February 24, 2013

சென்னை நாமகாரணம்




குளம் , மலை , ஆறு , பட்டி, பேட்டை, வலசு, பாளையம், பட்டினம், புரம், நகர், ஊர் போன்றவை பொதுவான இடப்பெயர்களாகும்.
சென்னையின் பல ஏரியாக்களின் பெயர்கள் பாக்கம்,பேட்டை,ஊர்,புரம் நகர்,சாவடி,மேடு என்று முடிகின்றன.

பாக்கம்,வாக்கம் என்று முடியும் அரும்பாக்கம் ,ஆதம்பாக்கம் ,கோடம்பாக்கம் ,நுங்கம்பாக்கம் ,கீழ்ப்பாக்கம் ,பாலவாக்கம் ,காட்டுப்பாக்கம் ,
பட்டிணம்பாக்கம் ,மடிப்பாக்கம் ,வில்லிவாக்கம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் ,புரசைவாக்கம் ,கொட்டிவாக்கம் ,அச்சரப்பாக்கம் ராஜாகீழ்ப்பாக்கம் ,மாதம்பாக்கம் ,பெரும்பாக்கம் ,ஊரப்பாக்கம் ,புதுப்பாக்கம் ,மாம்பாக்கம் ,சித்லப்பாக்கம் ,கோலப்பாக்கம் ,தொரைப்பாக்கம் ,ஈஞ்சம்பாக்கம் ,மவுலிவாக்கம் ,ஆலப்பாக்கம் ,கேளம்பாக்கம் ,புழுதிவாக்கம் ,நெசப்பாக்கம் ,சேப்பாக்கம் ,ஊரப்பாக்கம் , பட்டினப்பாக்கம்  ,செம்பரம்பாக்கம் ,மீனம்பாக்கம் ,நந்தம்பாக்கம் ,முகலிவாக்கம் என்றும்

பேட்டை என்று முடியும் கொருக்குப்பேட்டை ,வண்ணாரப்பேட்டை  ,முத்தியால்பேட்டை ,சைதாபேட்டை ,சௌகார்பேட்டை  ,தண்டையார்பேட்டை ,தேனாம்பேட்டை ,ஜாபர்கான்பேட்டை ,ராயப்பேட்டை ,குரோம்பேட்டை ,ஆழ்வார்ப்பேட்டை ,நசரத்பேட்டை ,புதுப்பேட்டை ,சூரப்பேட்டை என்றும்

ஊர் என்று முடியும்  கொரட்டூர் ,கொளத்தூர் ,போரூர் ,ஸ்ரீபெரும்புதூர் ,திருப்போரூர் ,பொழிச்சலூர் ,நாவலூர் ,வண்டலூர் ,நொளம்பூர் ,ஆலந்தூர் ,கொரட்டூர் ,பெருங்களத்தூர் ,சோழிங்கநல்லூர் ,மைலாப்பூர் ,திருவான்மியூர் ,முடிச்சூர் ,நங்கநல்லூர் ,கானாத்தூர் ,பையனூர் ,பெரம்பூர் ,குன்றத்தூர் ,சேலையூர் ,அனங்காபுதூர் ,எழும்பூர் ,கொடுங்கையூர் ,திருவொற்றியூர் ,பெரவள்ளூர்  ,அம்பத்தூர் ,எண்ணூர் என்றும்,

முன்னர் ஏரி இருந்த இடங்களை இப்பொழுது நிலத்தடியாக்கிய குடி இருப்பு பகுதிகளை கடைசியில் ஏரி என்று முடியும் படியாக ரெட்டேரி ,பொத்தேரி ,வெப்பேரி ,ஒட்டேரி என்றும்,

புரம் என்று முடியும் ராயபுரம் ,ராமாபுரம் ,ராஜஅண்ணாமலைபுரம் ,மகாலிங்கபுரம் ,தசரதபுரம் ,கோட்டூர்புரம் ,பல்லாவரம் ,மாதாவரம் ,அயனாவரம்,கோபாலபுரம் ,ரங்கராஜபுரம் ,டிரஸ்ட்புரம் ,சோழாவரம் என்றும்,

நகர் என்று முடியும் எம்ஜிஆர் நகர் ,கே கே நகர் ,அசோக்நகர் ,தியாகராயநகர் ,அழகிரிநகர் ,அண்ணாநகர் ,ஆழ்வார் திருநகர் ,செனாய் நகர் ,வள்ளலார் நகர் ,பெசண்ட் நகர்  ,மறைமலை நகர் என்றும்,

