பின்னூட்டபுயல்,அன்பின் தோழி மஞ்சுபாஷினி மற்றும் கவிதாயினி வேதா இலங்காதிலகம் இருவரின் அழைப்புக்கும் என் அன்பின் நன்றிகள்.
தங்கை ஜலீலா சாட் பண்ணும் நேரமெல்லாம் தன் பிளாக்கை பற்றித்தான் பேசுவார்.தன் பிளாக் லின்க் தந்து பார்க்கச்செய்தார்.எப்படி பின்னூட்டுவது மற்ற வலைப்பூக்களை எப்படி பார்ப்பது என்பதை சொல்லித்தந்த உடனே நானும் என் மகன் உதவியுடன் ஒரு பிளாக்கை ஆரம்பித்து விட்டேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வைப்புகழ்ந்து தலைப்பு வைத்ததும் முதலில் என் மனதில் தோன்றியது என் பெற்றோர்தான்.உடனே இரண்டு அழகிய அர்த்த முள்ள திருகுர்ஆன் வசனத்தை பதிவாக இட்டு மகிழ்ந்தேன்.
இந்த குர்ஆனில் வரும் குறிப்பிட்ட வசனத்தை எழுத இன்னும் ஒரு காரணம்.அன்றைய தினசரி ஒன்றில் ஒரு மகன் தன் தாயாரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள விரும்பாமல் மெரீனா பீச்சில் விட்டு விட்டு ஓடி விட்ட செய்தி என் மனதினை மிகவும் பாதித்தது.எவ்வளவு கோர மனதுள்ள மகன் அவன் என்று அந்த முகம் தெரியாத மனிதனை நினைத்து வெறுப்பாக இருந்தது.எனவேதான் அந்த அழகிய அர்த்தமுள்ள இரு இறைவேத வசனங்களையும் பதிவிட்டு மகிழ்ந்தேன்.
டைப் செய்து பதிவை பப்லிஷ் செய்த உடனே வாசித்து மகிழ்ந்த என் மகனே முதல் பின்னூட்டம் போட்டு அவரே அதை பப்லிஷ் செய்த அந்த தருணத்தின் சந்தோஷம் இன்னும் என் உள்ளம் முழுக்க நிரம்பி வழிகிறது.
இந்த தொடர் பதிவினை எழுத நான் அழைக்கும் இருவர்
தோழி ஆசியா
தங்கை மேனகா
Tweet |
16 comments:
//எல்லோரும் எழுதி ஓய்ந்த ஒரு தலைப்பை இப்போதுதான் கையில் எடுக்கிறேன்.//
இல்ல அந்த வரிசையில் நானும் இருக்கிறேன்னே இன்னமும் எழுதாமல்:))...
இன்று உங்கட புளொக் கஸ்டப்படுத்துது, 7,8 தடவை றீ -ஃபிரெஷ் பண்ணித்தான் கொமெண்ட் எங்க இருக்கெனக் கண்டு பிடித்தேன்ன்...
நோஓஓஓஓஓ.. இது சேர்ப்பில்லை.. பதிவு போதாது:))... ஹையோ என் வாய் தேன் நேக்கு எதிரி:)..
இப்படி ஒரு தலைப்பு வலைப்பூக்களில் உலா வந்ததா? இப்பொழுது தான் தெரியும்.ஆரம்பத்திலிருந்தே சமூக சிந்தனையுடன் தான் எழுத தொடங்கியிருக்கிறீர்கள் போல,நன்று,.
ஆஹா ! என்னையும் அழைத்து இருக்கிறீர்கள் போல,விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன்.
நல்லது சகோதரி . பிள்ளைகள் உதவியுடன் செய்வது எவ்வளவு ஆனந்தம். மகிழ்வாக உள்ளது. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
mmm....!
அழகிய அர்த்தமுள்ள இரு இறைவேத வசனங்களையும் பதிவிட்டு மகிழ்ந்தேன்.//
உங்கள் வலைத்தள பெயருக்கு ஏற்ற பதிவை இறைவன் தந்தார் என்றே நினைக்க தோன்றுகிறது ஸாதிகா.எல்லாபுகழும் இறைவனுக்கே என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்து இறை வசனத்தை சொல்லி ஆரம்ப்த்தது பொருத்தம் அல்லவா! உங்கள் முதல் பதிவை படிக்கிறேன்.
சுருக்கமாகச் சொன்னாலும்
தாமதமாகச் சொன்னாலும்
சிறப்பாகச் சொன்னமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
(முதல் பதிவையும் படித்து மகிழ்ந்தேன் )
சுருக்கமாகச் சொன்னாலும்
தாமதமாகச் சொன்னாலும்
சிறப்பாகச் சொன்னமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
(முதல் பதிவையும் படித்து மகிழ்ந்தேன் )
tha.ma 5
தாமதம் என்றாலும் சுவாரஸ்யம்... நன்றி....
த.ம.6
மிகவும் சந்தோசம் சகோதரி... இன்னும் நிறைய பேர் தொடர வேண்டும்...
அருமையாக, சுருக்கமாக, சுவையாக உள்ளது. பாராட்டுக்கள்.
உங்கள் முதற் பதிவின் சந்தோஷம் அருமை!
மனதின் இனிமைமை அந்த மகிழ்வை தெரிவித்தவிதம் சிறப்பு!
வாழ்த்துக்கள் ஸாதிகா!
முதல் பதிவு முதல் இப்ப தொடர்கிற பதிவு வரை எல்லாமே படிக்க படிக்க சலிப்படைய வைக்காத பதிவுகள், உங்களை போல் ஒரு தோழி கிடைத்தது மிகவும் சந்தோஷம்,
பதிவை விட பதிவுக்கு ஏற்ற போட்டோ ரொம்ப் ஜோர்.
நானும் நிறைய தொடர் பதிவுகள் எழுதாமலே இருக்கிறேன்.
முதல் பதிவின் சந்தோஷமே தனிதான் அக்கா...
என்னை அழைத்தமைக்கு நன்றி,நேரமிருக்கும் போது தொடர்கிறேன்....
கருத்திட்ட அனைத்து நட்புள்ளங்களுக்கு எனதன்பு நன்றிகள்.
Post a Comment