எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு தம்பதிகள்.வயது கணவருக்கு 70 பிளஸ்.மனைவிக்கு 60 பிளஸ் இருக்கும்.மாலை ஐந்து மணியானால் இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு வாக்கிங் செல்வது கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.அவர்களின் நடைக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே.கட்டுப்பாடான உணவு பழக்கம்,நச் என்று டிரஸ் செய்து கொண்டிருக்கும் நேர்த்தி,நேரம் தவறாமை,தங்களை உற்சாகமாக வைத்து இருப்பது,இந்த வயதிலும் தங்கள் அழகில் கவனம் செலுத்துவது,வெள்ளிக்கிழமையானல் பட்டு,வெள்ளி செவ்வாயில் பூக்கூடையுடன் கோவிலுக்கு செல்வது,ரெஸ்டாரெண்ட்,பீச் ,உறவினர் வீடு,நேசமான புன்னகை முகம் எப்பொழுதும்..இத்யாதி..இத்யாதி..அந்த ஆதர்ஷ தம்பதிகளின் inspiration என்னை இந்த பதிவை எழுத தூண்டியது.
பெண்கள் நாற்பது வயதை நெருங்கி விட்டாலே தன்னைப்பற்றிய அலட்சியம்,விட்டேற்றித்தனம்,அசுவாரஷ்யம் போன்றவை கூடவே ஒட்டிக்கொள்கிறது.ஆனால் இந்த வயதில்தான் துணையுடனான நெருக்கம்,புரிதல்,பக்குவம்,சகித்தல்,ஆதரவு,அரவணைப்பு,ஈடுபாடு மேலும் அதிகமாகி,அன்பு மேலும்மேலும் மிளிரக்கூடிய தருணம்.
இந்த அழகிய ,அற்புதமான தருணத்தில் பெண்கள் தங்கள் அகப்புறத்தோற்றங்களை அழகுற,இளமையாக,பிறர் பாராட்டும்படியும்,வியக்கும்படியும் நேர்த்தியாக வைத்துக்கொள்ளுதல்,புத்துணர்ச்சியையும்,தன்னம்பிக்கையும்,உற்சாகத்தையும் தக்கவைத்து வாழ்ந்தால் நோய்நொடிகளற்ற, சந்தோஷமான,ஒரு அருமையான முதுமையை மகிழ்வாக அனுபவிக்கலாம்.
இந்த அழகிய ,அற்புதமான தருணத்தில் பெண்கள் தங்கள் அகப்புறத்தோற்றங்களை அழகுற,இளமையாக,பிறர் பாராட்டும்படியும்,வியக்கும்படியும் நேர்த்தியாக வைத்துக்கொள்ளுதல்,புத்துணர்ச்சியையும்,தன்னம்பிக்கையும்,உற்சாகத்தையும் தக்கவைத்து வாழ்ந்தால் நோய்நொடிகளற்ற, சந்தோஷமான,ஒரு அருமையான முதுமையை மகிழ்வாக அனுபவிக்கலாம்.
வயதாகிவிட்டதே என்று விசனபடாமல்,மனதிலும்,தோற்றத்திலும் இளமையை வெளிக்கொண்டுவர முயலுங்கள்.பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்களே என்றுலஜ்ஜைப்படாமல் நேர்த்தியாக ஆடை அணிந்து உற்சாமாக வலம் வருவதை வாடிக்கை ஆக்குங்கள்.இது நமக்கே நமக்கான வாழ்க்கை.இந்த அற்புதமான வாழக்கையை சந்தோஷத்துடன்,உற்சாகம் குன்றாமல் வாழ்நாள் முழுவதும் கழிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதியாக இருக்கவேண்டும்.
ஒரு கோணல் கொண்டை,நைந்து போன வாயில் புடவை அல்லது நைட்டி,எண்ணெய் வழியும் முகம்,சதா சமயலறை வாசம்,உடல் உபாதைகளை வாயால் பந்தல் போட்டு சொல்லிக்காட்டி தோரணம் கட்டிக்கொண்டு தன்னையும்,கேட்பவரையும் உற்சாகம் இழக்கச்செய்யாதீர்கள்.மாறாக நேர்த்தியான ஆடை,உற்சாகம் தெரிக்கும் பேச்சு,அவ்வப்பொழுது நகைச்சுவை உணர்வு.தன்னம்பிக்கையுடனான பளிச் என்ற தோற்றம்.நடையிலும்,உடையிலும் கம்பீரத்தைக்கொண்டுவாருங்கள்.உங்களுக்குள்ளே நிச்சயம் ஒரு உற்சாக மாற்றத்தை உணர்வீர்கள்.
