சென்ற வாரம் இரண்டு ஆட்கள் வந்து பிட் நோட்டீஸ்,விசிட்டிங்கார்ட்,கூப்பன் சகிதமாக வந்தனர்.
"மேம்..புதிதாக ஷாப் ஓப்பன் பண்ணுகின்றோம்."என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
உங்கள் வீட்டில் உள்ள பெயர்களை சொல்லுங்கள்."குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு தருகின்றோம்."என்றனர்.
இப்படி மாதிரி காரியங்களில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை."இதெல்லாம் சரிப்பட்டு வராது.குலுக்கலும் வேண்டாம்,பரிசும் வேண்டாம்"என்று மறுத்தேன்.இருந்தாலும் விடாகண்டானாக பிடிவாதமாக பெயரைக்கேட்டு கூப்பனை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர்.எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை.
"ஏன் மேம்,இதில் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.குலுக்கலில் தேர்வானால் பரிசுதானே கிடைக்கப்போகின்றது.என்கரேஜ் பண்ணுங்கள்"இப்படி பேசியே என் மனதை மாற்றி கூப்பனை நிரப்பவைத்தனர்.நானும் அரை மனது..இல்லை,இல்லை..கால் மனதுடன் கூப்பனை நிரப்பி கையில் கொடுத்தேன்.அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு"மேம்..புரோஷசிங் சார்ஜ் டென் ருபீஸ் கொடுங்கள்.அதற்கு பில் கொடுத்துடுவோம்"என்றான்.கோபம் ஜிவ் என்று ஏறியது.
நான் கோபத்தைக்காட்டும் முன்"மேம்..பரவா இல்லை.உங்களுக்காக அந்த பைசாவை நானே போட்டுக்கொள்கிறேன்"என்று கிளம்ப ஆரம்பித்தான்.இன்னும் கோபம் அதிகமாகி "எனக்காக பைசா போடுவதற்கு நீ யார்?"என்று சப்தம் போட்டு பத்து ரூபாயை கொடுத்து அனுப்பி விட்டேன்.
நடந்ததை மறந்தும் போய் விட்டேன்.நேற்று மீண்டும் அந்த இரண்டு நபர்களும் வந்தனர்."மேம்..கங்கிராஜுலேஷன்"வாயெல்லாம் பல்லாக ஒரு பெரிய பார்சலுடன் வந்தனர்.
" உங்களுக்கு குலுக்கலில் எலக்ட்ரிக் குக்கர் பரிசு கிடைத்து இருக்கு"என்று அவர்கள் சொன்ன பொழுது அவர்களைப்பார்த்த பொழுது ஏற்பட்ட எரிச்சல் சற்று தணிந்தது.'அட..பரவாஇல்லையே.அன்னிக்கு இந்த ஆட்களிடம் அவ்வளவு கோபம் காட்டினோமே'என்று நினைத்துக்கொண்டேன்.
பார்சலைக்கீழே வைத்துவிட்டு ,பாக்கட்டில் இருந்து ஒரு பில்லை எடுத்து நீட்டுகின்றனர்."மேம்..50 பெர்ஸண்ட் ஆஃப் மேம்.மார்க்கட்டில் இந்த குக்கர் விலை 4500.உங்களுக்கு 2250க்குத்தான் கிடைத்து இருக்கின்றது"என்கிறார்.
எனக்கு வந்ததே கோபம்."என்னப்பா,விளையாடுகிறீர்களா?"என்று சப்தம் போட்டேன்.அந்த கை தேர்ந்தவர்கள் என் கோபத்தை பார்த்து அசரவில்லை.என் தலையில் கட்டி பணத்தை வாங்கிக்கொண்டு போவதிலேயே குறியாக இருந்தனர்
."இதே போல் குக்கர் என்னிடமும் உள்ளது.நீங்கள் வேண்டுமானால் எனக்கு 2000 மட்டுமே தந்துவிட்டு எடுத்து செல்லுங்கள்"இப்படி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.கோபம் தலைக்கேற கேட்டை காட்டி"முதல்லே வெளியே போ"நான் போட்ட சப்தத்தில் இருவரும் எஸ்கேப்.உங்கள் வீட்டிற்கும் வரலாம்.ஜாக்கிரதை!
Tweet |
19 comments:
உங்கள் வீட்டிற்கும் வரலாம்”
வந்தால் நீங்கள் கடைசியில் சொன்னதை முதலில் சொல்ல வேண்டியதுதான்
அண்ணாமலையான் ,பின்னூட்டத்திற்கு நன்றி.
//நீங்கள் கடைசியில் சொன்னதை முதலில் சொல்ல வேண்டியதுதான்//அதற்குத்தானே இந்த பதிவு.
