அலங்கார பொருட்கள்,வாசனைத்திரவியங்கள்,தலைஅலங்காரப்பொருட்கள்.
சீர்வரிசையின் ஒரு கோணம்
நுங்கு,இளநீருடன் தென்னம்பாளை தெரிகின்றதா?
சீர் வரிசையின் மற்றொரு கோணம்.
சீர் தூக்கிச்செல்லும் பெண்கள்
வரிசையாக செல்கின்றனர்.
திருமணத்தில் பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுக்கும் சீரை (கல்யாணசீர்ப்பலகாரம்) பார்த்தோம்.இப்பொழுது திருமணம் முடிந்து ஓரிரு நாளில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் வீட்டிற்கு அனுப்பும் சீரைப்பாருங்கள்.பெண் வீட்டுசீரில் வெறும் தின்பண்டங்களே இருக்கும்.இங்கு தின்பண்டங்களுடன் மணப்பெண்ணுக்கு உரித்தான பட்டு,டிசைனர்,காட்டன் புடவைவகைகள்,சுடிதார்,நைட்டி,மற்றும் உள்ளாடைகள்,தலைக்கு தேய்க்கும் எண்ணெய் ,ஷாம்பூ ஹேர்கிளிப்ஸ்.ஹேர்பெண்ட் முதல் கால் நகத்திற்கு வைக்கும் மருதாணி வரை தட்டுக்களில் அடுக்கி வைத்து அலங்கரித்து அனுப்புவார்கள்.
குர் ஆன்,முசல்லா,பர்தா முதல் ஹேண்ட் பேக்,அலங்காரப்பொருட்கள்,வாசனைத்திரவியங்கள் இத்யாதி,இத்யாதி..பார்க்கவே கண் கொள்ளாகாட்சியாக இருக்கும்.
இப்பொழுதெல்லாம் வரதட்சணை இன்றி அநேக திருமணங்கள் நடைபெறுகிறது.அப்படி நடக்கும் திருமணங்களில் திருமணசெலவைப்பார்க்கப்போனால் மணமகள் வீட்டை விட மணமகன் வீட்டினருக்குத்தான் செலவு அதிகமாகும்.உதாரணத்திற்கு இந்த சீரையே எடுத்துக்கொள்ளுங்கள்.மணமகள் வீட்டிலிருந்து வரும் மொத்த சீருக்கு ஆகும் செலவை விட மணமகன் வீட்டில் இருந்து வரும் ஒரே ஒரு தட்டுக்கு (பட்டுப்புடவை வைத்திருக்கும் தட்டை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்)செலவு அதிகமிருக்கும்.
அல்வா,பூந்தி,மைசூர்பாகு,ஜிலேபி,லட்டுகாராசேவு,மிக்சர்,முறுக்கு,பொரி,அவல்,கடலை வகைவகையான பழங்கள்,குடங்களில் பால் சேர்த்த சர்பத் அல்லது ஜூஸ்,இளநீர்,நுங்கு இத்யாதி..இத்யாதி..
இன்னொரு தட்டில் தென்னம்பாளை இருப்பது வியப்பைத்தருகிறது அல்லவா?மணமகன் வீட்டில் இருந்து வரும் தென்னம்பாளையை கத்தியால் பாளையின் மையத்தில் வெட்டி எடுத்தால் அழகான தென்னம்பூக்கள் கொத்தாக வெளிப்படும்.பார்க்கவே அழகாக இருக்கும்.அதனை கையால் பிரித்து விட்டு குடத்தில் சொருகி வைத்தால் அழகு மிகு பூங்கொத்துப்போல் காட்சி அளிக்கும்.இதனை அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு இரு புறமும் வைத்து இருப்பார்கள்.சுற்றி இருக்கும் வாண்டுகள் தென்னம்பூவை விரல்களால் உதிர்த்து மணமக்கள் மேல் எரிந்து மகிழ்வார்கள்.
