March 3, 2013

பீனிக்ஸ் மால்

பீனிக்ஸ் பறவை நாமோ,நம் முன்னோர்களோ பார்த்திராத ஒரு கற்பனைப்பறவை.உலக இலக்கியங்கள் அனைத்திலும் ஒருமித்து கூறப்பட்டுவரும் ஒரு அற்புதப்பறவை.

தமிழ் இலக்கியங்களில் இதனை ஊழிக்கால பறவை என்று வர்ணிக்கப்படுகிறது.விடாமுயற்சி,வெற்றிகிட்டும் வரை ஓயாது உழைப்பவர்களின் இலட்சியத்தை பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுவார்கள்.அரசியல் தலைவரை பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுவது நம்மூர் தொண்டர்களுக்கு  எழுதபடாத சட்டம்.

அப்பேற்பட்ட சாகாவரம் பெற்ற உலகம் முழுதும் பேசப்படும் ஒரு அற்புதப் பறைவையின் பெயரையும்,அப்பறவையின் உருவத்தை சின்னமாக வைத்தும் புதிதாக சென்னையில் இன்னொரு மெகா மால்  Phoenix Market City என்ற பெயரில் கடந்த மாதம் வேளச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ”பீனிக்ஸ் மில்ஸ்” என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது.இது ஏற்கனவே மும்பை,புனே,பெங்களூரு,போன்ற இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சாலையை அகலப்படுத்துவதற்காக முக்கிய சாலைகளின் ஓரத்தில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் முன் பகுதியை சென்னை மாநகராட்சியினர் உடைத்து சில அடிகளை அள்ளிக்கொண்டு போகின்றனர்.ஆனால் பீனிக்ஸ் மால் இருக்கும் இடத்தில் இந்த பாச்சா பலிக்காது.ஏனெனில் சாலையை விட்டு பலமீட்டர் தூரத்தில்தான் மாலை அமைத்து இருக்கின்றனர்.
இருபது லட்சம் சதுர அடியில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் ,உலகில் உள்ள முன்னணிஉலகத்தரம் வாய்ந்த  பிராண்ட் ஷாப்கள் ஒருங்கே அமையப்பெற்று பிரமிப்பூட்டுகின்றன.

க்ளோபல் டெசி,சார்லஸ்&கெய்த்,ஸ்டீவ் மாடென்,சூப்பர் டிரை,ப்ரொமோட்,ப்ரூக்ஸ் பிரதர்ஸ்,மாக்,மேக்ஸ்,லீ,மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்,டொம்மி ஹைபிகர்,கேல்வின் கெவின்,பிபா,பெப்பி போன்ற பிராண்டட் ஷோரூம்கள் தவிர  ஆர் எம் கேவி,மெகா மார்ட் ,ஆர்ச்சீஸ்,பொப்பட் ஜமால்,பிக்பஜார்,வில்ஸ் லைப் ஸ்டைல்,விட்கோ,லைப்ஸ்டைல்,பாண்டலூன்,க்ளோபஸ் போன்ற எண்ணற்ற கடைகள் கடை விரித்துள்ளன.

ஐ போன்,நோகியா,பூர்விகா,யுனிவெர்செல் பிளாக்பெரி போன்ற கைபேசி விற்பனையகங்களில் கூட்டம் அலை மோதுகின்றது.

கீழ்த்தட்டு மேல்த்தட்டு மக்கள் அனைவரும் விரும்பி வாங்கும் பாட்டா பாதணிகள் ஷோ ரூம்முதல் ,இரு பெரிய நோட்டே ஆரம்பவிலையாக கொண்டு இருக்கும் மோச்சி,மெட்ரோ,வுட்லாண்ட்ஸ் போன்ற கடைகள் கண்களை கவர்கின்றன.

ஸ்வரோஸ்கி வைரக்கடலுடன்,தி நகரில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் மலபார் கோல்ட் ஹவுஸ் இங்கும் கிளை பரப்பி உள்ளது.

டைமேக்ஸ் முதல் டிஸ்ஸோட் வரை கடிகாரங்கள் ஷோ ரூம் கல்லா கட்ட வந்துவிட்டன.பாடி ஷாப்.ஹெல்த் அண்ட் க்ளோ கூட இளையவர்களின் பார்வைகளை அள்ளிச்செல்கின்றன.

