November 27, 2013

காலத்தின் கோலம்.



எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் சமீபத்தில் எழுதிய இடுகையின் முதல் வரியை படித்த இன்ஸ்பிரேஷன் தான் இந்த பதிவெழுதக்காரணம்

1967
மகன்:ப்பா..பா....பா

அப்பா:என்னடா செல்லம் வேண்டும்?

மகன்:பா..பா..பா

அப்பா:அட..என் தங்கத்துக்கு பலூனா வேண்டும்?ஐயோ..பாக்கெட்டில் சில்லரை இல்லையே..இந்தப்பா பலூன்காரா.சித்த நேரம் பொறு..நாலே எட்டில் வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.

அம்மா:ஏங்க,வீட்டை பூட்டிட்டு கோயிலுக்கு கிளம்பியாச்சு.இப்ப எதுக்கு பலூன்?

அப்பா:குழந்தை ஆசைப்படுறாண்டி..அவனுக்கு இல்லாததா?கோவில் எங்கே ஓடிப்போகப்போறது.இதோ..ரெண்டே நிமிஷத்திலே வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.

1974
மகன்:எப்ப பாரு தயிர் சாதமும் ஊறுகாயும்தானா?சந்துரு,கோவிந்தன் எல்லோரும் வகை வகையாக சாப்பாடு எடுத்துட்டு வர்ராங்க..

அப்பா:அடியே..வழக்கம் போல் நமக்கு தயிர்சாதம் இருக்கட்டும்..பையனுக்கு பிரிஞ்சி சாதம்,தேங்காய் சாதம் சப்பாத்தி இப்படி இனி நீ வித விதமாக செய்து கொடுத்தாகணும்.வளருகிறபிள்ளை நல்லா சாப்பிடட்டும்.

1982
அம்மா:என்னங்க,அவனவன் ஸ்கூலுக்கு சைக்கிளில் போகிறான்.நம்ம பிள்ளை புஸ்தக மூட்டையை சுமந்துகொண்டு மூச்சிரைக்க நடந்து போவதை பார்க்க மனசு ஆறலே.ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்துடுங்க.

அப்பா:இப்ப சைக்கிள் வாங்குறதுக்கு பணம் ஏது?பொங்கல் வேற வருது?

அம்மா:பொங்கலுக்கு பசங்களுக்கு மட்டும் புதுசு எடுத்துடுவோம்.தீபாவளிக்கு கட்டியதை இஸ்த்ரி பண்ணி நாம கட்டிக்கலாம்.

அப்பா:இதுவும் நல்ல ஐடியாகவாகத்தான் இருக்கு.நமக்கு என்னத்தை புது துணி வாங்கறது?பிள்ளைங்க சந்தோஷம்தான் நமக்கு சந்தோஷம்.அதுக மனசு நிறைய சிரித்தால் நமக்கு புதுசு கட்டிய மாதிரித்தான்.

1986
மகன்:அப்பா,காலேஜுக்கு போக வர ஒரு பைக் வேண்டும்.

அப்பா:இப்ப தானே கடனை உடனை வாங்கி பற்றும் பற்றாததுக்கு உங்க அம்மாவுடைய செயினை விற்று காலேஜ் சீட் வாங்கினோம்.இப்ப எப்படிப்பா?

மகன்:லோன் வாங்கிக்கலாம் அப்பா.மாசா மாசம் உங்கள் சம்பளத்தில் கட்டிக்கலாம்

அம்மா:யோசிக்காதீங்க..இந்த மாசத்தோட நாம போடும் சீட்டு முடியுது.மறு சீட்டு போடாமல் அதை லோனாக கட்டிடலாம்.

அப்பா:முதல்லே 20 % கட்டியாகணுமே?

அம்மா:கவலையே வேண்டாம்தீபாவளி சமயத்திலே நாம போட்ட எப் டி மெச்சூரிட்டி ஆகுது இல்லே.அந்த பைசாவை எடுத்துக்கலாம்.நமக்கு எதுக்கு இப்ப சேமிப்பு?நம்ம பிள்ளை பெரிய ஆளாக போய் நமக்கு தராமல் யாருக்கு தரப்போறான்..இல்லடா செல்லம்..

1990
மகன்:அப்பா,நான் பர்ஸ்டு கிளாஸில் பாஸ் செய்துட்டேன்.பி.ஜி பண்ண வேண்டும்?

