January 16, 2014

இமாவின் ஃபீஜோவா ரெலிஷ்



சென்னை இண்டர்நேஷனல்  ஏர்போர்டில் டிராலியைத்தள்ளிக்கொண்டே வந்த இமா - க்றிஸ்  தம்பதிகள் நான் ”ஹலோ இமா”என்று சப்தமாக அழைத்ததை சற்றும் எதிர் பார்க்கவில்லை.எங்கேயோ பார்த்துக்கொண்டு,யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தவர்கள் அங்கே என்னைப்பார்த்ததில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி.தான் ஊர் வரப்போவதைப்பற்றி எனக்கு அறிவிக்காமலேயே நான் ஏர்போர்ட் சென்று அழைக்க வந்திருக்கும் பொழுது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லைதானே?

இமாவின் உறவினர்கள் இவ்வாண்டு விடுமுறைக்காக இமா தம்பதிகளை கனடா அழைத்தும்,கனடா செல்லாமல் இந்தியா வந்தது நட்புக்களைக்கண்டு மகிழ்வதற்காக மட்டுமே என்ற காரணத்துக்காகத்தான்  என்பதைப்பார்க்கும் பொழுது நட்புக்கு எத்தனை முக்கியத்துவம் தருகின்றார் என்பதை அறிய முடிகிறது.

பக்கத்து நாட்டில்(கொழும்பு) இருந்து கொண்டே அருகே இருக்கும் இந்தியாவுக்கு வராமல்,மிக தூர தேசத்துக்கு (நியுஸிலாந்த்)சென்று குடி அமர்ந்த பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முறையாக இந்தியா  வந்து சென்றார்.இந்திய நட்புக்களின் அன்பும்,நேசமும் மிக சீக்கிரமாக இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.இந்தியாவில் தான் பெற்ற இனிமையான அனுபவங்கள்,சந்தோஷமான தருணங்கள் தாம் இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.

பொதுவாக சமையல் குறிப்புக்கள் கொடுக்கும் நட்புக்களுக்கு பின்னூட்டம் கொடுப்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் என்று விளையாட்டாக பின்னூட்டம் கொடுப்பார்கள்.அப்படியே நானும் அவரது ஃபீஜோவா ரோல் அப்  சமையல் குறிப்புக்கு //ஃபீஜோவா ரோல் அப் பார்த்ததுமே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.உங்கள் ஊர் பனம்பழம் பினாட்டு ஞாபகம் வருது.சிப்ஸும் சூப்பர்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது ஒரு பார்சல் பிளீஸ்.:) //இப்படி விளையாட்டாக பின்னூட்டினேன்.இதனை என்றோ மறந்தும் விட்டேன்.

ஆனால் இமா ஃபீஜோவா தயாரிப்பான ஃபீஜோவா ரெலிஷ் பாட்டில் ஒன்றினை என்னிடம் கொடுத்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அவரது மென் சிரிப்பில்தான் எனக்கு மெள்ளமாக புரிந்தது.

ஃபீஜோவா ரெலிஷ் தயாரிக்கும் பொழுது சர்க்கரை, மிளகாய் ,உப்பு ,கருவா மட்டும் சேர்த்து சமைக்க வில்லை.அவரது அன்பையும் பாசத்தையும் கள்ளமில்லா நட்பையும் சேர்த்து சமைத்து பாதுகாத்து பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்த தருணத்தை எண்ணி நெகிழ்கிறேன்.




24 comments:

Asiya Omar said...

வாவ்! இமாவும் நீங்களும் ஒருவரை ஒருவர் பார்த்து அசந்து விட்டீர்களா? சூப்பர். ஃபிஜோவா ரெலிஷை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி தோழி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையானதோர் சந்திப்பினை வெகு அழகாக சுவையாக எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... இனிமையான சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

ஸ்ரீராம். said...

வாழ்க, வளர்க உங்கள் நட்பு!

பால கணேஷ் said...

இப்படி அன்பா கொண்டுவந்து தர்ற மாதிரி எனக்கு ஃப்ரண்ட்லாம் அமையலையே... கர்ர்ர்ர்ர்.... சந்திப்பின் விவரிப்பில் நட்பின் இனிமையும், இந்தப் பண்டத்தின் ருசியும் விளங்கிடுச்சு!

