December 3, 2012

சென்று வந்தேன்.




அல்ஹம்துலில்லாஹ்!பிறவிப்பயனை அடைந்த பெரும் சந்தோஷத்துடன் இவ்விடுகையை தட்டச்சு செய்யும் வாய்ப்பினை அருளிய வல்ல இறைவனுக்கு நன்றி கூறியவளாக தொடர்கிறேன்.

உலகின் நடுமத்தியில் அமையப்பெற்ற,உலகின் மையப்புள்ளியான இறைவனும்,இறைத்தூதர்களும்,இறுதித்தூதரும் ,அவர்களைப்பின் பற்றிய சஹாபாக்களும்,அன்றும்,இன்றும் என்றும் பின் தொடரும் உம்மத்துக்களும் கண்ணியப்படுத்திய கண்ணியப்படுத்திக்கொண்டுள்ள,கண்ணியப்படுத்தப்போகின்ற  மாபெரும் வரலாற்று சின்னத்தை,இறை இல்லத்தினை இது நாள் வரை புகைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கண்டு வநத நான் நேரில் கணட பொழுது அதன் பேரழகிலும், பிருமாண்டத்திலும்,வசீகரத்திலும்,மெய்சிலிரிக்க வைத்த அந்த தருணத்தை இந்நொடிகூட என்னால் மறக்க இயலவில்லை.

புனித கஃபாவை பார்த்த முதல் நொடி முதல்,இறுதியாக பார்த்த நொடி வரை என் கண்கள் சிந்திய கண்ணீரை அளவிட இயலாது.இது அனைத்து ஹஜ்ஜாளிகளுக்கும் பொருந்தும்.

ஹஜ் சென்று திரும்பிய நாள் முதல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மக்கா லைவ் பார்த்த்து மீண்டும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று இப்போதே தவம் இருக்க ஆரம்பித்து விட்டேன்.இது எனக்கு மட்டும் உண்டான உணர்வு அல்ல.ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருக்கும் இருக்கும்  உணர்வு இது.

மட்டுமின்றி வரலாற்று சிற‌ப்புமிகு தளங்கள்,மதினாவில் இருக்கும் மஸ்ஜிதுன்னபவி எனும் இறைத்தூதரின் தளம்,புனித நகரங்களை சுற்றி உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மலைகள்,அரபா மைதானம்,நக‌ரை சுற்றி உள்ள பாரம்பரியமான மசூதிகள் இப்படி ஒவ்வொன்றையும் கண்களால் கண்டு நெஞ்சம் முழுக்க நிரப்பிக்கொண்டு வந்த நிறைவு என் மனம் முழுக்க நிரம்பி உள்ளது.

பின்னூட்டம் வாயிலாகவும்,மின்னஞ்சல்,தொலைபேசி வாயிலாகவும் என் ஹஜ்  அனுபவத்தையும், பதிவின் வாயிலாக அறிய காத்திருக்கும் நட்புக்களுக்காக இனி வெளிவரும் ஓரிரு இடுகைகள் என் ஹஜ் அனுபவங்களையும்,புனித ஹரம் ஷ‌ரீஃபில் நடந்த ஒரு மினி பதிவர் சந்திப்பை பற்றியும், எழுத்துக்கள் மூலமாகவும்,புகைப்படங்கள் மூலமாகவும் பகிர உள்ளேன்.










லட்சோபலட்ச‌ மக்களுடன் நெருக்கியடித்து கஃபதுல்லாஹ்வை தாவப்(வலம்) செய்த நான் ,மக்கா நகரை பிரிய இருக்கும் நாளன்று வெகு சுலபமாக வலம் வந்த பொழுது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.மேலுள்ள படத்திலும் கீழுள்ள படங்களிலும் உள்ள மக்கள் வெள்ளத்தின் வித்தியாசத்தினை பாருங்கள்.

59 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி.

தொடர்ந்து பகிரக் காத்திருக்கிறோம்.