வயதாகிக்கொண்டுள்ளதே என்ற எண்ணம் துளியும் வராமல் உற்சாகத்துடன் வலம் வாருங்கள்.உங்களுக்கிருக்கும் இரத்த அழுத்தம்,சுகர்,கொலஸ்ட்ரால் போன்றவற்றை சதா நினைத்துக்கொண்டிராமல் வேண்டிய அளவு உணவு கட்டுப்பாடு,மருத்துவ ஆலோசனை,தவறாது மருந்து உட்கொள்ளுதல் ஒருபக்கம் இருந்தாலும்,மற்றவரிடம் தனது உடல் உபாதைகளைப்பற்றி சர்வ நேரமும் பிரஸ்தாபித்துக்கொண்டிராமல் சந்தோஷமாக மனதை வைத்திருக்கபழகிக்கொள்ளுங்கள்.
சிறியவர்களுடன் ஒத்துப்போகபழக்கிக்கொள்ளுங்கள்.அவர்களை அனுசரித்து நடக்கவேண்டியது அவசியம்.சிறியவர்களாயினும் விட்டு கொடுத்தல்,மரியாதை கொடுத்தல்,முக்கியத்துவம் கொடுத்தல் பிரச்சினைகளுக்கு வழி வராமல் தடுக்கு அரண்களாகும்.
"சர்மியின் மாமியாரைப்பாரு..இந்த வயதிலும் எப்படி நீட்டாக டிரஸ் செய்து கொள்கிறாள்"
"விக்னேஷ் உன் பாட்டி சூப்பர் பாட்டி.உன் பின்னாலேயே ஓடி ஒடி வந்து உனக்கு எப்படி சாப்பாடு ஊட்டுகிறாள்"
"அட உன் பாட்டி உன் ரெகார்ட் நோட்டில் டிராயிங் போட்டுத்தருகின்றார்களே!!"
"இது உன் அம்மா மாதிரியே தெரியலியே?அக்கான்னே நினைத்தேன்"
இப்படி மற்றவர்கள் பார்த்து உற்சாகப்படும்படி,மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருங்கள்.
"இந்த வயதிலும் இதுக்கு இந்த மிணுக்கு தேவையா"என்று பொறாமையில் புகைபவர்களை புறம் தள்ளிவிடுங்கள்.வெகு சீக்கிரமே அவர்கள் உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள்.
இளமையை இனிமையாக அனுபவித்ததைப்போல் முதுமையையும் உற்சாகமாக இன்புற அனுபவிக்கலாம்.
Tweet |
33 comments:
கரெக்ட்
இப்ப ஈஸியாயிருக்கு அட்வைஸைப் படிக்கிறதுக்கு; நாளை எனக்கும் வயசானப்புறம் இத ஃபாலோ பண்ற அளவுக்குப் பொறுமையை இறைவன் தரவேண்டும்!!
ஸாதிகா , அருமையான கருத்துக்களை சொல்லிருக்கீங்க, இவற்றை பின்பற்றினால் முதுமை சந்தோசமா கழியும். இறைவன் அருள்பாலிப்பானாக. ஆமீன்.
ஷாதிகா ஆன்டி!!!
ரொம்ப நல்ல பதிவு!!! எனக்கும் இந்த எண்ணம் தான்... மகிழ்ச்சியாக இருக்க வயது தான் ஏது ??!!! வயசாகிட்டாலே எதோ கடமைக்கு வாழ்க்கையை நடத்துபவர்கள் தான் பலர்.
அருமையான பதிவு,வாழ்க்கை இளவயதில் இனித்ததை விட லேட்டான வயதில் லேட்டஸ்டாக இனிக்குமனு தெளிவாக சொல்லிட்டீங்க,ரொம்ப நாளா பதிவை காணோம்னு பார்த்தால் அசத்தலான செய்தியோடு வந்திருக்கீங்க.அப்பாடா நமக்கு ஏற்ற தோழி தான்.
அண்ணாமலையான்,
முதல் கருத்துக்கு,தவறாது விழும் தமிழிஷ் ஓட்டுகளுக்கும் என் நன்றி!