சாவடி என்று முடியும் கொத்தவால்சாவடி ,சுங்கன்சாவடி ,வேலப்பன்சாவடி ,கந்தன்சாவடி ,குமணன்சாவடி  ,

பஜார் என்று முடியும் சைனாபஜார் ,பர்மாபஜா ,பாண்டிபஜார் ,ஜாம்பஜார் என்றும் நமகரணங்கள் சென்னை ஏரியாக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இனி  பெயர் சூட்டிய காரணக்களைப்பார்ப்போம்.
இஸ்லாமியர்கள் இங்கு பள்ளிவாசல்களை கட்டி தொழுகை நடத்தி வந்தனர்.ஆகவே  மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.முற்காலத்தில் சென்னபசவ நாயக்கன் என்ற மன்னர் தான் ஆண்ட பகுதியான இப்போதைய சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு விற்று விட்டார்.அவர் ஆண்ட பகுதியின் ஞாபகார்த்தமாக சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது சென்னை என்றும் சொல்கின்றனர்.

அந்தக்காலத்தில் திருட்டு பொருட்களின் விற்பனையகமாக இருந்த பர்மா பஜார் பகுதியையை ஆங்கிலேயர்கள் தீவ்ஸ் பஜார் என்று அழைத்து வந்தனர்.பின்னர்.பர்மியர்களின் குடியிருப்பு பெருக அதுவே பர்மாபஜார் ஆகி விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நரிமேடு என்ற மணற்குன்றில் இருந்து கொண்டுவந்து பள்ளமாக இருந்த இப்போது இருக்கும் மண்ணடி பகுதியை நிரப்பியதால் மண்ணடி என்ற பெயர் வந்தது.

கொத்தவால் என்பதற்கு அர்த்தம் வரி வசூலிப்பவன்.இந்தப்பகுதி அந்தக்காலத்தில் வரிவசூலிப்பு எல்லையாக இருந்ததால் கொத்தவால்சாவடியாகநிலை பெற்றுவிட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தங்கசாலையில் வெள்ளிக்காசு அச்சடிக்கும் ஒருவர் இருந்தார்.அதுவே தங்கசாலையாகி விட்டது.

ஊர் செய்திகளை தண்டோரா போடும் ஆட்கள் இருக்கும் இடமே இப்போதைய தண்டையார் பேட்டை.

பல்லவர் ஆட்சிக்காலத்தில் மன்னரின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ராயர்புரமாகி இன்று ராயபுரம் ஆகி விட்டது.

அக்காலத்தி புரசை மரங்கள் புதர் போன்று மண்டி காடு போல் காட்சி அளித்தது.அதுவே இன்றைய புரசைவாக்கம்.

போரில் லவகுசர்களால் தோல்வி அடைந்து அமர்ந்த இடம் அமர்ந்தகரை அமைந்தக்கரையாகி இப்போது அமிஞ்சகரையாகி விட்டது.

பெரிய குளங்கள் நிறைந்த பகுதியாதலால் அதுவே பெருங்குளமாகி அதுவே மருவி பெருங்குளத்தூர் ஆகிவிட்டது.

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம் ஆகும்.

அன்றைய மா அம்பலம் இன்றைய மாம்பலத்தின் சிவாலயத்தின் நந்தவனம் இருந்த பகுதியே இன்றைய நந்தனம்.இங்கு பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிலை பிரசித்தம்.

நூல் நெய்யும் தறியாளர்கள் வசிக்கும் பகுதியாக சிந்தாதிரிபேட்டை ஒரு காலத்தில் இருந்தது.அகவே இது சின்னத்தறிபேட்டையாக இருந்து காலப்போக்கில் சிந்தாதிரிபேட்டையாக மாறிவிட்டது.

சென்னையில் வசிக்க வேண்டுமானால் வரிகட்டவேண்டும் என்ற திட்டத்தை கொண்டுவரப்பார்த்தவர் ஆங்கிலேயர் பேப்பமன்ஸ் பிராட்வே .வரிகட்டவேண்டுமென்பதற்காக சென்னையை காலி செய்து விட்டு செல்ல திட்டமிட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.அந்த யோசனையைக்கூறிய பேப்பமன்ஸ் பிராட்வே பெயரே இப்போதைய பிராட்வேக்கு சூட்டப்பட்டுள்ளது.

