வரும்போது அந்த நேரத்தில் கண்டதையும் யோசிச்சிட்டு அதை பத்தியே தான் நினைச்சிட்டு இருப்போமே ஒழிய கொஞ்ச நேரம் உட்கார்ந்து அல்லாஹ்விடம் உதவி கேட்க தோணாது.. நம்முடைய வாழ்க்கைய நல்லா அமைக்கிறதுக்கு ரொம்ப தேவை அல்லாஹ்விடம் மட்டுமே இறைஞ்சுதல் தான்... அதை நல்லா சொல்லிருக்கீங்க..

கடைசியில குரான் வசனமோ அல்லது நபி சல் சொன்ன ஏராளமான பொன்மொழிகளையோ ஒன்றையோ சொல்லலாமே!

SUFFIX said...

படிப்பினை தந்த சூப்பரான கதை!!

ஸாதிகா said...

உங்கள் பதிவின் எஃபக்டா..ஐயோ ..நான் வரலே அதிரா.நீங்க ஆச்சு ஜெய்லானி ஆச்சு.(எனக்கு முன்பாக ஜெய்லானி வந்து பின்னூட்டி விட்டார்.)

ஸாதிகா said...

ஜெய்லானி//இப்படி ஓட விட்டு அடிச்சா என்ன பன்றது. ஹி...ஹி.//இப்படி புறமுதுகு காட்டலாமோ???(அப்பா..பற்ற வைத்தாச்சு)

ஸாதிகா said...

வந்து பின்னூட்டியதற்கு மகிழச்சி மகி.நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

ஸாதிகா said...

அக்பர்,வருகைக்கு நன்றி.இது அனைவருக்கும் பிடித்த பாடல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஸாதிகா said...

உண்மைதான் விஜி,மிகவும் அர்த்தமுள்ள பாடல்.தனிமையில் அமர்ந்து ஆழ்ந்து கேட்க்கும் பொழுது கண்கள் குளமாகிவிடும்.

ஸாதிகா said...

ரொம்ப சந்தோஷம் வானதி.உங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக இக்கதை சொல்லுங்கள்.நினைவு வரவர இது போல் கதை இனி வரும்.நன்றி.

ஸாதிகா said...

மங்குனி சார்,புரஃபைல் போட்டோவில் ராஜாதிராஜ ராஜ கம்பீர சூராதி சூரர் அசல் ரவுடி ராஜாவாக மின்னுகின்றீர்கள்.ஒரு பூஸுக்கு போய் இப்படி பயந்து கொண்டு..ஷேம் ஷேம் ..பப்பி ஷேம்.(பூஸ் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சபத்ததில் காது டமாரம் ஆகி விட்டது)

ஸாதிகா said...

அதீஸ்..ஐஸ் லேண்ட் போய்ட்டு அவசியம் பயணக்கட்டுரை எழுதிடுங்கோ..அங்கே வைத்து..ஸாதிகா அக்கா....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்..கிக்கிக்கிக்கிக்கிகி போடக்கூடாது?ஒகை அதிரா???

ஸாதிகா said...

ஜலி,மங்குனிக்கு டைனோசர் ஆம்லட் போட்டு கொடுத்துட்டு இத்தனை சப்போர்ர்ட்டா?அதீஸ் மனசு வைக்கட்டும்.

ஸாதிகா said...

மனோ அக்கா,வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.உங்கள் பின்னூட்டம் இன்னும் இது போல் எழுதவே ஆவலைத்தூண்டுகின்றது.நன்றி.

ஸாதிகா said...

ஆசியா,என்ன டெலிகிராம் ஸ்டைலில் பின்னூட்டம்.கிளம்பியாச்சா?

ஸாதிகா said...

ஆம் ஜெய்லானி..நான் கேட்டு ரசிக்கும் இப்பாடல் இந்த லின்க் அறியாதவர்களுக்கு கிடைக்கட்டுமே என்று தான் .இப்போதெல்லாம் இப்பாடலை ஓடவிட்டுக்கொண்டே தான் உட்கார்ந்து பொட்டித்தட்டிக்கொண்டு இருக்கிறேன்.உற்சாக பங்களிப்புக்கு நன்றி.

ஸாதிகா said...

எல்.கே முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

அஹ்மது இர்ஷாத்..பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மாதேவி,வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

நாஸியா.கருத்துக்கு மிக்க நன்றி.குர் ஆனின் கட்டளையையும்,நபிமொழியின் கருத்தையும்தானே பாடலாக பாடப்பட்டுள்ளது. இருப்பினும் உங்கள் அசைப்படி ஒரு குரான் ஆயத்தை வைத்தோ,நபிமொழியை கருவாக வைத்தோ கதை ஒன்றை போடுகின்றேன்.ஐடியாவிற்கு நன்றி.

ஸாதிகா said...

சகோ ஷஃபி,கருத்துக்கு மிக்க நன்றி

shortfilmindia.com said...

:) கேபிள் சங்கர்

செந்தமிழ் செல்வி said...

ஸாதிகா,
நலமா? எப்படி இருக்கு பயணம்?

கதை ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
தாமதமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

கதை அருமை.

அன்புடன் மலிக்கா said...

வரிகளில் நம்பிக்கை மிளிர்கிறது அக்கா.

நீங்க பத்திரிக்கைகளில் கதை எழுதுறீங்களாக்கா? எந்த பத்திரிக்கையில் ஆவல்தான் தெரிந்துகொள்ள..

இதையும் பாருங்க..
http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...
எழுத்து அருமை..கதையும் நல்லா இருக்கு..
தொடருங்கள்...

அன்புடன்
ரஜின்

எனது வளைப்பூவை காண
http://sunmarkam.blogspot.com/

மின்மினி RS said...

என்னோட கதையை கேக்க வரலியே...

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன அடுத்த பதிவே காணோம்???... ஆவலுடன் ஸ்டார்ஜன்.

ARAMEX EXPOSED said...

துவேசம் காரணமாக பிழையான தகவல்களை போலிஸ்க்கு கொடுத்து சகோதரி சாராவை ஒருமாதகாலம் தடுப்புக்காவலில் வைத்த அராமெக்ஸ் ARAMEX சேவையினை கண்டிப்போம்.


விபரங்கள்
http://www.facebook.com/pages/ARAMEX-limited-ARAMEX-works-against-ISLAM/115392891817903
இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.