தமிழகத்தின் தென் கிழக்குப்பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து,கன்னியாகுமரி வரை உள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட மன்னார்வளைகுடா கடற்பரப்பு ராட்சத அலைகளற்ற அதிக ஆழமில்லாத அமைதியான கடற்பகுதி.
கடல் வாழ் உயிரினங்கள்,கடற்தாவரங்களின் சரணாலயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.இங்கு அரிய கடல் வகை தாவரங்கள்,உயிரினங்கள் அதிகம் காணப்படுகின்றது.மீனினங்கள் மட்டும் 400 வகைகளுக்கும் மேலாக கிடைக்கக்கூடிய மீன்வளமிக்க கடற்பரப்பு பகுதி இது.தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 20% மீன்கள் இங்குதான் பிடிக்கப்படுகின்றது.
மன்னார் வளைகுடா பகுதியில் ஆராவாரமற்ற அலைகள் இருப்பதால் இந்த அப்பாவி,அப்பிராணிகள் இங்குதான் அதிகளவில் வாழ்ந்து வந்தது சமுத்திரப்பசு என்றும்,ஆவுளியா என்றும் அழைக்கப்படும் .ஆங்கிலத்தில் ( SEA கௌ,SIRENIA )அழைக்கப்படுகின்றது.
கடல் வாழ் தாவரங்களை உண்பதாலும்,மிகவும் அமைதியாக சாந்தமாக இருப்பதாலும் இதனை சமுத்திரப்பசு அல்லது கடல் பசு என்று பசுவின் பெயர் சொல்லி அழைக்கின்றனர் தென்மாவட்டத்தினர்,மற்றும் மீனவர்கள் ஆவுளியா என்றும் அழைப்பார்கள்.`
படகுகள்,பெரிய வகை மீனினங்கள் இந்த ஆவுளியாவை நோக்கி வந்தால் கடுகள்வேனும் தன் எதிர்ப்பை காட்டாமல்,சுற்றி,சுற்றி தன் எதிர்பாளர்களை வலம் வரும் ஐயோ பாவப்பட்ட பிராணி எனலாம்.
இதன் இறைச்சி அதிக சுவைஉள்ளதால் இதற்கு அதிகம் கிராக்கி உள்ளது.ஒரு கிலோ இறைச்சி சுமார் முன்னூறு வரை விற்பனைசெய்யப்படும்.அன்று ஆவுளியா பிடிபட்டுவிட்டது என்றால் அப்பொழுதெல்லாம் அமர்க்களப்படும்.
இவற்றின் பற்கள் நச்சு முறிவுகளுக்கும்,தலை தலை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்,இறக்கைப்பகுதி மலசிக்கல் மருந்துக்கும்,தோல் தோல்பொருட்கள் செய்யவும் பயன் பட்டு வந்தது.
இந்த சாதுவான கடல்விலங்கு சுமார் முன்னூறு கிலோவில் இருந்து 450 கிலோவரை எடைகொண்ட கிட்டத்தட்ட ஒரு யானையின்பருமன் உள்ள ஒரு பிரமாண்டமான விலங்காகும்.நாற்பது ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது.
கடல்குதிரை,அட்டை,சங்கு,கடல் ஆமை,சுறா போன்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இப்பொழுது அழிந்து வரும் ஆபத்தில் இருப்பதால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சில கடல் வாழ் உயிரினங்களில் இந்த கடல் பசு முதன்மை வகுகின்றது.
இவற்றைப்பற்றி துப்பு கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றும் அரசு அறிவித்துள்ளது.கடலில் இப்பொழுது இவ்வகை பிராணி மிகக்குறைந்த அள்வில் இருப்பதால் இதனை உயிர் உள்ள நிலையிலோ,உயிரற்ற நிலையிலோ வைத்து இருந்தால் சட்டப்படி குற்றமாகும்.
சில பகுதிகளில் ரகசியமாக பிடிக்கப்பட்டு,ரகசியமான முறையில் விறகப்பட்டு வரும் அவலம் நடைபெற்று வருகிறது.அரசாங்கம் எவ்வளவோ முன்னெச்சிரிக்கையா இருந்தாலும் மீனவர்களும்,பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இவ்வகை உயிரினக்கள் காக்கப்படும்.