அப்பா:இப்பவே கடன் மூச்சை முட்டுதுப்பா..இதுக்கு வேற எப்படி..

மகன்:ஏம்ப்பா..நான் மேலே மேலே படித்தால் சம்பளமும் ஜாஸ்தியாகுமேப்பா.நான் சம்பாதிக்கும் வரை கொஞ்சம் பல்லை கடித்துட்டு சிரமம் பார்க்காமல் செலவு பண்ணிட்டோம்ன்னா என் காலில் நான் நின்னதுக்கப்புறம் பிரச்சினை இல்லைப்பா.நிம்மதியா காலத்தை ஓட்டலாம்.

அப்பா:எனக்கு ஒரு ஐடியாகவும் தோன்ற மாட்டேன்கிறதே..

மகன்:யோசிக்காதீங்கப்பா..நேற்று கூட நீங்களும் அம்மாவும் நம்ம கிராமத்திலே உள்ள நாலு செண்ட் நிலத்தை பற்றி பேசிட்டு இருந்தீங்களே.பேசாமல் அதை விற்றோம்ன்னா இருக்கற கடனை அடைக்கவும் ஆச்சு என் படிப்பு செலவுக்கும் ஆச்சு.அம்மாவின் மொட்டை கழுத்துக்கு மெல்லிசா ரெண்டு சவரனில் செயின் கூட வாங்கிக்கலாம்.

அப்பா:......

மகன் :யோசிக்கறதுக்கு என்னப்பா இருக்கு?நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டால் இதே போல் எத்தனை இடம் வாங்கப்போறோனோ.

1994
மகன்:அப்பா,நான் கார் வாங்கலாம்ன்னு இருக்கேன்.அதனாலே கொஞ்ச நாளைக்கு என்னிடம் இருந்து என் சம்பளத்தை எதிர் பார்க்காதீங்க..

அப்பா:........

மகன்:ஏம்ப்பா..மவுனமாகிட்டீங்க.நாளைக்கு நான் கார் வாங்கினால் உங்களுக்கு கவுரவம் இல்லையா?என் கூட முன் சீட்டில் ஏஸியை போட்டுட்டு ஜம் என்று உட்கார்ந்துட்டு ஊரையே சுற்றிப்பார்க்கலாம்.அம்மா உனக்கு பின் சீட் தான் ஒகேவா..

1998:
அம்மா:தம்பி அப்பாவுக்கு ரெண்டு நாளா ஜுரம்.சித்த காரில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயேன்..

மகன்:சாரிம்மா..ஆட்டோ பிடித்து போய்க்குங்க...நானும் மீனாவும் சேர்ந்து அவங்கம்மா வீட்டுக்கு போகப்போறோம்.

2000
அப்பா:....தம்பி..உன் அக்கா புருஷனுக்கு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணி இருக்கு. உன்னால்தான் போக முடியலே.நாங்களாவது போய் பார்த்துட்டு வந்துடுறோம்.போகாவிட்டால் குறையாகப்போய்டும்அனுப்பி வையப்பா..

மகன்:அச்சச்சோ..அம்மா உனக்குத்தான் தெரியுமே நானும் மீனாவும் குழந்தையும் பங்களூர் மைசூர் டூர் போக பிளான் போட்டு இருக்கோம்.இந்நேரம் பார்த்து அக்காவை பார்க்கணும் ,அத்திம் பேரை பார்க்கணுன்னா எப்படி?போன் போட்டு பேசிட்டே இல்லே.அது போதும்.

2002
அம்மா:ரெண்டு நாளா இருமல் வாட்டி எடுக்குது.உங்கப்பாவை தூங்கவே விடலே.ஆஃபீஸ் விட்டு வர்ரச்சே இருமல் டானிக் வாங்கிட்டு வாப்பா.

மகன்:அம்மா..மாசக்கடைசி.அப்பாவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச்சொல்லு.

மருமகள்:ரெண்டு துண்டு சுக்கைத்தட்டிப்போட்டு வெந்நீரை குடித்தால் இருமல் தானா போய்டப்போறது.இதுக்கு போய் எதுக்கு சிரப்புக்கு தண்டமா செலவு செய்யணும்?

மகன்:அதுவும் சரிதான்.


41 comments:

பால கணேஷ் said...

ithu Nitharsanam!

ஸாதிகா said...