இவ்வளவு பெரிய மாலுக்கு இத்தனை சிறிய புட் கோர்ட் புட் கோர்ட் பக்கமே செல்ல தயக்கம் கொள்ள வைக்கின்றது.மோத்தி மஹால்,இட்லி தோசா,கே எஃப் சி,வாவ் மமோ,டோமினோஸ்பிஸ்ஸா,நளா ஆப்பக்கடை,சைனாவால்,அரேபியன் ஹட் ,கைலாஸ் போன்ற ஒரு சில கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஐபாகோ,பாஸ்கின் அண்ட் ராபின்ஸ்,புரூட் பன்ச்,க்ரீம் அண்ட் பட்ஜ்,க்வாலிட்டி என்று  கடைகள்  திறக்கப்பட்டுள்ளது என்றாலும்,

கமிங் சூன் என்று பெரிய பெரிய போர்டுகள் தொங்கி சாப்பிட அழைக்கின்றன.ஸ்பாகெட்டி,நண்டூஸ்,கலிஃபோர்னியா பிஸ்ஸா,மேரி பிரவுன்,வசந்த பவன் இன்னும் பிறவும் வரவிருக்கின்றன.

சின்ன புட்கோர்ட்டாக உள்ளதே என்று நினைத்துகொண்டு இருந்த பொழுது ரூஃப் கார்டன் ரெஸ்டாரெண்ட் போல் ஒன்று இருக்க எட்டிப்பார்த்தேன்.ம்ஹும்..சுமார் 20 பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடும் அளவு குட்டியாக இருந்து ஏமாற்றத்தைதந்தது..

ஏஸி காற்று ஓசியில் வாங்க அக்கம் பக்கத்தினர் அங்கு செல்லலாம் என்று மெனக்கெடாதீர்கள்.இவ்வளவு பெரிய மாலை கட்டி விட்டு கரண்ட் பில்லுக்கு அஞ்சியோ என்னவோ ஏஸியே இல்லாமல் இருந்த நேரம் முழுக்க உஸ் உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே இருந்தவர்கள் அதிகம்.

மாலின் இன்னொரு பிளஸ் பாயிண்ட்.மொத்தம் 12 தியேட்டர்கள் அதில் ஒன்று ஐமாக்ஸ் தியேட்டர்.திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

நேற்று அங்கு சென்று இருந்த பொழுது கிளிக் செய்த படங்களை கீழே காணுங்கள்.


பீனிக்ஸ் பறவையின் சின்னத்துடன் மாலின் பெயர்ப்பலகை.

மாலின் ஒரு வெளித்தோற்றம்.

மாலினுள் நுழையும் பொழுது நுழைவு வாயிலில் அலங்காரப்பந்துகள் தலை அசைத்து வரவேற்கின்றன.
மாலின் உட்புறத்தோற்றம்.



இன்னொரு உட்புறத்தோற்றம்.

மாலினுள் நுழைந்ததுமே இந்த சிலைதான் வரவேற்கும்.

மாலின் இன்னொரு உட்புறத்தோற்றம்.

esbeda ஷோரூமில் அணிவகுத்து அழகு காட்டும் கைப்பைகள்.


marks&spencer ஷோ ரூமில் அணிவகுத்து இருக்கும்செருப்புகள்.



புட் கோர்டின் ஆரம்பம் என்பதனைக்காட்ட தட்டுக்களால் மலர் போன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு கலை நயத்துடன் காட்சி அளிக்கின்றன.

பாட்டில்களால் ஆன மெகா சைஸ் பூ ஆங்காங்கே வைக்கப்பட்டு தயவு செய்து தொடாதீர் என்ற அறைவிப்பு பலகையுடன் காட்சி அளிக்கின்றன.
புட் கோர்டின் உட்புறத்தோற்றம்.


தரைதளத்தில் அமைந்திருக்கும் இன்னொரு கலைநயமிக்க சிலை.



குழந்தைகளை கவர்ந்து இழுத்து செல்லும் பன்சிட்டி.

யூத்துக்கள் ,ஆண்டீஸ் மட்டுமல்ல பாட்டீஸும் கன ஜோராக மாலை வலம் வருவதைப்பாருஙகள்.பாட்டீஸுக்கு பின்னால் ஓடிப்போய் என் கேமராவுக்குள் சிறை பிடிப்பதற்குள் அப்பப்பா போதும் போதும் என்றாகி விட்டது.


எங்க வீட்டு குட்டி.அவர் கேட்டதெல்லாம் கிடைக்க வில்லை என்று முகத்தை ஒன்றரைமுழ நீளத்துக்கு தொங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.வீடு வந்து சேரும் வரை தொங்கிய முகம் ஒரு இன்ச் கூட ஏற வில்லை.





49 comments:

Unknown said...

wow. romba alagaga iruku... varum poluthu poohanum.. peranuku vaagi koduka maathigala.. pula paavum munjai thookithu irukaga...

