December 9, 2013

அஞ்சறைப்பெட்டி - 9





1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே?

2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.

3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதாகவும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.

4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்!

5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.




30 comments:

Menaga Sathia said...

அஞ்சறைப்பெட்டி..அசத்தல் பெட்டி!!

Thenammai Lakshmanan said...

சூப்பர்.. வயிற்றுக்குள் லாக்கர் என்ற வார்த்தை சிரிப்பை மூட்டி விட்டது ஸாதிகா :)

Asiya Omar said...

சூப்பர்,ரொம்ப நாள் ஆச்சே ! அஞ்சறைப்பெட்டியை திறந்து.புதிதாக நிரப்பிய மசாலா கமகம்ன்னு இருக்கு.தேவையான பகிர்வு.

அம்பாளடியாள் said...

சிறப்பான தொடர் மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் .

Ranjani Narayanan said...

இங்கும் ஒருமுறை எங்களுக்கு பெட்ரோல் பங்கில் இந்த மாதிரி ஒரு கசப்பு அனுபவம். நாங்கள் காரிலேயே உட்கார்ந்திருந்தோம். இந்தப்பக்கம் ஒருவர் பெட்ரோல் நிரப்ப வந்தார். அதேசமயம் இன்னொருபக்கத்தில் வேறொருவர் வந்து எங்களிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்களுக்குப் பின்னால் வந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து எங்களைப் பார்த்து சத்தம் போட்டார்:'என்ன ஸார் இது, நீங்கள் நீங்கள் பாட்டுக்கு காரில் உட்கார்ந்திருக்கிறீர்கள். இங்கு பாருங்கள், இவர் பக்கத்தில் ஒரு கேன் வைத்துக் கொண்டு அதில் பெட்ரோல் நிரப்பிக்
கொண்டிருக்கிறார். உங்களுக்கு பாதிதான் போட்டிருப்பார். வெளியில் வந்து நடக்கும் அக்கிரமத்தைப் பாருங்கள்' என்றார். நாங்கள் அதிர்ந்து விட்டோம். இப்போதெல்லாம் இருவரும் இறங்கி பெட்ரோல் போடுவதை பார்க்கிறோம்.

ADHI VENKAT said...

அஞ்சறைப்பெட்டி மசாலா வாசனையோடு சிறப்பாக இருக்கிறது...

செருப்புக்கு காமராவா!! பரவாயில்லையே... ஆஸ்பத்திரி, கோவில் என்று என் செருப்புகள் காணாமல் போய்விட்டன...:)) பொது இடங்களில் வைத்தால் பரவாயில்லையே..

பல வருடங்களாக உள்ள தில்லி மெட்ரோ இதுவரை தூய்மையாகத் தான் உள்ளது. வண்டி உள்ளே துப்பினால், குப்பை போட்டால் கேமிராவில் கண்காணிக்கப்பட்டு அபராதம் கட்ட நேரிடும்..

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல்...!

வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அஞ்சறைப்பெட்டி தகவல்கள் அனைத்தும் அருமை.

பாராட்டுக்கள்.

’வயிற்றுக்குள் லாக்கர்’ ;)

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

priyasaki said...

அசத்தல் அஞ்சறைப்பெட்டி.இங்கு பெட்ரோல் பங்க் ல் நாங்கள்தான் பெட்ரோல் போடனும்.வேலையாட்கள் இல்லை.சில பங்க் ல் கார்கண்ணாடி துடைத்துவிட மட்டும் ஆள் இருப்பார்.வீடியோ கமரா நாலாபக்கமும் பூட்டியிருப்பார்கள்.பணம் கொடுக்காமல் போகமுடியாது.

ஸ்ரீராம். said...

1) எங்கள் வீடுகளிலும் பெண் வீட்டில்தான் திருமணம் செய்வார்கள்.

2) சுமைக்கூலி அனுபவம் எங்களுக்கும் உண்டு.

3) இதே பெட்ரோல் அனுபவம் எங்களுக்கும் நடந்தது. மேனஜர் அவர் ரூமுக்கு எங்களை அழைத்துச் சென்று எங்களையும் வைத்துக் கொண்டே அங்கிருந்த கணினியில் செக் செய்தார். போடப் பட்ட நேரம், அளவு, ஆகியவற்றை எங்களுக்கும் விளக்கிக் காண்பித்து சரி செய்தார்.

4) அடுத்த ஆண்டு கூட மெட்ரோ ரயில் விஷயத்தில் முழு வேலைகள் முடியப் போவதில்லை. கோயம்பேடு கிண்டி இடையே நிச்சயம் சர்விஸ் தொடங்கி விடும்! நீங்கள் சொல்வது போல வெற்றிலைச் சாறு, குப்பைகள் இல்லாமலிருந்தால் சரிதான்.

RajalakshmiParamasivam said...

அஞ்சறைப் பெட்டி செய்திகள் மிகவும்
நன்று. அதுவும் இந்த பெட்ரோல் விஷயம் நல்ல ஒரு எச்சரிக்கை .நன்றி சாதிகா.

vanathy said...

செருப்பு திருடன், பெட்ரோல் திருடன்.. அப்பாடா எத்தனை வகை!!!