வாங்கண்ணே.மொபைலில் இருந்து சுடச்சுட பின்னூட்டாமா..பேஷ் பேஷ்..உடன் வருகைக்கு மிக்க நன்றிண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

அடப்பாவி... மகனா அவன்...?

ம்... ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை...

ஸ்ரீராம். said...

உண்மையிலேயே இப்படித்தான் நடக்கிறது. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு முன்னாடியே சொல்லி, தயார் பண்ணியும் வச்சுடறோம்... அப்புறம் எப்படி இதெல்லாம் மாறுவது? எனக்கு அந்த முதல் வரியைப் படித்தவுடன் (அப்பாவின் காசை மகன் செலவு செய்யும் சுதந்திரம்) நான் என் அப்பாவிடம் எப்படி நடந்து கொண்டேன் என்று எண்ணிப் பார்த்தேன்.

ஸ்ரீராம். said...

நன்றி DD... எபி வந்து அனௌன்ஸ் செய்ததற்கு!

கார்த்திக் சரவணன் said...

சரியாக சொன்னீர்கள்....

கார்த்திக் சரவணன் said...

சரியாக சொன்னீர்கள்....

Yaathoramani.blogspot.com said...

படிக்கக் கசப்பாக இருந்தாலும்
இதுதானே நிஜம்
சொல்லிச் சென்றவிதம் மிக மிக் அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெரும்பாலான பயல்களும் இப்படித்தான் இருப்பானுங்க.

பெற்றோர்கள் தான் மிகவும் சுதாரிப்பா இருக்கணும்.

நல்லதொரு யதார்த்தமான, எச்சரிக்கையூட்டும் பதிவு.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Anonymous said...

ஆமாம் இது தான் நடக்கிறுது. உண்மை...உண்மை...
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

ஆமாம் இது தான் நடக்கிறுது. உண்மை...உண்மை...
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

RajalakshmiParamasivam said...

உண்மையை அழகாய் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள்.

Asiya Omar said...

எதார்த்தமான விழிப்புணர்வூட்டும் கதை.பெற்றோர்கள் அனைவரும் தியாகிகள் தான்.ஆனால் எல்லாக் குழந்தைகளும் இப்படியிருப்பதில்லை.இந்தக் காலக் குழந்தைகள் புத்திசாலிகள்.
அவர்களுக்கு நாலு உலகம் தெரிய வாய்ப்பு அதிகம். புரிந்து நடந்து கொள்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

சாந்தி மாரியப்பன் said...

பாசம் என்னிக்குமே தண்ணீர் மாதிரி. தண்ணீர் கீழே நோக்கிப்பாயுமே தவிர மேல் நோக்கிப் பாயாது. அப்படியே வலுக்கட்டாயமாப்பாய வெச்சாலும் மறுபடியும் கீழேதான் வரும். பேசாம மனசுக்குப் பூட்டுப் போட்டுக்கறது நல்லது. அவ்வ்வ்வ்வ்..

Seeni said...

unmaithaan...

ஸாதிகா said...

வாங்க தனபாலன் சார்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நன்றி ஸ்ரீராம் சார்.உங்கள் பதிவின் முதல் வரிகளைப்படித்ததுமே இந்த மாதிரி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

ஸாதிகா said...

நன்றி ஸ்கூல் பையன்.

ஸாதிகா said...

உண்மைதான் ரமணி சார் படிக்க கசப்[பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

ஸாதிகா said...

பெற்றோர்கள் தான் மிகவும் சுதாரிப்பா இருக்கணும்.//மிக சரியாக சொன்னீர்கள் வி ஜி கே சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராஜலக்‌ஷ்மி பரமசிவம்.

ஸாதிகா said...

புரிந்து நடந்து கொள்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.//சுயநலமாகவும் நடந்து கொள்கின்றனர் பெரும்பான்மையோர்.நன்றி ஆசியா.

ஸாதிகா said...

சாரல் தத்துவம் இங்கும் மழையாய் பொழிகிறதே.நன்றி சாரல்.

இமா க்றிஸ் said...

//உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!// என்று ஸாதிகா சொல்லி இருக்கிறீங்க. பொன்னா பித்தளையான்னுல்லாம் தெரியாது. என் கருத்து என்பதைவிட... என் மனநிலை இது என்பதுதான் பொருத்தம்.

