May 25, 2013

கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள்

தென்மாவட்டத்தில் இருக்கும் கீழக்கரையில் கிடைக்கும் தின்பண்டங்கள் மிகவும் புகழ்பெற்றவை.இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அநேகப்பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலானாலும் கெடாது.இந்த தின்பண்டத்தின் பெயரை சொல்லி கடை கடையாக ஏறி இறங்கினாலும் பல ஐட்டங்கள் கிடைக்கவும் செய்யாது.குடிசைத்தொழில் போல் பல குடும்பங்கள் குலத்தொழிலாக செய்து வருகின்றனர்.

முன்பெல்லாம் பாத்திரத்தை எடுத்து சென்று பதார்த்தங்கள் தயாரிக்கும் வீட்டிற்கு சென்று வாங்கி வந்தது போக இப்பொழுது  பாலிதின் கவரில் போடப்பட்டு வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு வந்து விட்டது.இப்பொழுது பாலிதின் கவரின் உபயோகத்தால் ஏற்படும் சுகாதரகேட்டின் விழிப்புணர்வால் அது அலுமினியம் ஃபாயில் பாக்கெட்டுகளுக்கு மாறிக்கொண்டு வருகின்றது.

சுவையும்,தரமும் மிக்க இந்த பதார்த்தங்கள் உலகில் பலபாகங்களில் வாழும் கீழை வாசிகள் மட்டுமல்ல அவர்களுக்கு பழக்கமான மற்ற ஊர்,மற்ற தேச நட்புக்களுக்கும் மிகவும் பிடித்தமான தின்பண்டமாகி விட்டது என்றால் மிகை ஆகாது.

கீழக்கரையை சுற்றி பெரும்பான்மையான தென்னந்தோப்புகள்,அவற்றில் லட்சக்கணக்கான மரங்கள் உள்ளன.முக்கியவிவசாயமாக தென்னை சாகுபடி அங்கு அந்தக்காலம் தொட்டே இருந்து வருகின்றது.கீழக்கரை மக்களின் உணவுகளில் அநேகமாக தேங்காய் கலந்தே இருக்கும்.இங்கு கீழே குறிப்பிடப்போகும் இனிப்புகள் அநேகமாக தேங்காய் சேர்ந்தவைகளே ஆகும்.

1.தொதல்


இதனை சிலர் லொதல் என்றும் கூறுகின்றனர்.எது சரியான பதம் என்று தெரியவில்லை.குழந்தைகள் கருப்பு அல்வா என்றும் செல்லமாக அழைப்பர்.இந்த தொதலில் வரலாறு கொழும்பில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது.ஆம்.தொதலின் பூர்வீகம் கொழும்புதான்.அங்கிருந்து செல்லக்கனி என்பவர் செய்முறை ரகசியத்தை அறிந்து இங்கு வந்து வியாபாரமாக்கியவர்.இப்பொழுது 40 - 50 குடும்பத்தினர் குடிசைதொழிலாக தயாரித்து வருகின்றனர்.கெட்டியான தேங்காய்ப்பால்,பனங்கருப்பட்டி சேர்த்து அல்வா பதத்திற்கு கிண்டி,வாசனைக்கு ஏலப்பொடியும்,அழகுக்கும்,சுவைக்கும் முந்திரி,உடைத்த பாசி பருப்பும் சேர்த்து சுவையை அள்ளும் ஒரு பதார்த்தம்.வலைப்பூவில் அசத்தும் அம்மணிகள் ஆர்வக்கோளாரால் தொதல் செய்முறைக்கு இறங்கி,அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல:)ஏனெனில் என் சிறு வயதில் என் அம்மா இந்த தொதல் தயாரிப்பில் இறங்கி தேங்காய் துருவி பால் எடுத்து அதனை பெரிய வாணலியில் இட்டு காலையில் கிண்ட ஆரம்பித்தால் சட்டியை கீழே இறக்க மாலை ஆகி விட்டது.இதனை பார்த்து எங்கள் வீட்டில் எல்லோருக்கும்  சிறிது நாட்கள் தொதல் என்ற பெயரைக்கேட்டாலே அலர்ஜி ஆகிவிடும்.கீழக்கரை பேமஸ் தொதலை பற்றி அம்மா தொலைக்காட்சியில் வந்த செய்தியாக வந்த ஒலி ஒளி காட்சியை காணுங்கள்.


2.கலகலா


பெயரைப்பார்த்ததும் ஏதோ வடநாட்டு பதார்த்தம் என்று எண்ணி விடாதீர்கள்.பக்கா தமிழக பதர்த்தம்தான்.இந்த இனிப்பை சுட்டெடுத்து பாத்திரத்தில் கொட்டினால் கலகல என்று ஒலி வரும் அதான் இப்பெயர் வந்ததோ என்னவோ?மைதா தேங்காய்ப்பால்,முட்டை,ஏலப்பொடி ,சர்க்கரை சேர்த்து செய்யப்படும் சுவையான இனிப்பு இது.சதுரம்,செவ்வகம்,டைமண்ட் நீள்சதுரம் என்று பல ஷேப்புகளில் கிடைக்கும்.இந்த முறை வாங்கி வந்த கலகலாவின் ஷேப் கன்னாபின்னா என்று இருந்தது போலவே சுவையும் கன்னாபின்னா என்று அடி தூள் கிளப்பி விட்டது.வாங்கி வந்து கொடுத்த உறவினரிடம் யார் வீட்டில் வாங்கினீர்கள் என்று கேட்டு வைத்துக்கொண்டேன்.ஊருக்கு சென்றால் உதவுமே:)இதிலே இனிப்பு சேராமல் காரப்பொடி சேர்த்து செய்வது காரக்கலகலா

3.பணியம்அரிசிமாவு,தேங்காய்ப்பால் கொண்டு செய்யப்படும் முறுக்கு சுவை கொண்ட பதார்த்தம்.கீழக்கரையில் பணியக்காரத்தெரு என்றே ஒன்று உள்ளது.இரண்டு,மூன்று இஞ்ச் நீளத்திற்கு  தயாரித்து விற்கின்றனர்.திருமணச்சீரில் இதே பணியம் முக்கால் அடி நீளமாக உருவெடுத்து விடும்.இதனை சீப்புப்பணியம் என்றும் சொல்வார்கள்.

4.தேங்காய்ப்பால் முறுக்குபணியம் மாவில் சற்று மேக்அப் செய்து முறுக்காக சுற்றி விற்பனைசெய்கினறனர்.வாயில் போட்டால் கரைந்து விடும் என்பார்களே.அது இதற்கு பொருந்தும்.பல் இல்லாத பெரியவர்கள் முறுக்கு சாப்பிட விரும்பினால் இந்த முறுக்கை பயமில்லாமல் சுவைக்கலாம்.

5.வறுத்த மொச்சை


மொச்சைக்கொட்டையை ஊற வைத்து அதன் தோலை அகற்றி கரகரப்பாக பொரித்து உப்பு காரம் சேர்த்து வறுத்த கறிவேப்பிலை,முந்திரியால் அலங்கரித்து இருக்கும் சுவையான கறுக்மொறுக்.

6.நவதானியம்இந்த நவதானியத்தினைப்பற்றி கீழை வாசி சுவைபட முழுபதிவாகவே போட்டு இருக்கின்றார்.மேலும் அறிந்து கொள்ள அங்கே செல்லுங்கள்.

7.வெள்ளை முறுக்கு


இடியாப்பமாவை குறிப்பிட்ட முறுக்கு அச்சில் போட்டு வட்டமாக பிழிந்து ஆவியில் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பிறகு எண்ணெயில் பொரித்து சாப்பிடும் முறுக்கு.சென்னைவாசிகள் இதனை வடாம் என்பார்கள்.ஆனால் இதனை எங்களூர் வாசிகள் ஒரு போதும் சாப்பாட்டுடன் சேர்க்கமாட்டார்கள்.தேனீருக்கு முன் சாப்பிடும் ஒரு நொறுக்ஸ்.வெளியூர் வாசிகள் இதனை பொரிக்காமல் வாங்கி வந்து தேவைப்படும் பொழுது பொரித்து சாப்பிடுவார்கள்.உள்ளூரில் பொரித்த வெள்ளை முறுக்கை வாங்கும் பொழுது அதனை பனை நாரில் கோர்த்து தருவது வித்தியாசமாக இருக்கும் இதன் சுவையைப்போலவே.