Angel said...

ஒவ்வொர்முறை சென்னை வரும்போதும் ஒரு புதிய மால் முளைத்திருக்கும் !!! கடந்த முறை ஸ்கை வாக் ...now ஃபீனிக்ஸ் !!! அழகா சுற்றி காண்பித்தீர்கள் ...படங்கள் எல்லாம் சூப்பர்

Anonymous said...

மிக நல்ல விபரிப்பு. உங்கள் குட்டி அழுகாக உள்ளார் மால் படங்கள் அப்படியே வெளிநாடு போல தோற்றம் தருகிறது. மிக்க நன்றி. இன்று படமும் வரிகளும் ஏற்றியுள்ளேன் வேதாவின் வலையில்.
வேதா. இலங்காதிலகம்.

vanathy said...

super mall and nice photos.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படங்கள். வெகு அழகான விளக்கங்கள்.


>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஏஸி காற்று ஓசியில் வாங்க அக்கம் பக்கத்தினர் அங்கு செல்லலாம் என்று மெனக்கெடாதீர்கள்.இவ்வளவு பெரிய மாலை கட்டி விட்டு கரண்ட் பில்லுக்கு அஞ்சியோ என்னவோ ஏஸியே இல்லாமல் இருந்த நேரம் முழுக்க உஸ் உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே இருந்தவர்கள் அதிகம்.//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

ப்ளேட்டுக்களையும், பாட்டில்களையும் பூ வடிவில் அடுக்கியிருப்பது நல்ல அழகாக உள்ளது.

மிகபச்சிறப்பான பதிவு. நகைச்சுவையாக உள்ளது. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்>

பால கணேஷ் said...

மாலுக்குப் போய் எவ்வளவு செலவழிச்சீங்க? குட்டீஸ் கேட்ட எதை வாங்கித் தரலைன்னு உர்ருன்னு இருக்காரு? இதெல்லாம் அடுத்த பதிவா சிஸ்?

திண்டுக்கல் தனபாலன் said...

பலமுறை சென்றதுண்டு... படங்கள் கலக்கல்...

Asiya Omar said...

சென்னையில் புதுசாக என்ன என்ன வந்திருக்கிறதுன்னு உங்க பக்கம் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் என்ற அளவிற்கு பகிர்வுகள் அமர்க்களப் படுகின்றன.நல்ல படங்களோடு கூடிய பகிர்வு ஸாதிகா.

Jaleela Kamal said...

ஏன் ஆமிருக்கு அவர் கேட்டத வாங்கி தரல அப்படி என்ன கேட்டார், அந்த பீனிக்ஸ் மாலை யா????

கோமதி அரசு said...

பீனிக்ஸ் மால் நன்கு சுத்திப்பார்த்துவிட்டோம். வீட்டிலிருந்து சுத்தி பார்த்ததால் உஸ் உஸ் என்ற மூச்சு விடும் தொந்திரவு இல்லை.
பர்ஸிலிருக்கும் காசும் மிச்சம்.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
குட்டி பையன் அப்படி என்ன கேட்டார்?
நீங்கள் வாங்கிதரவில்லை செல்லத்திற்கு! அடுத்தமுறை போகும் போது அவன் கேட்பதை வாங்கி கொடுத்துவிடுங்கள்.

இளமதி said...

ஸாதிகா... நல்ல பதிவு. அழகழகாகப் படம் பிடித்து அதற்கேற்வகையில் வர்ணனையுடன் வாசிப்போருக்கு அப்படியே காட்சியை கண்ணுக்குள் காணவைக்கின்ற அலாதி திறமை உங்களிடம்...:)

அருமையாயாக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி!

துளசி கோபால் said...

வாவ் !!!! சென்னைக்கு இன்னொரு மெகா மாலா???

இனி கடலைகளுக்குக் கொண்டாட்டம்தான்:-)))

ஸாதிகா said...

முதல் கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

ஏஞலின் நீங்கள் வருவதற்குள் இன்னும் ஒரு சில மால்களும் திறக்கப்படலாம்.நானும் போய் சுற்றிப்பார்த்து விட்டு பதிவு போடுகிறேன்.நீங்கள் வந்து பார்த்து செல்ல வசதியாக இருக்கும்.

ஸாதிகா said...

மிக்க நன்றி வேதாதிலகம்.உங்கள் வலைக்கும் வருகிறேன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி வானதி.

ஸாதிகா said...

