December 3, 2013

மின்சாரம்




தீபாவளிக்கு ரயில் பட்டாசு விட 
கயிறு தேவை இல்லை

களைக்கூத்தாடிகள் ஏறி நடந்து
வித்தை காட்ட கம்பி கட்ட தேவை இல்லை

தோரணம் கட்ட கட்சிக்காரர்களுக்கு
சணல் செலவு ரொம்பவே மிச்சம்

சிறார்கள் மரத்தை தேடுவதில்லை 
ஊஞ்சல் கட்டி விளையாட

நேற்றுவரை காகங்களும் சிட்டுகளும் 
ஏறி விளையாடிய மின் கம்பிகள்

இன்று மின்சாரம் இல்லாமல் தோரணமாக 
வசதியாக  தொங்குகிறதே வீதிகளில்



32 comments:

Anonymous said...

கவிதை ரசிக்கும்படி இருந்தாலும் சாதாரண மனிதர்களின் கோபத்தைக் காட்டுகிறது..

ஸாதிகா said...

கவிதையை ரசித்து உடன் வந்து கருத்திட்ட சகோ கலியபெருமாளுக்கு நன்ரிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய இல்லை கோபமான (உண்மை) வரிகள்...

ஸாதிகா said...

தொடர் ஊக்கத்திற்கும்,ஓட்டுக்கும் நன்றி தனபாலன் சார்.

Anonymous said...

நல்ல சிந்தனைக் கரு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Asiya Omar said...

சிந்திக்க வைத்த கவிதை.அருமை.

பால கணேஷ் said...

கவுஜ ஜுப்பரு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வஞ்சப்புகழ்ச்சி அணியாகச் சொல்லியுள்ளது .... ரஸிக்கும்படியாக உள்ளது.

மின்சாரம் இல்லாததால் மிகவும் எரிச்சலாகத்தான் உணரமுடிகிறது.

ஹுஸைனம்மா said...

ம்ம்... ரெண்டே ரெண்டுமணிநேர கரண்ட் கட்டுக்கே இப்படி ரௌத்திரம் பொங்குதாக்கும்!! எக்கோவ்... மத்த ஊர்களில் ரெண்டில்ல, நாலில்ல.. பன்னெண்டு மணிநேரமாக்கும்!! சுனாமியா மாறி சுழண்டடிச்சிருக்கவேண்டிய அவங்களே பொறும்ம்ம்ம்ம்ம்ம்மையா இருக்காங்களாக்கும்!! :-) :-D :-))))))))

ஆமா, போன வருஷம் உங்க ஏரியாவுல கரண்ட் கட்டே இல்லேன்னீங்களே? அதுக்கும் ஆப்பா இந்த வருஷம்? ஹா.. ஹா..

இளமதி said...

அட.. அட.. என்ன கற்பனை ஸாதிகா!

அசத்திட்டீங்க போங்க!..:)

உண்மையிலேயே சூப்பர் கவிதை!...

வாழ்த்துக்கள்!

த ம.4

கோமதி அரசு said...

மின்சாரக் கவிதை அருமை ஸாதிகா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை.
உண்மையான வரிகள்

Anonymous said...

வணக்கம்
கவிதை அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி வேதாம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

சென்னை பாஷ்யில் அட்டகாசமாக கருத்திட்ட கணேஷண்ணாவுக்கு நன்றி.

ஸாதிகா said...

தொடர் கருத்துக்கு ஊக்கத்திற்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

ஹுசைனம்மா உங்கள் முதல் பாரா வாஸ்தவம்தான்.போன வாரம் ஊருக்கு போய் இருந்து பட்ட பாடு..ரெண்டே நாளில் என்னை மறுபடி சென்னைக்கு திரும்ப வைத்து விட்டது.இனி இந்த மாதம் இறுதியில் போவதை நினைத்தால் வெறுப்பாக உள்ளது.அந்த ஆதங்கத்தில்தான் கவுஜை பிறந்தது.

//ஆமா, போன வருஷம் உங்க ஏரியாவுல கரண்ட் கட்டே இல்லேன்னீங்களே? அதுக்கும் ஆப்பா இந்த வருஷம்? ஹா.. ஹா..//சுழற்சி முறையில் வரும் இரண்டாம் தேதி முதல் மின் தடை என்று நானும் பேப்பரில் படித்து விட்டு அதற்கு தயாராகி விட்டோம்.ஆனால் பாருங்க தேதி மூன்றாகி விட்டது .இன்னும் எங்கள் பக்கம் மின் தடை வரவில்லை.ஹா ஹா..இனி எந்நேரமும் தடங்கல் இல்லாமல் கம்பியூட்டர் முன்னாடி இருக்கலாம்,உங்கள் வீட்டு கிச்சன் சிம்னியை ஆன் பண்ணுங்க ஹுசனம்மா:)

ஸாதிகா said...

சூப்பர் என்று கருத்திட்ட இளமதிக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கோமதிம்மா,

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ கரந்தை ஜெயக்குமார் .

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

RajalakshmiParamasivam said...

மின்சாரக்கவிதை மிக அருமை ஸாதிகா.மிகவும் ரசித்தேன்.

Jaleela Kamal said...

mika arumai yaana kavuja

shameeskitchen said...

கவிதை மிகவும் அருமை அக்கா...வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

கவிதை அருமை.

ADHI VENKAT said...

அருமையான வரிகள்...

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலீலா,

ஸாதிகா said...

மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

ஸாதிகா said...

மிக்க நன்றி ஷமீ

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆதி.

Unknown said...

உண்மை வரிகள்

www.amarkkalam.net