Jaleela Kamal said...

இந்த பெட்ரோல் திருட்டு பெரும் கொள்ளையாக இருக்கிறதே?

திருமணம் முன்பெல்லாம் எங்க வீடுகளிலும் அப்ப்டி தான் நடந்தது.

இப்ப எல்லாம் மாறி போச்சு.

இந்த தடவை நான் சென்னை வந்திருந்த போதே மெட்ரோ பணி முடிந்து விடும் ஒரு வலம் வரலாம் என எண்ணி இருந்தேன்/

ஆனால் அதற்கு பதில் டெல்லி மெட்ரோவில் போனேன் ரொம்ப சூப்ப்ர்..


செருப்புக்கு கேமிரா வா ரொம்ப நல்லதா போச்சு/

மொத்தத்தில் அஞ்சறை பெட்டி விடயம் மிகச்சுவாரசியம் ஸாதிகா அக்கா.

உங்கள் நிஏறைய பதிவுகளுக்கு உடன் வர முடியவில்லை, எனக்கு தமிழ் பாண்ட் சரிவர வேலை செய்ய வில்லை.,

ஆகையால் சரியாக கருத்தும் தெரிவிக்க முடியவில்லை.

கார்த்திக் சரவணன் said...

கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறது... பெட்ரோல் நிரப்பும்போது கைபேசியில் பேசக்கூடாதே. ஏன், பெட்ரோல் பங்கிலேயே யாரும் கைபேசி உபயோகிக்க மாட்டார்களே... தங்கள் மகனிடம் நன்கு விசாரிக்கவும்....

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

Yaathoramani.blogspot.com said...

அறிய வேண்டிய தகவல்களுடன்
அஞ்சறைப்பெட்டி அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதொரு தொகுப்பு
நன்றி

ஸாதிகா said...

கருத்தளித்த மேனகா,தேனம்மை,ஆசியா,அம்பாளடியாள்/ரஞ்சனிம்மா,ஆதி,தன்பாலன்சார்,வி ஜி கே சார்,பிரியசகி, ஸ்ரீராம் சார்,ராஜலக்‌ஷ்மிபரமசிவம்,வானதி,ஜலீலா, Maatamil .ஸ்கூல் பையன்,ராமலக்ஷ்மி ,ரமணி சார் சகோ கரந்தை ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி.

ஸாதிகா said...

என் மகனிடம் விசாரித்தேன்.ஆபத்தான இடத்தில் உபயோகிப்பதற்கு ஏற்றபடி கைபேசிகள் தாயாரிக்கப்படாததால்,அதில் இருந்து வெளிப்படும் தீப்பொறி,தீ விபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பெட்ரோல் பங்குகளில் கைபேசியில் பேச அனுமதிக்க படுவதில்லை .அவசரத்துக்கும் மொபைலை பாக்கெட்டில் வைத்து இயர் போனை காதில் மாட்டி பேசினேன் என்று சிரிக்கின்றார். இளம் கன்று பயம் அறியாது.பெட்ரோல் பங்கில் வைத்தும், வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் பொழுதும், போன் பேசக்கூடாது,சீட் பெல்ட் போடாமல் 4வீலர் ஒட்டாக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறேன்,மிக்க நன்றி ஸ்.பை

shameeskitchen said...

அஞ்சறை பெட்டி மணக்கிறது..பகிர்ந்த தகவல்கள் அனைத்து அருமை..

மகேந்திரன் said...

ஐந்தறைகளும் தாங்கி வந்த தகவல்கள்
அனைத்தும் மிக அருமை சகோதரி.
அதிலும் முதலறை செய்தி...
செம ஐடியா...

Anonymous said...

அருமையான 5 அறைப் பெட்டித் தகவல்கள் சகோதரி.
ரசனையானதாக இருந்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

அருமையான 5 அறைப் பெட்டித் தகவல்கள் சகோதரி.
ரசனையானதாக இருந்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

mமிக்க நன்றி ஷமி.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ மகேந்திரன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேதாம்மா.

மனோ சாமிநாதன் said...

அஞ்சறைப்பெட்டி ரொம்பவும் உபயோகமானதாக இருக்கிறது. மெட்ரோ ரயில் விஷயத்தில் நீங்கள் படும் கவலை தான் எனக்கும்! ஏற்கனவே ஏர்போர்ட் டாய்லட்கள் அப்படித்தான் இருக்கின்றன. தற்போது மோசமான ஏர்ப்போர்ட்கள் வரிசையில் முதல் பத்து இடங்களில் நம் கொல்கத்தாவும் சென்னையும் இருக்கின்ற‌னவாம்.

இந்த பெட்ரோல் பங்குகளில் நடக்கும் விஷயங்கள் நல்ல விழிப்புணர்வு செய்தி ஸாதிகா! இந்தப் பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் படித்தவர்கள் இனி கவனமாக இருப்பார்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுருக்கமாக தகவல்களைக் குறிப்பிட்டு விட்டு அதனோடு உங்களின் விமரிசனத்தையும் சுவையாகத் தந்தது படிக்க விறுவிறுப்பாக இருக்கின்றது.

த. ம. +1

அம்பாளடியாள் said...

இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ !