தோழி ஆசியா எப்பொழுதோ என்னை தொடர் பதிவு ஒன்றுக்கு அழைத்து இருந்தார்கள்.நான் அதனை மறந்தே போனேன்.மீண்டும் மெயில் செய்து ஞாபகமூட்டினார்கள்.என்னுடைய அனுபவத்தில் பக் பக் பயண அனுபவம் ஏதும் இல்லாவிட்டாலும் ஆசியா அழைப்புக்காக என் பழைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
80களில் நான் பத்திரிகைகளுக்கு தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த நேரம்.மலர்மதி என்று பெண்கள் மாத இதழில் நிறைய எழுதினேன்.அதன் மூலம் அதன் ஆசிரியை திருமதி அலிமா ஜவஹருடனான நட்பு மிகவும் நெருக்கமானது.பரஸ்பரம் நாங்கள் மட்டுமல்ல எனது,அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மிகவும் ஐக்கியமாகி விட்டோம்.திருமதி அலிமாவைப்பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் தன் கணவர் ஜவஹருடன் இணைந்து அமீரகத்தில் பல தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னர் பட்டத்தின் பெயரை போட்டுக்கொள்ள தூண்டுகோலாக இருந்தவர்.ஆம்,விஸ்டம் எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் என்று ஆரம்பித்து கல்விப்பணி ஆற்றி அமீரகத்தில் கல்வில் கற்பிப்பதில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள்.
அவர்களது அழைப்பின் பேரில் பலமுறை நாகர் கோவில் சென்றதுண்டு.ஒரு முறை நாகர் கோவில் செல்லும் பொழுது என் குடும்பத்தினருடன் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஒரு மேக்ஸிகேப் அரேஞ்ச் பண்ணிக்கொண்டு முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை,பேச்சிப்பாறை,முக்கடல் அணை என்று சுற்றியுள்ள சுற்றுலாதளங்களை காண பகலுணவு சமைத்து எடுத்துக்கொண்டு சுமார் 15 பேர்கள் கொண்ட குழுக்களாக காலையிலேயே கிளம்பினோம்.
வேன் பேச்சிப்பாறையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.எங்கு பார்த்தாலும் மலை.ஆளரவமின்றி சாலைகள்.திடீரென்று வேன் நின்று விட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.ஓட்டுனரும் எவ்வளவோ முயன்று பார்த்தும் வேன் தொடர மறுத்து விட்டது.
நிழலுக்கு ஒரு மரநிழலில் அனைவரும் அமர்ந்து கொண்டோம்.வேன் டிரைவரோ பேச்சிப்பாறை டேமுக்கு எப்படியாவது போய் சேருங்கள்.நான் வண்டியை சரி செய்து கொண்டு அங்கு வந்து உங்களை பிக் அப் செய்கிறேன் என்று சொல்லி விட்டார்.வரிசையாக திட்டமிட்டு செல்லும் இடங்களுக்கு எல்லாம் போவது சாத்தியப்படாது.மிக நீண்ட காத்திருப்புக்கு பின் அந்த வழியே சென்ற ஒரு நகர் பேருந்தை கையக்காட்டி நிறுத்தினோம்.எங்கள் அனைவருக்கும் அதில் இருக்கை இருக்காவிட்டாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று நடத்துனரிடம் கெஞ்சி ஒரு வழியாக மூட்டை முடிச்சுகளுடன் ஒவ்வொருத்தராக பஸ்ஸில் ஏறினோம்.என்னுடைய முதல் பேருந்து அனுபவமே மிகவும் அவஸ்தையாக ,சங்கடமாக அமைந்து விட்டது.
பஸ்ஸில் எனது மகளுக்கு டிக்கெட் எடுக்கவில்லை.ரயிலில் பயணிக்க ஆறு வயது வரை டிக்கெட் தேவை இல்லை.அது போல் பஸ்ஸுக்கும் ஆறு வயது வரை தேவை இல்லை என்று நாங்களே தீர்மானித்து டிக்கெட் எடுக்காமல் இருந்து விட்டோம். இரண்டு மூன்று ஸ்டாப் வந்ததும் டிக்கெட் பரிசோதகர் வந்துவிட்டார்.