படங்களை அனைத்தையும் க்ளிக் செய்து பார்த்தேன். பெரிதாகவே பதிவில் காட்டிடவும் வழி உள்ளது ஸாதிகா.

Asiya Omar said...

மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள் தோழி.பகிர்வும், படங்கலும் அருமை.

ADHI VENKAT said...

தங்களின் பயணம் குறித்து மிக்க மகிழ்ச்சி. படங்களை க்ளிக் செய்து பார்த்தேன்.

தொடரும் தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

ஹுஸைனம்மா said...

வந்தாச்சா, மகிழ்ச்சி. தொடரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் எழுதிடுங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப சந்தோசமா இருந்தது.. அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக நிறைவேற்றி தருவானாக. ஆமீன்.

இளந்தென்றல் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல பகிர்வு...
வரும் பதிவுகளையும் காண காத்திருக்கிறேன்...

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் உடன் வருகைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.//பெரிதாகவே பதிவில் காட்டிடவும் வழி உள்ளது // நான் கேட்க நினைத்தும் என் மின்னஞ்சல் முகவரியை வேறொரு தோழி மூலம் பெற்று தாமாகவே உதவிய உங்கள் அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.உங்கள் உதவியால் படங்களை பெரிதாக பதிவிலேயே காட்ட கற்றுக்கொண்டு செயல் படுத்தியும் விட்டேன்.:)

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா.தொடர்ந்து பகிரவிருக்கும் பதிவுக்களுக்காக காத்திருக்கும் அன்புள்ளங்களின் உற்சாகமூட்டலுக்களுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

தங்களின் பயணம் குறித்து மிக்க மகிழ்ச்சி. படங்களை க்ளிக் செய்து பார்த்தேன்.

தொடரும் தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.//மிக்க நன்றி கோவை டு தில்லி.பகிர்கின்றேன்.தொடருங்கள்:)

துளசி கோபால் said...

பயணம் நல்லபடி நடந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி ஸாதிகா.சிறப்பு நாள் முடிஞ்சதும் கூட்டம் குறைஞ்சுருக்கு போல!

பயணத்தின் முழு விவரங்களையும் வாசிக்க ஆவலோடு காத்திருக்கின்றேன்.

ஸாதிகா said...

அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக நிறைவேற்றி தருவானாக. ஆமீன்.///////////ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.மிக்க மகிழ்ச்சி நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

வலைக்குமுஸ்ஸலாம் இள‌ம்தென்றல்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

சிறப்பு நாள் முடிஞ்சதும் கூட்டம் குறைஞ்சுருக்கு போல! ///வாங்க துளசிம்மா.கூட்டம் படிப்படியாக குறைந்து மக்காவில் இருந்த கடைசி சில நாட்களில் கூட்டம் வெகுவாக குறைந்து கஃபாவை வலம் வர மிகவும் ஏதுவாக இருந்தது.உலகில் எந்த ஒரு நொடியும் கஃபாவை சுற்றுவாரில்லாமல் இருக்காது.அந்தக்காலத்தில் மாபெரும் வெள்ளத்தில் நீந்திக்கொண்டே கஃபாவை வலம் வந்ததாக படித்தறிந்துள்ளேன்.கருத்துக்கு மிக்க நன்றி துளசிம்மா.

shamimanvar said...

நவம்பர் 5ம் தேதி என் தமக்கையார் ஹஜ்ஜிலிருந்து திரும்பினார்கள். அன்றிலிருந்து இன்று வரை உங்கள் தளத்தில் பதிவை எதிர்பார்த்திருந்தேன். உங்கள் ஹஜ் பயணம் சித்தியடைந்து குற்றமற்றவராக நிறைவானவராக திரும்பி வந்துள்ள உங்களுக்கு அல்லாஹுதஆலா எல்லா நலன்களும் அளிப்பாராக. உங்கள் துஆவில் எங்களுக்கான துஆவையும் இணைத்துக்கொள்ளவும்

Thozhirkalam Channel said...

உங்கள் படங்கள் பார்த்ததுமே நாங்களும் பயணித்தது போன்ற அனுபவம்.இன்னும் தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

இந்த அளவில் பார்க்கும் போது படங்கள் இன்னும் அருமை ஸாதிகா:)!

/அதன் பேரழகிலும், பிருமாண்டத்திலும்,வசீகரத்திலும்,/

முதலிரண்டு படங்கள் மூலமாக எங்களுக்கும் காணத்தந்து விட்டீர்கள். இனி அனுபவப் பகிர்வுக்குக் காத்திருக்கிறோம்.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா இதத்தான் எதிர்பார்த்தேன் . இன்னும் உன்னக்காணோமேன்னு காத்துகிட்டே இருந்தேன். இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன். பயணம் எல்லாம் சிறப்பாக நிறைவேறியதா?அததானே வரும் வாரங்களில் சொல்லப்போரியே இல்லியா?

சாந்தி மாரியப்பன் said...

பயண அனுபவங்களை அறியக்காத்திருக்கோம்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. ரொம்ப சந்தோஷம் அக்கா.தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள் ..

Seeni said...


அஸ்ஸலாமு அலைக்கும் !

அன்பு சகோதரியே!
நீண்ட நாளாக உங்களது பதிவை
காணவில்லை என்று எண்ணியதுண்டு!

ஆனால் நீங்கள் நம் வாழ்நாளின்-
பயனை அடைந்து விட்டீர்கள் மாஷா அல்லா!
மீண்டும் எல்லாம் வல்ல அல்லா நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக!

மனம் நிறைந்த சந்தோசம்....

அல்லாஹ் பொருந்திகொள்வானாக!

Avargal Unmaigal said...

பயணம் நல்லபடியாக முடிந்து நீங்கள் இறைவன் அருளை பெற்று திரும்பியதற்கு எனது வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

வாங்கா ஸாதிகா. பயணம் தொழுகை எல்லாம் நல்ல படியாக அமைந்தது கேட்டதும் மிக்க சந்தோஷமாக இருக்கு.
ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் எழுத்து தொடரை. எங்களுக்கும் ஒரு வாய்ப்பு உங்க வழியாக எட்டும் என்றால் அதை விட வேறு என்ன வேண்டும் நட்புக்கு.
நான் மகனிடம் பேசினேன். நிங்க ரொம்ப மெலிந்து இருக்கிங்க என்று கேள்விபட்டேன். உடல்நலம் மிக அவசியம். நல்லா ரெஸ் எடுங்க நல்லா சாப்பிடுங்க.
எங்க எல்லோருக்கும் சேர்த்து வேண்டி இருப்பிங்க. கடவுள் ஆசி எப்போதும் கிடைகட்டும்.

ஸாதிகா வலையில் இவ்வளவு நாட்களாக காணவில்லையே என்று ஒரு போன் போட்டேன்.
நிங்க வலையில் வரவில்லை என்றால் ஒரே போர் ஸாதிகா. கம் ஆன் சீர் ஆப்.

Unknown said...

Allahuu adukulla start panniyacha

Unknown said...

Allahuu adukulla start panniyacha

Menaga Sathia said...

வாங்கக்கா....பயணம் + தொழுகை நன்றாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி,படங்கள் அழகு....

வை.கோபாலகிருஷ்ணன் said...

புனிதப்பயணம் இனிமையாய் முடித்து வந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி. படங்கள் + தகவல்கள் யாவும் அருமை.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆவ்வ்வ்வ் ஸாதிகா அக்கா நலமே திரும்பிட்டா.. சந்தோசம் .. சந்தோசம்... நிகழ்வுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கோ.. மெலிஞ்சிருக்கிறீங்களோ? இல்ல குண்டாகிட்டீங்களோ?

இராஜராஜேஸ்வரி said...

ள மக்கள் வெள்ளத்தின் வித்தியாசத்தினை பாருங்கள்./

பார்த்து உணர்ந்து வியப்படைந்தோம் ..

சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Yaathoramani.blogspot.com said...