செட்டியார்கள் நிறைந்து வசித்த பகுதி செட்டிப்பட்டி இப்போதைய சேத்துப்பட்டு.

மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்து வந்த  இடம் இன்று மாம்பலம் ஆகி விட்டது.

கோடா-பாக் என்றால் குதிரைகள் நிறுத்தும் இடம் என்ற அர்த்தம் உண்டாம்.ஆற்காடு நவாபுடைய குதிரைப்படைக்கான இடமே கோடாபாக் இப்போதிய கோடாம்பாக்கம் ஆகி விட்டது.

பரங்கிமலை .பரங்கியர் என்றால் தமிழில் வெள்ளையர் என்றொரு அர்த்தமும் உண்டு.வெள்ளையரின் நினைவாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் தமிழில் பரங்கி மலையாகி விட்டது.

சென்னை நகரை பொருத்த மட்டில் முதலில் சூர்யோதயம் விழுவது எழும்பூர் பகுதியிலாம்.முதலில் விடிவதால் அதனை எழுமூர் என்றனர் காலப்போக்கில் மருவி எழும்பூர் ஆகிவிட்டது.

ஆதிகாலத்தில் வசித்த முனிவர் ஒருவர் தான் தவம் செய்த பொழுது பூஜைக்கான கிண்டியை இவ்விடத்தில் பொருத்தியதால் கிண்டியாகி விட்டது.

அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் திருவல்லிக்கேணி இப்பெயரைப் பெற்றது.

பண்டைய காலத்தில் குரோம் லெதர் தொழிற்சாலை இங்கு அமையப்பெற்று இருந்ததால் குரோம் பேட்டை ஜனித்தது.

நட்புகள் பதிவில் வராத ஏரியாக்களின் பெயர்காரணங்களை பின்னூட்டலாம்..



51 comments:

சீனு said...

ஒவ்வொரு ஏரியாக்களின் பெயரை தொகுத்ததற்கே உங்களுக்கு ஒரு ஓ போடலாம்...

//மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்து வந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.// மா அம்பலம் அதாவது இங்கு சிவன் பெரிய அம்பலத்தில் ஆடுகிறார் என்பதால் மாம்பலம் என்று தான் நான் கேள்விபட்டுள்ளேன்...

மயிலாப்பூர், மயில் அதிகம் இருந்த இடம்

ஆவடி AVADI Armoured Vehicles and Ammunition Depot of India

சிறந்த தொகுப்பு

ஸாதிகா said...

உடன் கருத்துக்கு மேலதிகத்தகவல்களுக்கும் மிக்க நன்றி சீனு.

Asiya Omar said...

தொகுப்பு இண்ட்ரெஸ்டாக இருக்கே! சென்னையில் பாக்கம் என்று முடியும் இடமும் பல கேள்விபட்டு இருக்கேன்,இருக்குதானே! தோழி..

ஸாதிகா said...

பாக்கம்,வாக்கம் என்று முடியும் ஏரியாக்களைத்தான் பெரிய லிஸ்டாக கொடுத்துள்ளேனே தோழி:)கருத்துக்கு நன்றிப்பா.

Kanchana Radhakrishnan said...

சிறந்த தொகுப்பு

Unknown said...

arumaiyana thohupu.. padikavey romba intrest a iruku..

eppadi ivvalavu visyam seharithegaa?

Avargal Unmaigal said...

அறியா பலதகவலை அறிய தந்ததற்கு நன்றி

Seeni said...

adengappaaaa...!
chenniayave kondu vanthudeenga...

நம்பள்கி said...

பிரமாதம்...! Great..!

நான் பிறந்து வளர்ந்த மெட்ராஸ் -- பற்றி பல நல்ல தகவல்கள்.

சில தகவல்கள் சரியில்லை; உங்களுக்கு கூறியவர்கள் தவறாக கூரியிருக்கலாம். அதை இப்போது நான் சொல்வது தவறு...பிறகு கூறுகிறேன்....

படிக்க இதமாக இருகிறது..!

cookbookjaleela said...

சென்னையில் எல்லா ஏரியாவும் அக்கு வேரு ஆனிவேரா பிரிச்சி எழுதிட்டீங்க
இதில் நான் கேள்வி படதா இடம், நிறைய இருக்கு

கோடம்பாக்கம் பெயர்வந்தது இதில் தான் தெரிந்து கொண்டேன்

கொத்தவாச்சவடி மட்டும் தான் தெரியும்

கல்யாணங்களுக்கு மொத்தமாக சாமான்கள் வாங்க செல்வார்கள்


மற்றபடி
மேடவாக்கம், பாலவாக்கம்,
பல்லாவரம்
கோடம்பாக்கம்
மைலாப்பூர்,

கோடம்பாக்கம்

எல்லா இடத்திலும் எங்க ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்

கிருஷானாம் பேட்டை , ஜாம்பஜார்
இதை பற்றி எழுதினீங்கலா?