இந்த சீர்தட்டுகளை கூலிக்கு சுமக்கும் பெண்களை அமர்த்தி அவர்கள் வரிசையாக சுமந்துகொண்டு மணமகள் வீட்டிற்கு எடுத்துசெல்வார்கள்.இந்த திருமணசீர்சுமக்கும் பெண்களுக்கு சீர்தட்டு சுமப்பதென்றால் ஏக குஷி.ஏனெனில் நாள் முழுக்க கூலி வேலை செய்தாலும் கிடைக்கக்கூடிய கூலியை விட சுமார் அரை மணிநேரத்தில் தட்டுகளை சுமந்து எடுத்துசெல்வதற்கு இரு தரப்பினர் வீடுகளில் இருந்தும் கூலி அதிகமாக கிடைக்கும். மட்டுமல்லாமல் திண்பண்டங்களும் கைநிறைய வாங்கிச்செல்லுவார்கள்.சீரை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டிற்குள் நுழையும் பொழுது இவர்கள் குலவை இட்டும் மகிழ்வார்கள்
இந்த சீரைப்பார்க்க மணமகள் வீட்டினர் தமக்கு நெருங்கியவர்களை அழைத்து வந்து காட்டிமகிழ்வர்.மணமகன் வீட்டிலிருந்து வரும் இந்த சீர் ஐட்டங்களை மணமகள் வீட்டினர் திண்பண்டங்கள்,பழங்கள்,சர்பத் ஆகிய உண்ணக்கூடிய பதார்த்தங்களை சிறிய,சிறிய பாலித்தின் பைகளில் தனித்தனியாக நிரப்பி சொந்தம்,பந்தம் அக்கம் பக்கம் அனைவரது வீட்டினருக்கும் அனுப்பி மகிழ்வார்கள்.
Tweet |
36 comments:
நிறைய படங்களோடு செய்திகளும்
இணைந்து படக் கட்டுரையாகவே
அமைந்துள்ளது. விளக்கங்களும் வெகு
அருமை!
It is interesting to know about the culture, traditions and customs. Thank you for sharing it with us. Very nice.
ஸாதிகா அக்கா திருமணச்சீர் வரிசை புதுமையாக இருக்கு. எனக்கொரு சந்தேகம், அதைத் தூக்கிச் செல்வதற்கென வேலைக்கு ஆட்கள் பிடிப்பார்களோ?.
அந்த கோல்ட் கலர் சாறியேதான் என் மணவறை சாறியும்... கூறைசாறி உடுப்பதற்கு முன் உடுப்பது... படத்தில் இருக்கும் இரண்டு சாறிகளுமே சூப்பர்கலர். இது யாருடைய சீர்வரிசை... ஸாதிகாஅக்காவுடையது???? அதி எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அழகா இருக்கு , பழைய நினைவுகள் கண் முன்னே வருகிறது.
கலக்குங்க.
//அல்வா,பூந்தி,மைசூர்பாகு,ஜிலேபி,லட்டுகாராசேவு,மிக்சர்,முறுக்கு,பொரி,அவல்,கடலை வகைவகையான பழங்கள்,குடங்களில் பால் சேர்த்த சர்பத் அல்லது ஜூஸ்,இளநீர்,நுங்கு இத்யாதி..இத்யாதி..//
ஆஹா அக்கா இவ்ளோ ஐடம் இருக்கா....அப்போ...ஓகே...
நிறைய விஷயம் தெரிந்துகொண்டேன்....நன்றி....
என்னைய ஏமாத்திப்புட்டாய்ங்களா
;)
சகோ நிஜாமுத்தீன்,
உடன் பதிவுக்கும்,ஓட்டுக்கும் நன்றி.
சகோ கீதா டீச்சர்,
கருத்துக்கு நன்றி.இதே போல் உங்கள் பக்கத்து திருமணங்கள்,சீர்வகைகளையும் உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளலாமே?
தங்கச்சி அதிரா,
///இது யாருடைய சீர்வரிசை... ஸாதிகாஅக்காவுடையது????/// இந்த லொள்ளுதானே வேண்டாங்கறது..
