March 26, 2010

விருதும்,பிடித்த பத்து பின்னூட்டங்களும்.





தங்கை மேனகா விருதாகட்டும்,தொடர்பதிவாகட்டும் இந்த ஸாதிகா அக்காவை எப்பொழுதும் மறக்காமல் தவறாமல் பகிர்ந்துகொள்ளும் அன்பை எண்ணி நெகிழ்வடைகிறேன்.தங்கை மேனகா உங்கள் விருதுக்கும்,அழைப்புக்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.மேனகா அன்புடன் அளித்த விருதை சந்தோஷத்துடன் இவ்விடுகையில் வெளியிடுகிறேன்.

மேலும் தங்கை ஜலியும்,சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களும் இந்த விருதை அன்புடன் வழங்கி இருக்கின்றனர்.இருவருக்கும் என் அன்பு நன்றி!

பிடித்த பத்து பின்னூட்டம்‍.இது தோழி ஆசியாவும் இத்தொடருக்கு அழைத்து இருந்தார்.ஆசியா நன்றி.

என் பதிவுகளுக்கு அநேக வலையுலக சகோதர,சகோதரிகள் பின்னூட்டம் இடுகிறார்கள்.அத்தனையும் முத்துக்கள்.பிடித்து இருந்ததால்தான் பப்ளிஷ் கொடுக்கிறேன்:‍)(பிடிக்காவிட்டால் பப்ளிஷ் கொடுக்கமாட்டேனே)இது பிடிக்கும்,இது பிடிக்காது என்று பிரித்தறிந்து சொல்லத்தெரியவில்லை,மனமும் வரவில்லை.

1.என்னை தட்டிக்கொடுத்தும்,குட்டிக்கொடுத்தும் வரும் பின்னூட்டங்கள்.

2.சிரிக்க வைக்கும்,சிந்திக்க வைக்கும் பின்னூட்டங்கள்.

3.நீண்ட,நச் என்ற பின்னூட்டங்கள்.

4.அன்புடனும்,மகிழ்ச்சியுடனும் வரும் பின்னூட்டங்கள்.

5.உரிமையுடனும்,பாசத்துடனும் வரும் பின்னூட்டங்கள்.

6.அதட்டியும்.மிரட்டியும்(செல்லமாகத்தான்)வரும் பின்னூட்டங்கள்.

7.தோழமையுடனும்,சகோதரபாசத்துடனும் வரும் பின்னூட்டங்கள்.

8.கிண்டலுடனும்,நக்கலுடனும் வரும் பின்னூட்டங்கள்.

9.அதிர வைக்கும் பின்னூட்டங்கள்.:‍)

10.சைலண்ட் ரீடராக இருந்து பார்த்து நேரிலேயே என்னை கலாய்க்கும் என் உடன் பிறந்தோர்கள்,உற்றோர்களின் வாய்வழிப்பின்னூட்டங்கள்.

நன்றி!நன்றி!!நன்றி!!!

26 comments:

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நல்ல சூப்பரா யோசித்து சொல்லி இருக்கீங்க,

நானும் என்ன போடுவது என்று இன்னும் யோசிக்கிறேன்.
எல்லோரையும் சொல்லனுமேன்னு அழகா சொல்லி இருக்கீங்க.

Jaleela Kamal said...

விருதுக்கு வாழ்த்துக்கள். மேலும் பயனுள்ள் பகிர்வுகள் தர வாழ்த்துகக்ள்

Asiya Omar said...

விருதிற்கு வாழ்த்துக்கள்.பின்னூட்ட கருத்தும் சூப்பர்.

ஜெய்லானி said...

பரவாயில்லை , யார் மனசும் நோகாமல் தப்பிச்சுட்டீங்க !! அவார்டுக்கு வாழ்த்துக்கள்.. பத்து பிண்ணூட்டமும் நெம்பர் ஒன்....

athira said...

கொமெண்ட் எதுவும் சொல்லமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):).

