சாமர்த்திய சங்கீதா
***************************
சென்ற முறை நான் ஸ்டாப் ஆக பேசும் பார்வதி மாமியை சந்தித்தீர்கள்.இம்முறை அதி சாமர்த்தியசாலி சங்கீதாவைப்பார்க்கலாமா?
கெச்சலான உருவம். மைதா மாவை பரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மாதீரி பளீர் என்ற நிறம்,அப்படியே ஆப்பிளை சீராக நறுக்கி ஒட்டிய மாதிரி இருக்கும் கூர் மூக்கிலும்,சதா சுழன்று கொண்டே இருக்கும் கண்களிலும் சாமர்த்தியம் அப்படியே சாணி அடித்தார்ப்போல் ஓட்டிக்கொண்டு இருக்கும் பாருங்கள் அதுதான் நம்ம சங்கீதா.
காலை நேரம்,பரபரப்பாக இருப்பார்களே என்று லஜ்ஜை சிறிதும் இன்றி திறந்த வீட்டினுள் எதுவோ நுழைந்த மாதிரி எதிர் வீடு,பக்கத்து வீடு,அண்டை வீடு,இந்தண்டை வீடு என்று சலிப்பில்லாமல் புகுந்து வருவதில் அவளுக்கு நிகர் யாருமில்லை.அப்படித்தான் ஒரு காலைப்பொழுதில் எதிர்வீட்டு இந்திரா இவளிடம் மாட்டிக்கொண்டாள்.
"இந்தூஊஊஊ.."பேச்சில் தேனும்,பாலும் குழைந்து பிராவகம் எடுக்கும்.
"இந்து, டிபன் ஆச்சா?நீதான் டிபனுக்கு முன்னேயே சாப்பாட்டை ரெடி பண்ணிடுவியே"
"வாங்கக்கா..என்ன இது காலங்காத்தாலே"
"என்னப்பா இதுவா காலங்காத்தாலே?உச்சி வெயில் எட்டிப்பார்க்கப்போறது.என்ன டிபன் பண்ணே?நான் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே கமகமன்னு வாசனை பிச்சிக்கொண்டு போனதே?"
"ஆமாக்கா,வீட்டுக்காரரோட கொலீக் சம்சாரம் இன்னிக்கு ஊரில் இல்லை என்றார்.அவருக்கும் சேர்த்து சாப்பாடு கட்டிக்கொடு என்றார்.அதுதான் கொஞ்சம் ஸ்பெஷல்.."
"அதானே பார்த்தேன்..இந்துவா கொக்காவா?அப்படியே அசத்திப்போட்டுடுவியே?சும்மா சொல்லாக்கூடாது உன் கைமணத்துக்கே தனி டேஸ்ட் தான்.."
வாய்பேசிக்கொண்டிருந்தாலும் கால்கள் வண்டிமாடு போல் அப்படியே கிச்சனில் போய் சேர்ந்துவிடும்.
அப்புறம் என்ன நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு பிரிஞ்சி சாதத்தையும் ,காலிபிளவ்ர் மசாலாவையும் ஒரு விளாசு விளாசி விடுவாள்,
"இந்து ,சும்மா சொல்லாக்கூடாதுடி,இந்த மணமும் ,பக்குவமும் எனக்கு சுட்டுப்போட்டாலும் வரவே வராது.வரட்டு வரட்டு என்று ரெண்டு தோசை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு,இப்ப உன் சாப்பாடையும் மிஸ் பண்ண முடியாமல் சாப்பிட்டுட்டேன்.நீதான் எப்பவும் பிரிஜ்ஜில் பெப்ஸி வச்சிருப்பியே.அரை டம்ளர் கொடு..யப்பா..ஹேவ்.."
சவாதானமாக சோஃபாவில் அமர்ந்து உத்தரவு போடாத குறையாக கேட்டு அரை டம்ளர் பெப்சி வாங்கி குடித்துவிடுவாள்.
"இந்து,சாப்பிட்டதில் எதுக்கு உன் வீட்டுக்கு வந்தேன் என்று மறந்து போய்விடப்போறேன்.கொஞ்சம் தயிர் இருந்தால் கொடென்.நேற்று என் ஓர்ப்படி குடும்பத்தோடு வந்துட்டாள்.காபிக்கே பால் தீர்ந்து போச்சு"
"எங்கள் வீட்டிலும் இன்னிக்கு பால் சார்ட்டேஜ்தான்க்கா.கொஞ்சமா தர்ரேன்"
"போதும்,போதும்..இருந்தாலும் உன் தாரள மனசு யாருக்கும் வராதுடி.அதான் பகவான் உன்னை இந்தளவுக்கு வைத்துஇருக்கான்"
சங்கீதாவின் ஐஸில் மெழுகாய்,ஐஸாய் உருகிவிடுவாள் இந்திரா.