இப்படி எல்லாம் கூட வருவார்களா, என்ன ?தகவலிற்கு மிக்க நன்றி தோழி.
eppadiyellaam emaaththuraangka!!
''கிரேட் எஸ்கேப்''
அட இப்டிலாம் நடக்குதா ஊர்ல??? உஷாரா இருக்கணும் ஊருக்கு வந்தா....வாழ்த்துகள் சகோ ....
நல்ல பதிவு. பகிர்வுக்கு ரொம்ப நன்றி மேடம்.
நம்ம சென்னயில் இது மாதிரி எவ்வளவு தெரியுமா. என் தோழி வீட்டில் நான் கேபிள் கடையில் இருந்து வந்துள்ளேன் என்று சொல்லி
அன்னா ஒரு 100 ருபாய் அட்வான்ஸா வாங்கி வர சொன்னாங்க என்று சொல்லி என் தோழி உஷாரா அன்னாவேயே வரசொல்லுங்க அவசியம் குடுக்கிறேன். அந்த பையன் நான் போய்விட்டு அனுப்புகிறேன் என்று போனவன் போனவன் போனவன்......போயே போயிந்தி..
தோழி ஆசியா,நன்றி.இதெல்லாம் இந்த ஊரில் ரொம்ப சகஜம்.நாம்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
சுஸ்ரீ,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
சீமான்கனி பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
சரவணக்குமார்,உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
விஜி,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்று ஒரு புத்தகம் யாராவது எழுதினால் படித்து,பாதுகாத்து,நாமும் முன் ஜாக்கிரதையாக இருக்கலாம் போலும்.
எனக்கென்ன டவுட்டுன்னா, ஏமாத்துக்காரன்னு தெரிஞ்சுமே நிறைய பேர் எப்படி ஏமாறுராங்கன்னு தான் விளங்கல.
ஸாதிகா அக்கா ஏமாறுபவர்கள் இருக்கிறவரையில் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றதான் செய்வார்கள்.
அது சரி, ப்ராசசிங்க காசு வேறையா? ஆமாம், ஜாக்கிரதையாக இருக்கணும்.
உண்மைதான் ஜலி,ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.எனது நண்பி ஒரு பிளாட்டில் வசிக்கின்றார்.எதிர்வீட்டிற்கு மளிகை பொருட்கள் கொண்டுவந்து இருக்கிறான் ஒரு ஆள் .தோழியை அழைத்து மளிகை பொருட்களை கொடுத்து பில்லையும் கொடுத்து பைசாவையும் கேட்டு இருக்கிறான்.வேறு வழி இல்லாமல் பில்லை வாங்கிக்கொண்டு தோழி பைசாவை கொடுத்து இருக்கின்றார்.எதிர்வீட்டு பெண் வந்ததும் பொருட்கள் வந்துள்ளது என்றதும் திகைத்துவிட்டார்.அவர் மளிகை பொருட்களுக்கு ஆர்டரே கொடுக்கவில்லை.பணம் இரண்டாயிரம் போச்சு.இரண்டாயிரத்திற்கும் வந்திருக்கும் பொருட்கள் உப்பு,நெல்,உமி,வேஸ்ட் துணி.இப்படி எல்லாம் ஏமாந்து இருக்கின்றார்கள்.பின்னூட்டத்திற்கு நன்றி ஜலி.
ஆம் சகோ ஷஃபி,இதில் இருந்து விழிப்புணர்வு போதவில்லை என்பதே உண்மை.பின்னூட்டத்திற்கு நன்றி
ஸாதிகா அக்கா.... நம்பமுடியவில்லை, இருப்பினும் நல்ல தைரியமாக விரட்டிவிட்டீங்கள். ஆனாலும் ஒன்று செய்திருக்கலாம் "தம்பியவை வெய்யிலுக்கால வந்திருக்கிறீங்கள், களைத்துப்போய் இருக்கிறீங்கள், இருங்கோ கூலாக்..... கொண்டுவருகிறேன்" எனச் சொல்லி உள்ளே இருத்திப்போட்டு போலீசுக்கு அடித்திருக்கலாம்...
அட, டிரிக் நல்லாருக்கே.
அட..அதிரா!பயங்கரமா யோசனையெல்லாம் கொடுக்கின்றீர்கள்!!பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஹுசைனம்மா,உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.பதிவர் சந்திப்பு மழைத்தொந்தரவு இல்லாமல் நடந்ததா?
நாஸியா,பின்னூட்டத்திற்கு நன்றி.
பயங்கரமான ஆளுங்கதான்... உசாரா இல்லாட்டி நாம அம்பேல்தான்.
உண்மைதான்.நீங்கள் கூட இது குறித்து ஒரு புது இடுகை போட்டு இருக்கின்றீர்களே.
Post a Comment