புனித யாத்திரை குறித்த அனுபவங்களை
தங்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளோம்
தொடர வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

ஷமிமா அன்வர் முதல் வருகைக்கு நன்றி. அன்றிலிருந்து இன்று வரை உங்கள் தளத்தில் பதிவை எதிர்பார்த்திருந்தேன்//மிக்க மகிழ்ச்சி.//கு அல்லாஹுதஆலா எல்லா நலன்களும் அளிப்பாராக.//ஆமீன் ஆமீன்.கண்டிப்பாக என் துஆ உங்களுக்கு உண்டு.

ஸாதிகா said...

மிக்க மகிழ்ச்சி நன்றி ராமலக்ஷ்மி

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா ஹஜ் பயணம் இறைவன் உதவியால் சிறப்பாக நிறைவேறியது.அட...சினை போய் இருக்கீங்களா?நல்லா எஞோய் பண்ணிட்டு விரிவா எங்களுக்கும் காட்டுங்கோ.கருத்துக்கு நன்றிம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்,

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் பாயிஜா.வந்ததும் தொலைபேசி விசாரிப்புக்கும்,இப்பொழுது பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் சகோ சீனி.வல்ல நாயன் வெகு விரைவிலேயே உங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவானாக ஆமீன்.மனம் நிறைந்த சந்தோசம்....//

அல்லாஹ் பொருந்திகொள்வானாக!// ஆமீன்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அவர்கள் உண்மைகள் கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

அன்பு விஜி உங்கள் அன்புக்கு நன்றி.நீங்கள் போன் செய்த பொழுது உடம்பு முடியாமல் படுத்து இருந்தேன்.மகன் தான் பேசிவிட்டு சொன்னார்.இனி வழக்கம் போல் வருவேன் விஜி.மிக்க நன்றி

ஸாதிகா said...

M A Thameem said...
Allahuu adukulla start panniyacha//வாருங்கள் உடன்பிறப்பே.இதுவே லேட் என்று நினைக்கிறேன்:)வருகைக்கு சுக்ரியா.

ஸாதிகா said...

மிக்க மகிழ்ச்சி நன்றி மேனகா

ஸாதிகா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வை கோ சார்

ஸாதிகா said...

ஆர்பாட்டமான அதீஸின் வரவேற்புக்கு மிக்க நன்றி//மெலிஞ்சிருக்கிறீங்களோ? இல்ல குண்டாகிட்டீங்களோ?/ நேரில் வந்துதான் பாருங்களேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ இராஜராஜேஸ்வரி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்

Ranjani Narayanan said...

நல்லபடியாக ஹஜ் யாத்திரை முடித்து வந்தது ரொம்பவும் மகிழ்ச்சி ஸாதிகா!
இறையருள் நிறையட்டும்.
பதிவுகளைப் படிக்க காத்திருக்கிறோம்!

enrenrum16 said...

மாஷா அல்லாஹ்... நல்லபடியாக போய் வந்தாச்சா.... அடுத்த கட்டுரைகலை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

கஃபாவின் அருகில் செல்லவும் தொடவும் முடியாதா என பலமுறை நினைத்திருக்கிறேன். அதுவும் சாத்தியமேன்னு அழகாகச் சொல்லியிருக்கீங்க... ரொம்ப நன்றிக்கா...

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//ஹஜ் பயணம் இறைவன் உதவியால் சிறப்பாக நிறைவேறியது.//

அல்ஹம்துலில்லாஹ் ...வல்ல ரகுமான் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தருவானாக...ஆமீன்...அனுபவங்களை பகிருங்கள்...

Mahi said...

ஸாதிகாக்கா! வெல்கம் பேக்! :)

பயணம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி. அருமையான படங்கள். கூட்டம் அதிகமுள்ள படமும், கம்மியாக உள்ள படமும் நல்ல வித்யாசத்தைக் காட்டுகின்றன.

சீக்கிரம் தொடருங்கள்.:)

ஸ்ரீராம். said...