குழந்தைக்கு எத்தனை வயது என்றார்.ஐந்து வயது என்றதும் எப்படி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று காச் மூச் என்று கத்தினார்.நாங்களும் அதற்குறிய பைனை கட்டி விடுகிறோம் என்றோம்.அவரோ நடத்துனரையும் ஒரு எகிறு எகிறி விட்டு எங்களிடம் பணத்தை பெறாமலேயே கீழே இறங்கி சென்றுவிட்டார்.அவர் போனதும் நடத்துனர் “ஐந்து வயது என்று சொல்லி என்னை வம்பில் மாட்ட வைத்து விட்டீர்களே “என்று கடிந்து கொண்டார்.நாங்களோ சங்கடத்துடன் கூட்ட நெரிச்சலில் அவஸ்த்தைப்பட்டு பயணித்துக்கொண்டிருந்தோம்.
ஒரு வழியாக பேச்சிப்பாறை டேம் வாசலில் பஸ் நின்றதும் இறங்கினோம்.ஆண்கள்: அனைவரும் மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு நடந்தனர்.சுமை பொறுக்க இயலாமல் திரு ஜவஹர் அவர்கள் அவர் சுமந்து சென்ற பெட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்கலானார்.அதனை கண்ட அவரது மனைவி”ஐயோ..என் கணவர் அங்கே கோட்டும் சூட்டுமாக அவர் இருக்கும் கெட்அப்பே வேறு. இப்ப இப்படி தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்கின்றாரே என்று சிரிப்புடன் விசனப்பட்டது இன்னும் நினைவில் நிற்கின்றது.அவரது மகன்களோ”டாடி..துபை பிசினஸை முடித்துக்கொண்டு வந்தால் இங்கே உங்களுக்கு போர்ட்டர் வேலை கைகொடுக்கும் என்று தமாஷ் செய்து இறுக்கமான சூழ்நிலையை கலகலப்பாக்கினார்கள்.
வெயில் மண்டையை பிளந்தது.பசி வயிற்றிக்கிள்ளியது.சாப்பாட்டு மூட்டையை அவிழ்க்க முற்படும் பொழுது உள்ளே சாப்பாட்டுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
பிறகென்ன?மறுபடி மூட்டை முடிச்சுகளுடன் வெளியில் வந்து வாசலில் சாலை ஓரத்தில் கொளுத்தும் வெயிலில் அங்காங்கே இருந்த திண்டு ,கல் மீது அமர்ந்து சாப்பிட்டு முடித்தோம்.
திட்டமிட்ட இடங்களுக்கெல்லாம் செல்ல முடியாமல் அன்று மாலை திற்பரப்பு அருவிக்கு மட்டும் சென்று இருந்து குளித்து விட்டு திரும்பினோம்.அன்றைய பயணம் என்றும் மறக்க முடியாத பயணமாக அமைந்து விட்டது.
Tweet |
32 comments:
பயண அனுபவம் வாசித்தேன்.
சிரமமான அனுபவம் தான்.
தொடருங்கள். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
திற்பரப்பு இங்கே இழுத்துட்டு வந்துட்டது. 80களில் போனீங்களா?.. அப்ப இன்னும் இயற்கைச் சூழலோட அழகா இருந்துருக்குமே. அருவியின் முன்னாடி எக்கச்சக்கமான ரப்பர் தோட்டங்களும் இருந்துச்சு.
பயணம் பற்றிய கட்டுரை அருமை.
சிலபயணங்கள் மட்டுமே இன்பகரமாக அமைந்து விடும்.
சில சமயங்களில் இதுபோன்ற பல சோதனைகள் ஏற்பட்டுவிடும்.
எல்லாமே ஒருவித அனுபவம் தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி ஸாதிகா பகிர்வுக்கு.
அனுபவத்தை சுவாரசியமாக பகிர்ந்துள்ளீர்கள்.நாங்களும் நீங்கள் குறிப்பிட்ட இந்த இடங்களுக்கு வாடகைக்காரில் திருமணமான புதிதில் ஒரு நாள் டூராக சென்று வந்தோம்.எனக்கு அந்த பயணத்தை நினைவு படுத்தி விட்டது,உங்கள் பகிர்வு.தொடர் அழைப்பை ஏற்று பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.