8.ஓட்டுமா”பசியை இது ஓட்டுமா” என்றால் ஆம் கண்டிப்பாக ஓட்டும்.இரண்டே டீஸ்பூன் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டால் பசி பறந்தோடி விடும் அதிசுவை உள்ள இனிப்பு பதார்த்தம்.அதனாலேயே வெளிநாட்டு வாழ் கீழை வாசிகள் கண்டிப்பாக இதனை வாங்கிச்செல்ல மறக்கமாட்டார்கள்.ஒரு தெலுங்கு நட்புக்கு ஊரில் இருந்து வாங்கி வந்து கொடுத்தேன்.உருவத்தைப்பார்த்ததும் முகத்தை சுளித்து இதனை எப்படி சாப்பிடுவது என்றார்.அப்படியே சாப்பிடலாம் என்று சொன்னாலும் அவருக்கு விரைவில் நம்பிக்கை வரவே இல்லை.ஆற்றுமணல் போல் உள்ளதே என்றார்.ஒரு ஸ்பூன் ஒரே ஸ்பூன்தான் எடுத்து பயத்துடன் வாயில் போட்டார் பாருங்கள்.அன்று ஆரம்பித்தது எனக்கு ”ஊருக்கு போகும் போதெல்லாம் ஓட்டுமா ஓட்டுமா என்று வாட்டி,ஓட்டி எடுத்து விடுவார். கீழக்கரை ஓட்டுமாவைப்பற்றி தினமலர் நாளிதழில் வந்த செய்தியை பார்த்து விடுங்கள்.அப்படியே இந்த கீழை வாசி ஓட்டுமாவை  ருசித்து,ரசித்து கவிதை பாடி இருக்கின்றார் என்பதையும் பார்க்க இந்த பதிவுக்கு செல்லுங்கள்.

இந்த ஊரில் புகழ்பெற்ற கிருஷ்ணாஸ்வீட் மைசூர்பாவுக்கு பற்பல ஆண்டுகளுக்கே முன்னரே பிரபலம் ஆன ராவியத்துகடை மைசூர் பாகு,எள்ளுருண்டை,கடலை உருண்டை,மறவர் முறுக்கு,அல்வா கருப்பட்டி,புல்லுக்கொழுக்கட்டை.ஒடியல் இப்படி எக்கசக்கமாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

54 comments:

Asiya Omar said...

கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள் பார்க்கவே ரிச்சால இருக்கு. ருசித்தால் கேட்கவும் வேண்டுமோ! தொதல் அல்வா வீடியோ பகிர்வு சூப்பர். கலகலா,வறுத்த மொச்சை,வெள்ளை முறுக்கு,பனியம்,தேங்காய்ப்பால்,அரிசி மாவு முறுக்கு,சத்தான நவதானியம்,ஓட்டுமா கவிதை சூப்பர்.மணம் நாசியைத் துளைக்கிறது.
கீழக்கரை பதார்த்தங்களை பகிர்ந்து ஆசையை தூண்டிவிட்டீர்களே தோழி.

shamimanvar said...

நா ஊற வைத்துவிட்டீர்கள். எனக்குத் தெரிந்த கீழக்கரைக்காரப் பெண் தன்னுடை ஊர்ப் பலகாரம் பற்றி பெருமையாகப் பேசும்போது அநியாயத்துக்கு தம்பட்டம் அடிக்கிறதாகத் தோன்றியது. உண்மையில் நீங்கள் எழுதிய ரெசிபியுடன் கூடிய சுவை பற்றிய விவரங்கள் அவர் கூற்றை உண்மை என்று உணரவைத்தது. நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

4,5,6 - தவிர மற்றதெல்லாம் புதியது... நன்றி...

துளசி கோபால் said...

//,மறவர் முறுக்கு,அல்வா கருப்பட்டி,புல்லுக்கொழுக்கட்டை.ஒடியல் இப்படி எக்கசக்கமாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.//

ஊஹூம்...இது அழுகுனி ஆட்டம். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். மேற்படி சமாச்சாரங்கள் என்ன ஏதுன்னு படம் போட்டு விளக்கணும் நீங்க.

கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள் பாகம் 2. எப்போ??????

ராமலக்ஷ்மி said...