ஹுசைனம்மா,
//இப்ப ஈஸியாயிருக்கு அட்வைஸைப் படிக்கிறதுக்கு; நாளை எனக்கும் வயசானப்புறம் இத ஃபாலோ பண்ற அளவுக்குப் பொறுமையை இறைவன் தரவேண்டும்!!//கண்டிப்பாக நாம் தெளிவாகவும்,உறுதியாகவும் இருந்தால் இறைவன் பொறுமையைத்தருவான்.கருத்துக்கு நன்றி!
ஸ்டார்ஜன்,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.இரண்டாவதாக நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தை எவ்வளவோ முயன்றும் என்னால் பப்லிஷ் பண்ண இயலவில்லை.திரும்ப,திரும்ப பப்லிஷ் கொடுத்தாலும் பதிவு பப்லிஷ் ஆக மறுக்கின்றது.என் உடன்குடி மச்சி நான் குலசையை சேர்ந்தவள் என்று ஞாபக மறதியாக சொல்லி இருப்பார்கள்.என் சொந்த ஊரை நீங்கள் தெரிந்தே ஆக வேண்டும் இல்லையா?செத்தும் கொடைகொடுத்த சீதக்காதி வாழ்ந்து,மறைந்த ஊர்.இப்பொழுது புரிஞ்சுதோ?இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த லின்க்கை பார்த்துவிட்டு அவசியம் எங்கள் ஊரைப்பற்றிய உங்கள் கருத்தை பகிருங்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.
http://sonagan.blogspot.com/2010/01/blog-post.html
இலா,
உங்களுக்கும் இந்த எண்ணம்தானா?மிக்க மகிழ்ச்சி.இதே மனநிலையில் இருந்தோமானல் கண்டிப்பாக நம் முதுமை வெகு சுவாரஷ்யத்துடன் கழியும்.கருத்துக்கு நன்றி!
ஆசியா,
///அப்பாடா நமக்கு ஏற்ற தோழி தான்.///அப்பாடா நீங்களும் நம்ம கட்சிதானா?ரொம்ப சந்தோஷம் தோழி.
ஆள் பாதி ஆடை பாதி . நம் எண்ணங்களை புதிதாக , இளமையாக வைத்திருந்தாலே போதும், அதுவே, வயதை குறைத்துவிடும். வாழ்த்துக்கள். நல்ல பதிவு.
மிகவும் அவசியமான பதிவுப்பா...
நல்லா சொல்லியிருக்கீங்க...
///பெண்கள் நாற்பது வயதை நெருங்கி விட்டாலே தன்னைப்பற்றிய அலட்சியம்,விட்டேற்றித்தனம்,அசுவாரஷ்யம் போன்றவை கூடவே ஒட்டிக்கொள்கிறது///
எங்க நாற்பது வயது , ஒரு குட்டி இல்லை ரெண்டு குட்டி போட்டதுமே இந்த நிலைதான். உங்க தைரியத்தை பாராட்டிதான் ஆகனும்.
///செத்தும் கொடைகொடுத்த சீதக்காதி வாழ்ந்து,மறைந்த ஊர்.இப்பொழுது புரிஞ்சுதோ//
தப்பாக நினைக்க வேண்டாம் http://en.wikipedia.org/wiki/Kilakarai .இதில் அத்தனை தகவல் இல்லையே.http://en.wikipedia.org/wiki/Parangipettai ல் சேர்த்த அளவிற்கு கூட சேர்க்கவில்லையே ஏன் என்னகாரணம் (சொன்னால் புரிந்து கொள்வேன். ப்ளிஸ் தப்பாக நினைக்காதீங்க )
அருமை. உண்மையை அழகாகச் சொல்லிட்டீங்க. ஒரு கதை சொல்லட்டே... வர வரக் கதை சொல்லவே பயம்மாஆஆஆக் கிடக்கு.
என் வகுப்புத்தோழியை ஒருநள், அடுத்த வகுப்புப் பிள்ளை ஒருவர் கேட்டார், ”நேற்று சைக்கிளில் இன்னொரு boy உடன் கதைத்துக்கொண்டு போனாயே அது யார் உண்மையைச் சொல்லிடு?” என.
