அந்த நாளில் மழைகாலம் வந்துவிட்டாலே முட்டைக்காளான்,பொன்னிக்குருவி,வண்ணத்துப்பூச்சி,தும்பி என்று கூத்தடித்த காலம் நினைவுக்கு வருகிறது.மழைகாலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே தும்பிகள் பறந்து விளையாடுவது மிகவும் ரசனைக்குறியது.
செடிகொடிகள்.மதிற்சுவர்கள் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தும்பியை பிடித்து விளையாடி,இம்சை படுத்தி ரசிப்பது சிறார்களுக்கு வேடிக்கையான வாடிக்கை.தும்பிகளில் பல அளவுகள் பல ரகங்கள் உள்ளன.உலகில் 6000 வகை தும்பிகள் உள்ளனவாம்.முட்டைகண்களுடன்,பலவண்ணங்களை பிரதிபலிக்கும் பெரிய தும்பிகள்,மிகவும் மெலிதாக இருக்கும் ஊசித்தும்பிகள்...இதில் ஊருக்கு இளைத்தவன் இந்த ஊசித்தும்பிகள்தான்.உண்மையில் ஊசித்தும்பிகள் ஐயோ பாவம் போல் இருக்கும்.மிக சுலபமாக பிடித்து விடமுடியும்.முட்டைக்கண்களுடன் கூடிய பெரிய தும்பியை சாமான்யமாக பிடிக்க இயலாது.
தும்பிகளின் வாலில் நூலால் கட்டி அதனை பறக்கவிட்டு மகிழ்ந்து கூக்குரல் இட்டு கும்மாளம் போடுவது அந்நாளைய சிறார்களுக்கு வாடிக்கை.
தும்பி ஒரு பூச்சி குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான உயிரினம். தட்டாரப்பூச்சி.தட்டான்,ஊசித்தட்டான்,,தும்பி இப்படி பல நாமகரணங்களால் அழைக்கின்றனர்.ஆங்கிலத்தில் Dragonfly எனப்படும்.மிகச்சிறிய ஜந்துவாயினும் இதன் பார்வைத்திறன் அளப்பறியது.வெகுதூரத்தில் இருக்கும் எதனையும் மிகவும் இலகுவாகவும் கூர்மையாகவும் இனம் கண்டுக்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது.
சராசரியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் தி்றன் கொண்ட தும்பிகள் உணவுத்தேடலின் போது அதன் வேகம் அபாரமாக அதிகரிக்கின்றது.இந்த தும்பியை சில நாட்டு மக்களின் விருப்ப உணவாகவும் உட்கொள்ளுகிறனர்.
மழை வருவதற்கு முன்னர் தும்பிகள நிறைய பறக்ககண்டால் மழைவருவதற்காண அறிகுறி என்றும் கிராமத்து வாழ் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அழகழகு வண்ணங்களில் பட்டுப்போன்ற உடல் அமைப்புக்கொண்ட சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் மயக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அடுத்ததாக மனம் கவரும் ஒரு அபூர்வ உயிரினம் இந்த தும்பிகள்
மதிற்சுவரிலும் செடிகொடிகளிலும் பதுங்கி நிற்கும் தும்பிகளின் பின்னாலேயே போய் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் இறுக்கமாக இணைத்துக்கொண்டு பம்மி பம்மி அருகில் போய்
காத்தட்டான்
தும்பித்தட்டான்
தம்பி வர்ரான்
நின்னுக்கோ
காத்தட்டான்
கள்ளத்தட்டான்
கள்ளன் வர்ரான்
ஓடிப்போ
Tweet |
13 comments:
sako...!
manam kanathu vittathu...
ஆஹா அந்த நாள் ஞாபகம். எனக்கு தும்பி எனில் பயம் ஏனெனில் அது சரியான உஷார், நன்கு செட்டை அடிக்கும், இறுக்கிப் பிடித்தால் தவிர, பிய்த்துக்கொண்டு ஓடிவிடும். ஆனா வண்ணத்துப் பூச்சிமட்டும் கையில் வைத்திருப்பேன்ன்...
கையை ரெண்டாக்கியது நாந்தேன்:)
தும்பி தட்டான் பாடல் மிக அருமை ஸாதிகா.
தங்கள் பதிவைப் படித்ததும்
என்னுள்ளும் தட்டானுடனான என்னுடைய
சிறுவர் பருவத்து நிகழ்வுகள் என்னுள்
தட்டாமாலை ஆடிப்போனது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 3
மறந்து போன நினைவுகளை எல்லாம் மீண்டும் நினைக்க வைக்கீர்கள், நான் இது வரை பிடித்ததில்லை
ஏன்ன்னா எனக்கு ரொம்ப ப்ப்யமாக்கும் ..
தும்பியைப்பற்றிய அழகான பல விளக்கங்கள்.
படத்தேர்வும் அருமை.
இது வந்து அமரும் போதும் பறக்கும்போது எலிகேப்டர் ஞாபகம் எனக்கு வருவதுண்டு.
பகிர்வுக்கு நன்றிகள்.
மழைக்காலங்களில் தும்பிக் கூட்டத்தைப் பார்த்ததுண்டு, ஆனா கையில பிடிச்சதெல்லாம் இல்ல ஸாதிகாக்கா! நீங்க பூந்து வெளாடிருக்கீங்க போல? ;)
பாட்டு நல்லார்க்கு! :)
இந்த விளையாட்டு புதுசாக இருக்கு,எங்க ஊர் பக்கம் சிறுவர்கள் விளையாடி பார்த்ததில்லை.நல்ல பகிர்வு.
பாடல் மிக அருமை
சலாம்,
தட்டான் பிடித்த பழைய ஞாபகங்கள் மறுபடியும் சிறகடித்து பறந்தது, தட்டான் போல
என் தளத்தில் இன்று:ஊதா கலரு ரிப்பன்
tvpmuslim.blogspot.com
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா
Post a Comment