"உன் புருஷனுக்கும் நல்ல மனசுடி,தேடி,தேடி உதவி பண்ணுவதில் அவருக்குநிகர் யாருமில்லை"
இந்து நெளிவதை கண்டுகொள்ளாமல் பேச்சு ஜெட் வேகத்தில் போய்க்கொண்டே இருக்கும்.
"உன் புருஷனுக்கு ஆஃபீஸிலே நல்ல உத்யோகம்.ஆளு,அம்புன்ன்னு ஏகப்பட்டவங்களோட உதவி இருக்குமே"
"ஆங்..சொல்ல மறந்துட்டேன்.உன் வீட்டு டெலிபோன் பில்லும்,ஈபி பில்லும் இன்னும் கட்டலியே?
"இல்லேக்கா"
"கட்டும் பொழுது என் கிட்டேயும் வாங்கிட்டு போயிடு.செக் போட்டு வைத்து இருக்கேன்.நீங்களா கியூவில் நிக்காப்போகிறீர்கள்?ஆஃபீஸ் பியூன் தானே போவான்?"
"ஆ..மா.."
இந்துவின் இறங்கும் சுதியை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவாள் நொடிப்பொழுதில்.
"இப்படி யெல்லாம் மனசார உதவி செய்வதால்த்தான் உன் வீட்டுக்காரருக்கு புரமோஷனுக்குமேலே புரமோஷன் வர்ரது.பகவானுக்கு யார்யருக்கு எப்படிஎப்படி கொடுக்கணும்ன்னு தெரியாதா என்ன்?
"அதுகென்னக்கா?உங்களுக்காகவா தனியா பில் கட்டாப்போறோம்.எங்கள் வீட்டு பில்லோட சேர்த்துதானே கட்டப்போறோம்.செக்கை கொடுங்க.கட்டசொல்லிடுறேன்."
"சரி நான் கிளம்பறேன்.நான் என் அக்காவுடம் மிண்ட்டுக்கு போறேன்.உனக்கு ஏதாவது வேணுமா?"
"ஒன்னும் வேண்டாங்க்கா"
"பூனம் சேலை நம்ம ஏரியாவுக்குள்ளே ஐநூறுக்கு குறைச்சலாக கிடைக்காது.அங்கே முன்னூறுக்கே கிடைக்கும்.அதிலும் உன் உடம்புவாகுக்கு அந்த புடவைங்க ரொம்ப பாந்தமாக இருக்கும்.எதுக்கு யோசிக்கறே.பணம் வேணும்ன்னா சாயங்காலம் வந்து வாங்கிக்கறேன்.நாலுபுடவை எடுத்துட்டுவரவா?"
கூடவே இதயும் சேர்த்து சொல்லுவாள்"பத்தாம் நம்பர் பாக்கியத்தம்மா மருமகள் ராணி 10 பொடவை எடுக்கசொல்லி பணம் தந்தாள்."ப்ர்சை திறந்து பணத்தை விரித்து காட்டியதுமே நம்ம இந்திரா அம்பேல்தான்.
உடனே இந்துவிடம் இருந்து குறைந்தது ஐந்துபுடைவைகளுக்காவது ஆர்டர் வந்துவிடும்.
"வர்ரேண்டி இந்து,மொத்தம் 25,30புடவைக்கு ஆர்டர் வந்திருக்கு.வந்ததுமே உன் வீட்டுக்கு முதலே வருவேன்.நீ எடுத்ததுக்கு அப்புறமாத்தான் மத்தவங்க>நீ என்ன எல்லாரும் மாதிரியா?ஸ்பெஷலாச்சே"
இதே டயலாக்கை எல்லா வீட்டிலும் சங்கீதா ஒப்பிப்பது நம்ம இந்துவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?
"வர்ரேன்,கதவை இழுத்து சார்திக்கோ.காலம் கெட்டு போயிருக்கு.பேப்பரில் எவ்வளவோ படிக்கறோமே?சாயங்காலம் சூடா டிகிரிகாபி போட்டு வை வர்ரேன்."