ப்ளேட்டுக்களையும், பாட்டில்களையும் பூ வடிவில் அடுக்கியிருப்பது நல்ல அழகாக உள்ளது.//உண்மைதான் மிக்க ரசிக்கத்தகுந்ததாக இருந்த்து.பலரும் அதன் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

குட்டீ கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தால் பர்ஸ் தாங்காது.அவரைத்தான் உங்களுக்கு தெரியுமே.ஒரு இடத்தில் நிற்க மாட்டான்.கோபம் வம்பு என்று வரும் பொழுது அப்படியே பிரேக் அடித்து விடுவான்.கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸாதிகா said...

சென்னையில் புதுசாக என்ன என்ன வந்திருக்கிறதுன்னு உங்க பக்கம் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் என்ற அளவிற்கு பகிர்வுகள் அமர்க்களப் படுகின்ற//ஹ்ம்ம்..இப்படி எல்லாம் படம் காட்டி உங்களை சென்னைக்கு இழுக்கலாம் என்றால் அசைய மாட்டேன் என்கின்றீர்களே ஆசியா?

ஸாதிகா said...

, அந்த பீனிக்ஸ் மாலை யா????//ஜலி இது ரொம்ப ஓவரா இல்லை:)

ஸாதிகா said...

குட்டி பையன் அப்படி என்ன கேட்டார்?//குட்டிப்பையன் கேட்டது ஒன்று இரண்டு என்றால் ஒகே.அவன் கேட்டதை எல்லாம் சொல்லப்போனால் தனிப்பதிவே போட வேண்டும் கோமதிமா.நன்றி கருத்துக்கு.

ஸாதிகா said...

கருத்தும் பாராட்டும் உற்சாகப்படுத்துகிறது இளமதி.நன்றி

enrenrum16 said...

/பாட்டீஸுக்கு பின்னால் ஓடிப்போய் என் கேமராவுக்குள் சிறை பிடிப்பதற்குள் அப்பப்பா போதும் போதும் என்றாகி விட்டது./

ஏன்க்கா..உங்கள விட பாட்டிகள் வேகமா நடந்தாங்களோ?? ஹி..ஹி..ஹி..

இருபது லட்சம் சதுர அடிகளா.... அடேங்கப்பா...

சூப்பரான பகிர்வுக்கு நன்றி.

மாதேவி said...

மால் அழகாக இருக்கின்றது.

குட்டீஸ் பாவமாக இருக்கிறார் வீட்டுக்கு வந்தபின் ஓக்கே ஆகி இருப்பார்.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. ஆரம்பத்தில் பிரமிப்பைத் தந்த மால் கலாச்சாரம் வரவர சலிப்பைத் தந்தாலும், எங்கும் கூட்டத்திற்குக் குறைவில்லை. பெங்களூர் பீனிக்ஸ் சென்றிருக்கிறேன். தென் ஆசியாவின் பெரிய மால் என ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மல்லேஷ்வரம் மந்திரி மாலின் கட்டமைப்பு ஏனோ ஈர்க்கவில்லை. இப்போது அதைவிடப் பெரிதாக வந்துள்ள ராஜாஜி நகர் ஓரியன் மால் நன்றாக உள்ளது.

RajalakshmiParamasivam said...

பீனிக்ஸ் மால் சுற்றிப் பார்த்த அனுபவம் எனக்கும் கிடைத்தது.
உங்கள் வீட்டுக் குட்டி அழகாக இருக்கிறார்.

நன்றி பகிர்விற்கு.

ADHI VENKAT said...

மாலை சுற்றிக் காட்டியதற்கு நன்றி. வழக்கம் போல் எல்லா இடத்திலயும் குமபலா...:)

தில்லியிலும் மால்களுக்கு சென்று வந்தாயிற்று...:) பெரிசா ஒண்ணும் கவருவதில்லை.

வேலைப்பாடுகள் அழகா இருக்கு.

Mahi said...

குறைந்த செலவில் ஃபீனிக்ஸ் மால் சுத்திக் காமிச்சதுக்கு மிக்க மிக்க நன்றிகள் ஸாதிகாக்கா! ;) :)

மகேந்திரன் said...

பார்த்துக்கொண்டே சுற்றி வருவதற்கே
ஒரு நாள் ஆகிவிடும் போல...
அழகாக இருக்கிறது.. சகோதரி...

ஹுஸைனம்மா said...

மொதல்ல சென்னையில ரியல் எஸ்டேட் நிலவரங்கள், பொறவு மெட்ராஸ் பகுதிகளின் பெயர்க்காரணங்கள், அப்புறம் வண்டலூர் ஜூ, அடுத்து பாண்டி பஜார் ரவுண்ட்-அப், இப்ப ஃபீனிக்ஸ் மால்... என்னா நடக்குது? எதும் பெரீஈஈஈய்ய பிஸினஸ் ப்ளானுக்காக ஒரே ஊர்சுத்தல்தான் நடக்குதுபோல??!! :-))))))))))

ஸாதிகா said...