இதை தடுக்க சட்டரீதியான வழிமுறைகள் இருந்தும் மீனவர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. கடல்பசுக்கள் இறந்து கரை ஒதுங்கும் போது தான், அவை தற்போது இருப்பதே உறுதி செய்யும் அவல நிலை உள்ளது. இதை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயர் கோள காப்பக அறக்கட்டளை முன் வர வேண்டும்.
அரிய வகை உயிரினங்கள் அழிய மனிதர்கள் காரணமாக இருக்காமல் அதன் உயிர் காத்து,கடல் வளத்தைப்பெருக்குவது நம் கடமைகளில் ஒன்றாக எண்ணி செயல்படுவோம்.
Tweet |
41 comments:
அட, அறிவியல் பதிவும்!! அக்கா, நீங்க சளைச்சவங்க இல்லைன்னு தெரியுது!!
//மன்னார் வளைகுடா பகுதியில் ஆராவாரமற்ற அலைகள் இருப்பதால் இந்த அப்பாவி,அப்பிராணிகள் இங்குதான் அதிகளவில் வாழ்ந்து வந்தது//
மீனுங்களச் சொல்றீங்களா, மனுஷங்களைச் சொல்றீங்களாக்கா? ஹி.. ஹி..
சில தெரியாத விஷயங்களும் தெரிந்துக் கொண்டேன். நன்றி.
எப்படி தண்ணீர் சிக்கனம் தேவையோ அதுபோலத்தான் உயிரினங்களை பாதுகாப்பதும்.. இன்றைக்கு எத்தனை உயிரியல் பூங்காக்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. உங்களுக்கு தெரிந்திருக்கும் திருநெல்வேலியில் உள்ள ச்யன்ஸ் சென்டர் ஆரம்பிக்கும்போது ஏகப்பட்ட விலங்குகள் பறவைகளும் நிறைய இருந்தன. ஆனால் இப்போது எங்கே எல்லாம் என்று கேட்ககூடிய நிலையில் வைத்திருக்கிறார்கள்.
உயிரினங்களை பாதுகாப்பு நாட்டுக்கு மிக அவசியம். அப்போதான் இனிவரும் சந்ததியினருக்கு பயன்பாடாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.
எப்படி தண்ணீர் சிக்கனம் தேவையோ அதுபோலத்தான் உயிரினங்களை பாதுகாப்பதும்.. இன்றைக்கு எத்தனை உயிரியல் பூங்காக்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. உங்களுக்கு தெரிந்திருக்கும் திருநெல்வேலியில் உள்ள ச்யன்ஸ் சென்டர் ஆரம்பிக்கும்போது ஏகப்பட்ட விலங்குகள் பறவைகளும் நிறைய இருந்தன. ஆனால் இப்போது எங்கே எல்லாம் என்று கேட்ககூடிய நிலையில் வைத்திருக்கிறார்கள்.
உயிரினங்களை பாதுகாப்பு நாட்டுக்கு மிக அவசியம். அப்போதான் இனிவரும் சந்ததியினருக்கு பயன்பாடாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.
நம்ம பயலுக எத கெடைச்சாலும் விடமாட்டைங்க போலிருக்கே....
///மீனுங்களச் சொல்றீங்களா, மனுஷங்களைச் சொல்றீங்களாக்கா? ஹி.. ஹி.///என்ன ஹுசைனம்மா இப்படிக்கேட்டுட்டீங்க.என்னைப்போல் அப்பாவிகளும் நிறைய இருக்காங்கதான்.வருகைக்கும்நன்றி.
கலக்கல்
///உயிரினங்களை பாதுகாப்பு நாட்டுக்கு மிக அவசியம். அப்போதான் இனிவரும் சந்ததியினருக்கு பயன்பாடாக இருக்கும்.///உண்மைதான் ஸ்டார்ஜன்.எதிர்காலத்தை யோசிக்காமல் மீனவர்களும் பணம் காசுக்கு ஆசைப்பட்டு செய்யும் காரியங்களுக்கு மக்களும் உடந்தையாக இருப்பது வருந்ததக்கது.
இந்த இடுகை மூலம் இப்பிராணி பற்றி தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி ஜெய்லாணி.
ஜெரி ஈசானந்தா சார்.உண்மையான வரிகள்தான்.நம்மாட்கள் எதையும் விடமாட்டார்கள்.ஒன்று சொல்லுவார்களே ஓசியில் பினாயில் கிடைச்சால்கூட குடித்து விடுவார்கள் என்று...!
நன்றி அண்ணாமலை.
புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி சாதிகா அக்கா. தொடரட்டும் சேவை
ஆவுளியா - இந்த பெயர் கேள்வி பட்டதுண்டு - இது தான் அது என்று இப்பொழுது தான் தெரிந்துகொண்டேன்
பகிர்வுக்கு நன்றி.
நல்ல அக்கறையான பதிவு..
புதிய தகவல்கள்
மன்னார்வளைகுடா உண்மையில் நிறைய உயிரினங்கள் ,பவளபாறைகள் கொண்ட ஒரு இடம்
சமுத்திரப்பசு பற்றிய பதிவு கொஞ்சம் யோசிக்க வைத்தது.க்டல் வாழ் உயிரினங்களை பேணி பாதுகப்பது தான் கஷ்டம்.
தங்கை கவி வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
சகோதரர் ஜமால்,கருத்துக்கு நன்றி.இந்த ஆவுளியா தெந்தமிழ் மாவட்டத்தினருக்கு அதிகமாகத்தெரியும்.என் சிறு வயதில் அடிக்கடி இந்த இறைச்சியை விற்பனை செய்வார்கள்.ஆனால் அந்த அறியா வயதில் கூட நான் சாப்பிட்டது கிடையாது.
சகோதரர் உழவன்(அருமையான பெயரை தெரிவு செய்து இருக்கின்றீர்கள்)முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
///மன்னார்வளைகுடா உண்மையில் நிறைய உயிரினங்கள் ,பவளபாறைகள் கொண்ட ஒரு இடம//உண்மைதான் சகோதரர் சிவசங்கர்.இந்த அரிய வகை பவளப்பாறைகளால் தானே சேது சமுத்திர திட்டம் கிடப்பில் இருக்கின்றது.வறட்சியான மாவட்டமாக எங்கள் மாவட்டம் இருந்தாலும் கடல் வளம் திரட்சியாவே உள்ளது.அதற்கு மனித இனமே எதிரிகளாகிவிட்டன எனும் பொழுதுதான் வருத்தமாக உள்ளது.முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
சூப்பர் அக்கா!! தெரியாத தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி!!
அடே..யப்பா...அசத்தல் ..
வியக்கிறேன்...சட்டவிரோதிகலயும் சுட்டுதான் வைக்க வேண்டும்...
அசத்தலான பதிவு நன்றி அக்கா...
manatees....... I have seen them only in Aquariums and in zoos.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.
ஸாதிகா அக்கா நல்ல தகவல். இதைக் கடல் பசு என்கிறீங்கள், நாம் இதை கடல்சிங்கம் (Sea lion) என்போமே அதுவேறு இது வேறோ?
எம் முன் ஆற்றில் நல்ல கோடையில் சிலர் வந்துபோவார்கள்.
பி.குறிப்பு:
குலசாமிக்கு படைக்கவில்லையோ? சங்கிலி வரப்போகுது ஸாதிகா அக்கா, சட்டத்தை அவமதித்த உங்களை உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்துக்கு ஆஜராகும்படி மேன்மைதங்கிய நீதிபதி(அது நானேதான்:)) உத்தரவிடுகிறார்...:):)
அதி எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
நல்ல பகிர்வு.
கடல் பசுவினம் வாழ்க வளமுடன்.
மேனகா கருத்துக்கு நன்றி.
தம்பி சீமான் கனி//சட்டவிரோதிகலயும் சுட்டுதான் வைக்க வேண்டும்..///உங்கள் பாணியிலேயே நறுக் என்ற பதில்.பெயரைப்பார்க்காமலேயே இது சீமான்கனியின் பின்னூட்டம் என கணித்துவிடலாம்.தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.
சித்ரா கருத்துக்கும்,தொடர் வருகைக்கும் நன்றி.
ஹாய் ..அதிரா,வழக்கம் போல் சந்தேகபார்சலுடன் வந்து விட்டீர்களா?(சந்தேகம் கேட்பதில் சந்தோஷமே)கடல் சிங்கம் வேறு,கடல் பசு வேறு.இதனை ஆங்கிலத்தில் seal என்று அழைப்பர்.இதுவும் பாலூட்டி (mammals) இனத்தை சேர்ந்தது.அமைதியான கடற்பரப்பு பகுதியில் கடல் சிங்கம் இருக்காது.