என் வகுப்புத் தோழிக்கு தலைசுத்தியது, boy உடனோ? அப்படி நான் யாரோடும் கதைக்கவில்லையே.. எங்கு கண்டாய்... என வினவ, அடுத்த வ.தோ... விடாது கிண்டிக் கேட்டு முடிவில் தான் கண்டுபிடித்தோம், அது என் வகுப்புத் தோழியும் அவரின் அப்பாவும் என. இப்படியும் சிக்கலில் மாட்டவேண்டியும் வந்துவிடும்... இழமையும் வேண்டும் வயதுக்கேற்ற தோற்றமும் வேண்டும்.. என்பது என் கருத்து.
அழகான பதிவு படித்ததும் நாமும் அப்படி வாழ ஆசை வருகிறது...நன்றி...ஸாதி(கா)..
ரொம்ப சரியா சொன்னீங்க ஸாதிகா நம்மை நாமேதான் எப்பவுமே புத்துணர்ச்சியோடு வைத்து இருக்கணும்
நல்ல பதிவு ஸாதிகா, தன்னம்பிக்கை வளர தேற்றமும் ஒரு காரணம். ஆகவே உடலும், உள்ளமும் இளமையாக வைத்துக் கொண்டால் நலமும் இருக்கும். நன்றி.
ஹூஸைனம்மா சொன்னதை வழிமொழிகிறேன்.
அந்த பொருமையை வேண்டி நாம் துவா நிறைய செய்யனும்.
"இந்த வயதிலும் இதுக்கு இந்த மிணுக்கு தேவையா"என்று பொறாமையில் புகைபவர்களை புறம் தள்ளிவிடுங்கள்.வெகு சீக்கிரமே அவர்கள் உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள்.
இளமையை இனிமையாக அனுபவித்ததைப்போல் முதுமையையும் உற்சாகமாக இன்புற அனுபவிக்கலாம்.
.........well-said! Very nice.
கரெக்டா சொன்னீங்க சாதிகா... வெளியே போகும்போது போடும் மேக்கப்பில் கொஞ்சமாவது வீட்டில் போட்டுட்டு இருந்தா, we will feel happy & smart & make the spouse too happy.
வாழ்க்கைக்கு தேவையான உற்சாக கருத்துக்கள்.
நல்லாயிருக்கு சகோதரி.
எல்லா புகழும் இறைவனுக்கே
நிச்சயமாக.
ரொம்ப நல்ல பதிவு!! உண்மையை அழகாகச் சொல்லிட்டீங்க
முதுமையிலும் இளமைகாண்போம்.
அழகான பதி ஸாதிக்காக்கா..
மதுரை சரவணன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!///நம் எண்ணங்களை புதிதாக , இளமையாக வைத்திருந்தாலே போதும், அதுவே, வயதை குறைத்துவிடும்///நிஜமான வரிகள்!
தம்பி வசந்த்,வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!நீங்கள் சீமான் கனிக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் யூத்ஃபுல் விகடனுக்கு ப்டைப்புகளை அனுப்ப சொல்லி அவருக்கு வேண்டு கோள் வைத்து இருந்ததைப்பார்த்த பின்னர்தான் நானும் அங்கு அனுப்ப ஆரம்பித்தேன்.குறுகிய நாட்களில் இரண்டு குட் பிளாக் ஆக தேர்வாகிவிட்டது.அதற்கும் என் நன்றி.
ஜெய்லானி சார்,
///ஒரு குட்டி இல்லை ரெண்டு குட்டி போட்டதுமே இந்த நிலைதான்.///என்ன இப்படி எழுதுவிட்டீர்கள் ஆடு மாடு ரேஞ்சில்...! :-)
நானும் பார்த்தேன்.எங்களூரைப்பற்றி எத்தனையோ(நல்ல)விஷயங்கள் உள்ளது.விக்கி பீடியாவில் மிகக்குறைந்த அளவிலேயே போட்டுள்ளது.அதுபற்றி எனக்குத்தெரிய வில்லை.கீழக்கரை என்று கூகுளில் தேடினால் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.கீழக்கரை டாட் காம் என்றே ஒரு தளமும் உள்ளது.நீங்கள் பரங்கிப்பேட்டையா?கருத்துக்கும்,தொடர் ஓட்டளிப்புக்கும் மிக்க நன்றி
ஸாதிகா அக்கா கலக்கலான பதிவு, ரொம்ப நாள் ஆச்சே நானும் வந்து வந்து பார்த்து போய் விட்டேன், ஓ அதற்குள் இவ்வளவு போட்டு விட்டீர்களா>
சூப்பரா சொன்னீர்கள், மனதளவில் என்றும் இளமையாக இருந்தால் முதுமையிலும் என்றும் இள்மையே ( இளமை இதோ இதோ தான்).