ஸாதிகா said...

உடன் கருத்துக்கு நன்றி ஆசியா.

ஸாதிகா said...

மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

ஸாதிகா said...

இப்படி அன்பா கொண்டுவந்து தர்ற மாதிரி எனக்கு ஃப்ரண்ட்லாம் அமையலையே//என்னண்ணா இப்படி சொல்லிபுட்டிஹ.உங்களைத்தான் ரெஸ்டாரெண்டுக்கே கூட்டிட்டு போய் சுடச்சுட விருந்து தர்ர சகாக்கள்ளாம் இருக்காகளே:)ந்ன்றி கணேஷண்ணா.

e

RajalakshmiParamasivam said...

நட்பு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையானதோர் சந்திப்பினை வெகு அழகாக சுவையாக எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

ஃபீஜோவா ரெலிஷ் தயாரிக்கும் பொழுது சர்க்கரை, மிளகாய் ,உப்பு ,கருவா மட்டும் சேர்த்து சமைக்க வில்லை.அவரது அன்பையும் பாசத்தையும் கள்ளமில்லா நட்பையும் சேர்த்து சமைத்து பாதுகாத்து பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்த தருணத்தை எண்ணி நெகிழ்கிறேன்.//
அருமையான நெகிழ்வான நட்பு.
வாழ்த்துக்கள் நட்புக்கு.

இமா க்றிஸ் said...

;))

ஆரம்பத்தைப் படிக்கும் போது நடந்தது எல்லாமே மீண்டும் ஒரு முறை கண்முன் வந்து போனது ஸாதிகா. ஸ்கூல் காலத்தில் ட்ரிப் போன மாதிரி ஒரு அனுபவம். ;) அதிக நேரம் உங்களோடு பேசக் கிடைத்த சந்தர்ப்பத்துக்காக பாபுவுக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல வேண்டும். உங்கள் வீட்டில் கழிந்த அந்தக் காலைப் பொழுதும் என்றும் நினைவில் இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல் இந்த இடுகை. ;) இனி பார்த்துத்தான் சமையல் குறிப்பு அனுப்புவேன். எல்லோரும் ஒரு பார்சல் ப்ளீஸ் என்று கேட்கப் போகிறார்கள். ;))

priyasaki said...

நல்லதொரு இனிமையான சந்திப்பினை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.நட்பு தொடர வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

இது இரண்டாவது முறை ஆசியா. பல மணி நேரங்கள் பேசக் கிடைத்தது இம்முறை.

ஸாதிகாவின் இந்தக் இடுகையின் கீழ் கருத்தினைப் பகிர்ந்துகொண்ட சகோதரிகள் ஆசியா, ராஜலஷ்மி, VGK அண்ணா, சகோதரர்கள் தனபாலன், ஸ்ரீராம், பாலகணேஷ் & ஜெயகுமார் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

ADHI VENKAT said...

உங்கள் சந்திப்பின் மகிழ்ச்சி.. எங்களையும் தொற்றிக் கொண்டது...

உங்கள் நட்பு என்றும் தொடரட்டும்..

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர் அப்ப்டியே என்க்கும் இங்கு கொஞ்சூன்டு பார்சல் பிளீஸ் ஸாதிகா அக்கா..
மிக அருமையான சந்திப்பு.. எனக்கும் எல்லாரையும் சந்திக்க ஆசை ஆனால் நான் வரும் போது மற்றவர்களுககு விடுமுறை இல்லை..

Ungal Blog said...

நபர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்கள் வலைதளங்களுக்கு தேவையான திருகுர்ஆன் வசனம், நபி மொழிகள், துவா (பிராத்தனை) போன்ற widget கள் வேண்டுமா? உடனே கிளிக் செயுங்கள்...

http://ungalblog.blogspot.com/p/codes.html

Anonymous said...

நட்பின் சிறப்பு தெளிவாகத் தெரிந்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

நட்பின் சிறப்பு தெளிவாகத் தெரிந்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

vanathy said...

சூப்பர். இதெல்லாம் எப்ப நடந்தது?

இமா, அடுத்த முறை அமெரிக்கா வாங்கோ?

இமா க்றிஸ் said...

;)

Kanchana Radhakrishnan said...

அருமையான நட்பு.
வாழ்த்துகள்.