உங்கள் பரவசம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது. படங்கள் பிரம்மாண்டமாய் அழகாக இருக்கின்றன. வெற்றிகரமாக ஹஜ் பயணம் முடித்து வந்தது மகிழ்ச்சி. உங்கள் பரவசம் எங்களுக்கும் பரவுகிறது.

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா ,
வந்த அன்று பேசிவிட்டதால் இங்கு வர கொஞ்சம் லேட் ,

ரொம்ப சந்தோஷம் , உங்கள் பதிவை பார்க்க பார்க்க சீக்கிரம் நாமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது

கோமதி அரசு said...

அல்ஹம்துலில்லாஹ்!பிறவிப்பயனை அடைந்த பெரும் சந்தோஷத்துடன் இவ்விடுகையை தட்டச்சு செய்யும் வாய்ப்பினை அருளிய வல்ல இறைவனுக்கு நன்றி கூறியவளாக தொடர்கிறேன்.//

ஆம் ஆம், உண்மைதான் ஸாதிகா இறைவன் அருளால் நலமாய் நல்ல தரிசனம் செய்து வந்து அவர் புகழை எழுத கிடைத்த வாய்ப்புக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
படங்கள் எல்லாம் பார்த்து மகிழ்ச்சி ..

ஸாதிகா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

ஸாதிகா said...

கஃபாவின் அருகில் செல்லவும் தொடவும் முடியாதா என பலமுறை நினைத்திருக்கிறேன். அதுவும் சாத்தியமேன்னு அழகாகச் சொல்லியிருக்கீங்க..//கஃபாவை தொடுவதென்பது மிக சாத்தியமே.நான் அநேகமாக தவாப் செய்யும் ஒவ்வொரு முறையும் கஃபாவை தொட்டு மகிழ்ந்திருக்கிறேன்.என் கணவரோ கூட்டத்திற்கு பயந்து சுற்றும் தூரம் அதிகமாக இருந்தாலும் மொட்டை மாடியில் தாவப் செய்வார்கள்.நானோ கூட்டமாக இருந்தாலும் தூரத்துக்கு பயந்தும்,கஃபாவை தொட முடியாதே என்பதற்காகவும் கீழேயே தாவப் செய்வேன்.கருத்துக்கு நன்றி பானு

ஸாதிகா said...

அலைக்கும்சலாம் ஆயிஷா.வல்ல நாயன் உங்களுக்குமிந்த பாக்கியத்தை விரைவில் தந்தருள்வானாக ஆமீன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மகி.உங்கள் ஆர்வம் எனக்கு உற்சாகம் ஊட்டுகின்றது

ஸாதிகா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ஸ்ரீராம்.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் ஜலீ.//உங்கள் பதிவை பார்க்க பார்க்க சீக்கிரம் நாமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது//

இந்த வரிகளை படிக்கையில் மிக்க மகிழ்வாக உள்ளது.அல்லாஹ் இந்த பாக்கியத்தை உங்களுக்கும் விரைவில் தருவானாக ஆமீன்.

ஸாதிகா said...

படத்தினையும் பகிர்வையும் கண்டு மகிழ்ந்த கோமதிஅம்மாவின் கருத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சிம்மா.மிக்க நன்றி கோமதிம்மா.

Mahi said...

கருத்து தந்த நினைவிருக்கு, ஆனா காணோமே? பரவாயில்லை..ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன், உங்கள் பதிவுகளை தவறாமல் படிச்சுட்டுதான் இருக்கேன் ஸாதிகா அக்கா! :)

ஸாதிகா said...

கருத்து தந்த நினைவிருக்கு, ஆனா காணோமே?//எனக்கு உங்கள் கருத்தை படித்ததாக ஞாபகம் இல்லையே மகி.//ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன், உங்கள் பதிவுகளை தவறாமல் படிச்சுட்டுதான் இருக்கேன் // ரொம்ப சந்தோஷம் மகி.தொடர்ந்து படியுங்கோ.கூட்வே கருத்துக்க்ளையும் பகிருங்கோ.நன்றி மகி.