4,5,6,7 அறிவேன். நல்ல பதிவு.

athira said...

//இதனை சிலர் லொதல் என்றும் கூறுகின்றனர்.எது சரியான பதம் என்று தெரியவில்லை//

நோஓஓஓ அது தொதல் தான்ன்ன்... என் ஃபேவரிட் பண்டங்களில் இதுவும் ஒன்று. இலங்கையில் இருந்தபோது அம்மா இடைக்கிடை செய்வா.

athira said...

பணியம்.. எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. தேங்காய்ப்பால் முறுக்கு.. சூப்பர்.. அனைவருக்குமே பிடிக்குமே.

athira said...

//5.வறுத்த மொச்சை// புது முறையாக இருக்கே. ஒரு தடவை செய்யோணும்.

S.Menaga said...

ஒரு சில பதார்த்தங்களை தவிர மற்றவை புதுசு...படங்களை பார்க்கும் நாவூறுது..உங்க பெயரை சொல்லி தொதல் செய்து பார்க்கலாம்னு இருக்கேன்கா ஹி ..ஹி..

Anonymous said...

நாவூறும் இவை தேனூறும் சுவை..இப்பவே இப்பவே சாப்பிடனும் இப்பவே..

Ramani S said...

பல ஐட்டங்களை இப்போதுதான்
படத்தில் பார்க்கிறேன்
கேள்விப்படுகிறேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

mohamedali abdulkader said...

சுவையாக தந்துள்ளீர்கள். தொதல்,.கலகலா பெயர் புதுமை கேள்விப் படாதது. வாழ்த்துகள் .பார்செல் அனுப்புங்கள் தின்பண்டங்களை சாப்பிட்டு மகிழ்கின்றோம்

angelin said...

கரகர இனிப்பு உணவுகளை போட்டு ..அமைதியா உறங்கும் சமையல் பெண் புலியை உசுப்பி விட்டுட்டீங்களே ஸாதிகா :)))
இதை அதனையும் செய்ய ஆசையா இருக்கு ..
அது தொல் தொல் என்பார்கள் எங்க பாட்டி வீட்ல செய்வாங்க அதில் கருப்பு புட்டரிசி சேர்ப்பாங்க என்று நினைக்கிறேன் ........

Mahi said...

ஆஹா! போட்டோஸாப் போட்டு ஜொள்ளு விட வைக்கிறீங்களே!?!! இதில் ஒன்று கூட நான் சுவைத்ததில்லை ஸாதிகாக்கா! எல்லாத்திலயும் ஒரொரு கிலோ எங்க வீட்டுக்குப் பார்ஸல் ப்ளீஸ்! ;) :)
அதிலும் சீப்புப் பணியாரம் ரொம்ப அட்ராக்டிவ்வ்வ்...அவ்வ்வ்வ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...


"கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள்"

பற்றிய குறிப்புகள் + விளக்கங்கள் யாவும் அருமை. பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

ஆசியா முதல் வருகைக்கு நன்றி.பார்க்க ரிச்.சுவையிலும் சூப்பர்.

ஸாதிகா said...

இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கின்றது ஷமீமா அன்வர்?நானும் பல வலையுலக நட்புக்களிடம் அவங்க அவங்க ஊரின் ஸ்பெஷலை அறிமுகப்படுத்துங்கள் என்று.அதிலும் காயல் பலகாரம் இன்னும் பிரமாதமாக இருக்கும்.நன்றி ஆசியா.

ஸாதிகா said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஊஹூம்...இது அழுகுனி ஆட்டம். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். மேற்படி சமாச்சாரங்கள் என்ன ஏதுன்னு படம் போட்டு விளக்கணும் நீங்க.//அழுகுணி ஆட்டம்ன்னு சொல்லிட்டீங்க.கொஞ்சம் பொறுத்துக்குங்க துளசிம்மா.ஊருக்கு போய் மற்ற பதார்த்தங்களை வாங்கி போட்டோ எடுத்துவிட்டு உங்கள் பெயரை சொல்லி சாப்பிடுகிறேன் ஒகேவா?மிக்க நன்றி துளசிம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி .

ஸாதிகா said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸாதிகா said...

நோஓஓஓ அது தொதல் தான்ன்ன்... //ஒகே தொதலேதான் ஒகேவா?அதிரா சொன்னால் அப்பீலே கிடையாது.