அடுத்த நிமிடம் பக்கத்துவீட்டு பாமா வீட்டூக்குள் விடுவிடு என் நுழைந்து விடுவாள் சங்கீதா.
"பாமாஆஆஆவ்"
Tweet |
19 comments:
remba supera irukku!!!!
ippadiyum sila character
சுஸ்ரீ,உங்கள் கருத்துக்கு நன்றி.என் கற்பனையில் உதிக்கும் இது போன்ற பாத்திரங்களை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்
\\சாமர்த்தியம் அப்படியே சாணி அடித்தார்ப்போல் ஓட்டிக்கொண்டு இருக்கும் பாருங்கள் அதுதான் நம்ம சங்கீதா.\\
ஐயோ சாணியா???
ரொம்ப சுவாரசியமா இருக்கு சகோதரி.. :)
ஐயோ அக்கா சூப்பர் போங்க.எப்படி இப்படிலாம்...கலக்குறீங்க.ஒரு தொடர்கதை எழுதுங்களேன் எனக்காக..எனக்கு கதை படிப்பதில் அவ்வளவு விருப்பம்....எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு.
பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி நாஸியா
உற்சாகமான மறுமொழி என்னையும் தொற்றிக்கொண்டது மேனகா.நன்றி.80களில் மலர்மதி என்ற பத்திரிகையில் 'என்றும் உன்னோடு'என்ற தொடர்கதை எழுதினேன்.இப்பொழுது மீண்டும் தொடர் கதையே எழுதச்சொல்லுகின்றீர்கள்.விரைவில் சிறுகதையாவது எழுத முயற்சிக்கின்றேன்.
vizhunthu vizhunthu no no.. urundu urundu siritheen.. Very nice Aunty!!!
அக்கா,
நல்ல சரளமான நடை அக்கா. இப்பவும் ஒரு தொடர்கதை எழுதுங்களேன் அக்கா எங்களுக்கு.
மாமிகளின் அட்டகாசம் ரெம்ப ஜோர், அடுத்த மாமியின் கலக்கலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
தங்கச்சி ஹுசைனம்மா,
பின்னூட்டத்திற்கு நன்றி.ஐயோ..தொடர்கதை எழுது என்று சொல்லி திகில் கிளப்பறீங்களே?உங்கள் எழுத்து நடைகூட அசத்தலாக உள்ளது.அட்லீஸ்ட் நீங்கள் ஒரு சிறுகதையையாவது ஆரம்பியுங்கள்.நான் தங்கச்சியை ஃபாலோ பண்ணுகின்றேன்.
சோனகர்,
மாமிகள் அட்டகாசம் பண்ணுவர்கள் என்று முடிவே பண்ணி விட்டீர்களா?முன்னுதாரண மாமிகளும் இருக்காங்க.அடுத்து பாருங்கள்.மாமாமார்களின் அட்டகாசத்தை.
பார்வதி மாமி,சாமர்த்திய சங்கீதா,அடுத்து யாருன்னு அறிய ரொம்ப ஆவல்.தொடர்ந்து எழுதுங்கள்.
I can picture that...its so common, right. I have seen several girls like sangeetha character you described, even here:))
ஆர்வத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சியாக உள்ளது ஆசியா.
இலா.பதிவு பார்த்து விழுந்து விழுந்து சிரித்தீர்களா?ரொம்ப நன்றி.உங்கள் பிளாக்கில் புது பதிவுகளையே காண இயலவில்லையே?
பின்னூட்டத்திற்கு மிகவு நன்றி மலர் காந்தி.
அஸ்ஸலாமு அலைக்கும்
சில நிஜ பாத்திரங்களை அப்படியே உங்கள் கதைகளில் வலம் வருகிறார்கள்
கண்டிப்பா நீங்கள் ஒரு தொடர்கதை
தரனும்
வ அலைக்கும் வஸ்ஸலாம் தாஜ்.தொடர் பின்னூட்டம் என்னை ரொம்பவுமே மகிழ்ச்சியிலும்,உற்சாகத்திலும் ஆழ்த்துகிறது.நன்றி.கதை எழுதும் ஆர்வம் இருந்தாலும் இப்பொழுதே அதிக நேரம் கணினியில் செலவிடுகின்றேன்.இனி கதை என்று போனால் என்னாகும் என்று பயமாக உள்ளது.
உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
Tamil Girl baby Names
Post a Comment