///எனக்கொரு சந்தேகம், அதைத் தூக்கிச் செல்வதற்கென வேலைக்கு ஆட்கள் பிடிப்பார்களோ?.///ஏம்பா.விடிய,விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்ன கதையாக அல்லவா இருக்கு இப்ப நீங்க கேட்கிறது..!:-)
சகோ ஜெய்லானி,மலரும் நினைவுகளைத்தூண்டி விட்டுவிட்ட்தா?மிக்க சந்தோஷம்.
சகோ ஜெரி ஈசானந்தா,கருத்துக்கு மிக்க நன்றி!
சகோ சீமான் கனி ,நிறைய ஐட்டங்கள் இல்லாமல் சீர் எப்படி நிரப்பமாகும்?கருத்துக்கு நன்றி.
சகோ ஜமால்,
///என்னைய ஏமாத்திப்புட்டாய்ங்களா///ஹஹ்ஹா..இன்னும் வருடங்கள் கழித்து மகளுக்கு இப்படி சீர்களை வாங்குங்கள்.அதே போல் இனி பிறக்கப்போகும் மகனுக்கும் திருமணத்தில் சீர் கொடுத்து மகிழுங்கள்.மறக்காமல் எங்களுக்கும் சீர் ஒரு பார்சல் அனுப்பிவையுங்கள்.
ஸாதிகா அக்கா... கிக் கிக் கிகீஈஈஈ.. அதிராவோ கொக்கோ? இரண்டாந்தரம் படித்துக் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுட்டேன்... முதல்தரமும் வரிவரியாத்தான் படிச்சேன்.. பட்...மிஸ்டாகிடிசீஈஈஈ
பி.கு:
ஏன் ஸாதிகா அக்காஆஆஆஆஆஆ.. சீதைக்கு ராமன் சித்தப்பா இல்லையோஓஓஓஓஓஒ? அப்போ நான் படிச்சது தப்போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ?
ரொம்ப அருமையா இருக்கு எங்களுக்கும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து இப்படி தான் வரும். எனக்கு பெரிய பெட்டி நிறைய கிலிப் ஐயிட்டம் சாரி,,, கொடுத்தார் எங்க ஹஸ்.
மணமகள் வீட்டை விட மணமகன் வீட்டினருக்குத்தான் செலவு அதிகமாகும்.
கரெக்ட் ஸாதிகா.நல்ல பகிர்வு.
அதிரா இரண்டாம்தரம் படித்தால்தான் கிட்னியில் ஏறுமோ?
///சீதைக்கு ராமன் சித்தப்பா இல்லையோஓஓஓஓஓஒ?///இப்படியெல்லாம் கேட்டால் அடுத்து உங்களுக்காக ஒரு ராமாயண்ம் தொடர் போட்டுவிடுவேன்.
ஜலி உங்கள் ஹஸ் கொடுத்ததை இன்னும் பத்திரமாக வைத்துஇருக்கீங்களா?
ஆசியா,உங்கள் ஊரிலும் அப்படியா?மணமகன் வீட்டினருக்கு செலவு அதிகம் வருமா?சில சமயம் பெண்களைப்பெற்றவர்கள் அதிர்ஷ்ட்டசாலிகள் என்று நினைக்கத்தோன்றும்.
ஸாதிகா.. அக்கா.. இம்முறை உங்களை நான் விடுவதாயில்லை.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சும்மா இருந்த சங்கையெல்லாம் ஊதிக்கெடுத்திட்டீங்க:)... உங்கள் படங்களைப் பார்ப்போருக்கு ஆசை வரப்போகுது, நாமும் சீர்வரிசை வாங்கினால் என்ன என்று. கீழே ஒரு முக்கிய குறிப்பு போட்டிருக்கோணும் ஸாதிகா அக்கா..., சீர்வரிசை எல்லாம் முக்கியமில்லை, அறிவான, அன்பான, பண்பான நல்ல பெண்/ஆண் தான் முக்கியம்... வாழ்க்கை நன்கு அமைவதுக்கு என்று.