//இலங்கையில் இருந்தபோது அம்மா இடைக்கிடை செய்வா.// உங்க அம்மாவுக்கு தைரியம் ஜாஸ்தி.அம்மாவின் தைரியம் பொண்ணுக்கு இருக்கா?செய்முறை வேண்டும்ன்னா கேட்டு சொல்லுகிறேன்.நீங்கள்இதனை தயார் செய்து பட்ட அவஸ்தையை வரலாறாக போடுங்களேன் பூஸ்.அப்பா அதீஸின் புது பதிவுக்கு ஐடியா தேத்திக்கொடுத்துட்டேன்.நன்றி பூஸ்.

ஸாதிகா said...

பணியம்.. எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.//அதுதான் போட்டோ புடிச்சு காட்டிட்டோம்ல.செய்து பார்த்துடறது,

அப்ப வறுத்த மொச்சை ரெஸிப்பி கூடிய சீக்கிரம் உங்கள் பிளாகில் வரபோகிறது.நன்றி பூஸ்.

ஸாதிகா said...

உங்க பெயரை சொல்லி தொதல் செய்து பார்க்கலாம்னு இருக்கேன்கா ஹி ..ஹி..//சீக்கிரம் தயார் செய்து போடுங்க .செய்முறையை மட்டுமல்ல.தொதல் கிண்டும் பொழுது கிடைத்த கர்ர்ர்ர்ர்ர்... அனுபவத்தையும் சேர்த்துதான்.ந்ன்றி மேனகா.

ஸாதிகா said...

மிக்க நன்றி kaliaperumalpuducherry

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ரமணிசார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி முஹம்மத் அலி அப்துல்காதர்.

ஸாதிகா said...

கரகர இனிப்பு உணவுகளை போட்டு ..அமைதியா உறங்கும் சமையல் பெண் புலியை உசுப்பி விட்டுட்டீங்களே ஸாதிகா :)))
இதை அதனையும் செய்ய ஆசையா இருக்கு .//ஆஹா..இனி ஏஞ்சலின் பிளாகில் ஏகப்பட்ட ரெஸிப்பி வருமே.சூப்பர்.

தொதலின் பூர்வீகம் இலங்கைதான் .மிக்க நன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

ஆஹா! போட்டோஸாப் போட்டு ஜொள்ளு விட வைக்கிறீங்களே!?!! இதில் ஒன்று கூட நான் சுவைத்ததில்லை ஸாதிகாக்கா!மறந்து விட்டீர்களா மகி.நீங்கள் சூப்பர் கலகலாரெஸிப்பி போட்டீர்களே. .பார்க்கவே அழகா மெத்தென்று.கருத்துக்கு மிக்க நன்றி மகி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

athira said...

ஸாதிகா அக்கா... இன்னொரு பின்னூட்டம் கடேஏஏஏஏஏஏஏஏசியாப் போட்டேன்ன்.. ஸ்பாம் க்குள் போயிட்டுதுபோல செக் பண்ணிடுங்கோ.. மீ கோயிங்யா:).. தொதல் செய்யத்தேன்ன்ன்ன்:)).. இங்கு தொதல் செய்வது நேக்கு ஜூஜூபிபோல ஆக்கும்:)) ஆனா காஸ் பில் ஆராம் கட்டுறது?:))

பால கணேஷ் said...

அவ்வ்வ்வவ்வ! இந்த பதார்த்தங்கள் கடைகள்ல தேடினாலும் கெடைக்காதுன்னு சொல்லிட்டு இப்படி விரிவா படமும் போட்டு நாக்கை நீட்டி ஜொள்ளுவிட வெச்சுட்டியேம்மா... நியாயமா? தொதல்ங்கற தின்பண்டம் மட்டும் நான் கேள்விப்பட்டது. மத்தவை எல்லாம் புதிசு எனக்கு.

அமைதிச்சாரல் said...

செல்லாது.. செல்லாது. வெறுமனே போட்டோ மட்டும் போட்டது செல்லாது. அத்தனையிலும் ஒவ்வொரு கிலோ அனுப்பி வையுங்க. அதிலும் உங்க கையால கிண்டுன தொதலை கொஞ்சம் கூடுதலாவே அனுப்புங்க :-)))))

Ambal adiyal said...