எனக்கு வாய்ச்ச வாழ்க்கை குறைவில்லாத வாழ்க்கை. செபா தன் பிள்ளைகள் பற்றிக் குறை எதுவும் சொல்ல மாட்டாங்க நிச்சயம். எங்க அத்தைக்கும் அந்த நிலமை இருந்ததில்லை. என் பிள்ளைகளும் என்னை சந்தோஷமா வைச்சு இருக்காங்க. எங்க சந்தோஷம் மற்றவர்களுக்கும் அமையணும் என்று ஒரு நிமிடம் பிரார்த்திக்கிறேன்.

குழந்தைகள் பெற்றோர் மனசு நோகாம நடக்கணும், அவங்களைப் பாசமாக நடத்தணும் என்கிறது உண்மைதான். அதே போல, 'என் குழந்தை' என்கிற பாசம் என் மனசுல இருந்தால் ஆயிரம்தான் பெரிய தப்பு பண்ணினாலும் நான் மன்னிப்பேன்ல! எனக்கு வருத்தம் தோணாது. என் பிள்ளை - அவர் சந்தோஷம்தான் என் சந்தோஷம் என்று நினைக்க... இன்னும் அதிகம் பாசம்தான் வரும். எதையும் இன்னொருத்தர்ட்ட சோகமா பகிர்ந்துக்கத் தோணாது. அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போவேன். பசங்க சந்தோஷத்தில் மகிழும் மனசு என்னிடம் இருந்தால்... நிச்சயம் அது என் பிள்ளைக்கும் தொற்றி இருக்கும். ஒரு நேரம் இல்லாட்டா இன்னொரு நேரம் நிச்சயம் புரிஞ்சுக்க மாட்டாங்களா! பிள்ளைகளுக்குப் படிப்பையும் பணத்தையும் கொடுத்தால் மட்டும் போதாது. எங்கள் நேரத்தைச் செலவளிக்க வேண்டும். எங்கள் அன்பை அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை... பிள்ளைகளைக் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. கிழவி இமாவை தூக்கிப் பறிக்க, வயதான காலத்தில் எடுபிடி வேலைக்கு ஆள் வேண்டுமென்று ப்ளான் பண்ணித்தான் பிள்ளையைப் பெற்றேனா! இல்லையே! என் இளமைக்கால சந்தோஷமான, அமைதியான வாழ்க்கையின் பிரதிபலிப்பு என் குழந்தைகள். அவர்கள் எனக்கு எதுவும் செய்யத் தேவையில்லை. என்னிடம் வந்து பிறந்த பொழுதே எனக்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்துவிட்டார்கள். என்றும் இயல்பாக என் குழந்தைகளாக சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டும். அம்மாவாக என் கடமையை நான் எப்பொழுதும் சரியாகச் செய்ய வேண்டும். அது எதுவரை! என் கடைசி மூச்சு வரை.

அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் இல்லை.
என் எதிர்காலம் அவர்களுக்கு சுமையாக இல்லாமல் எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறேன். காரணம்... எனக்கு சுயநினைவு இல்லாத பொழுதும் கூட அவர்கள் சிரமப்படக் கூடாது. என் பிள்ளைகள் நொந்து போவதை நான் தாங்க மாட்டேன்.

//மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!// கொடுப்போம் ஸாதிகா. செபா கொடுத்த மாதிரியைப் பின்பற்றி, மகள் இமா இன்று சந்தோஷமாக இருக்கிறேன்.

எம் பெற்றோரையும் என் பிள்ளைகளையும் 'நாம்' முடிந்த வரை குறையேதும் இல்லாமல் வைத்திருப்போம். குறையேதும் இல்லாமல் வாழ்வோம்.

Anonymous said...

வணக்கம்
இன்றைய வாழ்க்கை யதார்தம் அறிந்து எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

பெரும்பாலும் இன்றைய நிலைமை இதுதான் என்று நினைக்கின்றேன்.

ஸாதிகா said...

அன்பின் இமா,மிக அருமையாக அபாரமாக பின்னூட்டமிட்டு இருந்தாலும் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் உண்டு.பெரும்பான்மையான பிள்ளைகள் இப்படித்தான் இருக்கின்றனர்.

கவனிக்க,எல்லோரும் என்று நான் சொல்ல வரவில்லை.பெருன்பான்மையானோர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழகத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிக்கிடந்தாலும் அதனை யாருமே ரசிப்பதில்லை.நிறைய மாற்றுக்கருத்துக்கள் உண்டு.