ஏன்க்கா..உங்கள விட பாட்டிகள் வேகமா நடந்தாங்களோ?? ஹி..ஹி..ஹி..
//அட நீங்க வேற..என் நடையை அத்தனை சாமானியமாக நினைத்து விட்டீர்களா பானு.பாட்டீஸை படம் பிடிப்பதற்குள் குறுக்காக வந்த ஜனங்களால் தான் போதும் போதும் என்றாகி விட்டது.மிக்க நன்றி பானு.

ஸாதிகா said...

வீட்டுக்கு வந்து ஒக்கே ஆக ரொம்ப நேரம் பிடித்தது மாதேவி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

பழையன கழிதலும் புதியன் புகுதலும் மகக்ளுக்கு கைவந்த கலை ஆச்சே.புது மால்கள் வந்ததும் பழையவற்றுக்கு மவுசு குறைந்து வருகிறது .கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ராஜலக்‌ஷ்மி பரமசிவம்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஆதி.

ஸாதிகா said...

குறைந்த செலவில் ஃபீனிக்ஸ் மால் சுத்திக் காமிச்சதுக்கு //குறைந்த செலவா?????:)ஓ..நெட் வாடகை கரண்ட் செலவை சொல்லுகிறீர்களா மகி.ஒகே ஒகே:)கருத்துக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

பார்த்துக்கொண்டே சுற்றி வருவதற்கே
ஒரு நாள் ஆகிவிடும் போல..//உண்மைதான் சகோ மகேந்திரன்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

எதும் பெரீஈஈஈய்ய பிஸினஸ் ப்ளானுக்காக ஒரே ஊர்சுத்தல்தான் நடக்குதுபோல??!! :-))))))))))
///அட..நீங்க வேறு.ஹி..ஹி..வேறொன்றுமில்லை ஹுசைனம்மா சென்னை மீதுள்ள தனி பிரியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.இப்படி பதிவுகளை எழுத வைக்குது.கருத்துக்கு மிக்க நன்றி.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஸாதிகா அக்கா மீ ரொம்ப லேட்டாகிட்டேன்போல.. இப்ப கொஞ்ச நாளா.. வலையுலகை எட்டிப் பார்க்க, நேரமோ என்னமோ முடியாமல் இருக்கு.

உங்கட புளொக் இப்போ Travel channel போல இருக்கே.... சென்னைக்க்கு வந்தால் என்ன என்னவெல்லாம் பார்க்கலாம் என நன்றாக விபரிக்கிறீங்க.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

பீனிக்ஸ் மோல் சூப்பரா இருக்கே உள்நாடோ வெளிநாடோ எண்டே தெரியாமல் இருக்கு.. நல்லா படமெடுத்திருக்கிறீங்க... நண்டூஸும் வந்திருக்கா ஆவ்வ்வ்வ்வ்வ்:).

சாந்தி மாரியப்பன் said...

சென்னை ரொம்பவே முன்னேறிட்டு வருது போலிருக்கு. நல்லதுதான் :-))

சென்னை பித்தன் said...

மாலைப் பார்த்த திருப்தி ஏற்பட்டு விட்டது!இனி ஏன் போக வேண்டும்!நான் சிடி சென்டர் தவிர எந்த மாலையும் பார்த்தது கிடையாது!

ஸ்ரீராம். said...

இதுவரை எந்த மாலுக்கும் போய்ப் பார்த்ததில்லை! :)

மனோ சாமிநாதன் said...

உண்மையில் வெளி நாட்டுக்கு இணையான அழகுடன் காட்சியளிக்கிறது இந்த மால்! புகைப்படங்களும் விரிவான விபரங்களும் அருமை! சென்னையில் இருந்தால் நன்றாகவே பொழுது போகும் ஸாதிகா!

Asiya Omar said...

ஸாதிகா உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்..
http://www.asiya-omar.blogspot.ae/2013/03/blog-post_11.html

வானவில் said...

வெளிநாட்டு மால்களுக்கு இணையாக நம் சென்னையிலும் மால்கள் உருவாகுவது நல்ல விஷயம் தான்...

நேரில் பார்த்தால் கூட நாம் எதையாவது மிஸ் செய்வோம்..அழகாக விளக்கியுள்ளீர்கள்..படங்கள் சூப்பர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.

அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in