எனக்கும் தொதல் கிண்டும் ஆவல் போய்விட்டது ஆனாலும்
அந்த ஆச்சி கிண்டிய தொதலைப் பார்த்ததும் இருந்த ஆசை
இரண்டு மடங்காய் அதிகரித்து விட்டதே இப்ப நான் என்ன செய்வது ?..:)
அருமையான பகிர்வு மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

மாதேவி said...

கீழைக்கரை பணியாரங்கள் அனைத்தும் சுவையாக இருக்கின்றது.

அந்நியன் 2 said...

சலாம்...அக்காள்.

பல மாதங்களாக வலைப் பூ பக்கம் வராத என்னை நமது மண் வாசனையின் மனம் நுகர்ந்து வந்துள்ளேன்.

நினைவூட்டியமைக்கு நன்றிகள் !

Mahi said...

// மகி.நீங்கள் சூப்பர் கலகலாரெஸிப்பி போட்டீர்களே. // ஆமாம் ஸாதிகாக்கா! ஆனா அது உங்க படத்தில இருக்க கலகலா மாதிரி கலக்கலா வர்லயே! என்னன்னாலும் நம்ம ஊரில் கிடைக்கும் ருசி இங்கே கிடைக்கறதில்லையே!

கோமதி அரசு said...

கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள் மிக அருமை.
,மறவர் முறுக்கு,அல்வா கருப்பட்டி,புல்லுக்கொழுக்கட்டை.ஒடியல் இவற்றை அடுத்த பதிவில் சொல்லிவிடுங்கள்.

Vijiskitchencreations said...

Wow super delicious items. I want to try varutha mochas. Good protein items.Nalla pathuvu.

Vijiskitchencreations said...

Wow super delicious items. I want to try varutha mochas. Good protein items.Nalla pathuvu.

மனோ சாமிநாதன் said...

என்ன ஸாதிகா இது, இப்படி ஆசையைக் கிளப்பி விட்டு விட்டீர்கள்? சீக்கிரம் கீழக்கரை போய் விட வேன்டியது தான்! திருமதி.துளசி சொன்னமாதிரி, சீக்கிரம் விட்டுப்போன பலகாரங்கள் பற்றிய பதிவைப்போடுங்கள்! சென்னையில் இவையெல்லாம் கிடக்காதா?

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறை தங்களின் வலைப் பக்கம் வந்தேன். அருமை தொடர்வேன்

Seeni said...

sadiqa sako..!

naanum saapittullen
1
2
3
8
intha naaluvakiyavum..

mikka nantri!

ராஜி said...

அப்படியே எனக்கொரு பார்சல் வாங்கி அனுப்பினா நல்லா இருக்குமே

Divya G said...

ஸாதிகா அக்கா,

உங்களின் பிளாக் ,பல உபயோகமான தகவல்களுடன் மிகவும் அருமை அக்கா.

நான் வேலைக்காக வெளிநாட்டில் தோழிகளுடன் தங்கி உள்ளேன்.

உங்களின் ஒட்டுமா செய்முறையை அறுசுவை வலைதளத்தில் பார்த்தேன்.

கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்த காலத்தில்,என் தோழி தந்து ஒட்டுமா சுவைத்திருக்கிறேன்,மறக்க முடியாத சுவையில் இருந்தது.அம்மா செய்து தருவதாக சொல்வாள்.

அதே ரெஸிப்பியை அறுசுவையில் பார்த்ததும் செய்வதற்கு மிக மிக ஆசையாக உள்ளது.

சமையலில் எனக்கு சுத்தமாக அனுபவம் இல்லை.எனக்கு 2 கேள்விகள் இந்த செய்முறையில் உள்ளன,பதில் தாருங்கள் அக்கா ப்ளீஸ்.இந்த weekend செய்து என் கருத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அக்கா.

http://www.arusuvai.com/tamil/node/11924

1.உங்களது செய்முறையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 1 கப் என்பது எவ்வளவு மில்லி,அதற்கு தகுந்தாற்போல் 2 முட்டை சேர்த்துக் கொள்வோம்.