பூனை குப்புறக்கிடந்து இப்படியெல்லாம் சிந்திக்குது.. ஏன் வேறு ஒருவரும் சிந்திப்பதில்லை இப்படி?:):).... கடவுளே... கையில பாஸ்போட்டை வைத்துக்கொண்டேதான் ரைப் பண்ணுகிறேன்..... இதோ பிளேன் ரெடி.... பைலட் அண்ணன்!!!!... இறுக்கி அமத்துங்கோ ஆக்ஸிலரேட்டரை......
சூப்பர்ர் பதிவு ஸாதிகாக்கா!! ம்ம்ம் பெருமூச்சு விடுகிறேன்.....
திருமணச் சீரை பற்றிய அருமையான கட்டுரை. தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு. ஒரு கல்யாணத்தை நடத்த எவ்வளவு கஷ்டம் பார்த்தீங்களா...
அதிரா நல்ல படபட வென்று சப்தமாக வெடிக்கிற சரவெடியை கொளுத்திப்போட்டாச்சா?ஒகே..ஆனாக்க அக்கா இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேனாக்கும்.
அதிரா பார்த்து பைலட் அண்ணாச்சி உங்களை அப்படியே இமயமலை அடிவாரத்திலே இறக்கிவிட்டுடுவார்.அப்புறம் அக்கா,அக்கா வென்று நீங்க கூப்பாடுபோட்டாலும் இங்கு கேட்காது.
மேனகா,எதற்கு பெருமூச்சு விடுறீங்க.இப்பதான் உங்கள் ஆள் கிட்டே இருந்து தினமும் சீர் வாங்கிக்கொண்டு இருக்கீங்களே!
கருத்துக்கு நன்றி சகோ ஸ்டார்ஜன்.திருமணம் என்றால் சிரமம்,செலவு இல்லாமலா?
நல்லாயிருக்குங்க சீர் அயிட்டம் எல்லாம். நானாயிருந்தா கல்யாணம் முடிஞ்ச உடனே முத நாளு இதை எல்லாம் துண்ணுட்டு கொறட்டை விடுவேன். எங்க பக்கம் எல்லாம் சீர் தூக்க எங்க சொந்தக்காரர்கள் வருவாங்க. ஒரு பத்து தட்டு இருக்கும். முறுக்கு, கடலை உருண்டை, கடலை கோபுரம் எல்லாம் வைப்பாங்க. மத்த சீர் பொருள் எல்லாம் ஒரு ஓரமா பார்வைக்கு வைத்து இருப்பார்கள். நன்றி.
நல்லவேளை சீர் மட்டும் காமிக்கிறீங்க... என்னை போல் ஆக்களுக்கு பிரியாணி வகையாறவுடன் போடும் பந்தியை காமிக்கல... அப்புறம் மீன் கண்ட பூனை மாதிரி இங்க தான் இருப்பாங்க பலர் :)
this post sounds great n very interesting about the traditional customs following in marriage,,,hats off n u hv done a great job.
கருத்துக்கு நன்றி பித்தனின் வாக்கு.நிறைய ஊர்களில் உறவினர்கள்தான் சீரை சுமந்து செல்வதைப்பார்த்து,அறிந்து இருக்கிறேன்.
இலா,அட ஐடியா கொடுத்துவிட்டீர்கள்.பிரியாணிபடங்கள் கைவசம் இல்லை.அடுத்த முறை எடுத்து வந்து போட்டுட வேண்டியதுதான்.நன்றி.
சத்யா ஸ்ரீதர்,பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது என்று கருத்து கூறியமைக்கும்,முதல் வருகைக்கும் நன்றி.
ஸாதிக்காக்கா. இன்று எனது திருமணநாள். இங்கேவந்துபார்த்தா அப்படியோ நிஜமாவே இன்று அதே நாளாக கண்களில் தெரிகிறது.