படையல் செய் என்று உத்தரவு இட்டுவிட்டீர்களே கனம் நீதிபதி அவர்களே.தங்கள் உத்தரவுக்கு கீழ்படிகிறேன்
சகோதரர் ஹைஷ்,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி
//Chitra said...
manatees....... I have seen them only in Aquariums and in zoos.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.//
நாங்கல்லாம் என்னமோ வீட்ல வளகுரமாதிரி , நீங்க பரவாஇல்லை நாங்க போடோ தான் பாத்துருக்கோம்
very nice......
//இதனை ஆங்கிலத்தில் seal என்று அழைப்பர்.இதுவும் பாலூட்டி (mammals) இனத்தை சேர்ந்தது.//
இப்போது புரிந்து விட்டது . அது அண்டார்டிகா போன்ற இடத்தில்தான் அதிகம் இருக்கும் என்று நினைத்தேன்.இப்போது அது தமிழ்நாட்டிலும் இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. நன்றி ஸாதிகாக்கா!!!
ஐயா மங்குனி அமைச்சரே..!இவ்வளவு கஷ்டப்பட்டு சமுத்திரப்பசுவைத்தேடி கண்டு பிடித்து உங்களுக்கெல்லாம் பிலிம் காட்டி இருக்கேன்.ஒரு பாராட்டு கூட இல்லாமல் சித்ராவின் கமண்ட்டுக்கு நக்கல் அடித்து இருக்கின்றீர்களே? ஐயா சாமி..நீங்கள் கடல் பசு மட்டுமில்லீங்க கடல் சிங்கம்,கடல் புலி,திமிங்கலம் என்ன டைனோசர் கூட வளர்ப்பீங்க
விடிவெள்ளி ,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
படையல் செய் என்று உத்தரவு இட்டுவிட்டீர்களே கனம் நீதிபதி அவர்களே.தங்கள் உத்தரவுக்கு கீழ்படிகிறேன்///ஹா...ஹாக்...ஹாஆஆஆஆஅ நீதிபதி சிரிக்கிராராம்... உங்களுக்கு சங்கிலி இல்லை என நீதிமன்றம் உத்தரவிடுகிறது....:) ரொம்ப நன்றி..விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ஸாதிகா நல்ல பதிவு. நானும் அதிராவை போல் தான் நினைத்தேம். கடல் சிங்கம் என்று. ஒ இப்படி கூட இருக்கா?
சமுத்திர பசு பற்றி நானும் நல்ல தெரிந்து கொண்டேன், நல்ல விரிவான பதிவு.
விடிவெள்ளி முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
புரிஞ்சாச்சா.ரொம்ப நன்றி ஜெய்லானி.
அதிரா படைத்துவிட்டேன்.
விஜி வரவுக்கு நன்றி.
ஜலி உங்களுக்கும் நன்றி.
அட, ஆவுலியாவை பற்றிய ஒரு சுவையான பதிவு !!!, இதனை தற்பொழுது பிடிக்க தடை இருந்தாலும் புலால் உன்னும் எவரும் இதனை நெடுங்காலமாக விரும்பி புசித்து வந்தனர் என்பது உண்மை. மன்னார் வளைகுடா பகுதியில் மட்டும் இன்றி இந்த இனம் மலேசியா மற்றும் ஆஸ்த்ரேலியா கடல் பகுதியிலும் வாழ்ந்து வருகிறது, இதனை மலாய் மொழியில் " த்யோங்க்" என்று அழைக்கிறார்கள். இதன் தலை. முகம் ஆகியவை, பசு அல்லது ஒட்ட்கத்தை ஒத்து இருப்பதால், இதனை கடல் பசு, கடல் ஒட்டகம் என்றும் அழைப்பது உண்டு. இதனை தமிழில் ஆவுலியா என்று அழைப்பதன் காரனம், இதன் மூலப் பெயரானா "காவுதர்யா" என்பதானால். பார்ஸி மொழியில் காய் என்றால் பசு, தார்யா என்பது கடல் , ஆக காவுதர்யா என்பது ஆவுதர்யாவாக மறுவி ஆவுலியாக மாறியதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
சோனகன்,ஆவுளியாவைப்பற்றி மேலதிக தகவல் தந்தமைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.ஏன் இப்பொழுது பதிவுகள் போடுவதில்லை?கணினியில் விவசாயம் பண்ணும் நேரத்தில் பதிவைப்போட்டால் எங்கள் சிந்தனைக்கு தீனியாவது கிடைக்கும்.நன்றி.
Post a Comment