நொச்சி குப்பம்

RajalakshmiParamasivam said...

எத்தனை பாக்கம், ஏரி, ஊர்.
இத்தனையும் தொகுத்துக் கொடுத்த உங்களுக்கு பாராட்டு.

பெயர்க் காரணம் தகவல்கள் அருமை.சுவாரஸ்யம் மிகுந்த பதிவு.
நன்றி பகிர்விற்கு.

கோமதி அரசு said...

அம்மாடி! எவ்வளவு செய்திகள்.
ஊர் ,பெயர்காராணம் எல்லாம் அழகாய் தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

தங்களுடைய பதிவுகள் படிக்க சுவரசியமாக உள்ளது.அப்படியே ஈமெயில் மூலம் பதிவை பெற்று கொள்ளும் வசதியை எற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

சுவையான தகவல் பதிவு! ஊரும் அதற்கான காரணமும் அருமையாக விளக்கி இருந்தீர்கள். பொதுவாக கடற்கரை சார்ந்த பகுதிகள் பாக்கம் என்று அழைக்கப்படும் என்று படித்துள்ளேன். நன்றி!

ராமலக்ஷ்மி said...

பெயர்க்காரணங்கள் சுவாரஸ்யம். நல்ல பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தலைநகர தொகுப்பிற்கு நன்றி...

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

ஸாதிகா said...

//வரிகளில் மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி நம்பள்கி.

ஸாதிகா said...

கிருஷ்ணாம் பேட்டை மட்டுமல்ல இன்னுமெத்தனையோ நகர்களும் பாக்கங்களும்,புரங்களும் ஊர்களும் உள்ளது.விரிவுக்கு அஞ்சி குறைத்துக்கொண்டேன் ஜலி.:)உடன் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ராஜலக்‌ஷ்மி பரமசிவம் பதிவை ரசித்து படித்து கருத்திட்ட உங்களுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

தங்களுடைய பதிவுகள் படிக்க சுவரசியமாக உள்ளது//வரிகளில் மிக்க மகிழ்ச்சி ஆரிஃப்.
ஈமெயில் மூலம் பதிவை பெற்று கொள்ளும் வசதியை எப்படி ஏற்படுத்துவது என்று தெரியவில்லை .முயல்கின்றேன்.கருத்துக்கும்,ஆர்வத்திற்கும் மிக்க நன்றி

ஸாதிகா said...

பொதுவாக கடற்கரை சார்ந்த பகுதிகள் பாக்கம் என்று அழைக்கப்படும் என்று படித்துள்ளேன்//மேலதிகத்தவலுக்கு மிக்க மகிழ்ச்சி.இது நான் அறியாதது.நன்றி எஸ் .சுரேஷ்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸாதிகா said...

//adengappaaaa...!
chenniayave kondu vanthudeenga...//கருத்துக்கு மிக்க நன்றி சகோ சீனி.

துளசி கோபால் said...

வாவ்!!! அட்டகாசமான ஆராய்ச்சியா இருக்கே ஸாதிகா!!!

ரசனையான பதிவு. ரசித்தேன்:-)

மாடுகள் மேய்ஞ்சு திரிஞ்ச இடம்தான் மந்தைவெளியாச்சு.

சலவைத்தொழிலாளர்கள் நிறைந்த இடம் வண்ணாரப்பேட்டை.

இப்ப அண்ணாநகர்ன்னு பாஷ் ஏரியாவா இருக்குமிடம் எனக்குத் தெரிஞ்சே.... ஒன்னுமில்லாமல் இருந்த வெறும் பொட்டல்காடு.

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டுன்னு தனித்தனி கிராமமா சென்னபசவப்பர் காலத்துலே இருந்துருக்கு. மாட்டுவண்டி கட்டிக்கிட்டு போய் வருவாங்களாம்.

பால கணேஷ் said...