இப்படித்தானே எனக்கும் தூக்கிக்கொண்டுபோனாக சீரை..
[பெரிய அதிரசம் மட்டும் 1500]
ஸாதிகா அடுத்த முறை உங்க வீட்டுல எப்போ கல்யானம் சீர் பார்க்க வந்திடுறோம்
ஹை இது நல்லாருக்கே!
மலிக்கா,உங்கல் ஊரிலும் பணியாரம் சீருண்டா!கருத்துக்கு நன்றி!
சகோதரி தேனம்மை,
///அடுத்த முறை உங்க வீட்டுல எப்போ கல்யானம் சீர் பார்க்க வந்திடுறோம்///கண்டிப்பாக அழைப்புண்டு.ஆனால் கொஞ்சம் லேட்டாகும்.:-(
கவிசிவா,நல்லாருக்கா?ரொம்ப தேங்க்ஸ்.
Very nice all the pictures & stories too.
I never seen before. Thanks for sharing.
ஸாதிகா, உங்களுக்கு நான் இன்னிக்கி பதிவில் ஆட்டோ,லாரி எல்லாம் அனுப்ப சொல்லியிருக்கேன். வந்ததது என்றால் ஓரமாக பார்க்கிங் பண்ணி வையுங்க. நன்றி.
விஜி,கருத்துக்கு நன்றி.
பித்தனின்வாக்கு அண்ணா!
///இன்னிக்கி பதிவில் ஆட்டோ,லாரி எல்லாம் அனுப்ப சொல்லியிருக்கேன். வந்ததது என்றால் ஓரமாக பார்க்கிங் பண்ணி வையுங்க.///ஆட்டோ,லாரி என்ன?ராக்கெட்டே நீங்க அனுப்பிவச்சாலும் அசரமாட்டோமுல்லோ!!!
மங்குனி இங்க பார்ரா ஒரு கொயந்த புள்ளைய ?
சரி பாவம் கொயந்தயா இருக்கேன்னு பாத்தா.........................
ம்...ம்...ம்.................
இனி இங்க ஒரு படையல் போடா வேண்டியதுதான்
எல்லாத்தையும் பார்த்துட்டு எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ல தோணுது.
//சரி பாவம் கொயந்தயா இருக்கேன்னு பாத்தா..//வாங்கையா மங்குனி அமைச்சரே.நீங்கள் இல்லாத தமிழ் பதிவுலகம் கலகலப்பாக இல்லை என்று ஆகிப்போச்சு.படையல் என்ன பாடையே கட்ட வந்தாலும் நாங்க அசருகிற பேர்வழி கிடையாது.
வாங்க ஷஃபி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக பின்னூட்டம் கொடுத்து நெகிழவைக்கின்றீர்கள்.உண்மைதான்.நான் உவகை கொள்ளும் நேரமெல்லாம் இந்த வார்த்தை கண்டிப்பாக என் வாயில் இருந்து வெளிப்படும்.தொடர் பின்னூட்டத்திற்கு ம்கிழ்ச்சி,நன்றி.
pls see this link http://sashiga.blogspot.com/2010/03/10.html
//ஸாதிகா said...
.படையல் என்ன பாடையே கட்ட வந்தாலும் நாங்க அசருகிற பேர்வழி கிடையாது.//
ஆக இது பெரிய தற்கொலை படையா இருக்கும் போலிருக்கு
(ரொம்ப மிரட்ரான்களே மங்குனி , மனசுக்குள் : பேசாம பிரண்ட்ஸ் ஆகிடலாமா ?)
ம்.. இகும் .... டேய் மங்குனி இதுக்கெலாம் பயபடுற ஆளா நீ ..
விடாத... விடாத....
புகைப்படங்களுடன் கூடிய உங்களின் வர்ணனை அருமை . பகிர்வுக்கு நன்றி !
pls collect ur award from my blog
http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html
ஸாதிகா உங்களை வலைச்ச்ரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
Post a Comment