பெற்ற தாயை பீச்சில் விட்டு விட்டு ஓடிப்போன மகன்கள் உண்டு.இப்படி சம்பவங்கள் நாம் தொலைவில் இருந்தும்,ஊடகங்கள் வழியாகவும் அறிந்து கொண்டுதான் உள்ளோம்.

//அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் இல்லை.
என் எதிர்காலம் அவர்களுக்கு சுமையாக இல்லாமல் எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறேன். // இது அனைவருக்கும் அமைவது என்பது சாத்தியமில்லைதானே இமா?

யதார்த்தத்தை மீறி சில மாற்றுக் கருத்துக்கள் உங்கள் பின்னூட்டத்தில் இருந்தாலும் நிறையவே சிந்திக்கவும் வைத்து விட்டது உங்கள் நீள பின்னூட்டம்.நன்றி தோழி.

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

ஸாதிகா said...


பெரும்பாலும் இன்றைய நிலைமை இதுதான் என்று நினைக்கின்றேன்//உண்மைதான்.முதல் வாரத்தையை அண்டர்லைன் போட வேண்டும்:) நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்.

ADHI VENKAT said...

இது தான் வாழ்வின் நிதர்சனம்....:(((

ஆனால் எல்லோரும் இதுபோல் இருப்பதில்லை...

சிறப்பாக விவரித்திருக்கிறீர்கள்.

ஹுஸைனம்மா said...

எனக்கும் இமாவின் கருத்துதான். பாசம் இருக்க வேண்டும்தான். ஆனால், அதீத எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில்.

தகுதி-வசதி இருந்தாலும், தேவைக்கு அதிகம் மகனு/ளுக்காகச் செலவு செய்யவும் வேண்டாம், பின்னர் அவர்களிடம் எதிர்பார்க்கவும் வேண்டாம்.

சில விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலும் (குறிப்பாக, இந்திய) பெற்றோர், மகன்களை ஒரு ‘இன்வெஸ்ட்மெண்ட்’ - ஆகவே பார்க்கின்றனர் என்றும் தோன்றுகிறது.

ஹுஸைனம்மா said...

//என் எதிர்காலம் அவர்களுக்கு சுமையாக இல்லாமல் எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறேன். காரணம்... எனக்கு சுயநினைவு இல்லாத பொழுதும் கூட அவர்கள் சிரமப்படக் கூடாது. //

எல்லா பெற்றோர்களாலும் இது சாத்தியப்படாது. வயதான பெற்றோர்களைப் பராமரிப்பது பிள்ளைகள் கடமை - ஆனால், அதை உடனிருந்து அவர்களே செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளப் பழகிவிடும் மனதை இறைவன் தரப் பிரார்த்திக்கிறேன்.

Menaga Sathia said...

இப்படியும் இருக்கிறார்கள்,நிதர்சன உண்மை அக்கா...

இது ஒரு எச்சரிக்கையூட்டும் பதிவு,நாமதான் வருங்காலத்தை நினைச்சு சுதாரிச்சுக்கணும்..

அப்பா சம்பாதிக்கும் காசை மகனுக்கு செலவு செய்ய உரிமை இருக்கு,மகன் சம்பாதித்த காசை செலவு செய்ய அப்பாவுக்கு நினைக்க கூட உரிமையில்லை போல..

ஸாதிகா said...

ஆனால் எல்லோரும் இதுபோல் இருப்பதில்லை..//இதுவும் உணமை தான் கருத்துக்கு நன்றி ஆதி.

ஸாதிகா said...

தகுதி-வசதி இருந்தாலும், தேவைக்கு அதிகம் மகனு/ளுக்காகச் செலவு செய்யவும் வேண்டாம், பின்னர் அவர்களிடம் எதிர்பார்க்கவும் வேண்டாம். //கரெக்ட் ஹுசைனம்மா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

+1//???????

நன்று நம்பள்கி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

சென்னை பித்தன் said...

இதுதான் இன்றைய நடப்பு!

Anonymous said...

அழகாக வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள்..கால ஓட்டத்தால் மனிதர்கள் எப்படியெல்லாம் மாற நேரிடுகிறது..மாற்றம் ஒன்றே மாறாதது என்று இதைத்தான் கூறினார்களோ...

தேன் நிலா said...

நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு.. என்ன செய்ய? பெரும்பாலான பிள்ளைகள் அப்படிதானே இருக்கிறார்கள்..

++++++++++++++++++

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!