இருப்பினும் ஸாதிகா அக்கா படைத்து குலசாமியைக் குளிர வைத்திட்டீங்கள் வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

எனக்கு எல்லாம் பிடித்து இருக்கு

Chitra said...

2.சிரிக்க வைக்கும்,சிந்திக்க வைக்கும் பின்னூட்டங்கள்.

..........கிச்சு....கிச்சு..... ஹி,ஹி,ஹி,ஹி...... ஹா,ஹா,ஹா,ஹா.... ஹோ,ஹோ,ஹோ.ஹோ...... !!!!

Now, think, think, think!!!!

நட்புடன் ஜமால் said...

விருதுக்கு வாழ்த்துகள்!

பத்தும் அருமையா சொல்லிட்டீங்க

பிடித்த பின்னூட்டர்கள்ன்னு தலைப்பு இருந்திருக்கனுமோ!!!

மங்குனி அமைச்சர் said...

.......?
.......!
......?
......?
.......!!!
......???????

மின்மினி RS said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா. நலமா.., நான் புதிதாக பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். ஆலோசனைகள், குறிப்புகள் தருவீங்களா... உங்கள் கருத்துக்களை வேண்டியவளாக உங்கள் மின்மினி.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா கூட என் மலர் விருதையும் சேர்த்துகக்ங்க,
உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பின்னூட்டங்கள் பற்றிய உங்கள் பதிவு,
புதுமையான விளக்கங்களுடன் இருந்தது.

விருதுக்கு வாழ்த்துக்கள், அதாவது
விருது பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

ஜலி கருத்துக்கு நன்றி.

ஆசியா கருத்துக்கு நன்றி.

ஜெய்லானி,//பரவாயில்லை , யார் மனசும் நோகாமல் தப்பிச்சுட்டீங்க //ஹி..ஹி..கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே.கண்டுபிடிப்புதிலகம் அவார்ட் தருகிறேன்.நன்றி.

அதிரா,//கொமெண்ட் எதுவும் சொல்லமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//கொமண்ட் தராவிட்டாலும் ஆஜர் ஆகிவிட்டீர்களே!சந்தோஷம்.நன்றி.
பின்குறிப்பு:அடிக்கடி கோபப்பட்டு கர்ர்ர்ர் என்று பற்களைக்கடித்து ஐம்பது வயதுக்குள பொக்கை ஆகிவிடப்போகிறது.ஜாக்கிரதை அதிரா!

சீமான்கனி,கருத்துக்கு நன்றி!

சித்ரா,கருத்துக்கு நன்றி.பலகோணங்களில் சிரிப்பைக்காட்டி விட்டீர்கள்.இந்த சிரிப்புகளையும் பாருங்கள்.
புவாஹாஹாஹாஹா..இது அட்டகாச சிரிப்பு.
கிக்..கிக்..கிக்..கிக்..கிக்..இது பூஸ் சிரிப்பு.
இஃகி..இஃகி..இது எக்ஸ்பிரஸ் சிரிப்பு.
(பதிவர்களின் சிரிப்புகளைத்தான் இப்போ ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.)

சகோதரர் ஜமால்,கருத்துக்கு நன்றி.//பிடித்த பின்னூட்டர்கள்ன்னு தலைப்பு இருந்திருக்கனுமோ!//இதுவும் நல்ல ஐடியாதான்.

மங்குனி சார்,என்ன இப்படி அமைதிப்பூங்காவாகி விட்டீர்கள்??எதனையும் பார்த்து பயந்து விட்டீர்களா?பேச்சே வர மாட்டேன்கிறது?வீட்டம்மா கிட்டே சொல்லி தாயத்து ஏதாவது மந்திரித்து போடச்சொல்லுங்கள்.வரவுக்கு நன்றி.

