January 23, 2013

வீடு வாங்கலாமா?
பிளாட்(plot) வாங்கலாமா?ஃபிளாட்(flat) வாங்கலாமா?தனிவீடு வாங்கலமா?அடுக்கு மாடி வீடு வாங்கலாமா?நிலம்,கட்டிடங்களின் விலை இப்படி விண்ணை எட்டிக்கொண்டே போகிறதே.குறையுமா இல்லை இன்னும் அதிகரிக்குமா?தனிவீடாயின் வில்லங்கம் வந்து விடுமா?பில்டர் நினைத்த படி கட்டி முடித்து தருவார்களா?வீடு வாங்க நினைப்பவர்களின் மனதில் எழும் பல கேள்விகளில் இந்தக்கேள்விகள் முக்கியமானது.

ரெகுலர் இன்கம் வேண்டுமென்றால் ஃப்ளாட்டிலும், நீண்டகால முதலீடுக்கு பிளாட்டிலும் முதலீடு செய்வதே சிறப்பானதாகும்.

எப்பொழுதுமே நம் நாட்டில் ஐ டி துறையைச்சார்ந்தே  நிலங்களின்,அடுக்கு மாடி குடி இருப்புகளின் வளர்ச்சியும் ,வீழ்ச்சியும் இருக்கும்.மற்ற துறைகளை விட ஐ டி துறையினருக்கு வருமானம் அதிகம்.வருமானவரித்தொல்லைகளில் இருந்து விடுதலை பெற அதிகளவு நிலமாகவோ,அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ வாங்குகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆகி விடுகின்றனர்.

இப்பொழுது உள்ள விலை வாசியில் நடுத்தர வர்க்கத்தினர்  அவரவர் தகுதிக்கு எற்றார் போல் அடுக்குமாடி குடி இருப்புகளையே வாங்க விரும்புகின்றனர்.கால் கிரவுண்ட் வாங்கக்கூடிய விலையில் முழுதாக ஒரு வீட்டையே வாங்கி குடி புகுந்து விடலாம்.

புறநகர்ப்பகுதிகளில் நிலங்கள் வாங்கி முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படும் அபாயமும் உள்ளது. பிறகு ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய கோர்ட் கேஸ் போன்ற அலைச்சல்,காலி செய்ய பணம் ,வாங்கிய நிலத்தை அவ்வபொழுது சென்று கண்காணிக்கும் சிரமம்,டென்ஷன் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பயந்து  ஃப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது அதுவே சிறந்ததாக கருதுகின்றனர்.இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் கையிலே காசு வாயிலே தோசை என்பது போல் முதலீடு செய்த சில மாதங்களில் வாடகை மூலம் வருமானமும் வரும்,ஃபிளாட்டின் மதிப்பும் (Appreciation ) உயர்ந்து கொண்டே செல்லும் என்று கணக்கு போடுபவர்கள் அதிகம்.

சொந்த வீடு அனைவரின் கனவாக,இலட்சியமாக உள்ளது.ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வட்டியை குறைத்ததுமே பலரும் வீடு வாங்க நினைகின்றனர்.தங்கள் சேமிப்பில் முழு தொகையை வைத்து வீடு வாங்குவோரை விட,அதிகளவு வங்கி கடன் பெற்று வாங்குபவர்களே அதிகம்.பில்டர்களும் 20% சொந்த பணம் போதும்.மீதி 80% நாங்களே ஏற்பாடு செய்து தருகின்றோம் என்று சுண்டி இழுக்கின்றனர்.

வீடு வாங்குபவர்கள் தங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு,தரமான திருப்திகரமான வீடுகளை வாங்க நினைப்பவர்கள் முதலில் நல்லதொரு பில்டரை தேர்வு செய்வது நல்லது.பற்பல விஷயங்களை பொறுத்தே ஒரு பிளாட்டின் விலையை மதிப்பீடு செய்ய  முடியும்.  வீட்டைக்கட்டும் பில்டர்,பிளாட் அமைந்துள்ள இடம்,உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஏரியா, ஃபிளாட்டின் வசதிகள்,கட்டுக்கோப்புகள்,உபயோகிக்கப்படும் பொருட்கள் ,பராமரிப்பு,  போன்ற  அம்சங்களை கொண்டு ஒரு ஃபிளாட்டின் விலை மதிப்பிடப்படுகிறது.

இதற்கு முன் அந்த நிறுவனத்தினர் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள்,நிறுவனத்தினரின் செயல்பாடுகள் அதன் வசதிகள் என்று அக்குவேறாக ஆணி வேறாக அலச வேண்டுவது அவசியம்.ஒரு புடவை வாங்குவதென்றாலே நான்கு கடைகள் ஏறி இறங்கும் பொழுது முழுதாக ஒரு வீடு வாங்கும் பொழுது கண்டிப்பாக சிரமம் ஏற்று அலைந்தாக வேண்டியது அவசியம்.

சதுர அடியின் விலை சற்று அதிகமாயினும் தரமான,முன்னணி பில்டர்களிடம் வாங்குவது இன்னும் பாதுகாப்பானது.உடனே குடி புகத்தேவை இல்லை என்றால் கட்டிடடத்திற்கு அஸ்திவாரம் போடும் பொழுதே நாம் புக் செய்து விட்டால் குறைந்த விலையில் வாங்கி விடலாம்.அதுதான் புத்திசாலித்தனமும் கூட.அடித்தளம் போடும் பொழுது 5000 ரூபாய் ஒரு சதுர அடி என்று அறிவித்து இருந்தால் 20 சதவிகிதம் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது 5300 ஆகி விடும்.கட்டிடம் படிப்படியாக முழுமை பெற பெற சதுர அடியின் விலையும் எகிறிக்கொண்டே இருக்கும்.ஆரம்பநிலையில் விலை குறித்து பில்டர்களிடம் அடித்து பேரம் பேசலாம்.அவர்களும் நிறைய இறங்கி வருவார்கள்.ஃபிளாட் வாங்குபவர்களுக்கும் முதலீட்டுப் பெருக்கம் என்பது அவர்கள்  எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக கிடைக்கும்.

முந்திய பதிவில் படித்த மாதிரி பில்டர்களின் கலர் கலர் விளம்பரங்களை அப்படியே நம்பி, வார்த்தை ஜாலங்களில் மயங்கி விடாமல்,அட்வான்ஸ் கொடுக்கும் முன் வாங்குபவர்கள் ராஜா.அட்வான்ஸ் கொடுத்த பின் பில்டர்கள் ராஜா என்பதை கவனத்தில் கொண்டு அட்வான்ஸ் கொடுக்கும் முன்னரே ஏகப்பட்ட ,வேண்டிய கேள்விகள் கேட்டு ,தேவையான கண்டிஷன்கள் போட்டு,தரமற்ற,நியாமற்ற புரமோட்டர்களின் வலையில் வீழ்ந்து விடாமல்,விழிப்புணர்வோடு,பக்கா டாக்குமெண்டில்,அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி,அக்ரிமெண்ட் போட்டு,கட்டிடம் கட்டப்படும் காலம் பல தடவைகள் சிரமம் பாராது சென்று கட்டிடத்தின் வளர்ச்சியை கண்கானித்து,ஏமாற்றம்,குறை இருப்பின் அப்பொழுதே புகாராக கூறி,அதற்கான தீர்வு பெற்று ,அக்ரிமெண்டில் உள்ள பிரகாரம் பணம் செலுத்துவதில் கவனம் கொண்டு விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இனிய இல்லம் நமதே. மொத்தத்தில் பொன்னில் போட்ட காசுக்கும் மண்ணில் போட்ட காசுக்கும் பழுதில்லை என்ற பழமொழிகொப்ப புத்திசாலித்தனமாக,கவனமாக ஆராய்ந்து வீட்டை வாங்கி முதலீடு செய்வது நலமே.
32 comments:

s suresh said...

வீடு வாங்குவோருக்கு ஏற்ற பயனுள்ள ஆலோசனைகள்! நன்றி!

பால கணேஷ் said...

இன்றைய சூழ்நிலையில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் எத்தனை அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும்னு ஒரு கைடு மாதிரி அழகா எழுதிட்டீங்க. அருமையான தொடர் கட்டுரையை மிக ரசித்தேன்.

semmalai akash said...

அருமையான அலசல், மிகவும் பயனுள்ள பதிவு, இது எல்லாமே நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கு...

ஸாதிகா said...

முதல் கருத்துக்கு மிக்க நன்றி s suresh

ஸாதிகா said...

கட்டுரையை ரசித்து வாசித்த கணேஷண்ணாவுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

அருமையான அலசல், மிகவும் பயனுள்ள பதிவு//வரிகளில் மகிழ்ச்சி.மிக்க நன்றி semmalai akash .

கோமதி அரசு said...


பொன்னில் போட்ட காசுக்கும் மண்ணில் போட்ட காசுக்கும் பழுதில்லை என்ற பழமொழிகொப்ப புத்திசாலித்தனமாக,கவனமாக ஆராய்ந்து வீட்டை வாங்கி முதலீடு செய்வது நலமே//
சரியாக சொன்னீர்கள் ஸாதிகா.
புதிதாக வாங்க விரும்புபவர்களுக்கு தேவையானது உங்கள் குறிப்புக்கள்.