நிறைய பேர் பெண்குழந்தைகள் வயசுக்கு வந்துட்டா, பின்னல் போட கூச்சம், மாட்டல் லோலாக்கு போட கூச்சம் யாராவது ஏதாவ்து சொல்வாஙக்ளோன்னு , அதெல்லாம் கண்டுக்காதீங்க யாரும் சொல்பவர்கள் சொல்லி கொன்டு தான் இருப்பார்கள்.
சரியாய் சொன்னீர்க்ர்கள்!
ஆனாலும் சிலர் சுறு சுறுப்பாக இருபவர்களை
கிண்டல் செய்து கொண்டு தான் இருக்கார்கள்.
தங்களால் முடியாதது , பிறர்ரால் முடிவதை
ஒத்து கொள்ள மனம் கிடையாது.
நல்ல பதிவு
அதிரா,
உங்கட பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்களுடன் வெளியில் போகின்றீர்கள்.நீங்கள் உங்கள் மகன்களுக்கு அக்காபோன்ற தோற்றம்.வேண்டாம் அந்த இளைய தோற்றம் என்று நீங்கள் முதுமையை பூசிக்கொள்வீர்களா?இந்த காலத்தில் அநேகப்பெண்கள்(கவனிக்க:அநேகப்பெண்கள்)தங்கள் பிள்ளைகளுக்கு அம்மா என்ற தோற்றத்தை விட அக்கா என்ற தோற்றம் கிடைக்கவே விரும்புகின்ற்ர்ர்கள்.கருத்துக்கு நன்றி அதிரா!
சீமான் கனி,///நாமும் அப்படி வாழ ஆசை வருகிறது...நன்றி..///வாழுங்கள் வாழ்வாங்கு சீமான்கனி. கருத்துக்கு நன்றி.
தேனம்மை லக்ஷ்மணனன்.
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.நிச்சயம் நீங்கள் கூறுவதுபோல் இதற்கு புத்துணர்ச்சி முக்கியம்.
பித்தனின் வாக்கு,கருத்துக்கு நன்றி.முதுமையில் இளமையை உணர்ந்தால் உடல் நலமும் பேணலாம்.
சகோ.ஜமால்.கருத்துக்கு நன்றி. முதுமை சந்தோஷமாக,நிரப்பமாகவும் ,ஆரோக்கியமானதாகவும்,பிறருக்கு இடைஞ்சல் இன்றியும் கழிய நானும் எப்பொழுதும் துஆ செய்வதவளாகத்தான் இருக்கிறேன்.கருத்துக்கு ந்ன்றி
சித்ரா டீச்சர்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ரி.உங்கள் ஆக்கப்பூரவமான ,நகைச்சுவைததும்பும் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன்.தொடருவோம்.
என்றும்,நிச்சயமாக உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து இல்லை.முதல் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி!
அக்பர்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கு மிக்க நன்றி.///வாழ்க்கைக்கு தேவையான உற்சாக கருத்துக்கள்///வரிகள் என்னயும் உற்சாகப்படுத்தியது.
சுஸ்ரீ,
உண்மைஅயை அழகா சொல்லிட்டீங்க என்று அழகா கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
மலிக்கா,
கருத்துக்கு மிக்க நன்றி!அழகான பதிவா!ரொம்ப சந்தோஷம் மலிக்கா!
வாவ்..ஜலி..ஆடலும் ..பாடலும்..லொள்ளும்..அடாடாடா...ஜலி பதிவிலும் பின்னூட்டத்திலும் பிண்றீங்கப்பா.கருத்துக்கு நன்றி!
கீதா6,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!///தங்களால் முடியாதது , பிறர்ரால் முடிவதை
ஒத்து கொள்ள மனம் கிடையாது. ///உண்மைதான்
ஆஹா . மிகவும் பயனுள்ள தகவல்தான் . பகிர்வுக்கு நன்றி
நல்ல அறிவுரை, மனதில் வைத்துக் கொள்வோம்.
பனித்துளி சங்கர்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
ஷஃபி,
///மனதில் வைத்துக் கொள்வோம்/// மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.
நல்ல பதிவு. நல்ல கருத்து.
யுத் ஃபுல் விகடன் குட்பிளாக் பகுதியில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்
Post a Comment