நல்லதொரு ஆராய்ச்சி. சிறப்பான பகிர்வு. சென்னைல ‘‌கொலைகாரன் பேட்டை’ன்னு ஒரு இடம் உண்டே அதுக்கு ஏன் அந்தப் பேருன்னு தெரியுமாம்மா? (எனக்குத் தெரியல) கொலைகாரங்க குடும்பம் குடும்பமா வசிச்சதால கொலைகாரன் பேட்டைனு வந்திருக்குமோ...!

Unknown said...

தெரியாத தகவல் . நன்றி

ஸ்ரீராம். said...

பரங்கிமலைக்கு பிருங்கி முனிவர் இருந்த இடம் என்றும் பிருங்கி மலை பரங்கி மலை ஆனது என்றும் கூடச் சொல்வார்கள். அருகிலிருக்கும் ஊர் நந்தவனமாக இருந்து நந்தம்பாக்கம் ஆகியது என்றும் ராமன் கால் பட்ட நந்தவனம் என்றும் அந்த ஊரில் இருக்கும் கோவிலில் எழுதி இருக்கிறது.

அம்பட்டன் வாராவதி என்று ஒரு இடம் கேள்விப் பட்டிருக்கிறேன்.

எல்லா ஊர் பற்றிய விளக்கங்களும், அலசல்களும் அருமை. நாம் வசிக்கும் இடம் பற்றிய குறிப்புகளையும் சேர்த்துப் படிக்கிறோம் என்றால் உற்சாகம்தான்!

ஸாதிகா said...

வாங்க துளசிம்மா.உறசாகமான பின்னூட்டலுக்கும்,மேலதிகத்தகவல்கள்ளுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

‘‌கொலைகாரன் பேட்டை’ன்னு ஒரு இடம் உண்டே அதுக்கு ஏன் அந்தப் பேருன்னு தெரியுமாம்மா? //ஐயையோ..கொலைகாரன் பேட்டைகூட உண்டா?நான் கண்ணம்மாபேட்டைதான் அறிந்து இருக்கிறேன்.யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.கணேஷண்ணா மிக்க நன்றி கருத்துக்கு.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஞானம் சேகர்.

ஸாதிகா said...


பரங்கிமலைக்கு பிருங்கி முனிவர் இருந்த இடம் என்றும் பிருங்கி மலை பரங்கி மலை ஆனது என்றும் கூடச் சொல்வார்கள்.//இதே பிருங்கி முனிவர்தான் தன் தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியை பொருத்திய இடமான கிண்டி பகுதியை இப்பொழுது கிண்டி என்று அழைக்கின்றனர்.கருத்துக்கும்,மேலதிகத்
தகவலுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்

துளசி கோபால் said...

கல் உடைக்கும் தொழிலாளர்கள் நிறைய இருந்த இடம் கல்லுக்காரபேட்டை என்பது காலப்போக்கில் கொலைகாரன்பேட்டைன்னு ஆனதாச் சொல்வாங்க. இது கொஞ்சம் ப்ராக்டிக்கலா இருக்கு. ஆனால் இன்னும் சிலர் அங்கே இருந்த திறந்தவெளிகளில் நடிகைகள் கோலாட்டம் ப்ராக்டீஸ் செஞ்சதால் கோலாட்டபேட்டை என்பது கொலைகாரனா ஆச்சும்பாங்க. அப்ப ஏது நடிகைகள் கோலாட்டம் போட்டாங்களாம்? சொல்றதுக்கு கவர்ச்சியா இருக்கட்டுமேன்னு யாரோ கிளப்புனமாதிரி இருக்கு.

அந்த அம்பட்டன் வாராவதி சமாச்சாரம் வேற:-) ஹேமில்ட்டன் ப்ரிட்ஜ் என்று அந்த பாலத்துக்கு பெயர் வைக்கப்போக, நம்மாட்கள் ஹேமில்ட்டனை அம்பட்டனாக்கி அதை பார்பர்ஸ் ப்ரிட்ஜ்ன்னு இங்கிலீஷில் 'முழி' பெயர்த்துட்டாங்கப்பா:-))))

இளமதி said...

அருமையான தொகுப்பு ஸாதிகா.
நல்ல ஒரு ஆராச்சி. ரொம்பவே ஆழமாக விபரங்களை சேகரித்து வழங்கியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்!

நம்பள்கி said...

[[அந்தக்காலத்தில் திருட்டு பொருட்களின் விற்பனையகமாக இருந்த பர்மா பஜார் பகுதியையை ஆங்கிலேயர்கள் தீவ்ஸ் பஜார் என்று அழைத்து வந்தனர்.பின்னர். பர்மியர்களின் குடியிருப்பு பெருக அதுவே பர்மாபஜார் ஆகி விட்டது.]]