மிக அருமையான பயன அனுபவம் ஸாதிகா அக்கா
விஸ்டம் எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் கேள்வி பட்டு இருக்கிறேன். அது அலிமா ஜவஹர் அவர்கள் சேர்ந்து நடத்துவதா?
துபாய் நியுஸ் எல்லாம் நீங்கள் சொல்லி தான் தெரிகிறது
சில பயணங்கள் இப்படியும் அமைவதுண்டு...
முடிவில் திண்டுக்கல் என்று நினைத்தேன்... திண்டு, கல்... அப்பாடா... சிரித்து விட்டீர்கள்... நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
திற்பரப்பு பயணம் பல அனுபவ கலவை.
சில நேரங்களில் பயணம் மறக்க முடியாத நினைவுகளை விட்டு செல்லும்.
மிக அருமையான பயன அனுபவம் ஸாதிகா அக்கா
எண்பதுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திற்பரப்பு சென்றதுதான். அதன் பிறகு செல்ல வாய்க்கவில்லை. பயணங்களில் எதிர்பாராத அனுபவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
திற்பரப்புக்கு ஒரு முறை போனது என் நினைவில் இருக்கிறது. பாவம்... ஜவஹர் ஸார் போர்ட்டராகியது! திற்பரப்பு அருவியையாவது ரசிக்க முடிந்ததே என்றுதான் சந்தோஷப்பட்டிருப்பீர்கள் இல்லை...? மறக்க முடியாத பயணம்தான் இது!
Memoarable trip akka.. Thanks for sharing the experience.
பயன கட்டுரை அருமை
சுவராஸ்யமான பயண அனுபவம் அக்கா!!
முதல் கருத்துக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.
ஆம் அமைதிச்சாரல்.எங்கு பாத்தாலும் ரப்பர் தொட்டம்.ரப்பர் மரத்டில் ஓட்டை போட்டு சிறிய குவளையை கட்டியை வைத்து இருப்பார்கள்.ரப்பர் சேகரிப்பதற்காக.அருகில் சென்று பார்த்து தொட்டு வர ஆசை பட்டும் கடைசி வரை முடியவில்லை.
உடன் வரவுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.
ஹப்பா..உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டேன்.கருத்துக்கு நன்றி ஆசியா.
இனிய அனுபவங்களால் மட்டும் அல்ல, இது போன்ற அனுபவங்களாலும் சில விஷயங்களை மறக்க முடிவதில்லை என்று தெரிகிறது. அலைச்சலோடு, வெயிலில் அமர்ந்து சாப்பிட்டது-கொடுமை.
முடிவில் திண்டுக்கல் என்று நினைத்தேன்... திண்டு, கல்//யப்பா..உங்கள் சொந்த ஊர் மிது உள்ள பற்று என்னை பிரமிக்க வைக்கின்றது தனபாலன் சார்.தொடர் கருத்து தந்து ஊக்கம் தருவதற்கு மிக்க நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி கோமதிம்மா.
வாங்க விஜி பார்திபன் .நெடுநாட்கள் சென்று வந்து இருக்கின்றீர்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
கண்டிப்பா மறக்க இயலாத பயணம்தான் அது.கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.
நன்றி மகி கருத்திட்டமைக்கு.
மிக்க நன்றி பூவிழி
மிக்க நன்றி மேனகா.
வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
மறக்க முடியாத பயணம்தான்.
நல்ல பயண அனுபவம். சிலது மகிழ்வாயும் சில பயணம் மனதைவிட்டு மறக்கவொண்ணாததாகவும் அமைந்துவிடுகிறதுதான்.
நல்ல பகிர்வு. தொடருங்கள்...
வாழ்த்துக்கள்!
பயண அனுபவம் சுவையாக உள்ளது!
வித்தியாசமான அனுபவமாக இருக்கே....
வசதியா வேனில் போக முடியாமல் பஸ்ஸிலா சில சமயங்களில் ஏனோ இப்படியும் நடந்து விடும்.
Post a Comment