2.இங்கு முழு தேங்காய் கிடைப்பதில்லை.ஆனால் fresh தேங்காய் துருவல் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது
//தேங்காய் - 2, என்பதற்கு பதிலாக எத்தனை கப் அளவு (நீங்கள்
குறிப்பிட்டிருக்கும் கப் அளவில்) தேங்காய் துருவல் எடுக்கலாம்,அதனுடன் எத்தனை கப் அளவு நீர் சேர்த்து முதல் தேங்காய் பால் எடுக்கலாம்.

அக்கா,உங்களின் பதிலை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்,reply பண்ணுங்க ப்ளீஸ்.

சமையலில் மிக அனுபவம் வாய்ந்த உங்களிடம் Basic questions கேட்டிருக்கிறேன் ,மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா.Really i don't have ideas about this.

I look forward to your gracious reply.

Divya
ஸாதிகா said...

ஒரு கப் என்பது 200 எம் எல்.

தேங்காய் துருவல் வாங்கி அதனை பாலெடுத்து பயன் படுத்துவதை விட ரெடிமேட் தேங்காய்ப்பால் கெட்டியாக கிடைக்குமே.அதனை வாங்கி 100 - 150 எம் எல் பயன் படுத்திக்கொள்ளலாம்,நான் அந்த குறிப்பு போட்டது 2009 இல்.இன்னும் பல முறைகளில் செய்யலாம்.உங்களது பேஸ் புக் அக்கவுண்ட் இருந்தால் சொல்லுங்கள் மேலதிக விபரம் படங்களுடன் தருகிறேன்,.உங்கள் ஓட்டுமா ஆர்வம் வியப்பளிக்கின்றது:)நன்றி திவ்யா.

Divya G said...

ஸாதிகா அக்கா,

உங்களின் பதில் கண்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது,பதிலளித்து உதவியதற்கு மிக்க நன்றி.

வரும் ஞாயிற்றுக்கிழமை செய்து விட்டு,உங்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

I am not on fb.
My email id is:

divya1989.g@gmail.com

மற்ற முறைகளும் தாருங்கள் அக்கா,ஆவலுடன் உடனே செய்து பார்ப்பேன்.
Thanks again for your reply.

Divya


balkkisrani said...
This comment has been removed by the author.
balkkisrani said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா லாத்தா நலமா இருக்கிங்களா முன்னயே இந்த பதிவ பார்த்து இருந்தன்னா 12 வது மாதம் ஊருக்கு போய்ருந்தப்போ ஒரு எட்டு போய் எல்லாத்தயும் அள்ளிட்டு வந்துருபனே உங்க ஊருக்கும் எங்கஊருக்கும் ரெம்ப கிட்ட லொதலும் சீப் பணியானும் தான் சாப்ட்டு இருக்கேன் இப்பதான் அம்மாவ சொல்லி மாசியும் வாங்க சொல்ல இருக்கேன் அருமையா எதார்த்தமா பதிவு போட்டு இருக்கிங்க (எங்க ஊரில் லொதல்தான் சொல்லுவோம்)

balkkisrani said...
This comment has been removed by the author.
balkkisrani said...
This comment has been removed by the author.
balkkisrani said...

ஓட்டுமாவுகே என் ஓட்டு ஓட்டுமா செய்ரவங்க போன் நம்பர் இருக்கா இருந்தா குடுங்க அம்மா ஜூலை வாராங்க மலேசியவுக்கு வாங்கி வரசொல்லலாம்

Divya G said...

ஸாதிகா அக்கா,

உங்களின் செய்முறைப்படி ஓட்டுமா இன்று செய்தோம்.மிக மிக சுவைபட இருக்கின்றது.எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கின்றது.உங்களின் அருமையான இந்த செய்முறை குறிப்புக்கு எங்களின் மனதார்ந்த நன்றி அக்கா.பதிலளித்து உதவியதற்கும் நன்றிகள் பல.
Please give another methods of making ottuma in my email,i would like to try.

Divya

balkkisrani said...

ஓட்டுமா இன்று செய்தேன் நல்ல வாசமா இருக்கு ஆனாலும் ஏதோ குறயிர மாதிரி இருக்கு ஆனாலும் இங்கே ஓட்டுமா வாங்க முடியுமா உங்களின் குறிப்பு க்கு மிக்க ந்ன்றி ஸாதிகா லாத்தா