இது சரியில்லை என்பது என் கூற்று. கருணாநிதி அல்லது எம்ஜீயார் முதல் அமைச்சராக இருந்தபோது, மறுபடியும் பர்மாவில் இருந்து அகதிகள் வந்தனர்; அவர்கள் பிழைப்புக்காக மற்றும் கொண்டு வந்த வெளிநாட்டுப் பொருள்களை விற்க First line beach -ல் இடம் கொடுத்தார்கள்.

பிறகு அவர்களிடம் இருந்து கைமாறி இப்போ பர்மா பஜார் என்றால் திருட்டு சாமன்கள் விற்கும் இடம் என்று பெயர பெற்றது..

ஆங்கிலயர்கள் காலத்தில் இங்கு பஜாரெ கிடையாது; அப்போ மூர் மார்கெட் தான் மக்களை ஏமாத்தும் இடம்..!

நம்பள்கி said...

]]ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தங்கசாலையில் வெள்ளிக்காசு அச்சடிக்கும் ஒருவர் இருந்தார்.அதுவே தங்கசாலையாகி விட்டது.]]

மேலே சொன்ன செய்தி புரயொயவில்லை; ஆங்கிலத்தில்..
Mint -- என்ற இடத்தில் ஆங்கிலேய அரசாங்கம் காசுகள் (எல்லா காசுகலும்) அடிக்கும் இடம்.

நம்பள்கி said...

]]பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம் ஆகும்.]]

சுங்கசாவடி!எனபது தான்
டோல்கேட்..!

நீங்கள் சொல்லும் சுங்குவார் சத்திரம் காஞ்சிபுரம் அருகில்...!

துளசி கோபால் said...

பர்மாபஜார் பற்றி நம்பள்கி சொன்னதுதான் உண்மை.1962/63 ன்னு நினைக்கிறேன்..... பர்மாவில் இருந்து அகதிகள் திருபிவந்தபோது அவுங்க கொண்டுவந்த (வெளிநாட்டுப்) பொருட்களை விற்பனை செய்யுமிடமா ஆரம்பிச்சது.

அப்போ தரமான பொருட்களா அவை இருந்துச்சு என்பதையும் சொல்லணும்தான்.

பீச் ஸ்டேஷனையொட்டி, தபால் தலைமையகம்(ஜி பி ஓ) எதிர்வாடையில் இருந்துச்சு.

ADHI VENKAT said...

ஆராய்ச்சி சூப்பரா இருக்குங்க...

எத்தனை ஏரியாக்கள். அவற்றுக்கு பெயர்க்காரணங்கள். கலக்கலா இருக்கு.

என் தில்லி தோழியின் பிறந்த வீடு இருப்பது மாடம்பாக்கம் என்று நினைக்கிறேன்.

Mahi said...

Interesting post Akka! Enjoyed the comments as well! :)

ஸாதிகா said...

கொலைகாரபேட்டைக்கான விளக்கத்திற்கு மிக்க நன்றி துளசிம்மா.உற்சாகமாக பின்னூட்டி மேலும் என்னை இது போல் பதிவெழுத தூண்டும் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி இளமதி.

ஸாதிகா said...

மேலதிகத்தகவல்கள் அடுத்தடுத்து பின்னூட்டி தந்தமைக்கு மிக்க நன்றி நம்மள்கி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆதி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மகி.

Ranjani Narayanan said...

பெயர்க் காரணம் பற்றி நிறைய தகவல்கள் சேகரிச்சுக் கொடுத்திருக்கீங்க ஸாதிகா! பாராட்டுக்கள்.

ஒரு சின்ன திருத்தம்:
மதரஸா என்பவைகள் கல்வி கற்பிக்கும் - குறிப்பாக மத சம்பந்தப் பட்ட கல்வியை கற்றுத் தரும் இடங்கள்.
இந்த இணைப்பில் போய் பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/Madrasa


ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா.//ஒரு சின்ன திருத்தம்:
மதரஸா என்பவைகள் கல்வி கற்பிக்கும் - குறிப்பாக மத சம்பந்தப் பட்ட கல்வியை கற்றுத் தரும் இடங்கள்.// பொதுவாக இஸ்லாமிய தொழுகை நடத்தும் பள்ளிகளின் வளாகத்தினுள்ளேயே,பாடம் கற்பிக்கும் மதரஸாக்களும் உண்டு.