நல்ல விழிப்புண்ர்வு பதிவு. நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

புதிதாக வாங்க விரும்புபவர்களுக்கு தேவையானது உங்கள் குறிப்புக்கள்.//வரிகளில் மகிழ்ச்சி.வரவுக்கும்,தொடர் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மொத்தத்தில் பொன்னில் போட்ட காசுக்கும் மண்ணில் போட்ட காசுக்கும் பழுதில்லை என்ற பழமொழிகொப்ப புத்திசாலித்தனமாக,கவனமாக ஆராய்ந்து வீட்டை வாங்கி முதலீடு செய்வது நலமே.//

மிகவும் அழகான பயனுள்ள கட்டுரை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்

ஸாதிகா said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸ்ரீராம். said...

மண்ணும் பொன்னும் ஒன்று. சொல்லப் போனால் பொன்னை விட வேகமாக விலை ஏறுகிறது மண். நல்ல பதிவு.

புதுகைத் தென்றல் said...

அவசியமான குறிப்புக்கள்.வீடு வாங்க நினைப்பவர்களுக்கு உபயோகமான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி ஸாதிகா

S.Menaga said...

மிக மிக அவசியமான ,பயனுள்ள பதிவு அக்கா!!

Student Drawings said...

பயனுள்ள ஆலோசனைகள் நன்றி
(h)

faiza kader said...

ஏற்கனவே படித்த பகிர்வை பார்த்து வீடு வாங்கனும் என்ற ஆசையே போச்சு.. இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கு.. பகிர்வுக்கு நன்றி அக்கா

Asiya Omar said...

பயனுள்ள பகிர்வு ஸாதிகா.
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கும்,மனை வாங்க நினைப்பவர்களுக்கும் நிச்சயம் உதவியாக இருக்கும் இந்த பகிர்வு.

Vijiskitchencreations said...

விடு வாங்குவோருக்கு பயனுள்ள ஆலோசனை+நல்ல பதிவு.

Avargal Unmaigal said...

வீடு வாங்குவோருக்கு மிகவும் பயனுள்ள ஆலோசனை பதிவு....வீடுவாங்க இவ்வளவு கஷ்டப்படனுமா? வூடு வாங்குறதுல உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்குறதாலா நீங்கள் ஒரு நல்ல வீடா பார்த்து வாங்கி என் பெயர்ல ரிஸ்ஜிஸ்டர் பண்ணிடுங்க சகோ ....உங்களுக்கு மிகவும் நல்ல மனசு அதுனால நீங்க இதை கட்டாயம் செய்வீங்க.. நான் சொன்னது சரிதானே? ஹீஹீ

ஸாதிகா said...


மண்ணும் பொன்னும் ஒன்று.//உங்கள் பின்னூட்டத்தின் முதல் வாக்கியத்தையே இந்த இடுகைக்கு தலைப்பாக்கி இருந்தால் இன்னும் அட்ராக்டிவ் ஆக இருந்திருக்கும்:) கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி புதுகைதென்றல்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி Student Drawings .

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விஜி.

ஸாதிகா said...

உங்களுக்கு மிகவும் நல்ல மனசு அதுனால நீங்க இதை கட்டாயம் செய்வீங்க//கட்டாயம் செய்கிறேன் அவர்கள் உண்மைகள்.பேமெண்டை கேஷாக அனுப்புகின்றீர்களா?அல்லது செக்கா ?இல்லை டிமாண்ட் டிராஃப்டா?ஹி..ஹி..கருத்துக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

மிகத் தெளிவான கட்டுரை. பலருக்கும் பயனாகும். வாழ்த்துகள் ஸாதிகா.

வல்லிசிம்ஹன் said...

மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் ஸாதிகா.
மூச்சு வங்குகிறது,இத்தனை கவனம் வைக்காவிட்டால் அவதிப் படுவதும் நாம் தானே. கல்யாணம் செய்து பார்ப்பது போல இதுவும் நம் வாழ்வில் நல்லதொரு பாடம்.
சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

இளமதி said...

நல்ல ஆலோசனை, அருமையான பதிவு.
என்ன கரணம் தப்பினால் மரணம் எங்கிறமாதிரி இருக்கு இங்கும்....:(
நல்ல பகிர்வு ஸாதிகா. மிக்க நன்றி!

கோவை2தில்லி said...

தங்கள் ஆலோசனைகள் எல்லோருக்கும் பயன்படும். பகிர்வுக்கு நன்றிங்க.

athira said...

ஆஹா அருமையான ஆலோசனைகள் ஸாதிகா அக்கா. ஆனா ஒண்டு நிலவீடெனில் வீட்டுக்கு ஒரு பிரச்சனை எனில் காணியாவது மிஞ்சும், பிளாட்டில எதுவும் வராது.. அதுதான் பயம்.

G.M Balasubramaniam said...


இன்று நான் எழுதிய பதிவினைப் படிக்க அழைக்கிறேன். நன்றி.