மின்மினி,வ அலைக்கும் வஸ்ஸலாம்.முதலில் என் அன்பான வாழ்த்துக்களைப்பெற்றுக்கொள்ளுங்கள்.மற்ற பதிவர்களின் இடுகைகளை நிறைய படியுங்கள்.பின்னூட்டம் கொடுங்கள்.உங்கள் ஆக்கங்களை படிக்க ஆவலாக உள்ளோம்.நன்றி.

ஜலி அன்பான விருத்துப்பூவை பெற்றுக்கொண்டேன்.நன்றி.

சகோ.நிஜாமுதீன்,கருத்துக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

//இது பிடிக்கும்,இது பிடிக்காது என்று பிரித்தறிந்து சொல்லத்தெரியவில்லை//

உண்மைதான் அக்கா. டெம்ப்ளேட் பின்னூட்டமாகவே இருந்தாலும் நமக்கு ஊக்கம் தரத்தானே செய்கிறது? அதைப் போடவும் நேரமும், மனமும் வர வேண்டுமே?

Menaga Sathia said...

பிடித்த பிண்ணுட்டங்களை அழகா சொல்லிருக்கிங்க.வெல் டன் அக்கா!! நானும் எப்படி எழுதறதுன்னு ரொம்ப குழம்பி போனேன் ஆனா நீங்க அழகா எழுதி பின்னிட்டீங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஸாதிகா

ஆஹா, விருது வாங்கியாச்சா.. நானும் உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

பின்குறிப்பு:அடிக்கடி கோபப்பட்டு கர்ர்ர்ர் என்று பற்களைக்கடித்து ஐம்பது வயதுக்குள பொக்கை ஆகிவிடப்போகிறது.ஜாக்கிரதை அதிரா!/// நீங்க வேற ஸாதிகா அக்கா:) புளியைக் கரைக்கிறீங்க:), கர்ர்ர் சொன்னதில நாக்குக் கடிபட்டு.... நாற்பதைத் தொடும்வரையாவது நாக்கிருக்குமோ எனச் சந்தேகமாக இருக்கெனக்கு:):).

சிநேகிதன் அக்பர் said...

//இது பிடிக்கும்,இது பிடிக்காது என்று பிரித்தறிந்து சொல்லத்தெரியவில்லை,மனமும் வரவில்லை.//

சரியாக சொன்னீர்கள். பின்னூட்டம் என்றாலே ஊக்கத்துக்குதானே.

விருது பெற்றதுக்கு வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

//உங்களுக்கு சுயமரியாதையை
கொடுங்கள்!
மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//

அருமை.

Mahi said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஸாதிகாஅக்கா!
உங்கள் வலைப்பூ நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

ஸாதிகா கலக்கிட்டிங்க. பத்தும் பத்தா பத்மஸ்ரீ வாங்க ரெடியாகிட்டிங்க. சூப்பர். விருதுக்கு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

சகோதரர் அக்பர் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மஹி,உங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

விஜி,என்னப்பா இது பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்கின்றீர்கள்.உங்கள் வாழ்த்துக்கும்,அன்புக்கும் நன்றி!

ஸாதிகா said...

ஆஹா..அதிராவுக்கு பயம் பிடித்துக்கொண்டதா?நாற்பதிலேயே பல் இல்லாத பொக்கைவாய் அதீஸ் தங்கச்சியை கற்பனை செய்து பார்க்கிறேன்.கிக்..கிக்..கிக்..கிக்..கிக்..
மறுபடி கர்ர்ர்ர்..க்கு முன்னாலே ஓடிக்கறேன்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா.

மின்மினி RS said...

/// 4.அன்புடனும்,மகிழ்ச்சியுடனும் வரும் பின்னூட்டங்கள்.

5.உரிமையுடனும்,பாசத்துடனும் வரும் பின்னூட்டங்கள்.///

அதானே எங்களுக்கு வேணும்..

அன்புடன் மலிக்கா said...

விருது பெற்றதுக்கும் அழகான பின்னூட்டவரிசைக்கும் வாழ்த்துக்கள்.